Everything posted by புங்கையூரன்
-
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார்
கண்ணீர் அஞ்சலிகள்…!
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
மணமக்களுக்கு எனதினிய வாழ்த்துக்கள்…!
-
எரியும் ரகசியங்கள்
கல்லறை இரகசியங்கள் என்று கூறுவார்கள்! உங்கள் கவிதையைப் பார்த்த பின்னர், புகை போக்கி இரகசியங்கள் என அழைக்கலாம் என்று இருக்கிறேன்! கவிதை அழகு…!
-
பெண்ணாய் பிறந்து விடடால்....
பிள்ளை பெரிசாகினால்…, பல்லக்கில் ஏற்றாதீர்கள்! அது தானாகவே நடக்கும்! நன்றி…நிலாக்கா!
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்…!
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
கண்ணீர் அஞ்சலிகள்…!
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
நினைவஞ்சலிகள்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகருக்கும், நந்தனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக…!
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
இல்லை, நுணா..! வரதராஜப் பெருமாள் தான் அங்கு படித்தவர்…!
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் , நுணா….!
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
புத்தன், வழமை போல நையாண்டியுடன் கூடிய அனுபவப் பகிர்வு..! எனக்கும் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனதைக் கலக்குகின்றது. போவதே கொஞ்சம் தமிழ் கதைக்கவும் கேட்கவும் தான். ஆனால் இப்போதெல்லாம் வட இந்தியர் தான் எல்லா இடமும்..! சிக்கின் கறி கேட்டால் சிக்கின் ரிக்கா தான் இருக்காம். பருப்புக்கறி கேட்டால் இந்தியன் ஸ்ரயில் தான் இருக்கு வேணுமோ எண்டு கேக்குதுகள். பாரதி சொன்னது போல, மெல்லத் தமிழ் இனிச் சாகும் போல தான் உள்ளது..! தமிழ் மட்டுமல்ல, சைவமும் தான்.. ஆக்குவதும் நாங்கள் தான்..! அதை அழிப்பதும் நாங்கள் தான்..!
-
வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
நல்ல ஒரு பகிர்வுக்கு நன்றி கவி…! ஒரு மான்குட்டியை ஒரு சிங்கமோ அல்லது புலியோ பிடித்து வைத்து விளையாடுவதைக் கண்டிருக்கிறீர்களா? கடலின் வெளியே துடித்துக் கொண்டிருக்கும் மீனை,ஒரு கொக்கு ஒன்று தூக்கித் தண்ணீரில் போடுவதைக் கண்டுள்ளீர்களா? வலையில் பிடி படும் குஞ்சு மீன்கள் மற்றும் பாம்பு, பேத்தை போன்றவற்றைத் திரும்பவும் கடலில் விடுவதற்கான காரணம் என்ன? இந்திய மீனவர் விதி விலக்கு. இயற்கையில் ஒரு விதி இருக்கின்றது. அது எம்மை அறியாமலே உயிர்களை இயக்குகின்றது. அவ்வாறான ஒரு நிகழ்வே இந்த இளைஞனின் கதை. பிரம்மஹத்தி என்று சைவம் கூறிவது இதைத் தான். எம்மை இயக்கும் இயற்கையின் சூத்திரங்களில் இதுவும் ஒன்றே ….!
-
திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார்.
ஆழ்ந்த அஞ்சலிகள்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்….!
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்…!
-
குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
ஒரு நாள் எனது அயலவர் ஒருவரின் கார் வழியில் நின்று விட்டது. அது ஒரு பிரபல சிட்னி சந்தையின் அருகாமை. அவர் காரின் வெளியே இறங்கி நின்று கொண்டிருந்தார். காலைச் சூரியனின் ஒளி அவரின் கால்களுக்கிடையால் புகுந்து வெளி வந்தது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக விரிந்தது. அவர் சாரம் அணிந்திருந்த்தார்.எனது காரை நிறுத்தி அவரை ஏற்றினேன். ஆனால் நான் வெளியே இறங்கவில்லை. காரணம் இன்னும் விளங்கவில்லை.
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
எனக்கு அந்தப் பாக்கியம் லண்டஸ்தானில் நிறையக் கிடைத்தது…!
-
முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]"
மிகவும் நல்ல அறிவூட்டல் ஆக்கம். நன்றி…!
-
போல் சத்தியநேசன் காலமானார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்…!
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
நன்னீர் மீன்கள் பங்களாதேசிகள் அதிகம் வாழும் லண்டனின் கிழக்குப் பகுதிக் கடைகளுக்குத் தினமும் வரும். வயிறு கடல் மீனை விட மிகவும் பெரிதாக இருக்கும். கடல் பேத்தை மீன்களைப் போலவே இவை இருக்கும். பங்களாதேசிகள் காத்திருந்து வாங்குவார்கள். சுவையாகத் தான் இருக்க வேணும் என நினைக்கிறேன்.
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
ஒரு பக்கம் உங்கடை கதை. மற்றப் பக்கம் இஸ்ரோ தலைவரின் விண் கல் பூமியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றது என்ற எச்சரிக்கை..! எந்தப் பக்கத்தால திரும்பிறது???? பி. கு: கதை நல்லாருக்கு…!
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
Budgericar என்று இவற்றை அழைப்பார்கள். இது நல்ல உணவு எனும் புச்செரிகா எனும் அபொரிஜின மொழியின் ஆங்கில வடிவம் ஆகும். இவை அவுஸ்திரேலிய பறவைகள். குளன், ஏரி போன்றவற்றின் கரைகளில், மரப்பொந்துகளின் வாழ்பவை. இவற்றின் குஞ்சுகள் அபோரிஜின் மக்களின் உணவாக ஒரு காலத்தில் இருந்தன. நான் இவற்றில் ஒன்றுக்குத் தமிழில் வணக்கம் சொல்லவும் பழக்கியிருந்தேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நில்மினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!
-
இலங்கை அரசை கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
இந்த வேலை நிறுத்தம் கால வரையறையின்றித் தொடர வேண்டும்…! எமது மீனவர்களும் வாழ வேண்டும்…!
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
சிவலிங்கம் தான் உள்ளது என்று கேள்வி. அதுவும் பீடம் இல்லாத சிவலிங்கம். சிவலிங்கம் அகிலத்தின் வடிவம். அதற்குப் பீடம் அமைத்து அசிங்கமாக்கியவர்கள் பார்ப்பனர்கள் தான்..!