Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலன்(ம்) பெயர்ந்தவனின் புலம்பல் -(பாகம் 1) - கண்டறியாத சுத்தத் தமிழும் எங்கடை பிள்ளைகளும்......

Featured Replies

TOMATO SAUCE = தக்காளிக் குழம்பி

தமிழ் சொற்கள் இல்லாதவைக்கு நாம் தமிழ் சொற்கள் தேடிக் கண்டுபிடிக்கத் தேவையில்லை. நூடில்சை நூடில்ஸ் என்று தானே சொல்லுகின்றோம். அப்படித் தான் பாருங்கோ மற்ற எல்லாவற்றுக்கும். தமிழனுக்கு என்று முதல் நாடு தான் வேண்டும். பின்பு அகதாதியில் குழம்பி, நுழம்பியைச் சேருங்கோ கோ :lol:

  • Replies 55
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://translate.google.com/#auto|ta|sauce

கோ, நான் நினைக்கிறன் நீங்கள் ஒரு பகுதியை விட்டுவிட்டீர்கள் என்று

Sauce என்றால் "உணவுடன் சேர்த்து உண்ணப்படும் குழம்பு" என்று இருக்கு...அடுத்த முறை கவனித்து எழுதவும் :)

மற்றது, எங்களுக்கு பரிச்சயம் இல்லாத சொற்களை அவர்கள் மொழியிலேயே எழுதி, அதன் சரியான எழுத்து வடிவத்தையும், உச்சரிப்பையும் சொல்ல வேண்டும்- இப்ப cherry என்றால் செரி, செர்ரி இல்லாவிட்டால் சேரி என்றோ (ஒன்றை) சொல்ல வேண்டும். ஓரளவு பயன்பாட்டில் இருந்த பழைய சொற்களை பாவிப்பது தவறல்ல, ஆனால் அதை நடைமுறையில் பாவிப்பது சரியோ தெரியவில்லை. ஆப்பிள் க்கு புதுபேர் சூட்டாமல், மங்கோ வை மாம்பழமாய் பாதுகாத்தால் போதும்.

மணிவாசகத்தின் அடுத்த பு பே அறிய ஆவலை இருக்கிறேன்;;;

குறிப்பு; உங்களுக்கு " ம மீ சு " கதை தெரியுமே ?.....

அந்தகாலத்தில் ஒருவர் தனது காதலியுடன் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படம் பார்க்க போனாராம். அந்த நேரத்தில் தனது காதலியாய் கொண்டு அந்த படப் பெயரை உடம்பில் பச்சை குத்தினாராம், விடிய எழும்பி பார்த்தால் தனியே " ம மீ சு " என்றுதான் இருந்தாம்.. என் அப்படி? என்ன நடத்துது என்று சொல்ல முடியுமா?

நூடில்சை நூடில்ஸ் என்று தானே சொல்லுகின்றோம்.

washing powder ஐ மட்டும் ஏன் ரின்சோ எண்டு சொல்லுறம்? :)

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

உங்கள் கருத்துக்களிற்கான எனது பதில்களை இன்றிரவு பதிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கையும் உதே கூத்துதான்.அதை விட மோசம் தாய்மார் தங்களுக்குள்ள பிலிம் காட்டுவதற்க்காக பிள்ளைகளை போட்டு பெனட் எடுப்பதுதான். :rolleyes:

எமக்கு பொருட்களை (அல்லது வேறு ஏதாவதையோ) விற்க அல்லது அறிமுகப்படுத்த வருபவர்களை கூர்ந்து அவதானித்தால் ஏதோ அவர்களே அந்த பொருட்களை செய்தமாதிரி கதைப்பார்கள், அதேபோல எமக்கு ஆங்கில ஊடகங்கள் அநேகமான செய்திகளை தருவதால் எமக்குள் ஒரு மயக்கம்.ஒரு (தமிழ்)ஆசிரியரின் கடமை அந்தமொழியில் அந்த மாணவனை பாண்டித்தியம் பெறசெய்வது, பல மாணவர்களுக்கு அவர் கூறும் விடயங்கள் வேண்டத்தகாததாக இருக்கலாம். அது ஆசிரியரின் தவறல்ல.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்போது படித்த பல விடயங்கள் வேலைசெய்யும்போது தேவைப்படாது, ஆனால் அந்தத்துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவனுக்கு அவை மிகமுக்கியம்.இன்றைய பலவேலைகள் மென்பொருள் காரணமாக மிக இலகுவாக சாதாரண நபராலும் செய்துவிடமுடியும். அதற்காக அந்த பாடத்திட்டங்களை ஒதுக்கிவிட முடியுமா?

கண்ணதாசன் கூட "லில்லி மலருக்கு கொண்டாட்டம், செர்ரி பழத்துக்கு கொண்டாட்டம்" என்று தான் எழுதினர்.

கண்ணதாசன் ஒரு கவிஞன், மொழிவல்லுனன் கிடையாது. சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்று எழுதியவன், சட்டி சுட்டதடா துணியை வைச்சு பிடிடா(சட்டியில் இருந்த அமுதத்தை ஏன் இழப்பான்?) என்று எழுதினால் அவனை போற்றியிருக்கலாம். பொதுவில் பெரிய படைப்பாளிகள் திருடர்கள்.

இடியப்பம்(விக்கி: is an Indian rice noodle )

noodle சீன இடியப்பம் என்று சொல்லலாம்(நகைச்சுவைக்கு மாத்திரம் , நான் மொழிவல்லுனன் கிடையாது).

Edited by kssson

washing powder ஐ மட்டும் ஏன் ரின்சோ எண்டு சொல்லுறம்? :)

[size=5]ரின்சோ தமிழ் சொல்லா சனி?[/size]

  • தொடங்கியவர்

[size=4]நாமும் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்திற்கு கனடாவில் விடுகின்றோம். ஏன்?[/size]

[size=4]பலரும் பலவேறு காரணங்களுக்காக விடுகின்றனர். என்னை பொறுத்தவரையில்...[/size]

[size=4]முதலாவது: இந்த புலம்பெயர் சூழலில் பிள்ளைகள் சக தமிழ் உறவுகளை காணவும் பழகவும் சந்தர்ப்பத்தை உருவாக்குதல்.[/size]

[size=4]இரண்டாவது: எமது வரலாற்றை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழியை அறிந்து கொள்ளல்.[/size]

[size=4]மூன்றாவது: தமிழ் பாடசாலை ஊடாக பிற திறமைகளை வளர்த்தல்: மேடைப்பேச்சு(தன்னம்பிக்கை), ஓவியம், ஆங்கில-பிரெஞ்சு-கணித.. பரீட்சைகள், நாட்டியம், சங்கீதம், கராட்டி, மிருதங்கம் ....[/size]

[size=4]நாலாவது: நாளடைவில் தனது நிறம், பெயர், மொழி மற்றும் கலாச்சாரத்தை இட்டு பெருமையும் ஏன் தங்களது மூதாதையர் அகதிகளாக இங்கே வந்தார்கள் எனவும் அறியு[/size][size=4]ம் வாய்ப்பை கொடுத்தல்.[/size]

கருத்திற்கு நன்றி அகூதா!பலரும் பல்வேறு தேவைகளுக்காக தமிழ் பாடசாலைகளுக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள்.ஆனால் நான் இந்தப் பதிவில் சொல்ல வந்தது குழந்தைகள் தமிழ் பள்ளிக்கூடம் என்றால் வெருண்டோடாது அவர்கள் விரும்பும் வகையிலான கல்வி முறையின் தேவையையே!

எங்கை பு பெ பு 2 .............. ?

நேரத்தோடு போராட வேண்டியுள்ளது அண்ணா!வெகு விரைவில் எழுதுகிறேன்.

பூனா பேன பூனா என்று தலைப்பை மாத்தியிருக்கின்றீர்கள்.

வாசிப்பவர்கள் தவறாக விளங்கிக் கொள்ளலாம்.

தலைப்பை விளக்கமாகப் போட்டால் நன்றாக இருக்கும்

மணிவாசகன்.

மற்றும் படி இங்கே பலர் வித்துவான் பட்டத்திற்காகப் படிப்பிக்கின்றார்கள்.

பிள்ளைகள் பாவங்கள். தமிழே ஒழுங்காக வாயில் வராது.

முதலில் தமிழப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்குப் பின்னர் பிள்ளைகள் தாங்களாகவே

அடுத்த படிப்பிற்குத் தயாராவார்கள்

தங்கள் கருத்து கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

எனது மகளுக்குச் சமயம் படிப்பிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை ஒன்று!

இங்குள்ள ஒரு பாடசாலைக்கு, ஒரு சமய ஆசிரியை வந்து சேர்ந்தா!

மிகவும் மகிழ்ச்சியடைந்து, அவவிடம் சமயம் படிக்க விட்டேன்!

எனது மகளுக்கு அப்போது எட்டு வயதிருக்கும்!

முதலாவது பாடம்!

சிவபுராணம், ஆங்கிலத்தில் எழுதப் பட்டு, ஒரு வாரத்தினுள் பாடமாக்கி, ஆசிரியையிடம் ஒப்பிக்க வேண்டுமாம்!

இரண்டு நாளைக்கு, 'நமச்சிவாய வாழ்க' சொல்லிக் கொண்டு திரிந்தாள்!

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன்.... வரும்போது என்னிடம் கருத்துக் கேட்டாள்!

திரும்ப ஆசிரியையிடம் ஒப்புவிக்கும் போது, இடையில் தடுமாறியதில், ஆசிரியை மகளை, எல்லார் முன்னிலையிலும் பேசிப் போட்டா போல!

அன்றுடன் அவளின், சமய பாடமும் முடிவுக்கு வந்தது!

ஆனாலும், அந்த ஆசிரியை, பிட்டுக்கு மண் சுமந்த கதை, போல ஆரம்பித்திருந்தால், மகளுக்கும் சமயத்தில் ஒரு ஆர்வம் வந்திருக்கும் என எண்ணுகின்றேன்!

வணக்கம் புங்கையூரான்உண்மை தான்அது மட்டுமன்றி தற்போதைய குழந்தைகள் ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள்.அவற்றிற்கெல்லாம் எம்மிடம் பதில் இல்லை.உதாரணமாக பிள்ளையாருக்கு யானை முகம் ஏன் வந்தது என்பதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது.உமாதேவியார் தியானத்திற்கோ அல்லது நித்திரைக்கோ போகும் போது பிள்ளையாரைக் கூப்பிட்டு காவலிருத்தினாவாம். யாராவது வந்தால் உள்ளே விட வேண்டாம் என்று சொல்லி விட்டுப் போனாவாம். பிள்ளையாரும் எல்லாரையும் திருப்பி விட்டுக் கொண்டிருந்தாராம். கடைசியிலை சிவபெருமான் வந்தாராம். அவரையும் போக விடமாட்டான் எண்டு அடம்பிடிக்க சிவபெருமானுக்கு கோவம் வந்து தன்ரை சொந்தப் பிள்ளையின்ரை தலையை வெட்டிப் போட்டிட்டாராம்.உமாதேவி வந்து சண்டை பிடிக்க சரி நான் ஒரு வேறை தலையைப் போட்டு பிள்ளையை எழுப்பிறன் எண்டு ஒரு யானையை வெட்டி அந்தத் தலையைப் போட்டு பிள்ளையாரை எழுப்பி விட்டாராம். இது கதை.இதைச் சொன்னால் இந்தக் காலத்துப் பிள்ளைகள் நம்புங்களோ??அதே மாதிரி இன்னொரு பிள்ளை கோயிலிலை ஐயரைப் பாத்திட்டு ஏன் இவர் நேக்கட்டா நிக்கிறார் எண்டு கேட்டுதாம். அதுக்கான காரணம் எங்களிலை எத்தனை பேருக்குத் தெரியும்.இதுகளைத் தெரிஞ்சு வைச்சுக் கொண்டெல்லோ சம்யம் படிப்பிக்க வெளிக்கிட வேணும். (இந்தப் புராணங்களை எல்லாம் படிப்பிக்க வேணுமோ எண்டதிலை என்ரை கருத்து வேறை மாதிரியானது. அது இங்கை வேண்டாம்.)

கிஸான்,ஜஸ்டினின் கருத்துத் தான் என்னோடதும்...செரிப் பழத்தை "செரி" என தமிழில் சொல்லிக் கொடுப்பதை விட தமிழில் "சேலாப்பழம்" என சொல்லிக் கொடுப்பதில் தப்பில்லை...சின்ன வயதில் சொல்லிக் கொடுத்தால் தான் அவர்களது மண்டைக்குள் புகும்

பி;கு;இந்தப் பழங்களுக்கு எல்லாம் இப்படியொரு தமிழ் பெயர் இருக்குது என இன்று தான் தெரியும்...வெட்கக்கேடு :lol::D:rolleyes:

இதுக்கெல்லாம் வெட்கப்படத் தேவையில்லை ரதி. 80 வீதத்திற்கு மேற்பட்ட ஆக்களுக்கு இந்தப் பேரெல்லாம் தெரியாது. எனக்கும் கிட்டடியிலை தான் தெரியும்

எங்கள் பிள்ளைகள் தமிழைப்பேசவும் எழுதவும் தெரியக் கூடிய மாதிரி பாடங்களை அமைக்க வேண்டும்.ஆசிரியர்களே பல சொற்களுக்கு விளக்கம் தெரியாத நிலையில்தான் பாடம் படிப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.அதற்காக ஆங்கிலத்தைக் கலந்து பாடங்களை அமைக்க வேண்டும் என்று சொல்லவில்லை புழக்கத்தில் இருக்கும் சொற்களை வைத்து பாடங்களை அமைக்க வேண்டும்.தமிழ்க் கல்விக் கழகத்தினால் வெளியிடப்படும் பாடநூல்கள் தரமானவையாக இருந்தாலும் அதிலுள்ள கடினமான புலம்பெயர் பிள்ளைகளுக்கு தேவையற்ற பாடங்களைக் கட்டாயமாக நீக்க வேண்டும்.இதுபற்றி சம்பந்தப் பட்டவர்களிடம் பலமுறை தெரியப்படுத்தியும் மாற்றாமல் பிடிவாதமாக இருக்கிறார்கள்.இதனால் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சான்றிதழ் கிடைத்தால் போதுமென்று OCR,CAMBRIDGE போன்ற தரமற்ற பரீட்சைகளுக்கு தோற்றுகிறார்கள்.இத்தகைய பரீட்சைகளை நடத்துபவர்களிடம் ஒழுங்கான பாடத்திட்டமும் கிடையாது.காசு கறப்பதே அவர்களின் நோக்கம்.தமிழ்க் கல்விக்கழகத்தின் வழி படிப்பவர்கள் மிக எளிதாகச் இத்தகைய பரீட்சைகளில் சித்தியடையலாம்.ஆனால் தமிழ் கல்விக் கழகத்தின் பாடப் புத்தகங்களின் சில அலகுகள் பிள்ளைகள் தமிழை வெறுக்கத்தக்க விதத்திலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.புலம்பெயர் சூழுலில் வளரும் பிள்ளைகளுக்கு தாயகத்திலுள்ள உள்ள பிள்ளைகள் படிக்கும் தமிழை விட கடினமான தமிழை படிக்க வேண்டிய நிலையில் இருந்தால் தமிழ் வளராது.இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இன்னும் நிறைய எழுத வேண்டும் தற்போது நேரபம் இல்லை பிறிதொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன்.

பாடத்திட்டங்களிலுள்ள குறைபாடுகளுக்கப்பால் இந்தப் பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பதும் அவர்களது தமிழ் புலமை எவ்வளவு என்பதும் சர்ச்சைக்குரிய விடயங்கள்.

கிசன் ஜஸ்டின் மற்றுமு; ரதி ஆகியோருடைய கருத்துக்களும் ஆக்கபூர்வமானதே.

ஆனால் புலத்திலுள்ள குழந்தைகள் இந்தத் தமிழ் சொற்களைக் கற்றுக் கொள்கின்றவா? ஆகக் குறைந்தது எத்தனை வீதமான குழந்தைகளால் ஓரளவுக்காவது தமிழ் கதைக்க முடிகின்றது?

இந்த நிலையில் குமட்டிப் பழம் குமளிப்பழம் என்று சொல்லிக் குடுத்தால் அதுகள் தான் சொல்லுமா? சரி சொன்னாலும் எத்தனை பெற்றோருக்கு இநதச் சொற்கள் தெரியும்?

இது போன்ற விடயங்களையும் கருத்தில் எடுக்க வேண்டுமல்லவா?

எல்லாப் பாடங்களிலும் கஷ்டமான பகுதியும் இருக்கும். அதற்காக அவற்றை நீக்கி விட்டுப் படித்தால் வளர்ச்சி இருக்காது. என்னைப் பொறுத்தவரை ஒரு மொழியை சுத்தமாகக் கற்பதில் ஒரு தவறும் இல்லை. கிஸ்ஸன் சொன்னது போல குழந்தைகளுக்கு அது இயலும். பெரியவர்கள் இரட்டிப்பு முயற்சி செய்தால் அவர்களுக்கும் இயலும். இலகுவாக்கலாம் என்பதற்காக ஆங்கிலம் கலந்து கற்பித்தால் நீர்கொழும்புத் தமிழர் தமிழ் பேசுவது போலவொ, அல்லது கரீபியன் தீவினர் ஆங்கிலமும் இல்லாமல் பிரெஞ்சும் இல்லாமல் ஒரு கலப்பு மொழி பேசுவது போலவோ ஆகி விடக் கூடும்!

கிசன் ஜஸ்டின் மற்றுமு; ரதி ஆகியோருடைய கருத்துக்களும் ஆக்கபூர்வமானதே.ஆனால் புலத்திலுள்ள குழந்தைகள் இந்தத் தமிழ் சொற்களைக் கற்றுக் கொள்கின்றவா? ஆகக் குறைந்தது எத்தனை வீதமான குழந்தைகளால் ஓரளவுக்காவது தமிழ் கதைக்க முடிகின்றது?இந்த நிலையில் குமட்டிப் பழம் குமளிப்பழம் என்று சொல்லிக் குடுத்தால் அதுகள் தான் சொல்லுமா? சரி சொன்னாலும் எத்தனை பெற்றோருக்கு இநதச் சொற்கள் தெரியும்?இது போன்ற விடயங்களையும் கருத்தில் எடுக்க வேண்டுமல்லவா?

நான் சொல்லுவான் எங்கடை கோ வின் கருத்துத்தான் என்னதும் என்று...நாலு பேருக்கு நல்ல தமிழ் படிப்பிக்க வெளிக்கிட்டு 40 பேரை வகுப்பை விட்டு துரத்துகிற வேலையாய் முடியும். அன்ன நடை நடக்க போய் தன்ரை நடையும் கேட்டதாய் போகும்" சேரிக்கு சேரி என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, பானை வெதுப்பி அக்கின கோமாளிகூது ஆடக்கூடாது. எங்களை விட எத்தனையோ வருடம் பிந்தி வந்த கேரளா மொழி எல்லா ஒலிகைளையும் கொண்டு வளமாக இருக்க நாங்கள்- இப்பவும் பல உச்சரிப்புகளில் தவறி விடுகிறோம்.. மொழி வளர வேண்டும் என்றால் புதிய சொற்கள் வரவேண்டும் -

நன்றி வொல்கானோ!ஏனைய மொழிச் சொற்களை உள்வாங்கி வளரும் மொழிகள் பற்றிச் சொல்லியிருக்கிறீங்கள்.இதைப் பற்றித் தான் அடுத்த தலைப்பிலை கதைக்கப் போறன்....

[size=5]நாங்கள் தமிழீழத்தில் இருந்து இப்படித் தூய சொற்களைப் பாவித்தா எழுத, பேச, வாசிக்கப் பழகினோம்? எமக்கே உந்தச் தமிழ்ச் சொற்கள் தெரியவில்லை. அதுவும் இரண்டாம், மூன்றாம் மொழியாகத் தமிழைப் படிக்கும் பிள்ளைகளுக்குப் படிப்பிதால்?[/size] [size=5]"வைத்தால் கொண்டை தட்டினால் மொட்டை" என்ற மாதிரித் தான் உவையளின் படிபிப்பு[/size][size=5]! தமிழ் படிப்பிக்கப் போய் தமிழை அழிக்கிறது தான்[/size],,,,,,,,,,,,,,,,,,,,

மொழியென்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடகம் தானே! இந்தத் தூய சொற்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தடையாக இருக்குமானால் இது மொழியின் வளர்ச்சிக்குத் தடையே

watermelon இக்கு தமிழ் உள்ளதே. எம் ஊரில் வத்தகைப்பழம் என்றும் தமிழ்நாட்டில் தர்ப்பூசனிப்பழம் என்றும் சொல்வார்கள்.

பிறகு ஏன் இந்த குமட்டிப்பழம் என்ற பெயர்? இதை சூட்டியது யார்?

தமிழை 'வளக்க' நினைக்கிற ஆக்கள் தங்கள் இஸ்டத்துக்கு பேர்களைக் கண்டுபிடிக்கினம். இதுக்கு முறையான ஒரு குழுவோ இடமோ இல்லை.

இங்கையும் உதே கூத்துதான்.அதை விட மோசம் தாய்மார் தங்களுக்குள்ள பிலிம் காட்டுவதற்க்காக பிள்ளைகளை போட்டு பெனட் எடுப்பதுதான். :rolleyes:

உண்மை தான். போட்டியில் வெற்றி பெற்றால் போதும் என்பதற்காக பிள்ளைகளை போட்டு வாட்டு வாட்டு என்று வாட்டுகிறார்கள். போட்டி முடிந்ததும் பிள்ளையின் தமிழும் முடிந்து விடும்...

  • தொடங்கியவர்

சரி அடுத்த பதிவுக்குப் போறதுக்கு முதலிலை ஒரு விசயத்தைச் சொல்ல வேணும்.

பிள்ளைகள் திருக்குறள் படிச்சா நல்லது இதிலை மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் என்ன பிரச்சினை எண்டால் எந்த மாதிரியான தமிழறிவு எங்கடை பிள்ளைகளுக்கு இருக்குது எண்டது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தானே.

இந்தப் பிள்ளைகளைப் பிடிச்சு நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண் எண்டு சொல்லிக் குடுத்தால் அதுகள் ரங் ருவிஸ்ற்றர் எண்டு சொல்லிப் போட்டு எட்டப் போய் நிக்குதுகள்.

உப்பிடித் தான் ஒரு பிள்ளைக்கு தமிழ் ரீச்சர் குட் மோர்னிங் எண்டு சொல்லாமல் காலை வணக்கம் எண்டு சொல்லுங்கோ எண்டு சொல்லிக் குடுத்தாவாம்.

அதுக்கு அந்தப் பிள்ளை யோசிச்சுப் போட்டு இது தோய்க்காத சொக்ஸ் போட்டாலெல்லோ சொல்லுறது எண்டு சொல்ல ரீச்சர் திகைச்சுப் போனாவாம்.

பிறகு திருவித் திருவி விசாரிக்கத் தான் விசயம் விளங்கிச்சுதாம்.

அது என்னெண்டால் தாய்க்காறி பிள்ளை தோய்க்காத சொக்ஸ் போட்டால் பிள்ளை கால் மணக்கும் எண்டு சொல்லி மாத்தச் சொல்லிறவாவாம்.

பிள்ளைக்கு கால் மணக்கும் எண்டதும் காலை வணக்கம் எண்டதும் ஒரே மாதிரி இருந்திருக்குது.

இந்த லட்சணத்திலை குமட்டிப் பழம் குமுழிப் பழம் எண்டு அடுக்கிக் கொண்டு போனால் தாங்குமோ எண்டது தான் என்ரை கேள்வி......

apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் .

orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி , நாரந்தம்பழம் , தோடம்பழம் .

strawberry : செம்புற்றுப்பழம் .

durian : முள்நாரிப்பழம் .

blueberry : அவுரிநெல்லி .

watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி ,... முலாம்பழம் .

cranberry : குருதிநெல்லி .

blackberry : நாகப்பழம் , நாவல் பழம் .

peach : குழிப்பேரி .

cherry : சேலாப்பழம் .

kiwi : பசலிப்பழம்

via facebook

apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் .

orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி , நாரந்தம்பழம் , தோடம்பழம் .

strawberry : செம்புற்றுப்பழம் .

durian : முள்நாரிப்பழம் .

blueberry : அவுரிநெல்லி .

watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி ,... முலாம்பழம் .

cranberry : குருதிநெல்லி .

blackberry : நாகப்பழம் , நாவல் பழம் .

peach : குழிப்பேரி .

cherry : சேலாப்பழம் .

kiwi : பசலிப்பழம்

via facebook

அப்ப எங்கட நாவல் பழம் என்னாகிறது? ஔவையார் அப்ப blackberry யா சாப்பிடடவ?

Edited by Eas

  • தொடங்கியவர்

apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் .

orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி , நாரந்தம்பழம் , தோடம்பழம் .

strawberry : செம்புற்றுப்பழம் .

durian : முள்நாரிப்பழம் .

blueberry : அவுரிநெல்லி .

watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி ,... முலாம்பழம் .

cranberry : குருதிநெல்லி .

blackberry : நாகப்பழம் , நாவல் பழம் .

peach : குழிப்பேரி .

cherry : சேலாப்பழம் .

kiwi : பசலிப்பழம்

via facebook

எனக்கும் சில பேர்கபை; பார்க்க சந்தேகமாகத் தான் இருக்கிறது.முலாம்பழம் என்பது சிறிய அளவிலான ஒரு பழம். அனால் இங்கே watermelonஐ முலாம்பழம்என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

318005_156459377821503_1079025159_n.jpg

[size=4]வெளிநாட்டில சின்னபசங்க தமிழ் படிக்கணுங்கற சமாச்சாரம் ரொம்ப நல்லதுங்க . ஆனா அவங்க கிட்ட போயி ரெம்ப அழிச்சாட்டியம் செஞ்சீங்கன்னா பசங்க வெறுத்துடுவாங்க . பக்குவமா சொன்னா அவங்க கத்துக்குவாங்க . எங்க ஊரில தமிழ்ல எல்லாம் இருகணும்னு எழுத்திலதாங்க இருக்கு . நடைமுறைல தமிழ்மொழி மூலம் படிக்கிறவங்களை ரெம்ப கேவலமா பாக்கிறாங்க மணிவாசகன் அண்ணன் .[/size]

[size=4]வெளிநாட்டில சின்னபசங்க தமிழ் படிக்கணுங்கற சமாச்சாரம் ரொம்ப நல்லதுங்க . ஆனா அவங்க கிட்ட போயி ரெம்ப அழிச்சாட்டியம் செஞ்சீங்கன்னா பசங்க வெறுத்துடுவாங்க . பக்குவமா சொன்னா அவங்க கத்துக்குவாங்க . எங்க ஊரில தமிழ்ல எல்லாம் இருகணும்னு எழுத்திலதாங்க இருக்கு . நடைமுறைல தமிழ்மொழி மூலம் படிக்கிறவங்களை ரெம்ப கேவலமா பாக்கிறாங்க மணிவாசகன் அண்ணன் .[/size]

நீங்க அங்கிட்டு இருந்து கொண்டு ஏனுங்க தமிழை பக்குவமா கத்துக்கெல????

  • தொடங்கியவர்

.

நீங்க அங்கிட்டு இருந்து கொண்டு ஏனுங்க தமிழை பக்குவமா கத்துக்கெல????

அலைமகள்!இடத்துக்கு இடம் பேச்சு வழக்கு வேறுபடுகிறது. ஈழத்திலும் பிரதேசத்திற்குப் பிரதேசம் பேச்சு வழக்கு வேறுபடுகிறது.அந்த வகையில் சொப்னா பேச்சுத் தமிழில் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். (நான் இந்தக் கட்டுரையை யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் எழுதியதைப் போல)

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

[size=4]வெளிநாட்டில சின்னபசங்க தமிழ் படிக்கணுங்கற சமாச்சாரம் ரொம்ப நல்லதுங்க . ஆனா அவங்க கிட்ட போயி ரெம்ப அழிச்சாட்டியம் செஞ்சீங்கன்னா பசங்க வெறுத்துடுவாங்க . பக்குவமா சொன்னா அவங்க கத்துக்குவாங்க . எங்க ஊரில தமிழ்ல எல்லாம் இருகணும்னு எழுத்திலதாங்க இருக்கு . நடைமுறைல தமிழ்மொழி மூலம் படிக்கிறவங்களை ரெம்ப கேவலமா பாக்கிறாங்க மணிவாசகன் அண்ணன் .[/size]

தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் பிரச்சினை இல்லை. ஈழத்திலும் தமிழ் படிப்பவர்களை ஏனைய கணித விஞ்ஞான வர்த்தகப் பிரிவில் படிப்பவர்கள் சற்று தரக் குறைவாகவே பார்ப்பதுண்டு.

எப்போதும் அருகில் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன்

உங்களைப்போன்ற ஒரு நிலைப்பாடு எனக்கும் இருந்தது. எமது சங்கத்தால் நடாத்தப்பட்ட திருக்குறள் மனனப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டியை பார்க்கும்வரை....

சாதாரணமாக இப்படியான நிகழ்வுகளுக்கு போவதை நானே விரும்பவதில்லை. ஆனால் இந்த நிகழ்வில் கட்டாயம் நான் இருக்கவேண்டி வந்ததால் கவனித்தேன். உண்மையில் வெட்கப்பட்டேடன்.

உனக்குப்பிடித்த போராளி என்னும் தலைப்புக்கு...

திலீபன் பற்றி ஒரு சிறுவன் பேசினான். என்ன கணீரென்ற குரல். கையசைவு கோபம் சாந்தம் என என்னை அதிர வைத்தான்.

இன்னொரு சிறுமி

விபுலானந்தர் பற்றி பேசினாள்

அவரைப்பற்றிய பல தகவல்களை நானே அப்பொழுது தான் அறிந்து கொண்டேன்.

திருக்குறளை

ஒவ்வொன்றாக இது இத்தனையாம் திருக்குறள் எந்த பகுதியில் இருந்து பேசுகின்றேன் என சொன்னபோது உண்மையில் அந்த ஆசிரியர்களையும் பெற்றோரையும் பெருமையுடன் தலை வணங்கினேன்.

இப்படியான நிகழ்வுகளுக்கு போய் வந்தவர்களும் எழுதலாமே.

அப்பொழுதான் இது ஒரு முழுமையான ஆய்வாக அமையும்.

.

அலைமகள்!இடத்துக்கு இடம் பேச்சு வழக்கு வேறுபடுகிறது. ஈழத்திலும் பிரதேசத்திற்குப் பிரதேசம் பேச்சு வழக்கு வேறுபடுகிறது.அந்த வகையில் சொப்னா பேச்சுத் தமிழில் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். (நான் இந்தக் கட்டுரையை யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் எழுதியதைப் போல)

பொறுங்க சார் அவங்க சொல்லட்டுமே

இன்றுதான் இந்தத்திரியை வாசித்தேன் மணிவாசகன் ....தொடருங்கள் புலம் பெயர் வாழ் வாழ்க்கையில்

எத்தனையோ பிணக்குகள் , எதிர்பார்ப்புகள்,தேவைகள் ஆம் அதன் ஒரு பகுதியே தமிழ் பாடசாலைகளும்,பிள்ளைகளின் தமிழ் கல்வியும்.ஒரு விடயத்தை பாடசாலை நிர்வாகத்தினர் கருத்தில் கொள்ளவேண்டும். திறமை வாய்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேணும்.இந்த விடயத்தில் முகம் பார்க்காமல் ,பந்தபாசம் பார்க்காமல்,ஆசிரியர் தெரிவு அமையவேண்டும். பல புலம் பெயர் நாடுகளிலே இப்படியான எதிர்பார்ப்பு கஷ்டம் தான். அதற்காக ஒன்றுமே தெரியாதவர்களை ,திறமை இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமித்து பாடசாலையை நடத்தவேணும் என்ற மனப்பாங்கிலிருந்து விடுபடவேனும்.என்னில் அறிவு சம்பந்தமான ,எதிர்கால சந்ததியினர் சம்பந்தமான விடயமாதலால் .............முடியாவிட்டால் பாடசாலைகளை நடாத்தக்கூடாது ,தவறான கல்வியை வழங்ககூடாது என்பதே என் வாதம் ஆகும். நன்றி

  • தொடங்கியவர்

மணிவாசகன்

உங்களைப்போன்ற ஒரு நிலைப்பாடு எனக்கும் இருந்தது. எமது சங்கத்தால் நடாத்தப்பட்ட திருக்குறள் மனனப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டியை பார்க்கும்வரை....

சாதாரணமாக இப்படியான நிகழ்வுகளுக்கு போவதை நானே விரும்பவதில்லை. ஆனால் இந்த நிகழ்வில் கட்டாயம் நான் இருக்கவேண்டி வந்ததால் கவனித்தேன். உண்மையில் வெட்கப்பட்டேடன்.

உனக்குப்பிடித்த போராளி என்னும் தலைப்புக்கு...

திலீபன் பற்றி ஒரு சிறுவன் பேசினான். என்ன கணீரென்ற குரல். கையசைவு கோபம் சாந்தம் என என்னை அதிர வைத்தான்.

இன்னொரு சிறுமி

விபுலானந்தர் பற்றி பேசினாள்

அவரைப்பற்றிய பல தகவல்களை நானே அப்பொழுது தான் அறிந்து கொண்டேன்.

திருக்குறளை

ஒவ்வொன்றாக இது இத்தனையாம் திருக்குறள் எந்த பகுதியில் இருந்து பேசுகின்றேன் என சொன்னபோது உண்மையில் அந்த ஆசிரியர்களையும் பெற்றோரையும் பெருமையுடன் தலை வணங்கினேன்.

இப்படியான நிகழ்வுகளுக்கு போய் வந்தவர்களும் எழுதலாமே.

அப்பொழுதான் இது ஒரு முழுமையான ஆய்வாக அமையும்.

வணக்கம் விசுகு அண்ணா!புலம்பெயர் தேசத்தில் வாழுகின்ற ஒரு குழந்தை நீங்கள் சொன்னதைப் போல திருக்குறயோ திருவருட்பயனையோ சரியான உச்சரிப்புடன் கருத்துணர்நது மேடையில் சொல்லும் போது தமிழை நேசிக்கும்அனைவருமே பூரிப்படையவே செய்வர்.ஆனால் புலத்துக் குழந்தைகளில் எத்தனை வீதமான குழந்தைகள் இத்துணை தமிழறிவுடன் இருக்கின்றன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இன்றுதான் இந்தத்திரியை வாசித்தேன் மணிவாசகன் ....தொடருங்கள் புலம் பெயர் வாழ் வாழ்க்கையில்

எத்தனையோ பிணக்குகள் , எதிர்பார்ப்புகள்,தேவைகள் ஆம் அதன் ஒரு பகுதியே தமிழ் பாடசாலைகளும்,பிள்ளைகளின் தமிழ் கல்வியும்.ஒரு விடயத்தை பாடசாலை நிர்வாகத்தினர் கருத்தில் கொள்ளவேண்டும். திறமை வாய்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேணும்.இந்த விடயத்தில் முகம் பார்க்காமல் ,பந்தபாசம் பார்க்காமல்,ஆசிரியர் தெரிவு அமையவேண்டும். பல புலம் பெயர் நாடுகளிலே இப்படியான எதிர்பார்ப்பு கஷ்டம் தான். அதற்காக ஒன்றுமே தெரியாதவர்களை ,திறமை இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமித்து பாடசாலையை நடத்தவேணும் என்ற மனப்பாங்கிலிருந்து விடுபடவேனும்.என்னில் அறிவு சம்பந்தமான ,எதிர்கால சந்ததியினர் சம்பந்தமான விடயமாதலால் .............முடியாவிட்டால் பாடசாலைகளை நடாத்தக்கூடாது ,தவறான கல்வியை வழங்ககூடாது என்பதே என் வாதம் ஆகும். நன்றி

கருத்திற்கு நன்றி தமிழ் சு+ரியன்.நான் அனுபவ பூர்வமாகக் கண்ட ஒரு விடயத்தை தொட்டிருக்கிறீர்கள். பல இடங்களிலும் தான் தனக்குப்பின் தன் பிள்ளை அல்லது உறவினர் ஆசிரியராக வர வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.

  • 2 weeks later...

நீங்க அங்கிட்டு இருந்து கொண்டு ஏனுங்க தமிழை பக்குவமா கத்துக்கெல????

[size=4]வாங்க அலை அக்கா :) . உங்க கூட ஏதாவது வம்புக்கு வந்தேனா ? சொல்லுங்க . ஆமா....... நாங்க எழுதற தமிழ் மட்டம்ன்னு சொல்றீங்க . அப்புறம் ஏங்க எங்க ஊரு சினிமாக்களையும் பாட்டுங்களையும் சீரியலுங்களையும் பாத்துட்டு இருக்கீக்க ^_^^_^ ??????? அவங்க மட்டும் இலக்கண தமிழ்ள்ளையா பேசீட்டு இருக்காங்க :lol: ? ஏங்க உங்க ஊரில மட்டும் நல்ல தமிழ் பேசிறீங்களா என்ன :lol: ? அரைவாசி மலையாளம் . நாங்க உங்கள போலவா உங்க தமிழை கிண்டல் செஞ்சீட்டு இருக்கோம் :D ? திருந்துங்கம்மா .... :icon_idea: :icon_idea: .[/size]

Edited by சொப்னா

[size=4]வாங்க அலை அக்கா :) . உங்க கூட ஏதாவது வம்புக்கு வந்தேனா ? [/size]

[size=5]ஏனுங்க உப்பிடித் தாய் மொழியைக் கொல்லுறீங்க?[/size]

[size=4]சொல்லுங்க . ஆமா....... நாங்க எழுதற தமிழ் [size=5]மட்டம்ன்னு[/size] சொல்றீங்க . [/size]

[size=5]உங்களுக்கு தமிழே எழுத் தெரியாது! [/size][size=5]முதல் ஆங்கிலேயனுக்கு அடிமையாகிறதை நிறுத்துங்க[/size]. [size=5]தமிழ் அழகாய் வரும். ( உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? உதுகளுக்கு விளங்குமோ தெரியாது[/size])

[size=4]அப்புறம் ஏங்க எங்க ஊரு சினிமாக்களையும் பாட்டுங்களையும் சீரியலுங்களையும் பாத்துட்டு இருக்கீக்க ^_^^_^ ??????? அவங்க மட்டும் இலக்கண தமிழ்ள்ளையா பேசீட்டு இருக்காங்க :lol: ? ஏங்க உங்க ஊரில மட்டும் நல்ல தமிழ் பேசிறீங்களா என்ன :lol: ? அரைவாசி மலையாளம் . நாங்க உங்கள போலவா உங்க தமிழை கிண்டல் செஞ்சீட்டு இருக்கோம் :D ? திருந்துங்கம்மா .... [/size]

[size=5]நான் உந்த ஊத்தை சினிமாக்கள், சீரியல்கள் , பாட்டுக்கள் கேட்பது பார்ப்பது இல்லைங்க. உங்கட நாடு மாதிரித் தானுங்க உங்கட தமிழும்!!![/size]

Edited by அலைமகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.