Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்

Everything posted by குமாரசாமி

  1. இதய சுத்தியான அரசியல் தலைவர்கள் வரும் வரைக்கும் உலகம் தற்போதைய நிலையில் தான் போய்க்கொண்டிருக்கும். இந்த உலகம் கார்ல்ஸ் மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்களை ஈர்க்க வேண்டும். "மானுடத்திற்காக நாம் சிறப்புற செயலாற்றிட பொருத்தமான ஒரு வாழ்க்கையை தேர்வு செய்தோமென்றால், எந்த சுமையும் நம்மை வீழ்த்தாது. ஏனெனில், அவை அனைத்தும் அனைத்து மக்களின் நலனுக்கான தியாகங்கள். இத்தகைய வாழ்க்கையில் குறுகிய சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதற்குப் பதிலாக, நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் சொத்தாக அமையும். நமது நற்பணிகள் சத்தமின்றி, ஆனால் நிரந்தரமாக வேலைசெய்துகொண்டே இருக்கும். நமது மறைவிற்குப்பின் நம் சாம்பலின் மீது நன்மக்களின் கண்ணீர் சிந்தப்படும்.” -கார்ல்ஸ் மார்க்ஸ்-
  2. தமிழர்களாகிய நாங்களும் 70 வருசமாய் எங்கடை உரிமைகளை கேட்டு போராடுறம். நீங்களோ 70 வருசமாய் நாடு பொருளாதாரத்தில வீழ்ச்சி அடைந்து கொண்டு போகுது எண்டுறியள்.🤣 இதுக்கு காரணம் என்னவெண்டு யாராவது உங்களுக்கு புரிய வைப்பார்களா?
  3. யுத்தங்களுடனும் பிரச்சனைகளுடனும் தான் இந்த பூமி உருவாகி நிற்கின்றது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் யுத்தம் எந்த இடங்களில் நடைபெறுகின்றது என வைத்துத்தான் உலகம் தன் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றது. உதாரணத்திற்கு இலங்கையில் யுத்தம் நடந்தால் உலகிற்கு பாதிப்பில்லை. அதே போல் காஷ்மீரிலும் சண்டைகள் நடந்தால் எந்த நாடுகளுக்கும் பாதிக்காது. ஆபிரிக்காவில் போர் நடந்தாலும் இதே நிலமைதான். இப்போது பிரச்சனை என்னவென்றால் யுத்தமும் பொருளாதார தடைகளும் நடைபெறுவது ஐரோப்பாவின் முக்கிய சந்தைகளில்..... அமெரிக்க ஐரோப்பிய சந்தைகளே எஞ்சியிருக்கும் உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன என நினைக்கின்றேன். எனவே நாம் விரும்பியோ விரும்பாமலோ மேற்குலகின் பொருளாதாரம் சீராக இருந்தால்தான் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரமும் சீராக இருக்கும் என்ற கட்டாயத்தில்....😔
  4. யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்பது போல் உக்ரேன் யுத்தம் நிறுத்தப்படணும். மத்திய கிழக்கில் அமைதி நிலவணும். அதுதான் உலக பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கும் 🙏
  5. தீமைகள் என்று ஏதும் இருந்தால் சொல்லியிருப்பார்கள் தானே.....
  6. நீங்கள் கூறியது தான் என் கருத்தும். இதை நான் பல தடவைகள் இங்கே எழுதியுள்ளேன்.
  7. ஏஆர் ரகுமான் ஒரு பேட்டியில் சொல்கிறார் இளையராஜா அவர்களிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன் என சொல்லி முடித்துவிட்டார். அடுத்து டி ஆர் பற்று பேசும் போது அவர் இசையை பற்றி எதுவும் தெரியாமல் இசைக்க வந்துள்ளார் என பெருமையாக குறிப்பிட்டார். ஏறத்தாழ 500 படங்களுக்கு ராஜாவிடம் வேலைபார்த்த ரகுமான் வெறும் ஒழுக்கத்தை மட்டுமே கற்றாரா ? அவர் இளையராஜா குழுவில் வாசிக்கும் எல்லாருமே தனித்திறன் கொண்டவர்கள் தான். இல்லையெனில் அவர் முன்னால் இசைக்க முடியாது. அவர் கொஞ்சம் கறாரானவர் அந்த விசயத்தில். ரகுமானுக்கு கூடுதலாக ஒரு சிறப்பு இருந்தது. அது அவரது அப்பா... அவர் அப்பா இளையராஜாவுக்கு நல்ல நெருக்கமென தெரிகிறது. அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் 500 படங்களுக்கு அதாவது புன்னைமன்னர் தீம் மியூசிக் உள்ளடக்கி 500 படங்கள் என்றால் எவ்வளவு பட்டை தீட்டப்பட்டிருப்பார். எவ்வளவு கற்றிருப்பார். ஆனால் அது எதையுமே எந்த பேட்டியிலுமே அவர் சொல்லியதில்லை. விளம்பர படங்களுகு இசையமைத்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர் தான் என நீண்ட காலம் பலரும் நம்பிக்கொண்டு இருந்தார்கள். அவரும் அதை மறுக்காமலே பயணித்தவர். ராஜா ஒரு மேடையில் என்னோடு 500 படங்கள் பணிபுரிந்தார் என சொல்லிபின்னார் பலருக்கும் தெரியும். இவர் நீண்ட காலம் ராஜாவிடம் இருந்திருக்கிறார் என்பதும். இசையுலகில் இருவரின் சாதனையும் இன்னொருவர் தொட இன்னும் பல காலம் ஆகும். ரகுமானை யாரும் கீழமை செய்ய சொல்லவில்லை. ஆனால் ஏன் அவர் இசையை பற்றி பேச தயங்குகிறார் என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. அது என்னவோ தெரியவில்லை ராஜா என்ன பேசினாலும் கூர்ந்து கவனித்து பொழிப்புரை எழுதும் எவரும் ரகுமான் என்ன சொன்னாலும் ரகுமான் பத்தி என்ன சொன்னாலும் அது பெரிய விசயமில்லை என கடந்து செல்கிறார்கள். தமிழ் சூழலில் ராஜாவின் பெருமைகளை மட்டும் ராஜாவே சொல்லித் தெரியவேண்டியதாய் இருக்கிறது. கீராவாணி, டிஎஸ்பி போன்ற இசையமைப்பாளர்கள் ராஜா பற்றி பெருமையாக அவரின் சில பாடல்கள் பற்றி பேசி இருக்கிறார்கள். ரகுமான் அப்படி பேசி இருக்கிறாரா என தெரியவில்லை. பேச வேண்டுமென கட்டாயம் இல்லை. ஆனால் அவர் உருவாக்கிய பிம்பத்திற்கு அது உகந்ததாய் இல்லை என்பது மட்டும் உறுதி. பா. சரவணகாந்த். FB
  8. வணக்கம் இசைக்கலைஞன் 🙏 உங்களை மீண்டும் கண்டதில் மிக்க சந்தோசம் 👍
  9. அமெரிக்கா ஒரு விசித்திர நாடு.ஒரே நேரத்தில் ஒரு பக்கம் புயல் அழிவு. இன்னொரு பக்கம் காட்டுத்தீ அழிவு. அடுத்த பக்கம் பனிப்புயல் அழிவு. விசித்திர நாடல்ல.அதிசய நாடு. 😂
  10. ஆனால் 95 வீதமான அரச தொலைக்காட்சி பார்வையாளர்கள் "meine Damen und Herren" யே விரும்புவதாக Bild நாளிதள் கருத்து கணிப்பு சொல்கிறது. Bild
  11. குடி,சிகரட் பழக்கம் இல்லாத நல்ல மாப்பிளை தேடின காலம் போய் ....இப்ப கெட்ட பழக்கம் இல்லாத பொம்புளை தேடுற காலத்திலை நிக்கிறம் கண்டியளோ....😀
  12. குடும்பத்திற்கான பீட்சா,கொண்டாட்டங்களுக்கான பீட்சா என்றால் நாற் சதுர வடிவில் தான் தருகின்றார்கள்.😂
  13. ஹங்கேரி ஜனாதிபதி விக்ரர் ஓர்பன் கேரளாவிற்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று எடுத்த படம். 😂
  14. ஜேர்மனிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வைச்சு செய்வார் என எதிர்பார்க்கலாம்.இங்குள்ள அரசியல் ஆய்வாளர்களின் கருத்தை பார்த்தால் அப்படித்தான் தெரிகின்றது.
  15. தமிழர் பகுதிகளுக்கு சிங்களவர்களுக்குரிய சட்டங்கள் தேவையில்லை என நினைக்கின்றார்கள் போலும்....😂
  16. சிரியாவின் விடுவிப்பு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான ஒப்பந்தம் என நீங்களா எழுதியது? அல்லது வேறு எங்கேயாவது வாசித்தேனா தெரியவில்லை. உக்ரேன் - சிரியா டீல்?
  17. அன்றை நிலை இன்றில்லை. தினசரி செய்திகளை வாசியுங்கள். அன்றைய வரலாறுகள் இன்றைய நாட்களுக்கு சரிப்பட்டு வராது.
  18. சும்மா வெறிக்கதை எழுதக்கூடாது கோசான்..😂 இஞ்சை வந்த வெளிநாட்டுக்காரர் ஒழுங்காய் வேலைக்கு போய் வரியை கட்டிக்கொண்டு தாங்களும் தங்கட பாடும் எண்டு இருந்தால் ஏன் இந்த Afd போன்ற கட்சிகள் உருவாகப்போகுது? 😎
  19. கோசான்! நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும். பட பாஷையில் சொல்லணும் எண்டா தீயா வேலை செய்யணும் கோசான் 😂
  20. அவர்களிடம் இல்லாததை மற்றவர்களிடமிருந்து சுவீகரிப்பதுதானே மேற்கத்தைய வழக்கம்.
  21. அதே. எம்மதமும் சம்மதம்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழன் மட்டும் தான் சொல்லுவான். அதற்கமைய நாடுமில்லாமல் ஊரும் இல்லாமல் வீடும் இல்லாமல் இந்த உலகில் அலைபவன் தமிழின் மட்டுமே.
  22. மேற்குலகு சிரியாவில் சர்வாதிகார ஆட்சியை விரட்டி ஜனநாயக ஆட்சியை நிறுவிய சித்திரம்.👇

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.