Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

GTV – IBC யின் மகிந்தரை காப்பாற்றும் முயற்ச்சி தோல்வி.

Featured Replies

ஒரு ஊடகத்தால் ஒரு இனத்தினை ஒருங்கிணைக்கவும் முடியும் மாறாக திசைதிருப்பவும் முடியும் அதில் இருந்து வெற்றிகொள்ளப்பட்டதுதான் பிரித்தானியாவில் தமிழர்களின் அணிதிரழ்வு!

முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் அதாவது மே-18-2009ற்கு பின்னர் தமிழர்களின உத்தியோகபூர்வமான வானொலி தனது செயற்பாடுகளை இடைநிறுத்தப்பட்ட வேளையிலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

தலைவர் அவர்களின் வளிகாட்டலில் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை மீண்டும் பிரித்தானியாவில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.

தலைவர் அவர்களின் தலைமையின் கீழ்தான் புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள் என்பதை அனைத்துலகத்திற்கும் நன்குஉணரவைத்திருக்கும் வகையில் பிரித்தானியாவில் நடைபெற்ற மகிந்த எதிர்ப்பு பேரணியின் போது காணக்கூடியதாக இருந்தது.

தமிழின படுகொலையின் சூத்திரதாரியான மகிந்தவை கடந்த ஆண்டு பிரித்தானியாவில் வைத்து தப்பி ஓட வைத்த புலம்பெயர் தமிழ்மக்கள் நேற்று கூழ்முட்டையால் எறிந்து மூஞ்சையில் செருப்பால்அடித்துள்ளார்கள் என்னதான் இருந்தாலும் மனதில் பயத்துடன் பிரித்தானியஅரசின் பாதுகாப்பில்தான் கொலைவெறியன் மகிந்த காணப்பட்டான் என்பதுதான் உண்மை

தமிழ்மக்களின் போர்குற்றவாளியாக முதல் எதிரியாக காணப்படும் மகிந்த எந்த நாட்டிற்கு சென்றாலும் அவனுக்கு செருப்பால் அடிக்கவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் பிரித்தானியா மண்ணில் மக்கள் நிரூபித்துக்காட்டிஇருக்கின்றார்கள்.

ஆனால் மகிந்தவினை காப்பாற்றதுடிக்கும் சில துரேக கும்பல்களும் புல்லுருவிகளும் புலம் பெயர் மண்ணில் வாழ்கின்றார்கள் என்பதை எண்ணி கவலைகொள்கின்றோம்.

உண்மையில் நேற்றைய நாள் நிகழ்வில் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் ஊடகமான அனைத்துலக உயிரோடை தமிழ்வானொலி தமிழ்மக்கள் அனைவரையும் பிரித்தானிய தமிழர் பேரவை,தமிழர் ஒருங்கிணைப்புகுழு,ஆகியவற்றின் உறுதுணையுடன் ஒருங்கிணைத்து அவற்றிற்கு மிகையாக நியூசிலாந்,கனடா,தமிழகம்,உள்ளிட்ட தமிழக தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் மகிந்தவின் பிரித்தானிய வருகைக்க தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி புலம்பெயர் தமிழ்களின் மகிந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேத்தர்கள் என்பது புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வெற்றியினை எடுத்துக்காட்டிஇருக்கின்றது.

மறுபுறத்தில் மகிந்தவிற்கு வசைபாட முற்பட்ட ஊடகங்களை புலம்பெயர் தமிழ்மக்கள் நேற்றைய நிகழ்வு ஊடாக நன்கு இனம் கண்டு கொண்டு செயற்பட்டுள்ளார்கள் என்பதை நேற்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊடாக காணக்கூடியதாக இருந்தது.

br.tamilar01.jpgஉண்மையில் அனைத்து மக்களையும் அணிதிரட்டி பிரித்தானிய அரசிற்கும் மற்றும் ஏனைய நாடுகளுக்கும் தமிழ்மக்களின் நிலையினை எடுத்துக்காட்ட வேண்டியதன் கடப்பாட்டினை புலம்பெயர் தமிழ்மக்கள் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஊடகத்தின் செயற்பாட்டினை முன்னெடுத்தார்கள்.

ஆனால் மகிந்தவின் நிகழ்சிநிரல் இரத்து செய்யப்பட்டுள்ளது, மகிந்த உரைநிகழ்த்தமாட்டார் என்பதையே முதன்மையாக சொல்லி பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இரண்டு ஊடகங்கள் செயற்பட்டமையை தமிழ்மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்பதை நேரடியாக காணக்கூடியதாக இருந்தது.

அதாவது விடுதலைப்போராட்டத்தில் இணைந்து செயற்பட்டு சிங்கள அரசிற்கு விலைபோன சில காக்கைவன்னியர்களின் கைவரிசையில் இந்த இரண்டு ஊடகங்களும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனவா?

நேற்றைய நிகழ்விற்கு இந்த ஊடகங்கள் மகிந்தவினை காப்பாற்ற முயற்சி செய்தன என்பதை எடுத்துக்காட்டுகின்றன?

‘போர்க்குற்றவாளிக்கு எதிராக மிகபிரமாண்டமாக திட்டமிடப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளைநிறுத்துவதற்காக/ குழப்புவதற்காக இத்தகவல்கள் சில தமிழ் ஊடகங்கள் …GTV & IBC. கையடக்க தொலைபேசி குறுந்தகவல்கள் மூலம் வேகமாக பரப்பப்படுகின்றது! …

ஆனால் இவ்வெதிர்ப்பு நடவடிக்கை திட்டமிட்ட முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும் இவ்வூடகங்கள் ஏன் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தவர்களை தொடர்பு கொண்டு உண்மை நிலைமையினை அறியாமல் பரப்புகிறார்கள்?’என்பது பிரித்தானிய மக்களிடம் கேள்விக்குறியாக காணப்பட்தற்கான விடையினை பெற்றுக்கொடுத்துள்ளது. இப்படியான நடவடிக்கைகளை இவ்வூடகங்களை சந்தேகம் கொள்ள வைக்கின்றது?

நீயார்? ,நான் யார்? என்று பார்பதை விடுங்கள் நாங்கள் யார் என்று பாருங்கள் செங்குருதியால் நனைத்த ஈழத்தினை நினைத்துபாருங்கள்,நாங்கள் ஒவ்வொருவரும் இந்த நாடுகளில்அகதிகள் உரிமைபெற்று வாழ்கின்றோம் என்றால் அதற்கு காரணம் யார் அந்த மாவீரர்கள் செய்த தியகத்தினை மறந்துவிடாதீர்கள்,தலைவர் அவர்களின் வளிகாட்டலில் இன்றும் இந்த விடுதலைப்போர் உலகநாடுகளின் வாசலைதட்டி இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் அந்த மாவீரர்களும் மக்களும்தான் இவற்றை எல்லாம் மறந்து சிங்கள அரசின் நிகழ்சி நிரலுக்கு அமைவாக செயற்படும் எந்த நபர்களையும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நேற்றை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டி நிக்கின்றது.

அந்த மாவீரர்களும் தமிழ்மக்களும் என்னத்திற்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்தார்களோ அந்த இலட்சியம் நிறைவேறும் வரை எங்கள் போராட்டங்கள் ஓயக்கூடாது,தமிழர்களின் தீர்வு தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய பயணத்தின் நாளைய நிகழ்வுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியதன் கடப்பாடு புலம்பெயர் மண்ணில் இயங்கும் தமிழ் ஊடகங்களையே சாரும்.

நேற்றைய நிகழ்வின் போராட்டம் நடைபெற இருந்த இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போராட்டம் மாறியது என்று ஊடகத்தின் ஊடாகவும் குறுஞ்செய்தி ஊடாகவும்மக்களுக்கு வதந்திகளை பரப்பியதன் நோக்கத்தினை இன்று அனைத்து தமிழ்மக்களும் புரிந்துகொண்டிருப்பார்கள் மகிந்தவின் உரை நிறுத்தப்பட்டுவிட்டதாக பறைதட்டி பிரித்தானியாவில் அணிதிரண்ட மக்களை திசைதிருப்பும் நோக்கில் செயற்பட்ட ஊடகங்களின் உண்மைத்தன்மை இன்று வெட்டைவெளிச்சத்திற்கு வந்துவிட்டது. குறிப்பிட்ட சில ஊடகங்கள் தொடர்பான மக்களின் சில கேள்விக்குறிகளுக்கு விடைகாணப்பட்டு விட்டது என்றே இன்று சொல்லமுடியும்.

எனவே பிரித்தானிய மண்ணில் வந்து இறங்கிய ஜரோப்பிய சகோதரங்களே இதனை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக்குழுவினரே சிறப்புற ஒழுங்கு படுத்திய ஊடகத்தினரே அனைவருக்கும் இது எங்கள் கடமை என்பதை நினைவிற்கொள்ளுங்கள் தொடர்ந்தும் தலைவர் அவர்களின் தலைமையின் கீழ் புலம்பெயர் மண்ணில் விடுதலை போராட்டத்தினை விரைவுபடுத்த அனைவரையும் ஓர்அணியில் சேருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்………

நன்றி -ஜங்கரன்.

http://thaaitamil.com/gtv-ibc-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரை ஏன் ? காப்பற்ற நினைத்தார்கள் ! :rolleyes:

உண்மையில் இப்படியான செய்திகள் இப்போதைய நிலையில் தேவையா ? ஒற்றுமை ஒற்றுமை என்று கூறி பிரிந்து நிற்கலாமா ?? இப்போது உடகங்கள் குழப்பினாலும் மக்கள் நல்ல தெளிவாக உள்ளனர் அவர்கள் சரியான முடிவையே எடுப்பார்கள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதை தவிர்த்து வாங்கள் இலக்கை நோக்கி ஒன்றாக பயணிப்போம் . :)

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் ஐ பி சியிலும் கை வைத்தாச்சா.....??? :( :(

நேரம் கிடைக்குதில்லை

கொஞ்சம் நேரே கவனிக்க வேண்டிய வேலை இது. :rolleyes:

ஒற்றுமையைப் பற்றி அறிக்கை விடுகிறது.; பாடுவது தேவாரம் இடிப்பது சிவன்கோவில் என்றது மாதிரி இருக்கிறது.

மகிந்தாவுக்கு எதிராக மக்களை அணி திரட்டிய ஊடகங்களை இப்படி தூசிப்பது பற்றியும் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது. யார் மகிந்தாவுக்கு ஆதரவு? உங்கள் இருப்பைத் தக்க வைப்பதற்காக விடுதலை பேசாதீர்கள்.

உண்மையாக விடுதலையை நேசியுங்கள். சிங்களவன் தமிழனை எதிர்பதில் தமிழனக்கு தீர்வு வழங்காமல் இருப்பதில் ஒன்றுபடுகிறான். இந் நிலையில் ஒற்றுமை ஒற்றுமை என்று போலியாக பேசாதீர்கள்.

உண்மைதான் விசுகு ஐபிசி வானொலி 2009 மே இற்கு பின் அது தனி நபர்களுக்கு விற்கப்பட்டுவிட்டது. அது பழைய தேசியம் பேசும் வானொலி என்று பலர் இப்பவும் நம்புகிறார்கள். அது பொய். ஜிடிவி நடக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து தான் இயங்குகிறது.. ஐரோப்பாவில் நடந்த போட்டி மாவீரர் தினதிட்கே அது முன்னுரிமை கொடுத்து விளம்பரம் செய்தது. வழமையா இடம் பெறும் மாவீரர்தினங்களை அது இருட்டடிப்பு செய்தது. பின்னர் சுவிஸ் இல் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புகுழு ஆதரவில் 12 வருடங்களாக நடந்து வந்த புத்தாண்டு நிகழ்வை இங்குள்ள சில தேசியத்திற்கு எதிரான சக்திகளுடன் இணைந்து போட்டி நிகழ்வொன்றை செய்தது. பின்னர் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புகுழு

வருடா வருடம் ஐநாவில் நடாத்தபடும் பேரணிய குழப்பும் விதமாக இவ்வாண்டு போட்டி பேரணி ஒன்று இடம் பெற்றது. அதயே முன்னுருமை கொடுத்து விளம்பரம் செய்தார்கள். பின்னர் மே 18 நிகழ்விலும் குழப்பம் செய்தார்கள். இப்போ இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விலும் குழப்பம் செய்து எதிரிக்கு உதவுகிறார்கள். இந்த ஐபிசிக்கும் ஜிடிவிக்கும் சுவிஸ் இல் எழுதப்படாத தடை உள்ளது. மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. இவர்கள் இப்பிடிஜே போனால் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் இவர்கள் அறியாமையால் தப்பு பண்ணவில்லை. திட்டமிட்டு ஒரு பெரிய குழப்ப சக்தியின் பேராதரவோடு தான் இதை எல்லாம் செய்கிறார்கள். மக்கள் விழிக்கும்வரை இது தொடரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் அன்புவின் கருத்துடன் முற்று முழுதாக உடன்படுவதுடன் மேற்கூறப்பட்ட இரண்டு தனிநபர் ஊடகங்களும் பல குழப்பங்களை தொடர்ந்து விளைவித்து வருவதை தெளிவாகவே அவதானிக்க முடிகின்றது.

யாரைத்தான் நம்புவது பேதை நெஞ்சம்? எவ்வளவு உயிர்க்கொடை கொடுத்து உன்னதமான போராளிகள் உரமிட்டு வளர்த்த எம் போராட்டம் இப்படி கண்டகண்டவர்களின் கைகளில் எல்லாம் சிக்கி சின்னாபின்னப் படுகிறதே.கடவுளே தமிழருக்கு ஏன் இப்படி தலைவிதியைக் கொடுத்தாய்? :(

... நாளை தினம் போர்க்குற்றவாளிக்கு எதிராக மிகபிரமாண்டமாக திட்டமிடப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக/குழப்புவதற்காக .. இத்தகவல்கள் சில தமிழ் ஊடகங்கள் ... GTV / IBC ... கையடக்க தொலைபேசி குறுந்தகவல்கள் மூலம் வேகமாக பரப்பப்படுகின்றது! ... ஆனால் இவ்வெதிர்ப்பு நடவடிக்கை திட்டமிட்ட முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும், இவ்வூடகங்கள், ஏன் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தவர்களை தொடர்பு கொண்டு உண்மை நிலைமையினை அறியாமல் பரப்புகிறார்கள்??????????? ... இப்படியான நடவடிக்கைகளை இவ்வூடகங்களை சந்தேகம் கொள்ள வைக்கின்றது?????????

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103394&st=0

மீண்டும் மீண்டும் ... ஒற்றுமை எனும் பெயரில் நச்சுக்கள் பரவுகின்றன ... நேற்று முந்தினம் மாலை இந்த வானொலி, தொலைக்காட்டியை கேட்டவர்கள் உடனடியாக, இங்கு மத்திய அலைவரிசையில் வரும் வானொலியில்(ILC), GTV/IBC களில் பார்த்து கேட்டவற்றை நேரடியாக கூறி குமுறினார்கள் ...

... முக்கியமாக GTV ஆனது மகிந்தவின் உரை நிறுத்தப்பட்டு விட்டது ஆகையால் நடைபெற இருக்கும் போராட்டம் வேறிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக செய்தியை வெளியிட்டது, பங்கிற்கு மாலிசந்தி முதலாளி சத்தியின் IBC ம் தோள் கொடுத்தது.

ஒற்றுமை ஒற்றுமை எனும் பெயரில் நடந்தவற்றை ... முழுப்பூசனிக்காயை ஒருபிடி சோற்றினுள் புதைப்பது போல் ... மறைக்க சிலர் முற்படுகின்றனர் ...

... அவதானம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களில் செய்தித் தவறு ஏற்படுவது வழமை. GTV தனது செய்தித் தவறை உடனேயே திருத்திக் கொண்டது. மக்களின் போராட்ட நிகழ்வுகளை நேரலையும் செய்தது..! இப்படி எல்லாம் இருக்க.. சில போட்டி.. ஊடகம் வளர்ப்போர்.. தங்களின் ஊடகப் பெருமைக்காக மற்றவர்களின் தவறுகளை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. தமிழர்களுக்குள் தமிழர்களை சீண்டு முடிந்து விட்டுக் கொண்டு திரிகின்றனர். நாளை இவர்களே உண்மையான துரோகிகளாகவும் கூடும்..! எனவே வெறுமனவே சீண்டு முடியும் காரியங்களை விட்டு.. சாத்தியமான அளவு தவறுகளை சுட்டிக்காட்டி அவை மீண்டும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யக் கேட்டு.. தமிழ் மக்களை எல்லா வகையிலும் இணைத்து.. பலப்படுத்தி ஒற்றுமையோடு நிற்க வைக்கிற வழியப் பார்க்கிறதை விட்டிட்டு..

சிலர் தற்துணிவோடு.. அவர் ராஜபக்சவை காப்பாற்ற முயற்சி.. இவர் கே பி ஆள்.. என்று அறிக்கை விட்டு மக்களை குழப்பி அடித்து எதிரிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முனைகின்றனர். தயவுசெய்து இந்த விலாங்குகள்.. தங்களைத் திருத்திக் கொண்டு.. மக்கள் நலன் கருதி.. ஊடகங்களின் செயற்பாடுகளில் தவறு காணின் திருத்தங்களை முன் வைத்து திருத்தங்களைச் செய்ய ஊக்குவிக்க வேண்டுமே தவிர.. ஊடகங்களில் ஒரேயடியா சகட்டு மேனிக்கு குற்றம் கண்டு பிடிக்கும் குறை காணும் நிலையை களைய வேண்டும்..!

இப்படிக் குறை பிடிக்கிறவை உண்மை தெரிஞ்சவை.. உடனடியா அந்தந்த ஊடகங்களைத் தொடர்பு கொண்டு.. தவறுகளைச் சுட்டிக்காட்டி அவை.. அந்தத் தவறுகளை தொடர்ந்து செய்திருந்தால்.. இவர்களின் குறைகாணலில் அர்த்தம் காணலாம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. குறைகள்.. தவறுகள் உடனுக்குடன் திருத்தப்பட்டதை நேற்றே அவதானிக்க முடிந்தது..!

எனவே எதிர்காலத்திலும்.. இப்படி.. ஊடகங்களை மக்களை.. குழப்பி.. அவர்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை வளர்த்து மக்கள் மீது சோர்வை வாரி இறைத்து.. போராட்ட ஓர்மத்தை அடக்கி.. நேரடியாக தேசிய ஆதரவு என்ற போர்வையில்.. எதிரிகளுக்கு மறைமுகமாக உதவி நிற்பதைச் செய்யாமல்.. தவறுகள்.. பிழைகள் நேர்ந்தால் அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்திக்க முயலுங்கள். அதுதான்.. இன ஒற்றுமைக்கும்.. மக்கள் பலத்தை எதிரிமீது காட்ட ஒன்று திரட்டவும் வழி வகுக்கும்..!

இதைச் செய்வார்களா.. இந்த விலாங்குகள்..???! :icon_idea::(:rolleyes:

Edited by nedukkalapoovan

அதே..மற்றவர்களை துரோகிப் பட்டம் கட்டிக்கொண்டு திரிவதை விட்டுவிட்டு உண்மையான மனத்துடன் தவறுகள் என்றால் சுட்டிக்காட்டி திருத்தும்படி கேட்கலாம்..இது ஒருவரின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் கொட்டப்பட்ட வெறும் வார்த்தைக்குவியல்களாக இருக்கின்றவே அன்றி,அவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் இருக்கிறதே அன்றி,தங்களை முதன்மைப் படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டிருக்கிறதே அன்றி வேறு எந்த ஒரு பிரயோசனமும் இல்லை இந்த செய்தியால்....என்ன கருத்தை அல்லது செய்தியை சொல்லவருகிறது இந்த செய்தி..? இதை எழுதியவர் என்ன போராட்டத்தை சரியான வழியில் வழி நடத்திக்கொண்டிருப்பவரா..? ஒரு செய்தியை தவறுதலாக வெளியிடப் பட்டிருக்கலாம்...இங்கு ஒன்றும் மிகப்பெரிய துரோகம் என்று சொல்லுமளவுக்கு என்ன நடந்துவிட்டது என்று இந்த ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை அந்த இரண்டு ஊடகங்கள் மீதும் துரோகிப் பட்டம் கட்டுகிறது..? இவர்கள் பிழைகளை சுட்டிக் காட்டலாமே அன்றி துரோகிப் பட்டம் கட்டும் வேலையைச் செய்ய முடியாது...இவர்கள் யார் மற்றையவர்களை துரோகிகள் ஆக்குவதற்க்கு..? பிழையைச் சுட்டிக் காட்டுவதை விட்டுவிட்டு ஒரு பக்கத்தில் நீட்டி முழக்கி அந்த இரு ஊடகங்களின் மீதும் துரோகிப் பட்டம காட்டுவதிலே முனைப்பாக இருப்பதில் இருந்தே தெரிகிறது இந்தக் கட்டுரை எழுதப் பட்டிருப்பதன் நோக்கம்...அந்த இரு ஊடகங்கள் தவறு செய்திருந்தால் கூட இப்பிடியான கீழ்த்தர சிந்தனையுடன்,காழ்ப்புணர்ச்சியுடன் கட்டுரை எழுதுபவர்களுக்கு அதைச் சுட்டிக்காட்டும் தார்மீக உரிமைகூட இல்லை...

நன்றி சுபேஸ், என்மனதில் தோன்றியதை எழுத்துருவில் தந்து இருக்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நெடுக்காலபோவானின் கருத்துக்கு உடன் படுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகங்களில் செய்தித் தவறு ஏற்படுவது வழமை. GTV தனது செய்தித் தவறை உடனேயே திருத்திக் கொண்டது. மக்களின் போராட்ட நிகழ்வுகளை நேரலையும் செய்தது..

GTV இனைத் தொடர்ச்சியாக பார்த்துவரும் நபர் என்ற அடிப்படையில் GTV இன் இரட்டை வேடத் தன்மையினை வெகு நீண்ட காலமாகவே அவதானித்து வந்துள்ளேன். பிரித்தானியாவில் ஏற்படுத்தப்பட்ட தேசிய அமைப்புக்களின் கட்டமைப்புச் சிதைவுகளுக்கும் மக்கள் போராட்டத்தை திசைதிருப்பும் நடவடிக்கை வரை தொடர்ச்சியாகவே செய்து வருகின்றது.

2009 மே முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்னர் தேசியத் தலைவருக்கு விளக்கு வைத்து கேபி என்பவரை எமது தலைவராக கொண்டு வர எடுத்த முயற்சி தொடக்கம் கடந்த வாரம் இராசபக்ச இலண்டனுக்கு வந்தபோது தொடர்ச்சியான குழப்பமான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பி அவர்களை அணிதிரள்வதை சிதைத்தது வரை இவர்களின் பங்கு கணிசமாகவே உள்ளது.

ஒருமுறை அல்லது இருமுறை நீங்கள் தவறு விட்டால் பொறுக்கலாம். ஆனால் மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக நீங்கள் குழப்பினால் உங்களை என்னவென்று சொல்வது.......

மக்களது ஞாபக சக்தி குறைவாக இருப்பது இப்படியானவர்கள் தொடர்ந்து எம்மத்தியில் நிலைத்து நிற்க உதவுகின்றது.

Edited by Vily

நன்றிகள், எழுத முற்பட்டதை ...

... ஒருதரம் இருதரம் ரங்கு(நாக்காம் தமிழில்) சிலிப் ஆகலாம், ஆனால் தொடருகிந்தல்லாவா??????? ... நெருப்பில்லாமல் ...!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.