Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17-18-19-20 )

Featured Replies

:)விற்றுத் தீர்ந்த காதல்(இன்)கதை :(

இந்தக் கதை நடந்த,நடந்துகொண்டிருக்கும் ஒரு உண்மையான காதலினதும், அதில் நடக்கும் சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து வாசித்து வருகையில் அது பரிபூரணமாக புரியும்.

அதன்வழி, கதையின் பகுதி 17 இங்கு தொடர்கின்றது.

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க... கீழுள்ள இணைப்புகளில் அழுத்துங்கள்.

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )

[17]

போனை வைத்துவிட்டு உட்கார்ந்தவனின் நெஞ்சம்.... இப்பொழுது மிகவும் கலங்க ஆரம்பித்தது. அவளுக்கு வீஸா கிடைத்ததை அறிந்ததும்... இன்னும் சில நாட்களில் அஞ்சலி தன்னை விட்டு தூரமாக பிரிந்து செல்லப் போகின்றாள்

என்பதனை அவனால் தாங்கிக்கொள்ள இயலாமல் எண்ணங்கள் அல்லாடியது.

"போக வேண்டாம் என்று சொல்லுவமோ..." என்றுகூட ஒருகணம் யோசித்துவிட்டு, "இல்லையில்லை...

அவள் படிக்கட்டும்....! என்ர சின்னத்தனமான ஆசைக்காக அவளின்ர படிப்பைக் குழப்பக் கூடாது" என முடிவெடுத்தவனால்... அவளின் பிரிவினைத் தாங்கும் மனநிலைக்கு இலகுவில் வர முடியாமல்.... தவித்தான்.

அவனிற்கு அப்போது தேவைப்பட்டது 'தனிமை' ஒன்றுதான். சற்று நேரத்துக்கு எங்கேயாவதுபோய்

தனிமையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும்போல் இருந்தது.

நேராக அவனும் அவளும் வழமையாகப் போகும் கொஃபி சொப்பிற்கு போய், ஒரு நெஸ்கபேயை ஓடர் பண்ணிவிட்டு உட்கார்ந்திருந்தவனிற்கு... தன் அருகில் இருந்த வெற்றிடமான இடத்தினைப் பார்க்கப் பார்க்க.....

'இனிமேல்... இந்த இடம் இப்படித்தான் வெறுமையாக இருக்கும்' என சிந்தித்தவனின் மனம் பாரமாகியது.

"அவளைப் பிரியப்போகிறோம்" என்கின்ற எண்ணம் அவனை அவஸ்தைப்படுத்திக் கொண்டிருந்தது .

கவலை,துக்கம்,குழப்பம் என எல்லாமே அவனை சுற்றிவளைத்துக் கொண்டன.

நெஸ்கஃபே கொண்டுவரச் சொல்லியிருந்தவன்... அதை 'வேண்டாம்' என்று அங்கிருந்த வெயிட்டரிடம் சொல்லிவிட்டு...

அதன் பின்னால் இருந்த பாருக்குள்(Bar) நுழைகிறான்.

நேரம் மாலை 6 மணி ஆகியிருந்தது.

விமலின் போன் வர... அதனை எடுத்தவுடன் ... "டேய் எங்க நிக்கிறா இப்ப? என விமல் கேட்கவும் , 'தான் அங்கு இருப்பதை சொல்லுவமா விடுவமா?' என ஒருகணம் சிந்தித்துவிட்டு... "நான் ஒமேகா பாரில இருக்கிறன்" என்று அவன் சொன்னபோது, அவன் போதையில் இருப்பதனை... அவனின் குரலில் இருந்தே கண்டுபிடித்துவிட்டான் விமல்.

"சரி அங்கையே நில்லு வாறன்" என்று கூறிய விமல்... அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்தடைந்தான்.

விமல் அவனுக்கு முன்னால் வந்து அமர்ந்தவுடன்...

"மச்சான் இப்பதான் வந்தனான்... உனக்கு போனடிக்கோணும் எண்டு இப்பதான் நினைச்சன். அதுக்குள்ள நீயே அடிச்சிட்டாய்!" என்று அவன் சொன்னதும், விமல் கடுப்பாகினான்.

( அவன் சொன்னது பொய் என்று அவனுக்கு தெரியும். அவன் 3 மணிக்கெல்லாம் கடையிலிருந்து வெளியேறி வந்துவிட்டான் என்பதனை கடையில் வேலை செய்பவர்களிடம் விசாரித்துவிட்டுத்தான் விமல் வந்திருந்தான்)

"டேய்... **** என்னிட்டையே பொய் சொல்லுறியோ??" - கவலையும் கோபமும் விமலின் முகத்தில் தெரிந்தது. என்னத்துக்கு புதுசா பகலில தண்ணி அடிக்கிற பழக்கம்? உனக்கு இப்ப என்ன பிரச்சினை...? அதை முதலில சொல்லு! என விமல் கேட்டும்.... அவன் மெளனமாகவே இருந்தான்.

Mugamoodi291211_8.jpg

"டேய்.... என்ன பிரச்சினை எண்டு கேட்டால் சொல்லன்டா! என்னத்துக்கு பேசாமல் உம்மெண்டு இருக்கிறாய்? சொன்னாத்தானே மனுஷருக்கு விளங்கும்! அஞ்சலி என்ன சொன்னவள்?" என மீண்டும் கேட்டான் கோபமாக.

"அஞ்சலிக்கு வீஸா வந்திட்டுதாம்.மத்தியானந்தான் போன் பண்ணிச் சொன்னவள்... " என்று அவன் சொன்னதும்..... விமலுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

'அவளுக்கு வீஸா லேசில கிடைக்காது' எனத்தான் விமல் நினைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். அதனாலோ என்னவோ விமலுக்கும் அது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

"சரி... இப்ப என்ன செய்யுறதா பிளான்? 'அவளுக்கு வீஸா கிடைச்சால் போய்ப் படிக்கட்டும்' எண்டு... நீதானே சொன்னனி அண்டைக்கு! பிறகென்னத்துக்கு... இங்கவந்து தண்ணியடிச்சுக்கொண்டிருக்கிறாய்?" - விமல் அதை சொல்லிக்கொண்டிருந்தபோதே, ஏற்கனவே வெடித்துப்போயிருந்த அவனது மனது கொஞ்சம் உடையத்தொடங்கியது. கண்கள் கலங்க ஆரம்பித்ததும்...

அவனது கிளாசுக்குள் மீண்டும் பியரை நிரப்பி அவனிடம் நீட்டியபடி...

"மச்சான் இதை முதல்ல குடி! " என்று சொல்லி கொடுத்துவிட்டு,

"நான் ஒருக்கா அஞ்சலியோட கதைக்கோணுமடா... இப்ப போன் பண்ணிக் குடுக்க ஏலுமே?" என்று கேட்டான் அவனிடம்.

"ம்ம்ம்.... போன் பண்ணிப் பாக்கிறன் எடுத்தால்... கதைப்பம்" என சொல்லிவிட்டு போனை எடுத்ததுமே... அஞ்சலியின் குரல் "ஹலோ" என இசைக்கிறது.

kajal050312-9-300x300.jpg

"அஞ்சு என்ன செய்யுறாய்மா...?" என அவன் கேட்கவும்,

"அடேய்... அப்பா வாற 22ஆம் திகதி ரிக்கெற் போட்டிட்டார். எனக்கு என்ன செய்யுறதெண்டே தெரியேல!? நாளைக்கு உன்னை கட்டாயம் மீட் பண்ண வேணும். வழமையா வாற மாதிரி லேட்டா வராதடா! பிளீஸ்.....! " என்று கொஞ்சம் கவலையோடு கேட்டபோதுதான் அவனது மனதுக்குள் சுள்ளென்று வலித்தது.

அங்கு தொங்கிக்கொண்டிருந்த கலண்டரில் திகதியைப் பார்த்தான் - 14 ஜனவரி 2007 - இன்னும் எட்டு நாளில் அவள் UK போய்விடுவாள். அவனிற்குள் இனம்புரியாத வலி! 'இந்த மூண்டுநாலு வருஷமா அவளை கஷ்டப்படுத்திப் போட்டம்' என்ற எண்ணமும் வலியும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது.

அவனது வேலையில் பிஸியாய் இருக்கும்போது... சிலவேளைகளில், அவள் அவனுக்காய் 2 மணித்தியாலத்துக்கும் மேலாகக்கூட காத்திருந்திருக்கிறாள்.அவன் லேட்டாகப் போன சந்தர்ப்பங்கள்தான் அதிகம்.

1342.jpg

கடைசியாக ஒருதடவை.... அவனும் அவளும் தெகிவளை கொன்கொட் தியேட்டரில்... 'ஜில்லென்று ஒரு காதல்' படம் பார்க்கப் போக முடிவெடுத்துவிட்டு, அடுத்தநாள்... லேட்டாகப் போய் படத்தின் பாதியில்தான் அவள் பக்கத்தில் போய் இருந்ததையும்,கொஞ்சம் கோபித்துக் கொண்டாலும்... தலைவலியுடன் இருந்தவனுக்கு பன்டோல் கொடுத்து, அவளது தாயார் அவளுக்காய் கொடுத்தனுப்பியிருந்த இடியப்பத்தை ஊட்டி விட்டதையும் நினைத்துப் பார்த்தான்.

( இறுதியாக அவனும் அஞ்சலியும் பார்த்த திரைப்படம் அந்த "ஜில்லென்று ஒரு காதல்" தான் )

அவன் லேட்டாக வந்தால், வந்தவுடன் பேசாமாட்டாள்.. அப்புறம் அழுவாள்... பின் அவனது ஆறுதல் வார்த்தைகளில் அமைதியாகி... அவனுடைய அணைப்புக்குள் ஒட்டிக்கொள்வாள். அது அந்த அழகான தேவதையின் அன்பான குணம். எப்பவுமே லேட்டா வரக்கூடாது என்றுதான் இவனும் நினைப்பான்.ஆனால் இவனது வேலைப்பழு இவனை மீண்டும் மீண்டும் தாமதமாகவே வரச்செய்வதாய் வைத்துவிடும்.

இப்பொழுது அதனை நினைக்கும்போது... அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. இப்படியெல்லாம் அவளை எவ்வளவு காயப்படுத்திவிட்டோம் என நினைத்து மிகவும் மனம் வருந்தினான். அவள் பிரிந்து செல்லப் போகின்றாள் எனும்போதுதான் அவனால் அதனை முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

"சரிடா அஞ்சு... நான் வெள்ளணையா வந்திடுறன். நீ கவலைப்படாதம்மா..."

சொல்லும்போது குரல் தளுதளுத்து.

தொடர்ந்தவன்...

"அஞ்சு..! விமல் உன்னோட ஏதோ கதைக்கோணுமாம். ஒருக்காக் கதைக்கிறியோ?" என வினவவும்,

"ஓ... விமலண்ணாவோ...?! குடுங்கோ குடுங்கோ! " என ஆர்வத்தோடு கேட்டாள் அஞ்சலி.

போனை விமலிடம் கொடுத்தான்

"ஹலோ தங்கச்சி! எப்பிடி இருக்குறீங்கள்? வீஸா கிடைச்சிட்டுது எண்டு கேள்விப்பட்டன். இப்பதான் சொன்னவன் இவன். சந்தோசம். போய் நல்லா படியுங்கோ!" என்று அவன் ஆரம்பிக்கவும்,

524035_397678860253762_193658270655823_1309134_947609712_n.jpg

"அப்பிடி இல்லை அண்ணா, எனக்கு போக விருப்பமில்லை. ஆனால் என்ர அப்பாவைவிட இவர்தான் என்னை துரத்திறதில அக்கறையா இருக்கிறார் போல கிடக்கு!" என்று அஞ்சலி சொல்லவும்,

"தங்கச்சி... நான் இதப்பற்றித்தான் கதைக்கோணும் எண்டு நினைச்சனான்."

"நீங்கள் எழுதச்சொல்லிக் கேட்டனீங்களாம் எண்டு சொன்னவன் இவன். உங்களுக்கு விருப்பமே...?" என விமல் விசாரிக்கவும்,

சட்டென இடைமறித்து...

"ஓமண்ணா...எனக்கு விருப்பம் ! ஆனா, இவர்தான் கொஞ்சம் யோசிக்கிறார்... நீங்களே கேட்டுப் பாருங்கோவன்.

அவர் 'மாட்டன்' எண்டுதான் சொல்லுவார்! " என அஞ்சலி சொல்லவும்,

"கொஞ்சம் பொறுங்கோ தங்கச்சி. நான் இதப்பற்றி இனிமேல்தான் இவனோட கதைக்கோணும்.

நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கதையுங்கோ. நான் இவனோட கதைச்சுப்போட்டு கொஞ்ச நேரத்தில

திருப்பிக் கோல் பண்ணுறன்" என்று சொல்லிவிட்டு போனை மேசையில் வைத்த விமல் ........

தனக்கும் ஒரு பியர் ஓடர் பண்ணினான்.

"என்னவாம் அஞ்சலி... என்ன சொன்னவள்?" என விமலைப் பார்த்துக் கேட்டான் அவன்.

"கொஞ்சம் பொறுடா... பியர் வரட்டும். வெறியில இருக்கிற உன்னோட... நானும் வெறியோட கதைச்சாத்தான் சரிப்பட்டு வரும். இல்லாட்டில் நீ ஒரு வழிக்கு வர மாட்டாய்!" என்று சொல்லிவிட்டு வெயிட்டர் கொண்டுவந்த பியர் போத்தலை திறந்தான்.

சில நிமிடங்களின் பின் பேச்சை ஆரம்பித்தான் விமல்.

"அஞ்சலி லண்டனுக்குப் போப்போறாள். அதுக்குப் பிறகு... நீ இப்பிடி குடிச்சுக்கொண்டு திரியப்போறியோடா? என்னடா... இவனும் குடிச்சுக்கொண்டு இப்பிடிக் கேக்கிறான்... 'சாத்தான் வேதம் ஓதுது' எண்டு நினைக்காத! உன்ர நன்மைக்குத்தான் சொல்லுறன்.முதல்ல இப்பிடி ரென்ஷனாகிறதை விட்டிட்டு என்ன செய்யுறது எண்டு யோசி!"

"அஞ்சலி தான் லண்டன் போறதுக்கு முதல் உன்னை ரெஜிஸ்டர் பண்ணிட்டு போக ஆசைப்படுகுது.

அந்தப் பிள்ளையில எனக்கு முழு நம்பிக்கை இருக்கு மச்சான். ஆனா உன்னிலதான் எனக்கு நம்பிக்கை இல்ல.

ஏன் எழுதுறதுக்கு மாட்டன் எண்டு அடம் பிடிக்கிறாய்?" என்று கேட்டவுடன்,

அவனுக்கு ஒரு மாதிரி போய்விட்டது.

"ஏன்டா நீயும் அப்பிடி நினைக்கிறியோ....? என்னில நம்பிக்கை இல்லையோடா?

எனக்கு அவளின்ர அப்பா அம்மாவுக்கு தெரியாமல் எழுத விருப்பம் இல்ல.

அவையளின்ர முழு விருப்பமும் இருந்தா... எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இப்ப அவையளுக்குத் தெரியாமல் எழுதினால்... பிறகு ஒரு நாள் எப்பிடி அவையளின்ர முகத்தில முழிக்கிறது. வேண்டாம் மச்சான். எனக்கு எங்கட காதல்ல நம்பிக்கை இருக்கு. அதவிட அஞ்சலியில அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கு. இந்தக் கதையை விடு. அவள் படிச்சு முடியட்டும். அதுக்குப் பிறகு யோசிப்பம்" என்றான் விமலிடம்.

"டேய்....நான் திருப்பித் திருப்பி சொல்லுறது, உன்ர நன்மைக்குத்தான். நான் உன்னைக் கட்டாயப்படுத்திறன் எண்டு நினைக்காத. ஆனா... நீ இப்ப அவள் கேக்கிற மாதிரி எழுதுறதுதான் நல்லதெண்டு படுது எனக்கு.

பிரிஞ்சு இருந்தாலும்...... புருஷன் பெண்டாட்டி எண்ட ஃபீலிங்கும், றிலேஷன்ஷிப் நெருக்கமும் உங்களை எப்பவுமே ஒண்டாய் இணைச்சு வச்சிருக்கும். பிளீஸ் மச்சான். எழுதுறதுதான் நல்லது. நாளைக்கு.... அவளின்ர அப்பா லண்டனில ஒரு மாப்பிள்ளை பாத்து கலியாணம் பண்ணிவைக்க வெளிக்கிட்டா... என்ன செய்வாய்? யோசிச்சு சொல்லு இப்ப."

சொல்லி முடித்துவிட்டு இன்னொரு பியருக்கு ஓடர் கொடுத்தான் விமல்.

"மச்சான்... இப்பதான் எனக்கு 25 வயசு. அவளுக்கு 20 வயசுதான் ஆகுது.... என்று தொடங்க,

"டேய் லூசா... கலியாணம் செய்யுறதுக்கு 18 வயசு இருந்தாக் காணும். உன்னை எழுதத்தான் சொன்னனானே ஒழிய... கலியாணங்கட்டி குடும்பம் நடத்தச் சொல்லேல! என்னைப் பொறுத்தவரேல... நீ எழுதிறதுதான் பெட்டர். இன்னும் எட்டு நாள்தான் கிடக்கு. அதுக்குள்ள செய்தால்தான்....!!! இந்தப் போத்தல் முடியுறதுக்குள்ள... நீ எனக்கு முடிவைச் சொல்லு. நான் மிச்ச அலுவலைப் பாக்கிறன்!" என்றான் விமல் கொஞ்சம் கண்டிப்புடன்.

"ஏன்டா...எப்பவும் நிதானமா யோசிக்கிற நீயே, இப்பிடிச் சொல்லுறாய்?!! அவசரப்படாதை...கொஞ்சம் பொறு மச்சான்... !" என்றான் நிதானமாக.

"நான் நிதானமா யோசிச்சுதான் சொல்லுறன். நீ அண்டைக்கு சொல்லைக்குள்ளையே... நான் யோசிக்கத் தொடங்கிட்டன். நான் சொல்லுறதைக் கேக்க விரும்பினாக் கேள். இல்லாட்டி விடு...!" என்று சலிப்புடன் சொல்லிவிட்டு பியர் கிளாஸை எடுத்து ஒரு துளி மிச்சமில்லாமல் குடித்துவிட்டு விமல் 'டொக்' என்ற சத்தத்துடன் மேசையில் வைக்கவும்....

"சரி மச்சான் செய்வம்....! எழுதுறதுக்குரிய வேலையளைப் பார். நான் அம்மாவுக்கும் சொல்லுறன். அவ இதுக்கு ஒத்துக்கொள்ளுவாவோ தெரியாது!? எண்டாலும் கேட்டுப் பாக்கிறன். ஏதாவது ஒரு சைட்டிலயாவது சப்போட் இருக்கோணும் மச்சான்."

"அதுதான்.... எதுக்கும் அம்மாட்டையும் சொல்லுறன். 'ஓகே' சொல்லுவா எண்டு நினைக்கிறன்..." என, நம்பிக்கை இல்லாதவனாய் இழுத்துக்கொண்டே சொன்னான்.

விமலுக்கு... சரியான சந்தோசம். "முடிவை மாத்த மாட்டாய்தானே மச்சான்...? மாத்தினியெண்டால் செத்தாய் சொல்லிப்போட்டன்... என சிரித்துக்கொண்டே சொன்ன விமல்,

"அஞ்சலிக்கு ஹோல் எடு.. விஷயத்தை சொல்லுவம்" என்றான்.

4353,xcitefun-kajal-agarwal-3.jpg

அஞ்சலியிடம் விடயத்தை சொல்லவும் அவளுக்கு மட்டற்ற சந்தோசம்.

இவனுக்குள்ளும் இப்பொழுது தெளிவான முடிவொன்று தோன்றியிருந்தது.

பின்னர் தனது தாயிடமும் அதைப்பற்றி 'முழுவதும்' சொன்னான். முதலில் கொஞ்சம் தயங்கிய தாயார், "தம்பி இது வாழ்க்கை... நல்லா யோசிச்சு முடிவெடு! எந்தக் காரணங்கொண்டும் அந்தப் பிள்ளையை கைவிடக் கூடாது!! எங்களால இப்ப உடனயே வர ஏலாது. நல்லபடியா செய் தம்பி.நான் பிறகு வந்து பாக்கிறன்." என்றா... வரமுடியவில்லையே என்ற மனவருத்தத்துடன்.

(அப்பொழுது இலங்கையில் நிலவிவந்த சமாதான நிலைமை குழம்பிப்போய்... போர் ஆரம்பித்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வருவதற்கு இராணுவத்திடம் 'கிளியறன்ஸ்' எடுத்து வரவேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது)

அதன் பின்னர், அஞ்சலியையும் அவனது அம்மாவையும் போனில் கதைக்க வைத்தான்.

அவர்கள் கதைத்ததில், அம்மாவுக்கும் அவளுக்கும் நெருக்கம் அதிகமாகி இருவரும் நன்கு உறவாகினார்கள். அவனது அம்மாவிடம் இருந்து கிடைத்த சம்மதமும் அவனுக்கு புதுத் தெம்பைக் கொடுத்திருந்தது.

ap-08.jpg

ஆனாலும், இவனது மனது முழுமையாக அவளை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள தயாரான அந்தக் கணங்கள்... அவளது பிரிவை நினைத்தான வலிகளையும் சேர்த்தே கொடுத்தது.

ஒருவழியாக அஞ்சலியை பதிவுத்திருமணம் செய்துகொள்வது என்ற முடிவுக்கு வந்தவன்,

"சரி மச்சான்... இன்னும் எட்டு நாள்தான் இருக்கு! அதுக்குள்ள எப்பிடி எல்லாத்தையும் அரேஞ் பண்ணுறது...?" என கலக்கத்தோடு அவன் கேட்கவும்,

"அதப்பற்றி யோசிக்காதை மச்சான்! அதெல்லாத்தையும் நான் பாத்துக்கொள்ளுறன். எனக்கு ரெஜிஸ்ராறை கொஞ்சம் பழக்கம். நான் அவவோட கதைக்கிறன். இதுக்குள்ள நல்ல நாள் எப்ப வருதெண்டு பாத்திட்டு.... முடிச்சிடுவம் " என்று சொன்னவன்... தனது போனில் இருந்த ஒரு சாத்திரியாரின் நம்பருக்கு போன் பண்ணி நல்ல நாள் வரும் 18ஆம் திகதி இருக்கு என்று அறிந்து கொண்டான்.

"நீ ஒண்டுக்கும் யோசிக்காதை...! நாளைக்கே, அஞ்சலி வந்ததும்... அவளோட போய் அவளுக்கு சாறியும், உனக்கு உடுப்பையும் எடுத்து வை! நான் றெஜிஸ்ராறோட கதைச்சிட்டு நேரம், மற்ற விசயங்களை சொல்லுறன். வாற 18ஆம் திகதிக்கு பிளான் பண்ணியிருக்கு எண்டுறதையும் மறந்திடாமல் சொல்லு. அவள் அண்டைக்கு வீட்டைவிட்டு வெளிய வரேலாமப் போச்சுதெண்டால் கதை அம்போதான். " என்றான் விமல்.

"அதெல்லாம் சரி மச்சான்... எங்க வச்சு எழுதிறது? அதோட அவள் சாறி உடுத்திக்கொண்டு அவளின்ர வீட்டையிருந்து வெளிக்கிடவும் ஏலாது. தாய் சந்தேகப்படுவா!

என்ன பண்ணுறது....?" என விமலைப் பார்த்துக் கேட்டான் அவன்.

"ஓமடா... இப்பிடி ஒரு பிரச்சினைவேற இருக்கல்லோ!!!" என்றுவிட்டு... சிந்திக்க ஆரம்பித்தான் விமல்.

தொடரும்...

[18]

ம்ம்ம்ம்.... என்ன பண்ணலாம்? என யோசித்துக் கொண்டிருந்த "ஐடியா ஐயாத்துரை" விமலின் மூளைக்குள் பொறிதட்டியது.

"டேய்... எழுதுறத றெஜிஸ்ரார் வீட்டில வச்சே எழுதலாம். முதலொருக்கா... என்னோட வேலை பாக்கிற

சிங்களப் பெடியன் ஒருத்தன் அவவின்ர வீட்டில வச்சுத்தான் எழுதினவன்.

அதை நான் அவவோட கதைக்கிறன்....அதப்பற்றி யோசியாதை! " என விமல் சொல்லவும்,

Oru-Kal-Oru-Kannadi-Ok-OK-Stills-Pics-Unseen-stills-Gallery-5.jpg

அப்ப சாறி கட்டுறதுக்கு.... என அவன் ஆர்வமாகக் கேட்க,

"நீ எப்பவும் சாறி கட்டுறதிலயே நில்லு!!!

ஏன் பஞ்சாபி போட்டுக்கொண்டு எழுதினா எழுதுப்படாதோ?" என நக்கலாகச் கேட்டுவிட்டு...

"சாறி கட்டுறதுக்கு ஒரு நல்ல இடம் இருக்கு மச்சான். எங்க சொல்லு பாப்பம்..?" என புதிர் போட்டான் விமல்.

இவனுடைய மண்டைக்குள் ஒன்றும் தோன்றவில்லை.

கீழுதட்டைப் பிதுக்கி... ரெண்டுநாள் மீசை நுனியை தொடுமளவுக்கு யோசித்துப்பார்த்தான்.

இறுதிவரை முடியாமல்,

"எங்க மச்சான்? நீயே சொல்லன்....!" என்றான் விமலிடம்.

"எங்கட கூட்டு துவாரகாவை மறந்திட்டியோ???

அவளுக்கு போனைப்போட்டு விசயத்தை சொல்லு" என்று விமல் சொன்னபோதுதான் இவனுக்கு... "அய்யய்யோ, ஒத்துழைக்கிறதுக்கு ஒரு குடும்பமே இருக்கு. இதை மறந்து போட்டமே...." என்ற எண்ணம் தோன்றியது.

இப்ப எல்லாம் ஓகே மச்சான். நாளைக்கு நான் எல்லாத்தையும் முடிச்சுப்போட்டு போன் அடிக்கிறன்...

நீயும் உன்ர அலுவல் எல்லாத்தையும் முடி.

அஞ்சலி, துவாரகா, றிஷானா எல்லாருக்கும் விஷயத்தை தெளிவாச் சொல்லு.

உடுப்பு எல்லாத்தையும் எடுத்திரு... சாறி வாங்கினா பிளவ்ஸ் தைக்கோணும்... மறந்திடாதை.

அந்த விஷயத்தில... அஞ்சலியாச்சு நீயாச்சு! என சொல்லிவிட்டு...

அவனை ஓரக்கண்ணால் பார்த்தான் விமல்.

அண்ணோய்...! எங்களுக்கு அளவெல்லாம் தெரியுமாக்கும். தெரியாட்டி அங்க கேட்டு தெரிஞ்சு கொள்ளுறம்.

உங்களுக்கு எப்பவுமே நக்கல்... சிரிச்சுக்கொண்டே சொன்னவனிடம்,

சரி சரி... கதையளை விட்டிட்டு அலுவலைப் பாக்கோணும்.

நாளைக்கு முழுவேலையையும் முடிச்சுடோணும் என்று சொல்லிக்கொண்டே

விமலும் அவனும் கிளம்பினார்கள்.

அடுத்தநாள்... 15 ஜனவரி 2007

விமல் தன் பங்கு வேலையை கச்சிதமாக முடித்திருந்தான்.

ரெஜிஸ்ரார் ரெடி...எழுதுறதுக்கு இடமும் ரெடி !!!

அன்று... இவனும் அஞ்சலியும்... கூடவே துவாரகா,றிஷானாவுடன்,

லிட்டில் ஏசியாவில் தமக்குரிய ஆடைகளை வாங்கினார்கள்.

அவளுடைய புடைவையின் நிறத்திலேயே இவனும் தனக்கான சேர்ட்டினையும் எடுத்திருந்தான்.

அப்பொழுது துவாரகா திடீரென்று கேட்டாள்,

அஞ்சுவும் நீயும் மோதிரம் மாத்தேலையோடா?

அதற்கு அஞ்சு... "இல்லை துவா. மோதிரம் மாத்தலாந்தான்.

என்னப் பொறுத்தவரேல மோதிரம் போட்டா... விரலைவிட்டு கழட்டக்கூடாது.

ஆனா, அதைப் போட்டுக்கொண்டு வீட்ட போனா அம்மா கேப்பா.

பிறகு எல்லாம் மாட்டீடும். அதுதான் வேணாம் எண்டு விட்டிட்டம்.

தாலி கட்டி கலியாணம் பண்ணைக்குள்ள மாத்துவம்...." சொல்லிவிட்டு இவன் பக்கம் பார்த்து

மென்மையாக புன்னகைத்தாள் கொஞ்சம் வெட்கத்துடன்.

0.jpg

பிளவ்ஸ் தைக்கக் கொடுப்பதற்கு செல்கையில்... அவர்கள் மூவரும் இவனைக் கழட்டிவிட்டுப் போனதில்

இவனுக்குக் கடுப்பாகிவிட்டது.

முன்னாலிருந்த ஒரு தேத்தண்ணிக் கடைக்குள் போய் ... ஒரு பிளேன்ரீ-கையில சிகரெட்.

தைக்கக் கொடுத்துவிட்டு இவனைத்தேடிய அஞ்சலி போன் பண்ணவும்,

இவனும் அவசரத்தில்... கையில் வைத்திருந்த சிகரெட்டோடு வாசலுக்கு வர.. அஞ்சலி வரவும் சரியாக இருந்தது.

அஞ்சலி தன் கையிலிருந்த சிகரெட்டைத்தான் பார்க்கிறாள் என்று உணர்ந்தவன்...

ஆசையாக ஒரு கடைசி இழுவை இழுத்துவிட்டு கீழே போட்டு மிதித்துவிட்டு.

"தைக்கக் குடுத்தாச்சே... ?"என சாதாரணமாகக் கேட்டவனிடம்,

"ஏன் முழுசாக் குடிச்சுப்போட்டுக் கேக்க வேண்டியதுதானே?" கொஞ்சம் கோபமாகக் கேட்டாள் அஞ்சலி.

saguni-stills-pics-020911+_4_.jpg

அஞ்சலிக்கு அவன் சிகரெட் பிடிப்பது, பியர் குடிப்பது எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தான்.

ஆனாலும் அவளுக்கு முன்பாக அவன் சிகரெட் குடித்தது அன்றைக்குத்தான்.

அதுதான் அவளுக்கு அந்தக் கோபம்.

அதைவிட முக்கியமான 'நிபந்தனை-ஒப்புதல்' ஒன்று இது சம்மந்தமாக இருவருக்குள்ளும் இருந்தது.

அதாவது "கலியாணம் பண்ணினாப் பிறகு சத்தியமா இது ஒண்டையும் தொடமாட்டன்" என்று

சத்தியம் பண்ணியிருந்தான் அவன்.

"இன்னும் மூண்டு நாள்தானே அதுக்குப்பிறகு அடிச்சா இருக்கு உங்களுக்கு..." என்று

அவன் கையில் கிள்ளியபடி அஞ்சலி சொல்லவும்,

"உனக்கு நல்ல ஒருத்திதான் வந்து வாச்சிருக்கிறாள். நல்லது... நல்லா வாங்கிக் கட்டு! "

என்று துவாரகா எடுத்துவிட,

கோபத்தில் இருந்த அஞ்சலிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அவனும் 'அதுக்குப்பிறகு இதுகளை விட்டிடுவம்' என்ற முடிவோடுதான் இருந்தான்.

வழமையான கலகலப்புக்கு திரும்பிய அவர்களின் கலகல பேச்சுக்களுடன் அங்கு வந்து சேர்ந்த

விமலோடு அவனுடைய நக்கல் பேச்சுக்களும் மேலும் கலகலப்பூட்டியது.

சாட்சிக் கையெழுத்து வைப்பதற்கு விமலும் றிஷானாவும் தயார். கலந்துகொள்ள மேலதிகமாக

ஒருசில நம்பிக்கைக்குரிய நண்பர்கள். அனைத்து ஒழுங்குகளும் திட்டமிட்டபடியே முடிந்திருந்தது.

இரு நாட்பொழுதுகள் ஒரு சில சந்திப்புக்களோடு கழிந்தது.

அடுத்த நாளின் விடியலுக்கான இராப்பொழுதில்...

அஞ்சலியும் அவனும் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது...

"டேய் புருஷா...!" எனச் செல்லமாக அழைத்தவளுக்கு முத்தங்கொடுக்க வெளிக்கிட்டவன்

ஈரமான தன் செல்போனை துடைக்கவேண்டியதாகிவிட்டது.

Pranitha+stills+from+Udhayan+movie%252C+Pranitha++pics+%25288%2529.jpg?watch-pranitha-from-udhayan-movie-glamour--images

"என்ர செல்லப் பெண்டாட்டியே... நாளையில இருந்துதான் நாங்கள் புருஷன் பெண்டாட்டி.

இண்டைக்கு ஒரு இரவுதான் இருக்கு லவ்வர்ஸா லவ்பண்ண..." என அவன் சொல்ல,

"அதுக்குப்பிறகு லவ் பண்ண மாட்டியாடா...???" என அப்பாவித்தனமான கவலையோடு கேட்டாள் அஞ்சலி.

"ஏய் அஞ்சு... அப்பிடியில்லம்மா, இப்ப லவ் பண்ணுறன். அதுக்குப்பிறகு ரொம்ப லவ் பண்ணுவன்!" என்று

அவன் சொல்லி முடித்த கையோடே,

"ம் ம்... இப்ப இப்பிடித்தான் சொல்லுவியள். கலியாணம் கட்டினாப்பிறகு கணக்கிலயே எடுக்க மாட்டியள்.

இந்த ஆம்பிளையளே இப்பிடித்தானப்பா" என்று வேண்டுமென்றே விளையாட்டுக்கு அஞ்சலி அவனைக் கடுப்பேற்ற...

றொமான்ஸ் மூட்டிலிருந்து கொஞ்சம் சீரியஸான மூட்டுக்கு வந்தவன்,

"அஞ்சுக் குட்டி... நாளைக்கு காலம்பிற வெள்ளணை எழும்போணும். நீ படுமா. நானும் படுக்கிறன்.

விடிய துவாரகாவுக்கு போன் பண்ணி நேரா அவளின்ர வீட்டுக்குப் போய் சாறிகட்டி வெளிக்கிடு.

சாறி எல்லாம் அங்கதான் இருக்கு. என்னெண்டாலும் உடன போன் பண்ணு.

வரைக்குள்ள மறக்காமல் நஷனல் ஐசியை எடுத்துக்கொண்டு வா. கவனம்!"

"11.30 க்குத்தான் ரைம். நானும் விமலும் நேரா ரெஜிஸ்ரார் வீட்டுக்கு வந்திடுறம். ஓகே மா. குட் நைட்"

என்று சொல்லிவிட்டு செல்போனை வைக்கும்போது நேரத்தைப் பார்த்தான். அதிகாலை 3.42 காட்டியது.

அவர்களுக்குரிய அந்த முக்கியமான நாள் விடிந்துகொண்டிருந்தது.

தொடரும்...

[19]

18 ஜனவரி 2007

அன்றைய நாள் அவர்களுக்காகவோ என்னவோ மிக அழகான இதமான காலநிலையோடே விடிந்திருந்தது.

கொழும்பின் வழக்கமான 'திடீர் மழை' எல்லாம் அன்றைக்கு அவர்களை தொந்தரவு செய்யவில்லை.

அவர்களின் காதலை இயற்கையும் வரவேற்றிருக்க வேண்டும் போல.

நேரம் காலை 8.30 ஆகியிருந்தது.

லேட்டாகப் படுத்ததாலோ என்னவோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவனை.... எழுப்பிக் கொண்டிருந்தான் விமல்.

"டேய்... எழும்படா!"

"கலியாண மாப்பிள்ளை தூங்கிக்கொண்டிருக்கிறார் பாரன்...!" என நாக்கைக் கடித்தபடி... சொல்லிக்கொண்டே

அவனது முதுகில் தட்டி எழுப்பியபிறகுதான் எழுந்தான் அவன்.

எழும்பி உட்கார்ந்த சில வினாடிகளில் சுயநினைவுக்கு வந்தவனின் கண்கள் நேராக சுவரில் தொங்கிக்கொண்டிருந்த மணிக்கூட்டுப் பக்கம் போனது.

"டேய் விமல் எட்டரை ஆச்சுடா!!! ஏன்டா லூசா வெள்ளணவே எழுப்பேல...?!" என்று கத்தவும்,

விமல் பொறுமையாக... "ஒரு கையெழுத்து வைக்கிறதுக்கு இப்ப எழும்பினாப் போதும் மச்சான்..." என நக்கலோடு சொல்லிவிட்டு,

"நீ முதலில வெளிக்கிடு. நான் மற்ற எல்லா அலுவலையும் பாக்கிறன். எதுக்கும் ஒருக்கா

அஞ்சலிக்கும் போனைப்போட்டுக் கதை. துவாரகாவை நான் கோல் பண்ணி எழுப்பீட்டன்.

அவள் றெடியா இருக்கிறாள். அஞ்சலி போனாச் சரி..." என்றவும்,

"ம்ம்ம்ம்.... ஒரு முடிவோடதான் இருக்கிறாய், சரி சரி...." என சிரித்துக்கொண்டே சொல்லிக்கொண்டு

குளியலறைக்குள் நுழைந்தான் அவன்.

துவாரகா வீட்டில்...

அஞ்சலி,றிஷானா மற்றும் அஞ்சலியின் இன்னொரு சினேகிதி இந்துஜா.

அஞ்சலி புடைவை உடுத்தி தயாராகிக் கொண்டிருந்தாள்

எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல்.... நேரங்கள் கடந்துகொண்டிருந்தன.

றெஜிஸ்ரார் வீடு முன்பாக விமலும் அவனும்... அவர்களது நண்பர்கள் சாந்தன், டினேஸ் எல்லாருமாக

அஞ்சலியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

நேரம் 11.15

அவன் அஞ்சலியின் நம்பருக்கும் துவாரகாவின் நம்பருக்கும் மாறி மாறி போன் பண்ணிக்கொண்டிருந்தான்.

றிங் போய்க்கொண்டிருந்தது.... பதில் இல்லை. இவனை அறியாமலேயே கொஞ்சம் பதட்டம் இவனுக்குள்.

தொடர்ந்து அப்படியே துவாரகாவுக்கு அடித்த போனுக்கு பதில் அளித்தவள்...

"டேய்.... உன்ர மனிஷி ரெடி ஆகிட்டா...! அவளத் தூக்கிக்கொண்டு ஓடிப்போயிட மாட்டம்.

வந்துகொண்டிருக்கிறம், அவசரப்படாதை!" என்று சொல்லி ஒருசில நிமிடங்களில்...

ஒரு ஓட்டோ அவர்களை நெருங்குகின்றது.

Kajal_Agarwal%20(23).jpg

Kajal%20Agarwal%20Cute%20in%20Saree%2010.jpg?m=1319858144

அவர்கள் எதிர்பார்த்தபடியே... அஞ்சலி புடைவை உடுத்திய அழகு தேவதையாக ஓட்டோவிலிருந்து இறங்கினாள்.

அவளைப் பார்த்த கணத்தில் இவன் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தான்.

அதுவும் ஒரு கவிதையாய்த்தான் இருந்திருக்க வேண்டும்.

அத்தனை அழகாய் புன்னகையோடு நடந்துவந்த தன் தேவதையை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

நேரம் 11.30 தாண்டியிருந்தது

ஏற்கனவே விமல் றெஜிஸ்ராரிடம் எல்லாவற்றையும் சொல்லியிருந்தான் என்றபடியால்,

வழமையான வழக்கங்களோடு நல்லநேரத்தில் ஆரம்பித்தது அவர்களின் பதிவுத் திருமணம்.

"போட்டோஹிராஃபர்" விமல் சுத்திச் சுத்தி போட்டோ எடுத்தார்.

அவனதும் அஞ்சலியினதும் வயது வரம்புகள் உறுதிப்படுத்தப்பட்டு...

பின் வழமையான ஒப்புதல் உறுதிமொழிகளோடு, அந்த காதல் திருமணத்தின் சாட்சிகளாக விமலும் றிஷானாவும் கையெழுத்திட....

அவர்களின் கையெழுத்துக்களை தம் ஒப்புதலாக இட்டுக் கொண்ட அந்தக் கணங்களிலிருந்தே

சட்டப்படி கணவன் மனைவி என்ற நிலையை அடைந்தார்கள் அவனும் அஞ்சலியும்.

இனிதாய் ஒரு காதல் திருமணம் சட்டப்படி நிறைவேறியபின் இருவரோடும் கைகுலுக்கி

தனது முதல் வாழ்த்தினை தெரிவித்திருந்தார் அந்த விவாகப் பதிவாளரான சிங்களப் பெண்மணி.

அதன்பின்.... வந்திருந்த நண்பர்களின் வாழ்த்துமழையில் நனைந்தது அந்த காதல் ஜோடி.

இப்படி இனிதாய் நடந்தேறிய திருமணத்தின்பின், 'அடுத்து எங்கே செல்வது?' என்று

அனைவருக்குள்ளும் கேள்வி எழ...

அங்கேயும் விமல்தான்... " எனக்கும் பார்ட்டி தேவைதான். ஆனால் சாறியோட அஞ்சலி வெளியால போறது நல்லதில்ல. யாராவது பார்த்தால் ஏதாவது கேப்பினம். முதலில துவாரகா வீட்ட போவம். அதுக்குப்பிறகு யோசிப்பம்" என சொல்லவும் அதுதான் சரியென்று அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் இவனின் மனசுக்குள் ஏக்கமொன்று எட்டியெட்டிப்பார்த்து ஏக்கமானது.

"வெட்டின கேக் எல்லாத்தையும் வெட்டி வெட்டி சாப்பிட்டிட்டு... ஒரு போர்மாலிட்டிக்குத் தன்னும்

தான் கட்டின மனிஷிக்கு ஒரு 'கிஸ்' பண்ணச்சொல்லி யாரும் கேக்கேலையே" என்ற சின்னக் கோபம் இவனுக்குள்.

'துவாரகா வீட்டுக்கு போகைக்குள்ளையாவது ஓட்டோவிலை தனியா தங்கள் ரெண்டுபேரையும் விடுவாங்கள்' என்று ஒரு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்க,

"அஞ்சு நீ எங்களோட வா... அவையள் வேற ஓட்டோவில வரட்டும்" என துவாரகா கூப்பிட்டதும்...

இவனுக்கு இன்னும் கடுப்பாகியது. " ஃபிறண்டாடீ நீ???பொறுடி பொறு....!!!

நாளைக்கு உன்ர உச்சந் தலையில இறுக்கி ஒரு குட்டுக் குடுக்கிறன்..." என தன் மனதுக்குள் பொருமிக்கொண்டான்.

பக்கத்தில் நின்ற விமலுக்கு இவனின் நிலைமை விளங்கினாலும்... "கொஞ்சம் அனுபவி ராசா அனுபவி!" என்பதுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டு... மனதுக்குள் சிரித்துக்கொண்டிருந்தான்.

துவாரகா வீட்டில் அவர்கள் நுழையும்போது துவாரகாவின் அப்பா அம்மா மற்றும் அவளின் அண்ணா எல்லாருமே சந்தோசத்துடன் வரவேற்றார்கள்

. அவனும் அஞ்சலியும் துவாரகாவின் பெற்றோர்களின் பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார்கள். "நூறாண்டு காலம் சேர்ந்து நல்லபடியா வாழவேணும்" என்று சைகையால் வாழ்த்தியபோது தங்கள் இருவரினதும்

பெற்றோர் இல்லாத மனக்குறையை தீர்த்துவைத்தார்கள் அவர்கள்.

வாய்மொழி வராவிட்டாலும் அந்த மனதார்ந்த ஆசீர்வாதம் இறுதிவரைக்கும்

தம் வாழ்வில் துணை இருக்கும் என அவன் முழுமையாக நம்பினான்.

"அஞ்சு... மேல வாம்மா" என மேல்மாடிக்கு துவாரகா அழைத்தது... சாறியை கழட்டி

பழைய உடுப்பு மாற்றுவதற்கென்று புரியாமல்.... அஞ்சுவுக்கு பின்னாலே இவனும் சென்றான்.

இவனும் மேலே வந்ததும்.... "கலியாணங்கட்டி ஒரு மணித்தியாலங்கூட ஆகேல, அதுக்குள்ள

மனிஷியின்ர சீலைத்தலைப்பை பிடிக்க வெளிக்கிட்டா. ம்ம்ம்ம்.... ஏதோ நடக்கட்டுமடா..." என

அவனுக்கு சொன்னபோதும் அதை அஞ்சலியைப் பார்த்து புன்னகையுடன் சொன்னாள் துவா.

"சரி... கொஞ்ச நேரம் பொறுங்கோ! அம்மா தேத்தண்ணி போட்டுக்கொண்டிருந்தவ.

நான் கீழ போய் எடுத்துக்கொண்டு வாறன்... " என்று சொல்லிவிட்டு துவாரகா விலகவும்....

இவனுக்குள் அத்தனை சந்தோசம்!

"நீ வலு ஆறுதலாவே வா.... ராசாத்தி! அவசரம் ஒண்டுமில்லை" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவன்,

அப்பாடீ.... ஒரு மாதிரி சந்தர்ப்பம் கிடைச்சிட்டு. எப்பிடியாவது.... ஒரு முத்தமாவது கொடுத்துவிட வேண்டுமென்ற

நினைப்பில், அஞ்சலியை நெருங்கினான்.

'அவன் ஏன் தன்னருகில் வருகின்றான்' என அஞ்சலியும் நன்கு உணர்ந்திருந்தாள்.

தன்னிலை மறந்தவளாய் சுவரோடு சாய்ந்தவள் கண்களை இறுக்கி மூடிக்கொண்ட போது

அவளின் உதடுகளை தொடாமலே தாண்டிச்சென்ற அவனது உதடுகள்....

அவளது காதில் முதன்முறையாக உரிமையோடு உச்சரித்தது.... "ஐ லவ் யூ அஞ்சு".

அவளது கரங்களை இறுக்கமாகப் பற்றியபடி....

அவனது உதடுகள் அவளது உதட்டினை நோக்கி மீண்டும் தேடி வந்து கொண்டிருந்தது.

original_varun-sandesh-nisha-agarwal_4ca1bf297e8e4.jpg

இன்னும் அவள் தன் கண்களைத் திறக்காமலேயே...

தன் கணவனின் முதல் முத்தத்துக்காக காத்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்...

[20]

இருவரின் மூச்சுக்காற்றும் கலந்து சூடாகிக்கொண்டிருக்க... நெருங்கிக்கொண்டிருந்த இரு உதடுகளுக்கும் இடையே,

நூலிழை இடைவெளிதான் இருந்திருக்கும்....!

Naan-Mahaan-Alla-12%5B4%5D.jpg

"அஞ்சு... தேத்தண்ணி" என்றபடி இருவருக்கும் தேநீரோடு வந்து நின்றாள் துவாரகா.

சட்டென விலகிய இருவரும் சாதரணமாய் இருப்பதுபோல் நடிக்கத்தான் முடிந்தது.

துவாரகாவும் அதைக் கண்டும் காணாததுபோல் சாதரணமாய் இருந்துவிட்டாள்.

இவனது கடுப்பினைச் சொல்லவே தேவையில்லை. "சிவபூசையில கரடி பூந்தமாதிரி வந்திட்டு...

சிரிப்பைப் பாரன்" என்ற மாதிரி துவாரகாவை முறைத்துப் பார்த்தான்.

"அஞ்சு... உன்ர புருஷனுக்கு உன்ர கையாலயே குடும்மா" என அவளிடம் தட்டை நீட்டினாள் துவா.

அவளும் அதை வாங்கி அன்புடன் அவனிடம் நீட்ட....

Kajal-Agarwal-in-Saree-320x320.jpg

தேநீரினை வாங்கி வாயில் வைத்துவிட்டு...

"துவா! உங்கட அம்மா சீனியை மிச்சம் பிடிக்கிறாவோ?" என வேண்டுமென்றே அவன் கேட்க,

அதற்கு அஞ்சு... "சீனி அளவாத்தானே இருக்கு!?" என்று குடித்துப் பார்த்துவிட்டுச் சொல்லவும்,

"அப்பிடியில்லை அஞ்சு... ! இவர் எதிர்பார்த்த 'ஸ்வீட்' வேற... அது ரொம்ப இனிக்கும் போல.

அதனால இந்த தேத்தண்ணி இனிப்பெல்லாம் இவருக்கு இனிக்காதுதான்... அப்பிடியெல்லாம் குடுக்கிறதெண்டால்...

நீதான் குடுக்கோணும் இவருக்கு" என துவா இரட்டை அர்த்தத்துடன் அவனை நக்கலடிக்க....

அதிகமாக வெட்கப்பட்டது அஞ்சலிதான்.

"வந்து குழப்பிப்போட்டு நக்கலைப் பாரன்... " என அவன் சொல்லவும்,

"டேய்! நீ ஏன் கடுப்பாகிறாய்? அஞ்சு லண்டன் போறதுக்குள்ள... ஹனிமூன் ஒண்டை அரேஞ் பண்ண வேண்டியதுதானே?!" என துவா சொல்லவும்....

"அய்யய்யோ....!!! ஏன் துவா!!!? நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கேலையோ?" என கொஞ்சம் பதை பதைப்புடன்தான் கேட்டாள் அஞ்சு.

"சும்மா சொன்னத்துக்கு ஏன் அஞ்சு இப்பிடிப் பதறுறாய்? இவனை நம்பி பூப்போல இருக்கிற உன்னை அனுப்புவமே?? பயப்பிடாதை! இவன் ஏதாவது சேட்டை விட்டா.. எங்களிட்ட சொல்லு!" என துவா அஞ்சலியைப் பார்த்துச் சொல்ல,

"ஏன்...... உங்களுக்கு என்னைப் பாத்தா அவ்வளவு கொடுமைக்காரனாவா தெரியுது?" என பாவப்பட்டவனாய் கேட்டான் அவன்.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே... கீழேயிருந்து விமல் அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருக்க,

"இதுக்குள்ள இவன் வேற... "என சலித்துக்கொண்டே

"சரி நான் கீழ போறன்....அஞ்சு! நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கீழ வாம்மா!" என சொல்லிவிட்டு...

அரை மனத்துடன் கீழே வந்தான்.

கீழே துவாவின் அண்ணா, விமல் எல்லாருமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

அஞ்சலி ட்ரெஸ் மாற்றிவிட்டு கீழே வரவும்....

"என்ன அஞ்சலி... இண்டைக்கு நைட் றேடியோவில திருமண வாழ்த்து எண்டு அறிவிச்சு விடுவமே?" - துவாரகாவின் அண்ணா சிரித்துக்கொண்டே கேட்டார்...

"ஐயோ அண்ணா... விளையாடதையுங்கோ! நாங்களே யாருக்கும் தெரியாமல் ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறம். இதை றேடியோவில சொன்னீங்கள் எண்டால்... எங்கட கதை அவ்வளவுதான்." என்று பதறினாள் அஞ்சலி

"நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னான். பயப்பிடாதையுங்கோ" என அவர் சொல்லவும்,

"அண்ணை நீங்கள் அறிவிச்சீங்கள் எண்டு வையுங்கோவன்... எவன்டா சாட்சிக் கையெழுத்து வச்சதெண்டு...

அஞ்சலியின்ர அப்பா என்னைத்தான் தேடித்திரிவார்" என்றான் விமல் சிரிப்புடன்..

சந்தோசமான அந்தப் பொழுதுகள் அனைவரின் மகிழ்ச்சி நிறைந்த மணித்துளிகளாகக் கரைகிறது.

நேரம் 2 மணியை தாண்டி விடவும்...

அஞ்சலி வீட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டதை அவனிடம் சொன்னாள்.

sridhar-movie-stills-3.jpg

சரி அப்ப.... நாங்கள் வெளிக்கிடுறம். இன்னொருநாள் வாறம் என துவாரகா வீட்டிலுள்ள அனைவரிடமும்

சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அஞ்சலிக்கு அவனை விட்டு போக மனமில்லை. அவனுக்கும் அவளை விட்டு விலக இயலவில்லை.

அவள் விரல்களை அவன் மெல்லியதாகப் பற்றி...

" அஞ்சு மனசுக்கு கஷ்டமா இருக்குமா. இத்தனை நாளா நான் உணராத ஏதோ ஒரு ஃபீலிங் மனசில...

இப்பவே போக வேணுமா..? இன்னும் ஒரு மணித்தியாலம் இருந்து கதைச்சிட்டு... " என அவன் தொடர,

"இல்லடா... இப்பவே லேட் ஆகிட்டுது. நான் பிறகு வாறன். ஆனால் இன்னும் நாலு நாள்தான் இருக்கிறபடியால்... அம்மா ஆக்களோட நிறைய வேலை இருக்கு. இப்ப, கிளாஸ் அது இதெண்டு பொய் சொல்லிப்போட்டும் வெளிக்கிட ஏலாது. இன்னும் சொப்பிங் பண்ணவே வெளிக்கிடேல. நேரம் கிடைச்சால் கட்டாயம் வருவன்தானே. "

"ஆனா நிச்சயமா..... போறதுக்கு முதல்நாள் ஈவ்னிங் நான் வருவன். சொறிடா......." - அவள் கண்கள் கலங்கத் தொடங்கியது.

"சரிம்மா...... நீ ஃபீல் பண்ணாத! போனில கதைக்கலாம்தானே"? என இவன் அவளிடம் சொல்லிக்கொண்டிருக்க,

"டேய் என்னடா... கட்டிடன முதல்நாளே அந்தப்பிள்ளையை அழவைக்கிறாய் போல...?" என விமல்

தனது வழமையான கதையை தொடங்கவும்தான்,

இருவரும் ஒரு நிலைக்கு வந்தார்கள்.

அஞ்சுவுக்கு இவனை விட்டு வீட்டுக்குபோக மனமில்லை. ஆனாலும் போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலையில்...

"நான் போய்ட்டு வரவா?" என அவள் கலங்கியபடி கேட்க...

"ஓகே அஞ்சு... ஒண்டுக்கும் யோசிக்காதை. கவலைப்படாமல் போய்ட்டு வா" என்று சொல்லிவிட்டு அவனும் கலங்கிய நெஞ்சோடு விடைகொடுத்தான்....மனமே இல்லாமல்.

"அவளது இந்த சின்னப்பிரிவுக்கே இப்படி கலங்கிறானே... இன்னும் நாலு நாளில அஞ்சலி லண்டன் போனாப்பிறகு இவன் என்ன செய்யப்போறானெண்டு தெரியேலயே!?" என விமலும் தன் மனதுக்குள் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டான்.

அஞ்சலி போய் சிறிது நேரத்தில்...

"ஒரு சிகரெட் குடு மச்சான்" என கேட்டவனிற்கு... தன் ஜீன்ஸ் பொக்கற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொடுத்தான் விமல்.

அதை வாங்கியவன், சிறிது நேரம் யோசித்துவிட்டு..... "

இனிம வேண்டாம் மச்சான்... இந்தா பிடி!நீயே வச்சுக்கொள். இனிமேல், நான் கேட்டாலும் குடுக்காத!" என கூறியவன்,

சிகரெட் பக்கற்றை விமலிடமே திருப்பி நீட்டினான்.

விமலுக்கு ஆச்சரியம் என்றாலும் எதையும் சொல்லாமல் அதை வாங்கி வைத்துக்கொண்டே.......

" ம்.... நல்ல விஷயந்தான்!" என சொல்லிவிட்டு அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

21 ஜனவரி 2007 - மாலை 4.00 மணி

வழமையாக தான் வரும் இன்ரர்நெட் கபேயில் இருப்பதாக அஞ்சலி போன் பண்ணவும்...

உடனேயே அங்கு விரைகிறான்.

2011072713117710221046233133.jpg

அஞ்சலியின் முகம் வழமைபோல் சந்தோசமாக இல்லை.

அவளருகில் போய் உட்கார்ந்தவனின் கைகளுக்குள் தன் கையைக் கோர்த்தவள் அவனது தோளில் சாய்த்துகொண்டாள். எப்பொழுதுமே அவள் அப்படித்தான். ஆனால் இன்று அவளின் செயலில் ஏதோ ஏக்கமும் கவலையும் நிறைந்திருப்பதாய் உணர்ந்தான்.

"உன்னை விட்டிட்டு போமாட்டன்...!" என கண்கள் கலங்க அவள் சொன்னபோது, அவனும் கலங்கிவிட்டான்.

அவனுக்குள் அடக்கிக்கொண்டிருந்த வலியில்.... அவனது கண்களும் கலங்கத் தொடங்கியது.

'யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?' எனத் தெரியாத அந்த நிமிடங்களை... மெளனங்கள் மட்டுமே ஆக்கிரமித்திருந்தன.

அவளிடம் இருந்தது வெறும் ஒரு மணித்தியால நேரந்தான். இன்னும் 15 நிமிடங்களில் அவளது தாயார் அழைத்துச்செல்ல வருவார் எனும் நிலையில்... பேசுவதற்கு நிறைய இருந்தும் இருவரும் எதுவுமே பேசாமல் இருந்தாலும்,

அவளது கைவிரல்களை அவனது கைகளால் மிருதுவாக கனிவோடு வருடிக்கொண்டிருந்ததே கோடி வார்த்தைகள் பேசியிருக்கும்.

love-failure-is-on-a-roll-35b1ed5b.jpg

நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்து அஞ்சலி சொன்ன அந்த வார்த்தைகள்...

இன்னும் அவன் நெஞ்சில் ஆழமாய் இருக்கும்

"நான் லண்டன் போனாப்பிறகு.... என்னைப் பாக்காமல் நீ எவ்வளவு கஷ்டப்படுவாய் எண்டு எனக்கு தெரியுமடா...! அழாதை... கவலைப்படாமல் நல்லா சாப்பிடு! உடம்பைப் பாத்துக்கொள்ளு. நிறையக் குடிக்காதை. சிகரெட் அடிக்காதடா. அச்சாப்பிள்ளையல்லோ!?"

"நான் போன உடனை கோல் பண்ண முடியுமோ தெரியேல.புது நம்பர் எடுத்திட்டு அனுப்பிறன். அக்கா ஒராள் வீட்டிலதான் இருப்பன். அங்கையிருந்து நிறையக் கதைக்க ஏலுமோ தெரியாது. ஆனா நேரங்கிடைக்கைக்குள்ள கட்டாயம் கதைப்பன். கவலைப்படாதடா. ஐ லவ் யூடா புருஷா" என அவள் சொல்லி முடிக்கும்போதே.... அவன் அழுதுவிட்டான். அவளுந்தான்....!

நேரம் நெருங்கியிருந்தது. மாலை 5.10

அவளது தாயாரின் அழைப்பு அவளுக்கு வரவும்... அதனை எடுக்காமலேயே,

"அம்மா கோல் பண்ணிட்டா... நான் போகோணும்" என்றவளிடம்,

"அஞ்சு! கண்ணை வடிவா துடைச்சிட்டுப் போமா! அம்மா என்ன ஆச்செண்டு கேப்பா..." என்று சொல்லவும் குனிந்து அவனது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தன் கண்களைத் துடைத்தவாறே அங்கிருந்து வெளியேற... அவனும் பின்னால் வருகிறான்.

வாசலில் வந்து நின்றவன், அவள் தனது தாயுடன் போனில் கதைத்துக்கொண்டு செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் அவளைப் பார்த்த இறுதிச் சந்தர்ப்பம் அதுவாகத்தான் இருக்குமென.... அவனுக்கு அப்பொழுது புரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.

அவர்களின் பதிவுத் திருமணத்தின் பின்னர்.... இருவரும் சந்தித்த முதலாவதும் இறுதியுமான சந்திப்பு அதுவாகத்தான் இருந்தது.

அடுத்த நாள்... 22 ஜனவரி 2007

அவனது தேவதை லண்டனை நோக்கி விமானத்தில் பறந்துகொண்டிருந்தாள்.

அந்த தேவதை மீதான காதலுடனும் அந்தக் காதல் மீதான நம்பிக்கைகளுடனும்

இவனது மனது அவனது தேவதையை வழியனுப்பி வைத்திருந்தது...!

தொடரும்...

Edited by கவிதை

  • Replies 56
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்,,,, நல்ல முன்னேற்றம்...

Edited by யாயினி

கல்யாண வாழ்த்துக்கள் கவி!!

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:

இந்தப் போத்தல் முடியுறதுக்குள்ள... நீ எனக்கு முடிவைச் சொல்லு. நான் மிச்ச அலுவலைப் பாக்கிறன்!"

பியர் கிளாஸை எடுத்து ஒரு துளி மிச்சமில்லாமல் குடித்துவிட்டு விமல் 'டொக்' என்ற சத்தத்துடன் மேசையில் வைக்கவும்....

"சரி மச்சான் செய்வம்....! எழுதுறதுக்குரிய வேலையளைப் பார்.

முத்தான கதைகயை

சத்தாகவே தந்து

பிள்ளைகளை குசிப்படுத்தும் .

பின்னாலை ??????????????

பதறாத காரியம் சிதறாது எண்டு என்ரை அப்பாச்சி அடிக்கடி சொல்லுறவா . என்னமாய் யோசிக்கிறாங்கள் ? அதுசரி ஏன் அந்தப் பெடிச்சி எழுதச் சொல்லி கேக்கிது ? பெடியில நம்பிக்கையில்லையோ ? எனக்கெண்டால் உது சரியா தெரியேல .

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:

குடிக்கிற, சிகரெட் பிடிக்கிற ஆளைக் கல்யாணம் கட்டும் முன் அந்தப் பிள்ளை பல தரம் யோசிக்க வேண்டும்!!!!! (சொறி கவி)

  • தொடங்கியவர்

ம்,,,, நல்ல முன்னேற்றம்...

ம்ம்ம்ம்.... இன்னும் இருக்கு யாயினி! :)

நன்றி...!

  • தொடங்கியவர்

கல்யாண வாழ்த்துக்கள் கவி!!

தங்களின் வாழ்த்துக்கள் அவனை சென்றடையட்டும்!

அவன் சார்பாக என் நன்றிகள் தங்களுக்கு உரித்தாகட்டும்! :)

  • தொடங்கியவர்

:rolleyes: :rolleyes: :rolleyes:

ஏன் இப்பிடி முழுசுறீங்க இசை??!!! :unsure::)

இதுக்கே இப்பிடி முழுசினால்.................. :huh::)

  • தொடங்கியவர்

பதறாத காரியம் சிதறாது எண்டு என்ரை அப்பாச்சி அடிக்கடி சொல்லுறவா . என்னமாய் யோசிக்கிறாங்கள் ? அதுசரி ஏன் அந்தப் பெடிச்சி எழுதச் சொல்லி கேக்கிது ? பெடியில நம்பிக்கையில்லையோ ? எனக்கெண்டால் உது சரியா தெரியேல .

பதறாத காரியம் சிதறாதுதான் கோ...! அது அப்ப மட்டுமில்லை இப்பயும் பொருந்தும்!

ஏதாவது புரிஞ்சிருக்குமெண்டு நினைக்கிறன்! :D:icon_idea:

சில நேரங்களில் நாம் மனமில்லாமல் செய்யும் விடயங்கள்தான் கடைசியில் கைகுடுக்க நிக்கும்! இந்தக் கதையில் என்ன ஆகுதெண்டு பாப்பம்! :unsure:

ஏன் அந்தப்பிள்ளை எழுதச்சொல்லி நிண்டதெண்டு கேட்டுச் சொல்லுறன் கோ! :D

இப்ப உங்களுக்கு திருப்திதானே?! :lol:

  • தொடங்கியவர்

:rolleyes: :rolleyes: :rolleyes:

விசுகண்ணை! நீங்களாவது சொல்லுங்களேன்... ஏன் இப்பிடி முழுசுறீங்கள் எண்டு!???

சத்தியமா எனக்கு ஒண்டும் விளங்கேல! :rolleyes: :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்

குடிக்கிற, சிகரெட் பிடிக்கிற ஆளைக் கல்யாணம் கட்டும் முன் அந்தப் பிள்ளை பல தரம் யோசிக்க வேண்டும்!!!!! (சொறி கவி)

அடுத்த பகுதியில் இது தொடர்பான ஒரு உரையாடல் இருக்குது. அதை சொல்வதற்கு முன்பே கேட்டுவிட்டீர்கள் அக்கா. அதை வாசிக்கும்போது கொஞ்சம் தெளிவு வரும்.

காதலிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே அவனே அவளிடம் தன் பழக்கவழக்கம் எல்லாவற்றையும் சொல்லியிருந்தான். அதெல்லாம் தெரிந்துதான்... அவனை அவள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டாள். அதன்பின்னர், பல இடங்களில் இது சம்மந்தமான சில முக்கிய சம்பவங்களும் நடந்திருந்தன. அவை... தொடர்வதில் தொடரும்!

உண்மையான விடயங்களை எழுத ஆரம்பித்தபின்... அவனைப் பற்றிய விடயங்களையும் உண்மையானதாகவே எழுத வேண்டுமல்லவா?

( இதுக்கெல்லாம் ஏன் 'சொறி' கேக்கிறீங்கள் அலை அக்கா? ) :)

தண்ணி அடிக்கிறவனெல்லாம் கெட்டவனுமில்லை...!

தண்ணி அடிக்காதவனெல்லாம் நல்லவனுமில்லை...!!

Edited by கவிதை

தண்ணி அடிக்கிறவனெல்லாம் கெட்டவனுமில்லை...!

தண்ணி அடிக்காதவனெல்லாம் நல்லவனுமில்லை...!!

கெட்டவன், நல்லவன் என்பதற்கல்ல முதலில் சிகரெட்டின் நாத்தத்தைப் பொறுக்க வேண்டுமே. இடைக்கிடை சந்திக்கையில் இதுகள் பெரிதாகத் தெரியாது, அதை விடக் காதல் கண்ணில்லாதது. அதிவிட உடலுக்குத் தீங்கானது!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை போற போக்கைப் பார்த்தால் நான் நினைக்கிறேன் வெளி நாட்டுக்கு படிக்க வந்த நாயகி இங்கே மனசு மாறி வேறு யாரையும் பார்த்திருப்பார் :D ...18 வயதிற்கு முன் ஆண்/பெண்ணிற்கு வருவது அதுவும் முக்கியமாக பெண்ணிற்கு வருவது ஊடல்[ஈர்ப்பு] இது உண்மையான காதலாக இருக்காது.

இந்த கதை போற போக்கைப் பார்த்தால் நான் நினைக்கிறேன் வெளி நாட்டுக்கு படிக்க வந்த நாயகி இங்கே மனசு மாறி வேறு யாரையும் பார்த்திருப்பார் :D ...18 வயதிற்கு முன் ஆண்/பெண்ணிற்கு வருவது அதுவும் முக்கியமாக பெண்ணிற்கு வருவது ஊடல்[ஈர்ப்பு] இது உண்மையான காதலாக இருக்காது.

:o ஏன் ரதி அந்தப் பெண்ணைப் பற்றி அப்படி நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ மிகுதி போடுவிங்கள் என்று கேட்பதற்கு தயக்கமாக இருக்கு....ஆனால் யாராச்சும் கேட்டால் தானே மிகுதியைப் போடுறீங்கள் கவிதை அண்ணா..அந்த நிலையை சற்று மாற்றிக் கொண்டால் நன்று...குறையாக சொல்ல இல்லை...

எப்போ மிகுதி போடுவிங்கள் என்று கேட்பதற்கு தயக்கமாக இருக்கு....ஆனால் யாராச்சும் கேட்டால் தானே மிகுதியைப் போடுறீங்கள் கவிதை அண்ணா..அந்த நிலையை சற்று மாற்றிக் கொண்டால் நன்று...குறையாக சொல்ல இல்லை...

பொறுமைக்குச் சோதனை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:o ஏன் ரதி அந்தப் பெண்ணைப் பற்றி அப்படி நினைக்கின்றீர்கள்?

கதாநாயகனோட அஞ்சலி சேர மாட்டார் என இந்த கதையில் ஆரம்பத்திலேயே "கவிதை"சொல்லி விட்டார்...நான் நினைக்கிறேன் இது கவிதையின் சொந்தக் கதை அது தான் அவரால் இவ்வளவு அனுபவ பூர்வமாக எழுத முடிகிறது...எந்த ஒரு ஆணும் தாங்கள் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றினால் உடனே அதை கதையாக எழுத மாட்டார்கள்.வயது போன பிறகு வேண்டுமானால் எழுதுவார்கள்...அஞ்சலி தனிய படிக்க வந்திருப்பார்...தனிமை இன்ன சில காரணங்களால் அஞ்சலி தான் விட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்...ஆனால் சரியாகத் தெரியாமல் இது பற்றி கதைப்பது கவிதையின் கதையை பாதிக்கும் என நினைக்கிறேன்...ஆகவே இதைப் பற்றி கதைக்காமல் விட்டு,விட்டு கவிதை எழுதி முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருப்பதே நல்லது :)

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [18] ம் பகுதி [17] உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

:)"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை" :(

சிகரெட்டை எழுத்துக்குப் பின்பு தொட்டிருக்காவிட்டால் மிகமிக நன்று!!!! :) விரைவாக எழுதுங்கள் கவி, வாசகர்களை இழுத்தடிக்காமல் :lol:

:o ஏன் ரதி அந்தப் பெண்ணைப் பற்றி அப்படி நினைக்கின்றீர்கள்?

ஒரு பெண்ணுக்குத் தான் இன்னொரு பெண்ணைப் பற்றி தெரியுமோ என்னவோ! :lol:

சுவையான கதையாகத் தான் போகிறது கவிதை. தொடருங்கள்.

ஒரு பெண்ணுக்குத் தான் இன்னொரு பெண்ணைப் பற்றி தெரியுமோ என்னவோ! :lol:

ஆகா... நீங்கள் ரதியைப் பெண் என்றா நினைக்கின்றீர்கள்??? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கவிதை அண்ணா 100 பச்சை எடுத்துட்டாரு.....:)

  • தொடங்கியவர்

எப்போ மிகுதி போடுவிங்கள் என்று கேட்பதற்கு தயக்கமாக இருக்கு....ஆனால் யாராச்சும் கேட்டால் தானே மிகுதியைப் போடுறீங்கள் கவிதை அண்ணா..அந்த நிலையை சற்று மாற்றிக் கொண்டால் நன்று...குறையாக சொல்ல இல்லை...

என்னால் முடிந்தவரைக்கும் விரைவாகப் போடவே முயற்சிக்கின்றேன். இரவில்தான் எழுத நேரமும் அதற்கான மனநிலையும் அமைந்துவருகின்றது.

சிலநேரங்களில் தாமதமானாலும் தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள்.

என்னால் முடிந்தவரை... விரைவாக நகர்த்த முயற்சிக்கின்றேன்.

தங்களுடைய ஆர்வத்துக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி யாயினி! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.