குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நமது முட்டாள் தனம் எதிரிகளுக்கு மூலதனம்.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இப்ப தும்மினால் தான் சரியாக இருக்கும்.😂 நீங்கள் தமிழக அரசியலை மிக மிக பரிட்சயமானவர் புரிந்து கொண்டவர் என நான் நினைத்து உங்களிடம் ஓரிரு கேள்விகள். தமிழ்நாட்டு மக்களின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன? போலி அரசியல்களை நம்புவர்களா? அல்லது வாக்குக்கிற்காக அரசியலை விற்கின்றார்களா? நிற்க... கருணாநிதி முள்ளிவாய்கால் உண்ணாவிரத நாடகமாடாமல் இருந்திருந்தால் அழிவுகளை நிறுத்தியிருக்க முடியுமா? அல்லது கருணாநிதி முயற்சி செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் நிகழ்வை தடுத்திருக்க முடியுமா?
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
சார் கால் வைக்காத இடமே இல்லை போல கிடக்கு? 😂
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
பிரான்ஸ்காரன் டென்மார்க்காரன் ஆங்கிலேயன் ரஷ்யாக்காரன் உக்ரேனியன் சீனன் என ஆயிரம் இனங்கள் இருக்கும் போது தமிழினத்திற்கு மட்டும் திராவிட போர்வை எதற்கு?
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
மிளகாய் உண்மையில் புற்றுநோய் உருவாக்கி என்றால் மெக்சிக்கோவிலும் இலங்கை இந்திய நாடுகளிலும் சனத்தொகை குறைவாக இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதை விட பல மூட்டுவலிகள் சதை பிடிப்பு நோய்களுக்கு மிளகாய் கலந்த கிறீம்களும், ஸ்பிறேகளும் பாவிக்கப்படுகின்றனவே.
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
பச்சை மிளகு என ஒன்றும் உள்ளது. இது கேரளா மற்றும் பிரேசில் நாடுகளில் மிக பிரபல்யம். அதை வைத்தே சமையலும் செய்கின்றார்கள்.
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
சிறிலங்கா நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கு. 👍🏼 இப்ப காசு பணம் ஆரிட்ட இருக்கெண்டால் ரஷ்யா,சீனாவிட்ட தானே. அதிலையும் சீனாக்காரன் ரஷ்யாக்காரன்கள் தான் காசை காசெண்டு பாராமல் விசுக்கி தள்ளுறாங்கள். உக்ரேன் சண்டைக்கு முதல் மேற்குலக நாடுகளுக்கு வாற காசுக்காறர் ஆரெண்டு பார்த்தால் எல்லாம் ரஷ்யர்கள்தான். இப்ப அவங்களையும் தடை செய்து போட்டு இப்ப முழுசிக்கொண்டு திரியினம்.🤣 ரஷ்யங்களின்ர கையில எப்பவும் பச்சை தாள். மஞ்சள் தாள்,கத்தரி பூ கலர் தாள் தான்.😎
-
மறக்க முடியாத மற்றுமொரு நாள்
சரியாக சொன்னீர்கள் 👍🏼
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவாவின்ர மேக்கப் இல்லாத படம் இருந்தால் போட்டு விடவும் 🤣
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
என்ன மாதிரி? காணியளின்ர உறுதியளையும் கையோட தரோணுமோ 😂
- கல்லாறு பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கிய மிளகாய் தோட்டத்தை அழித்த சட்டவிரோத கும்பல்
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
எனக்கும் எமது தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடம் ஒரு துளி நம்பிக்கையுமில்லை. இருக்கும் அரசியலை கழுவியெடுத்து புதிய அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
யாரால் ஏமாற்றப்படுகின்றார்? சேர சோழ பாண்டியர் வரலாறுகளையா நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்? எல்லாம் கண் முன்னே நடந்த சம்பவங்களை வைத்து தானே பேசுகின்றோம். 😎 ஈழத்தமிழர் கேட்கும் அடிப்படை உரிமைகளை கொடுக்கக்கூடாது என்பது இந்தியாவால் எழுதப்படாத விதிபோல் பலர் சொல்கின்றனர். 🙃
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
நானும் ஒரு காலத்தில் உறைப்பு சாப்பிடுவதில் சிங்கம் தான். எங்கடை ஆக்களுக்கு போத்தில் தூள் இல்லையெண்டால் சமைக்கவே தெரியாது எண்ட முடிவுக்கு வரலாம். உங்களுக்கு உறைப்பு காரம் வேணும் எண்டால் உறைப்பு பச்சை மிளகாயை வெட்டி போடலாம் இல்லை செத்தல் மிளகாயை நொருக்கிப்போட்டு போடலாம்.. ஆனால் போத்திலில் வரும் மிளகாய் தூளை என்றுமே பாவிக்காதீர்கள். இது என் 25 வருடங்களுக்கு முன்னரான சொந்த அனுபவம். வயிற்று வலி உபாதைகளும் அதற்கான பரிசோதனைகளும் என்னை ஒரு வழி பண்ணி விட்டது. இது எனது சொந்த அனுபவம் மட்டுமே. மிளகாய்த்தூள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கெடுதல் என நான் சொல்ல வரவில்லை. என் தனிப்பட்ட கருத்து இது யாழ்களத்திற்கு பாதிப்பு ஏற்படுமாயின் இந்த என் கருத்தை நீக்கி விடுங்கள். @இணையவன் @நிழலி
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
இத வாசிக்க வாசிக்க எனக்கு அந்த தம்பியின்ரை நினைப்புத்தான் வருது. அந்த தம்பியும் உப்புடித்தான் அச்சு தவறாமல் உதே மாதிரி எழுதும். யாழ்களத்தில எங்கையெண்டாலும் மிளகாய்த்தூள் பிரச்சனை எண்டால் முதல் ஆளாய் வந்து நிக்கும் அந்த தம்பி...🤣 இப்ப எங்க நிக்குதோ.......என்ன செய்யுதோ...சாப்பிட்டுதோ....என்னமோ? ஒரு நேரம் சும்மா இருக்காது அந்த தம்பி....குறு குறுவெண்டு ஏதாவது எழுதி/கிறுக்கிக்கொண்டே இருக்கும்...😂
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
ஐயா! ஏதோ புது நியூஸ் சொல்லப்போறார் போல கிடக்கு....🧐 எதுக்கும் நாமள் ஜேர்மன் மல்லி செத்தல் மிளகாய் சீரகம் எண்டு சொல்லி விடை பெற வேண்டியது தான்....😂
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
உக்ரேன் போர் ஆரம்பிக்க முதல் பல வருடங்களுக்கு முன்னரே.... ஐரோப்பாவிற்கும் ஜேர்மனிக்கும் உக்ரேன் என்ற நாட்டின் விளைநிலத்தின் முக்கியத்துவம் பற்றிய கருந்துக்களை இங்கே பதிந்துளேன். அதை விட உக்ரேன் விளை நிலங்களில் ஜேர்மனிய முதலாளிகளின் முதலீடும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த முதலீடுகள் அனைத்தும் ஜேர்மனிய அரசின் உத்தரவாதம்,பாதுகாப்புக்கிற்கு அமையவே இடம்பெற்றது.ஆனால் எல்லாம் தலைகீழாக மாற....... ஒவொருவரின் வாயை அடைக்க யுத்தம் துணை புரிகின்றது.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
உங்கள் கொள்கையை ஏற்கனவே அறிந்ததுதானே. ஏனவே ஆச்சரியம் ஏதுமில்லைலை.
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
நாங்கள் எமக்கு தேவையானவற்றை சேர்த்து கொடுத்தால் அரைத்து தர பல இடங்கள் உள்ளது. கடைகளில் விற்கும் தூள் சரக்கு தூள் வகைகள் வாங்கி நீண்ட காலமாகி விட்டது.அவற்றில் கவனமாக இருங்கள்-
-
அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை
நாங்கள் கொழும்புக்கு போறம்....😂 நாலு கொத்துரொட்டி கடை திறக்கிறம்....😁 வெள்ளவத்தையிலை அஞ்சு...அஞ்சு வடே வடே கடை திறக்கிறம்...🤣 சிலோன்ரை ஒட்டுமொத்த கடனையும் அடைக்கிறம்.... 🙃 திரும்பி வாறம் ஜெயவே வா 😎
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இந்த வகையில் சீமானை போற்ற வேண்டும். எந்த இடர் வந்தாலும்,தொடர் தோல்விகள் வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டு மாறவில்லை. 👍🏼 ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும், அரசியல் தலைவர்களிடமும் அவரவற்கு பிடித்த குணங்கள் ஏதாவது ஒன்றிருக்கும். அதனை அவர்கள் பாராட்டுவதில் என்ன தவறு? நாம் எதிர்க்கும் சிங்கள இனவாதிகளும் தலைவர் பிரபாகரனை பாராட்டிய வரலாறுகள் உண்டு அல்லவா? எது இருப்பினும் எங்கள் ஈழ அரசியல் உணர்சியையும் தமிழ்நாட்டவர்களின் ஈழ அரசியல் உணர்ச்சியையும் ஒரே தராசில் வைக்க முடியாது என்பது என்னைப்போன்றவர்களின் கருத்து.
-
காணாமல் ஆக்கப்பட்டோா் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை – அமெரிக்கா கண்டனம்.
ஈரான் ஜனாதிபதி சிலோனுக்கு போனது பெரியண்ணனுக்கு துண்டற பிடிக்கேல்லை எண்டது தெரியுது.🤣 ஈரான்.சீனா,ரஷ்யா எண்டதொரு மிக்ஸர் வெஸ்ரேன் குஞ்சுகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவதை ரசிக்கலாம்😂
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு கூப்பனுக்கு ஒரு கொத்து அரிசி தருவன் எண்டு சொல்லுற தேர்தல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து வந்த உங்களுக்குமா இன்ஞும் அரசியல் தந்திரங்கள் புரியவில்லை? ஐயோ பாவங்கள்....🤣 வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை . வெள்ளைக்காரன் சொல்வதையே செய்வான். செய்வதையே சொல்வான் என நம்பும் கூட்டம் இன்னும் யாழ்களத்தில் இருப்பது விநோதத்திலும் விநோதம்.😁
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
என்னது நைட் யூட்டி வேறையா? 😊 அப்பிடியெண்டால் கன கிழிஞ்சல்கள் கீறல்கள் வந்திருக்கணுமே? 🤣
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
உந்த நாடக மேற்குலகம் இப்பவரைக்கும் ரஷ்யாவுக்கு போடுற தடைகளை கணக்கு பாத்தால் இத்தடிக்கு ரஷ்ய சனம் பட்டினியாலை எல்லோ செத்திருக்க வேணும்´? 😂