Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துக் கட்சிகளினதும் நிலைப்பாட்டை அறிந்தமை பயனளிக்கிறது: நாச்சியப்பன்

Featured Replies

'இலங்கையில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து கொண்டமை பயனுள்ள விடயமாக இருந்தது' என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நிலையில், இலங்கை விஜயம் தொடர்பிலும் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பிலும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

'பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக சந்தித்து கதைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. எனவே ஒவ்வொருவரும் என்ன சிந்தனையுடன் இருக்கின்றார்கள், எந்த அளவில் திட்டங்களை செயற்படுத்துகின்றார்கள் என்பது தொடர்பில் தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை எந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது, அது எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பது பற்றி பல்வேறு கட்சிகளுடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. சம்பந்தன் ஜயாவுடன் பேசுவதற்கும் அரசாங்கத்தின் நிலை தொடர்பில் பேசுவதற்கும் சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும்.

அத்துடன் நேற்றுஇரவு அரசியல் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாகவும் இந்தியாவை பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்கும் அவர்களைப்பற்றி நாங்கள் தெரிந்து கொள்வதற்கும் மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது நாம் எது எதை பார்க்கவேண்டும், எது எது வேண்டும் என இந்திய தூதுவராலயத்தின் மூலம் கோனோமோ, யார் யாரை சந்திக்க வேண்டும் என வேண்டினோமோ அவை அனைத்தும் எமது பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

மக்களிடம் நீங்கள் எவ்வாறான வியடங்களை தெரிந்து கொண்டீர்கள் என காங்கிரஸ் பிரதிநிதி என்.எஸ்.வி.சித்தனிடம் கேட்டபோது அவர் பதிலளிக்கையில்,

தற்போது இங்குள்ள 6000க்கும் மேற்பட்டவர்களை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மீள்குடியேற்றம் செய்ய முடியும் என கூறுகின்றனர். ஏனையோரை சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றியுள்ளதாகவும் அரசாங்க தரப்பில் கூறுகின்றனர்.

தற்போதுள்ளவர்களை அனுப்பாததற்கு காரணமாக மிதி வெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவை இரண்டு மாதத்தில் முடிவடைந்து விடும், அதன்பின்னர் இவர்களும் சொந்த இடத்திற்கு செல்ல முடியும் என கூறுகின்றனர்.

ஏற்கனவே இருந்தவர்கள் சென்ற பின்னர் தற்போதும் நாம் தகரத்தில் வசிப்பது கஸ்டமாகவுள்ளதாகவும் தங்களையும் சொந்த இடங்களுக்கு அனுப்புங்கள் என மக்கள் கோருகின்றனர். அத்துடன் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் தரமானதாக இல்லை எனவும் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்திய அரசு வீடமைப்புக்காகவும் வைத்தியசாலைகளுக்காகவும் கல்விக்காகவும் புகையிரத பாதைகளை புனரமைப்பதற்காகவும் நிதி வசதி அளித்துள்ளது. இன்னும் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இக்குழு இங்கு வந்துள்ளது.

மக்களுடனும் அரசாங்கத்துடனும் நேருக்கு நேர் பேசி அவை பற்றி தெரிந்து கொள்வோம். அதனை புறப்படுவதற்கு முன்னதாக இந்நாட்டு ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறுவோம்.

இந்திய வீடமைப்பு திட்டம் தாமதமென்று சொல்லப்படுகின்றது. அதனை வேகபப்டுத்துவது தொடர்பிலும் பொறுப்பினை மிக விரைவில் ஏற்றுக்கொள்வோம். பணத்தை வழங்குவதா நேரடியாக கொடுப்பதா என்பது தொடர்பிலும் பிரச்சனைகள் இருந்தது நேரடியாக சென்று பார்த்தபின்னர் தான் தெரியவரும்.

சோனியா காந்தியைப் பொருத்தவரை இந்த மக்களுக்கு நிறையவே கொடுப்பதற்கு தயாராக உள்ளார்கள். இந்த அரசாங்கத்திடம் அது தொடர்பில் கூறுவோம். அரசியல் தீர்வு தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த பின்னர் அதனை வழங்குவோம் என கூறப்பபடுகின்றது.

நாமும் வருகை தந்து இரு நாட்கள் என்பதால் மற்றைய இடங்களையும் சென்று பார்வையிட்ட பின்னர் தான் எதுவும் கூறமுடியும்' என என்.எஸ்.வி.சித்தன் எம்.பி தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39513-2012-04-18-10-54-32.html

  • கருத்துக்கள உறவுகள்

புலியை அழிப்பதாக நினைத்து.... தமிழர்களைக் கொன்று, அவர்களின் பூர்வீக நிலங்களை பறித்து சிங்களவனிடம் கொடுத்த.... காங்கிரஸ், அந்த நிலங்களை தமிழரிடம் திரும்ப வாங்கிக் கொடுப்பதே... இப்போதைய, அவசர தேவை. அதைவிட்டுட்டு.... கோக்கு, மாக்கு தனமாக காங்கிரஸ் எம்.பிக்கள் கதைப்பது ஒரு பயனும் தராது.

  • கருத்துக்கள உறவுகள்

.............. எனக்கென்னமோ இந்த குழுவினர் தமிழர்களுக்கு தீர்வை பெற்று கொடுக்க வந்தகுளுவோ அல்லது தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொட்டவர்களோ கிடையாது ................ மாறாக மகிந்தரின் அழைப்பின் பெயரில் வந்த விருந்தினர்கள்.

ஒன்றையும் உருப்படியாக செய்யமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

#Indian MPs try to paint a rosy picture of #SriLanka, Tamils in Manik Farm #IDPs

never had their own house b4 war??

http://www.thehindu.com/news/international/article3328105.ece

The IDPs mainly raised two issues with the Indian delegation. One is related to housing. “Where will we live after we leave this place,” asked an inmate. These residents are not entitled to the 50,000 houses that India is assisting in building in Sri Lanka, nor are they part of any other scheme. “From my interactions, I came to the conclusion that these people did not have homes even earlier,” said T.K. Rangarajan of the CPI(M). It possibly did not matter then as there was some kind of livelihood.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துக் கட்சிகளினதும் நிலைப்பாட்டை அறிந்தமை பயனளிக்கிறது: நாச்சியப்பன்

ஆமா தெரியாம குத்து மதிப்பக அறிக்கை தயாரித்தால் ...? இப்பொ எல்லோருக்கு உகந்த மாதிரி நேக்காக வார்த்தைகளை கோர்த்து போட்டு அறிக்கை தயார் செய்ய போகிறீர்கள்..! கேட்டால் மிகுந்த ராஜதந்திரத்தொடு கவனமாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பார் சிதம்பரம் .

இலங்கையில் தமிழர் புனர் வாழ்வு திருப்தி அளிக்கின்றன என கூறி விட முடியாது.ஆனால் திருப்தி அளிக்கின்றன. ஆனால் இதுவே திருப்தி என்றும் கூறிவிட முடியாது

அப்புறம்.. படிக்கிற அவனுக்கும் தெரியாது.கேட்கிற் எங்களுக்கும் பிரியாது.நடுவில ஆளாளுக்கு

இந்த பத்திரிக்கை அன்பர்கள் இவங்களா ஏதாவது... ஒரு கற்பனை பண்ணி எழுத வேண்டியது

இந்த ஆள் சென்றமுறை தன்னை சந்திக்க போன தமிழ் கட்சிகளின் தலைவர்களை தான் சொல்லிய விடையங்களை எழுதி கையெழுத்து போட்டு தந்துவிட்டு போகும்படி சொன்னவர் . இதனால் ஆனந்தசங்கரியும், சுமந்திரனும் கை அடிபாடுவரைக்கும் போனவர்கள். இந்தமுறை ஏதோ தெரியாததை கண்டு பிடித்துவிட்ட மாதிரி இப்படி திருகுதாளம் விடுகிறார். வருகிற தேர்தலில் மிகவும் அவசியமாக கவனிக்கப்படவேண்டிய ஆள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.