Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாத இடைவேளை மீண்டும் புலம்பெயர் வாழ்வின் தேடல்களை நோக்கி ஓட்டம் ஆரம்பம்

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை பெற்று இப்பொழுது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஒருவரை மத்திய சட்டத்துறை அமைச்சர் நேரடியாக அவரின் வீட்டுக்கு சென்று சந்தித்திருப்பது பா ஜ க கூட காங்கிரஸ் போன்ற ஒரு மூன்றாம் தர அரசியல் கட்சி என்பதனையே காட்டுகின்றது......ஜெயலலிதா குற்றமற்றவராக கூட இருக்கலாம் ஆனால் இன்னும் நீதிமன்று முன்னாள் அது நிரூபிக்கப் படவில்லை......நாளை நீதிபதிகள் எப்பிடி இந்தவழக்கில் சரியான தீர்ப்பு வழங்க முடியும்?

சட்ட அமைச்சராக இருக்க கூடிய ஒருவரே நேரடியாக வீடு தேடி சென்று ஜெயலலிதாவை சந்தித்தது வெட்கம் கெட்ட செயல்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பாக பயணம் செய்யக்கூடிய விமானமாக ஆஸ்திரேலியாவின் qantas விமான சேவை தெரிவாகி இருக்கின்றது.....அதன் வரலாற்றில் இதுவரை மிகமோசமான விபத்துக்கள் எதையும் சந்திக்காமல்...பயணிகள் இழப்புகள் இன்றி.......பல வருடங்களாகவே ஆஸ்திரேலியா qantas நிறுவனம் இந்த பட்டியலில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.......இப்பொழுதெல்லாம் பல பல புதிய விமான சேவைகள் வந்து விட்டாலும் ஆஸ்திரேலியாவின் இந்த முதலிடத்தை யாராலும் பிடிக்கமுடியவில்லை.......

மிக மோசமான பாதுகாப்பற்ற விமானங்களாக......நேபாளிய விமான சேவை மற்றும் ஆப்கான் நாட்டு விமான சேவை நிறுவனங்கள் கடைசி இடத்தை பிடித்திருக்கின்றது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவுதம் கார்த்திக் ரொம்ப குளோஸ்…: லட்சுமி மேனன்//////

அப்போ கவுதம் கார்த்திக் 6 அடியா?

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பான பயணிகள் விமான சேவைகள் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற விமான நிறுவனங்கள் இவை......

Qantas

Air New Zealand

British Airways

Cathay Pacific Airways

Emirates

Etihad Airways

EVA Air

Finnair

Lufthansa Airlines

Singapore Airlines

என்னப்பா பட்டியலில கனடாவ காணல்ல ? இதுக்கு தான் ஆஸ்திரேலியால இருக்கணும் எண்டுறது.....

கனடால என்ன தான் உருப்படியா இருக்கு?

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பான பயணிகள் விமான சேவைகள் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற விமான நிறுவனங்கள் இவை......

Qantas

Air New Zealand

British Airways

Cathay Pacific Airways

Emirates

Etihad Airways

EVA Air

Finnair

Lufthansa Airlines

Singapore Airlines

என்னப்பா பட்டியலில கனடாவ காணல்ல ? இதுக்கு தான் ஆஸ்திரேலியால இருக்கணும் எண்டுறது.....

கனடால என்ன தான் உருப்படியா இருக்கு?

 

நான் ஜேர்மனியிலை இருக்கிறதையிட்டு பெருமைப்படுறன்......Lufthansa விலை வேலைசெய்யுற பணிப்பெண்கள் பெரிசாய் வடிவில்லாட்டிலும்.....அவையின்ரை சேவை தரமானது.....

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் இல்லாமலே பிளேனை இறக்கின ஆட்கள் நாங்கள்.. :huh: அதாலை பட்டியல்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம  தேசத்தில கஞ்சிக்கு வழி கேட்கினம் மக்கள்.... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிரான்சின் நிலைமை அம்புட்டு மோசமாவா இருக்கு? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னையில் எழுத்தாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டார்.///////

ஹா ஹா நினைச்சன் எங்கடா ஆள இன்னும் காணோமே என்று..... இனி அறிவிப்பு வரும் கருத்துரிமை இல்லாத இந்து மதத்தில் இருந்து எங்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 1000 பேர் மற்றும் பெருமாள் முருகனுடன் சேர்த்து 1001 பேராக மொட்டையடித்து புத்த மதத்தை தழுவுகின்றோம் என்று.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சருக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை: சஜித் பிரேமதாச///////

இலங்கையிலும் ஒரு ஜெயலலிதா உருவாக போகின்றார்....ஜெயலலிதா எண்டாலும் பறுவாயில்ல...... ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார் இவர் எதுவும் இல்லையாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்கொய்தாவின் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயார்: கனேடிய அரசு அதிரடி////

ம்கும்....நீங்க எதிர் கொள்ளுற விதம் தான் தெரியுமே......எதுக்குடா சும்மா இருக்கிறவங்கள கூவி அழைக்கிறீங்க.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் டிவி போன்ற பல கோடிகளில் புரளுகின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மற்றும் அரசியல் கட்சிகள் நடாத்தும் தொலைக்காட்சிகளுக்கும் தெரியும் சன் டிவி பலம் இழக்கும் மட்டும் தங்களால் முதலிடத்துக்கு தமிழகத்தில் வர முடியாது என்று....... இங்கே இவர்கள் சன் டிவி மீது ஏதோ மக்கள் நலன் சார்ந்து நடவடிக்கை எடுக்கின்றர்கள் என்று நினைத்தால் அது மிகப்பெரிய முட்டாள் தனம் ...

இதற்க்கு பின்னால் தமிழகத்தின் தொலைகாட்சி வியாபர சந்தையை பிடிக்க துடிக்கும் பல முதலைகள் இருக்குன்றன என்பது இந்த துறையில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‪#‎ஸ்ரீரங்கம்‬ இடைத்தேர்தலில் தேஜகூ சார்பில் பாசக மாநில துணை தலைவர் M.சுப்பிரமணியம் போட்டியிடுகிறார்../////

ஆகா பலியாடு சிக்கிடிச்சி...... இனி என்னா.... மாலைய போட்டு மஞ்ச தண்ணிய ஊத்திடுங்கடே.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போலாம் ஒரு லீட்டர் தண்ணி விக்கிற விலையை விட பெட்ரோல் விலை ரொம்ப குறைவா இருக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளோடு இணைந்துள்ள ஈழத்தமிழர்கள்....

பரபரப்பை கிளப்பும் இந்திய புலனாய்வுத்துறையான ரோ./////

ஹா ஹா என்னால சிரிப்ப அடக்க முடியல்ல .... செம காமடி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): கலிஃபோர்னியா செனட் தேர்தலில் அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவர் தமிழ்நாட்டைச் சார்ந்த அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சியாமளா கோபாலனின் மூத்த மகளாவார்./////

வெற்றி பெற வாழ்த்துக்கள்.....உங்களை போன்ற தமிழர்களால் தமிழினம் பெருமை கொள்கின்றது.....

சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): கலிஃபோர்னியா செனட் தேர்தலில் அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவர் தமிழ்நாட்டைச் சார்ந்த அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சியாமளா கோபாலனின் மூத்த மகளாவார்./////

வெற்றி பெற வாழ்த்துக்கள்.....உங்களை போன்ற தமிழர்களால் தமிழினம் பெருமை கொள்கின்றது.....

செனட் தேர்தல் வெற்றி மூலம் தேசிய அரசியலுக்குள் நுழைய விரும்பும் கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் வருங்கால முக்கியத் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். எதிர்காலத்தில் அதிபர் தேர்தல் வேட்பாளராகும் வாய்ப்புள்ளவராகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழர் வம்சாவளியில் ஒருவர் அமெரிக்க அதிபரானல் அது தமிழுக்கும் பெருமைதானே!

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வாழ்த்துக்கள்.....உங்களை போன்ற தமிழர்களால் தமிழினம் பெருமை கொள்கின்றது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீரங்கத்தில் 5 முனைப் போட்டி : டி.ராஜேந்தர் கட்சியும் போட்டி!!///

ஹே நாங்க போட்டி போட போறது திருச்சி.....

அங்க நாங்க ஜெயிச்சி

மக்களுக்கு கொடுக்க போறம்

அதிர்ச்சி.......

டண்டனக்கா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்/////////

புதிதாக மிமிக்கிரி செய்பவர்களும் சரி ஏற்கனவே அந்த துறையில் இருப்பவர்களும் சரி மேடை நிகழ்ச்சியானாலும் தொலைகாட்சி நிகழ்ச்சியானாலும்.....கண்டிப்பாக இவரின் குரலில் பேசுவது தங்களுக்கு ஒரு தகமையாக இருக்கும் என்பதனால் இவரின் குரல் இல்லாத மிமிக்கிரி நிகழ்சிகளே இல்லை எனலாம்.....அந்தளவுக்கு அடித்தொண்டை குரலில் கண்களை உருட்டி, தலையாட்டிப் பேசுவது எல்லோரையுமே கவர்ந்திருந்தது.........அதுமட்டுமல்லாமல் நடிப்பில் கூட அந்த கதா பாத்திரமாவே வாழ்ந்திருப்பார்.......

RIP

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் அனைவருக்கும் ஆஸ்திரேலியா தின வாழ்த்துக்கள்...... வந்தாரை வாழ வைத்து அவர்களின் மொழி கலாச்சாரம் பண்பாடு , மனித உரிமை போன்றவற்றை மதித்து தன்னுள் தன்னுடைய பிள்ளைகளாக உள் வாங்கி கொண்டு எங்களை இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்று வாழ்வதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தந்த ஆஸ்திரேலியாக்கு எமது நன்றிகள்...... மிக குறுகிய வரலாற்றை கொண்ட ஆஸ்திரேலியாவை உலகின் மிகச்சிறந்த வாழ்வதற்கு ஏற்ற முதல் நாடாக உருவாக்கிய ஆஸ்திரேலியர்களையும் இந்த நேரத்தில் நாம் நன்றியுடன் நினைவில் கொள்கின்றோம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் ரசித்த ஒரு பதிவு.. புகழ்பெற்ற தமிழ் பழமொழிகளும் இலங்கை அரசியல் வாதிகளும்..

பொறுத்தார் பூமியாழ்வார் : ரணில்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு : மைத்திரி

பேராசை பெரு நஷ்டம் : மஹிந்த

நக்குண்டோர் நாவிழந்தார் : அஸ்வர், அலவி, பௌசி, முஸம்மில், பாயிஸ்

சான் ஏற முழம் சறுக்கும் : உலமா கட்சி

இளம் கன்று பயமறியாது : ஹிருணிகா

களவெடு பிடிபடாதே : ஹிஸ்புல்லாஹ்

வாய்மையே வெல்லும் : NFGG

தன்வினை தன்னை சுடும் : கோத்தாபய

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் : சரத்பொன்சேகா, ஷிராணி, சரத் N சில்வா

இக்கரைக்கு அக்கரை பச்சை : SLMC & ACMC

அரசனை நம்பி புருஷனை கைவிடாதே : திஸ்ஸ அத்தநாயக்க

வாய் இருந்தால் வங்காளம் போகலாம் : பஷீர்.S.D.

புலி பசித்தாலும் புல்லை தின்னாது : TNA

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது : G.L.பீரிஸ்

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது: ஷிப்லி பாறூக்

இனம் இனத்தோடு சேரும் : BBS

பணம் பத்தும் செய்யும் : நாமல்

அப்பன் எட்டடி.. மகன் பதினாறடி : அதுவும் நாமல் தான்

தரித்திரியம் புடிச்ச நாரை கெளுத்தி மீன விழுங்கிச்சாம்... # அதாவுல்லா

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ......# மின்னல் ரங்கா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகள் அனைவருக்கும் ஆஸ்திரேலியா தின வாழ்த்துக்கள்...... வந்தாரை வாழ வைத்து அவர்களின் மொழி கலாச்சாரம் பண்பாடு , மனித உரிமை போன்றவற்றை மதித்து தன்னுள் தன்னுடைய பிள்ளைகளாக உள் வாங்கி கொண்டு எங்களை இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்று வாழ்வதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தந்த ஆஸ்திரேலியாக்கு எமது நன்றிகள்...... மிக குறுகிய வரலாற்றை கொண்ட ஆஸ்திரேலியாவை உலகின் மிகச்சிறந்த வாழ்வதற்கு ஏற்ற முதல் நாடாக உருவாக்கிய ஆஸ்திரேலியர்களையும் இந்த நேரத்தில் நாம் நன்றியுடன் நினைவில் கொள்கின்றோம்......

 

அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

வந்தாரை வாழவைக்கும் அவுஸ்ரேலியா???????  அப்பன் இப்ப என்ன சொல்லுறியள்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் : ஜனாதிபதி குடியரசுதின உரை/////

ம்கும்.....உங்க கட்சி தலைவி சோனியாக்கு தந்த அதிகாரம் காணாதா? இல்லது அந்த அதிகாரத்தால் நாங்க பட்ட பாடு தான் போதாதா?

  • கருத்துக்கள உறவுகள்
 
26-1422241047-dog-1-6600.jpg
 
இந்திய குடியரசு அணிவகுப்பிற்கு, வருகை தந்த ஒபாமாவுக்கு.... வரவேற்பு கொடுக்க வந்த.... நம்ம "டக்கி" :D  :lol: 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.