Jump to content

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் (Photo in)


Recommended Posts

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கொண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முற்று முழுதாக படையினரது பிரசன்னம் மிக்கதும் கூடிய மக்கள் நடமாட்டமிக்கதுமான கலட்டி சந்தியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

படைத்தரப்பே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று முள்ளிவாய்க்கால் பேரவல நிகழ்வுகளில் மாணவர்கள் ஈடுபடலாமென்ற அச்சத்தில் இத்தாக்குதலை நடத்தியிருக்கலானெ கூறுகின்றனர்.

ஏற்கனவே முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலசிங்கமும் இதே பாணியினில் தாக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

jaffna_18512_3.jpgjaffna_18512_2.jpg

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் இல்லை என்பதற்கும் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை ஆட்சியே நிலவுகிறது என்பதற்கும் மற்றுமொரு சான்று,

தமக்கு இருக்கும் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாம் சார்ந்த கொள்கையில் மாணவர்கள் உறுதியாய் இருப்பது மெச்ச வைக்கிறது.

இந்த நிலையும் ஒரு நாள் மாறும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த நாள் வெகுவிரைவில் வரவேண்டும் என்பதே வேணவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18_05_2012_Jaffna_01.jpg

யாழ்ப்பாணத்தில் சிங்கக் கொடிய தூக்கிப் பிடிச்ச சம்பந்தனும் ஐக்கிய இலங்கை.. சுமந்திரனும்.. இனப் பேரழிவில் இறந்து போன மக்களுக்கு ஒரு மெழுகுவர்த்தி கூட கொழுத்தேல்ல..! இந்த நிலையில்.. இந்த மாணவர்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொண்டு இப்படியான அரச பயங்கரவாதத்தை தடுக்க குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.

வேணும் என்றால்.. ஐக்கிய இலங்கைக்குள்.. சமாதான சகவாழ்வு என்று ஒரு கருத்தரங்கு வைச்சால்.. சுமந்திரன் ஓடோடி வந்து சிங்களம் உருக உருகப் பேசுவார். இப்படியான எதிரிக்கு அடிவருடும்.. அரசியல்.. சூழ்நிலைகளை எப்படி நாங்க மாற்றப் போறம்.. சிங்கள அரச பயங்கரவாதத்தை எப்படி சரிக்கட்டப் போறம். ஈபிடிபி.. புளொட்...ஈபி போன்ற துரோகிகளை எப்படி சமாளிக்கப் போறம்... இதுகள் மாறாமல்.. தமிழீழ மண்ணில் குருதி ஓடுவது நிற்கப் போறதில்ல..! சிந்திக்க வேண்டியதும்..செயற்பட வேண்டியதும் மக்களே..! :icon_idea::(

படம் தமிழ்நெட்

University student leader attacked in Jaffna

[TamilNet, Friday, 18 May 2012, 09:25 GMT]

A four-member squad on Friday morning attacked the secretary of the Jaffna University Student Union (JUSU) using iron-rods near a Sri Lanka Army camp at Kaladdi in Jaffna with causing serious injuries to the 25-year-old student leader, who was on his way to the University in a bicycle to observe Mu'l'livaaykkaal Remembrance. Despite the threats by the Sri Lanka military intelligence, the students of Jaffna University went ahead with the memorial event stating that it was their democratic right to mark the remembrance day and protested against the military operated administration of civil affairs in the peninsula. Tension prevails at the University of Jaffna where students have gathered in thousands.

http://www.tamilnet....=13&artid=35190

Link to comment
Share on other sites

ஆயிரம் பிரச்சார கூட்டங்கள் செய்ய முடியாத உதவியை இலங்கை அரசாங்கம் செய்து வருகின்றது. மக்களை என்றும் விழிப்புடனே வைத்திருந்து புலிகள் பற்றிய உணர்வுகளை ஊட்டி வருவதன் மூலம் இராணுவத்தினர் செய்யும் பேருதவி மெச்சத்தக்கது

Link to comment
Share on other sites

மூன்றாண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நேரத்தில் சிஙகள இராணுவத்தின் வக்கிரங்கள், வறுமை, நிர்க்கதியான நிலமை, யாருமற்ற நிலை போன்றவற்றால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்ற சித்திரவதைகளை அனுபவிக்கின்ற விரக்தியின் விளிம்பில் நிற்கின்ற முன்னாள் போராளிகள் பொதுமக்கள் ஆகியோருக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

முள்ளிவாய்க்கால் காலகட்டத்தில் நாம் எதைச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு சர்வதேசம் இருந்தது. எமது மன்றாட்டங்களை வேண்டுமென்றே ஊடகங்கள் மறைத்தன. ஆனால் இன்றைய நிலை வேறு. சிங்கள அரசாங்கத்திற்குக் கடிவாளம் போடுவதற்காகவேனும் எம் போராட்டங்களை முன்னிலைப்படுத்த பலரும் தயாராயுள்ளனர்.

ஆனால் அதற்கான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க யார் தயாராயுள்ளனர். முள்ளிவாய்க்கால் கால் கட்டத்தில் நடந்ததைப் போன்ற ஒரு பாரிய கவனயீர்ப்பைத் திட்டமிட்டு நடத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கு விடிவையேற்படுத்துவதற்கான வாய்ப்பு எம் கைகளில் உள்ளது. அதற்கு எத்தனை புலத் தமிழர்கள் தயார்?

காலனின் வாயிலில் நின்று கொண்டு தம் கடமையைச் செய்யும் பல்கலை மாணவர்களைப் பார்த்த பிறகாவது இந்த நிலை புலத்தில் வருமா? இதுவே என் ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழமே இப்படியான வன்முறைகளுக்கு நிரந்தரமான தீர்வு என்பதை தொடர்ந்து மக்களுக்கு உணர்த்துவதற்கு சிங்கள அரசுக்கும் அடி ஆட்களுக்கும் நன்றி சொல்லவேண்டும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் பூரண குணமடையா வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

மூன்றாண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நேரத்தில் சிஙகள இராணுவத்தின் வக்கிரங்கள், வறுமை, நிர்க்கதியான நிலமை, யாருமற்ற நிலை போன்றவற்றால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்ற சித்திரவதைகளை அனுபவிக்கின்ற விரக்தியின் விளிம்பில் நிற்கின்ற முன்னாள் போராளிகள் பொதுமக்கள் ஆகியோருக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

மகா யாகம் செய்வோம் !!

Link to comment
Share on other sites

இந்த அட்டூழியத்தை அறிக்கைகளை விட்டு அரசியல் நடாத்தும் பச்சோந்திகள் சம்பந்தனும், சுமந்திரனும் கண்டிக்கவில்லை.

உத்தியோக பூர்வ பேச்சாளர் பிரேமச்சந்திரனும் கண்டிக்கவில்லை! மாவையும் கண்டிக்கவில்லை!

சிறுபிள்ளைத்தனமாக உளறித்திரியும் சரவணபவானும் க்கவில்லை!

யாழ் மாணவர்களின் துணிச்சலுக்கு தலைவணக்கம்!

சிங்கள அரச பயங்கரவாதிகளும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து நடாத்திய மிலேச்சத் தனமான தாக்குதலில் காயமடைந்த தர்சானந் விரைவில் பூரண குணமடையட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1)  WI  எதிர்  SA   நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி AFG நிலாமதி NZ குமாரசாமி SA தியா NZ தமிழ் சிறி NZ புலவர் SA P.S.பிரபா WI நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் SA கிருபன் SA ரசோதரன் NZ அஹஸ்தியன் WI கந்தப்பு SA வாத்தியார் WI எப்போதும் தமிழன் SA நந்தன் SA நீர்வேலியான் WI கல்யாணி NZ கோஷான் சே SA   இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?         63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1)    AUS  எதிர்  IND   11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.  இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA ENG வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS   இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
    • கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம்  ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.