Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கவிக்கு வாழ்த்துக்களு

Featured Replies

மீண்டும் என் நன்றிகள்...சாத்திரியார், குமாரசாமி அண்ணா, நிலாமதி, கோமகன், கறுப்பி (அக்கா), தப்பிலி, சஜிவன் மற்றும் யாழ்ரவி.....

  • Replies 65
  • Views 7k
  • Created
  • Last Reply

நான் எனது கலாநிதி பட்டத்திற்கான ஆராட்சியை, அவுஸ்திரேலியாவிலுள்ள, சிட்னி பல்கலைகழகத்தில் 2008ம் ஆண்டு சித்திரை மாதம் ஆரம்பித்து 2011 ஆடி மாதம் முடித்திருந்தேன்.

Title- "Molecular and cellular mechanisms of tumour cell dormancy and migration in high-density collagen matrices"

ஆராட்சி மார்பகபுற்று சம்பந்தமானது. ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பகபுற்று நோய் இலகுவாக குணமாக்கக்கூடிய ஒன்று. அதாவது புற்று நோய் அறுவை சிகிச்சை,அதை தொடர்ந்த chemotheraphy and radiation theraphy மூலம் நோயளி குணமடையலாம். எனினும் புற்று நோயுக்குரிய கலங்கள் உடலில் இல்லை என மருத்துவர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட 5- 10 வருடங்களின் பின்னர் நோய் மீண்டும் அதே இடத்தில் அல்லது உடலின் வேறு பாகங்களில் வருவதை கண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் சில புற்றுநோய் கலங்கள் நோய்க்குரிய சிகிச்சைகளின் போது உறங்கு நிலையில் காணப்படுவதே காரணம்.

எனது ஆராட்சி இது எவ்வாறு சாத்தியம் என்பதும், இவ்வாறு உறங்கு நிலையிலுள்ள புற்றுநோய் கலங்களை கண்டு பிடிப்பதற்கான "marker" கண்டு பிடித்துள்ளேன். அதற்குரிய மரபணுக்களை "manupilate" பண்ணுவதன் மூலம் உஅறங்கு நிலையில்லுள்ள கலங்களை வழமையான நிலைக்கு கொண்டு வந்து அறுவை சிகிச்சைக்கு பின்னான chemotheraphy and radiation theraphy தப்பிய கலங்களை அளித்தல். இதன் மூலம் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்தல்.

அண்மையில் நான் வாசித்த கட்டுரைகளில் என் மனதை தொட்டது ....

புற்று நோயிற்கு ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படும் பொழுது அதில் தமிழர்கள் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்

Jackie, a close friend since journalism school, where she outshone the rest of us, has things to say in the last months of her life:

If you’re sick, don’t be passive. Educate yourself, learn about your disease, and act on the information.

She has triple negative breast cancer, which affects about 20 per cent of breast cancer patients and has the lowest survival rate of all breast cancers. Early relapse is common. A tumour was removed from her brain in October. In February, she learned she had leptomeningeal cancer, which occurs in only 5 per cent of breast cancer patients.

Parts of health-care system are “unresponsive,” Jackie says. You have to advocate for yourself so you don’t get lost in it. When a 2009 mammogram showed asymmetry in her left breast, a nurse practitioner told her, “They are looking too hard,” and arranged a follow-up in three months.

Waiting was too stressful. Jackie asked a knowledgeable friend to recommend a good breast-care centre for a repeat mammogram and ultrasound and got it immediately. She had a lumpectomy and was told repeatedly that she was cured.

Now she knows there is no cure. She doesn’t want any more treatment. Nor does she want to wrestle with the health care system to get it. She has opted out of what she calls “death-denying culture.”

http://www.thestar.c...-dies-of-cancer

Edited by akootha

கலாநிதிப் பட்டம் பெற்ற யாழ்கவி மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

Posted 21 April 2012 - 01:10 PM

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை

போற்றி ஒழுகப் படும். 154

ஒருவன் நற்குணங்கள் நிறைந்திருக்கும் நிலையில் இருந்து நீங்காதிருத்தலை விரும்புவனாயின் அவன் பொறையுடைமையைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும் .

எனது கருத்து :

நீங்கள் சில பேரைப் பாத்தியள் எண்டால் நல்லாய்ப் படிச்சு பேருக்குப்பின்னால ஐஞ்சாறு பட்டங்களைக் கொழுவி வைச்சிருப்பினம் . கதையளும் சாதாரணப்பட்ட ஆக்களாலை விளங்கேலாது . ஆனால் அவையை நல்ல வடிவாய் கூர்ந்து பாத்தால் அவைக்கும் பொறுமைக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது . ஒருத்தர் அறிவாளியாய் மட்டும் இருந்தால் காணாது செரியான பொறுமைசாலியாயும் இருக்கவேணும் .

Seek'st thou honour never tarnished to retain;

So must thou patience, guarding evermore, maintain.

Qui désire la perfection, garde et converse sa patience.

இதுதான் எனது சிறப்பு வாழ்த்து யாழ்கவிக்கு . எனது கதைக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டங்களிலிருந்து புரிந்து கொண்டேன் , உங்கள் பொறுமையை .

கோமகன் எதேதோ பெரிய வார்த்தைகள் எல்லாம் எழுதுகிறீர்கள்.. யாழ்கள உறவுகளின் படைப்பிற்கு முன்னால் என் சாதனை மண்டியிட வேண்டும். எழுத்துக்களை வாசிக்கும் போது யோசிப்பேன் தமிழன் எவ்வளவு அறிவுடன் உலகம் முழுக்க வாழுகிறான் என்று. சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் எங்களுடைய முழுத்திறமைகளையும் வெளியில் காட்டமுடியாமல் தடுக்குது.

கலாநிதிப் பட்டம் பெற்ற யாழ்கவிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

நன்றிகள் இணையவன், வேந்தன்.....

இணைப்புக்கு நன்றி அகோதா....

அக்கா

நீங்கள் எப்பிடி நேரத்தை ஒதுக்கினீர்கள் உங்களின் குடும்பத்திற்காக/ உங்களின் படிப்பிற்காக ? இந்த படிப்பை பொறுத்தவரை

அதிக நேரம் ஒதுக்க வேண்டிய தேவை இருந்திருக்கும் அதே நேரம் உங்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டி இருந்து இருந்திருக்கும் எப்பிடி TIME MANAGE பண்ணினீர்கள் ?

இந்த படிப்பின் போது நீங்கள் எதிர் நோக்கிய மிக முக்கிய சவால்கள் என்ன அவற்றை எப்பிடி எதிர் கொண்டீர்கள் ?

நேரம் இருக்கும் போது இது பற்றி எழுதுங்க அக்கா

புது திரி ஒன்று ஆரம்பிச்சால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது புற்றுநோய் சம்மந்தமாக முக்கியமாக மார்பக புற்றுநோய் சம்மந்தமாக தனியே ஒரு திரி தொடங்கி எழுத முடியுமா?

கலாநிதி பட்டம் பெற்ற யாழ்கவி அக்காவுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவி பாட்டி வேறு ஒரு நாட்டில் இருந்து சிட்னிக்கு புலம் பெயர்ந்த பின்பு, எப்படி சிட்னிப்பல்கலைக்கழகத்துக்கு போகிறது என்று தெரியாமல் முழிந்துக் கொண்டிருந்தார். வயதுபோனவர் எங்கேயாவது தடுக்கி விழுந்தாலும் என்று நினைத்து நான் தான் அவருடன் பேருந்தில் பயணித்து முதன்முறையாக பல்கலைக்கழகத்தினைக் காட்டினேன். ஒரு வீடு சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் அத்திவாரம் பலமாக இருக்கவேண்டும் என்று பல மொழிகள் சொல்லுவார்கள்.

யாழ்கவிப் பாட்டிக்கு எனது வாழ்த்து(க்)கள்.

யாழ்கவி பாட்டி வேறு ஒரு நாட்டில் இருந்து சிட்னிக்கு புலம் பெயர்ந்த பின்பு, எப்படி சிட்னிப்பல்கலைக்கழகத்துக்கு போகிறது என்று தெரியாமல் முழிந்துக் கொண்டிருந்தார். வயதுபோனவர் எங்கேயாவது தடுக்கி விழுந்தாலும் என்று நினைத்து நான் தான் அவருடன் பேருந்தில் பயணித்து முதன்முறையாக பல்கலைக்கழகத்தினைக் காட்டினேன். ஒரு வீடு சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் அத்திவாரம் பலமாக இருக்கவேண்டும் என்று பல மொழிகள் சொல்லுவார்கள்.

இதைத்தான் சொல்வது ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார் என்று :D உங்களுக்கும் நன்றிகள் கந்தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார் என்று :D உங்களுக்கும் நன்றிகள் கந்தப்பு.

முக்கியமாக அவரின் கணவர். அவர் தான் இவரின் படிப்பிற்கு ஊக்கமும் ஆதரவும் தந்தவர். கணவர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

வாழ்த்துக்கள் யாழ்கவி.

மேன்மேலும் வளர வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மேலும் வளர வேண்டுகின்றேன்.

நான் நினைச்சேன் ஆக்கள் 20, 25 வயதுக்கு மேல் வளருவதில்லை என்று

கந்தப்புவின் பதிவை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட கருத்து என்னால் அளிக்கப்ப்ட்டுள்ளது. நிர்வாகம் தயவு செய்து மன்னிக்கவும்.

Edited by yarlkavi

வாழ்த்துக்கள் கூறிய அபராஜிதன், ஏராளன், கந்தப்பு மற்றும் அர்ஜுனுக்கு எனது நன்றிகள்...

அக்கா

நீங்கள் எப்பிடி நேரத்தை ஒதுக்கினீர்கள் உங்களின் குடும்பத்திற்காக/ உங்களின் படிப்பிற்காக ? இந்த படிப்பை பொறுத்தவரை

அதிக நேரம் ஒதுக்க வேண்டிய தேவை இருந்திருக்கும் அதே நேரம் உங்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டி இருந்து இருந்திருக்கும் எப்பிடி TIME MANAGE பண்ணினீர்கள் ?

இந்த படிப்பின் போது நீங்கள் எதிர் நோக்கிய மிக முக்கிய சவால்கள் என்ன அவற்றை எப்பிடி எதிர் கொண்டீர்கள் ?

நேரம் இருக்கும் போது இது பற்றி எழுதுங்க அக்கா

புது திரி ஒன்று ஆரம்பிச்சால் நல்லது

ரதி, அபராஜிதன் எனக்கும் எழுத விருப்பம் தான் அதற்காக தான் நான் யாழிலேயே இணைந்தது ஆனால் இப்போது எனக்கென்று ஒதுக்கிய நேரமெண்டால் வேலைக்கு புகையிரதத்தில் போய் வரும் 2 மணித்தியாலம் தான். நேரம் கிடைக்கும் போது நிச்சயம் உங்களுக்காக நான் அறிந்தவை எல்லாம் எழுதுகிறேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.