Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகள் போரில் தோற்றது ஏன்? கருணாநிதி விளக்கம்

Featured Replies

தமிழீழம் பெறுவதற்கான போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்றபோது;இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வு பூர்வமான அக்கறையை,அன்றே காட்டியிருக்கக் கூடாதா?

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!

ஆனால் அவர்களுக்கே தெரியும்!இந்தப் போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்பது ஓர் புறமிருக்க; பல்வேறு அணிகளாக இருந்த போராளிகளும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு - தமிழர் உயிரை தமிழரே பறிப்பதற்கு காரணகர்த்தாக்களாக ஆகிவிட்டார்கள்.

சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக அவர்கள் ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டுங்கூட,அந்த அணிகளிடையே இருந்த உட்பகையை நம்மால் தீர்க்கவும் முடியவில்லை;அதன் காரணமாக ஏற்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியைத் தடுக்கவும் முடியவில்லை.

தி.மு.க. அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி,இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.அதையொட்டி,கழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள்.

18-10-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகவே தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார்.22-10-2008 அன்று மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்திலே குறிப்பிட்டார்.24-10-2008 அன்று சென்னையில் பிரமாண்டமான "மனித சங்கிலி''ஒன்றினை நடத்தினோம். 26-10- 2008 பிரணாப் முகர்ஜி சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசினார்.இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு போர் நிறுத்தத்திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி 23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்தேன்.

அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

26-4-2009 அன்று விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம்.இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும்.இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது.இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் இலங்கை அரசு அந்த அறிவிப்பை "ஜோக்'' என்று கேலி செய்தது. 26 ம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்கு பின் அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை.

போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன்.உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன்.பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன்.எந்தச் செய்தியும் வரவில்லை.இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன்.

அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு,நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப்படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல்,கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால்,நானாக முடிவெடுத்துச் சென்றேன். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பிறகு மதியம் 1 மணி அளவில் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.

ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்ஷேயின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர். போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வளவோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம், அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய மந்திரிகளும் இருந்தும் கூட, சிங்கள அரசினர் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் மீறி, போரைத் தொடர்ந்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாகை சூடினர்.

வீழ்ந்தது தமிழின எழுச்சி ஈழத் தமிழகத்தில்! எந்த ஒரு இனத்தின் எழுச்சியும் வீழ்வதும் தாழ்வதும்; பின்னர் வெற்றிச் சிகரம் ஏறுவதும் உலக வரலாற்றில் காணக்கூடிய ஒப்பற்ற உதாரணங்கள். ஒற்றுமை இல்லாத காரணத்தாலும் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டும் காரணத்தாலும் தொடர்ந்து வீழ்ந்துபட்டு வருகின்ற இனமாக தமிழ் இனம் இருந்தாலுங் கூட அந்த இனத்திற்கு தமிழ் ஈழத்தில் தற்காலிகமாக ஏற்பட்டிருப்பது; நிரந்தரமானதல்ல என்பதையும்; அது நிரந்தரமாக இருந்துவிடக் கூடாது என்பதையும் - அசையாத நம்பிக்கையுடன் மனத்தில் கொண்டு களத்தில் மறைந்த மாவீரர்கள் அனைவருக்கும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்து - இனியும் தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு- நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்ற உறுதியுடன்; காந்தி காட்டிய வழியில்; அண்ணா வகுத்த நெறியில்; தன்மான உணர்வைத் தட்டியெழுப்பிய பெரியார் போதித்த பாதையில்; ஈழத் தந்தை செல்வா ஊட்டிய உணர்வில்; அறப்போர் தொடர்ந்திட அணி வகுப்போம்!” என்று கூறியுள்ளார்.

http://news.vikatan.com/?nid=7745

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இந்த வேதாளம் முருக்க மரத்தில் ஏற ஆயத்தமாகிறது.

போராளிகள் தங்களுக்குள் அடிபட்டுச் செத்தார்கள் சரி நீ கிழட்டு முண்டம் ஆட்சியிலிருந்தபோது ஈழத்தமிழருக்காக என்ன செய்தாய்?

இப்போது இவர் விடுக்கும் அறைகூவல் தமிழகத்தில் பஸ் எரிப்புகளையும் கலவரங்களையும் தொடக்கிவைத்து அதில் அரசியல் இலாபம் தேடும் நோக்கமேயன்றி ஏற்கனவே அல்லாடி நொந்து போயிருக்கும் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. அணையப்போகிற மெழுகுவர்த்தி(சா சா.. மெழுகுவர்த்தி என்றால் இவருக்கு கூடிபோயிட்டுது, ஒன்றுக்கும் உதவாமல் எரியும் குப்பை என்றுதான் சொல்லணும்) இறுதியில் பிரகாசித்து பின்தான் அணையுமாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் அழகிரி - ஸ்டாலின் சண்டைய நிறுத்தப்பாருங்கோ :wub:

  • கருத்துக்கள உறவுகள்

[ஈழம்] தீயினால சுட்டபுண் உள்ளாறும், ஆறாது.....

முதலில் நண்பர்கள் அரவிந்தன், சுகுணா திவாகர், லக்கிலுக், இன்னபிற முகமரியா, வலைப்பதிவறியாத நண்பர்களுக்கு நன்றிகள். வேலை பளுவின் காரணமாக முத்துக்குமாரின் இறுதிஊர்வலத்திற்கு செல்ல முடியாமல் போனது. ஆனாலும், தொடர்ச்சியாக செய்திகள் எனக்கு செல்பேசியில் வந்தவண்ணமிருந்தன. குறைந்த பட்சம் 25000 பேர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

ஜனவரி 31 இரவு 12.00 மணி வாக்கில் முத்துக்குமாருக்கு மொத்தமாக விடைகொடுத்தாகி விட்டது. முத்துக்குமாரின் மரணம் என்னமாதிரியான சலசலப்புகளையும், தீர்மானங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது நீங்கள் படிக்க கூடிய பத்திரிக்கையினை பொறுத்து அல்லது பார்க்கக்கூடிய சானலை பொறுத்து மாறலாம். ஆனால் மாற்ற முடியாதது என்னவெனில், எந்த தமிழ் சேனலும் (மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக) இந்த மாபெரும் ஊர்வலத்தினை பற்றி எவ்விதமான மூச்சும் விடவில்லை.

ஊடகங்கள் இது ஒரு விஷயமே இல்லை என்பது போல,இருட்டடிப்பு செய்கின்றன. மக்கள் தொலைக்காட்சி மட்டுமே அரை மணி நேரம் தொகுத்து வழங்கினார்கள். மற்ற எல்லா சானல்களும் ஏதோ நெடுஞ்சாலையில் "லாரி மோதி இரண்டு பேர் மரணம்" என்கிற அளவிலேயே இந்த நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். ஜெயா டிவி பற்றி சொல்ல தேவையில்லை, அது தமிழன மக்களுக்கும், ஈழத்தமிழர் நலனுக்குமே எதிரான சானல், அதில் செய்தி வருமென்று எதிர் பார்த்தல் முட்டாள்தனம். ஆனால், வைகோ, விஜயகாந்த், ஜெயலலிதா என போட்டி போட்டுக் கொண்டு நேரடி ஓளிபரப்பிய நடுநிலை சேனலான சன் டிவிக்கு என்ன வந்தது? ஒரு வேளை “கண்கள் பனித்தன.இதயம் இனித்தது” போன்றவற்றின் after effects-ஒ என்னமோ, சம்பிரதாயத்திற்கு கூட இதை ஒரு முழுமையான செய்தியாக கூட காட்டவில்லை அல்லது உலகச்செய்திகளில் அண்டார்டிகாவில் இருக்கும் பனிக்கரடிகளின் இனப்பெருக்கத்திற்கு இணையான முக்கியம் நம்மூரில் ஒரு மனிதன் தன்னை பற்ற வைத்துக் கொண்டு செத்து போவதில் இல்லையோ, என்னவோ. பனிக்கரடியும், ஈழப்பிரச்சனையும் ஒன்றா என்ன? ஊர்வலத்தில் பங்குபெற்றோர் சொன்னதிலிருந்து ஒரு தமிழ் சேனலும் அங்கே தலை காட்ட துணியவில்லை, துணிந்தவர்களும், ஏதோ ரெண்டு கிளிப்பிங் கிடைக்குமா, 20 செகண்ட் காட்ட முடியுமா போதும் என்கிற அளவிலேயே இருந்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் ஒரு கொதிநிலை இருக்கிறது. ஆனால் முதல்வர் இதை ஒரு மேட்டராகவே பார்க்கவில்லை.

முத்துக்குமாரின் மரணத்திற்கு பின்னான காரண காரியங்களை அலசுதல் என்னுடைய நோக்கமல்ல. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். புலி ஆதரவாளர்/எதிர்ப்பாளர், திமுக ஆதரவாளர்/எதிர்ப்பாளர், ஈழ்த்தை பற்றி துளியூணாடாவது கவலைப்படுபவர், எவன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று நினைப்பவர், பிரபாகரன் தேவதூதர்/பயங்கரவாதி/சாத்தான் என யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். ஒரு மனிதன் ஒரு நோக்கத்திற்காக செத்திருக்கிறான். அவனுடைய சடலத்தினை பார்க்க ஒரு மக்கள் கூட்டமே வருகிறது.அம்மரணம் எழுப்பியுள்ள கேள்விகள், மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல்சாரா அமைப்புகள் இம்மரணத்தினை முன்வைத்து போராட்டங்களையும், வினாக்களையும் எழுப்பியுள்ளார்கள். இத்தகைய ஒரு மரணத்தினை இருட்டடிப்பு செய்வதின் மூலம், என்னவிதமான செய்தியினை ஊடகங்கள் மக்களுக்கு தருகின்றன?

முத்துக்குமார் ஒரு மேட்டரேயில்லை. ஏதோ செத்தான் லூசுத்தனமாய், அவனுக்கு பின்னால் கொஞ்ச லூசுகள் ஆர்ப்பரித்தார்கள் என்பதுதான் ஊடகங்களின் பார்வையா? சென்னையில் இருப்பதாலும் நண்பர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டதாலும் எனக்கு உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது ஒரளவுக்கு தெரியும். தமிழ் உணர்வோடு செங்கல்பட்டு தாண்டி இருப்பவனுக்கு என்னவிதமான செய்திகளை இந்த ஊடகங்கள் தாங்கி சென்றன? ஆக ஒரு செய்தியினை அது உங்களுக்கு சாதகமான விஷயங்கள் இல்லையென்றால் வெளியிட மாட்டேன் என்கிறீர்களேயானால், நீங்கள் நான்காவது தூணாயிருங்கள். நாற்பாதாயிரமாவது தூணாக இருங்கள் என்ன பிரயோசனம். இது திட்டமிடப்பட்டு, அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டு நடத்தப்பட்ட இருட்டடிப்பு. பச்சையாக சொல்வதென்றால் அயோக்கியத்தனம். ஊடக பயங்கரவாதம். தனியார் ஊடகங்கள் தன்னிலை தவறி அரசுக்கு சார்பாக இருக்கிறார்கள் - அதற்கு தான் தூர்தர்ஷன் இருக்கிறதே, நீங்களுமா? ஹிட்லரின் காலத்தில் பொய்யை பரப்போ பரப்பென்று பரப்பி அதனை உண்மையென்று நிருபணமாக்கக்கூடிய வேலையினை ஒரு கோயபல்ஸ் செய்தான் என்றால், தமிழகத்தில் இப்போது இருப்பது கோயபல்ஸ் ஊடகங்கள். ஒரு உண்மையினை மறைப்பதும் குற்றமே. உண்மையினை மறைத்து மக்களுக்கு நேர்மையான செய்தியினை தராமல் இருப்பதற்கு பெயர் தான் ஊடக தர்மமெனில், உங்களுக்கும் சோ மாதிரியான ஆட்களுக்கும் என்ன வித்தியாசம். சோ உண்மையினை அவருக்கு ஏற்றாற் போல் திருத்தி, வளைத்துக் கொள்வார். நீங்களும் அதையே செய்தால், நீங்கள் யார் - நீங்களும் அவாளாக முகமூடி தரித்து கொள்கிறீர்களா ?

இந்த அயோக்கியத்தனத்தினை செய்துவிட்டு முதல்வர் சாமர்த்தியமாக இதனை அரசியலாக்காதீர்கள் என்று அறிக்கை விடுகிறார். யார் இதனை அரசியலாக்குகிறார்கள்? ஊர்வலத்தில் கலந்து கொண்ட எந்த கட்சியும் முத்துக்குமாரினை சொந்தம் கொண்டாவில்லை. முத்துக்குமாரின் சாதி சார்ந்த ஒரு பேனரையே கிழித்து போட்டுவிட்டுதான் ஊர்வலம் நடந்தத்.ஆக எந்த சாதி கட்சியும் முத்துக்குமாரை சொந்தம் கொண்டாடவில்லை. பழ.நெடுமாறன் தலைமேயேற்ற இரங்கல் கூட்டத்திலும் மிகத் தெளிவாக முத்துக்குமார் இலங்கை தமிழர்களுக்காக, கொள்கைக்காக உயிர் நீத்தார், ஆகவே வெறுமனே கருப்பு கொடியினை மட்டுமே குத்திக் கொண்டும், குடிக்காமலும் இறுதி ஊர்வலத்துக்கு வரவேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆக பங்கு கொண்ட யாருமே இதனை அரசியலாக்க முயலவில்லை.திமுக அரசு தான் இதனை அரசியலாக்கி அதன் மூலம் லாபம் தேடப் பார்க்கிறது.

ஆனால் முதல்வருக்கு என்ன பயமோ தெரியவில்லை இதனை அரசியலாக்காதீர்கள், அரசியலாக்காதீர்கள் என்று ஆரஞ்சு பழச்சாறு குடித்துக் கொண்டு அறிக்கை விடுகிறார். எதற்கு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை தருகிறீர்கள்? நீங்கள் தான் இது ஒரு மேட்டரேயில்லை என்று சொல்லிவிட்டீர்களே, அப்புறமென்ன பயம்? மைனாரிட்டி திமுக அரசு என்று சொல்வதில் தப்பேயில்லை. அந்த மைனாரிட்டி பயம் அறிக்கையில் தெரிகிறது. முதல்வர் எதற்காக பயப்படுகிறார் என்று புரியவில்லை - ”தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை” என வசனமெழுதியவர் இன்னமும் 2 மாதங்கள் கூட தாங்காத மத்திய அரசுக்கு சாமரம் வீசி என்ன சாதிக்க போகிறார்? அது சரி, பாவம் அவருக்கும் தான் எவ்வளவு பிரச்சனை. ஈழப்பிரச்சனை தலை போகிற பிரச்சனையா, என்ன நடக்கும் இன்னமும் 2-3 இலட்சம் தமிழர்கள் செத்து போவார்கள். போனால் போகட்டும். சாவதற்கென்றே பிறந்த ஜாதியது. ஆனால், தயாளு அம்மாள் ஈன்றெடுத்த “அண்ணன் அண்ணல்” கோவித்து கொண்டு போய்விட்டால் நீங்களா வந்து சமாதான படுத்துவீர்கள். உங்களுக்கென்ன ஐ.நா இருக்கிறது, நார்வே இருக்கிறது. பாவம், பரிதாபத்திற்குரிய முதல்வர் வீட்டு பிரச்சனையினை தீர்க்க யார் முன்வருவார்கள். நீங்கள் நடத்துங்கள் ஐயா, ஏனெனில் இது உங்கள் அரசாங்கம். கேட்பார் யாருமில்லை.

பிரணாப் முகர்ஜியினை இலங்கை அனுப்பியதையே கிராண்ட் ஸ்லாம் சாதனை போல, ’இனமான காவலர்’ அன்பழகன் அறிவிக்க, அதையும் மேஜை தட்டி வரவேற்றார்கள் திராவிட குஞ்சுகள். போன பிரணாப் முகர்ஜி அங்கே போய் தான் சொல்கிறார், தான் இலங்கை அரசின் அழைப்பினை ஏற்று போன விருந்தாளி என்று. கிராமப்புறங்களில் “விருந்தாளிக்கு பொறந்த பய” என செல்லமாக விளிப்பார்கள். இப்போது விருந்தாளி யார் - பிரணாப் முகர்ஜியா, அன்பழகனா அல்லது தமிழின காவலரா? அப்படியே போய் பிரணாப் முகர்ஜி சாதித்தது என்ன? அவுட்சோர்ஸ் பண்ணிய இந்திய ரேடார்களுக்கும், என்ஜினியர்களுக்குமான இதுவரைக்குமான பில்-லினை செட்டில் செய்து கணக்கு நேர் செய்யபோனாரா? (மார்ச் வருகிறதே, கணக்கு வழக்குகளை இந்தியாவில் முடித்தாகவேண்டும் அல்லவா?) என்ன காரணம் சொல்லி நீங்கள் அனுப்பினீர்கள், என்ன நடந்தது ? உண்மையில் எதுவும் நடக்கவில்லை என்பது தான் கடைந்தெடுத்த உண்மை.

தெஹல்காவில் வந்திருக்கும் இந்த செய்தியினை படியுங்கள். இலங்கையில் இருக்கும் சிங்கள பேரினவாத அரசு எந்தளவிற்கு தமிழ்மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பது தெரியும். இந்நிலையில்,உலக நாடுகளின் காதுகளில் பூச்சுற்ற 48 மணிநேரம் போர்நிறுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று புரூடா விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் நலனை காக்காதவர்களும், உயிர் துறத்தலை முட்டாள்தனம் என்று சொல்பவர்களும் தான் தமிழ்நாட்டில் இனமான காவலர்கள்.

சரி ஒரு வாதத்துக்கு உயிர் துறத்தல் முட்டாள்தனம் என்றே வைத்துக் கொள்வோம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தானை தலைவர் தண்டவாளத்தில் தலை வைத்தது படுத்தது முட்டாள்தனத்தில் வருமா? எந்த இனத்தினை காக்க நீங்கள் அடைமொழிகள் வைத்து கொண்டு சுற்றுகிறீர்கள்? அல்லது அரசாணையில் அறிவித்து விடுங்கள் முத்துக்குமார் ஒரு கன்னடிகா அல்லது மலையாளி அல்லது தெலுங்கர் என்று. நாங்களும் எங்கள் வேலையை பார்த்து கொண்டு போய்விடுகிறோம்.

25000 மக்கள் ஒரு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள். ஒரு லட்சம் மக்கள் லண்டன் வீதிகளில் அணி திரள்கிறார்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதமிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உணர்வுரீதியாகவும், மனித உரிமை ரீதியாகவும் குரல்கள் எழுப்பப்படுகின்றன. செஞ்சிலுவை சங்கம் இலங்கையில் நடப்பது தவறென சொல்கிறார்கள். ஐநாவில் இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் கவலைகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் இது ஒரு பிரச்சனையே இல்லை என்று அரசு நினைக்கிறது. முதல்வரும் ஈழம் கிடைத்தால் சந்தோஷமடைவேன், ஆனால் என்னலான எந்த வேலையையும் நான் செய்யமாட்டேன் என்று தெளிவாக உணர்த்தியிருக்கிறார். இன்னமும் தமிழின தலைவர் என்கிற அடைமொழிக்கு தகுதியானவர்தானா என்பதை உங்களின் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

http://www.rlnarain.com/2009/02/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் பெறுவதற்கான போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம்.

பதில் ரொம்ப சுலபம்

உங்கள் போன்ற தலைவர் தமிழகத்தை ஆண்டது.

தமிழர் உலகில் தனக்கென ஒரு இடம் இல்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கைப்பயம் வழமைக்கு மாறாக தொடர்ச்சியாக எம்மைப்பற்றி கூறவைக்கிறது.

தமிழினத்தின் காவலன், தமிழ்நாடு காணாத கலைஞர், தன் மானத்தமிழன், செந்தமிழர் தேடிய செம்மல், திராவிடத்தின் தானைத்தலைவன்.... வேண்டிய பட்டம் எல்லாம் கலைஞர் கருணாநிதிக்கு கொடுக்க முடியும். ஆனால் தயவு செய்து இனியும் தமிழருக்கு ஒரு விடிவு வருவதை கெடுக்க வேண்டாம். கையெடுத்து கும்பிடுகிறோம்,கடைசி நாட்களை குடும்பத்துடன், அமைதியாக கழித்துவிட்டு கண்ணை மூடுங்கள். அதுவேதான் இனி நீங்கள் ஈழத்தமிழனுக்கு செய்த்தக்க அளப்பரிய தொண்டு. இல்லையேல் உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கலைஞர் என்றப்ட்டம் தான் வாங்குவீர்கள்.

கில்லாரி டெல்கி வந்தால் அங்கே தமிழருக்கான தீர்வு ஏதாவது விவாதிக்கப்படலாம் என்பதனால இவர் இப்படி துள்ளுகிறார்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

2009 இனப்படுகொலையை வேணுமென்றே தடுத்து நிறுத்தாமலிருந்ததன் குற்றவுணர்வு இப்போது அந்த ஆளைப் புரட்டி எடுக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததற்கான காரணங்களைத்தேடிக்கொண்டிருக்கிறார் கலைஞர். அதனால் சுற்றிச் சுற்றி மீண்டும் சகோதர யுத்தத்தில் வந்து நிற்கிறார்.

ஆனால் ஒன்று, ஒன்றிணந்து போராடியிருந்தால் முடிவு வேறாக அமைந்திருக்கும் அல்லவா ??? ஆனால் ஆப்படி முடியாமல்ப் போனமைக்கும் சில காரணங்கள் இருந்தன என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அதில் ஒன்று சில இயக்கங்கள் இந்திய அரசின் கைப்பாவைகளாக மாறியிருந்தன என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் பெறுவதற்கான போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்றபோது;இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வு பூர்வமான அக்கறையை,அன்றே காட்டியிருக்கக் கூடாதா?

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!

ஆனால் அவர்களுக்கே தெரியும்!இந்தப் போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்பது ஓர் புறமிருக்க; பல்வேறு அணிகளாக இருந்த போராளிகளும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு - தமிழர் உயிரை தமிழரே பறிப்பதற்கு காரணகர்த்தாக்களாக ஆகிவிட்டார்கள்.

சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக அவர்கள் ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டுங்கூட,அந்த அணிகளிடையே இருந்த உட்பகையை நம்மால் தீர்க்கவும் முடியவில்லை;அதன் காரணமாக ஏற்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியைத் தடுக்கவும் முடியவில்லை.

தி.மு.க. அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி,இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.அதையொட்டி,கழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள்.

18-10-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகவே தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார்.22-10-2008 அன்று மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்திலே குறிப்பிட்டார்.24-10-2008 அன்று சென்னையில் பிரமாண்டமான "மனித சங்கிலி''ஒன்றினை நடத்தினோம். 26-10- 2008 பிரணாப் முகர்ஜி சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசினார்.இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு போர் நிறுத்தத்திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி 23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்தேன்.

அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

26-4-2009 அன்று விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம்.இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும்.இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது.இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் இலங்கை அரசு அந்த அறிவிப்பை "ஜோக்'' என்று கேலி செய்தது. 26 ம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்கு பின் அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை.

போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன்.உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன்.பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன்.எந்தச் செய்தியும் வரவில்லை.இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன்.

அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு,நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப்படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல்,கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால்,நானாக முடிவெடுத்துச் சென்றேன். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பிறகு மதியம் 1 மணி அளவில் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.

ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்ஷேயின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர். போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வளவோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம், அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய மந்திரிகளும் இருந்தும் கூட, சிங்கள அரசினர் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் மீறி, போரைத் தொடர்ந்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாகை சூடினர்.

வீழ்ந்தது தமிழின எழுச்சி ஈழத் தமிழகத்தில்! எந்த ஒரு இனத்தின் எழுச்சியும் வீழ்வதும் தாழ்வதும்; பின்னர் வெற்றிச் சிகரம் ஏறுவதும் உலக வரலாற்றில் காணக்கூடிய ஒப்பற்ற உதாரணங்கள். ஒற்றுமை இல்லாத காரணத்தாலும் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டும் காரணத்தாலும் தொடர்ந்து வீழ்ந்துபட்டு வருகின்ற இனமாக தமிழ் இனம் இருந்தாலுங் கூட அந்த இனத்திற்கு தமிழ் ஈழத்தில் தற்காலிகமாக ஏற்பட்டிருப்பது; நிரந்தரமானதல்ல என்பதையும்; அது நிரந்தரமாக இருந்துவிடக் கூடாது என்பதையும் - அசையாத நம்பிக்கையுடன் மனத்தில் கொண்டு களத்தில் மறைந்த மாவீரர்கள் அனைவருக்கும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்து - இனியும் தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு- நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்ற உறுதியுடன்; காந்தி காட்டிய வழியில்; அண்ணா வகுத்த நெறியில்; தன்மான உணர்வைத் தட்டியெழுப்பிய பெரியார் போதித்த பாதையில்; ஈழத் தந்தை செல்வா ஊட்டிய உணர்வில்; அறப்போர் தொடர்ந்திட அணி வகுப்போம்!” என்று கூறியுள்ளார்.

http://news.vikatan.com/?nid=7745

சகோதர யுத்தத்தை உருவாக்கியதும் அதனை இன்றுவரை நடத்திவருவதும் கலைஞரே இன்றுவரை முண்டு கொடுத்துவரும் இந்திய அரசுதான் என்பதை கலைஞர் அறிவாரா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.