Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

Featured Replies

தமிழ் நாதம் மூலம் எனக்கு யாழ் இணையம் அறிமுகமானது 3 வருடங்களாக வாசகராய் உள்ளேன் ஆனால் இப்போது தான் இணைந்து உள்ளேன்

3 வருசத்துக்கு முன்னம் வந்த பேரையும் சொல்லலாமே...

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • Replies 117
  • Views 20.3k
  • Created
  • Last Reply

வாசகராய் உள்ளேன் உள்ளேன் எண்டுதானே சொன்னனான் :x :x

நான் கோபிக்கவில்லை :D:D:lol::lol: ஜமுனா என்ன கங்காரு குரங்காய் மாதிரது போல தெரியுது சின்னப்புவுக்கு சப்போட்டோ

நான் கோபிக்கவில்லை  :(  :(  :)  :( ஜமுனா என்ன கங்காரு குரங்காய் மாதிரது போல தெரியுது சின்னப்புவுக்கு சப்போட்டோ

:P :P :P :P :P :P :P

வணக்கம் எல்லோருக்கும்....

இணையத் தளங்கள தேடி தேடி நாளந்தம் பயணிப்பது வழக்கம்

அப்படி தொடந்து பல இணையத் தளங்கில் ஆக்கம் எழுதி வந்தேன்

அவ்வாறான காலப் பகுதியில் ஒரு நாள் ஒரு ஈ-மெயில் வந்திருந்தது

ஒரு கனடா சோதரியிடமிருந்து அதில் குறிப்பிடப்பட்ட இணையங்களில் யாழ்

களமும் ஒன்றாக இருந்தது அப்போது உள்ளே வந்து பார்த்தேன் எப்படி பதிவு

செய்வதென தெரியாது இருந்தேன்.

பின்னாடி ஒரு மாhதிரி பதிவு செய்து தலைப்பை மட்டும் பார்த்து விட்டு

போயிடுவேன்..பின்;னாளில் ஒரு நாள் கருத்துகளம் பகுதிக்குள் நுழைந்த போதுதான்

நிறய விடயங்கள் உள்ளதை அறிந்து கொண்டேன்.

பல கட்டுரைகள். கவிதைகள் .கதைகள் என எனக்கு தெரிந்த சிலர் தொடராய்

எழுதி கொண்டு இருந்தார்கள் .

என்னையும் அவர்கள் அறிந்திருந்தார்கள் நானும் அவர்களை அறிந்திருந்தேன்

அதன் பின்னாடி எனது கருத்துக்களையும் வைத்தேன் .

அதற்கு பரிபுரணமான ஒத்துழைப்பை தந்தார் மோகன் அண்ணா அவர்கள்

ஆயுத கப்பல் என்ற கவிதையை தடைசெய்து முடக்கி வைத்தபோது மனம் உடைந்தது

பின்னர் எனது கேள்விகனைகளிற்கு தனி மடலில் சில அறிவுரைகளும்

எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சில விபரங்கள் தரப்பட்டன

அதன் பின் எனது படைப்புக்களையும் வைக்க முடிந்தது.

ஆனால் இவ் தளமானது உண்மையில் தமிழ் தேசயித்திற்காக மாபெரும்

பணியை செய்து வருகிறது .

பல நேயர்களை தன்னகத்தே நாளுக்கு நாள் கூட்டியவாறு செல்கிறது .

இப்போது வருந்துகிறேன் இதை முன்னரே அறியாமலே விட்டேன் என்று.

ஏன் எனில் அவளவு சிறப்பு அம்சமும் அதே வேளை பல சிறந்த படைப்பாளிகளையும்

தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு முதன்மை வாய்ந்த இணையமாக இது விளங்ககிறது .

எனவே மேலும் மேலும் யாழ் வளர என்னால் ஆன பணிகளையும்

தமிழ் தேசியத்த்தின் கொள்கையுடன் இணைந்து செய்வேன் என

கூறிக் கொண்டு விடை பெறுகிறேன்

நன்றி

அன்புடன்

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது வருந்துகிறேன் இதை முன்னரே அறியாமலே விட்டேன் என்று.

ஏன் எனில் அவளவு சிறப்பு அம்சமும் அதே வேளை பல சிறந்த படைப்பாளிகளையும்

தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு முதன்மை வாய்ந்த இணையமாக இது விளங்ககிறது .

உங்கள் படைப்புக்களையும் அள்ளித்தாங்க வன்னி மைந்தனே

நான் கோபிக்கவில்லை :lol::D:lol::lol: ஜமுனா என்ன கங்காரு குரங்காய் மாதிரது போல தெரியுது சின்னப்புவுக்கு சப்போட்டோ

கங்காரு எப்பவும் கங்காரு தான் சும்மா சும்மா டென்சன் ஆகாதையுங்கோ

:P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தில் உலா வந்த போது தற்செயலாகவே யாழ் களத்தின் அறிமுகம் கிட்டியது, பார்வையாளனாக, வாசகனாக நீண்ட காலமாக யாழ் இணையத்தைக் கண்ணுற்றேன்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெப்-ஈழம் ஊடாக

  • 1 year later...

இண்டைக்குத்தான் இப்பிடி ஒரு தலைப்பு இருக்கிறத கண்டன். எல்லாரும் உங்கட அனுபவங்கள் பிளந்துகட்டி இருக்கிறீங்கள்.

எனக்கு சரியா எத்தனையாம் ஆண்டு முதன்முதலா யாழ் இணையத்தை பார்க்கத் துவங்கினனான் எண்டு நினைவு இல்ல. ஆனா பெரும்பாலும் 2000 இல்லாட்டி 2001 சொச்சம் இருந்து பார்க்கிறன் எண்டு நினைக்கிறன். சரியா தெரியேல.

எண்ட அண்ணாதான் யாழ் டொட் கொம் எண்டு ஒரு வெப் சைட் இருக்கிது. அதுக்கு போனா நீயூஸுகள் பார்க்கலாம் எண்டு சொன்னார். பின்ன நானும் யாழ் டொட் கொம் எண்டு அடிச்சு வந்து நியூஸுகள வாசிச்சு வந்தன்.

2006 காலம் அளவிலதான் நான் கொஞ்சம் கூட நேரம் யாழுக்கு வாறது. அப்ப அந்த நேரத்தில குறுக்காலபோவான், நெடுக்காலபோவான் எண்டு ரெண்டு பேர் மாறி, மாறி எழுதிறதுகள வாசிக்க சரியான சிரிப்பா இருக்கும். ரெண்டுபேரும் ஊர்ப்புதினம் பகுதியில பந்தி, பந்தியா எழுதுவீனம்.

எனக்கும் கருத்தாடல் தளம் இருக்கிறது ஆரம்பத்தில தெரியாயாது. முகப்பு மட்டும்தான் பார்க்கிறது. யாழ் டொட் கொம் எண்டதும் நான் இது யாழ்ப்பாணத்தில இருந்து இயங்குகின்ற வெப் சைட்டாக்கும் எண்டு நினைச்சன்.

போனவருசம் வாசிக்கிற காலத்தில குறுக்கு, நெடுக்கு தவிர கு.சா அண்ணா, மோகன், சாணக்கியன், ஜெயதேவன் இந்தப்பெயருகளும் பெண்களில அனிதா, ரசிகை, தூயா இந்தப்பெயருகளும் நினைவில இருக்கிது. நான் முக்கியமா கு.சா அண்ணா எழுதுறதிகள விரும்பி வாசிப்பன். சிரிப்பா இருக்கும்.

இப்ப நான் எழுதுறதுகள யார் யார் வாசிச்சு சிரிக்கிறீனமோ கடவுளுக்குத்தான் தெரியும்.

நியூசுகள் வாசிக்கேக்க நான் விரும்பி வாசிக்கிற ஆக்கள் எழுதியுள்ள பதில் கருத்துக்கள மட்டும் தான் வாசிப்பது. ஒவ்வொருவரினுடைய தனிப்பட்ட புரபைலுகளுக்கு போய் அவர்கள் எழுதிய எல்லாவற்றையும் வாசிக்கலாம் எண்ட விசயம் அப்ப எனக்கு தெரியாது.

அந்தநேரம் ஆக்களிண்ட பெயருகள பார்க்கவும் சிரிப்பா இருக்கும். ஜெயதேவன் எண்டு ஒருவர் கொஞ்சம் பகிடியா எழுதி வந்தார். இப்ப ஆளக் காண இல்லை. இப்ப வருவதில்ல போல இருக்கு. என்ன பிரச்சனையோ யார் அறிவார்.

இங்கு இருக்கிற உறுப்பினர்களிண்ட பெயர் எல்லாம் கொஞ்சம் பகிடியா இருந்தபடியால்தான் நானும் சேரேக்க எண்ட பெயர மாப்பிளை எண்டு போட்டன். பிறகு மாத்திப்போட்டன்.

நான் இந்தவருசம் துவக்கம்தான் யாழுக்கு பிரதானமா வாறது. அதுக்கு முன்னுக்கு நிதர்சனம், தமிழ்நெட், புதினத்திலதான் எல்லாம் பார்ப்பது. நிதர்சனத்துக்கு அடிக்கடி போய் வாசிப்பன். இப்ப நிதர்சனப் பக்கமே போவதில்லை. இதமாதிரி யாழில நான் எழுதத் துவங்கினாப் பிறகு சிறீ லங்கா நியூசுகள காவி வருகிற மற்றைய ஆங்கிலத் தளங்களுக்கு போறத முழுவதுமா நிப்பாட்டிப் போட்டன். இஞ்ச ஊர்ப்புதினம் பகுதியில எல்லா நியூசுகளையும் ஒட்டுவதால நான் எங்கட நியூசுகள அறிய யாழ் தவிர வேறு ஒரு இடமும் போவதில்லை. புதினம், பதிவுக்கு கூட நான் இப்போது போவது குறைவு.

எங்கள் கனடா நாட்டு நியூஸ், உலகச் செய்திகள நான் கூகிள் நியூசுக்குபோய் வாசிப்பது.

நான் யாழில இணையுறதுக்கு கு.சா அண்ணா முக்கிய காரணம் எண்டு சொல்லலாம். அவர் சும்மா பகிடியா எழுதுறதுகள வாசிச்சுப் போட்டுத்தான் நானும் இப்படி எழுதலாம் எண்டு சும்மா பகிடியா யாழுக்க வந்தன். ஹிஹி..

நான் எழுதுறதுகள பார்த்துப்போட்டு எனக்கு பின்னால தாமும் வந்ததாகவும் சிலர் சொல்லிச்சீனம்.

எல்லாரும் வாங்கோ. இதுக்கையே படுத்து எழும்பி ஒண்டடியா எல்லாரும் நாசமாப் போவம்.

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி நான் இங்கு இணைவதற்கு சில நாட்கள் முன்னர் திறக்கப்பட்டது. அப்போது புதியவராக இருந்ததால் இதில் கருத்துப்பதிவது என்பது பெரிய அச்சமானதாக இருந்தது. இப்போது மீள ஏதோ ஒன்றைத் தேட இந்தத் தலைப்பு வந்து அகப்பட்டுள்ளது சரி.... இப்போதுதானே நிறையப் புதியவர்கள் இணைந்துள்ளார்கள் அவர்களும் தொடரட்டும்....

 

ஆரம்பத்தில் யாழ் இணையம் அறிமுகமானது தமிழ்நாதத்தின் ஊடாக... பின்னர் தாயகத்தில் நின்ற நாட்களில் யாழ் இணையம் பற்றி மேலதிகமாக அறிய முடிந்தது. அதன் பின்னர் இதனைக் கருத்துக்களமாக தெரியாத நிலையில் சில கவிதைகளை நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தபோது முகப்பில் இணைத்துக்கொண்டார்கள் அதிலிருந்தே யாழினூடன என்னுடைய பயணம் ஆரம்பித்தது. மெல்ல படிப்படியாக உள் நுழைந்து கருத்துக்களத்தைப்பார்வையிடும்போது அட நம்மாளும் கருத்துக்கள் வைக்கலாம்தானே என்ற எண்ணங்கள் தோன்ற உறுப்பினர் பட்டியலில் நுழைய வெவ்வேறு பெயர்களில் நான் நினைக்கிறேன் 3 பெயர்களில் வெவ்வேறு ஈமெயில் முகவரியில் உள் நுழைந்தேன்...காரணம் மறதி அதிகம் புதிய ஈமெயில் முகவரி புதிய பெயர்கள் நுழைவுச் சொற்கள் என்று ஏதாவது ஒன்று மறந்து விட மூன்று பெயரும் உள் நுழைய முடியாதபடி அமைந்துவிட்டது... பின்னர் சரி இங்கு வழமையாகப்பாவிக்கும் பெயரிலேயே பயணிப்போம் என்று முடிவெடுத்து இன்று வரை தொடர்ந்திருக்கிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை பற்றி தமிழில் தட்டிட கிடைத்த வரப்பிரசாதம் நண்பர்கள் வாய்வழியே கிடைத்து யாழின் அறிமுகம்

இணையத்திலும் தமிழ் இனி மெல்ல சிரிக்கும்

 

 

யாழில் இணைய காரணமானவர் இவர் தான். தேனியில் எழுதிய சாணக்கியன் என நினைத்து இவருடன் முக்கியமாக கதைக்க வேண்டும் என இணைந்தேன்.இருவரும் ஒருவரல்ல என தெரிந்து கொண்டேன்.

நானும் யாழ் இணையம் ஐரோப்பா வந்தகாலத்தில் இருந்து பார்த்து வருபவன் ஒரு முன்று வருடம் முன் அஞ்சரன் என்னும் பெயரில் உள் வந்தேன் ஆனால் எங்கு எப்படி எழுதுவது என்று தெரியாது ஒவ்வருநாளும் நாளந்த அறிக்கை என் மெயிலுக்கு வரும் பின்னர் பேஸ்புக் வழிய இணைத்த நண்பர் இதன் ஊடாக நீங்கள் இணைவது சுகம் என கூறி விளக்கம் தந்தார் எங்கு முதல் எழுதவேணும் என்றும் சொன்னார் அதன்படி இப்பொழுது இணைத்து உள்ளேன் உண்மையை சொன்னா என்ன மெயில் ஐடியில் இணைத்து உள்ளேன் என்றுகூட எனக்கு தெரியாது :D:icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் காலத்துக்கு வந்தது ஒரு சுவையான நிகழ்வு. நான் பொதுவேலைகள் செய்வதால் ஒவ்வொருநாளும் குறைந்தது இருபது முப்பது மெயில்கள் என்று வந்துகொண்டிருக்கும். அதைவிட விளம்பரங்கள் என்று அவற்றைப் பார்த்துவிட்டு அழிக்கவே நேரம் போய்விடும். 2012 தை  மாதத்திலிருந்து யாழ் இணையத்தின் மெயில் வரத்தொடங்கியது. சாதாரணமாகவே நான் இணையத் தளங்கள் செல்வது குறைவு. அதனால் தொடர்ந்து ஆறு மாதங்கள் மெயிலைத் திறந்தே பார்க்காது அழித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் சரி திறந்துதான் பார்ப்போம் என்று திறந்து முதலில் சென்றது கதைப் பகுதிக்குள் தான்.

 

அப்போது கவிதையின் விற்றுத் தீர்த்த காதல்க் கதை போய்க்கொண்டிருந்தது. வாசிக்க தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தந்தது. சிறிது நாளில் அவர் எழுதுவதை நிறுத்தினாரா அல்லது என்ன நடந்ததோ தெரியவில்லை. கதையைக் காணவில்லை. தேடிக் களைத்து என்ன செய்வது என்று கிளறிப் பார்த்ததில் கருத்துக்களம் கண்ணில் பட சரி நானும் எழில் இணைவோம் என முடிவெடுத்து, சில்லேடுப்புக்களின் பின்னர் இணைந்துகொண்டேன். அதுகும் அரிச்சுவடியில் எழுதத் தெரியாது யாரோ ஒருவரின் அரிச்சுவடியில் நானும் என்னை அறிமுகப் படுத்தியது இன்று நினைத்தாலும் சிரிப்பாக இருக்கு. அதன் பின்னரும் என்னால் எல்லாவற்றுள்ளும் நுழைய முடியவில்லை. எதுவுமே தெரியாதவளாகவே தத்தி நடைபயின்று தேறினேன்.

 

அதன் பின்னரும் வேறு ஒருவர் எழுதிய கதை வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. இதுவரை அது யார் என்று நினிவு வருதே இல்லை. வாத்தியாரின் பெண்களை சைட் அடித்து இருட்டடி வேறு யாரோ வாங்குவதாக. அதை வாசித்துச் சிரித்த நான், நானும் ஏதும்  எழுதிப் பார்த்தால் என்ன என்று எழுதத் தொடங்கியதுதான் ....

வணக்கம். இணைய இணைப்பது எடுத்ததும் சில நாட்கள் செய்திப் பக்கங்களுடன் பொழுதுபோய்.. அடுத்த கட்டமாக 'சற் ரூம்" அறிமுகமானது. அங்கே ஒரு சகோதரி அறிமுகமானார். அவரது அறிமுகம் மெசன்சருக்கு வளர, அவரது வாழ்த்து அட்டைகள் சில யாழ் முற்றத்தில் உள்ளன என்று காண்பிக்க, யாழ் அறிமுகமானது. 2002 என நினைக்கிறேன். கருத்துக்களத்துள் புகுந்தபோது, சந்திரவதனா, நளாயினி, சாந்தி போன்ற எழுத்துக்களால் அறிமுகமானவர்களின் கருத்துகளைக் கண்டு, நானும் அங்கத்துவனானேன். அதன் பிறகு நாளொருவண்ணம் யாழ் அங்கத்தினர்களில் பல இளைஞர்கள் எனது மெசன்சருக்கு வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் கணனிப்பித்தன்.

அவரிடம் யாகூவில் ஒரு கோம்பேஜ் 'வணக்கம்' என தமிழில் எழுதி ஆரம்பித்து தந்தார். பின்னர் எப்படி புரொன்ட் பேஜ் மனேசரில் எழுதுவது.. எப்படி லோட் பண்ணுறது.. இப்படி தினமும் அவரது சலிப்படையா விளக்கங்களை குறித்துக்கொண்டே எனது 'கோம்பேஜ்' அறிவு ஓரளவு சுயமாக இயங்கும் நிலையை அடைந்தது.பின்பு அவரே தானியங்கி எழுத்துருவையும் உருவாக்கித் தந்தார்.. அவரின் துணையுடனும் சுரதாவின் இணையத் தள உதவியுடனும் தானியங்கி எழுத்தில் பக்கங்கள் உருவாகின.

இந்த நிலையில், இளைஞன் எனது மெசன்சருள் புகுந்துகொண்டார். பின் அவர் என்னை யாகூல பிறைவேற் சற் ரூம் அமைத்து குழுவாக பேசுவது போன்ற முறையை அறிமுகப்படுத்தி.. நான் வேலையால் வந்து கணனியில் அமர்ந்தவுடன்.. என்னை இழுத்து அங்கே விட்டுவிடுவார்.. இப்படியான அறிமுகங்களால் யாழில் 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?" எனும் தொடர் கதையை எழுத முடிந்தது. அதற்கு இந்த அனுபவங்களும், மெசன்சரிலே ஒரு அத்தியாயம் முடிந்த பிறகு சில யாழ் உறவுகள் கூறும் சில தகவல்களும் புதினங்களும் உதவி செய்தன.

ஆக, யாழில் என் இயக்கத்துக்கு திரு மோகன் அவர்கள் சுதந்திரம் அளித்ததால்.. எனது ஆர்வமும் அறிவும் புதுப்புதுத் தேடல்களை நோக்கி விரிந்தது. அதேநேரம் யாழ் மூலம் அறிமுகமான இளைஞனின் உதவியுடன் எனது ஆர்வம் 'தமிழமுதம்' இணையத்தளமாகவும் இன்னொரு படியை எட்டியுள்ளது.

அதிலே உள்ள பல புகலிடப் பாடல்களை யாழ் கள உறவுகள் மெசன்சர் ஊடாகவே அனுப்புவார்கள். அனுப்புகிறார்கள். ஆக, யாழ் இணையத் தளமானது எனக்குப் பல வகையிலும் உபயோகப்பட்டுள்ளது. உபயோகப்படுகிறது. கோம்பேஜ், குடில்கள், இணையத்தளம் என பலவற்றுக்கு யாழ்களம்தான் எனக்கு உதவும் உள்ளங்களை அளித்திருக்கிறது.

அதேபோல குருவிகள்.. அவருடனும் மெசன்சரில் இடைக்கிடை கதைப்பேன். இடைக்கிடை கதைத்தாலும் கதைக்கும்போது அவரது விளக்கங்கள கேட்கும்போது மணிகள் அழிவது தெரியவே தெரியாது. அவளவு சுவையாக அதேநேரம் விடயத்தோடு கதைப்பார். ஆனால் அவர் தற்போது 'எஸ்கேப்'பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

யாழ் கள உறவுகள் யாபேரும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்!

 

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே நண்பரே!!  :o

எனக்கு இந்த இணையத்தளம் என் அத்தானின் மூலம் அறிமுகமானது. நல்ல செய்திகளை வாசிக்கக்கூடியதாகவும் நல்ல கருத்துகள் அலசி ஆராயப்படுவதாகவும் கூறினார். நன்றி அத்தான். அன்புடன் லைக் ராசம்மா

 

மெல்ல படிப்படியாக உள் நுழைந்து கருத்துக்களத்தைப்பார்வையிடும்போது அட நம்மாளும் கருத்துக்கள் வைக்கலாம்தானே என்ற எண்ணங்கள் தோன்ற உறுப்பினர் பட்டியலில் நுழைய வெவ்வேறு பெயர்களில் நான் நினைக்கிறேன் 3 பெயர்களில் வெவ்வேறு ஈமெயில் முகவரியில் உள் நுழைந்தேன்...காரணம் மறதி அதிகம் புதிய ஈமெயில் முகவரி புதிய பெயர்கள் நுழைவுச் சொற்கள் என்று ஏதாவது ஒன்று மறந்து விட மூன்று பெயரும் உள் நுழைய முடியாதபடி அமைந்துவிட்டது... பின்னர் சரி இங்கு வழமையாகப்பாவிக்கும் பெயரிலேயே பயணிப்போம் என்று முடிவெடுத்து இன்று வரை தொடர்ந்திருக்கிறேன்.

நானும்தான் ......................எனது அதே அனுபவம் ........... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.