Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருவிக் குஞ்சின் கதை

Featured Replies

குருவி ஒன்று மரத்திலே

கூடு ஒன்றைக் கட்டியே

அருமைக் குஞ்சு மூன்றையும்

அதில் வளர்த்து வந்தது

நித்தம் நித்தம் குருவியும்

நீண்ட தூரம் சென்றிடும்

கொத்தி வந்த இரைதனை

குஞ்சு தின்னக் கொடுத்திடும்

குருவி தந்த இரையினால்

குஞ்சு மெல்ல வளர்ந்தன

சின்ன இறகு இரண்டுமே

சிறப்பாய் வளரத் தொடங்கின

தனது குஞ்சு பறப்பதை

தானும் பார்க்க ஆவலாய்

தந்தை குருவி சொன்னது

தனயன் பறக்க வேண்டுமாம்

இப்ப என்ன அவசரம்

இறக்கை நன்கு வளரட்டும்

இயல்பாய் குஞ்சு பறப்பதை

இரசிக்கும் காலம் வந்திடும்

சின்ன இறகு வளர்ந்தபின்

சிறப்பாய் பறக்க முடியுமே

இன்றே பறக்க விரும்பினால்

இறப்பில் முடியக் கூடுமே

தாய்க் குருவி சொன்னதை

தடுத்தே தந்தை சொன்னது

எனக்குப் புத்தி சொல்லிடல்

எருமை உனக்குத் தகுதியோ

குஞ்சு நலனைக் கருதியே

குருவி சொன்ன கருத்தினை

உதறித் தள்ளித் தந்தையும்

உடன் பறக்கச் சொன்னது

தந்தை சொன்ன சொல்லினால்

தமது சிறகை விரித்துமே

பிஞ்சுக் குஞ்சு மூன்றுமே

பிரிந்து பறக்கத் தொடங்கின

எந்தன் குஞ்சு பறப்பது

என்ன அழகு என்றுமே

தனது குஞ்சு பறப்பதை

தந்தைக் குருவி ரசித்தது

சீராய் இன்னும் வளர்ந்திடாச்

சிறகால் பறந்த குஞ்சுகள்

சிறிது நேரம் பறந்ததும்

சிறிது களைப்புக் கண்டன

வளியின் வேகம் தாங்கிட

வழி இல்லாமல் குஞ்சுகள்

வானை விட்டும் விழுந்தன

வழியில் உயிரை விட்டன

அழகுக் குஞ்சு இறப்பினால்

அப்பன் குருவி துடித்தது

அருமை மனைவி உரைத்தது

அதனின் காதில் ஒலித்தது

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் எனது பழைய நினைவு ஒன்றை ஞாபகப்படுத்தியது

ஒரு முறை கடலில் குளிக்கப்போயிருந்தோம்.

எனது சின்ன மகனுக்கு கடல் என்றால் பயம். (அப்போ 7 அல்லது 8 வயதிருக்கும்)

நான் எனது இடுப்பளவு ஆழத்தில் நின்றபடி கரையில் நின்றுறு விளையாடிய அவனை என்னருகில் வருமாறு அழைத்தேன்.

வரமுடியாது என சினுங்கினான். அதட்டினேன். மெல்ல மெல்ல என்னை நோக்கி வந்தான். ஒரு இடத்தில் வந்ததும் முன்னே வர மறுத்து அழுதான். மீண்டும் நான் பெரும் குரலில் அதட்ட முன்னே காலை வைத்தவன் தாண்டு விட்டான். எழும்பி தானாக வரட்டும் என நினைத்திருந்த என்னை கணங்கள் சுட ஓடிப்போய்த்தூக்கினால் அந்த இடத்தில் பெரும் பள்ளம் ஒன்று இருக்கிறது. பக்கத்தில் கவனித்தபடி நின்றிருந்தபடியால் காப்பாற்றினோம். இல்லையென்றால்...????

இன்று நினைத்தாலும் நடுங்கும் எனக்கு.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயசிலை பள்ளிக்கூடத்திலை சொல்லித்தந்த ஞாபகம் வருது இந்த பாட்டு

தனது குஞ்சு பறப்பதை

தானும் பார்க்க ஆவலாய்

தந்தை குருவி சொன்னது

தனயன் பறக்க வேண்டுமாம்

இப்ப என்ன அவசரம்

இறக்கை நன்கு வளரட்டும்

இயல்பாய் குஞ்சு பறப்பதை

இரசிக்கும் காலம் வந்திடும்

இயல்பான அருமையான கோர்வைகள் மணி , உள்குத்தல்கள் இல்லாவிட்டால் .

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில, பள்ளிக்கூடம் போன நினைவு மீண்டும் வந்தது, மணிவாசகன்!

கவிதைக்கு நன்றிகள்!

சின்னச் சின்ன நாய்க்குட்டி,

சிறந்த நல்ல நாய்க் குட்டி,

வாலை வாலை ஆட்டுமாம்,

வள்ளு, வள்ளாய்க் குரைக்குமாம்! :D

  • தொடங்கியவர்

கொஞ்சம் எனது பழைய நினைவு ஒன்றை ஞாபகப்படுத்தியது

ஒரு முறை கடலில் குளிக்கப்போயிருந்தோம்.

எனது சின்ன மகனுக்கு கடல் என்றால் பயம். (அப்போ 7 அல்லது 8 வயதிருக்கும்)

நான் எனது இடுப்பளவு ஆழத்தில் நின்றபடி கரையில் நின்றுறு விளையாடிய அவனை என்னருகில் வருமாறு அழைத்தேன்.

வரமுடியாது என சினுங்கினான். அதட்டினேன். மெல்ல மெல்ல என்னை நோக்கி வந்தான். ஒரு இடத்தில் வந்ததும் முன்னே வர மறுத்து அழுதான். மீண்டும் நான் பெரும் குரலில் அதட்ட முன்னே காலை வைத்தவன் தாண்டு விட்டான். எழும்பி தானாக வரட்டும் என நினைத்திருந்த என்னை கணங்கள் சுட ஓடிப்போய்த்தூக்கினால் அந்த இடத்தில் பெரும் பள்ளம் ஒன்று இருக்கிறது. பக்கத்தில் கவனித்தபடி நின்றிருந்தபடியால் காப்பாற்றினோம். இல்லையென்றால்...????

இன்று நினைத்தாலும் நடுங்கும் எனக்கு.

கருத்திற்கு நன்றியண்ணா!

  • தொடங்கியவர்

சின்ன வயசிலை பள்ளிக்கூடத்திலை சொல்லித்தந்த ஞாபகம் வருது இந்த பாட்டு

அப்ப சாத்தரி 3ம் வகுப்பு மட்டும் படிச்சிருக்கிறியள்.......உண்மை தான் சாத்திரி முதல் இரண்டு பந்திகளும் கடைசிப் பந்தியின் கடைசி இரண்டு வரிகளும் அதே தமிழ் பாடல் தான்.இடைப் பந்திகள் தான் அடியேனுடையது.

சின்ன வயதில, பள்ளிக்கூடம் போன நினைவு மீண்டும் வந்தது, மணிவாசகன்!

கவிதைக்கு நன்றிகள்!

சின்னச் சின்ன நாய்க்குட்டி,

சிறந்த நல்ல நாய்க் குட்டி,

வாலை வாலை ஆட்டுமாம்,

வள்ளு, வள்ளாய்க் குரைக்குமாம்! :D

நன்றி புங்கையூரான்

தனது குஞ்சு பறப்பதை

தானும் பார்க்க ஆவலாய்

தந்தை குருவி சொன்னது

தனயன் பறக்க வேண்டுமாம்

இப்ப என்ன அவசரம்

இறக்கை நன்கு வளரட்டும்

இயல்பாய் குஞ்சு பறப்பதை

இரசிக்கும் காலம் வந்திடும்

இயல்பான அருமையான கோர்வைகள் மணி , உள்குத்தல்கள் இல்லாவிட்டால் .

கருத்திற்கு நன்றியண்ணா!நீங்கள் நினைப்பது போல நான் இந்தக் கவிதையில் அரசியல் தான் பேசியிருக்கிறேன்.ஆனால் அது உள்குத்து அல்ல... என் மனதின் ஆதங்கம். வெண்ணெய் திரளத் தொடங்கியிருக்கும் போது தாழி உடைந்து விடக் கூடாதே என்ற ஆதங்கம்.....

  • தொடங்கியவர்

கருத்திட்ட நண்பர்களுககும் விருப்பைத் தெரிவித்த விசுகண்ணா, யாயினி, ரதி, கிருபன், நிழலி, நிலாமதி அக்கா மற்றும் புங்கையூரானுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மணி,

பாடல் பள்ளிக்கூட ஞாபகங்களைக்கிளறிவிட்டது. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.