Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருணகிரி வாத்தியார்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இயற்கையழகு கொட்டிக்கிடக்கும் கண்டி நகரில் எழுந்து நிற்கும் பல்கலைக்கழகம்தான் பேராதனைப்பல்கலைக்கழகம். உலகின் முக்கிய பல்கலைக்கழகங்களில் இதுவுமொன்று 80 களிற்கு முன்னர் இங்கு நுளைவு அனுமதி கிடைத்துவிட்டாலே தங்கள் வாழ்வின் பிறவிப் பெரும்பயனை அடைந்து விட்டதாக நினைக்கும் மாணவர்கள். எங்கு படிக்கிறாய் அல்லது படித்தாய் எனகேட்டால் போராதனை பல்கலைக்கழகம் என்று பதில் சொல்லும் போதே அங்கு படித்தவர்களது மார்பு ஒரு அங்குலம் முன்னிற்கு நிமிர்ந்து கொள்ளும்.(பெண்கள் உட்பட).எனக்கும் அப்படி ஒரு அங்குலம் நெஞ்சை முன்னுக்கு தள்ளி பதில் சொல்ல விருப்பம் இருந்தது ஆனால் விதி யாரை விட்டது..வகுப்புகள் தொடங்கிவிட்டால் சாதாரண மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளையும் வசதியானவர்கள் தனியார் விடுதிகளையும் அந்தப் பகுதி வீடுகளின் அறைகளையும் நிறைத்து விடுவார்கள். அங்குள்ள பொட்டானிக்கல் பூங்கா மாணவக்காதலர்களின் சொரக்கபுரியாகிவிடும்.

இலங்கையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் மாணவர்களிற்கு அது புதிய அனுபவம். புதிய அனுபவங்களை கற்றுக்கொள்ளும் இடமும்கூடத்தான். கொஞ்சம் கொஞ்சமாய் கொஞ்சும் தமிழை சிங்கள மாணவர்களும். தட்டுத்தடக்கி சிக்கல் பிடிச்ச சிங்களம் என்றபடி டிக்க டிக்க தண்ணுவா சிங்களத்தை தமிழ் மாணவர்களும் பயிலத்தொடங்க முஸ்லிம் மாணவர்களோ இரண்டு மொழியிலும் புகுந்து விழையாடும் இடம்.

அப்படித்தான் மருத்துவம் இரண்டாம் ஆண்டில் படித்தக்கொண்டிருக்கும் வசுமதியும் ரோகினியும் சிறுவயது முதல் இணைபிரியா தோழிகள். அவர்கள் கொஞ்சம் வசதியான பின்னணியை கொண்டவர்கள் என்பதால் ஒரு வீட்டில் அறையொன்றினை வாடைக்கு எடுத்து தங்கியிருந்து போராதனை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தனர்.

அன்றைய இரவுப்பொழுது ரோகினி மேசையில் படித்துக்கொண்டிருக்க வசுமதியே கட்டிலில் மார்புகளிற்கு கீழே தலையணையை அணையாக்கி குப்புற படுத்திருந்தபடி முழங்கைகள் இரண்டையும் குத்தி நிமிர்த்தியை கைகளில் தாடைகள் தாங்கி நிற்க கால்களிரண்டையும் மடித்து ஆட்டியபடி முன்னாலிருந்த புத்தகத்தை பார்த்து களுக்கென்று சிரித்தாள். அவளை திரும்பி பார்த்த ரோகினி அப்பிடி சிரிக்கிற அளவுக்கு புத்தகத்திலை என்னடி இருக்கு

இது புத்தகத்திலையில்லை இண்டைக்கு பிரதீபன் எனக்கொரு அந்த மாதிரியான ஜோக் ஒண்டு சொன்னவன் அதை நினைச்சுத்தான் சிரிச்சனான்.

உன்ரை போக்கு எனக்கு சரியா படேல்லை பிரதீபனை பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை அதோடை நீ அவனை காதலிறதும் தப்பில்லை ஆனால் தனியாவெல்லாம் சுத்தத் தொடங்கிட்டாய் கவனமடி.

ஜயோ தொடங்கிட்டியா. ஜோக் என்னவெண்டு கேக்கிறதை விட்டிட்டு அட்வைஸ் சொல்லி அறுக்காதை.

சரி சரி சொல்லித்துலை

ஒரு காட்டிலை ஒரு நரி இருந்திச்சுதாம். என்று தொடங்கியவள்........ என்னது ஈரம் காயமுதலேயே பேப்பரிலை வந்திட்டுதா எண்டு நரி முயலிட்டை கேட்டிச்சுதாம். என்று சொல்லிவிட்டு சத்தமாய் விழுந்து விழுந்து சிரித்தாள்.

கதை நல்லாதான் இருக்கு ஆனால் ஈரம் காயமுதல் உன்ரை கதை பேப்பரிலை வராதமாதிரி பாத்துக்கொள்ளடி

சே நீ எப்பவும் இப்பிடித்தான் ரசனை கெட்ட ஜென்மம் என்று விட்டு வசுமதி புத்தகத்தை புரட்டத் தொடங்கினாள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

அன்று வழைமைபோல் வகுப்புக்களிற்கு போவதற்கு புறப்பட்ட ரோகினி வசுமதி இன்னமும் போர்த்து மூடியபடி படுத்திருந்ததை பார்த்தவள் என்னடி வகுப்புக்கு நேரமாயிட்டு வரேல்லையோ?? என்றவளிடம் இல்லையடி எனக்கு சுவமில்லை உடம்பு ஒரு மாதிரியா இருக்கு என்றபடி புரண்டு படுத்துக்கொண்ட வசுமதியின் நெற்றியை தொட்டுபார்த்த ரோகினி என்னடி உடம்புதான் சுடவேயில்லையே ??..அது உள் காச்சல் பேசாமல் போ என்று வசுமதி சினக்கவும் அவள் போய்விட்டாள். மதியம் ரோகினி திரும்பி வந்தபோதும் அசையாமல் படுத்திருந்த வசுமதியிடம் பதட்டத்துடன் என்னடி ஏதும் பிரச்சனையோ எனக்கு தெரிஞ்சு ஒரு நாளும் நீ இப்பிடி இருக்கிறேல்லை. அவன் பிரதீபனும் சிராணியோடை வெளியிலை சுத்துறதாய் வகுப்பிலை கதை அடிபடுது . என்னடி நடக்கிது

ஓமடி நானும் நேரையை கண்டனான் அவன் அந்த சிங்களத்தியோடைதான் இப்ப சுத்துறான் அதாலை எனக்கும் அவனுக்கும் சண்டை

உனக்கு படிச்சு படிச்சு சொன்னான் கேட்டியா சரி நான் பிரதீபனோடை கதைச்சு பாக்கட்டோ??

அவள் கண்கள் குளமாக இல்லையடி எல்லாமே கைமீறி போட்டுது

என்னடி சொல்லுறாய்??

நான் சுகமில்லாமல் இருக்கிறன்.நாலு மாசம்

ரோகினி அதிர்ந்தவளாய் என்னடி இப்பிடி ஒரு குண்டை தூக்கி சர்வசாதாரணமாய் போடுறாய்.உண்மையா சொல்லுறியா இல்லாட்டி பிரதீபனை வெருட்டுறதுக்காக இப்பிடி ஒரு கதையை விடுறியா?

இல்லையடி சத்தியமாத்தான் இதாலைதான் எங்களுக்குள்ளையே பிரச்சனை தொடங்கினது.

தலையில் கையை வைத்தபடி கட்டிலில் ரோகினி அமர்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் ஒரே அமைதியாய் இருந்த அறையின் அமைதியை வசுமதியின் விசும்பல் மீண்டும் கலைத்துக்கொள்ள.

விசும்பியவளின் தலையை நிமிர்த்தி தழுவியபடி சரி இப்ப பிரதீபன் என்னதான் முடிவாய் சொல்லுறான்.

போசாமல் கருவை கலைச்சிட்டு அடுத்த வேலையை பாக்கச் சொல்லுறான்.அவனோடை சண்டை பிடிச்சிட்டு தற்கொலைகூட செய்யலாமாவெண்டும் யோசிச்சன். அதை அவனிட்டையும் சொன்னான் தாராளமாய் போய் எங்கையாவது குதி எண்டு சொல்லிட்டானடி. எனக்கு தற்கொலை செய்யிற அளவுக்கெல்லாம் தைரியமும் இல்லையடி என்றபடி ரோகினியை கட்டிப்பிடித்தபடியே சத்தமாய் அழத்தொடங்கியவளை ...ஸ்ஸ்ஸ்...சத்தமாய் அழாதை பக்கத்து அறையிலை இருக்கிறவங்களுக்கு கேட்டால் பிறகு அதுவேறை பிரச்சனையாயிடும். பேசாமல் எழும்பி குளிச்சிட்டு வா சாப்பிடலாம். பின்னேரம் நான் பிரதீபனோடை தங்கியிருக்கிற ரகுவை பாத்து கதைச்சிட்டுவாறன். எது எப்பிடியிருந்தாலும் வயித்திலை நாலு மாதம் எண்டுறியே அதுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை என்றபடி வசுமதியை குளிக்க அனுப்பிவிட்டு என்ன செய்யலாமென தீவிரமாக யோசிக்கத் தொங்கியிருந்தாள் ரோகினி

குளித்து முடித்து வந்தவளுடன் சாப்பிட்டு விட்டு எதுக்கும் கவலைப்படாதை நான் வகுப்பை முடிச்சிட்டு ரகுவோடையும் கதைச்சிட்டு வாறன் என்றபடி வெளியேறிவிட்டாள்.

சத்தம் வெளியே வராமல் தலையணைக்குள் முகத்தை புதைத்தபடி அழுதழுது வீங்கிப் போயிருந்த முகத்துடன்வசுமதிக்கும் ரோகினிக்கும் அன்று நள்ளிரவு தாண்டியும் விவாதம் போய்க்கொண்டிருந்தது..ரகு எவ்வளவோ பிரதீபனோடை கதைச்சு பாத்தவனாம் தான் கண்ட இடத்திலையும் மிதிச்சு கால் கழுவுற ஆள் அப்பிடித்தான் உன்னையும் கால் கழுவியாச்சு எண்டு சொன்னவனாம். வேணுமெண்டால். அபார்சனுக்கு காசு தரலாம் அதைபோய் செய்திட்டு ஒழுங்கா படிச்சு பாசாகி டொக்ரர் ஆனால் எத்தினையோ மாப்பிளை அம்பிடுவாங்கள் எண்டு திமிராய் சொல்லிட்டாம்.

இப்ப தான் செய்ய சொல்லுறாயடி

உன்ரை பிரதீபனின்ரை பிரச்சனையை பிறகு பாக்கலாம் அனால் முதலாவதாய் உன்ரை வயித்திலை வளர்ற குழந்தையை ஒரு வழி பண்ணவேணும்.

அதுக்கு ஏதாவது குளிசை வாங்கி போட்டு பாக்கட்டோ?

லூசு நீ மெடிசின் தானே படிக்கிறாய் நாலு மாதம் தாண்டிட்டுது எண்டுறாய் குளிசை போடப் போறாவாம். அதுசரி எதுக்கு நாலு மாதம் வரைக்கும் பொத்தி வைச்சிருந்தனி

எனக்கும் பிரதீபனிற்கும் ஒரு மாதத்துக்கு முதலேயே பிரச்சனையள் தொடங்கிட்டுது நான் உன்னட்டை மறைச்சிட்டன் இதை காட்டியாவது அவன் மனதை மாத்தலாமெண்டு நினைச்சன்

நீ பெத்துக்கொண்டு போய் காட்டினாலும் அவன் மனம் மாறமாட்டான். இதை பற்றியும் ரகுவோடை கதைச்சனான் அவனே ஒரு ஜடியாவும் தந்தவன். அதுதான் சூரியகாண்டா..

அப்பிடியெண்டா??

சூரியகாண்டா எண்டொரு சிங்கள கிராமம் இறக்குவானைக்கு அங்காலை இருக்காம் அங்கை சிறிபால எண்டொரு நாட்டு வைத்தியர் இருக்கிறாராம். இந்த விசயங்களிலை ஸ்பெலிஸ்ற்ராம். எல்லா இடத்திலையிருந்தும் அவரிட்டைதானாம் தேடி போறவையள். எங்களோடை படிக்கிற சுனந்த அந்த ஊர்க்காரன்தானாம் அவனிட்டை விலாசம் வாங்கி தாறனெண்டு சொன்னவன். பெரிய பெரிய இடத்து ஆக்களெல்லாம் அங்கை போறதாலை ஆளின்ரை ரேற்றும் கூடவாம் ஜயாயிரம் எண்டு சொன்னான்

என்னது ஜயாயிரமா வாயை பிளந்தாள் வசுமதி

இப்போய் வாயை பிளக்காமல் இதையெல்லாம் அந்த நேரம் யோசிச்சிரக்கவேணும்.

ஏதாவது ரூர் போறமெண்டு வீட்டுக்கு கடிதம் போட்டு கேக்கட்டோ?

எங்கை ரூர் போறமெண்டு உன்ரை கொப்பர் (அப்பா) வேறை யாரையும் விசாரிச்சால்.

புறஜெக்ற் ஏதாவது செய்யிறமெண்டு கேட்டால்??

செய்த புறஜெக்ற்ரை காட்டு எண்டு கேக்கமாட்டாரோ அதுக்கு ஏன் ஜயாயிரம் எண்டும் கேள்வி வரும் உன்ரை கொப்பர் லோயர் எண்டதை மறந்திட்டியோ??

அப்ப என்னதான் செய்யச் சொல்லுறாய்

உன்ரை சங்கிலியும் என்ரை மோதிரமும் காணமல் போட்டுது இதுதான் ஜடியா இரண்டையும் வித்தாலும் ஜயாயிரம் தேறுமா எண்டும் தெரியேல்லை. எதுவெண்டாலும் இந்த சனி ஞாயிறுக்குள்ளை அங்கை போய் அலுவலை முடிச்சிடவேணும் பிறகு இன்னும் சிக்கலாயிடும் என்றவள் நேரத்தை பாத்தவள் அதிகாலையாகிக்கொண்டிருந்தது இருவரும் ப டுக்கைக்குள் நுளைந்து கொள்ள வசுமதியின் விசும்பல் மட்டும் தொடர்ந்துகொண்டிருந்தது

தொடரும்.....ம்....ம்....ம்....

Edited by sathiri

கதை நல்லாதான் இருக்கு ஆனால் ஈரம் காயமுதல் உன்ரை கதை பேப்பரிலை வராதமாதிரி பாத்துக்கொள்ளடி

நல்லாயில்லை சொல்லிப்போட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாத்தான் போகுது. வேற முனையில களம் திறந்து பின்னால அப்பிடியே பொக்ஸ் அடிக்கப் போகிறியல் போல :rolleyes: . மெடிசின் படிக்கிற பெட்டை உதில கோட்டை விட்டது நம்ப ஏலாமல் கிடக்கு. அட்லீஸ்ட் ஈரம் காய முதல் குளிசயையாவது போட்டிருக்கலாம் :unsure: .

  • கருத்துக்கள உறவுகள்

மெடிசன் படிச்ச பெட்டைக்கு எப்படி "பத்தாமல்" விசயத்தை கொண்டு போய் ஜாலியா இருக்கிறது என்று தெரியாமல் போய்விட்டுது விசர் பெட்டை....

சாத்திரி ஐயோ டமிழ் கலாச்சாரம் இப்படி 1980 முதலே போயிட்டுதே ......கி...கி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட அனைவரிற்கும் நன்றிகள். தற்சமயம் அதிக வேலைப்பழு காரணமாக அருணகிரி வாத்தியாரை தொடர முடியாமைக்கு வருந்துகிறேன். நேரம் கிடைக்கும் போது முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு போட்டுவிடுகிறேன்அதற்காக உறவுகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு நன்றிகள்.

சாத்திரியார் ஒரே ஏமாற்றமாக இருக்கிறது.... எப்போது மிகுதி வரும்????????????

அட உங்க போயும் படிக்கிறியோ தம்பி? :D :D :D

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அருணகிரி வாத்தியார். தேவகி, வசுமதி ஆகியோருக்கு என்ன நடந்தது. சாத்திரி எப்ப மிகுதிக் கதையினைத் தொடரப்போறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.