Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிந்தவர்கள் கூறுங்கள்

Featured Replies

தமிழ் ஈழத்தில் மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளதா? அல்லது இல்லையா? என்பதை படத்தை வடிவாக பார்த்து கூறுங்கள்.......

photo113jr.jpg

  • Replies 110
  • Views 13.5k
  • Created
  • Last Reply

தமிழீழப்பிரதேசத்தில் ஹெல்மேட் அணிய வேண்டும் எனும் கட்டுப்பாடு இல்லை. உங்கள் கேள்வியின் தொனி புரிகிறது.

அந்த கட்டுபாடு எனக்கு தெரிந்தவரை இன்னும் விதிக்கப்படவில்லை.வேகக்கட்டுபாடு மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இலங்கை அரசகட்டுபாட்டில் இருக்கும் யாழ்ப்பாண பகுதிகளில் கடந்த 3/4 வருடங்களுக்கு முன் கட்டயம் என கட்டுப்பாடு கொண்டுவந்தார்கள்.

  • தொடங்கியவர்

தவறாக நினைக்கவேண்டாம்...... எனக்கு உண்மை தெரியாது...... நான் முதல இந்த படத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சர்யபட்டேன்.... காரணம் தமிழீழ பொலிஸார் மிகவும் கடமை கண்னியம் கட்டுப்பாடோடு நடப்பவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்... அதனால் தான் எனக்கு இந்த படத்தை பார்த்ததும் ஒன்றுமே புரியாமல் போய்விட்டது...

ஒருவேளை ஏற்கனவே அவர்களுக்கு தண்டனை பணத்தை அறவிட்டுவிட்டார்களோ தெரியாது.

  • தொடங்கியவர்

உங்க கருத்துப்படி அங்கே அந்த சட்டம் நடைமுறையில் உள்ளதா?

இந்த சட்டம் வன்னியில் நடைமுறையில் இல்லை

வானம்பாடி, தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது இன்னமும் ஒரு போக்குவரத்து விதியாக வரவில்லை.

அங்கு காவல்துறையினால் போக்குவரத்து சம்பந்தமாக அமுலுக்கு கொண்டுவரப்பட்ட பட இருக்கும் விதிகள் அனைத்தும் அங்குள்ள களயதார்த்தத்தை கவனத்தில் எடுத்து தேவை கருதி அறிமுகப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படுகிறது.

எவை விபத்துக்களுக்கு உயிரழப்புகள் அங்கவீனங்களிற்கு அதிக காரணங்களாக இருக்கோ அவைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு விதிகளாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது படிப்படியாக.

  • கருத்துக்கள உறவுகள்

வானம்பாடி வேடிக்கையான விடயம் என்னவென்றால் அரச கட்டுப்பாட்டு பகுதியில் கெல்மட் போட்டால் ஆமிக்காரன் அடிக்கிறான்.கெல்மட் போடாவிட்டால் பொலிசுக்காரன் தண்டம் அறவிடுகிறான்.புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் விரைவில் கட்டாயமாக்கப்படும்.அதற்தாக வேண்டியே தமிழீழ பொலிஸ் கெல்மட் இல்லாமல் மோட்டார்சைக்கிள் பாவிப்பதில்லை.

சட்டம் இருக்குமெண்டால் பொடிப்பிள்ளையள் உப்பிடி

காவல்துறைக்கு பின்;னாலை

விசில் அடிச்சுக்கொண்டு போவினமை.

உந்தச்சேட்டையெல்லாம் எங்கடைநாட்டுப்பொலிசிட்டை

வாய்க்காது கண்டியளோ.

சட்டம் இருக்குமெண்டால் பொடிப்பிள்ளையள் உப்பிடி

காவல்துறைக்கு பின்;னாலை

விசில் அடிச்சுக்கொண்டு போவினமை.

உந்தச்சேட்டையெல்லாம் எங்கடைநாட்டுப்பொலிசிட்டை

வாய்க்காது கண்டியளோ.

அப்படி சொல்லுங்கள் ஊர் குருவியாரே. ஊர்குருவி சொன்னால் ஊரே சொன்ன மாதிரியாம் நீங்கள் சொன்னாலும் அப்படித்தானே :?:

சட்டத்தை மீறாதவரை பொலிசுக்கு பின்னுக்கு என்ன முன்னுக்கு விசிலடிக்கிறதுக்கும் பொதுமக்களுக்கு உரிமையிருக்கு. அந்த அடிப்படைச் சுதந்திரத்தைத்தான் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

மாமுல் கேக்கிற மாமா என்று விலகி ஓடாமல் நம்பிக்கையோடு அணுகி உதவிபெறக் கூடிய காவல்துறை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி சொல்லுங்கள் ஊர் குருவியாரே. ஊர்குருவி சொன்னால் ஊரே சொன்ன மாதிரியாம் நீங்கள் சொன்னாலும் அப்படித்தானே :?:

அப்ப ஒறிஜினல் குருவியெங்கை ? :(

  • கருத்துக்கள உறவுகள்

வேகக் கட்டுப்பாடே 40km/h என்றிருக்கும் போது தலைக்கு பாதுகாப்பிற்கு கெல்மட் அணிய வேண்டிய தேவை ஏற்படாது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா நினைத்துக் கொண்டிராமல் வாகனச் சட்ட விதிகளை எழுதுங்கள்.

முன்னாலோ நம்பர் இல்லாமல் காவல்

பின்னாலோ ஹெல்மட் இல்லாமல் சுற்றல்

தயவு செய்து வாக்காலத்து வாங்காமல் பிழைகளை ஏற்று திருந்த பழகுங்கள்.

கனடாவின் கியுபெக் மாநிலத்தில் முன்பக்கம் கட்டாயமாக இலக்கத்தகடு பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. அதைப்போன்றதோ :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவல்ல காரணம் அவர்கள் எதுவும் செய்யலாம் எப்படியும் ஓடலாம் என்பதே காரணம்.

ராஜ் சொன்னது:

'அதுவல்ல காரணம் அவர்கள் எதுவும் செய்யலாம் எப்படியும் ஓடலாம் என்பதே காரணம்.'

பொதுவான விடயங்களை ....... சுட்டி காட்டி பிழை கண்டு பிடிப்பதே வாழ்கையாய் போச்சு நண்பா..........

ஒரு வேளை உணவு இல்லாமலே போர் செய்த மண் அது - உலக நாட்டு ரேஞ்ல - வீதி போக்குவரத்து முறைகள் ஏன் இங்க இல்லைனு கேட்க வாறீங்க ......... டமாசு.........

போற போக்கில ......... ஜப்பான் கார் தயாரிக்குது .........

ஏன் யாழ்ப்பாணம் தயாரிக்கல ........... என்னும் கேப்பிங்க போல!

உங்களூக்கு கிடைத்த ..........வசதிகளையும் வாய்ப்புகளையும் வைத்து - வன்னியை குற்றம் சொல்ல நினைக்காதீங்க ............

100 ஆண்டுகளூக்கு முன்னம் அபிவிருத்தி அடைந்த .......... நீங்க குந்தி இருந்து கொண்டு ........... சவுண்ட் விடுற ..........

ரொம்ப வசதி படைத்த நாடுகளிலையே ........ இப்பவும் பெல்ற் போடாமல் கார் ஓடுறவங்க நிறைய!

உங்களுக்கு நல்ல வாழ்வு இருந்தா ........... ஜஸ்ற் ........... என்யோய் ஃகைஸ்..........

அதுக்காக .............. அடிப்படை உயிர் வாழுதலுக்கே .........

நிறைய போராடி......... இப்பவும் ஒரு முடிவும் இல்லாம.......... கொஞ்சம் .......... மூச்சு விடுற எங்க இனத்திடம்... உங்க குறுக்கால போன அறிவு ஜீவிதம்.. வேணாமே!

சகல மனிதர்களுக்கும் உள்ள உரிமைகளோட வாழவே செத்து பிழைக்கிற அந்த மக்களிடம்........... சர்வதேச- வீதி-விதி முறைகள் ஏன் இல்லைனு - மண்டையுக்க ஒண்ணும் இல்லாத கேள்வி கேக்காதீங்க..........

செய்வாங்க .......... படிப்படியா!

8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானம் பாடி, அங்கே இந்த சட்டம் இருக்கிறது. தமிழீழ வீதி ஒழுங்கு முறையில் ஈருளிகளின் ஓட்டுனர்கள் மற்றும் பின்னால் இருப்பவர்கள் இருவரும் தலைகவசம் அணிய வேண்டும். ஆனால் அந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதற்கான காரணம் தமிழீழ பிரதேசத்தில் ஈருளி பாவனையாளர்கள் அதிகம். அதேநேரம் ஆரம்ப காலத்தில் ஈருளிகளை வாங்கியவர்களிடம் தலைகவசங்கள் இ;ல்லை. அதற்க்கு காரணம் சிறி லங்கா அரசின் தடை. இப்போது தடை நீக்கப்பட்டாலும் புதிதாய் வாங்குவது என்பது ஜீவாதாரத்துக்கே போராடும் மக்களுக்கு பெரும் செலவாக இருக்கும் எனவே குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின் இச் சட்டம் நடைமுறைக்கு வரும் என நம்புவோம். அதே நேரம் காவல் துறையினரும், தமிழீழ விடுதலைப்புலிகளும் தலைகவசம் அணிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் நானும் வன்னிக்க இருந்து தான் வந்தனான். பாடசாலையில் படிக்கும் போது 1993 காலப் பகுதியில் காவல்துறையினரால் வீதி விதிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டன நடைமுறைப்படுத்தப்பட்டன எல்லோருக்கும் இலக்கத்தகடுகள் த1 த2 என்று வழங்கப்பட்டன(பொது மக்களுக்கு).

எனது கேள்வி எப்படி இவர்கள் இலக்கத்தடின்றி பிரயாணம் செய்யலாம்?

UKraj,

சில கிராமங்களில் மருத்துவம்,குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளே, இன்னும் ஒழுங்காக கிடைக்குதில்லை.

உங்களுக்கு தலைகவசம் இல்லாதது தான் ஒருகுறை.

தமிழீழம் இன்னமும் ஒரு போராட்டபுூமி காலக்கிரமத்தில் ஒவ்வொன்றாக அமுல்படுத்துவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடத்தெரியாதவள் மேடைகோணல் என்றாளாம்..

இலக்கத்தகடு இல்லாதமைக்கு என்ன காரணம்.?

Raj.

இன்னும் அதற்கான அவசியம் வந்துவிடவில்லை என்று நினைக்கின்றேன்.

"எப்பவும் கேள்வி கேட்பது ரொம்பச்சுலபம்"

புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு நிரந்தர இலக்கம் பெறும்வரை தற்காலிக இலக்கத்தை பாவிக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் இல்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்னத்திற்கு த1 த2 என்று இலக்கத்தகடு வழங்கினார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய வாகனம் வாங்கி பெயர் எழுத மட்டும் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.