Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  13407
 • Joined

 • Days Won

  74

Everything posted by புங்கையூரன்

 1. எதுக்கும் கிராஞ்சியம் பதி கவனம், விசுகர்..! அதுகும் வெள்ளரச மரம் போல தான் கிடக்குது…! அதுவும் குறிகாட்டுவான் போற பாதையில நிக்குது…!
 2. வழக்கம் போல நல்ல ஒரு கதை…! தொடரும் என்றே நம்புகின்றேன்! நான் என்றால் ‘கிருஸ்ணா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்றால் பேசாமல் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வேன்! சிவனை அவனிடம் புகுத்த முயற்சித்து இருக்க மாட்டேன்! எமது மதத்தின் அழகே, மற்றவரிடம் தன்னைத் திணிக்காமல் இருப்பது தான்…! இதனால் தான் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை! இதைப் பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆவல்…!
 3. பகலவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
 4. மிக்க நன்றி, நீர்வேலியான்…! ஆங்கிலேயர்களிலும் பார்க்க ஸ்பானியர்களின் காலனித்துவம் இலாபத்தையும், மதம் பரப்பலையும் நோக்கமாகக் கொண்டது..!அவர்களின் அக்கிரமங்கள் அதிகமாக இருந்தாலும், அடிமகளை ஓரளவுக்கு மனிதராக மதித்தார்கள் என்று தான் கூற வேண்டும்! ஆங்கிலேயர் அடிமைகளை savages ஆகத் தான் கருதினார்கள்.இதுநாள் அடிமைகள் ஆங்கிலேயர்களை விடவும் ஸ்பானியர்களை விரும்பினார்கள்!
 5. தொடருங்கள், ஈழப்பிரியன்…! இடங்களின் பெயர்கள் சான் என்று தொடங்குகின்றன. இவை ஸ்பானிஸ் பெயர்களா? ஏன் என்று அறிந்து சொல்லுங்கள்….!
 6. நிலாக்கா, உங்கள் கதையை வாசித்த போது...ஒரு சினிமாப் பாடல் தான் நினைவுக்கு வந்தது...! மனிதன் நினைப்பதுண்டு...வாழ்வு நிலைக்கும் என்று....! இறைவன் நினைப்பதுண்டு...பாவம் மனிதனென்று....! கூட்டைத் திறந்து விட்டால்....குருவி பறந்து விடும்...! நல்ல ஒரு படிப்பினைக் கதை...!
 7. நீண்ட நாட்களின் பின்னர் அடுத்த பகுதி எப்போது வரும் என ஆவலுடன் ஏங்க வைத்த்ச் ஒரு தொடர் கதை…! அரங்கனின் மார்பில் தவளும் ஆண்டாளின் மாலையாக….! வரிகளை ரசித்தேன்…! வைர முத்துவுக்குக் கேட்டுவிடப் போகின்றது..பரவாயில்லை…! சங்கிகள் காதில் விழுந்தால் தான் பிரச்சனை…!
 8. உங்கள் மகளின் புதிய நண்பியடமிருந்து உங்கள் மகளை விலகியிருக்கச் சொல்லுங்கள். மன நிலை சரியில்லாத பிள்ளை போல உள்ளது. கோபம் ஒரு அறிகுறி தான்…!
 9. எனக்குத் தெளிவாகவே புரிகின்றது, ரஞ்சித்…! எனது மகளுக்கும் மிகவும் நெருக்கமான சிங்கள நண்பி ஒருத்தி இருக்கிறாள்..! ஆனால் ஒரு நாளும் அவர்கள் இலன்கை அரசியல் கதைத்து நான் கண்டதில்லை!
 10. எந்த விதமான தகுதியும் இல்லாது, வல்லரசு ஒன்றின் முதுகில் சவாரி செய்து வல்லரசு ஆக முயன்ற வல்லரசுக்கு வருகின்ற்து முதலாவது சோதனை…! போர்க்குற்றம் எனும் வஜ்ராயுதம் … அக்னியை வெகு விரைவில் துரத்தப் போகின்றது…! இழந்தோம்…! இனி ஏதுமில்லை என நினைத்தோம்…! தெய்வம் நின்று கொல்லும்…!
 11. மேலைத் தேய நண்பனின் வலியை நாங்கள் உணர்கின்றோம்…! அவர்களை அணைப்பதற்கு ஆயிரம் கரங்கள் நீள்கின்றன..! ஆயிரம் கண்கள் பனிக்கின்றன…! ஆயிரம் வாசல்கள் திறக்கின்றன..! ஆனால் எமக்காக…? காந்தியின் குல்லாய் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டதே? அது தான் இன்னும் வலிக்கின்றது…!
 12. கந்தப்பு வசிக்கிற இடம், மலையும் மலை சார்ந்த நிலமுமாகும். ஐ மீன் குறிஞ்சி. பயமில்லை….!
 13. நன்றி…அண்ணை…! எனக்குத் தெரிய அனைவரும் நலம்…! மழை மேகங்கள் சிட்னியை நோக்கி நகரத் தொடங்குவதாகக் கூறுகிறார்கள்! எங்கட ஊர்த் தெற்போட்டம் மாதிரி இருக்கும் போல கிடக்குது…! உடையார் இருக்கிற பக்கம் ஒரு சிலமனும் இல்லை…!
 14. கதை நல்லாயிருக்குத் தான்…! மூட்டைப் பூச்சி இல்லையென்றால் கடிச்சது என்ன? மனிசன் நுள்ளி விளையாடுது போல….!
 15. பணமும், குணமும் ஒன்றாகப் பயணிப்பது மிகவும் அரிது...! பணம் எனும் அச்சாணியைச் சுற்றித் தான் வாழ்க்கை எனும் சக்கரம் சுழலுகின்றது போலும்...! சாமினாதன் மிகவும் பொறுமைசாலி போல உள்ளது! வெளி நாட்டு வாழ்க்கை முதலில் பழக்குவது பொறுமையைத் தான்...! அதனால் படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை....!
 16. கதையில் நிறைய ஊர் வாசனை வருகின்றது…!கதை சொல்லி சிம்பிளாகவும், அதே நேரம் கருப்பொருளில் கவனமாகவும் கதையை நகர்த்தும் விதம் அழகு..! தொடருங்கள்…!
 17. தமிழ் சிறியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
 18. புத்தனுக்கு என்று தனிப்பட்ட ஒரு எழுத்து நடை எப்போதும் உண்டு...! அதே நேரம் சிட்னி முருகனுடன் ஒரு தனகலும் கட்டாயம் இருக்கும்! கன காலம் முருகனைக் காணவில்லை..! புத்தன் நினைவு படுத்தலுக்கு நன்றி..! சிட்னி முருகனுக்குக் கப்பறாளை பூசை செய்யும் உவமானத்தை மிகவும் ரசித்தேன்! முருகன் நிச்சயம் சிங்களவனல்ல! வசதியாக வாழத் தெரிந்த ஒரு மறத் தமிழன்...!
 19. அகஸ்தியனுக்கும், நுணாவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
 20. சமகளம் மொரோக்கோவை வட அமெரிக்காவுக்கே காவின் கொண்டு போட்டிக்கு போல கிடக்கு..!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.