Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைவதா? தமிழ்க் கூட்டமைப்பு நாளை அறிவிக்கும்!

Featured Replies

இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் அறிவித்திருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞயிற்றுக்கிழமை காலை எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவித்தார்.

அரசாங்கம் தெரிவுக்குழு நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அளித்திருக்கும் விளக்கம் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.அவை ஓரளவு நம்பிக்கையூட்டக்கூடியதாக அமைந்திருப்பதை காணமுடிந்தது.எனினும் மேலும் சில விடயங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு நாளை செவ்வாய்க்கிழமை கூடும் பாராளுமன்றத்தில் தமிழ்க் கூட்டமைப்பினால் அறிவிக்கப்படும். இந்தத் தெரிவுக்குழுவுக்கு வருவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று யோசனைகளை அரசுக்குச் சமர்ப்பித்திருந்தது. அந்த யோசனைகள் தொடர்பில் அரசு நம்பிக்கை தரக்கூடிய விதத்தில் பதிலளித்துள்ளது.

அரசாங்கம் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வந்திருப்பதான இந்த விடயத்தில்ஆரோக்கியமான போக்கையே காணக்கூடியதாக உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு சாதகமாகக் காணப்படும் பட்சத்தில் தாமதமின்றி பாராளுமன்றத் தெரிவுக்குழுவைக் கூட்ட முடியுமெனவும் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ஆர்.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றனர். ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் இடம்பெற்றனர்.

http://www.pooraayam.com/mukiaya/4252-2012-05-21-02-46-28.html

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை கவிழ்க்க ஐ.தே.க வடிவில் மற்றுமொரு சதி சிங்கள கூட்டம்.இதே கூட்டம் தமிழர்கள் மீது குண்டுகளை கொட்டியதை சம்பந்தர் ,சுமந்திரன் கூட்டம் இலகுவில் மறந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதிலிருந்து திஸ்ஸஅத்தநாயக்கா ததேகூட்டமைப்பின் பேச்சாளர்?அல்லது ஒன்று சேர்ந்து கொடி ஆட்டிய கையோடு ததேகூ ஐதேவுடன் இணைந்து விட்டதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://groundviews.org/2012/05/21/reloading-gen-sf-for-a-post-paid-sinhala-package/

"This is where Fonseka comes in politically handy again, on political conditions defined by Rajapaksa. He would not be the war hero he was made into by the JVP during the 2010 elections, saluting in full military regalia, on most city walls. He would not be leaving the prison as a hero of the anti Rajapaksas, with his usually catchy media quips. He would instead leave the private hospital on a presidential pardon, when released on a family appeal supposedly made by one of the daughters, written the way the President wants. In any form, its a presidential pardon in totality that Tiran Alles had been negotiating for, with Anoma Fonseka in the know.

Its such a Fonseka who would be coming out, thanks to President Rajapaksa. Thereafter with all the UNP dissidents brought around Fonseka, for a ride on a Sinhala campaign, Rajapaksa will be trying out a new DNA led by Fonseka, Sajith Premadasa and Karu Jayasuriya to deprive Wickramasinghe from gaining the disgruntled and disgusted Southern votes going away from him."

http://groundviews.org/2012/05/21/reloading-gen-sf-for-a-post-paid-sinhala-package/

இதை நாமும் கேள்விப்பட்டோம்!

இதன் உண்மை, பொய்களை உறுதிப்படுத்த சிலகாலம் செல்லலாம்.

ஆனால் கூட்டமைப்பு மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது.

கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க பின்வரும் நிபந்தனைகளை சிங்கள அரசும், சர்வதேசமும் கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும். வேறு வழியே இல்லை என்பதை தெரிவித்து விடவேண்டும்.

(1) ஏற்கனவே சட்டமாக்கப்பட்டுள்ள 13வது திருத்தங்களை உடனடியாக முழுமையாக (காணி, போலிஸ் அதிகாரங்கள் உட்பட) உடன் அமுல்படுத்த வேண்டும்.

(2) சிங்கள பயங்கரவாத அரசு இதுவரை பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட உடன்பாட்டை உடன் அமுல்படுத்த வேண்டும். அதற்கு தேவையான சட்ட வரைபுகளை தமிழர் அறுதிப் பெரும்பான்மை (2/3) இன்றி பாராளுமன்றத்தாலும் மாற்ற முடியாதபடி சட்டமியற்றவேண்டும்.

(3) சிங்கள பயங்கரவாத அரசு 13வது திருத்தங்களுக்கு மேற்பட்ட, சிங்கள பாராளுமன்றத்தால், சிங்கள நிர்வாகங்களால் மாற்ற முடியாத அதிகாரங்களுடன் கூடிய மாதிரி தீர்வுத்திட்ட வரைபை முதலில் முன்வைக்க வேண்டும்.

(அமெரிக்காவும் சிங்கள அரசின் பெரும் பங்கை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. ஹிந்திய போலி ஜனநாயக அரசுக்கு தமிழர் தீர்வு மீது உண்மையான அக்கறையில்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை).

(4) ஐக்கிய தேசிய கட்சியும் அதனது மாதிரி அதிகார பரவல் தீர்வுத்திட்ட வரைபை முதலில் முன்வைக்க வேண்டும்.

(5) தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் / ஆலோசகர்கள் / அவதானிகள் முன்னிலையில் குறித்த கால வரையறைக்குள் - 3 மாதங்களுக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க பங்குபற்றும் ஒவ்வொரு தரப்பும் உறுதி மொழி வழங்க வேண்டும். தமிழின படுகொலைகளுக்கு நேரடியாக உதவியவர்கள் (உதாரணமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரான், பௌத்த நாடுகள் போன்றவை) மத்தியஸ்தம் வகிக்கத் தகுதியற்றவர்கள்.

(6) குறித்த காலத்துக்குள் சிங்களத் தரப்புகள் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு, நடைமுறைப் படுத்தாவிட்டால், உடனடியாக அமெரிக்கா - ஐரோப்பா தலைமையிலான நாடுகள் தமிழருக்கு உரிய தீர்வினை எந்தவொரு வகையிலும் பெற்றுக் கொடுப்பதாக எழுத்து மூலமான உறுதி மொழிகள் வழங்க வேண்டும்.

(7) அத்துடன் சிங்கள அரசை பயங்கரவாத அரசாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப் படுத்த வேண்டும்.

(8) பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச நியமங்களுக்கமைய நட்ட ஈடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

(9) தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்திருக்கும் முஸ்லிம்களும், சிங்களவர்களும் உடன் அப்புறப்படுத்த வேண்டும்.

இவை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், உறுதி மொழிகளைப் பெற்ற பின்னர் - கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் பங்கு கொள்ள சம்மதிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் பொன்சேகாவிடம் ஆலோசனை கேட்கலாம் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.