Jump to content

யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?


Recommended Posts

Posted

ம்.. எல்லாரும் அழகா உங்களுடைய யாழ் அறிமுகத்தை சொல்லிருக்குறீங்க... ம் நான் யாழ் இணையத்துக்கு 2003 ல இருந்து வந்து போறனான், முன் பக்கம் மட்டும் தான் வாரது, யாழ்க்கு வந்துதான், தமிழ் பக்கங்களுக்கு போறது. கருத்துக்களம் இருப்பது அப்ப தெரியாது..பேந்து 2004 ல கருத்துக்களத்தை ஒருக்க கிளிக் பன்னி உள்ள வந்தன் ,அப்பத்தான் தமிழ்ல எழுதிற ஒரு தமிழ் களத்தை கண்டன், பேந்து உள்ள பார்த்தால் கூட தமிழினி அக்காட அவாற்றரும், கவிதன் அண்ணாட அவாற்றரும் ,குருவி அண்ணாட அவாற்றரும் , கண்ணில பட்டது ,பிறகு தான் அவர்கள் என்ன எழுதிருக்கினம் எண்டதை வாசித்தன் நகைச்சுவையா கதைக்கிறதுகளையும் பார்த்து ரசித்திருக்கன்.அப்ப குருவி அண்ணாட கவிதை களை அடிக்கடி வந்து பார்ப்பன் , நான் பார்க்கும் போதும் குருவி அண்ணாட கவிதைகளாத்தான் இருக்குறது. :wink:

சரி என்னண்டு தான் இப்படி தமிழ்ல கவிதைகளை எழுதுறார்களோ எண்டு நினைத்ததுண்டு... சின்னப்பு எழுதினதுகளையும் பார்த்து சிரிக்கிறனான்... பேந்து சரி நாமளும் முயற்சி செய்து பாப்பம் எண்டு பதிந்தன் 13 வைகாசி 2005 அண்டைக்கு யாழ்ல இணைந்தேன்.இணைந்திட்டு வணக்கம் எண்டு யாரோ எழுதின தலைப்பில தான் வணக்கம் எண்டு எழுதினன் பேந்து எல்லாரும் எனக்கு வணக்கம் போட்டினம் .. நானும் நன்றி சொன்னன்... இருந்தாபோல மதண் வந்து உங்களை பற்றி சொல்லுங்களேன் எண்டார் .... நான் ஏன் இவர் என்னை பற்றி சொல்லச் சொல்லுறார் என்று யோசித்திட்டு மதண் கிட்டேயே திருப்பி கேட்டன் உங்களை பற்றி முதல் சொல்லுங்கோ எண்டு ... அது நல்லா ஞாபகம் இருக்கு... இப்பவும் நினைத்து சிரிப்பன்...

அப்ப தமிழ்ல எழுதுற எண்டால் சரியான கஸ்டம் பாமினி ல தான் எழுதுறனான் . எனக்கு அதுவும் தறவிறக்கம் அது இது எண்ட எழுதுவார்கள் எனக்கு அப்ப இந்த தமிழ் விளங்குறயில்லை என்ன சுத்த தமிழ்ல எழுதினமோ எண்டு யோசித்திருக்கன்.. :lol: தெரியாத நிறைய விசயங்களையும் யாழ் இணையம் மூலம் அறிந்திருக்கன் சோ யாழ் இணையத்தளத்தை மறக்கவே முடியாது .. அந்த அளவுக்கு யாழ் என்னை கவந்துட்டு.. :wink:

சகோதரம் ,கவிதன் அண்ணா இவர்களையும் மறக்க முடியாது இவர்கள் நான் எழுதினதுக்கு மேற்கோள் காட்டி எழுதாட்டி இப்ப நான் யாழ்ல இருந்திருக்க மாட்டன் எண்டுதான் நினைக்கிறன்.. நான் இணைந்த புதுசில் போட்டிகள் ,, பகுதியில் தான் கூட எழுதுறது நான் கேள்வி கேட்டால் சகோதரமும் கவிதன் அண்ணா வந்து பதில் எழுதுவினம் பிறகு அதுக்கு பதில் எழுத வந்து வந்து அப்படியே இப்ப யாழ்ல எழுத துவங்கீட்டன்... :P :P :P

  • Replies 117
  • Created
  • Last Reply
Posted

எல்லோருக்கும் வணக்கம்.

நான் ஒய்வாக இருக்கும்போது ஒவ்வொரு தமிழ் இணையமாக தேடி பார்ப்பேன். அப்போது யாழ் என்று ஒரு சொல் கண்ணில் பட்டது. கருத்துக்களத்தை கிளிக் பண்ணி பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. என்னத்தைப்பற்றி கதைக்கின்றார்கள் என்றே புரியலை. பின்னார் மீண்டும் ஒரு முறை பார்த்தேன். முதலில் சின்னப்புவின் பகிடிகள் தான் கண்ணில் பட்டது. அவற்றை வாசிக்கும் நோக்குடன் ஒவ்வொரு நாளும் வர தொடங்கினேன். ஆனால் எந்த தலைப்புக்களிக்குள் போய் பார்ப்பது என்று தெரியலை. பின்னார் ஒருவாறு பதிவு செய்தேன். 23 ஆவணி 2005ல் பதிவு செய்தேன். தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியலை. ஆகவே வந்தவுடனே உதவி கேட்டேன். சில உறவுகள் தனிமடல் மூலமாகவும் உதவி செய்தனார்.

மற்றைய உறவுகளின் கதைகள் கவிதைகளை பார்க்கும்போது எனக்கும் எழுத வேண்டும் போல் இருக்கும். ஆனால் தமிழில் எழுதமால் கனகாலங்கள் ஆனபடியால் எழுதுவதற்கு கஸ்டமாக இருந்தது. பின்னார் எல்லோருடைய தகவல்களையும் படித்து நன்றி சொல்லிக்கொண்டிருந்தேன். வலைஞன் அவர்கள் கொண்டு வந்த ஓரு வரி பதில் மூலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக எழுத தொடங்கினேன். பின்பு கொஞ்சம் முயற்சி செய்து ஒரு கவிதையை முதல் முதலாக இணைத்தேன். உறவுகள் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் தந்த உற்சாகத்தால் தான் பின்பும் கவிதைகள் கதைகள் என எழுத தொடங்கினேன். எனது தமிழ் அறிவை வளர்த்தது யாழ் என்று சொல்வதில் பெருமையடைகின்றேன். அன்பான உறவுகளையும் இந்த களம் தந்திருக்கின்றது. இரவு 3 மணிவரைக்கும் இருந்து ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் பார்த்து ரசித்து சிரித்து வீட்டில் குட்டும் வேண்டி இருக்கின்றேன். இப்போ நேரங்கள் கொஞ்சம் கிடைக்காத காரணத்தால் களத்திற்கு வர முடியமால் இருக்கின்றது.மோகன் அண்ணாவிற்கும் அனைத்து மட்டுநிறுத்தினாருக்கும் எனது நன்றிகளை இந்நேரம் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன். யாழ்களம் இன்னும் மேலும் மேலும் பல் ஆயிரக்கான உறுப்பினார்களை பெற்று எல்லா இடத்திலும் ஒளி வீச வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

Posted

அனைவருக்கும் வணக்கம்

இங்கு எல்லோரும் தங்கள் தங்கள் யாழ் அறிமுககத்தை பற்றி அழகாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எப்படி அறிமுகமாச்சு...?? எனது தங்கை ஒரு நாள்? கணனியில் இருக்கும் போது விழுந்து விழுந்து சிரித்தாள். அப்போ நான் ஒரு கவிதை புத்தகம் வாசித்து கொண்டு இருந்தன். என்டா இவள் இப்படி சிரிக்கிறாள் என்று நிமிர்ந்து ஏண்டி சிரிக்கிறாய் என்று கேட்டால். அவள் சொன்னாள் யாழ் நகைச்சுவை வாசித்து சிரிக்கிறன் என்று நான் கேட்டன் அப்படி என்னதான் அதுல எழுதி இருக்கு என்று அப்ப தான் அவள் சொன்னாள்? சின்னப்புவின் நகைச்சுவை , அத்துடன் கள உறுப்பினர்கள் நகைச்சுவையான கருத்தாடல்கள் , செல்லச்சண்டைகள், புதினங்கள் எல்லாம் இருக்கு பிறகு ஆறுதலாக போய் பார் என்று.

அப்போ எனக்கு கணனியில் இருந்து வாசிக்க எல்லாம் பொறுமை இல்லை பிடிக்கவும் மாட்டுது. எனது பொழுது போக்கு புத்தகங்கள் வாசிப்பது எப்பாலும் இருந்துட்டு சட்? பண்ணுவது. சட்டும் அவ்வளவாக பிடிக்காது. சரி ஒரு நாள் ரொம்ப போர் அடிச்சுது என்று போட்டு தங்கை சொன்ன தளத்துக்கு போய் பார்ப்பம் என்று வந்தன். கவிதைகள் கட்டுரைகள் வாசிக்க ரொம்ப சுவாரிசியமாக இருந்தது. அப்புறம் தொடர்ந்து ஒரு வருடம் தொடர்ந்து வாசிச்சன். போன சமருக்கு 2 பாடம் தன் எடுத்தன் அப்ப நிறைய நேரமும் கிடைத்தது நாம் ஏன் இணையக கூடாது என்ற ஒரு ஆசையும் வந்தது. சரி இணைந்துதான் பார்ப்பமே என்று களத்துல குதிச்சுட்டன்.

களத்துல குதிச்சு வேற யாரோ அறிமுகம் என்றதில் நான் தமிங்கிலத்தில் எழுதினன். அப்ப அனிதா? எப்படி தமிழில் டைப் பண்ணுவது என்று எனக்கு மடல் போட்டு சொன்னார். அவர் தந்ததை வாசித்து விட்டு நானும் புதுசாக ஒரு பக்கதில் எல்லோருக்கும் வணக்கம் என்று தட்டச்சு செய்தன், அப்ப இளைஞன் தான் என்னை முதல் முதல் வரவேற்றார். அப்புறம் கவிதன் அப்புறம் இப்ப வினித் முந்தி வீணாய்போனவன் என்ற பெயரில் இருந்தார். அவரும் என்னை வாம்மா மின்னல் என்று வரவேற்று லொள்ளு பண்ணினார். அப்புறம் நிதர்சன் ,டண் பெந்து மழலை வரவேற்று நீங்கள் யாரின் இரசிகை என்று கேட்டார். நான் உங்கள் இரசிகை என்றவிடன் ஆகா எனக்கும் ஒரு இரசிகையா என்றவர்தான் ஆளை இப்போ காணக்கிடைக்குறதில்லை. அப்புறம் வெண்ணிலா சின்னப்பு அருவி தல மாதன் சுண்டல் மயூரன் என்னை வரவேற்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

இப்படி ஆரம்பித்த எனது வருகை என்னை யாழுக்கு வாசகி ஆக்கிவிட்டது.அதுமட்டுமல்லாத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எல்லோருக்கும் அன்பு வணக்கம்

யாழ் களத்தை நண்பர் மூலம் அறிந்து கொண்ட நான் பல வருடங்களாக வாசகனாக இருந்தேன் ..பல முறை இணைந்து எழுத முனைந்து தோல்வியை தழுவினேன் எழுத்துயுரு பிரச்சனைகளால்....வெட்டி ஒட்டு முறையுடன் மீண்டும் முயற்ச்சி செய்த போது களத்தில் இணையக் கூடிய தாய் இருந்தது.. முதலில் எழுதிய போது நடு காட்டில் விடப்பட்ட உணர்வுவோடு அறிமுகம் அல்லாத பகுதியில் எழுதிய போது வியாசன் சுட்டி காட்டி என்னை சரியான பகுதியில் எழுத வைத்தார்..தொடர்ந்து சின்னப்பு வெறுப்பு முககுறிகளுடன் எனக்கு அப்பு ஏற்கனவே காது குத்தியாச்சு என்று சொல்லி ஏதோ அந்நியன் போல வரவேற்றார்...தொடர்ந்து எனது பெயர் ஸ்டாலின் பற்றி சர்ச்சை வந்தவுடனையே தொடர்ந்தது....நண்பர் சியாம் அவர்களுடன் ஸ்டாலின் பெயர் பற்றி வாக்குவாதபட்டு அவருடன் பல கருத்துகள் எழுதியதன் மூலம் கணனியில் இலகுவாக தமிழ் எழுத பயிற்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து கள நண்பர்களோடு அந்நியோன்யமாக செல்ல காலமெடுத்தன...குருவிகளும் தமிழினியும் எப்பொழுதும் செல்ல சண்டைகளுடனும் இருப்பார்கள் அதற்க்குள் புகுந்து குருவிகளிடம் கருத்து பரிமாற்றம் வைப்பதன் மூலம் அடிக்கடி குருவிகளுடன் ஆக்கபூர்மாக விவாதிப்போம்...நான் இணந்த காலத்தில். களத்தில்.ஒரு குழு குழுவாக கதைத்து கொண்டிருப்பார்கள்...சின்னப்

Posted

தமிழ்நெற், சங்கம், தமிழ்ச்சமூகம், தமிழ்கனடியன், புதினம் போன்ற செய்தி ஆய்வுகள் வரும் தளங்களை தவிர வேறு தமிழ்த் தளங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 2004 மார்கழி ஆழிப்பேரலையின் பின்னர் பலது பட்ட தளங்களிலும் செய்திகள் கருத்துக்கள் தகவல்கள் என்று தேடிய காலத்தில் தான் யாழிலும் பதிவுகளை வாசிக்கத் தொடங்கினன். பின்னர் 6..7 மாதங்கள் சென்றபின்னர் நானும் சில கருத்துக்களை கூறவேண்டும் என்ற தூண்டுதலில் இணைந்து கொண்டேன். ஏற்கனவே வேறு தேவைகளிற்காக பாமினி எழுத்துருவில் எழுதிப்பழகியிருந்ததால் எழுத்துரு தட்டச்சு என்பன பிரச்சனையாக இருக்கவில்லை.

Posted

நான் 2003ம் வருடம் யாழில் இணைந்தேன்.

இதற்குள் பலவந்தமாக தள்ளி விட்ட பொறுப்பு (கண்ணன்)பிரபாவையே சாரும்.

கொலண்டில் வசிக்கும் பிரபாவுக்கும் எனக்குமான உறவு எனது குறும்படமான எச்சில்போர்வைக்கு பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகத்தின் சிறந்த குறும்படத்துக்கான பரிசு கிடைத்ததிலிருந்து ஆரம்பமானது.

அவை பற்றி ஈழமுரசு பத்திரிகையில் வந்த யமுனா இராஜேந்திரனின் கட்டுரைகளும் வழி வகுத்தன.

இதுபற்றி யாழில் நடை பெற்ற விவாதங்களை பிரபா (கண்ணன்) எனக்கு மின் அஞ்சல் வழி அனுப்பி வைத்ததோடு எனது கருத்துகளை எழுதும்படியும் தூண்டினார்.

எழுத முடியாது என தவிர்த்து வந்த என்னை இடை விடாது துன்புறுத்தி எழுதத் தூண்டினார்.

பிரபா மட்டும் அதை செய்யாமல் இருந்திருந்தால்

இன்று உங்களுக்கு என்னையும்

எனக்கு யாழ் நண்பர்களையும் கிடைக்க வாய்ப்பே இருந்திருக்காது.

கணணியில் தமிழில் எழுதவே பரீட்சயமற்ற நான்

தட்டுத் தடுமாறி எழுதத் தலைப்பட்டேன்.

ஏகப்பட்ட வாத - விவாதங்கள்

தலையிடி கொடுத்து தூங்க விடாமல் வைத்த இரவுகள்.........

ஆரம்ப கால போராட்ட விவாதங்கள்

யாழை வெறுக்க வைத்ததுண்டு..............

விட்டு போனதும் உண்டு.

வெறுத்து போக முயன்ற போது போகதே என்று சொன்னவர்களை

இன்று காணவில்லை

ஆனால்

நான் இன்னும் என் உறவுகளோடு..............

சிரிப்பாய் இருக்கிறது.

எதையும் சகிக்கக் கூடிய மனோ நிலையை

டேக் இட் ஈசியாக வாதாடும் தன்மையை

எனக்குத் தந்தது யாழ் என்பதில் மாற்றுக் கருத்து

எனக்குள் இல்லை.

மோகன் - சுரதா - சோழியன் - இளைஞன் - சந்திரவதனா போன்றோருடனான நட்புகள் யாழுக்கு வெளியே தனிப்பட்ட ரீதியில் வளர்ந்தன.

குறும்படங்கள் - நல்ல சினிமா போன்றவை தவிர அரசியலை தொடாத கருத்துகளுக்குள் என்னை புதைத்துக் கொண்டேன்.

என் மனதுக்கு தவறாக பட்டதை சில தருணங்களில்

சுட்டிக் காட்ட முனைந்ததுண்டு.

இருந்தாலும் அடுத்தவர் மனம் புண்படும் வார்த்தைகள்

என்னையும் நோகடிக்கவே செய்கிறது.

சில சமயம் இவற்றை கண்டு கொள்ளாமல் போவதுண்டு.

இதைத் தவிர வேறு வழி?.....................

என்னதான் இருந்தாலும்

இங்கு அனைவருமே என் உறவுகளே!

யாழில் அனைவரும் என் சொந்தங்களாகவே

இருப்பதாய் எனக்குள் ஒரு பெரு மகிழ்ச்சி.

என்னதான் பிரச்சனை வந்தாலும்

என் வீட்டை விட்டு வெளியேற முடியாது.

எனவே யாழ் உறவுகளை பிரிவதென்பதேது!

Posted

யாழ் வந்து கெட்டு குட்டிச் சுவரானதால் இப்ப வாறதில்லை..! வீட்டில பேச்சு..! கூடாத கூட்டமெல்லாம் கூடி..!

என்ன பயந்திட்டுங்களா..உண்மைதாங்க.. யாழ் வர முதல் தமிழ் மீது தமிழர் மீது ஒரு மரியாதை இருந்திச்சு..இப்ப போச்சு..! அதுக்கு...பொறுப்பு...யாழிலும் சிலர்..! சற்றிங்கிலும் சிலர்..! :P :lol:

Posted

யாழ் எதேச்சையாக வந்து சேந்த ஒரு தரிப்பிடம் தான். இணைய உலாவி மூலம் தமிழ் பற்றி தட்ட வந்து சேந்தது.. ஆரம்ப காலத்தில்.. பார்வையாளராக இருந்தேன்.. அப்போது.. சோழியான் அண்ணாவின் கதைகள் படிக்ககிடைக்கும்.. கதையைத்தேடி வருவேன். அப்போதெல்லாம் பாமினியை அடிக்க தெரியாது. பாடசாலையில்இருந்து பாத்துவிட்டு ஒரு நாள் பதிந்துவிட்டேன். நான் யாழுடன் நெருங்கியது சுவாரசியமான கதை. குளிர் எனக்கு புதிது பாடங்களுக்கான இடைவெளியில்... கூடப்படிப்பவர்கள் கீழ் இறங்கி புகைப்பிடிப்பார்கள் புகையை கண்டால் எனக்கு வருத்தம் வந்துவிடும். அப்படியே குளிரும் எதிரி கணணியை தேடி நூல்நிலையத்தில் அல்லது வகுப்பறைகளில் இருந்து இணையத்தில் வலம்வருவேன்.. அப்போது.. யாழ் பரீட்சையமானது..  

நான் வந்த புதிதில் மதித்தாத்தாவின் நகைச்சுவைகள் (இப்ப சின்னப்பு ரேஞ்சிற்கு) இருக்கும். இப்பத்தையே மாதிரி முகமூடி கதைகள் இருந்தது.. முன்னர் கருத்தெழுதப்பயம்... அப்ப உறுப்பினராக இருந்தவர்கள் உற்சாகம் எழுதவைத்தது. பின்னர் கவிதன் ஹரியண்ணா மழலை சியாம்.. தமிழ்நிலா.. வெண்ணிலா... நித்திலா..தூயா... மதுரன்..குளம் ..வியாசன் அண்ணா. நிதர்சன். வசம்பண்ணா.. குறும்பன் அண்ணா என்று புதிதாக உறுப்பினர்கள் இணைந்தார்கள் மோதல் அற்ற சுமூக கருத்தாட்டம்.. மோதல் வந்தாலும் அதை தீர்த்துக்கொண்டு மற்ற இடத்தில் சகஜமாய் உரையாடுவார்கள்.  

அப்படியே சினிமாவுக்கு பின்னாலோடு அஜீவன் அண்ணாவும்.. எப்பவுமே ஓடியோடி பாரதியாரோடு சண்டை போடும் சோழியான் அண்ணாவும்.. சாத்தியக்கா.. சேது அண்ணா.. (இப்ப காணவேகிடைப்பதில்லை)  இளைஞன்.. பரணிஅண்ணா..  ஈழவன்அண்ணா பிபிசி மதன் .. குருவி.. வசி.. அதிபன் அண்ணா..அன்பகம்..  சண்முகியக்கா சந்திரவதனாக்கா.. அடிக்கடி வந்த நினைவு.. இப்படி. பலரும் களத்தில் ஜெலித்தார்கள்.. இவர்கள் நான் வர இருந்தவர்கள்.. நான் வந்தப்பிறகு மதித்தாத்தா.. தலைமறை.. தேடுதல் போட்டு ஒருக்கா வந்த நினைவு.. (இதைப்படிச்சா திரும்ப வருவார் என்ற நம்பிக்க.. இல்லை மறந்திட்டாரோ யாழை.. )    

யாழின் வளர்ச்சியில் மோகன் அண்ணா இசைகளை இணைக்கக்கூடிய வசதியை செய்து கொடுத்தார். குறும்பண் அண்ணா அழகிய கவிதைகளை பதிவு செய்து இணைப்பார்.. ஒரு சிறந்த அறிவிப்பாளனை காணவில்லை..?? எங்கே போனாரோ.. அப்படியே கவிதன் மதுரன் போன்றவர்களும் அழகிய கவிதைகளையும் தொடர்களையும் இணைப்பார்கள்.. பின்னர்.. நம்ம சின்னா.. முகம்ஸ் சாத்திரி டக்கண்ணா.. அதிரடி நகைச்சுவைக்கதம்பமே களம் இறங்கியது.. துன்பங்கள் துயரங்கள் என்று எல்லாத்தையும் மூட்டைகட்டி வைச்சு சந்தோசமாய் கொஞ்ச நேரம் சிரிக்க முடிந்தது. அடுத்த கட்டம் பல புதிய உறுப்பினர்கள்.. கருத்துக்கள்.. தொடர்கிறது.. அப்படியே தொடரணும்.. வாழ்த்துக்கள்..

என்ன அறிமுகம் என்று உங்க சுயசரிதையே எழுதிக் கலக்கிறியள் போல..! ம்ம்ம்..! :P :wink:

Posted

எனக்கு யாழ்களம் அறிமுகம் ஆனது Google முலம் தான்

நான் சும்மா இருக்கும் நேரங்களில் Google ல் tamiltiger என்று ஏதும் தேடி கொண்டு இருப்பேன் அப்போது தான் யாழ்களமும் அறிமுகம் ஆனது :P :P :P

எனது கூடும்பத்துக்கும் யாழ்ப்பாணதுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கிறது எனது அம்மாவின் அப்பா யாழ் எனது 2 அண்ணாக்கள் திருமனம் செய்ததும் யாழ்ப்பாணம் தான்(காதலித்து) இப்போது எனது கடசிதங்கை திருமனம் செய்ய போவதும் கண்டாவளை(வன்னி)சேர்ந்த ஒருவரைதான் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாழ் வந்து கெட்டு குட்டிச் சுவரானதால் இப்ப வாறதில்லை..! வீட்டில பேச்சு..! கூடாத கூட்டமெல்லாம் கூடி..!

இந்த நக்கல் தானே வேணாங்கிறது.. கெடுற பிள்ளை குட்டிச்சுவராகிற பிள்ளை எங்க இருந்தாலும் ஆகியே தீரும்.. அதற்கு வழிகள் பல இருக்கு (வீட்டில பேச்சு வாங்கியும் வாறியள்ல.. அப்படித்தான்).. வரமுடிவதில்லை என்றதக்காக இப்படி நொண்டிக்காரணங்களை அடிச்சு விடக்கூடாது.. :evil: :evil:

என்ன பயந்திட்டுங்களா..உண்மைதாங்க.. யாழ் வர முதல் தமிழ் மீது தமிழர் மீது ஒரு மரியாதை இருந்திச்சு..இப்ப போச்சு..! அதுக்கு...பொறுப்பு...யாழிலும் சிலர்..! சற்றிங்கிலும் சிலர்..!  

அந்த சிலரும் பலரும் இப்படித்தான் ஏதாவது சொல்வாங்க.. :wink: :P

Posted

யாருங்க...சிலரும் பலரும்...சொல்லமுடியுங்கன்னா..

.மெதுவா சொல்லுங்கக்கா.....ஏன்னா ..நமக்கு ஏதுக்குங்க...வம்பு.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் வந்து கெட்டு குட்டிச் சுவரானதால் இப்ப வாறதில்லை..! வீட்டில பேச்சு..! கூடாத கூட்டமெல்லாம் கூடி..!

என்ன பயந்திட்டுங்களா..உண்மைதாங்க.. யாழ் வர முதல் தமிழ் மீது தமிழர் மீது ஒரு மரியாதை இருந்திச்சு..இப்ப போச்சு..! அதுக்கு...பொறுப்பு...யாழிலும் சிலர்..! சற்றிங்கிலும் சிலர்..! :P  :lol:

வேண்டாம் குருவிகள். இதுக்குள்ளும் விவாதம் ஆரம்பிக்கப் போகின்றது.

நீங்கள் பழையது போன்று கட்டாயம் வரவேண்டும். அது தான் யாழ்களத்தின் ஒற்றுமைக்கு சான்றாக அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ம் அந்த நாளை அசைபோடவைத்ததற்காக இளைஞனுக்கு நன்றிகள் களத்தில் என்னை இணைய வைக்க காரணமாக இருந்தவர் நடா அவர் என்னுடைய நண்பர். இணையங்களை பற்றி பேசும்போது யாழைப்பற்றி எனக்கு சொன்னவர். முதல் தடவை வந்தபோது கவிதன் தமிழ் ஹரி குருவியார் விதுரன் போன்றவர்களின் உரையாடல்கள் என்னை கவர்ந்தன. அதிலும் எல்லோரும் தங்கை தமிழை வம்புக்கிழுப்பதுவும் தமிழ் அவர்களுடன் மோதுவதும் என்னை களத்தில் இணையவைத்தது.

மற்றவர்களுக்கு உதவுவதற்கென்றே களத்தில் ஹரியும் கவிதனும் காத்திருந்து உதவிஎன்ற தலைப்பை கண்டதும் ஓடி உதவி செய்வது என்னை கவர்ந்தது. குருவியார் குளக்காட்டான் போன்றோரின் அறிவாற்றல் மிக்க கட்டுரைகளும் மப்பு மைந்தன் சின்னாவின் நகைச்சுவைகளும் டண்ணின் நகைச்சுவைகளும் மற்றையவர்களின் அன்பும்தான் என்னை களத்தில் இணையவைத்தது.

இந்தநேரத்தில் திருமதி சாந்தியையும் நினைவு கூருகின்றேன். யாரோ ஒருவருக்காக எனக்கு தூண்டில்போட்டு நான் சொன்ன பொய்களை யாருக்கோ சொல்லி அந்த நபரும் சிரித்திரன் என்ற பெயரில் என்னை மிரட்டியதுவும் யாழ் அனுபவத்தில் என்னால் மறக்கமுடியாதவை.

களத்தின் சீண்டல்களால் நடா ஒதுங்கிவிட்டார். அவருக்கு வியாசன் யார் என்று தெரியாது.

நான் இணைந்தபோது இருந்த களத்துக்காக ஏங்குகின்றேன்...............

Posted

இந்த நக்கல் தானே வேணாங்கிறது.. கெடுற பிள்ளை குட்டிச்சுவராகிற பிள்ளை எங்க இருந்தாலும் ஆகியே தீரும்.. அதற்கு வழிகள் பல இருக்கு (வீட்டில பேச்சு வாங்கியும் வாறியள்ல.. அப்படித்தான்).. வரமுடிவதில்லை என்றதக்காக இப்படி நொண்டிக்காரணங்களை அடிச்சு விடக்கூடாது.. :evil: :evil:

அந்த சிலரும் பலரும் இப்படித்தான் ஏதாவது சொல்வாங்க.. :wink: :P

நொண்டிக்காரணமில்ல நிறைய கேடுகளும் நடக்குது...! தமிழர்கள் தங்களுக்குள்ளும்... தமிழ் கொலையும் நடக்குது...நடந்தது..!இங்கு நடந்தது போல வெளியில் அவதானிக்கல்ல...நாங்கள் அதிகம்...! சாதாரண ஆக்களுக்க..!

நீங்கள் ஏன் வீட்டில சொல்லிட்டா யாழ் வாறனீங்கள்..இருக்காதே...??! :wink: :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நீங்கள் ஏன் வீட்டில சொல்லிட்டா யாழ் வாறனீங்கள்..இருக்காதே...??!    

_________________

என்ன இது கேள்வி யாழ் என்ன.. வெளிநாட்டிலா இருக்குது சொல்லீட்டு வர..?? நாங்க இணையம் பாவிக்கிறது பெற்றாருக்கு தெரியாதா என்ன..?? :wink: :P சரி சரி அரட்டை என்று அருவாளை தூக்க முதல் எஸ்கேப்..

மற்றவர்களுக்கு உதவுவதற்கென்றே களத்தில் ஹரியும் கவிதனும் காத்திருந்து உதவிஎன்ற தலைப்பை கண்டதும் ஓடி உதவி செய்வது என்னை கவர்ந்தது.  

அதுக்காகவே இருவருக்கும் ஒரு பட்டம் கொடுக்கிறது என்றிருந்தனான்.. இப்ப நிறுத்திவிட்டார்கள் அதால் அந்த பட்டத்தை நழுவவிட்டுவிட்டார்கள்.. :wink: :P

Posted

வந்து அம்மாட்ட கேட்பம்..உண்மை தெரியும்..! சரி சரி நாங்களும் எஸ்கேப்..! களம் சீரியஸா..சீரா இருக்குது குளப்படிக் கூட்டம் வந்திட்டு என்று சனம்...தலை கீழா நிக்க முதல்...கிரேட் எஸ்கேப்..! :P :idea:

Posted

வேண்டாம் குருவிகள். இதுக்குள்ளும் விவாதம் ஆரம்பிக்கப் போகின்றது.

நீங்கள் பழையது போன்று கட்டாயம் வரவேண்டும். அது தான் யாழ்களத்தின் ஒற்றுமைக்கு சான்றாக அமையும்.

வேண்டாம் என்று யாழ் பற்றிய சில மறுபக்க நிகழ்வுகளை மறைக்கக் கூடாது..! பீட் பக் எனும் போது நல்லது கெட்டது இரண்டும் பார்க்கப்படுவதே...வளர்ச்சிக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வேண்டாம் என்று யாழ் பற்றிய சில மறுபக்க நிகழ்வுகளை மறைக்கக் கூடாது..! பீட் பக்

:arrow: :wink: :P :?: :evil:

Posted

யாழ் களம் தூய தமிழ் களமாக இருந்த ஒரு காலமும் இருந்தது..! அதுவே ஈடுபாட்டோடு வியப்போடு யாழைப் பார்க்க வைத்தது..! இன்று யாழ் யூஸர் எனாபிளா மாற்றப்பட்டது மட்டுமன்றி..யாழுக்கு வெளியில் ஒரு வலயம் அமைக்கப்பட்டு...அதுவும் யாழில் செல்வாக்குச் செலுத்த உபயோகிக்கப்பட்டு வருகிறது..! அந்தச் செல்வாக்கு வலயத்துக்கு ஆமா போடாட்டி..அல்லது..அதனோடு கருத்து ஒத்தூதல் இல்லாட்டி..அதன் தாக்கம் யாழில் எழுத முதல் வரும்..! இவை நிதர்சன உண்மைகள்..! இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்..! எம்மால் அந்த வலயத்தைப் பற்றி தெளிவாக சொல்ல முடியும்..!

யாழின் தமிழ் ஆர்வப் போக்கும் மதித்தாத்தாவின் அரசியல் சாணக்கியப் பேச்சுமே எங்களை இங்கு நண்பர்கள் மூலம் அழைத்து வந்தது..! வந்த பின்னர் நல்ல தமிழ் படைப்பாளிகளை காணக் கிடைத்தது..அந்த வகையில் சோழியான் அண்ணா மணிதாசன் அங்கிள்..இருவரையும் என்றும் மறக்க முடியாது..! காரணம்..தமிழ் படைப்பாளிகள் என்ற வகையில் முதன்முதலில் நமக்கு அறிமுகமானவர்கள் அவர்கள்..!

அப்புறம் மோகன் அண்ணா யாழ் அண்ணா.. நல்ல வகையில் ஆரம்ப களத்தை நிர்வகித்தவர்கள்..! அப்புறம் களம்..பல மாறுதல்களைக் கண்ட போதும் தமிழுக்கு பங்களிப்புக்களை வழங்கிய போதும்.. ஒரு கருத்தின் அடிப்படையில் ஆளைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தனவே தவிர கருத்தின் ஆழம் தேவை அது கலந்துரையாடப்படும் வடிவம் ஆரோக்கியமாக பல சந்தர்ப்பங்களில் அமையவில்லை..! களத்துக்குப் புறம்பான அறிமுகங்களின் தாக்கங்கள் நேரடியாக வெளிப்படுத்தப்பட்டன...! தனிநபர்கள் துதிபாடல்களுக்கு யாழும் இலக்கானது வருத்தத்துக்குரிய ஒன்று..! இது தமிழ் சமூகத்தின் பாரம்பரிய சாபக் கேடுகளில் ஒன்று...!

மொழிக்கு துறைசார் திறமைகளுக்கு அப்பால் தங்களுக்கு வேண்டியவர்கள்..தங்களுக்கு சார்பானது என்று யாழ் களம் பாவிக்கப்படுவதும் இன்று சர்வ சாதாரணமாகி இருக்கிறது..!

இவற்றுக்கு மத்தியில் யாழை தமிழ் தமிழ் சமூக ஆர்வ களமாக இனங்கான நமக்கு சங்கடமாகவே இருக்கிறது..! :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னாடாப்பு வலயம் ,யூசர் எனாபிள் எண்டு சொல்லுராய்,ஒரு மண்ணும் விளங்கேல்ல.

கொஞ்சம் தெளிவாச் சொன்னாத்தான் எல்லாருக்கும் விளங்கும்.இல்லாட்டி உது உந்த பூசாரியள் கோயிலில மந்திரம் ஓதிற மாதிரி எதோ பெரிய விசயமாத்தான் இருக்கும் எண்டு சனம் நினக்கும்.அட அதுக்குத்தான் இது எண்டாச் சரி.

யாரப்பு வலயம் போடுறான்?ஏனப்பு வலயம் போடுறான்?

இங்க என்ன சிறிலங்கா இராணுவமே இருக்கு, வலயம் போட?

Posted

குருவிங்க...உந்த காம்பளைக்ஸ் தானே வேண்டாம்ங்கிறது....என்னங்க சார்......வெளிவட்டம் .உள்வட்டம் ...என்று... ஏதோ சொல்றீங்க ...ஒன்னுமே புரியலைங்க...குருவிங்க ஊங்களுக்கு பக்கா டலண்டு இருக்குங்க...ஒண்ணுக்கும் யோசிக்காம புகுந்து விளையாடுங்க சார்...யாழ் களத்திலை :)

Posted

.........

இவற்றுக்கு மத்தியில் யாழை தமிழ் தமிழ் சமூக ஆர்வ களமாக இனங்கான நமக்கு சங்கடமாகவே இருக்கிறது..!

8) :idea: ஆனால்...

சேவைகள் செய்ய சுயவிலாசங்கள் தேவையில்லை... ஆனால்... யதார்தம் அது அல்ல........

இங்கு எழுதியவர்கள் எத்தனைபேர் இப்போ தனித்தனியே... இணயங்கள் வைத்துள்ளார்கள்.... எப்படியோ... ஏதோ எழுதுகிறார்கள்.... காரணம் என்ன.....

யாவருக்கும் எல்லாம் விளங்கும்..........

இங்கு விளங்காதவர்கள்..... போகப்போக இங்கு அனுபவம் பெற்று (இணய அனுபவம்) போய்கொண்டருப்பர்.... யாழையாவரும் நன்கு தங்கள் தேவைகளுக்கு பாவித்துக்கொள்கிறார்கள்.... (பலதரப்பட்டோரும்:))அது யாழுக்கு நன்கு விளங்கும் அல்லது விளங்கி........ (மேலும் வளர :) :wink: ) சீர்திருத்தம் நடக்கிறது.........

நான் ஒன்று சொல்வோன் யாழ் தனியுடமையுள்ள இயணயம் அல்ல... இப்போ...... அதையாவரும் இப்போ அறிவோம்... எல்லாத்தையும் இங்கு நாம் இங்கு எழுதஇயலா... யாவரும் அறிவோம்..... யாழ் எமது பலவகை மனசாட்சியின்... பல்கலைக்கழகம்... இது பல்லாண்டு நிலைதடுமாறாது வாழும். :idea: :|

(நமக்கு நல்ல எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்கள்தான் யாவருக்கும் முக்கியம் நான் நான்தான் என எண்ணிகொண்டு கருத்து நாம் எழுத இயாலாது... அப்படி எழுதினால் இங்கு இனம்காணலாம் அதுகூட கருத்துக்களத்தால் வசதி... யாவருக்கும்.......உண்மை எப்வுமே யாவருக்கும்....எல்லாவகையினருக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எதோ சொல்லுறாய் மோனை,

எனக்கெண்டா சிதம்பர சக்கரத்தைப் பேய் பாத்த மாதிரிக்கிடக்கு.

உது அன்பகம் பேசுற மாதிரிக் கிடக்கு எண்டுறது மட்டும் விளங்குது .

யாழ் எண்டுறது, யாழ் தேவி மாதிரி அவர் அவர் வந்து குந்துவினம், கதைப்பினம்,புலம்புவினம்,சண்ட

Posted

வணக்கம். இணைய இணைப்பது எடுத்ததும் சில நாட்கள் செய்திப் பக்கங்களுடன் பொழுதுபோய்.. அடுத்த கட்டமாக 'சற் ரூம்" அறிமுகமானது. அங்கே ஒரு சகோதரி அறிமுகமானார். அவரது அறிமுகம் மெசன்சருக்கு வளர, அவரது வாழ்த்து அட்டைகள் சில யாழ் முற்றத்தில் உள்ளன என்று காண்பிக்க, யாழ் அறிமுகமானது. 2002 என நினைக்கிறேன். கருத்துக்களத்துள் புகுந்தபோது, சந்திரவதனா, நளாயினி, சாந்தி போன்ற எழுத்துக்களால் அறிமுகமானவர்களின் கருத்துகளைக் கண்டு, நானும் அங்கத்துவனானேன். அதன் பிறகு நாளொருவண்ணம் யாழ் அங்கத்தினர்களில் பல இளைஞர்கள் எனது மெசன்சருக்கு வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் கணனிப்பித்தன்.

அவரிடம் யாகூவில் ஒரு கோம்பேஜ் 'வணக்கம்' என தமிழில் எழுதி ஆரம்பித்து தந்தார். பின்னர் எப்படி புரொன்ட் பேஜ் மனேசரில் எழுதுவது.. எப்படி லோட் பண்ணுறது.. இப்படி தினமும் அவரது சலிப்படையா விளக்கங்களை குறித்துக்கொண்டே எனது 'கோம்பேஜ்' அறிவு ஓரளவு சுயமாக இயங்கும் நிலையை அடைந்தது.பின்பு அவரே தானியங்கி எழுத்துருவையும் உருவாக்கித் தந்தார்.. அவரின் துணையுடனும் சுரதாவின் இணையத் தள உதவியுடனும் தானியங்கி எழுத்தில் பக்கங்கள் உருவாகின.

இந்த நிலையில், இளைஞன் எனது மெசன்சருள் புகுந்துகொண்டார். பின் அவர் என்னை யாகூல பிறைவேற் சற் ரூம் அமைத்து குழுவாக பேசுவது போன்ற முறையை அறிமுகப்படுத்தி.. நான் வேலையால் வந்து கணனியில் அமர்ந்தவுடன்.. என்னை இழுத்து அங்கே விட்டுவிடுவார்.. இப்படியான அறிமுகங்களால் யாழில் 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?" எனும் தொடர் கதையை எழுத முடிந்தது. அதற்கு இந்த அனுபவங்களும், மெசன்சரிலே ஒரு அத்தியாயம் முடிந்த பிறகு சில யாழ் உறவுகள் கூறும் சில தகவல்களும் புதினங்களும் உதவி செய்தன.

ஆக, யாழில் என் இயக்கத்துக்கு திரு மோகன் அவர்கள் சுதந்திரம் அளித்ததால்.. எனது ஆர்வமும் அறிவும் புதுப்புதுத் தேடல்களை நோக்கி விரிந்தது. அதேநேரம் யாழ் மூலம் அறிமுகமான இளைஞனின் உதவியுடன் எனது ஆர்வம் 'தமிழமுதம்' இணையத்தளமாகவும் இன்னொரு படியை எட்டியுள்ளது.

அதிலே உள்ள பல புகலிடப் பாடல்களை யாழ் கள உறவுகள் மெசன்சர் ஊடாகவே அனுப்புவார்கள். அனுப்புகிறார்கள். ஆக, யாழ் இணையத் தளமானது எனக்குப் பல வகையிலும் உபயோகப்பட்டுள்ளது. உபயோகப்படுகிறது. கோம்பேஜ், குடில்கள், இணையத்தளம் என பலவற்றுக்கு யாழ்களம்தான் எனக்கு உதவும் உள்ளங்களை அளித்திருக்கிறது.

அதேபோல குருவிகள்.. அவருடனும் மெசன்சரில் இடைக்கிடை கதைப்பேன். இடைக்கிடை கதைத்தாலும் கதைக்கும்போது அவரது விளக்கங்கள கேட்கும்போது மணிகள் அழிவது தெரியவே தெரியாது. அவளவு சுவையாக அதேநேரம் விடயத்தோடு கதைப்பார். ஆனால் அவர் தற்போது 'எஸ்கேப்'பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

யாழ் கள உறவுகள் யாபேரும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்!

Posted

இணைய அரட்டையில் மூழ்கி இருந்த வேளையில் கவிதன் மாமா எனக்கு அறிமுகமானார். அவர் மூலமாகவே யாழுக்குள் நுழைந்தேன். வந்தபோது மதிவதனன் தாத்தா (இப்போ வருவதே இல்லை அவர் :cry: ) தமிழினி அக்கா, குருவி அண்ணா (நிலாவுக்கு சுட்டி என பெயர் சூட்டிய மலர் மீது காதல் கொண்ட ஓரு அன்பான அண்ணா) வசிசுதா அண்ணா, மதன் அண்ணா, இளங்கோ அண்ணா (முந்தி மட்டுறுத்தினராக இருந்தவர் சுட்டிக்கு கணக்கெல்லாம் சொல்லி தந்தவர் அவரும் இப்போ இல்லை :cry: ) கிருபன் அண்ணாவின் மூளைக்கு வேலை கணக்குகள் சில நேரத்தில் மூளையை கசக்குமளவுக்கு வைத்துவிடும். (இப்போ அவரும் இல்லை :cry: )அந்த நேரம் நல்ல பயனுள்ளதாக யாழ்களம் இருந்த காலம். மறக்க முடியாத காலப்பகுதி அவை.

சுட்டி நிலாவின் சுட்டித்தனங்களை ரசித்தவர்கள் பலரில் இன்று பலர் இல்லை. பரணி அண்ணாவும் இப்போ வருவதில்லை. :cry: :cry: :cry:

அதன் பின்னர் ஹரி மன்னர் மழலை நண்பி ( அவாவும் இப்ப வருவதில்லை :cry: ) இவர்கள் வந்த நேரம் சுவாரசியமாக யாழ்களம் சென்றது.

அதன் பின் கொஞ்சம் டல் ஆக போன நேரம் மீண்டும் ஒரு கும்பலே ஒரே நேரத்தில் இணைந்தார்கள் விஸ்ணு பிரியசகி ரசிகை அனித்தா கீதா ரமா முகத்தார் தாத்தா சின்னப்பு சின்னாச்சி டன் தூயவன் அருவி ....................... இன்னும் பலர். இவர்கள் மூலம் மீண்டும் சுவாரசியமான விடயங்கள் பகிரப்பட்டு நகைச்சுவயான கருத்தாடல்களுடன் மீண்டும் யாழ்களம் புதுப்பொலிவு பெற்றிருக்கு. இன்றும் போல் என்றும் யாழ்களம் பொலிவுடன் இருக்கணும் அதுவே என் விருப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.