Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட சிவன்கோவிலின் சிவலிங்கம் சாவகச்சேரியில் மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட சிவன்கோவிலின் சிவலிங்கம் சாவகச்சேரியில் மீட்பு!

யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற கட்டிடம் இருந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ஒல்லாந்தர் பிரித்தானியர் காலத்தில் இப்பகுதியில் இருந்த சிவன் ஆலயம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கலாம் என யாழ். பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர் காலம் தொட்டு சாவகச்சேரியில் இயங்கி வந்த உயர்நீதிமன்றக் கட்டிடங்கள் தற்போது அங்கிருந்து முற்றாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் மீண்டும் புதிய நீதிமன்றம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கான அத்திவாரம் வெட்டும் பணி நடந்துவரும் இடங்களில் வரலாற்றுப் பெறுமதி மிக்க தொல்பொருட் சின்னங்கள் காணப்படுவதாக சோலையம்மன் கோவில் பிரதமகுரு வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜாவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதன் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பேராசிரியர் புஷ்பரட்ணம், தொல்லியற்துறை ஆய்வு உத்தியோகத்தர் மதியழகன் ஆகியோர் நீதிமன்றக் கட்டிடங்கள் இருந்த இடத்தில் மிகப்பழைய ஆலயம் ஒன்று இருந்து அழிந்ததற்கான சான்றுகளை அடையாளப்படுத்தி உள்ளனர்.

தற்போதைய நீதிமன்ற வளவில் இருந்த பிற்காலக் கட்டிடங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டிருந்தும் அந்த பிரதேசம் மட்டுமே சற்று மேடாகக் காணப்படுகிறது.

இதற்கு போத்துக்கேயர் அல்லது ஒல்லாந்தர் ஆட்சியில் அழிக்கப்பட்ட அல்லது அழிவடைந்து போன ஆலயத்தின் அழிபாடுகள் அவ்விடத்தில் புதையுண்டிருப்பதே காரணமாக இருக்கவேண்டும் என பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார்.

தற்போது இவ்விடத்தில் சதுர வடிவில் வெட்டப்பட்டுவரும் ஒவ்வொரு ஆழமான குழிக்குள்ளும் செறிந்த அளவில் செங்கட்டிகளும், பொழிந்த முருகக்கற்களும் வெளி வந்துள்ளதைக் காணமுடிகிறது.

அவை ஆலயம் ஒன்றின் கட்டிடப் பாகங்கள் என்பதை அவற்றின் வடிவமைப்புக்கள் எமக்கு தெளிவாக உணர்த்துகின்றன என அவர் தெரிவித்தார்.

1990க்கு முன்னர் பொதுமக்களால் இந் நீதிமன்ற வளவிலும், அருகில் உள்ள பேருந்து தரிப்பு நிலைப்பகுதியிலும் கிணறு மற்றும் மலசலகூடம் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்ட போது அம்மன், மனோன்மணி அம்மன், ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், சூரியன் முதலான கருங்கற் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றுள் மிகுந்த கலை வேலைப்பாடும், அழகும் பொருந்திய அம்மன் விக்கிரகம் ஐந்தரை அடி உயரம் கொண்டது.

இதுவே இலங்கையில் உள்ள மிக உயர்ந்த அம்மன் விக்கிரகம் என மக்கள் நம்புகின்றனர். இச் சிலைகளைக் குழியில் இருந்து வெளியே எடுத்த போது அவை சில பாதிப்புகளுக்கு உள்ளானாலும் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்த பொதுமக்கள் அச்சிலைகளை பழைய வாரிவனேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்விக்கிரகங்களை பொதுமக்கள் கண்டெடுத்தபோது இவ்விடத்தில் சிவன் ஆலயம் ஒன்று இருந்திருக்கலாம் என நம்பினர். அது முற்றிலும் உண்மை என்பதே தற்போது நீதிமன்ற வளவில் கிடைத்துவரும் ஆலய அழிபாடுகள் உறுதிசெய்கின்றன.

எதிர்காலத்தில் இங்கு கிடைக்கவுள்ள சான்றுகள் மேலும் பல உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=25277

முதல்ல அந்த இடத்துக்கு செக்குரிட்டிய டைட் பன்னுங்கோ இல்லன்டா புத்தரும் அதுக்க இருந்து வருவார்.

கவனிக்கப்படவேண்டிய விடையம் நுணா . பல்கலைகழக வரலாற்றுத்துறை இன்னும் முனைப்புக் காட்டினால் பல உண்மைகள் வெளிவரும் . மிக்க நன்றிகள் இணைப்பிற்க்கு .

மகாவம்சத்தின்ர போட்டோ கொப்பி ஒண்டும் அதோடை கிடந்ததாம்...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தென்பகுதிகளில் அகழ்வாராச்சி செய்தால்

தமிழர்களின் தொன்மை வெட்டவெளிச்சமாகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புதிய செய்தியா? சென்ற வருடம் இதே செய்தியை கேள்விப்பட்டதாக நினைவு. போர்த்துக்கேயரின் காலத்திலேயே பெரும்பாலான சைவாலயங்கள் அழிக்கப்பட்டன.

சில தசாப்த தமிழனின் சரித்திரத்தைத் தோண்டினால் கண்டி, அனுராதபுரம், பொல்லநறுவை தாண்டி விரியும்.

ஒற்றுமையின்மையால், கண்டவன் நிண்டவன் எல்லாம் வீட்டிற்குள் வந்து குடியேறிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இருவர் நமக்கு இருவர்..

நாம் இருவர் நமக்கு ஒருவர்..

இப்போ..

நாம் இருவர் நமக்கென் ஒருவர்..

டிஸ்கி:

பேசிக்கா ஒண்னு புரியணும் .. பெரும்பான்மை என்பது பன்னி குட்டி போட்டா போல கிரவுடு அது இவுங்கிட்ட் இருக்கு... அவுங்க சொல்வதுதான் சட்டம்.

மேல உள்ள சுகாதர துறை போஸ்டர் போல போனால் கொள்ளி போட கூட பிள்ளியல் இருக்காது..இவனுங்க ஆயிரம் சொல்லுவாங்க.. புத்தி நமக்கு இருக்கணும்.

பெற்றோர் தமது பிள்ளைக்கான் ஜீவன ஆதயத்தை காட்ட வேண்டும் -- சிவ புரணாம் பக்கம் 289

இவங்கள் ஆயிரம் சொல்வார்கள் ,, லாஜிக்கு உலகம் மதிப்பீடு செய்வது பெரும்பான்மை யார் ?எனபது கொண்டே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திசமகாராமையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்ட ஓடு கிடைக்கப்பட்டது. ஆனால் அது இப்போது எங்கேயோ காணாமல் போய் விட்டதாக சொல்கிறார்கள்.

இந்தியாவின் மிக திறமையான தொல்பொருள் ஆராச்சியாளரான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் அக்கண்டு பிடிப்பை பற்றி பின் வருமாரு கூறுகிரார்;

Tamils have been living in the northern and eastern parts of the island from time immemorial. Several small fragments of pottery with a few Tamil-Brahmi letters scratched on them have been found from the Jaffna region. However, a much more sensational discovery is a pottery inscription from an excavation conducted at Tissamaharama on the southeastern coast of Sri Lanka. A fragment of a high-quality black and red-ware flat dish inscribed in Tamil in the Tamil-Brahmi script was found in the earliest layer. It was provisionally dated to around 200 BCE by German scholars who undertook the excavation. The inscription reads tiraLi muRi, which means “written agreement of the assembly” . The inscription bears testimony to the presence in southern Sri Lanka of a local Tamil mercantile community organised in a guild to conduct inland and maritime trade as early as at the close of the 3 {+r} {+d} century BCE.

ஐராவதம் மகாதேவன் சர்வதேசத்தால் மதிக்கப்படும் ஒரு தொல்பொருள் ஆய்வாளர். பல இடங்களுக்கு நேரடியாக சென்று ஜெர்மானிய, பிரித்தானிய, அமெரிக்க மற்றும் பல ஐரோப்பிய ஆய்வாளர்களுடன் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டவர்.

அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida“,

ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language

50,000 BC: Kumari Kandam civilisation

20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation

16,000 BC: Lemuria submerged

6087 BC: Second Tamil Sangam established by a Pandya king

3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.

1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king

7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar)

பின்வரும் இணைப்புக்களையும் பாருங்கள்! ஈழத்தில் தமிழினத்தின் தொன்மை விளங்கும்.

http://tamilvaralaru.wordpress.com/2011/09/10/kumarikandam/

http://tamilwritersguild.com/edited_Ilamurid.pdf

http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.