Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 21 )

Featured Replies

:)விற்றுத் தீர்ந்த காதல்(இன்)கதை :(

இந்தக் கதை நடந்த... நடந்துகொண்டிருக்கும்.... ஒரு உண்மையான காதலினதும், அதில் நடக்கும் சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து வாசித்து வருகையில் அது பரிபூரணமாக புரியும்.

அதன்வழி, கதையின் பகுதி 21 இங்கு தொடர்கின்றது.

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க... கீழுள்ள இணைப்புகளில் அழுத்துங்கள்.

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17-18-19-20 )

[21]

ஞ்சலி லண்டனுக்குப் போய் இரண்டு நாட்களுக்குமேல் ஆகியிருந்தது.

அவளிடம் இருந்து போன் வருமென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான்.

அந்த இரண்டு நாட்களை கடத்துவதற்கே அவன் பெரும்பாடுபட்டான்.

எங்கு பார்த்தாலும்... எதைப் பார்த்தாலும் அஞ்சலியின் ஞாபகம் வந்து, இவன் நெஞ்சை அடைத்தது.

உண்மையிலேயே அஞ்சலியின் பிரிவு அவனை மிகவும் பாதித்திருந்தது.

2933-291147-Vijay12.jpg

தன் பிஸ்னெஸிலும் கவனம் செலுத்தாமல் எதையோ பறிகொடுத்தவன் போலவே

எப்பொழுதும் ஒரு சோகத்துடன் இருந்தவனைப் பார்த்து விமல் பெரிதும் கவலைப்பட்டான்.

'இவனை இப்பிடியே விடக்கூடாது' என முடிவெடுத்தவன்...

"நீ இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறாய்? நானும் கொஞ்ச நாளா உன்னை பாக்கிறன்.

வேலையையும் ஒழுங்காப் பாக்கிறேல. ஒரு மாதிரியே இருக்குறாய். அவள் போய்ப் படிக்கட்டும் எண்டு நீதானே

அனுப்பி வச்சனி. பிறகென்னத்துக்கு இப்பிடி இழவு வீட்டுக்குப் போனது மாதிரி மூஞ்சையை வச்சுக்கொண்டு........ ?!

முதல்ல இதெல்லாத்தையும் விட்டிட்டு பிஸ்னெஸ்ஸைக் கவனி....! " என்று கொஞ்சம் அதட்டலுடன் சொல்லிவிட்டு சிகரெட்டை பற்றவைத்தான் விமல்.

ரெண்டு மூண்டு நாளா இது எதையுமே தொடாதவன்... விமல் பக்கத்திலிலிருந்த சிகரெட் பக்கற்றை எடுத்து அவனும் பற்றவைத்தபொழுது விமலுக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும்... 'அவனுக்கு இப்போதைக்கு இது வேணும்' என்று நினைத்ததாலோ என்னவோ ஒன்றுமே சொல்லவில்லை.

இப்பொழுதும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு பேசாமல் இருந்தான்.

அவனும் பதிலுக்கு ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டான்.

மறுநாள் 25 ஜனவரி 2007

அஞ்சலியின் அழைப்பு வருகிறது. இவனுக்கு அது மிக்க சந்தோசம் என்பதனைவிட...

அவளது குரலைக் கேட்டதே பெரும் ஆறுதலாக இருந்தது.

தனது ஒன்றுவிட்ட அக்கா வீட்டில் இருப்பதாகவும்... கடந்த மூன்று நாட்களாக என்ன நடந்ததெனவும் ஒன்றுவிடாமல் சொல்லியிருந்தாள்.

0.jpg

அதன்பின் இருவருக்குள்ளும் தொலைபேசி உரையாடல்களே இணைக்கும் பாலமாய் இருந்தது.

சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெப்காமில் முகம்பார்த்து பேசுவார்கள்.

இவன் தனது கவலையை காட்டிக்கொள்ளாமல் இருந்துவிடுவான். ஆனால் அஞ்சலி பலசமயங்களில் அழ ஆரம்பித்துவிடுவாள். பிரிவுவலியில் தவிக்கும் அவளை ஆறுதற்படுத்துவது என்பது... அதேவலியில் தவிக்கும் இவனுக்கு இன்னும் கஷ்டமாயிருக்கும்.

முடிந்தவரை ஒவ்வொருநாளும் போனில் பேசிக்கொண்டார்கள்.

இப்படியே சில மாதங்கள் ஓடிவிடுகிறது.

அஞ்சலி தனது படிப்பிலும் இவன் தனது பிஸ்னஸிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள...

அவர்கள் தினமும் போனில் பேசிக்கொள்ளும் அந்த சில நிமிடங்கள்தான்.... அந்த நாளின் இனிமையான தருணங்களாக அவர்களுக்கு அமைந்தது.

2007 ஏப்ரல்

இவனுக்கு அடுத்த பிரிவொன்று காத்திருந்தது.

இவனது ஆருயிர் நண்பனாக,தோள்கொடுக்கும் நல்ல தோழனாக இருந்த விமல்.... தனது வெளிநாட்டுப் பயணத்திற்காக தாய்லாந்து செல்லவேண்டிய நிலை வந்திருந்தது. அஞ்சலியின் பிரிவின் வலியிலிருந்து இன்னும் முழுமையாக மீளாமல் இருந்த இவனுக்கு, விமலின் இந்த விடயமும் பெரும் இழப்பாக உணர்ந்தான்.

ஆனாலும் தன் நண்பனின் எதிர்கால வாழ்க்கைக்கான பயணத்திற்காக அவனை சந்தோசமாக வாழ்த்தி வழியனுப்பிவைத்தான்.

விமலும் அடிக்கடி போன் பண்ணிக் கதைத்தபடியால் அவனது பிரிவு அவ்வளவாக தெரியாமல் இருந்தது.

இதற்குள் இவனது குடும்பமும் யாழிலிருந்து கொழும்பு வந்திருந்தனர். தெகிவளையில் ஒரு வீடு எடுத்து தன் குடும்பத்தினருடன் இருந்ததும் அவனது தனிமையையும் கவலைகளையும் போக்க ஏதுவாக இருந்தது.

பிஸ்னெஸ் பிஸி, குடும்பத்தாரோடு இருந்தது, சுவிஸிலிருந்து அவனது சித்தி குடும்பத்தினரின்

இலங்கை வருகை... என இன்னும் சில மாதங்கள் கழிய...

அவனது வாழ்க்கையை திசைதிருப்பப் போகும் ஒரு சம்பவம்

2007 ஓகஸ்ட் மாதத்தில் நடந்திருந்தது.

இலங்கையை சுற்றிமூண்ட போர் மேகங்கள்... கொழும்பின் இடைக்கிடை அதிர்வுகள்...

கைதுகள் கடத்தல்கள்... என எல்லாமே சமாதானக் காலத்திற்கான முற்றுப்புள்ளியை வைத்திருந்தது.

இவனும் ஒரு 'தமிழன்' என்ற வகையில்... சிங்கள புலனாய்வுப்பிரிவின் 'அன்பான' சந்தேகப்பார்வையின் புண்ணியத்தில்... இலங்கையின் 'பிரபலமான சிறந்த' சித்திரவதைக் கூடமான 'நான்கு மாடி'க் கட்டிடத்தினை சுற்றிப்பார்க்கும் 'பாக்கியம்' கிடைத்தது. அதிலிருந்து 'கொஞ்சம்' கஷ்டப்பட்டு மீண்டவன்.... நான்கு நாட்களுக்குள் கடல்தாண்டி வேறொரு கரை தொடவேண்டிய நிர்ப்பந்தம்.

அஞ்சலி இவனது சிக்கல் நிலையை அறிந்து துடித்துப்போனாள். அவளது கலக்கமும், பதைபதைப்பும் அவள் அவனின்மேல் வைத்திருந்த காதலை உணர்த்தியது மட்டுமல்லாமல், இவனும் அவளின் அன்பையும் அக்கறையையும் நன்கு புரிந்துகொள்ள வைத்தது.

தன் பிஸ்னெஸ் எல்லாவற்றையும் அப்படியே... தனது இன்னொரு நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு

இலங்கையிலிருந்து வெளியேறினான்.

Singapore-Airport.jpg

அப்போதைய அவசரத்திற்கு, அவனை அரவணைத்தது... சிங்கார சிங்கப்பூர்.

தான் சிங்கப்பூர் வந்த சில நாட்களிலேயே... தனது குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தான்.

சிங்கப்பூரில் தங்குவதற்கான அனுமதி ஒரு மாதம் மட்டுந்தான் இருந்தது.

வேறு வீஸா போட்டுக்கொள்ளவும் வழிவகை இல்லாமல் இருந்தது அப்பொழுது.

என்ன செய்யலாம்? என யோசித்தவனுக்கு பக்கத்து நாடான மலேசியாவில் இருக்கும் நண்பனின் ஞாபகம் வர...

அவனுக்கு போன் பண்ணி... அங்குள்ள நிலவரங்கள் பற்றி விசாரித்தான்.

அவனது அந்த நண்பன் சொன்ன விடயங்களை சிந்தித்துப் பார்த்துவிட்டு...

மலேசியாவிற்கு செல்வதென்று முடிவெடுத்தான்.

2007 செப்டெம்பர்

மலேசிய மண் அவனை வரவேற்கிறது.

அந்த மண்ணுக்குள் நுழையும்போதே... இங்கு சில மாதங்கள் மட்டும் இருந்துவிட்டு... அடுத்தது, லண்டன் போற வழியைப் பாக்கோணும். நாட்டுக்குத்தான் திருப்பிப் போக ஏலாது. அஞ்சலி இருக்கிற இடத்துக்காவது போவம்... என்ற எண்ணத்துடன்தான் நுழைகிறான்.

kj3jPNigcee.jpg

இவன் மலேசியாவுக்குள் நுழையவும்... விமல் வேறொரு நாட்டுக்கு போகவும்... இருவருக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் தொடர்பு எடுப்பதற்கு முயற்சித்து கிடைக்காமல் போனது. தொடர்புகொள்ள அனைத்தும் கிடைத்தும் அவன் தொடர்பெடுக்காமல் இருந்ததற்கும் காரணம் இருந்தது.

அதன்பின் இத்தனை வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக்கொண்டது.... லண்டனில், அமுதினியின் ஸ்னேகிதியின் திருமணத்தில்தான்!

அந்த திருமணம் நல்லபடி நடந்துமுடிய..... அன்றிரவு,

அவனின் வீடு...

விமலும் அவனும்...... பல்கனியில்.

அவர்களுக்கு முன்னால் ஒரு றெமி மார்ட்டின்-விஸ்கிப் போத்தல் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றது

அமுதினி சமையலறையில் இரவுணவு தயார்பண்ணிக் கொண்டிருந்தாள்.

"இஞ்சருங்கோ....ஓம்லெட் போட்டு எடுத்துக்கொண்டு வரவே?"

அங்கிருந்தபடியே அவள் கேட்டது இவனின் காதில் விழ,

"கொஞ்சம் பொறு மச்சான்... அம்மு கூப்பிடுறாள். ரெண்டு நிமிஷம்.... போய்ட்டு வந்திடுறன்" என்றுவிட்டு சமயலறைப் பக்கமாக வந்தவனிடம்...

"கனடாவில இருந்து வந்திருக்கிறார் எண்டியள்... இவர் உங்கட ஊர் ஃபிரண்டோ..?" என வினவினாள் அமுதினி.

"அம்மு.... இது யாரெண்டு சொன்னா நீ ஆச்சரியப்படுவாய்! இவன்தான் விமல்!!" என்றதும்,

"ஓ விமல் அண்ணாவோ... ?!" எனக் கண்கள் அகல ஆச்சரியப்பட்டாள்

உண்மையிலேயே அமுதினிக்கு அது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

அவள் விமலைப்பற்றியும் இவர்களது நல்ல நட்புப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள்.

"சரி சரி... நானே ஓம்லெட் போட்டு எடுத்துக்கொண்டு வாறன்.

நீங்கள் போய் அவரோட கதையுங்கோ" என்றாள் அமுதினி

anjali_75_212201192700123.jpg

"இல்லமா.... நீங்கள் சமையுங்கோ! நான் செய்யுறன்" என்று அவன் சொல்லவும்.

"விமல் அண்ணா பாத்தா.... 'மனிசிக்காரி புருஷனைப் போட்டு நல்லா வேலை வாங்குது' எண்டு நினைக்கப்போறார்.

என்ர செல்லமெல்லோ...! நீங்கள் போய் கதைச்சுக்கொண்டிருங்கோ. சின்னவேலைதானே... ! நான் டக்கெண்டு எடுத்துக்கொண்டு வாறன்." என்றவளை புன்னகையோடு பார்த்துவிட்டு மீண்டும் விமல் முன்னால் வந்து அவன் உட்கார...

"சரிடா.... போத்தலை ஓப்பின் பண்ணு !" என்றான் விமல்,

தான் அறியாத மீதிக்கதையினை அவனிடமிருந்து கேட்கும் ஆவலுடன்.

தொடரும்...

ஞ்சலி அவனுடன் இல்லாவிட்டாலும் அவனுக்கு அன்பான மனைவி அமுதினி இருப்பது பெரும் ஆறுதல்!

ஏன் இவ்வளவு ஓட்டம் ? பிள்ளையள் பாவங்களல்லோ . கொஞ்சம் மெதுவா போறது .

ஏன் இவ்வளவு ஓட்டம் ? பிள்ளையள் பாவங்களல்லோ . கொஞ்சம் மெதுவா போறது .

:rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:

கவிதை உங்கள் நேரத்துக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். எமக்காக இந்த கதையை சீக்கிரம் தொடர்வது பாராட்டப்பட வேண்டியது.

கதை நல்லப் போகுது.

கோமகன் - பொறுங்கோ - பிளாஷ் பக் வருமெல்லோ. :lol:

  • தொடங்கியவர்

என் அன்பான கள உறவுகளுக்கு.......!

இந்த "விற்றுத் தீர்ந்த காதல் கதையை ஒரே மூச்சில எழுதி முடிச்சிட வேண்டும் " என்றுதான் இதை எழுதத் தொடங்கினான்.

ஆனால், திடீரென உருவாகும் சில சூழ்நிலைகள்.... எனக்கு இன்னுமொரு பயணத்திற்கான நிர்ப்பந்தத்தினைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. இந்தப் பயணத்தின் கதையும் காரணமும் அதில் நிச்சயம் வரும்.

அவசரமான... ஆனால், மிக அவசியமான பயணம்!

மீண்டும் வந்து மீதியை தொடரும்வரை....

தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டபடி விடைபெறுகின்றேன்.

கூடியவிரைவில்.... மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்!

தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும்.... என் மனதார்ந்த நன்றிகள் உறவுகளே! :)

Edited by கவிதை

என் அன்பான கள உறவுகளுக்கு.......!

இந்த "விற்றுத் தீர்ந்த காதல் கதையை ஒரே மூச்சில எழுதி முடிச்சிட வேண்டும் " என்றுதான் இதை எழுதத் தொடங்கினான்.

ஆனால், திடீரென உருவாகும் சில சூழ்நிலைகள்.... எனக்கு இன்னுமொரு பயணத்திற்கான நிர்ப்பந்தத்தினைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. இந்தப் பயணத்தின் கதையும் காரணமும் அதில் நிச்சயம் வரும்.

அவசரமான... ஆனால், மிக அவசியமான பயணம்!

மீண்டும் வந்து மீதியை தொடரும்வரை....

தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டபடி விடைபெறுகின்றேன்.

கூடியவிரைவில்.... மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்!

தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும்.... என் மனதார்ந்த நன்றிகள் உறவுகளே! :)

சென்று வாருங்கள் வென்று வாருங்கள்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமான... ஆனால், மிக அவசியமான பயணம்!

மீண்டும் வந்து மீதியை தொடரும்வரை....

தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டபடி விடைபெறுகின்றேன்.

கூடியவிரைவில்.... மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்!

தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும்.... என் மனதார்ந்த நன்றிகள் உறவுகளே! :)

தம்பி கவிதை,

அடுத்த கெதியிலை எழுதி முடியுங்கோ. அடுத்த அங்கத்தை வாசிக்க காத்திருக்கிறோம். முழுக்கதையும் எழுதீட்டுத்தான் தப்பியோட முடியும்.

8690-gun.gifஓட நினைச்சா இதுதான் பாசலில வரும்.

  • 2 weeks later...

அவசரமான... ஆனால், மிக அவசியமான பயணம்!

உங்கள் உறவுகள் நலம் தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.