Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SL-rupees.jpg

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வரும் மே மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் வழங்குவதில்லை என சிறிலங்கா மத்திய வங்கி முடிவு செய்துள்ளதால், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை முதலீட்டாளர்கள் டொலரை வாங்குவதற்கு முண்டியடித்தனர்.

இதனால், நேற்று மாலை, 131.35 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று காலை 132.20 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதிவாகியுள்ள சிறிலங்கா நாணயத்தின் ஆகக் குறைந்த மதிப்பு இதுவேயாகும்.

ஏற்கனவே, கடந்த மார்ச் 19ம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான சிறிலங்கா நாணய மதிப்பு 131.60 ரூபாவாக வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன்பின்னர், சற்று நாணய மதிப்பு வீழ்ச்சி தடுக்கப்பட்ட போதும், கடந்த இருவாரங்களாக மீண்டும் வீழ்ச்சி கண்டுவருகிறது.

http://www.puthinapp...?20120424106063

Edited by தமிழரசு

  • Replies 52
  • Views 6.5k
  • Created
  • Last Reply

150 ரூபாய் ஐத்தொடும்பொழுது பல திர்பாராத மாற்றங்கள் நடக்கலாம்.

Edited by akootha

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் அபிவிருத்தி கடன் உதவியை வழங்கவுள்ளதாக தென்கொரிய நிதியமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் கீழ் தென்கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு நிதியத்திலிருந்து கிடைக்கவுள்ள இந்த நிதியானது கல்வி, சுகாதார நிகழ்வுகள் விவசாயம், பொது வேலைத்திட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம் மற்றும் ஏனைய கூட்டுறவு நடவடிக்கைகளை பலப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தென்கொரிய ஜனாதிபதி லீ மையூங் பேக்கும்; இன்று செவ்வாய்க்கிழமை மாநாடொன்றில் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி கண்டுள்ளதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் அங்கு அரசியல் நிலைமை முன்வைக்கப்படுமெனவும் லீ மையூங் பேக் கூறினார். இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இரு வருடங்களுக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்ட யானைகளுக்கும் அவர் தனது நன்றியை இதன்போது தெரிவித்துக்கொண்டார்.

'தென்கொரியாவின் பொருளாதாரத்திற்காக 200,000 இலங்கைத் தொழிலாளர்கள் பங்களிப்புச் செய்ததாகவும் அவர்கள் தென்கொரிய வர்த்தகர்களின் அன்புக்குரியவர்கள்' எனவும் லீ மையூங் பேக் கூறினார்.

http://www.tamilmirr...---200----.html

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் இப்போது ரத்த புற்று நோய் போன்றது ........ ரொம்பநாளைக்கு தாக்கு பிடிக்காது

இருந்த எல்லாப் பணத்தையும் ஒரு குடும்பம் சுரண்டினால் எப்பிடி பொருளாதாரம் உருப்படும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது

SLR.jpg

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று காலை மேலும் சரிந்துள்ளது.

நேற்று அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு 132.20 ரூபாவாக காணப்பட்டது.

ஆனால் இன்று காலை சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து 133.20 ரூபா என்ற சாதனை அளவை எட்டியது.

அதேவேளை. சிறிலங்கா மத்திய வங்கி அமெரிக்க டொலர் ஒன்றை நேற்று 133.16 ரூபா வீதம் வங்கிகளுக்கு விற்பனை செய்திருந்தது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதால், முதலீட்டார்கள் அமெரிக்க டொலரில் முதலிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

http://www.puthinappalakai.com/view.php?20120425106069

இருந்த எல்லாப் பணத்தையும் ஒரு குடும்பம் சுரண்டினால் எப்பிடி பொருளாதாரம் உருப்படும்?

எரிகின்ற வீட்டில் பிடுங்கியது மிச்சம்.

இந்தக்குடும்பம் இராணுவத்தை மட்டும் 'நன்றாக' கவனித்து வருகின்றது. அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வழி இல்லாமல் போகும்பொழுதே பல மாற்றங்கள் சடுதியாக நிகழும். அப்பொழுது இதே குடும்பத்தை மக்கள் அடித்து கலைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கு ஒன்றும் இல்லை.

விழுகின்ற கத்தியை ..... தடுக்க முடியாது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது

ஆனால் இன்று காலை சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து 133.20 ரூபா என்ற சாதனை அளவை எட்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை தரம்தான் இது சரியும்?? :D

தேயிலை உற்பத்தியிலும் வீழ்ச்சியாம்.

Sri Lankan tea production drops on weather woes

Colombo, April 25 (Xinhua-ANI): Sri Lanka's tea production fell 22.6 percent in March compared with the same period of 2011, said the state-run Tea Board on Wednesday fueling fears that the industry is heading for tough times.

http://in.news.yahoo.com/sri-lankan-tea-production-drops-weather-woes-112024089.html

எல்லா கோள்களும் ஒரே கோட்டில் வரும்பொழுது ... நாங்களும் கை கொடுப்போம் - புறக்கணியுங்கள் சிங்களத்தை, இது திலீபன் வழியான அகிம்சை கொள்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பார்த்தால் ...... ஸ்ரீலங்கா வெகு சீக்கிரமாக குப்புற விழப்போகுது போலகிடக்கு :icon_mrgreen:

கோதுமை மா விலை 8.50 ரூபாவினால் அதிகரிப்பு

கோதுமை மா கிலோகிராமொன்றின் விலை 8.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நள்ளிரவு முதல் இவ்விலை அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி புதிய ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய விலை 98.50 ரூபாவாக இருக்கும்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/40004--850-.html

கோதுமை மாவின் விலை உயர்வு என்பது பாணையும் பல அடிப்படை உணவு வகைகளின் விலையை கூட்டும். இது நாட்டில் பெரும்பான்மை மக்களை பாதிக்கும். அத்துடன் பல இதர பொருட்களின் விலையையும் அதிகரிக்கவைக்கும்.

மக்கள் மகிந்த அரசு மீது மேலும் கூடிய வெறுப்பை கொள்வார்கள். ஆனால் அது அரசியலில் மாற்றத்தை உடனடியாக கொண்டுவராது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு ஒரு தீர்வு

அதுவே சிங்களம் தலை நிமிர ஒரே ஒரு வழி.

நாட்டில்,கோதுமை மாவின் விலையேற்றத்தையடுத்து ஒரு இறாத்தல் பாணின் விலையை மூன்று ரூபா தொடக்கம் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கபட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவிக்கையில்,

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை எட்டு ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டமை பேக்கரி உற்பத்திக்கு தாக்கத்தைச் ஏற்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=729061012527799359

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
cartoon2(251).jpg

பால் மா விலை அதிகரிப்பு

குழந்தைகளுக்கான பால்மா தவிர்ந்த ஏனைய இறக்குமதி செய்யப்படும் பால்மாவுகளுக்கு விலை அதிகரிக்கபட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு 15சதவீத வரி அல்லது 92 ரூபாவினை அதிகரிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37907

காஸ் விலை 350 ரூபாவினால் அதிகரிப்பு

12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் காஸ் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இவ்விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் என அவ்வதிகார சபை தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/40418--350-.html

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமை மாவும், எரி பொருளும் விலை ஏறினால்...

சாப்பாட்டுக் கடையிலிருந்து, பல சரக்கு கடைப் பொருட்களும் விலை ஏறும்.

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளியில முடிவே இல்லாமல் விழுவது போலை இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமை மாவும், எரி பொருளும் விலை ஏறினால்...

சாப்பாட்டுக் கடையிலிருந்து, பல சரக்கு கடைப் பொருட்களும் விலை ஏறும்.

பலசரக்குக் கடையில்.... கோதுமை மா விற்க மாட்டார்களா?

என்ற, கேள்வி?

ஏன்... இன்னும், வரவில்லை?

எல்லாம்... தும்பு மிட்டாஸ் பசங்க.

  • 3 weeks later...

நாணய மதிப்பிறக்கம் எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்:கலாநிதி எம்.கணேசமூர்த்தி

இலங்கையில் நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டமையானது தற்கொலைக்கு ஒப்பான செயல் எனவும் எதிர்காலத்தில் எதிர்மறையான பல்வேறு பின்விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடும் என்றும் கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

- முன்னைய ஆண்டைவிட இப்போது நடைமுறை ஆண்டிலே இருக்கின்ற உற்பத்தியினுடைய பெறுமதி எந்த நூற்று வீதத்தினால் அதிகரிக்கின்றது என்று பார்ப்பதுதான் பொருளாதார வளர்ச்சி வீதம் ஆகும்.

- விலைவாசி அதிகரிப்புக்கு பலகாரணங்கள் உள்ளன. அதாவது உற்பத்தியிலே; ஏற்படுகின்ற குறைபாடு. உற்பத்தி போதியளவிற்கு இடம்பெறாவிட்டாலும் விலைவாசி அதிகரிக்கும். வெளிநாட்டு நாணயத்தினுடைய பெறுமதி அதிகரிக்கின்ற போதும் விலைவாசி அதிகரிக்கும்

- இவ்வாறு நாணயத்தினுடைய பெறுமதி வீழ்ச்சி அடைகின்றபோது அதனால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம், எதிர்த்தாக்கம் என்று பார்க்கும் போது அது மிக அதிகம்.

- அதேபோல இலங்கையினுடைய தேயிலை ஏற்றுமதிகளிலே கணிசமான அளவு ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எனவே இந்தத் தடை காரணமாக இலங்கைக்குக் கணிசமானதொரு பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேமில்லை.

- இலங்கையைப் பொறுத்த மட்டில் ஜெனீவா பொருளாதார நடவடிக்கை என்ற வகையிலே சிக்கலை உடனடியாக ஏற்படுத்தியது என்று கூறமுடியாது. என்றாலும் பொருளாதார சிக்கலுக்கு அவசியமான நிபந்தனைகள் அதற்கு முன்னதாகவே ஏற்படுத்தப்பட்டு விட்டன.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38290

கொழும்பு பங்கு சந்தை 5000 சுட்டிக்கு கீழே இறங்கியது

கடைசியாக இந்த நிலையில் இருந்தது Aug 2010 இல்

Continuing from where it left off last Friday, the Colombo Stock Exchange fell to a new low on Monday, falling 18.76 percent year-to-date, with both indices closing in the red.

The bourse which closed last week on a four month low, saw the All Share Price Index fall a further 1.49 percent yesterday, down 74.66 points to close at 4,935.01 while the Milanka Price Index of more liquid stocks closed 1.87 percent lower, 84.57 points down at 4,441.56.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சளவில் அபிவிருத்தி செய்தால் இப்படித்தான்.

அதைவிட நகைச்சுவை சீனாவின் உதவியுடன் செய்மதி அனுப்புதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.