Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக இளவலுக்கு

- வ.ஐ.ச.ஜெயபாலன்

இளய கலைஞர்களே

சென்னை வரும்போது

சென்றவனைப் பாருங்கள் என்பேனே

இன்று அவனில்லை.

இயமனும் கவிதை சிறுகதைகள்

எழுதிப் பிரசுரிக்க அவாவுற்று

இவனை அழைத்தானோ.

தாகத்தில் தெருப் பாடகர் நினைத்துவரும்

சாலையோரத்து ஊருணி

மாரியிலேயே வரண்டதுபோல

ஊடக இளவல் கிருஸ்ணா டாவின்சி

இளமையில் வீழ்ந்தானே.

எங்கள் முகங்களை அறிமுகம் செய்த

இனியன் முகமின்றி எரிதழலில் படுகிறதோ.

இல்லை வாழும் முகமானாள் மகள் நேகா

என்றும் சாகா முகமையா உனக்கு

தமிழ் கலைஞர் எங்கள் நினைவுகளில்.

கிருஸ்ணா டாவின்சியைப்பற்றி கொஞ்சந்தான் அறிந்திருந்தேன். அவரது மரணம் தொடர்பான சில விடயங்களை முகப்புத்தகத்தில் பார்த்தபொழுதில்தான்... எழுத்துத் துறையில் அவரது ஈடுபாட்டின் கனதி புரிந்தது.

அவரைப்பற்றி அவரின் சக நண்பர் ஒருவரின் எண்ணங்கள்...

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2012/apr/050412c.asp

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கு.... எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

உறவினர்களுக்கும் & நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை உடையாருக்கு நன்றிகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒரு காலத்தில் பிரபல்யமாக இருந்தவர். பின்பு இவரின் ஆக்கங்களிக் காணக்கிடைக்கவில்லை.

கிருஷ்ணா டாவின்ஸி என்ற எனது அண்ணனும்.. குட்டி தேவதையின் இறுதி முத்தமும்..!-- Cartoonist Bala

2005-ல் தான் முதல் முதலாக மும்பையிலிருந்து சென்னைக்கு வருகிறேன். சும்மா பத்திரிகை அலுவலகங்களுக்கு போய்விட்டு வரலாம் என்று தான் கிளம்பி வந்திருந்தேன். விகடனுக்கு போய் ராஜூமுருகன், அண்ணன் ரா.கண்ணன், அறிவழகன் உள்ளிட்ட நண்பர்களை சந்தித்து பேசிவிட்டு குமுதத்திற்கு போனேன். ஆனால் அன்று அதன் கதவுகள் எனக்கு திறக்க வில்லை. கேட்டில் இருந்தவர் என் கையில் இருந்த கார்ட்டூன் ஃபைல்களை பார்த்துவிட்டு வேலை கேட்டு வந்திருப்பதாக நினைத்துக்கொண்டார் போல. ``யாரையும் பார்க்க முடியாது சார்.. வேணும்னா உங்க பயோடேட்டாவை கொடுத்துட்டுப்போங்க.. கூப்பிடுவாங்க’’ என்று சொன்னார். ``இது என்ன காமெடியா இருக்கு.. ’’ என்று நினைத்துக் கொண்டு என்னுடைய பயோடேட்டாவையும், கார்ட்டூன்களின் ஜெராக்ஸையும் ஒரு கவரில் போட்டு TO அட்ரஸில் நான் எழுதிய பெயர் `KRISHNA DAVINCI’. அன்று நான் எழுதிய கிருஷ்ணா டாவின்ஸி என்ற அந்த பெயர் தான் இன்று தமிழகத்தில் எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்கான களத்தை தந்தது.

மறு நாள் என் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்த எடுப்பிலேயே ``நீங்க தான் அந்த மும்பை பாலாவா’’ என்று சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார் கிருஷ்ணா. ``கார்ட்டூன்ஸ்லாம் பார்த்தேன். நல்லாருக்கு. நாளைக்கு ஆபீசுக்கு வாங்க’’ என்றார். முதல் நாள் திறக்க மறுத்த குமுதத்தின் கதவு இரண்டாவது நாள் கிருஷ்ணா டாவின்ஸியின் பெயரை சொன்னதும் திறந்தது. ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். மும்பைப் பற்றிய விசயங்கள், அவர் மும்பைக்கு வந்து பண்ணிய ஸ்டோரி என செம ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். ப்ரியா கல்யாணராமன், ரஞ்சன், பெ.கருணாகரன் உள்ளிட்ட நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார். கடைசியாக ``குமுதத்துல சேர்றீங்களா’’ என்று கேட்டார். சரி என்றதும் ரெண்டு மூனு கார்ட்டூன்களை வரைஞ்சு கொடுங்க என்று சொன்னதை தொடர்ந்து சில கார்ட்டூன்களை வரைந்து கொடுத்துவிட்டு நான் மும்பைக்கு ரயிலேறி விட்டிருந்தேன்.

அடுத்தவாரம் வழக்கம் போல் மும்பையில் குமுதத்தை வாங்கி புரட்டி கொண்டிருந்தேன். பார்த்தால் தலையங்கம் பக்கத்தில் எனது கார்ட்டூன் ஒன்று வெளியாகியிருந்தது. நம்பவே முடியவில்லை.ஆச்சரியமாக இருந்தது. குமுதத்தில் எனது கார்ட்டூன் வருவது பற்றி கிருஷ்ணா என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. அதன் பின்னர் அவர் கொடுத்த உற்சாகத்தில் தான் சென்னை வந்து குமுதத்தில் சேர்ந்தேன். மும்பையில் தமிழ் டைம்ஸ் என்ற நாளிதழிலில் சப்-எடிட்டராக பணிபுரிந்து கொண்டிருந்தவனை முழு நேர கார்ட்டூனிஸ்ட்டாக குமுதத்தில் சேர்த்து விட்டவர் கிருஷ்ணா தான். இன்று ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக என்னை ஒரு நாலு பேருக்கு தெரியும் என்றால் அதற்கு முழு முதற்காரணம் கிருஷ்ணா டாவின்ஸி தான்.

குமுதத்தில் `கின்ஸி’ என்ற பெயரில் அவர் பண்ணிய காமெடி கலாட்டாக்கள் தனித்த அடையாளம் கொண்டவை. தலைவர்களை சித்திரக்கதை மூலம் கிண்டல் செய்வது என்ற பாணியை `நையாண்டி பவனில்’ அறிமுகப்படுத்தினார். `டிக்ஸ்னரி’ என்ற பெயரில் தலைவர்களின் வார்த்தைகளுக்கு காமெடி அர்த்தம் கொடுத்து கலாய்ப்பது, `முப்பது நாட்களில் இலக்கியவாதி ஆவது எப்படி’ என்பது உட்பட குமுதத்தில் வெளிவந்த புதிய பாணி நகைச்சுவை பக்கங்கள் அத்தனையும் கிருஷ்ணாவின் கைவண்ணத்தில் மிளிர்ந்தவை. பத்திரிகைத்துறைப்பற்றியும், அதில் நடக்கும் உள்குத்துகள் பற்றியும் அவர் எழுதிய `நான்காவது எஸ்டேட்’ நாவல் அத்தனை விறுவிறுப்புகளையும், சுவராஸ்யங்களையும் கொண்டது. அந்த நாவலில் சொல்லப்பட்ட அத்தனையும் நிஜமாக பத்திரிகை அலுவலகங்களில் நடப்பவை என்பது பத்திரிகையில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

பத்திரிகைத்துறையில் ஒரு விசயத்தை மட்டும் பார்ப்பவர்கள் மற்றதில் கவனம் செலுத்த மட்டார்கள். ஆனால் கிருஷ்ணா `அரசு’ பதில்களும் எழுதுவார், பிரபாகரனை பேட்டி எடுக்க இலங்கை செல்வார், நையாண்டி பக்கங்களும் எழுதுவார், இலக்கியம், சினிமா என பன்முக ஆளுமைக்கொண்டவர். எந்த கட்சி பற்றும் அற்றவர். ஒடுக்கப்படும் மக்களின் பிரச்னையை தனக்கு கிடைத்த தளத்தில் எளிமையாக கொண்டு செல்வதில் திறமையானவர். அடிப்படையில் ஒரு மார்க்சிஸ்ட் அவர். என்னைப்போல் அவரும் திருநெல்வேலிக்காரர்தான்.

பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என டிவியில் செய்தி ஒளிபரப்பானதும் எனக்கு போன் பண்ணி பதட்டமாக பேசிக்கொண்டிருந்தார். பின்னர் ``வழக்கமான புரளியாக இருக்கும் பாலா’’ என்று ஆறுதல் சொல்லிக்கொண்டார். பிற்பாடு ஈழம் பத்தி நாங்கள் பேசும்போதெல்லாம் ``ஒரு மக்கள் போராட்டம் இப்படி முடிஞ்சு போச்சே’’ வருத்தப்படுவார். அருள் எழிலன் எழுதும் கட்டுரைகள் குறித்தும் ராஜூமுருகன் எழுதும் நையாண்டி மேட்டர் குறித்தும் பாராட்டி பேசுவார். அ.முத்துலிங்கத்திடம் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார். அம்பேத்கரின் பேசப்படாத உரைகள் புத்தகம் பற்றி சிலாகித்து பேசி என்னை படிக்க சொன்னார். உயர்கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆதிக்கச்சாதியினர் செருப்பு தைப்பது போன்ற போராட்டங்கள் நடத்தியபோது, அவர்கள் மேல் தீண்டாமை கேஸ் போடணும் என்று கொதிப்பார். பத்திரிகையாளர் லசந்தா கொல்லப்பட்டதை வைத்து ராஜபக்சே கனவில் லசந்தா வந்து பேசுவது போல் ஒரு கதையை விகடனில் எழுதியிருந்தார். அவ்வளவு பிரமாதமான கதை.

கிருஷ்ணாவின் செல்லங்களில் நானும் ஒருவன். நன் சென்னைக்கு வந்த ஆரம்ப காலங்களில் கோயிந்து தனமாக பேசிக்கொண்டிருந்தபோதெல்லாம் என் பார்வையை தெளிவுபடுத்தியவர். கிருஷ்ணாவின் சிரிப்பே தனித்துவமானது. ஃபேண்டஸியானவர், அழகன். என்னுடைய எல்லா நல்லது கெட்டதுகளையும் அறிந்தவர். என் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டவர்.

ரயில்வேயில் பணிபுரிந்தவர். டிக்கெட் எடுக்காமல் வரும் ஏழைகளிடம் பணம் வாங்காமல் விட்டுவிடுவார். இப்படி இருந்தால் அரசுவேலையில் இருக்க முடியாது என்பதால் அதை விட்டுவிட்டு விரும்பி பத்திரிகைதுறைக்கு வந்தவர். அதேப்போல் பிற்பாடு பத்திரிகைதுறையிலிருந்து விலகி விரும்பியே சினிமா பக்கம் சென்றார். ஒவ்வொரு முறை பேசும்போதும் ’’சீக்கிரம் படம் பண்ணிரலாம் பாலா’’ என்று நம்பிக்கையோடு சொல்வார்.

சமீபத்தில் அவருக்கு போன் செய்தபோது, குரல் பலகீனமாக இருந்தது. ``எலிக்காய்ச்சல் பாலா.. இப்போ பரவாயில்ல..’’ என்றார். நான் வீட்டுக்கு பார்க்க வாரேன் என்ற போது மறுத்துவிட்டார். உடல் நலிவுற்ற நிலையில் யாரையும் அவர் சந்திக்க விரும்பவில்லை. சரி அவர் குணமடைந்த பின்னர் போய் பார்ப்போம் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் திடிரென்று காலமாகிவிட்டார் என அண்ணன் கண்ணன் எழுதிய நிலைத்தகவலை படித்த போது அதிர்ச்சியாக இருந்தது. வழிநெடுக கிருஷ்ணாவின் நினைவலைகள் அலைகளிக்க சிலநிமிடங்களில் மருத்துவமனைக்கு போய் சேர்ந்தேன். பூங்குழலி, கதிர்வேலன் உள்ளிட்ட நண்பர்கள் முன்னமே அங்கிருந்தார்கள். எனது அண்ணனின் உடலைப்பெற்றுக்கொண்டு அவரின் வீடு போய் சேர்ந்தோம். வீட்டில் உடலை ஐஸ்பெட்டியில் வைப்பதற்கு முன் திருநீர் சந்தனம் பூசணும்னா பூசுங்க என்றார் பெட்டியை கொண்டுவந்தவர். ``அய்யையோ அவனுக்கு அதெல்லாம் பிடிக்காது.. வேண்டாம்’’ என்று அப்பா மறுத்தார். தனது மகனின் ஆசைப்படியே எந்த சடங்குகளும் இல்லாமல் இறுதிச்சடங்கு நடத்தினர். அப்போது தான் புரிந்தது கிருஷ்ணா என்னமாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்று.

மயானத்தில் வைத்து இறுதியாக கிருஷ்ணாவுக்கு அவரின் 6வயது செல்ல மகள் முத்தம் கொடுத்ததை பார்த்தபோது தாங்க முடியவில்லை, அப்படி என்ன அவசரம் அண்ணா.. அந்த குட்டி தேவதையை விட்டுச்செல்ல. அந்த முத்தத்திற்காகவாவது நீங்கள் திரும்பி வந்திருக்கலாமே..

என்னை வளர்த்துவிட்ட கிருஷ்ணாவை இதுவரை ஒரு கார்ட்டூன் கூட வரைந்ததில்லை. அவர் படம் எடுத்து வெளியிடும்போது அவரை ஒரு கார்ட்டூன் வரைந்து கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன்.. ஆனால் அவரின் ஆசையும் எனது ஆசையும் நிறைவேறாமலே போய்விட்டது. கிருஷணாவுக்கு இப்படி ஒரு நினைவஞ்சலி கார்ட்டூன் வரைவேண்டிய சூழ்நிலை வந்ததை நினைத்து வேதனைப்படுகிறேன். குடும்பத்தில் ஒற்றைப் பயலாய் பிறந்த எனக்கு கிடைத்த அண்ணன்களில் `கிருஷ்ணா டாவின்ஸி’ என்ற அதி அற்புதமான அன்பு அண்ணனை இழந்து நிற்கிறேன்.. ஜெயராணிக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளும் இல்லை

via facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.