Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று Australia labour கட்சி தலைவர் பதவிக்கு பிரதமரை எதிர்த்து போட்டியிட இருக்கும் முன்னாள் பிரதமர் Kevin Rudd க்கு வாழ்த்துக்கள் ..,,, go Kevin go ......:D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

by ஜெகதீஸ்வரன்

ஆதாரம் -கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

நன்றி: கண்ணதாசன் வலைப்பக்கம்

மிகச் சரியான அனுமானம். நம்பிய சமூகம் அத்தனையையும் நடுத்தெருவில் தள்ளிவிட்டு தி.மு.க வீட்டை கோபாலபுரத்தில் கட்டிமுடித்த வீரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செத்துப்போன பொண்டாட்டிக்கு இறுதிக்காரியம் பண்ணிட்டு வீடு திரும்பிட்டு இருந்தார் ஒருத்தர்.

அப்போ திடீர்னு வானத்துல இடி இடிசுதாம், மின்னல் வெட்டிச்சாம். உடனே நம்ம ஆளு மேல பாத்து சொன்னானாம்

*

*

*

*

*

"அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ"

குழப்பமாயிருகே? :unsure:

 

அந்த பெண் பூமியில் இருந்த காலத்தில் மழை கிழே இருந்து மேலே பெய்திருக்குமோ? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது;

நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...

நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.

நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்தார்ஜி ஜோக்குளால் மனம் வெறுத்துப்போன சர்தார்ஜி ஒருவர், தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார். டாக்டரிடம் சென்று, ‘எனது தலையில் 1கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார்.

அதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000 ரூபாயும், டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும், வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.

சர்தார்ஜி கேட்டார், “சர்தார்ஜிகள் மூளை என்றால்?”

“அது ரொம்ப அதிகமாகும். ஒரு கிராம் சர்தார்ஜி மூளை ரூபாய் ஒரு லட்சம்”

இதைக் கேட்டதும் சர்தார்ஜிக்கு பயங்கர சந்தோஷம். இருந்தாலும், இது மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.

டாக்டர் சொன்னார், “ஏன்னா, ஒரு கிராம் மூளையை சேகரிக்க எவ்வளவு சர்தார்ஜிகளைத் தேடிப் போக வேண்டும் என்பது தெரியுமா?”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உங்களுக்கு என்ன பிரச்சினை?"

"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?

:( :( :D

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு குடிசையில் கணவன் மனைவி இருவரும் செம சண்டை . அவருக்கு நல்ல போதை. கோபத்தில் கத்தினார்  எருமைமாடே இப்ப உன்னை இரண்டு துண்டாய் வெட்டி  எறியுறேனா இல்லையா பார் !

அப்ப  வாசலில் வந்த பிச்சைக் காரன்  (விஷயம் புரியாமல்)  ஐயா ஒரு துண்டை எனக்குத் தர்மம் பன்னுங்கையா !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்

1.ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?

2.10 ரூ கொடுத்து வாங்கும் இட்லிக்கே 4 சைடிஷ் தராங்க. ஆனா 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்க சைடிஷ்ஷா ஊறுகா கூட ஏன் தரமாட்டேங்குறாங்க..?

3.நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லணும் ஓக்கே! மத்தியானம் தூங்குறதுக்கு என்ன சொல்லணும் குட் ஆஃப்டர்நூனா..?

4.ஒருவனுக்கு ஒருத்தின்னு தான் சொல்லிருக்காங்களே தவிர "ஒருத்திக்கு ஒருவன்"ன்னு ஏன் சொல்லவில்லை..?

5.தேடி தேடி சென்று புதைக்குழியில் விழுவது காதலிலா? திருமணத்திலா?

6.சின்சியரா இருக்கிற பசங்களவிட லூசுத்தனமா எதவாது செய்யிற பசங்களுக்கு ஈஸியா லவ் செட்டாயிடுதே எப்படி ?

7.நடுராத்திரி தண்ணியடிச்சிக்கிட்டு இருக்கும்போது சைடு டிஷ் முடிஞ்சிட்டா என்ன பண்றது?

8.எந்த சினிமா நடிகனாச்சும் தம் புள்ளைய மிலிட்டரிக்கி அனுப்பிருக்கானா..?

9. காதல் எனபது மனச பாத்து வருவது என்றால் பார்த்த உடனே காதல் வருவது என்பதற்கு பெயர் காமம் தானே..?

:(:D :d

  • கருத்துக்கள உறவுகள்

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்

1.ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?

 

ஏனெனில் பெண்கள் அத்துடன் அடங்கிவிடுவார்கள்

ஆண்களுக்கு அனுமதித்தால்

சின்னது

சின்னதுக்கு சின்னது

அதுக்கு சின்னது.............  என்று தொடர்ந்திடுவான்

2.10 ரூ கொடுத்து வாங்கும் இட்லிக்கே 4 சைடிஷ் தராங்க. ஆனா 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்க சைடிஷ்ஷா ஊறுகா கூட ஏன் தரமாட்டேங்குறாங்க..?

 

தந்திருப்பாங்க

உங்களுக்கு தெரிந்திருக்காது...

 

தந்திருப்பாங்க

உங்களுக்கு தெரிந்திருக்காது...

தந்திருப்பாங்க

 

உங்களுக்கு தெரிந்திருக்காது...

 

தந்திருப்பாங்க

உங்களுக்கு தெரிந்திருக்காது...

(அல்லது இப்படி மூன்று  நாலாக தெரிந்திருக்கும்)

 

3.நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லணும் ஓக்கே! மத்தியானம் தூங்குறதுக்கு என்ன சொல்லணும் குட் ஆஃப்டர்நூனா..?

 

அது எழும்பி  திரும்பி  தூங்கிறவனுக்கு.

உங்களுக்கு ஏன் இந்த கவலை??

4.ஒருவனுக்கு ஒருத்தின்னு தான் சொல்லிருக்காங்களே தவிர "ஒருத்திக்கு ஒருவன்"ன்னு ஏன் சொல்லவில்லை..?

 

சாதாரணமா

ஆண் அதிகாரம் இது

ஆண் பாலில் சொன்னால் எல்லாரும் ஆடணும் என்ற ஆணாதிக்கவே காரணம்

5.தேடி தேடி சென்று புதைக்குழியில் விழுவது காதலிலா? திருமணத்திலா?

 

இதிலிருந்து 

இந்த இரண்டிலும் தாங்கள் விழவில்லை என்று தெரிகிறது

 

6.சின்சியரா இருக்கிற பசங்களவிட லூசுத்தனமா எதவாது செய்யிற பசங்களுக்கு ஈஸியா லவ் செட்டாயிடுதே எப்படி ?

 

அவர்கள்

எதிராளியைக்கணக்கு போடுவதில்  காலத்தை செலவிடுவதில்லை

வந்தால் மலை

போனால் மயிர் என்ற நிலை  எடுப்பு

7.நடுராத்திரி தண்ணியடிச்சிக்கிட்டு இருக்கும்போது சைடு டிஷ் முடிஞ்சிட்டா என்ன பண்றது?

 

இதுக்குத்தான் கல்யாணம் கட்டுவது

இது  தெரியலையே...

8.எந்த சினிமா நடிகனாச்சும் தம் புள்ளைய மிலிட்டரிக்கி அனுப்பிருக்கானா..?

 

அங்கு

போலித்துப்பாக்கியும்

டூப்பும்  பாவித்தால் சொல்லுங்கள்  என்பார்கள்......

9. காதல் எனபது மனச பாத்து வருவது என்றால் பார்த்த உடனே காதல் வருவது என்பதற்கு பெயர் காமம் தானே..?

 

எல்லாமே பார்த்த உடன் வரும் காமம் தான்

அப்புறம் சில இலக்குகளை  திறக்க  விடும் கதையே காதல் என்பது........ :lol:  :D  :D  :D 

 

(பகிடியாக மட்டும்)

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்....தலிவா.....:D

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்

1.ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?

 

பொண்ணு பக்கம் இரண்டும் ஓகேயா படுகிறது. உங்க பக்கம்.....ஏன்னையா அந்த சின்ன வீடு, அடிக்கடி தலையிலை வாங்கிக்கவா? அதை வைச்சிருந்தா பைத்தியமாகிடுவீங்க. போகட்டும், விட்டுங்க அதை. நமக்கு வேண்டாம். 

2.10 ரூ கொடுத்து வாங்கும் இட்லிக்கே 4 சைடிஷ் தராங்க. ஆனா 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்க சைடிஷ்ஷா ஊறுகா கூட ஏன் தரமாட்டேங்குறாங்க..?

 

அதுதான் ஆஸ்பதிரி பணம் அறுபத்தைந்து ரூபாவையும் அவன் கிட்டேயே கொடுத்திட்டீங்களே. பிறகு எதற்கு சைட்டிஸ்? இருந்தாலும் அடுத முறை கேட்டுப்பருங்க "ஏம்பா நீ மட்டும் பேதி, கீதி அப்டிண்ணு ஒண்ணும்..... கொடுக்கமாட்டியா? இன்னு"  

3.நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லணும் ஓக்கே! மத்தியானம் தூங்குறதுக்கு என்ன சொல்லணும் குட் ஆஃப்டர்நூனா..?

"என்னங்க இது கூடத்தான் பிடிமாட்டேங்குதே, "மத்தியானக் குட்டு" என்னு வைச்சுக்கிடீங்கேன்ன பிள்ளங்க சொல்லறது எல்லாவற்றையும் நினவிலை வைச்சுக்கவாங்க"

4.ஒருவனுக்கு ஒருத்தின்னு தான் சொல்லிருக்காங்களே தவிர "ஒருத்திக்கு ஒருவன்"ன்னு ஏன் சொல்லவில்லை..?

அந்த சிஸ்டமும்  இருக்குங்க சார்.  ஒருவனுக்கு ஒருத்தி - இது இண்டியன் மறீஜ் சிஸ்ட்டமுங்க, ஒருத்திக்கு ஒருவன்- இது சைனீஸ் ஃபமிலி பிலானிங்கு சார்.

பொண்ணு பிறந்தா அவ அதை கானுக்க போட்டனும். இன்னு ஒண்ணு வேணுமின்னா அவர் ஒஃப்பிட்ட பக்கத்து ரவுணுக்கு வேலை தேட போகிறென்னு சொல்லிடுவாங்க" அதலை ஒருத்திக்கு ஒரு பொடியன் மட்டும்தான்.

5.தேடி தேடி சென்று புதைக்குழியில் விழுவது காதலிலா? திருமணத்திலா?

அது சிம்புளுங்க. இதோ பாருங்க நான் கறக்டா சொல்லிடுறேன்.  கண்ணு இல்லாடித்தானே போய் புதை குழியில் விழுவாங்க. அப்புறம் நீங்க பேசுறது நிச்சயமா "ல்வ்" தாணுங்க. ஏன்னுன்னா லவ்வுக்குதான் கண் இல்லை என்னுவாங்க"

6.சின்சியரா இருக்கிற பசங்களவிட லூசுத்தனமா எதவாது செய்யிற பசங்களுக்கு ஈஸியா லவ் செட்டாயிடுதே எப்படி ?

இதிலே என்னத்திலே ஒங்களுக்கு பிரச்சனை என்னு புரிய மாட்டேங்கிறதே? சின்சியரான பொடி ஒன்று பிறந்தா "படி" இன்னா படிக்கிறான், பணத்தை கேட்டு வாங்கிக் கொடுத்தா வைச்சுக்கிறான்.  அதில்ல ஓடுகாலி ஒன்ன்னை பெத்துப்புட்டீங்களின்னா ... சிறுசிலை பள்ளிக்கு அனுப்பிவைச்சா வாத்தியாருக்கு சொல்லாமால் வகுப்பால் கள்ளமாய் ஓடிடுவான்.  வளந்தாக்கபுறம்  நன்னா கட்டுமஸ்தா நம்ம புள்ளை வளந்திருக்கிறனே எதுக்கும் ஒரு கொஞ்சம் பணம் வாங்கிக்கலாம் எண்ணூ, கனவிலை விழுந்தீங்களாக்கும்,  அவன் வீட்டிலை யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் கம்பி நீட்டிடுவான். "தொட்டிலில் பழக்கம் சுடுகாடுவரைக்கும்" எண்ணுவாங்க. இதில் என்ன ஆச்சரியம்? 

7.நடுராத்திரி தண்ணியடிச்சிக்கிட்டு இருக்கும்போது சைடு டிஷ் முடிஞ்சிட்டா என்ன பண்றது?

இதுக்காகத்தான் முதலாளித்துவ பொருளாதாரம், அன்னிய முதலீடு, வால்மாட் இன்னு எல்லாம் நாம் சொல்லிக்கிறது. இப்பவாவது புரிகிறதா. ஊருக்கு ஒரு வால்மாட் அவசியம் திறக்கனுமிண்ணு. அவன் பண்ணூற 24/7 ஸார்விசை எந்த முட்டாளுமே அப்பிரிசியேட் பண்ண மாட்டாங்களாமே சார்.

8.எந்த சினிமா நடிகனாச்சும் தம் புள்ளைய மிலிட்டரிக்கி அனுப்பிருக்கானா..?

"நீங்க சார் இலக்கியத்தமிழ் மட்டும்தான் படிச்சிருக்கிறிங்க போலிருக்கு. சினிமாவிலை இன்னும் கொஞ்சம் நல்ல தமிழ் வசனங்கள் பேசுவாங்க  "யாரும் ஊரே யாவரும் கேளிர் (நோ ஃப்ட்); யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்(ஷர் த கார்ள்ஸ்)." அப்பிடியின்னெல்லாம்..... அது தான் சினிமா அப்பாக்கள் புள்ளங்களை மில்டறிக்கு விட மாட்டாங்க

9. காதல் எனபது மனச பாத்து வருவது என்றால் பார்த்த உடனே காதல் வருவது என்பதற்கு பெயர் காமம் தானே..?

Well..... மனதைப் பார்த்து வந்தால் அது காதல். உடம்பை பார்த்து வந்தால் அது காமம். இதில் "பார்த்து" என்ற சொல் "இருந்து" என்ற பொருளில் வருகிறது. ஒருவன் பெண்ணைப் பார்க்கும் போது தன் உடம்பால் பார்த்தானாயின் அவனுக்கு அவள் மீது  காமம்தான் வரும். பெண்ணைப்பார்க்கும் போது தன் மனதால் பார்த்தானாயின் அதில் காதல், அன்பு, பாசம் எல்லாம் பிறக்கும். 

:lol:

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)

  • கருத்துக்கள உறவுகள்

ஐஞ்சு அடி உயரத்தில பறக்கும் போது, விழுந்தால் அவ்வளவு அடி படாது!

 

நம்ம சுண்டு, ஐயாயிரம் அடி உயரத்தில பறந்து கிட்டு இருக்கு! :o

 

Hope he will have a 'soft landing: :D

ஐஞ்சு அடி உயரத்தில பறக்கும் போது, விழுந்தால் அவ்வளவு அடி படாது!

 

நம்ம சுண்டு, ஐயாயிரம் அடி உயரத்தில பறந்து கிட்டு இருக்கு! :o

 

Hope he will have a 'soft landing: :D

அது  நம்ம நெடுகர். சுண்டு இல்லை.

 

சுண்டுதானே திண்ணையில் போட்ட கடலையைக்கூட காலி பண்ணிப்போட்டார்.  அவர் பறக்கிறதுக்கு பினேன் இருந்திருக்கவிட்டாலும் தான் already landed என்கிறார். மிச்சம் இனி.... நீங்களாவது ஒரு ஆம்பிளைப்பிள்ளை பெத்திருப்பீங்கள் தானே. சுண்டலை சகோதரமாக வைச்சிருங்கோ. வேறு என்ன செய்ய. :(

 

 

:D  :D  :D

(நிலைமை உண்மையாக அவ்வளவு கஸ்டமாக இல்லை. நான் தான் கொஞ்சம் கூட்டி வைத்து எழுதிவிட்டேன். ) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahahah :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து அடியில நின்னுகிட்டு,

கம்பத்த தட்டி,.........

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா, வீட்டுல யாரும் இல்ல போல இருக்கு!

இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா.... மாடில லைட் எரியுது பாருங்க!

இரு செவிடர்கள் ஒரே விடுதியில் தங்கியிருந்தார்களாம்.

 

ஒருவர் தன் தோளில் துவாயைப் போட்டுக்கொண்டு குளிப்பத்தற்கு போனாராம்.

 

மற்றவர் அவரைப்பார்த்து : "குளிக்க போகிறாய் போலிருக்கு."

 

குளிக்கப்போனவர்: "இல்லை இல்லை நான் குளிக்கப் போகிறேன்."

 

மற்றவர்: "நான் நினைத்தேன் நீ குளிக்கப் போகிறாயாக்குமென்று."

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா முடியல்ல....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து 'இன்னோவா கார்' ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.

‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

:D :d

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, பார்த்து சிரித்து மகிழ்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா பெண்கள் கிட்ட போன்ல பேசும் போது அவங்க பெயர சொல்லி பேசகூடாது .

ஏன்னா வேற பெண்கள் கிட்ட பேசும் போது அந்த பெண்ணோட பெயர் வாயில வந்ததுறும்.

அதனால் யாருகிட்ட பேசுனாலும்

(எ.கா)அம்மு,தங்கம், செல்லம் குட்டி,

இப்படி பேசுனா உங்க மேல சந்தேகமே வராது...

:D:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கு காதலன் போன் பண்ணுகிறான் .எதிர்பாராத விதமாக காதலியின் தந்தை போன் எடுக்கிறார் .

அப்பொழுது ........

காதலன் :சார் நான் கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் இருந்து பிரகாஸ்ராஜ் பேசுகிறேன்

தந்தை : சொல்லுங்க சார்

காதலன் : சார் உங்க பொண்ணோட friend hot சீட்டில் இருக்காங்க .அவங்க உங்க பொண்ணுகிட்ட answer கேட்கனுமாம் .

தந்தை : பொண்ணுகிட்ட போன் கொடுக்கிறேன் :

காதலி :சொல்லுங்க சார்

காதலன் கேள்வி : நாளை எப்ப மீட் பண்ணலாம் OPTION

A:வீட்டில் வச்சு

B :ஸ்கூல் இல் வெச்சி

C:ஸ்கூல் இருந்து வீட்டுக்கு வரும்போது

D:பஸ் ஸ்டாண்ட் வச்சு

காதலி : option....D

காதலன் : option D லாக் பன்னபோறேன்

காதலி : OK தாராளம்

:D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.

அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"

முதல் தளத்துல அறிக்கை பலகைல,

"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது.

:D :d :(:D

சூப்பர் பழமொழி பாஸ் ............. :lol:  :lol:  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.