Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழியும் தமிழ்க் கற்பக தரு! - கந்தரதன்

Featured Replies

தமிழர் தாயகத்தின் அடையாள சின்னமாக விளங்குவது பனை என்கின்ற கற்பகதரு ஆகும். இந்தியா உட்பட எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருப்பினும் யாழ்ப்பாணப் பனைமரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. யாழ்குடாநாட்டை குறிப்பிடும் போது குறியீட்டுப் பொருளாக பனைமரத்தைக் காண்பிப்பது வழமை. அந்த வகையில் பனை மரத்தை ஊடகங்களும் யாழ் குடாநாட்டைக் குறிப்பிடுவதற்கும் இலங்கையின் வடபகுதியைக் குறிப்பிடுவதற்கும் பனை மரத்தைக் குறிப்பிடுவது நாம் அறிந்த உண்மை.

பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது என்றே சொல்லலாம். தமிழர் தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் தமிழர் தாயகப் பகுதிகளில் சுமார் 4 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயினும் எஞ்சியுள்ள பனை மரங்களையும் பாதுகாக்க முடியாத நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காலங்காலமாகவே வடபகுதி பனைவளத்தில் தென்பகுதி சிங்களத்துக்கு ஒரு கண் இருந்துவந்துள்ள நிலையில், தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் கட்டிக்காத்து வரும் பனைவளத்தை சூறையாடும் முனைப்பில் தென்பகுதிச் சிங்களவர்கள், படையினரின் மேற்பார்வையில் பனைவளத்தை அழிக்கும் படலத்தை நடத்திவருகின்றனர். தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த பனை வளம் இன்று அவர்களின் கண்முன்னாலேயே, தடுக்க யாருமின்றி முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் பின்னர், தமிழர் தாயகப் பகுதிகளில் பனைகளின் வளர்ச்சியில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. பனைகள் உயர்ந்து வளரும் தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட உயரத்துடனேயே அவை முதிர்ச்சியடைவதாகவும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலைக்கு, சிறீலங்கா அரசு பாவித்த இரசாயனக் குண்டுகள், பல்குழல் ஏவுகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களே காரணம் என ஆராட்சியாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையிலேயே எஞ்சியுள்ள பனைவளத்திற்கும் சிங்கள இனவாதத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகவே உள்ளது. இதனால், பனைவளத்தையும் பனைவள உற்பத்திகளையும் வாழ்வாதாரமாக நம்பிவாழ்ந்த தமிழ் மக்கள் வேறு தொழில்களை நாடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இராணுவத்தினர் பனைவளத்தை அழிக்கும் நடவடிக்கைகளும் தற்போது உச்சமடைந்துள்ளன. கைதடி வடக்கிலுள்ள காணியன்றில் புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக 32 பரப்பு வரையான தனியாருக்குச் சொந்தமான பனங்காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி, பனைவளத்தை அழித்து வருகின்றனர்.

குடாநாட்டில் பனைமரங்கள் தறித்தல், அழித்தல் மற்றும் பனை மரக்காலை போன்றவற்றிற்குப் பனை அபிவிருத்திச்சபை சில கட்டுப்பாடுகளை முன்வைத்துள்ளது. பனைமரங்கள் தறிப்பவர்கள் கிராம சேவை அலுவலர், பிரதேச செயலாளரின் அனுமதி பெற்று அவற்றைத் தறிப்பதற்கான அங்கீகாரத்தை தம்மிடம் பெறவேண்டும் எனவும், தறிக்கும் பனைகளை எடுத்து செல்வதற்கு பாதை அனுமதி பெறவேண்டும் எனவும் பனை அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

Panimaram.jpg

தறிக்கும் ஒவ்வொரு பனை மரத்திற்கும் குறிப்பிட்ட தொகை பணம் செலுத்துதல் மற்றும் தறிக்கப்படும் ஒவ்வொரு பனை மரத்தினதும் மீள்நடுகைக்கான ஒரு தொகை பணம் செலுத்துதல் என்பன பனை அபிவிருத்தி சபையின் புதிய கட்டுப்பாடுகளாகும். பொதுமக்கள் தமது காணியில் உள்ள ஒரு பனை மரத்தைத் தறிப்பதற்கு இத்தனை சட்டதிட்டங்களை பின்பற்றவேண்டும். ஆனால், எவரின் அனுமதியின்றியும் படையினர் வகைதொகையின்றி பெருந்தொகையான பனை மரங்களைத் தறித்து அழிப்பதைப் பார்த்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

ஆனால், இதனைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவே இவர்கள் உள்ளனர். சீமெந்துக் கற்களைப் பயன்படுத்தி நிலையானதாக அமைக்கப்படுகின்ற மேற்படி கைதடி இராணுவ முகாமில் கட்டுமான வேலைகள் நிறைவடைவதற்குள் தமது பிரதேசத்திலுள்ள மேலும் பல பனை மரங்கள் அழிக்கப்படலாம் என்றும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாவற்குழிக்கு அண்மையிலுள்ள அரச காணியொன்றிலும் ஏற்கனவே இது போன்ற இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கெனவே பனைவளம் அங்கு அழிக்கப்பட்டுள்ளது. நாவற்குழி குடியேற்றத்திட்டத்திலுள்ள அரச காணியிலும் தென்னிலங்கைச் சிங்களவர்களைக் குடியேற்றியுள்ளமை தெரிந்ததே. அந்தப்பிரதேசத்திலும் பெரும் எண்ணிக்கையிலான பனைவளம் அழிக்கப்பட்டே அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழர் தாயகத்தில் இருந்து வளங்களைச் சுரண்டும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளில் ஒன்றாகப் பளைப் பகுதியில் இருந்தும் பனைமரங்கள் வெட்டப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மீளக் குடியேற்றப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் பளையின் பெரும்பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்தே இவ்வாறு பனைமரங்கள் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

அனேகமாக இரவு வேளைகளிலேயே பனைகள் வெட்டப்பட்டு இரவோடு இரவாக தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் உள்ள இப்பகுதியில் இடம்பெற்றுவரும் இந்தச் செயலுக்கு பின்னால் சிறிலங்காப் படையதிகாரிகள் மறைமுக ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறே மன்னார் மாவட்டத்திலும் சிறிலங்கா காவல்துறையினரின் உதவியுடன் பெரும் எண்ணிக்கையான பனைகள் அழிக்கப்பட்டு தென்பகுதிக்கு கடத்தப்படுவதாக மன்னார்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் ஆகிய கிராமங்களில் உள்ள பல ஏக்கர் கணக்கான காணிகளில் உள்ள பனை மரங்கள் சிறிலங்கா காவல்துறையினரின் ஒத்துளைப்புடன் சட்டவிரோதமான முறையில் வெட்டப்படுவதாக பனங் காணிகளின் உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்தக் கிராமங்களில் தனியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் கணக்கான காணிகள் உள்ளன. குறித்த காணிகளில் பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

குறித்த பனை மரங்களை நம்பி பல ஏழைக் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். குறித்த மக்கள் தமது வருமானத்தை ஈட்டுவதற்காக பனை மரத்தில் இருந்து விழும் ஓலைகளை வெட்டி மட்டை வியாபாரம் செய்தல், பனங்கள் உற்பத்தி, பனங்கிழங்கு, ஒடியல், பனாட்டு, வினாகிரி போன்ற வருமானம் தரக்கூடிய உற்பத்தித் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த காணிகளுக்குள் அத்துமீறிச் செல்லும் நபர்கள் சிறிலங்கா காவல்

துறையினரின் உதவியுடன் பனை மரங்களை வெட்டி அழித்து தென்பகுதிக்கு கொண்டு செல்லுகின்றனர். இவ்வாறு சூறையாடப்படும் பனை மரங்களை சீவி அதி கூடிய விலைக்கு விற்பனைசெய்கின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினருக்கு குறித்த தொகை இலஞ்சப் பணத்தை வழங்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தலைமன்னார் காவல்துறையில் முறையிட்ட போதும் அவர்கள் தென்னிந்திய சினிமா பாணியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாதது போல் உள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டிய காவல்துறையினரே சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோவது கண்டு பொதுமக்கள் பொறுமையிழந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இந்நிலையில், தமிழகம் சென்னையில் இருந்து அண்மையில் தமிழர் தாயகப்பகுதிக்கு நேரில் சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழுவினர் அங்குள்ள மக்களின் நிலைமைகளை பல அச்சுறுத்தல்களுக்கும் தடைகளுக்கும் மத்தியில் படம்பிடித்துத் திரும்பியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு இருந்த சுவடே தெரியாமல் இருப்பதனை காணொளி ஆதாரத்துடன் வெளிப்படுத்திய புதியதலைமுறைத் தொலைக்காட்சிக் குழுவினர் தமிழர் பகுதிகளில் நீக்கமற நிறைந்துவிட்ட சிங்கள இராணுவத்தினரின் பிரசன்னத்தையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.

வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் இருந்து தப்பித்துச் செல்லும்போது கைவிட்டுச் சென்ற கால்நடைகளும் பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டு காணாமல்போயுள்ளதையும் பறிகொடுத்த மக்களது வாக்குமூலமாக பதிவுசெய்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக பார்க்கும்போது இயல்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக தோன்றினாலும் அங்குள்ள தமிழர்கள் ஒருவிதமான அச்ச சூழலில் வாழ்ந்துவருகின்றதை புதியதலைமுறை தொலைக்காட்சி படம்பிடித்துக்காட்டியுள்ளது.

புலம்பெயர்ந்த வாழ் எம் உறவுகளே. தாயகத்தில் வாழும் எம் உறவுகளின் நிலைகண்டும் காணதவர்கள் போல் இருப்போமாயின் நாம் கண் இருந்தும் குருடர்களே. வரும் மேதினத்தில் சர்வதேசத்தை நோக்கி ஓங்கிக் குரல்கொடுப்போம் வாரீர்! நாம் சிந்திக்கும் நேரமல்ல இது, செயற்படும் நேரம்.

நன்றி : ஈழமுரசு

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ.... பனை மரங்கள், ஸ்ரீலங்கா இராணுவம் அடித்த குண்டுவீச்சுக்களால்... பாதிப்படைந்து விட்டன. பல...அழிந்து விட்டன.

இப்போ... குட்டைப் பனை, என்று... வந்த ஒரு தலைப்பையும் இரு வாரங்களுக்கு முன் ஒரு உறவு, இணைத்திருந்தார்.

அதனை வாசிக்க நேரமில்லாமல், பின்பு வாசிப்போம் என்று நினைத்து விட்ட பின். தலைப்பு எங்கே... இருக்குது என்று தெரியவில்லை.

யாரும் தேடி... எடுத்து, இணைத்தால்... கோடி புண்ணியம்.

  • கருத்துக்கள உறவுகள்

................ என்னும் தமிழனின் இருப்பே கேள்வி குறியாக உள்ளது, இன் நிலையை மாற்ற படாத பாடு படுகின்றது ஈழ தமிழ் இனம், இதற்க்கு ஒரு விடிவு கிட்டுமானால் எமது வளங்களை பேணி பாதுகாக்கலாம் அதுவரை இருப்பை நிலை நிறுத்த போராடவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனையோ.... பனை மரங்கள், ஸ்ரீலங்கா இராணுவம் அடித்த குண்டுவீச்சுக்களால்... பாதிப்படைந்து விட்டன. பல...அழிந்து விட்டன.

இப்போ... குட்டைப் பனை, என்று... வந்த ஒரு தலைப்பையும் இரு வாரங்களுக்கு முன் ஒரு உறவு, இணைத்திருந்தார்.

அதனை வாசிக்க நேரமில்லாமல், பின்பு வாசிப்போம் என்று நினைத்து விட்ட பின். தலைப்பு எங்கே... இருக்குது என்று தெரியவில்லை.

யாரும் தேடி... எடுத்து, இணைத்தால்... கோடி புண்ணியம்.

http://www.maalaimal...ossip-news.html சிறித்தம்பி! இதுதானோ எண்டொருக்கால் பாருங்கோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நான் நேரிலேயே கண்டேன் இந்த அழிவை, ஒரு பனை பதினைந்தாயிரம் ரூபாவுக்கு விற்கப்படுகிறது. குரும்பசிட்டிப்பக்கம் கொஞ்ச இடங்களை மக்கள் மீள்குடியேற்றத்துக்கு அனுமதித்திருக்கிறார்கள். அதாவது கவிஞர் கந்தவனத்தின் வீடுகளை அண்டிய பகுதியில். அந்தப்பகுதியில் அழிக்கப்பட்ட பனைமரங்களைத்தவிர கொஞ்சமாக அங்கும் இங்குமாக இருக்கும் பனைகளையும் மீழ்குடியேற்றப்பட்ட மக்கள் தறிக்கிறார்கள். தற்போதைய உலகில் பனை தவிந்த அதற்கு இணையான உறுதியுடன் கட்டுமானப் பொருட்களை உலகின் எந்தமூலையிலிருந்தும் பெற்றுகொள்ளக்கூடியதாக இருப்பினும் புதிய கட்டிடங்களைக் கட்டும்போது பழைய தொழில்நுட்பங்களையே நாம் இப்போதும் பின்பற்றுவதால் சுற்றுச்சூழல்பற்றிய அவதானம் இன்னமும் எம்மிடையே இல்லாதிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.maalaimal...ossip-news.html சிறித்தம்பி! இதுதானோ எண்டொருக்கால் பாருங்கோ? :rolleyes:

குட்டைப் பாவாடை என்று இருந்ததை, குட்டைப் பனை என்று... வாசித்து விட்டேன் போலுள்ளது குமாரசாமி அண்ணைsmiley-channel.de_brille005.gif. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எம் பிரிய ந‌ண்பா,

இந்த மண்ணைவிட்டு

மக்களை விட்டு

நாம் பிரியலாம்

ஆனால்

நீயோ உன்சந்ததியோ

பிரியமுடியாது பிரியவும் கூடாது

இன்றைய தர்ம யுத்தத்தை

நாளைய சந்ததிக்கு கூறு

உன்னைப் போல எம்முடன்

உள்ள‌ன்போடு உறவாடியவர்

யாருமே இல்லை

எனவே நடந்தைக் கூறு

உன்னை கற்பகதரு என‌

போற்றியவர்கள்

நீ எமக்கு 'கவர்' ஆகும்

கருத்தை நிச்சயம்

கற்னையிற் கூட‌

சேர்திருக்க மாட்டார்கள்

உக்கிரமான யுத்தத்தில்

எம்முடன்

உறுதியோடு

துணையிருந்தவன்

நீ மட்டுமே என்பதால்

நாளைய சந்ததிக்கு

நட‌ந்ததைக் கூறு.

எம் எல்லைகளெல்லாம்

நீ நெருங்கி நிற்பதனால்

எம் இழப்புகள்

குறைந்து போனதை

எடுத்து சொல்.

எம்மை துளைக்க வேண்டிய

எத்தனையோ குண்டுகளை

நீ சுமப்பதை

அத்தனை 'செல்' துண்டுகள் உன்

வைரமேனியை ஊடுருவியதை

கூறுவாயா?

வானதி என்ற பெண்போராளி(1991 ) கவிஞை எழுதிய நாளைய சந்ததிக்கு நடந்ததை கூறு என்ற கவிதையில் இருந்து ஒரு பகுதி......மிகுதியை பின்பு இணைக்கின்றேன்....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ.... பனை மரங்கள், ஸ்ரீலங்கா இராணுவம் அடித்த குண்டுவீச்சுக்களால்... பாதிப்படைந்து விட்டன. பல...அழிந்து விட்டன.

இப்போ... குட்டைப் பனை, என்று... வந்த ஒரு தலைப்பையும் இரு வாரங்களுக்கு முன் ஒரு உறவு, இணைத்திருந்தார்.

அதனை வாசிக்க நேரமில்லாமல், பின்பு வாசிப்போம் என்று நினைத்து விட்ட பின். தலைப்பு எங்கே... இருக்குது என்று தெரியவில்லை.

யாரும் தேடி... எடுத்து, இணைத்தால்... கோடி புண்ணியம்.

இது சரியா என்று பாருங்கோ, தமிழ் சிறி!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100856&hl=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்
Picture+223.jpg
  • கருத்துக்கள உறவுகள்

3835714139.jpg

ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் பதுங்கு குழி

Posted 12 April 2012 - 10:45 AM

palmera-1.jpgசூரிய வெளிச்சம் நிலத்தில் விளமுடியாத அளவுக்கு அடர்த்தியாக இருந்த யாழ் மற்றும் வன்னிப் பனங்காடுகள் இன்று வெறுமையாகி விட்டன. போரின் கொடுமையால் அழிந்த பனை, தென்னையை விட இராணுவத்தினரின் திட்டமிட்ட அழிப்புத் தான் மிகக் கொடியது.

பனையும் தென்னையும் போரின் அவலங்களைச் சுமக்கின்றன. தமிழீழத்தில் அழிக்கப்பட்ட பனைகள் எண்ணிக்கை 5,500,000 என்று மதிப்பிடப்படுகிறது. பனை தென்னை தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள்.

யாழ்ப்பாணக் கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்த றொபேட் ஹோமஸ் என்பவர் எழுதிய ஆய்வு நூலில் பனையும் தென்னையும் தமிழர்களின் தந்தையும் தாயும் போன்றவை என்று எழுதியுள்ளார்.

இவை ஈழமக்களுக்கு உணவு முதற்கொண்டு வயல் நிலத்திற்கு பசளையும், வீடுகட்ட மரமும் கூரை மேய்ச்சலுக்கு ஓலையும் தருகின்றன என்கிறார் பேராசிரியர் ஹோம்ஸ் (துயககயெ 1980 டீல சுழடிநசவ று ர்ழடஅநள)

ஆட்டிலறிக் குண்டு வீச்சு, விமானக் குண்டு வீச்சால் அழிக்கப்பட்ட பனை, தென்னைக்கு நிகரான எண்ணிக்கையில் இராணுவத்தினரின் பதுங்கு குழி, பாதுகாப்பு அரண்கள், முட்கம்பி முகாம்கள் அமைப்பதற்குத் தறிக்கப்ட்ட பனை தென்னைகள் இடம்பெறுகின்றன.

இந்தியாவின் அமைதிப் படை இராணுவம் வெட்டி வீழ்த்திய பனைகளின் எண்ணிக்கை ஏராளம். அவர்கள் மர அழிப்பை ஒரு இராணுவ நடவடிக்கையாக மேற்கொண்டனர். இதைச் சிங்கள இராணுவமும் தொடர்ச்சியாகச் செய்கிறது.

மன்னார் மாவட்டத்திலுள்ள பல்லாயிரம் நெடிய பனைகள் தறிக்கப்பட்டு இராணுவத்தினரால் தென் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதைத் தடுப்பதற்கு மன்னார் ஆயர் எடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளது.

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபை தமிழீழத்தில் சிங்கள இராணுவம் நடத்துகிற பனை, தென்னை அழிப்பை நிறுத்த முடியாமல் இன்று வரை திண்டாடுகிறது.

அதே பனை அபிவிருத்திச் சபை மாற்று நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. 15 அடி உயரத்தில் 8 வருடத்தில் காய்க்கும் குட்டைப் பனை ரகத்தை அது பரீட்ச்சார்த்தமாக யாழ் குடா நாட்டில் அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது.

தமிழ் நாட்டின் காயல்குடி, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் குட்டைப் பனைகள் செழிப்பாக வளர்ந்து பயன்தருகின்றன. அங்கிருந்து வரும் தகவலின்படி குட்டைப் பனைகள் 8-9 வருடத்தில் காய்க்குமாம்.

ஓவ்வொரு கட்டைப் பனைக் குலையிலும் 70-80 பனங்காய்கள் இருக்குமென்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிறிய எண்ணிக்கையில் இந்த ரகம் இலங்கை புத்தளம் மாவட்டக் கற்பிட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

15891143.jpg

www.Tamilkathir.com

  • கருத்துக்கள உறவுகள்

இது சரியா என்று பாருங்கோ, தமிழ் சிறி!

http://www.yarl.com/...&hl=கட்டைப் பனை

ஓம்... நன்றி புங்கையூரான். யாழ் அன்பு இணைத்திருந்த இந்தத் தலைப்புத்தான். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.