Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பில்லா 2 - அஜித்தின் தேவைக்கு போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்படுத்தப்படும் ஈழப்போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஈழப்புரட்சிக்கு உதவும் பில்லா அஜீத்[/size]

[size=4]1980-களில், உச்சத்தில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் அஜீத். அஜீத் நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம். [/size]

[size=4]அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாக, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சி போருக்கு உத‌விடும் கேரக்டரில் நடித்திருப்பார்.

அதேப்போல் பில்லா-2வில் தல அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அளவில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்![/size]

http://www.nakkheera...ws.aspx?N=78944

Edited by nedukkalapoovan

கதை யார் நம்ம சாத்துவா ?

அதுதான் பிறி டிக்கட் போல .

Edited by arjun

வேறு ஒரு வேலையும் கிடைக்காமல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்களா? இவர்களுக்கு ஈழ தமிழர்கள் அல்லது தமிழர்களின் போராட்டம் பற்றி உலகளவில் பேசப்பட வேண்டும் என்பதா உலகளவில் கொச்சைப்படுத்த பட வேண்டும் என்பதா நோக்கம்?

என்னை பொறுத்தவரை உண்மை ஈழப்போராளியின் உதவியுடன் ஈழத்தவர் போராட்டம் பற்றி படம் தயாரிக்க வேண்டும். அது தான் முடியவில்லை என்றால் ஈழத்து மக்கள் அல்லது இந்தியாவுக்கு வந்த அகதிகள் பட்ட அவலத்தை படமாக எடுக்க வேண்டும்.

அதை விடுத்து இந்தியாவில் தஞ்சமடைவது பின்னர் போதைப்பொருள் கடத்தி ஈழப்புரட்சிக்கு உதவுகிறார் என்பதெல்லாம் அவர்கள் ஈழத்தவர் பெயரை வைத்து தமது படத்திற்கான மக்கள் ஆதரவை அதிகரிப்பதற்காக பயன்படுத்தும் உத்தி என்பது என் கருத்து.

எம்மை வைத்து நல்லா தான் காசு உழைக்கிறார்கள்.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகை விளம்பர உத்திதான்.

இந்தப்படம் பார்க்கவும் புலத்து தமிழ் தல ரசிகர்கள் திரை அரங்க்குகளுர்க்கு படைஎடுப்பினம். :D

துளசியின் கருத்தை நான் முற்றாக ஆதரிக்கிறேன். எம்மை வைத்து எல்லோரும் காசு பார்க்கிறாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைப் போராட்டத்தை போதைப்பொருள் கடத்தலில் வருமானம் பெறும் கொலம்பிய கிளர்ச்சியாளர்களோடும்.. மாபியாக்களோடும் ஒப்பிட்டு பேசியவர்.. முன்னாள் சிறீலங்கா வெளிவிவகார மந்திரி.. லக்ச்மன் கதிர்காமர். இதன் பின்னணியில் இந்திய உளவு அமைப்புக்களின் தூண்டுதல் இருந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று சொல்ல.. இந்தியாவும் இதே குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. கிட்டு மாமா வந்த கப்பல் பற்றியும்.. இப்படி ஒரு கதை இந்திய உளவாளிகளால்.. உலாவ விடப்பட்டது..!

அகதிகளாக ஆட்கடத்தல்.. போதைப்பொருள் கடத்தல்.. சிறுவர் படையணி.. தற்கொலைப்படை.. வெளிநாட்டு அமைப்புக்களுக்கு உதவி.. யுத்த வலயத்துக்கு அப்பால்.. கொழும்பில் தாக்குதல்..உள்ளூரில்.. சுதந்திர நடமாட்டத்திற்கு தடை.. (இது நம்மவர்கள் அசைலம் அடிக்க போகவிடல்ல.. பாஸ் தரல்ல என்று சொல்லி .. போட்டுக்கொடுத்தது.).. ஊடக சுதந்திரத் தடை.. பிள்ளை பிடித்தல்.. சித்திரவதை.. பணம் பறித்தல்.. கப்பம்.. (இவை எல்லாம் எங்கட சனம் அசைலம் அடிக்க சொன்ன பொய்களில் அடங்கும்)... இவை எல்லாம் தான் எமது போராளி அமைப்பு.. விடுதலை அமைப்பு பயங்கரவாதமாக சித்தரிக்கப்படக் காரணமானது.

இதில முக்கியமானது புலிகள் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் போராட்டத்திற்கு.. ஆயுதம் வாங்க..வருவாய் ஈட்டுவதாக சொல்லப்பட்ட கதை..! இந்தக் கதையை கட்டவிழ்த்து விட்டதில் சிறீலங்காவை தூண்டி விட்டதே இந்தியா தான்..! குறிப்பாக 1990 இந்தியப் படை விலகலின் பின் இது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.! இப்ப அஜித் அதனை சினிமா மூலம் பலப்படுத்திக் கொள்கிறார். அதற்கு ஈழப்போராட்ட ஆதரவு என்ற சாயம்.. கவனக் கலைப்பானாக..! மக்களை திசை திருப்ப..!

இப்படத்தில் இதுதான் கதையாக அமையும் என்றால் எதிர்காலத்தில் ஈழ அகதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்ற அடையாளமே அவர்களுக்கு கிட்டும். இதன் மூலம்.. ஏலவே தமிழகத்தில் தீவிர பொலிஸ் கண்காணிப்பின் கீழ் வறுமையில் வாழ விடப்பட்டுள்ள ஈழ அகதிகள்.. தலை நிமிரவே முடியாத சூழல் தான் தோன்றும். இதற்கு அஜித்தும்.. தமிழக தமிழ் சினிமாத் துறையும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த விடயத்தை சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருதல் அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் எழுதிய அத்தனையும் அவர்கள் செய்தார்கள் ,அதைவிட எழுதாத இன்னும் பல இருக்கு .

வீட்டுக்க இருந்து தேவாரம் பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இவை தெரிய நியாயமில்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் புளொட் போன்ற ஒட்டுக்குழுக்கள்.. செய்த அளவுக்கு அவர்கள் செய்யவில்லை. சர்வதேச அரங்கில்... புலிகள் செய்யாததையும் செய்திட்டு அவர்களின் பெயரை பாவித்து நீங்கள் தப்பிக் கொண்ட வரலாறும் உண்டு. அவை இந்தியக் கைக்கூலிகளின் உதவியோடு உலக அரங்கில் நடைபெற்றன என்ற உண்மையையும் நீங்கள் ஒத்துக்கொள்ள முன்வர வேண்டும்..! அதுதான் தர்மம்..!

எனக்குத் தெரிய.. அமெரிக்காவூடாக.. கனடாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட பலர்.. புளொட் பிரபலங்களாக இருந்தவர்கள்..! மேலும் பிரபல்ய... போதைப் பொருள் கடத்தல் காரர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் மாலைதீவு போன்ற சிறிய நாடுகளின் இருப்புக்கே அச்சுறுத்தலாகவும் இருந்துள்ளனர். புலிகள் அந்தளவுக்கு போகவில்லை.

புளொட் ஆக்கள் அமெரிக்காவூடாக கனடாவுக்கு ஆட்கடத்தல் செய்யும் போது... அமெரிக்க எல்லையில் பிடிபட்ட போதெல்லாம்.. புலிகளின் பெயரை தான் உச்சரித்து தமது உண்மை அடையாளத்தை மறைத்துக் கொண்டனர்..!

இவை தனியாக மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய உண்மைகள்..!

மேலும்.. வவுனியாவில சின்னச் சின்ன பிள்ளைகளை எல்லாம் கடத்திக் கொண்டு போய் முன்னணிக் காவலரணில்.. புலிகளோடு அடிபடு என்று சிங்கள இராணுவத்தோடு சேர்ந்து இயங்க விட்டதை மறந்திட்டீர்கள் போலும்..! அவையும் சிறுவர் படையணி.. பிள்ளை பிடி தான்..! 1989 இல் இந்தப் பிள்ளை பிடியை அறிமுகப் படுத்தியது.. இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களுமே..! ரி என் ஏக்கு பள்ளி பள்ளியா போய் மாணவர்களை வெள்ளை வானில்.. விரட்டி விரட்டி.. ஆள் பிடிச்சது மறந்து போச்சுப் போல.....????!

நீங்கள் வடக்குக் கிழக்கில் செயற்பட்ட போது.. சித்திவதைக் கூடங்களை இயக்கவில்லையா....??! பொதுமக்களை நோக்கி தாக்குதல் நடத்தவில்லையா.. சிங்களப் பகுதிகளில் குண்டு தான் வைக்கவில்லையா..????! சகோதரப்படுகொலைகள் தான் செய்யவில்லையா..???! வெள்ளை வான் கடத்தல்களில் தான் ஈடுபடவில்லையா..??! தமிழ் பெண்மணிகளை தவறாக பாவிக்கவில்லையா..???! ஏதோ நீங்கள் எல்லாம்.. எதுவுமே செய்யாமல்.. எல்லாம் புலிகள் செய்தது போல மொத்தப் பழியையும் அவர்கள் மீது போடுவது அபாண்டம். அதர்மம். இதனால் தான் நீங்கள் மக்களால் வெறுக்கப்படுகிறீர்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் எழுதிய அத்தனையும் அவர்கள் செய்தார்கள் ,அதைவிட எழுதாத இன்னும் பல இருக்கு .

வீட்டுக்க இருந்து தேவாரம் பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இவை தெரிய நியாயமில்லை .

அண்ணா நான் வீட்டுக்குள் இருந்து தேவாரம் படிக்கவில்லை.

தேவாரம் படித்திருந்தால் கடவுள் மக்களை காப்பாற்றி இருந்திருப்பார் என்று ஒருவர் சொன்னதுக்கு பிரச்சினைகளின் மத்தியிலும் வீட்டுக்குள்ளும் கோயிலுக்குள்ளும் இருந்து தேவாரம் படித்த மக்களையும் கடவுள் காப்பாற்றவில்லை, அது ஏன் என்று ஒரு திரியில் கேட்டிருந்தேன்.

வாசித்திருக்கிறீர்கள் போலிருக்கு. ஆனால் நான் வீட்டுக்குள் இருந்து தேவாரம் படித்ததாக நீங்கள் மாறி நினைத்து விட்டீர்கள். :lol::icon_idea:

Edited by துளசி

இப்படித்தில் இதுதான் கதையாக அமையும் என்றால் எதிர்காலத்தில் ஈழ அகதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்ற அடையாளமே அவர்களுக்கு கிட்டும். இதன் மூலம்.. ஈழவே தீவிர கண்காணிப்பின் கீழ் வறுமையில் வாழ விடப்பட்டுள்ள ஈழ அகதிகள்.. தலை நிமிரவே முடியாத சூழல் தான் தோன்றும். இதற்கு அஜித்தும்.. தமிழக தமிழ் சினிமாத் துறையும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த விடயத்தை சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருதல் அவசியம்..! :icon_idea:

தமிழக மக்களே உங்கள் பங்களிப்பை கோருகிறோம்.... புரட்சி அண்ணா, ராஜவன்னியன் அண்ணா எங்குள்ளீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் 'பில்லா 2' கதையா...??

11-billa-2-story6-300.jpg

ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் கேரக்டரில் அஜீத்குமார், பில்லா 2 படத்தில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.

அஜீத் நடிப்பில் ஏற்கனவே வெளியான பில்லா ரீமேக், அவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அதன் 2ம் பாகத்தை எடுத்துள்ளனர். ஆனால் இது முதல் படத்தின் தொடர்ச்சி அல்ல, மாறாக, எப்படி ஒரு சாதாரண மனிதன் பில்லா என்ற தாதாவாக மாறினான் என்பதைப் பார்க்கும் கதையாக இது மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

1983ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹாலிவுட் படம் ஸ்கார்பேஸ் (Scarface). சூப்பர் ஸ்டார் அல் பசினோ நடித்த படம். அட்டகாசமாக ஓடிய திரில்லர் கிரைம் படம் இது. கதை ரொம்பச் சின்னது... கியூபாவிலிருந்து அகதியாக மியாமிக்கு வந்து சேருகிறார் அல் பசினோ.

அங்கு அவருக்கு கொகைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் ஒரு நாள் அந்தக் கும்பலுக்கேத் தலைவனாகி விடுகிறார் அல் பசினோ. அதன் பின்னர் அவரிடம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்தப் பணத்தை அப்படியே கியூபாவுக்கு அனுப்புகிறார். அங்கு அரசுக்கு எதிரான புரட்சிக்கு பணத்தை தாராளமாக கொடுத்து உதவுகிறார்.

இந்தப் படத்துக்கு அப்போது கியூப மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக மியாமியில் வசித்து வந்த கியூப மக்கள் பெரும் போராட்டங்களிலெல்லாம் குதித்தனர். கியூப மக்களை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக சித்தரிப்பதா என்று வரிந்து கட்டி எழுந்தனர். ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதை விட அல் பசினோவின் அட்டகாசமான நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

இப்போது பில்லாவுக்கு வருவோம்... ஸ்கார்பேஸ் படத்தின் கதையைத்தான் பில்லா 2 படமாக மாற்றியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பில்லா 2ல், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வருகிறார் டேவிட் பில்லா, அதாவது நம்ம அஜீ்த். இங்கு வந்த பிறகு அவர் சூழ்நிலை காரணமாக தாதாவாகிறார். பின்னர் தனது நாட்டில் நடக்கும் புரட்சிக்கு உதவி செய்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. இன்னும் சில நாட்கள்தானே, படத்தைப் பார்த்து விட்டுத் தெரிந்து கொண்டால் போச்சு..

http://tamil.oneindi...ion-157513.html

தட்ஸ்ரமிழ்.கொம்

Edited by nedukkalapoovan

ஆனால் புளொட் போன்ற ஒட்டுக்குழுக்கள்.. செய்த அளவுக்கு அவர்கள் செய்யவில்லை. சர்வதேச அரங்கில்... புலிகள் செய்யாததையும் செய்திட்டு அவர்களின் பெயரை பாவித்து நீங்கள் தப்பிக் கொண்ட வரலாறும் உண்டு. அவை இந்தியக் கைக்கூலிகளின் உதவியோடு உலக அரங்கில் நடைபெற்றன என்ற உண்மையையும் நீங்கள் ஒத்துக்கொள்ள முன்வர வேண்டும்..! அதுதான் தர்மம்..!

எனக்குத் தெரிய.. அமெரிக்காவூடாக.. கனடாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட பலர்.. புளொட் பிரபலங்களாக இருந்தவர்கள்..! மேலும் பிரபல்ய... போதைப் பொருள் கடத்தல் காரர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் மாலைதீவு போன்ற சிறிய நாடுகளின் இருப்புக்கே அச்சுறுத்தலாகவும் இருந்துள்ளனர். புலிகள் அந்தளவுக்கு போகவில்லை.

புளொட் ஆக்கள் அமெரிக்காவூடாக கனடாவுக்கு ஆட்கடத்தல் செய்யும் போது... அமெரிக்க எல்லையில் பிடிபட்ட போதெல்லாம்.. புலிகளின் பெயரை தான் உச்சரித்து தமது உண்மை அடையாளத்தை மறைத்துக் கொண்டனர்..!

இவை தனியாக மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய உண்மைகள்..!

மேலும்.. வவுனியாவில சின்னச் சின்ன பிள்ளைகளை எல்லாம் கடத்திக் கொண்டு போய் முன்னணிக் காவலரணில்.. புலிகளோடு அடிபடு என்று சிங்கள இராணுவத்தோடு சேர்ந்து இயங்க விட்டதை மறந்திட்டீர்கள் போலும்..! அவையும் சிறுவர் படையணி.. பிள்ளை பிடி தான்..! 1989 இல் இந்தப் பிள்ளை பிடியை அறிமுகப் படுத்தியது.. இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களுமே..! ரி என் ஏக்கு பள்ளி பள்ளியா போய் மாணவர்களை வெள்ளை வானில்.. விரட்டி விரட்டி.. ஆள் பிடிச்சது மறந்து போச்சுப் போல.....????!

நீங்கள் வடக்குக் கிழக்கில் செயற்பட்ட போது.. சித்திவதைக் கூடங்களை இயக்கவில்லையா....??! பொதுமக்களை நோக்கி தாக்குதல் நடத்தவில்லையா.. சிங்களப் பகுதிகளில் குண்டு தான் வைக்கவில்லையா..????! சகோதரப்படுகொலைகள் தான் செய்யவில்லையா..???! வெள்ளை வான் கடத்தல்களின் தான் ஈடுபடவில்லையா..??! தமிழ் பெண்மணிகளை தவறாக பாவிக்கவில்லையா..???! ஏதோ நீங்கள் எல்லாம்.. எதுவுமே செய்யாமல்.. எல்லாம் புலிகள் செய்தது போல மொத்தப் பழியையும் அவர்கள் மீது போடுவது அபாண்டம். அதர்மம். இதனால் தான் நீங்கள் மக்களால் வெறுக்கப்படுகிறீர்கள்..! :icon_idea:

இவையும் உண்மைதான்.நான் ஒரு காலமும் மறுக்கவில்லை

இவையும் உண்மைதான்.நான் ஒரு காலமும் மறுக்கவில்லை

புரிகிறது......ஆனால் தமிழீழ விடுதலைக்கான தேவையில் நீங்கள் எந்த ரகம் என்பது புரியவில்லை .......

இந்த படத்தின் கதை இப்படியானால் இந்தப்படம் வெளிவரக்கூடாது, வெளிவந்தாலும் வெற்றி அடையக்கூடாது............இதற்கு தமிழக உறவுகள் மீண்டும் ஒரு தடவை கொதித்தெழ வேண்டும்....அத்துடன் புலம் பெயர் வாழ உறவுகள் முற்று முழுதான எதிர்ப்பை காட்டி இந்தப்படத்தை புலம் பெயர் வாழ மண்களில் திரையிடப்படுவதை தவிர்க்கவேண்டும்... தமிழக கலைஞர் கூட்டம் இதை என் அனுமதித்தது என்பதே கவலைக்குரிய விடயம்.....

இந்த நேரம் பார்த்து சீமான் அவர்களை கைது செய்துவிட்டார்களாம். என்றாலும் உடனே வெளியில் வந்து விடுவார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104846

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் சரிந்து கொண்டிருக்கும் தனது சந்தையை தூக்கி நிறுத்த சிலர் பெண்களின் சதையைக் காட்டி காசு பார்த்தார்கள். ஆனால் இப்பொழுது கதை பஞ்சமும், கதாசிரியரியர்களின் கற்பனை வறட்சியும், தயாரிப்பாளர்களின் பேராசை குறுக்கு புத்தியும் சேர்ந்து கண்ணை மறைத்து தமிழ்த் தாயைக்கூட விலைமாதாகக் காட்டத் தயங்காத கொள்ளைக் கூட்டமாகிவிட்டது. இதற்கு மக்கள் ரசிக்கிறார்கள் என்ற சப்பைக் கட்டு. ஈழத்தின் இரத்த சதைகளை வைத்து காசு பார்த்த ஊடகங்கள் போய் இப்பொழுது தமிழ் திரையுலகத்தின் சில் வங்குரோத்து பேர்வழிகளால் நடத்தப்படும் அடுத்த நகர்வு, வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, இவர்களின் தமிழ் உணர்வுகளின் மீது சேறு பூசி காசு பார்க்கும் முயற்சிக்கு மக்கள் சாவு மணியடித்து இப்படத்தை புறக்கணிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கு சரியான அடி குடுக்க வேண்டியவர்கள் என்றால் தமிழக மக்கள் தான்..காரணம் எங்கிருந்து இது எல்லாம் ஆரம்பிக்கிறதோ அங்கே கொஞ்;சம் தன்னும் எதிர்ப்பைக் காட்டினால் தான் மற்ற,மற்ற நாடுகளில் இருப்பவர்களும் ஓரளவுக்கு தன்னும் புரிந்து கொள்வார்கள்..கட்டவுட்டுக்கு பாலாபிசேகம் பண்ணுவதில் இருந்து அனைத்தும் எங்கே ஆரம்பிக்கிறது.அது மட்டுமில்லை..புலம் பெயர் மக்கள் உங்களால் முடிந்த மட்டுக்கு இப்படியான படங்களை பகிஸ்கரியுங்கள்..ஈழத்தமிழ் உறவுகளை,அவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக எந்த ஒரு நகர்வு எங்கு நடந்தாலும் எங்களால் முடிந்த மட்டுக்கு எதிர்ப்பை காட்ட வேண்டும்... தயவு செய்து பணம் பண்ணிக் கொடுப்பதிலும் கவுஸ் புள்ளாக்குவதிலும் முன் நிற்காதீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் படம் பார்க்க மாட்டேன் என்று பொய் சொல்ல மாட்டேன் கட்டாயம் பார்ப்பேன் ஆனால் தியேட்டர் போய் பார்க்க மாட்டேன் ^_^

புரிகிறது......ஆனால் தமிழீழ விடுதலைக்கான தேவையில் நீங்கள் எந்த ரகம் என்பது புரியவில்லை .......

இந்த படத்தின் கதை இப்படியானால் இந்தப்படம் வெளிவரக்கூடாது, வெளிவந்தாலும் வெற்றி அடையக்கூடாது............இதற்கு தமிழக உறவுகள் மீண்டும் ஒரு தடவை கொதித்தெழ வேண்டும்....அத்துடன் புலம் பெயர் வாழ உறவுகள் முற்று முழுதான எதிர்ப்பை காட்டி இந்தப்படத்தை புலம் பெயர் வாழ மண்களில் திரையிடப்படுவதை தவிர்க்கவேண்டும்... தமிழக கலைஞர் கூட்டம் இதை என் அனுமதித்தது என்பதே கவலைக்குரிய விடயம்.....

கேட்கிறேன் என தப்பாய் நினைக்காதீங்கோ முதலில் எப்போது கொதித்து எழுந்தார்ர்கள் இனி மேல் கொதித்து எழ :lol::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்கிறேன் என தப்பாய் நினைக்காதீங்கோ முதலில் எப்போது கொதித்து எழுந்தார்ர்கள் இனி மேல் கொதித்து எழ :lol::D:lol:

:D :D

எனக்கு பிடிச்சதே உங்களிலை இது தான் அக்கா.. :rolleyes:

கேட்கிறேன் என தப்பாய் நினைக்காதீங்கோ முதலில் எப்போது கொதித்து எழுந்தார்ர்கள் இனி மேல் கொதித்து எழ :lol::D:lol:

சரிங்கோ ......புரிகிறது உங்கள் ஆதங்கம் .......நானும் தப்பாய் எதுவும் எடுக்கவில்லைங்கோ......

ஆனால் அவர்களிலும் சிலர் எம் மீது அக்கறை உள்ளவர்கள் இருப்பதனால் தானுங்கோ கடந்த தேர்தலில் கூட ஓர் மாற்றம்

வந்ததுங்கோ...... அப்படிப்பட்டவர்களை தானுங்கோ நான் இப்படி கருதினானுங்கோ :lol::D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பில்லா 2 - ஸ்பெஷல் விமர்சனம்

Published: வெள்ளிக்கிழமை, ஜூலை 13, 2012, 16:28 [iST]

13-billa2-12-300.jpg

-எஸ் ஷங்கர்

என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்து, அதற்கு வண்டி வண்டியாய் விளம்பரம் செய்தாலும், கதை என்ற தூண் வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு அஜீத் குமார் நடித்துள்ள பில்லா 2 ஒரு சிறந்த உதாரணம்.

மேலும் சக்ரி டோலெட்டியின் இயக்க திறமை மீது ஆரம்பத்திலிருந்தே அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கை நிரூபணமாகியிருக்கிறது.

படத்தை ஸ்டைலாக எடுக்க வேண்டும், கலர் டோன் இப்படி இருக்க வேண்டும், யாரும் போகாத இடத்துக்குப் போய் படமாக்க வேண்டும் என்று யோசித்தவர்கள், கொஞ்சம் வித்தியாசமான கதையாக சொல்லத் தவறிவிட்டார்கள்.

படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!

கதையின் ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் உள்ளது. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் ஈழத்து அகதியாக அறிமுகமாகும் அஜீத்துக்கு, ஒரே ஒரு அக்கா. ஆனால் அவருக்கு இவரது போக்கு பிடிக்கவில்லை. ஒரு சர்ச்சில் மகளுடன் வசிக்கிறார்.

அகதி முகாமில் அஜீத்துக்கு தொடர்ந்து தொல்லை தருகிறார் ஒரு இன்ஸ்பெக்டர். நாயகனில் வரும் போலீஸ்காரர் ரேஞ்சுக்கு அவர் இம்சை தொடர்கிறது. ஒரு வைரக் கடத்தலில் அஜீத்தை சிக்க வைத்து போட்டுத் தள்ளப் பார்க்கிறார். ஆனால் சுதாரித்துக் கொள்ளும் அஜீத்தும் அவர் நண்பரும் போலீஸ்காரர்களை போட்டுத் தள்ளிவிட்டு, வைரத்தை உரிய நபரிடம் (இளவரசு) ஒப்படைக்க, இவர்களின் தொழில் நேர்மையைப் பாராட்டி தொடர்ந்து வேலை தருகிறார்.

ஆனால் அடுத்த கட்டத்துக்குப் போக முயலும் அஜீத், போதை மருந்து கடத்தல், சட்ட விரோத ஆயுத பிஸினஸ் என்று போகிறார். மும்பை தாதா சுதன்ஷாவுடன் சேருகிறார். அடுத்த சீனிலேயே மும்பையிலிருந்து ஜார்ஜியாவுக்கு பயணமாகிறார்... (கடத்தல் பிஸினஸை (?) அடுத்த லெவலுக்கு கொண்டு போறாங்களாம்!)

அங்கே அட்டகாசமான வில்லன் வித்யூத் ஜம்வாலுடன் முதலில் நட்பாகி பின்னர் விரோதியாகிறார். விரோதிகள் அனைவரும் இவரை போட்டுத் தள்ள முயல்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் எங்கும் சிக்கிக் கொள்ளாமல், மற்றவர்களை டப் டப்பென்னு சுட்டுக் கொண்டே இருக்கிறார். அதிலும் ஒரு இந்திக்கார எதிரி தானே முன்வந்து என்னை சுட்டுக் கொல்லு என்கிறார், நல்ல தமிழில்! இனி சுட எதிரிகளே இல்லை என ரசிகர்களே முடிவு கட்டிக் கொண்டு எழ தயாராகும்போது, நல்ல வேளை படமும் முடிந்து போகிறது!

இந்தப் படத்தின் தவறுகளுக்கு பெரும்பான்மைப் பொறுப்பாளி இயக்குநர் சக்ரி டோலெட்டிதான். படம் முழுக்க அத்தனை ஓட்டைகள். லாஜிக் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறது திரைக்கதை.

அதிலும் அஜீத் ஒரு ஆயுத அசைன்மென்டை போலீசாரிடமிருந்து மீட்கும் காட்சி அபத்தத்தின் உச்சம்.

பார்வதி ஓமணக்குட்டனை எதிரிகள் தூரமாய் நிற்கவைத்துவிட்டு, புல்வெளியில் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது விர்விர்ரென்று வருகின்றன பத்து கார்கள். பார்வதியை சுற்றிச் சுற்றி வர, அஜீத் சர்வ சாதாரணமாக கதவைத் திறந்து பார்வதியை உள்ளே உட்கார வைத்துக் கொண்டு போய்விடுகிறார். நீட்டிய துப்பாக்கி நீட்டியபடி, அடியாட்கள் தேமே என்று நிற்கிறார்கள். படத்தில் காமெடியே இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் காட்சி போலிருக்கிறது!

இரண்டு காட்சிகளை உருப்படியாக எடுத்திருக்கிறார்கள். ஒன்று மராட்டிய முதல்வரும் அஜீத்தும் பேசிக் கொள்ளும் இடம்.

அடுத்து, அந்த பாட்டில் ஃபைட்!

அஜீத் நடந்து வந்தாலே போதும்... தலையை அப்படியும் இப்படியும் திருப்பி, நிதா....னமாக வசனம் சொன்னால் போதும்... சூப்பர் டான் என்று யாரோ தப்புத் தப்பாக சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். டான்களின் உலகம் என்ற உட்டாலக்கிடி கற்பனையை மறந்துவிட்டு, நிஜத்தில் அவர்களின் உலகத்தைப் பாருங்கப்பா.

கோட் சூட், ஏறி மிதிக்க பிகினி பெண்கள் என்த பந்தா இல்லாமல் குடிசையில் கூட ஒரு கொடிய டான் குடியிருப்பான். சொந்த அக்கா செத்துப் போய்விட்டதாக போனில் செய்தி வர, ஏதோ சன்நியூஸில் செய்தி கேட்டமாதிரி அவர் பாட்டுக்கு தேமே என்று போகிறார் அஜீத்!

ஆனால், அந்த ஹெலிகாப்டர் சேஸிங் சான்ஸே இல்லை. அஜீத்துக்கு மகா தைரியம்!

பார்வதி ஓமணக்குட்டன் ஹீரோயினாம். எண்ணி நாலே முக்கால் சீன்கள் எட்டிப் பார்த்துவிட்டு இடைவேளையில் செத்துப் போகிறார். அந்த வகையில் இன்னொரு ஹீரோயின் புருனா அப்துல்லா பரவாயில்லை. க்ளைமாக்ஸ் வரை தம்மாத்துண்டு ட்ரஸ்ஸில் வத்தலாக வந்து கடைசியில் சாகிறார்.

அஜீத்துடன் நண்பராக வரும் நடிகர் அம்சமாக நடித்திருக்கிறார். அதேபோல சுதன்ஷு, வித்யூத் ஜம்வால் இரண்டு வில்லன்களுமே பின்னி எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சுதன்ஷுவின் பாடி லாங்குவேஜ், நடிப்பு அனைத்துமே அபாரம்!

தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகரின் உழைப்பு அபாரம். குறிப்பாக ஜார்ஜியா காட்சிகள் கண்களுக்கு வேறு உலகைக் காட்டுகின்றன.

மகா நிதானமாக நகரும் காட்சிகளை வேகப்படுத்த யுவனும் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருக்கிறார். அந்த பின்னணி தீம் மியூசிக் உண்மையிலேயே நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஒன்றுகூட நினைவில் இல்லை.

எடிட்டரும் இயக்குநரும் போட்டி போட்டுக் கொண்டு சொதப்பியிருக்கிறார்கள்.

அடுத்தமுறை அஜீத்திடம் கதை சொல்பவர்கள் தயவு செய்து அந்த 'கோட்'டை சலவைக்கும், துப்பாக்கிகளை பழைய காயலான் கடைக்கும் போடுவது போல ஒரு சீன் வைத்தால் சூப்பராக இருக்கும்!

http://tamil.oneindi...w-2-157640.html

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.