Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தர்சானந்தை தாக்கியது யார்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக ரமேஷ் கண்ணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tharsananth_CI.jpg

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்மீது மர்மநபர்கள் என்ற போர்வையில் இராணுவத்தினர் கூரிய இரும்பு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். பலத்த காயங்களுக்கும் இரத்தம் சிந்தலுக்கும் அவர் முகம் கொடுத்திருக்கிறார். யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகவே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வரலாறு முழுவதும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தமிழ்ச் சமூகம் சார்பில் போராட்டங்களை நடத்துபவர்கள். அவ்வாறான எழுச்சியையும் குரலையும் பார்க்கப் பொறுக்காத நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தபடப்ட்டிருக்கிறது.

அன்று மே18. தமிழ் மக்களின் நெஞ்சில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுகள் கிளர்ந்தெழும் நாள். முள்ளிவர்யக்கால் படுகொலை நினைவு நாட்களை வலி தந்த வாரம் என்று ஆண்டு தொறும் நினைவுபடுத்தி வருகிறார்கள் யாழ் பல்கலைகழகழக மாணவர்கள். இந்த நிகழ்வுக்காகச் சென்ற ஆயிரமாயிரம் மாணவர்களில் ஒருவர்தான் தர்சானந்த். அவர் அந்தப் பல்கலைக்ககழத்தின் மாணவர் ஒன்றியச் செயலாளர். தமிழ் மக்களைக் கொலை செய்து, தமிழர் போராட்டத்தை அழித்து இனப்படுகொலை, போறர்க்குற்றம் என்ற பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் அந்த இனப்படுகொலையால் போர்க்குற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் மரணத்தைக்கூட கொண்டாட முடியவில்லை என்பதுதான் இந்தத்தாக்குதல் தரும் பெரும் செய்தி. நீங்கள் எங்களை வற்புறுத்தி அழைத்துச் சென்று வெற்றி கொண்டாடுவீர்கள். நாங்கள் காயம் தாங்க முடியாது அழக்கூட முடியாதா? இதுதான் இலங்கை அரசின் இன நல்லிணக்கம்.

தாக்குதல் நடந்த கொடும் பொழுதை தர்சானந்த் இப்படி விபரிக்கிறார். 'தாக்குதல் தாரிகள் எனக்கு பின்னால் நாச்சிமார் கோவில் பக்கத்தில்லிருந்து வந்தார்கள். இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிள்கள் புதிய மொடல்கள் அல்ல. ஒன்று சிவப்பு நிறமென ஞாபகம். அதன் இலக்கங்களைப் பார்க்கவில்லை. நான் எதிர்பார்க்கவில்லை. நான் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். வந்தவர்கள் என்னை கீழே தள்ளி விழுத்தி விட்டு தாக்கத் தொடங்கினார்கள். அவர்களை சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒருவன் அரைக்காற்சட்டையும், டீ ஷேர்ட் உம் போட்டு இருந்தான். முகம் ஞாபகம் இல்லை' இப்படி அந்தப் பயங்கரத் தருணத்தை அவர் நினைவுபடுத்தினார்.

யாழ்ப்பாணத்திற்கு இப்பொழுது புதிய கொலைப் பாரம்பரியத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். முன்பு மோட்டார் வண்டிகளில் வந்து துப்பாக்கிகளால் தினந்தோறும் மக்களைக்; கொன்றார்கள். அதற்கு முன்பு கடத்திச் சென்று சித்திரவதை செய்து செம்மணி என்ற இடத்தில் புதைத்து நிறைத்தார்கள். இப்பொழுது இரும்புக்கம்பிகளாலும் கூரிய ஆயுதங்களாலும் தாக்குகிறார்கள். இவ்வாறுதான் ஊடகவியலாளர் குகநாதனும் மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலசிங்கமும் தாக்கப்பட்டார்கள். ஒவ்வொரு தாக்குதல்களும் கொலையை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன என்றே தாக்குதலுக்கு உள்ளானவர்களும் வைத்தியவர்களும் கூறுகின்றனர். மிகவும் மோசமானமுறையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான கொடுந் தாக்குதலை எப்படி நிகழ்த்தினார்கள் என்று குறிப்பிடுகிறார் தர்சானந்த். 'தாங்கள் மறைத்துகொண்டு வந்திருந்த ஒன்றரையடி நீளமான இரும்புக்கம்பியினால் தாக்கினார்கள். அதை பேப்பரில் சுற்றி எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். வீதியில் சில அடிகள் விழுந்ததும் நான் எழுந்து ஓடி சந்தியில் இருந்த தையல் கடைக்குள் ஓடிச்சென்று தையல் இயந்திரத்தினுள் ஒழிந்து கொண்டேன். அதனால் அவர்கள் இயந்திரத்துக்கு மேலால் மூன்று பேர் அடித்தனர். தலை உடைந்து இரத்தம் ஒழுகியது. நான் மேலும் தலை தாக்கப்படாமல் இருக்க கைகளால் தடுத்தேன். அதனால் கைகளில் அடி விழுந்தது. இன்னும் வீக்கம் வற்றவில்லை. கடைக்குள் ஒரு நிமிடத்துக்கு மேல் வைத்து அடித்தனர். பின்னர் சனம் கூடியதும் சென்று விட்டனர். பிறகு நான் வெளியில் வந்து அதே கடையில் ஒரு துணியை வாங்கி தலையில் கட்டிக்கொண்டு, கலைப்பீட மாணவர் தலைவர் உதவியுடன் வைத்திய சாலைக்கு சென்று 24 ஆம் வாட்டில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு எனக்கு தலையில் 07 தையல்கள் போடப்பட்டன. கைக்கு மாவுக்கட்டு (PழுP) போடப்பட்டது.' என்றார் தரச்hனந்த்.

இந்த சம்பவத்திற்கு முன்பாக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலசிங்கம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். மாணவர்கள் இரத்தம் சிந்துவது என்பது தொடர்கதையாகிவிட்டது. முன்னைய காலத்தில் மாணவர்கள்மீது கைவைத்தால் படைத்தரப்போடு முட்டி மோதும் துணைவேந்தர்கள் இருந்தனர். பாலசுந்தரம்பிள்ளை, மோகனதாஸ், சண்முகலிங்கன் முதலியோர் மாணவர்களின் பாதுகாப்பில கடுமையான அக்கறையைச் செலுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக பாலசுந்தரம்பிள்ளை கைது செய்யும் மாணவர்களை உடனே சென்று மீட்டு வருபவர். மோகனதாஸ் இராணுவ அட்டகாசத்தை எதிர்த்து மாணவர்களுடன் ஊர்வலம் சென்றவர். சண்முகலிங்கன் பல்கலைக்கழகத்திற்குள் இராணுவத்தினரை நுழைய வேண்டாம் என்பதற்காக நீதிமன்றம் சென்றிருந்தார். இதனால் மாணவர்கள்மீது கைவைக்க படைத்தரப்பு அஞ்சியது.

அதிலும் அவர்கள் கடுமையாக யுத்தம் நடந்த காலத்தில் பரவலான கொலைகளும் குற்றங்களும் நடந்த காலத்தில் இவ்வாறு துணிச்சலோடு செயற்பட்டார்கள். மாணவர்களை சுகந்திரமாகச் செயற்பட அனுமதித்ததோடு அவர்களின் பாதுகாப்பை எத்தகைய தருணத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

மாணவர்கள் எப்படியிருப்பார்கள்? என்ற புரிதல் இப்பொழுதுள்ள துணைவேந்தருக்கு இல்லாமல் போய்விட்டதாக மாணவர்கள் பலரும் சொல்லுகிறார்கள். வசந்தி அரசரத்தினம் துணைவேந்தராக பதவியேற்ற பின்னர் மாணவர்களை பல்கலைக்ழகத்தில் நுழைந்து காவல்துறையினர் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். மாணவர்களின் அடிப்படை தேவைகளையும் குரல்களையும் முறியடிப்பதற்காக படைத்தரப்பையும் காவல்துறையைiயும் சுகந்திரமாக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசந்தி அரசரத்தினம் அனுமதித்துள்ளார் என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். யாழ் பல்கலைக்கழக வரலாற்றிலேயே நடந்திராத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. துணைவேந்தர் வசந்தி அரசரத்தினத்தின் உருவப்படம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் எறியூட்டப்பட்டது. அத்துடன் அவரது அலுவலகக் கண்ணாடிகளும் மாணவர்களால் அடித்து நொருக்கப்பட்டன. இது மாணவர்கள் மனத்தில் உள்ள விரக்தியின் கோபத்தின் வெளியப்பாடாகும்.

தவபாலலனைத் தாக்கும் பொழுது உனக்குத் தமிழிPழம் வேண்டுமா? என்று தாக்குதல் தாரிகள் கேட்டனர். தன்னைத் தாக்கும் பொழுது எதுவித வார்த்தைகளும் பேசவில்லை என்று தர்சானந்த் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதலை யார் நடத்தியிருப்பார் என்று கேட்ட பொழுது 'சந்தேகமேயில்லை. ராணுவ புலனாய்வுப்பிரிவுதான். ஏனெனில் எனக்கு தனிப்பட்ட எதிரிகள் எவருமில்லை. முள்ளிவாய்க்கால் மூன்றாம்; வருட நினைவு தினத்தை நினைவு கூரும் முயற்சியில் ஈடுபட்டதே இதற்கு காரணம். இதைவிட 04 நாட்களாகவே பல்கலைக்கழக சுற்றாடல் புலனாய்வுப்பிரிவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்தது. கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர், பல்கலைக்கழக் மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருந்தன. இதை விட வணிக முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றிய தலைவருக்கு வெள்ளியன்று திருநெல்வேலி சந்திப் பகுதியில் வைத்து நேரில் மிரட்டல் விடுக்கப்பட்டது' என்று தர்சானந்த் குறிப்பிட்டார்.

இதுதான் பிரச்சினையே. தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு என்ன செய்கிறது? யாழ்ப்பாணத்தில் இராணுவம் என்ன செய்கிறது என்று மாணவர்கள் எப்பொழுதும் சொல்லி விடுகிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளைப் போலவோ, அதிகாரிகளைப்போல உண்மையை மறைக்காமல் பேசுகிறார்கள். மௌனமாக உள்ள மக்களின் வலியைப் பேசுகிறார்கள். வரலாறு முழுவதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் பங்கை வகித்துக் கொண்டிருக்கிறார்கள். பகீரதனைக் கைது செய்த பொழுதோ, புருசோத்மனைக்; கொன்ற பொழுது அது அடங்கவில்லை. அதனால்தான் மாணவர்களை தொடர்ந்து தாக்கும் நடவடிக்கையை இராணுவம் செய்கிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூரும் நிகழ்வை நடத்துவதனாலேயே தன்னை தாக்கியதாக தர்சானந்த் சொல்லுகிறார். மூன்றாம் ஆண்டு யுத்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்று யாழ்ப்பாணப் பாடசாலையின் பிஞ்சு மாணவர்களை அழைத்துச் சென்று இராணுவத்தினருக்கு சி;ன்னம் சூட்டி தாமரைப் பூவைக் கொடுக்க வைக்கப்பட்டது. அதே யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்வதற்காக இரும்புக்கம்பிகளால் மாணவர்களைத் தாக்குகிறார்கள். இராணுவத்திற்கு பூவைக் கொடுக்க பிஞ்சு மாணவர்களை அழைத்துச் செல்லுபவர்களும் இரும்புக்கம்பிகளால் மாணவர்களை தாக்க அனுமதிப்பவர்களும்தான் இந்த மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறார்கள். தர்சானந்தின் இரத்தம் கொட்டியபடி கிடக்கும் அந்தத் தோற்றமும் இராணுவத்தின் முன்பாக பெரும் சோகத்தோடு தாமரைப் பூக்களை ஏந்தி நின்ற சிறுவர்களின் துயரத் தோற்றமும் ஒன்றுதான்.

தர்சானந்த்மீது தாக்குதல் நடத்தப்பட்டு இரத்தம் காயுமுன்பே அறிக்கைகள் வெளிவந்தன. ஆனால் யாரும் இந்தத் தாக்குதலை இராணுவம்தான் நடத்தியது என்று சொல்லாமல் வழமையான பாணியில் கண்டித்திருந்தார்கள். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சொல்லும் வாக்குமூலத்தையாவது இவர்கள் திருப்பிச் செல்லியிருக்க வேண்டும். இந்த தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்ற பாணியில்தான் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மகிந்தஹத்துருசிங்கவின் கருத்து அமைந்துள்ளது. படிக்கும் பொழுது அரசியலில் ஈடுபாடதீர்கள், படித்து முடித்த பி;னர் ஈடுபாடுங்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அப்படி ஈடுபட்டால் இப்படித்தான் தாக்குவோம் என்ற தொனியில் அவர் சொல்லியிருக்கிறார். எவ்வளவு கண்டித்தக்க் விடயம்? ஒரு பல்கலைக்கழக மாணவனை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு எகத்தாளத்துடன் மகிந்த ஹத்துருசிங்க பதில் அளிக்கிறார். இதுதான் இலங்கை அரசின் நல்லிணக்கம்.

இந்த தாக்குதலால் தனக்கு ஏற்பட்ட தாக்கத்தையும் பல்கலைக்கழகத்திற்கு ஏற்படும் தாக்கத்தையும் குறித்து தர்சானந்த் இவ்வாறு குறிப்பிடுகிறார் 'தனிப்பட்ட ரீதியில் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் இத்தாக்குதல் என்னைப் பாதிக்கிறது. இதை விட குடும்பத்தார் பயப்படுகின்றதுடன் மேலை நாட்டுக்கு செல்லுமாறு வற்புறுத்துகிறார்கள். ஆனால் எனக்கு விருப்பமில்லை. இதை விட தேசிய உண்ர்வுள்ள மாணவர்கள் முன்னின்று செயற்பட இது தடுக்கும் காரணியாக அமைகிறது. முன்னுக்கு நின்று செயற்பட்டால் தமக்கும் இந்த கதியே ஏற்படும் என எண்ணி உணர்வுள்ள, செயற்பட விருப்பமுள்ள மாணவர்கள் கூட செயற்படாமல் பின்னடிக்கிறார்கள். இது நீண்ட கால ரீதியில் என்னை தாக்கியவர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும்' என்று அவர் மேலும் விபரித்தார்.

மாணவர்கள் கேள்வி கேட்கக்கூடாது, தங்களின் பிரச்சினைகளைக் குறித்து பேசக்கூடாது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தலமையிலான நிர்வாகம் மாணவர்களை ஒடுக்க நினைப்பதுபோலவே இராணுவத்தினரும் நீங்கள் வாழும் சமூகத்தில் நாங்கள் செய்யும் அநீதிகளைக் குறித்து கேள்வி கேட்காதீர்கள், உங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசாதீர்கள் என்று மாணவர்களை அடக்க முயல்கின்றனர். அதிகார பீடத்தின் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த ஒடுக்கமுறைகளுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. பல்லைக்கழக மாணவர்களுக்கு சுய சிந்தனைகளும் சமூக அக்கறையும் அரசியல் பிரக்ஞையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உலகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.

மிகுந்த நம்பிக்கையோடு 'ஆனால் எம் மாணவர்கள் எவ்வித நெருக்கடி வந்தாலும் யாரும் உருவாக்க நினைக்கும் நிலையை பல்கைலக்கழத்தில் ஏற்படுத்த விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.' என்று தர்சானந்த் குறிப்பிடுகிறார். இதுதான் ஒவ்வொரு மாணவத் தலைவர்களின் நம்பிக்கையாகவும் ஒவ்வொரு மாணவர்களின் நம்பிக்கையாகும் இருந்து வருகிறது. வருடம் தோறும் மாணவர்கள் மாறிக் கொண்டுள்ள நிலையில் வரும் புதிய புதிய மாணவர்கள் உற்சாகத்துடன் சமூகத்தின் குரலாக ஒலிக்கிறார்கள். இந்த மாணவர்கள்மீது கொடுந்தாக்குதல்களைச் செய்யாமல் இவர்கள் என்ன கேட்கிறார்கள்? ஏன் கேட்கிறார்கள்? என்பதை ஹத்துருசிங்க தலைமையிலான இராணுவத்தரப்போடு வசந்தி அரசரத்தினம் தலைமையிலான பல்கலைக்கழக நிர்வாகமும் சிந்திக்க வேண்டும். தர்சானந்த் சிந்த வைக்கப்பட்ட இரத்தம் அவர் வாழும் சமூகத்திற்காக எடுக்கப்பட்டது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக ரமேஷ் கண்ணா

http://www.globaltam...IN/article.aspx

மிகவும் உணர்வுள்ள குரலாக தர்சானந் குரல் வெளிப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் உணர்வுள்ள தமிழ் மாணவர்கள் தமது பல்கலைக்கழகத்து மாணவர் அமைப்புகளிடமும் இவ்வாறான செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

விடிவெள்ளி, மலையூரான், அர்ஜூன் எல்லாம்.... வந்து கருத்து சொல்லுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரச பயங்கரவாதத்தின்

ஒரு முகம் இத்தாக்குதல்

இலங்கையில்

அரச பயங்கரவாதத்திட்கு

ஆயிரம் முகம் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

Tharsananth_CI.jpg

அரசியல் வாதிகளே....

இவனுக்காக... ஒரு, கீச்சுக்குரல் கூட எழுப்ப முடியாதவர்கள்,

மனிதர்களா... நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து எம்.ஜி.ஆர் மௌனமாக இருப்பது ஏன்?.சம்பந்தர் ராஜதந்திரமாக இதிலும் செயற்படுகிறாரா? .

விடிவெள்ளி, மலையூரான், அர்ஜூன் எல்லாம்.... வந்து கருத்து சொல்லுங்கோ...

அடிக்கடி வந்து உணர்ச்சிவசப்பட்டு மிக குழந்தைத்தனமாக பதிவுகள் இடுகின்றீர்கள்.இதுவென்ன முதல் சம்பவமா?இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் நடைமுறையில் இல்லை என்பது உலகறிந்த விடயம் .அதுவும் தமிழர் விடயத்தில் அரசுகளால் எப்படி நடந்துகொண்டன என்பதும் எல்லோருக்கும் தெரியும் .இன்பம்,செல்வம் போன்றோர் கொலை கூட செய்யப்பட்டார்கள் .சிங்கள அரசை, அவர்கள் செய்வதை யாரப்பா நியாயப்படுத்தியது .

சிங்கள அரசு கூட கால் வைக்க பயந்த பல்கலைகழகத்திற்குள்ளும் முதல் காலேடி எடுத்து வைத்தவர்கள் புலிகள். யாழ் பல்கலைகழகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர புலிகள் செய்த அராஜங்களும் உலகறியும்,மாணவர் தலைவர்கள் விஜிதரன் ,விமலேஸ்வரன் கொலைகள் உட்பட .அப்ப எல்லாம் நீங்கள் எங்கே இருந்தீர்கள் .

இனி முதலில் இருந்து வேறுவிதமாக போராடவேண்டியதுதான் ,புலிகள் மாதிரி ஒரு இயக்கம் அதை குழப்பவும் உங்களை போன்று புலம் பெயர்ந்தவர்கள் அதற்கு ஆதரவு தரவும் இருந்தால் தமிழனுக்கு விடுதலை கிடைத்த மாதிரித்தான்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தற்சமயம் அமைச்சர் டக்ளசின்

அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாத நிலையில் இறுக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் அரசியல் அங்கு எடுபடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.