Everything posted by குமாரசாமி
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
கண்ணீர் அஞ்சலிகள்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் ஒரு ரஷ்யன் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுகின்றது 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்று வருக. மீண்டும் சந்திப்போம். 🤛 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
எத்தினை வயதிலிருந்து அங்கிள் வயது ஆரம்பமாகும்? ஏனென்றால் என்னை பத்து வயதிலிருந்தே சிலர் மாமா என்று கூப்பிடத் தொடங்கீட்டினம் திணறடிக்க வைக்கும் கேள்வி....😂
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
தொடருங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன்..🤣 போற போக்கை பாத்தால் மிச்சக்கதை ஒரே செக்ஸியாய் இருக்கும் போல கிடக்கு
-
புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை - ஈபிடிபி
அனுர ஆட்சி தமிழர்களுக்கு 100 வீதம் நன்மை பயக்கும் என நான் கருதவில்லை. ஆனால் இன்றைய நிலையில் அனுர ஆட்சி மூவினத்திலும் உள்ள முள்ளமாரி முடிச்சவிக்கிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமையலாம்.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
என்னைப்போன்றவர்களுக்கு சில வேளை உங்களுக்குமாகவும் இருக்கலாம்.... பிள்ளையான் பிழையானவனாக தெரிகின்றார். அதற்காக நான் பிள்ளையானுக்காகவோ கருணாவிற்கோ வக்காளத்து வாங்குவதாக தப்புக்கணக்கு போட வேண்டாம். இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்த பின்னர் சிங்கள பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தமிழர்களின் ஆதரவின்றி எந்தவொரு செயல்களையும் நிறைவேற்றியது கிடையாது. குறிப்பாக.... சிறிமா ஆட்சியிலும் சரி.....அதன் பின்னர் ஜேஆர் தொடக்கம் அனைத்து சிங்கள ஜனாதிபதிகளும் தமிழ்க்கட்சிகளின் ஆதரவுடன் அல்லது தமிழ் பிரமுகர்களின் ஆதரவுடனேயே தமிழ்மக்களின் உரிமைகளையும் அதற்காக போராடியவர்களையும் சூறையாடியது. எனவே பலமும் பலவீனமும் நமக்குளேயே இருந்து தாண்டவமாடுகின்றது.👈
-
உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு
முதலில் இந்த பூமியை அதில் வாழும் உயிரினங்களை காப்பாற்ற ஏதாவது கண்டுபிடியுங்கள். அதன் பிற்பாடு உயிரினங்கள் வாழும் கிரகங்களை கண்டுபிடியுங்கள். தினசரி உயிர் அழிவுகள் நடக்கும் காஸாவை பாதுகாக்க வக்கில்லை. அண்ட அகிலத்தில் தண்ணீர் ஆராய்ச்சிகளுக்கு மட்டும் குறைவில்லை.
-
சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா!
சீனாவின் பொருளாதார ஆதிக்கம் உலகம் முழுவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் போது டொனால்ட் ரம்ப் அவர்களின் தற்போதைய வரி கொள்கை சரியாகவே எனக்கு தெரிகின்றது. பல்லுக்குத்தும் குச்சிக்குக் கூட மற்றவர்களை நம்பியிருக்காமல் நீங்களே தயாரித்து உங்கள் பற்களை குத்திக்கொள்ளுங்கள். 😁
-
கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
நினைவூட்டல்கள் என்றால் அரசர் காலத்து பல சம்பவங்களையும் நினைவூட்டிக்கொண்டிருக்கலாம். எது இன்று தேவையோ அதை செவ்வனே முன்னெடுத்தால் சகலதும் சுபமாக அமையும்.
-
கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
ஆனால் இன்றோ அன்று ஓடி வந்தவர்களினால் தான் அந்த மண்ணுக்கு பலம்.🙂 புலம்பெயர் தமிழர்கள் இல்லையென்றால் அங்கிருப்பவர்களை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? 😎
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். உங்கள் ஆதாரத்தை நிரூபியுங்கள்.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
அப்படி முடியாத விடயம் என்றால் ஏன் கருணாநிதி பெட்டி படுக்கை,கூலர் சகிதம் உண்ணாவிரதம் இருந்து இலங்கையில் போர் முடிந்து விட்டது என அறிக்கை விட்டார். அது மட்டுமல்ல ஏன் தமிழக அரசியல் தலைவர்கள் வன்னிக்கு வந்து கீச்சு மூச்சு காட்டி உசுப்பேற்றினர்? முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் கூட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
உண்மைகள் என்றாவது வெளிவரத்தானே போகின்றது.
-
யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
ஆசை தோசை அப்பளம் வடை...... இப்ப இந்த மொடேர்ண் வாழ்க்கையில 95தான் வயோதிப வயசாம். ஆகவே 👈👉👆👇 🙂
-
தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும்
சிங்கள இனவாதத்தின் அடிமடியில் கனம் அதிகம்.இன்றல்ல நாளை அல்ல என்றோ ஒரு நாள் இவர்களை எதிர்த்து நிற்க முடியாது என்ற அச்சம் சிங்களத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். ஈழத்தமிழினத்தின் வலிமையை பார்த்து நன்றாகவே பயப்பிடுகின்றார்கள். அதெல்லாவற்றையும் விட..... ஈழத்தமிழருக்கு தெரியாத உண்மை ஒன்று சிங்கள உள்ளக இராஜதந்திரிகளுக்கு தெரிந்திருக்கலாம். யார் கண்டார்?
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
தமிழ்நாட்டில் வசிக்கும் பிரபல்யங்களும்,அரசியல்வாதிகளும் ஏதாவது ஒரு விடயங்களிலாவது தம்மை தெலுங்கு வம்சாவளியினர் என நேரடியாக அல்லது மறைமுகமாக தெரிவிக்கின்றனர். வீடுகளில் தாம் தெலுங்கு மொழியில் தான் உரையாடுவோம் எனவும் சொல்லியுள்ளனர். அப்படியிருக்கும் போது சீமான் தன்னை மலையாள வம்சம் என தெரிவிக்கவில்லை. சீமானை சுற்றி கடா முடா கேள்விக்கணைகளை கேட்கும் சீமான் நீங்கள் மலையாள இனமா என கேள்வியும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை நீங்கள் பார்த்திருந்தால் அந்த இணைப்பை இங்கே இணைத்து விடுங்கள்.
-
ட்றம்பரின் ஊழித்தாண்டவம்
ட்றம்பரின் ஊழித்தாண்டவம் முதல் நான்கு வருட ஆட்சியின் போதும் இருந்தது.இந்த கட்டுரையாளரப் போல் அன்றைய கட்டுரையாளர்களும் ஊடகவியாளர்களும் ட்றம்பர் மீது சீறிச்சினந்தார்கள்.மூக்கால் அழுதார்கள்.வெடித்தார்கள். இருந்தும் பைடனனுடன் போட்டியிட்ட போதும் மிக இறுக்கமான நிலையிலேயே பைடன் வெற்றி பெற்றார். அதன் பின் பைடனின் நல்லாட்சியில் நடந்த விடயங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இப்போது விடயம் என்னவென்றால் முதல் ஆட்சியில் அவ்வளவு ஊழித்தாண்டவம் ஆடிய ட்றம்பரை ஏன் அமெரிக்க மக்கள் பெரும்பான்மையாக வெற்றியடைய வைத்தார்கள்? அமெரிக்க மக்கள் உதறித்தள்ளுமளவிற்கு பைடனார் என்ன தவறுகளை செய்தார்? அல்லது கமலா அக்காவின் தேர்தல் வீரியம் போதுமானதாக இல்லையா? இல்லை அமெரிக்க மக்களுக்கும் மறதிக்குணம் எக்கச்சக்கமா? 😎
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
தமிழர் சம்பந்தமாக நிறைய விடயங்கள் ஆதாரம் இல்லாமலே அழிந்து போகும்/ மடக்கப்படும் இனம் தமிழினம். தமிழர் விடுதலைக்கூட்டணி முதன் முதலில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத பிரச்சாரங்களையே முன் வைத்தது.அதன் பின்னராகத்தான் வரலாறுகளை பக்க ஆதாரங்களாக மேடைகளில் பேசி ஆதரவு திரட்டினர்கள். குறிப்பாக சிங்கள மொழியை கூட தரக்குறைவாக பேசி ஆதரவு திரட்டினார்கள்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கச்சதீவு தமிழர் பிரதேசங்களுக்கு நடுவில் தானே இருக்கின்றது.இரு பக்க தமிழர்கள் தானே அங்கு ஒன்று கூடினார்கள். பண்டமாற்று மற்றும் உறவு பரிமாற்றங்களை செய்தார்கள். இதற்கு கருணாநிதி அவர்கள் ஏன் பதை பதைத்தார் துடி துடித்தார்? 😎
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
பொதுவாக இந்தியா,பங்களாதேஷ்,பாக்கிஸ்தான்,இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மக்கள் வெள்ளைக்காரன் என்றால் ஆங்கிலேயரைத்தான் நினைவுக்கு கொண்டு வருவார்கள். அதே போல் தமிழரை பிரித்து பார்க்க மாட்டார்கள். திராவிடத்துக்குள் அடக்கி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,தமிழ் என எல்லாவற்றையும் சாம்பாராக்கி திராவிட முடி சூட்டி விடுவர். ஆனால்..... மலையாளியும்,கன்னடரும்,தெலுங்கரும் மொழிவாரியாக, இன வாரியாக தம் இனத்தை போற்றி பாதுகாப்பர்.தம் நாடு என்பர்.தமக்கு உரியது என்பர்.வேற்று மொழியாருக்கு இடமில்லை என்பர். அதைப்பற்றி யாரும் தூக்கி பிடிக்க மாட்டார்கள்.குறையும் கூற மாட்டார்கள். இப்படியான கூத்துக்கள் போக..... நான் தமிழ்.எனது நாடு என் மக்களுக்கே முதலிடம்.எம்மை நாமே ஆள வேண்டும் என்றால் முதலில் கொதித்தெழுவவது யாரென்று பார்த்தால் அவர்கள் தமிழர்கள் தாம் 😂
-
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். 🤝
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கட்சியின் கோட்பாடாக கருணாநிதி கச்சதீவு சீதனத்துக்கு ஆதரவு தந்தார். இன்று கருணாநிதியின் மகனும் பேரனாரும் கச்ச தீவு வேண்டும் என்கிறார்கள். அதுதான் பெரிய பகிடி.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
விசுகர்! அவர்கள் விரும்புவது,வேண்டுவது கருத்து வெற்றியே ஒழிய....இன வெற்றிக்காக எதுவும் இல்லை. கவலை வேண்டாம். காலம் பதிலளிக்கும்.