Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்பில்... அதிக முடி இருக்கா? இதைப்படிங்க!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

04-hairy-chest-300.jpg

மார்பில்... அதிக முடி இருக்கா? இதைப்படிங்க!

ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

செல்வம் பெருகும்

ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரமாம். தலையின் பின் பகுதி புடைத்திருப்பின் அறிவாளியாக இருப்பாராம். அதேபோல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.

உலகை ஆளும் ஆண்

ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும். அதேபோல் உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும். உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்குமாம்.

தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

நாக்கில் மச்சம்

நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.

காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

அரசாளும் ஆண்

நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.

பாலுணர்வு அதிகம் உண்டு

கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

அதேபோல் ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு அதிகம் இருக்குமாம்.

புகழ் கிடைக்கும்

கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்..

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாளும் ஆண்

நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான்.

:icon_idea:

gorilla%20standing.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea:

அரசன் ஆக முடியாவிட்டாலும், ஜனாதிபதியாக சந்தர்ப்பம் கிடைக்கும். :D:lol::icon_mrgreen:crazy_monkey-177.gif

[media=]

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

04-hairy-chest-300.jpg

மார்பில்... அதிக முடி இருக்கா? இதைப்படிங்க!

ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

பாலுணர்வு அதிகம் உண்டு

ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு அதிகம் இருக்குமாம்.

அதிகமாயும் இல்லாமல் குறைவாயும் இல்லாமல் ஒரு இடைநடுவிலை இருப்பவர்களுக்கு எப்பிடி என்று ஏதாவது தகவல்கள் கைவசம் இருக்கா தமிழ் சிறி அண்ணை....?

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமாயும் இல்லாமல் குறைவாயும் இல்லாமல் ஒரு இடைநடுவிலை இருப்பவர்களுக்கு எப்பிடி என்று ஏதாவது தகவல்கள் கைவசம் இருக்கா தமிழ் சிறி அண்ணை....?

பாராட்டுக்க;, சுபேஸ்!

நீங்கள், கூர்ப்படைதலில், பாதிக்கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தமாகும்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகமாயும் இல்லாமல் குறைவாயும் இல்லாமல் ஒரு இடைநடுவிலை இருப்பவர்களுக்கு எப்பிடி என்று ஏதாவது தகவல்கள் கைவசம் இருக்கா தமிழ் சிறி அண்ணை....?

இடைநடுவில் இருப்பவர்களுக்கு, அடிக்கடி... வயாக்கரா குளுசை பாவிக்க வேண்டி வரும் என்று, ஆண்களின் சாமுத்திரிகா லட்சணம் குறிப்பிடுகின்றது சுபேஸ். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்க;, சுபேஸ்!

நீங்கள், கூர்ப்படைதலில், பாதிக்கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தமாகும்! :icon_idea:

கிகிகி...நல்ல முன்னேற்றம் போல.... :D

இடைநடுவில் இருப்பவர்களுக்கு, அடிக்கடி... வயாக்கரா குளுசை பாவிக்க வேண்டி வரும் என்று, ஆண்களின் சாமுத்திரிகா லட்சணம் குறிப்பிடுகின்றது சுபேஸ். :D:icon_idea:

என்ன தமிழ்சிறி அண்ணா இப்படி ஒரு பெரிய குண்டை தூக்கிபோட்டுவிட்டீர்கள்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நேரம் மட்டு மட்டு. இந்த இலட்சணங்கள் எல்லாம் இருந்தும் சொல்லப் பட்டிருக்கும் தகுதிகளை அடையாத ஆண்களைப் படத்தோடு போட்டுக் காட்ட இயலும். :lol:

தமிழ் சிறி, on 06 June 2012 - 05:04 AM, said:

இடைநடுவில் இருப்பவர்களுக்கு, அடிக்கடி... வயாக்கரா குளுசை பாவிக்க வேண்டி வரும் என்று, ஆண்களின் சாமுத்திரிகா லட்சணம் குறிப்பிடுகின்றது சுபேஸ்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஐயா! சிறி அவர்களே!

மருத்துவங்கள் அறிவுத்தகவல்கள் கூறும் போது உதாரணங்களை சொன்னால் புரிவதற்கு இலகுவாகவிருக்கும்.ஆகவே உங்களின் உடம்பில் எப்படியென்று படம் எடுத்தாவது போடுங்கள்

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2012 at 10:51 AM, தமிழ் சிறி said:

ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு அதிகம் இருக்குமாம்.

அவனவன் மண்டையில் முடி இல்லையெண்டு பிச்சுக்கொண்டு திரியுறான் இவர் என்னவென்றால் நெஞ்சில்    ............. என்டு ஆராய்ச்சி வேறு  யோவ் சிறியர்  carving-turkey.gif

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, முனிவர் ஜீ said:

அவனவன் மண்டையில் முடி இல்லையெண்டு பிச்சுக்கொண்டு திரியுறான் இவர் என்னவென்றால் நெஞ்சில்    ............. என்டு ஆராய்ச்சி வேறு  யோவ் சிறியர்  carving-turkey.gif

தம்பிக்கு இப்ப  பழசுகளை  தேடுவதே பொழுது போக்காக்கிடக்கு

அதுசரி

அந்த கோடிட்டஇடங்களை  நிரப்பலாமே...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

தம்பிக்கு இப்ப  பழசுகளை  தேடுவதே பொழுது போக்காக்கிடக்கு

அதுசரி

அந்த கோடிட்டஇடங்களை  நிரப்பலாமே...

spointing_right_100-105.gifஎனக்கும் சிவத்த புள்ளிகளை குத்திவிடுவார்கள் நிர்வாகத்தினர்  அதனால் அது டஸாக இருக்கட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.