Jump to content

வணக்கம் யாழ் நண்பர்களே


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

http://leo-malar.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

""கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று""..

வணக்கம் வாருங்கள் லியோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கடவுள் நினைத்ததுண்டா?

நன்றிகள் பல வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் கவிதை படித்தேன்...அழகாக இருக்கிறது...யாழ்கள உறவுகளுக்காக இங்கே பதிவிடுகிறேன் நண்பரே...தொடர்ந்து யாழில் எழுதுங்கள்..வாழ்த்துக்கள்...

என்னவளுக்கு !

என்னவளுக்கு !

இன்று

தொழிலாளர் /உழைப்பாளர் தினம்

இன்றுதான்

உன் பிறந்த தினமும்

"எட்டு மணி நேர வேலை "என்று

தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது

என்னவளே !

எந்த புரட்சியும் இல்லாமல்

இன்னும்

இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய்

ஒற்றையாய்

ஒரு தசாப்தம்

குடும்ப சுமை உன்மீது

இரட்டையாய் ஒன்றானோம்

புலம் பெயர்ந்து

விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு

எனக்கு எல்லாமே போனஸ் தான்

நீயும் எனக்காய் மாறிப்போனாய்

குழந்தைகளுக்காய்

புதிய மண்ணில்

மீண்டுமொரு போராடியவாழ்வு

அத்திவாரத்திலிருந்து

அலைகளில் அசைந்தவாழ்வு

சுனாமியாய் அடித்து ஓய்ந்தது

உயிரால் வரைந்த ஓவியம்

உலகால் கலைந்த சீவியம்

மனிதர்களுக்கு கடின வாழ்வு

பச்சோந்திகளுக்கு இலகு வாழ்வு

மரம் வேரோடு தீப்பற்ற

குருவிகளின் கூடு தொலைந்தது

வேரற்ற மண்ணில்

வேதனையோடு மீள கட்டும் கூடு

குருவிகளுக்கானதா?

சோகங்களை

இயன்றவரை மறைத்து

அமைதியாய் அசைவோம்

காயம் ஏற்று மயிரிழையில்

உயிர் தப்பியவள் நீ

மயிரிழையே

எம் வாழ்வை உயிர்ப்பிக்கிறது

தொடர்ந்தும்

அன்பால் எமை கரை

இயல்பாய் கவிதை வரை

உன்னை வாழ்த்த

நானொன்றும் வேறல்ல

நானும் நீதான்

லியோ

http://leo-malar.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மிக்க நன்றிகள் நண்பா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய நல் வரவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் லியோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்

மிக்க நன்றி அபிசேகா

வணக்கம் லியோ, வாங்க

மிக்க நன்றி

இனிய நல் வரவு

மிக்க நன்றி

என்னை வரவேற்கும் அனைவருக்கும்

என் பாசத்துடனான நன்றிகள்

Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மிக்க நன்றி ஆரமுதன்

மிக்க நன்றி ஆராவமுதன் ,

தங்கள் பெயரை ஆரமுதன் என்று நினைத்தேன்

ஏனெனில் எனக்கு ஆரமுதன் என்ற நண்பன் இருந்தான்

அன்புடன்

லியோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என் மண்ணுக்கு ,

என் மக்களுக்கு ,

என்று விடுதலையோ

அன்று

என் ஆத்மா சிறகடிக்கும்

அதுவரை சிறையிருக்கும்

-லியோ-

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் லியோ. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மிக்க நன்றி தமிழ் சிறி

அன்புடன் லியோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் , மிக்க நன்றி

அன்புடன் லியோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இன்று யாழ்ப்பாணத்தில் குறைந்தது இருவருக்கு

ஒருஅரச பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வன்னியில் குறைந்தது ஒருவருக்கு ஒரு அரச படை

நிறுத்தப்பட்டுள்ளது.வன்னியில் பிறக்கும் ஒவ்வொரு

பிள்ளையை நோக்கியும் குறைந்தது ஒரு துப்பாக்கி

நீட்டப்படுகிறது.கிழக்கின் நிலைமையிலும் எந்த

மாற்றங்களும் இல்லை.வடக்கின் ஆளுநர் செம்மனிப்படுகொலை

உள்ளீடாய் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு

இராணுவ அதிகாரி,கிழக்கில் கொலைகளில்

கை கழுவும் கடற்படை அதிகாரி.இங்கு நடப்பது இராணுவ ஆட்சி அற்று வேறு என்ன?

இவை போதாதென்று எலும்புத்துண்டுக்காய் அலையும்

அடிவருடிகளும் அவர் பரிவாரங்களும் வேறு.

எங்கள் போராட்டத்தை இந்தியாவுடன் சர்வதேசமும்

சேர்ந்து அழித்தது. ஐந்தில் ஒரு மக்கள் கொலை

செய்யப்பட்டுவிட்டார்கள்.ஐந்தில் இரு மக்கள்

புலம்பெயரப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.

எமது மண்ணில் கொலைகளும்,தற்கொலைகளும்

காணாமல்போதல்களும் ,வெள்ளை வான் கடத்தல்களும்

கலாச்சார சீரழிவும் மலிந்து கிடக்கிறது.இராணுவ

ஆட்சியை ஜனநாயக ஆட்சியாய் சர்வதேசம்

ஏற்பதுபோல் காட்டுவது வெந்த புண்ணில்

வேல் பாய்ச்சுகிறது.

அமைச்சர்கள் அங்கீகாரம் பெற்ற

கொலையாளிகளாய்.எந்த நேரமும் எதுவும்

நடக்கலாம்.பௌத்த பிக்குகளின் நடத்தைகள்

எந்தவிதத்திலும் புத்தபகவானுடன் தொடர்புபடவில்லை.

இலங்கை எனும் நாட்டில் புத்தபகவானின் கொள்கைகளை

காப்பாற்ற சர்வதேசம் தலையிடவேண்டும்.சிறுபான்மையினருக்கு

மத சுதந்திரம் உள்ளீடாய் அனைத்து சுதந்திரமும் சர்வதேச

துணையுடன் காவுகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைத்தமிழர் ஜனநாய வழியில் தமது

தனித்து வாழும் உரிமையை உலகுக்குஎல்லா வழிகளிலும்

வெளிச்சமாய் ஒப்புவித்துள்ளனர்.ஐ.நா வின்

மனிதாபிமானம் இதுவரை எமை தொடவில்லை.

எமது வாழும் உரிமையை மீட்டுத்தரவில்லை.

எமது இழப்பு போதாதென்று இன்னும்ஐ.நா பார்த்திருக்கிறதா?

ஒரு இனத்தின் அழிவு உலகக்கண்ணுக்கு முன்னால் நடக்கிறதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விடிகின்ற வேளையொன்றின்

பூவாக வேண்டும்

மடிகின்ற போதுதனில்

ஈழம் மலர்ந்திருக்க வேண்டும்

-லியோ-

Posted

வணக்கம் வாங்கோ, உங்கள் வரவு நல்வரவாகட்டும்! :)

உங்கள் எழுத்துக்களை வாசிக்க கஸ்டமாயிருக்கு :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மிக்க நன்றி அலைமகள்

லியோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சகோதரனே !

இன்று

உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

ஒன்றாய் வளர்ந்தோம்

ஓரணியில் விளையாடினோம்

கால அழைப்பை ஏற்று

இன விடுதலைக்காய் உழைத்தோம்

உனக்கும் எனக்கும்

ஏழு வயது இடைவெளி -ஆனால்

ஒரே நாளில் பிறந்தோம்

எங்கு நின்றாலும்

நம் பிறந்த நாளில்

உன்னை நினைப்பேன்

நீயும் அப்படித்தான்

ஒரு குழந்தையின் மனநிலை கருதி

நீண்ட நாள் காத்திருந்த இலக்கு

கையிற்கு எட்டியபோதும்

கைவிட்டு வந்தவன் நீ

மீண்டும் சென்று வென்றுவந்த

செயலில் வாழ்ந்த வீரன் நீ

உனது தாக்குதல்கள்

எங்கும் பேசப்பட

நீயோ

ஏதும் அறியாதவனாய் நகர்வாய்

வீரனே

உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

நான் உன் வீடு வந்து திரும்பும் போது

நீதான் என்னை

சைக்கிளில் ஏற்றிவந்து

பஸ்ஸில் நான் ஏறும்வரை

காவல் நிற்பாய்

எனது உருவம் தெரியும்வரை

கை அசைப்பாய்

முள்ளிவாய்க்காலில்

கூப்பிடு தூரத்தில் நான் நிற்க

ஏன் எனக்கு கை அசைக்காமல் போனாய்?

உன் தாய்

நீ வருவாய் என்று

காத்திருக்கிறாளேடா!

என்னடா சொல்ல ?

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.