Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் ராணுவ புரட்சிக்கு முயற்சியா?: பிரதமர்-பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு

Featured Replies

இந்தியாவில் ராணுவ புரட்சிக்கு முயற்சியா?: பிரதமர்-பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு

புதன்கிழமை, ஏப்ரல் 4, 2012,

04-pm-antony-vksingh-300.jpg

ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் தலைநகர் டெல்லியில் குவிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமருக்கு உளவுத்துறை தகவல் கொடுத்ததாகவும், அதன் பிறகு அந்த ராணுவப் பிரிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை இதனை பிரதமர் மன்மோகன் சிங்கும், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனியும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ராணுவ தளபதியின் பதவியை யாரும் கொச்சைப்படுத்த முயலக் கூடாது என்றார்.

ஆண்டனி கூறுகையில், ராணுவத்தின் இதுபோன்ற நடமாட்டம் ஒன்றும் புதிதல்ல, வழக்கமானதுதான். ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்திய ராணுவம் இறங்காது. ராணுவத்தின் நாட்டுப்பற்று குறித்து எவரும் சந்தேகம் எழுப்ப முடியாது. ராணுவத் தளபதியின் அலுவலகத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் இந்தச் செய்தி கொச்சைப்படுத்துவதாகவும். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகவும், .நமது ராணுவத்தின் மதிப்பையும் மரியாதையையும் குறைக்கும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக் கூடாது என்றார்.

ஆண்டனியை பதவி நீக்கம் செய்ய பாஜக கோரிக்கை:

இந் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்டனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது. பிரதமர் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://tamil.oneindi...ss-aid0090.html

Edited by மகம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் அப்படி ஒன்று நடந்தால் அது எமக்குபாதகமாகவே அமையும். இந்திய ராணுவம் சிங்களத்துக்கு முண்டு கொடுக்கவே செய்யும்.

இதற்குப்பின்னால் சீன - பாகிஸ்தான் - சிங்கள கூட்டுச்சக்திகள் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியொன்று நடந்தால் இந்தியா பல கூறாக உடையும்.

தமிழகம் வளர்ந்து எம்மைக்காக நாளாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியொரு முயற்சி நடந்தால்...

இந்தியாவின் புலநாய்வுத்துறை ரோவும், முட்டாள் தனமான வெளிநாட்டுக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் மலையாளத்தான்களும், சோனியா காங்கிரஸ் கூட்டமுமே...

பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்காவின் அடுத்த பார்வை இந்தியா நோக்கியதே................இந்தக்கருத்து சார்ந்த செய்தியொன்றை வேறொரு திரியில் படித்த நினைவு.............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்சீ அவ்வளவு துணிவு அவர்களுக்கு இல்லை.  சும்மா பில்டப். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அடுத்த பார்வை இந்தியா நோக்கியதே................இந்தக்கருத்து சார்ந்த செய்தியொன்றை வேறொரு திரியில் படித்த நினைவு.............................

இதுவா... தமிழ் சூரியன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100448

நன்றி தமிழ் சிறி இணைப்பிற்கு. சிலநாட்களிற்கு முன் வந்த ஓர் திரியிலேயே அதைப்பார்த்தேன். ஆனாலும் இந்த்ததிரியையும்

வாசித்தேன் . எதோ இந்தியாவில் நடக்கின்றது என்பது மட்டும் புரிகிறது.....................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடைந்தால் மேற்குலக நாடுகளுக்கு அதிக வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்..! :wub:

இந்தியாவில் இராணுவ புரட்சியா சும்மா காமெடி பண்ணாதீங்க சார்

இந்திய அரசியல் வாதிகள் தமக்கு ஜால்ரா போடுறவங்களை தான் இராணுவ தளபதியாக்குவாங்க

பாகிஸ்தான் மாதிரி இந்தியாவில் நடப்பது கஷ்டம்

Edited by அபராஜிதன்

இந்தியாவில் இராணுவப் புரட்சி என்பது அவ்வளவு இலகுவானதல்ல. அப்படியொரு திட்மிருப்பினும் அது இலகுவில் முறியடிக்கப்படக் கூடியதுதான்.

  • தொடங்கியவர்

.

"இந்தியாவில் ராணுவப்புரட்சி" என்ற விவகாரத்தின் பின்னால் பல உண்மைகள் மறைந்திருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து

கொள்ளவேண்டும்; புரிந்துகொள்ளவேண்டும்.

மூத்தஊடகவியலாளர் சாம் ராசப்பா [ Sam Rajappa] அவர்கள் தரும் தகவல்களைத் தருகிறேன். இந்தியாவின் தற்போதைய இராணுவத்

தளபதி வி.கே.சிங் [Gen.V K Singh ] என்பவர். இவர் திறமையும் நேர்மையும் கொண்டவர். இவரின் பிறந்த திகதி '10 மே 1951' ஆகும்.

தற்போதுள்ள சோனியா - மன்மோகன்சிங் ஆட்சியாளருக்கு பிக்ரம் சிங்[Lt.Gen.Bikram Singh ] என்பவரை அடுத்த இராணுவத்தளபதியாக்க

விருப்பம். இவரின் வயது காரணமாக வி கே சிங் எதிர்வரும் 2013 மார்ச் மாதம்வரை பதவியிலிருக்கலாம். அப்படி இவர் பதவியில்

தொடர்ந்து இருந்தால் பிக்ரம் சிங் தளபதி பதவிக்கு வரமுடியாது. எனவே இவரின் பிறந்ததிகதியில் ஆண்டை '1950' என மாற்றி இவரை

10 மாதங்கள் முன்பாக இந்த 2012 மே மாதத்தில் ஓய்வுபெறும்படி நிர்ப்பந்தித்துள்ளனர். இதனால் இவருக்கும் அரசிற்கும் இடையில்

மோதல் இடம்பெறுகிறது. இந்த அப்பட்டமான அநீதியை இவர் எதிர்த்ததினால்தான் இவர்மீது அவதூறு பரப்பப்படுகிறது. அதில் ஒன்று

இந்த 'இராணுவப்புரட்சி' என்பதாகும். அதில் குறிப்பிடப்படும் இருபடைப்பிரிவு டெல்கிநோக்கி நகர்த்தப்படல் என்ற சம்பவம் ஜனவரி

மாதத்தில் நடைபெற்றது. இப்போது மூன்று மாதங்களின் பின்புதான் அது பரபரப்புச் செய்தியாகிறது!

இராணுவத்திற்கு தரக்குறைவான ஆயுததளபாடங்களை விற்கஉதவினால் அதற்காக தனக்கு 14கோடி ரூபா இலஞ்சம்தர ஓர் இராணுவஅதிகாரி

முன்வந்ததாகவும், அதுபற்றி பாதுகாப்பு அமைச்சரிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் விகே சிங். இங்ஙனம் இந்திய

இராணுவத்தினரிடையையே இலஞ்சஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்துடன் விகே சிங் அண்மையில் இந்தியப்பிரதமருக்கு எழுதிய

இரகசியக்கடிதத்தின் பகுதிகள் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டு பிறிதொருசர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்தமோதல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதைப்பற்றி எவரும் கவலைப்படுவதாகவில்லை. பரந்துபட்ட

இலஞ்சஊழல் கலாச்சாரம் காரணமாக நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது.தளபதி விகே சிங்கை பதவியிலிருந்து நீக்கவேண்டும் அல்லது

கட்டாயவிடுமுறையில் அனுப்பவேண்டும் என்றெல்லாம் பேசப்படுகிறது. எனவே வேறு பல சர்ச்சைகள், பரபரப்புச்செய்திகள் வரலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தக்குழறுபடிகள்பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள பின்வரும் இணைப்புகளைச்சொடுக்கவும்:

http://www.theweekendleader.com/Causes/1015/birthday-pangs.html

http://www.theweekendleader.com/Causes/1022/adhocracy-reigns.html

http://www.theweekendleader.com/Causes/1029/army-rumblings.html

http://www.outlookindia.com/article.aspx?280392

ஊழல்களும் திருட்டுத்தனமும் தங்களுக்கு நிலைமையைச் சாதகமாக்குதலும் இந்தியாவில் வேரூன்றியுள்ளது. ஆகவே இது இராணுவப் புரட்சியல்ல.

தமிழ் மக்களின் விரோதிகள் உடைவது விடுதலைக்கு உதவும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ காந்தி தாத்தா .. கிரிக்கெட்டு .. பாகிஸ்தான்.. சினிமா கவர்ச்சி கன்னிகள்... போன்ற சின்ன சின்ன நூலிழையில் அப்புடியே ஜனநாய்கம் என்ற பெயரில் லைட்டா ஒட்டிட்டு வண்டி ஓடிட்டு இருக்கு.

பிச்சை காரன் வாந்தி எடுத்ததையெல்லாம் கூட்டி வைத்து ராணுவத்தால் ஆளமுடியாது.. ராணுவ தளபதி மண்டை வீங்கி செத்துடுவான்.. பல் தேசிய கூட்டமைப்புக்குள் உடைவது மட்டுமே சாத்தியம் .. ஒட்ட வைத்து ஆட்சி செய்ய ராணுவத்தால் முடியாது.. :mellow: :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.