Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் இவனை காட்டிக்குடுத்து இவன் அவனை காட்டிக்குடுத்து.... அவன் இவன போட்டுத்தள்ளி இவன் அவன போட்டுத்தள்ளி ..... ஒட்டுமொத்தமா அழிந்த இனம் எமது இனம்

தமிழன் என்று சொல்லடா காட்டிக்குடுத்து வாழடா.....

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவி போன்றவர்களை அவாவின் பிள்ளைகளின் ஆவி கூட மன்னிக்காது......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவி போன்றவர்களை அவாவின் பிள்ளைகளின் ஆவி கூட மன்னிக்காது......

 

அவரை  மட்டும்  பிழை  சொல்லமுடியாது சுண்டல்

அவரை தூண்டி லாபம் பெறும் கூட்டம் தான் கவனிக்கப்படணும்

இவர்களுக்கு

அந்தம்மா  இல்லையென்றால் இன்னொரு சாமியைத்தேடி ஓடுவார்கள்

அழிக்கப்படவேண்டியதும்

மக்களால் ஓரங்கட்டப்பட்டு  துரத்தப்படவேண்டியதும் இந்தக்கூட்டமே......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பாஸ் அவா முகபுத்தகத்தில எழுதிற பதில்கள பாத்தா தெரிந்து தான் செய்யிறா வீம்புக்கு தான் நிக்கிறா....

--------------------------------------------------------------

சந்திர சேகர் ராவ் ,தெலுங்கானாவின் முதல் அமைச்சராக பதவியேற்றார் ....பதினோரு மந்திரிகளில் அவரது மகனுக்கும் ,மருமகனுக்கும் மந்திரி பதவியை பகிர்ந்து உள்ளார்

ஆனா நமக்கு கண்ணுக்கு தெரிவதெல்லாம் கலைஞர் தான் அவர தான் திட்டிட்டு இருக்கம்...

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவில் 13 பேர்? இருவர் கண்காணிப்பாளர்கள்

இலங்கைக்கு ஆப்பு போல தான் இருக்கு...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்,

ஜப்பானிப் பிரதமர் மோரி அமெரிக்கப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அங்கு போனால், அமெரிக்க அதிபர் கிளிண்டனிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஏதுவாக மோரிக்கு அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டது.

பயிற்சியாளர் மோரியிடம் சொன்னார்,

“கிளிண்டனின் கையைக் குலுக்கும்போது, ‘How are you?’ என்று கேட்க வேண்டும். அதற்கு கிளிண்டன் ‘I am fine and you?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘me too’ என்று பதில் சொல்ல வேண்டும். அதற்குப் பின் நடைபெறும் உரையாடல்களை மொழிபெயர்ப்பாளர்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்றார்.

மோரியும் சரி என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் வாஷிங்டனில் கிளிண்டனைச் சந்திக்கும்போது, தவறுதலாக இப்படித் தொடங்கினார்.

“Who are you?”

அதிர்ந்து போனார் கிளிண்டன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“Well, I’m Hillary’s husband,” என்று பதில் சொன்னார்.

அதற்கு மோரி சொன்னார்,

“me too”

  • கருத்துக்கள உறவுகள்

 தனக்கடா  .. தன்பிரடிக்கு (தலைக்கு  )    சேதம் :D  :D  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பாஸ் அவா முகபுத்தகத்தில எழுதிற பதில்கள பாத்தா தெரிந்து தான் செய்யிறா வீம்புக்கு தான் நிக்கிறா....

--------------------------------------------------------------

சந்திர சேகர் ராவ் ,தெலுங்கானாவின் முதல் அமைச்சராக பதவியேற்றார் ....பதினோரு மந்திரிகளில் அவரது மகனுக்கும் ,மருமகனுக்கும் மந்திரி பதவியை பகிர்ந்து உள்ளார்

ஆனா நமக்கு கண்ணுக்கு தெரிவதெல்லாம் கலைஞர் தான் அவர தான் திட்டிட்டு இருக்கம்...

 

கலைஞரின் தோல்விக்கு காரணம்

வாரிசு அரசியல் அல்ல  முதலில்

 

இனத்தை ஏமாற்றியது

தமிழர் தலைவர் என்று இருந்து பெயர் எடுத்தபடி

படுகொலையை  தடுக்காதிருந்தது

சந்தர்ப்பங்கள் கிடைத்தும்

லாபநட்டம் பார்த்து இனத்தை அழிக்க துணைபோனது

சாதாரண  திரைப்படம் என்றாலும்

தன் குடும்பம் மூலம் தான் வெளியில் வரணும் என்று பேராசைப்பட்டது

உலக  பணக்காரர் வரிசையில் வந்தது.............

  • கருத்துக்கள உறவுகள்

சந்திர சேகர் ராவ் ,தெலுங்கானாவின் முதல் அமைச்சராக பதவியேற்றார் ....பதினோரு மந்திரிகளில் அவரது மகனுக்கும் ,மருமகனுக்கும் மந்திரி பதவியை பகிர்ந்து உள்ளார்

ஆனா நமக்கு கண்ணுக்கு தெரிவதெல்லாம் கலைஞர் தான் அவர தான் திட்டிட்டு இருக்கம்...

 

நிருபர்: உங்கள் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாமே..?

 

கலைஞர்: ஏன்.. அம்மையார் ஆட்சியில் மட்டும் இருக்கவில்லையா?  :unsure:  

 

இது போன்றவைதான் கலைஞரின் பதில்கள்.  :D சுண்டல் இணைத்திருப்பது யாரோ ஒரு நொந்துபோன உடன்பிறப்பின் முகநூல் பதிவாகத்தான் இருக்கும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவி போன்றவர்களை அவாவின் பிள்ளைகளின் ஆவி கூட மன்னிக்காது......

சுண்டலும்,வி.அண்ணாவும் தமிழ்கவிக்கு அப்பவே ஆதரவு கொடுத்திருந்தால் அவ ஏன் சோபாசக்தியோட நிற்கப் போறா[உங்கட கருத்துப் படி]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க.,வில் களையெடுப்பும் இல்லை; கடுமையும் இல்லை: காயத்திற்கு களிம்பு தடவினால் போதுமா?

"தினமலர்"

சுண்டல்: ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கைகளும்........களை எடுப்புகளும் எடுக்காத வரை தி மு க என்ற கட்சி உருப்படபோவதில்லை.......ஜெயலலிதா யாராக இருந்தாலும் தப்பு செய்தால் தூக்கி எறிந்துவிடுவார்......ஆனால் கருணாநிதி அப்பிடி அல்ல.....விட்டுபிடித்துக்கொண்டே இருப்பார்....இப்பிடியே போனால் 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் கட்சி தோல்வியைத்தான் தழுவும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு அப்பால் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால்.......கலைஞரின் தமிழின் ரசிகன் முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞரே........

முதுபெரும் கலைஞன் நீ

முத்தமிழ் அறிஞன் நீ

வாழும் தமிழே.....

வாழிய நீ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரைப் பாராட்ட பல விஷயங்கள் உண்டு. நானும் கலைஞரைப் பாராட்டியிருக்கிறேன். எட்டு முறைகள் திமுக தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், அது ஏதோ அதிர்ஷ்டத்தினால் கிடைத்த உயர்வு அல்ல. அண்ணாதுரை அவர்களால் பல தலைவர்கள் வளர்க்கப்பட்டார்கள்; ஐம்பெரும் தலைவர்கள் என்றும் போற்றப்பட்டார்கள். அப்போது அவர்களில் ஒருவராக இடம்பெறாத கலைஞர், பிற்காலத்தில் திமுகவின் ஒரே தலைவர் என்று உருவெடுத்தது அவருடைய திறமைகளின் காரணமாகத்தான்.

சிறந்த பேச்சாற்றல், ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களிருந்து, அடுக்குமொழியில் அள்ளி வீசப்படுகின்ற அரசியல் வாதங்கள் வரை, கூர்மையான கிண்டலும், நயமான நகைச்சுவையும் உட்பட, பல சுவைகள் அவருடைய பேச்சில் கொட்டிக்கிடக்கும். இதற்கெல்லாம் ஏற்ற ஒரு குரலையும் இறைவன் அவருக்குத் தந்திருக்கிறான். கம்பீரம், எகத்தாளம், கண்டிப்பு, கேலி, கிண்டல், தெளிவு என்று பலவகைப்பட்ட அம்சங்களைக் கேட்போரிடம் கொண்டு செல்லக்கூடிய குரல் அது. இத்துடன் அபார ஞாபக சக்தியும் சேர்ந்திருப்பதால் அவருடைய பேச்சு ஒரு ஆயுதமாகவே திகழ்கிறது.

அவருடைய உழைப்பைப் பற்றியோ,கேட்கவே வேண்டாம். ஒரு மனிதனால் தொடர்ந்து, இத்தனை வருட காலம் இவ்வாறு உழைக்க முடியுமா? என்ற மலைப்பை ஏற்படுத்துகிற உழைப்பு. இவருடைய உழைப்பின் முன்னால்,மற்ற பலரின் உழைப்பு, வெறும் பொழுதுபோக்கே. உழைப்பு பொதுவாக எல்லோருக்கும் ஒரு கடமை; கலைஞருக்கோ அதுதான் உயிர்மூச்சு.

இப்படி ஒரு உழைப்பு இருந்ததால் தான், சுமார் பதின்மூன்று வருடகாலம் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த போதும்,தன்னுடைய உழைப்பையே நம்பி, இவரால் அரசியல் நடத்த முடிந்தது.வேறு ஒருவரால் அந்த நிலையில் ஒரு கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது சந்தேகமே.இரண்டு முறை டிஸ்மிஸ் ஆகியும் கூட, மீண்டும் ஒரு கட்டத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்கு இந்த உழைப்புத் தான் காரணம்.

- துக்ளக் ஆசிரியர் சோ

  • கருத்துக்கள உறவுகள்

ஜால்ரா வழமைபோல் மாறி அடிக்குது...!

  • கருத்துக்கள உறவுகள்
பரலோகத்தின் கதவுகள் திறக்கும் சத்தம் கேட்கும்போது .............
இப்படி பதறுபவர்கள்  பலர்.
100 வருடம் செய்த பாவத்திற்கு ........ 100 நிமிடத்தில் பரிகாரம் தேடலாம் எனும் நப்பாசைதான். 
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலும்,வி.அண்ணாவும் தமிழ்கவிக்கு அப்பவே ஆதரவு கொடுத்திருந்தால் அவ ஏன் சோபாசக்தியோட நிற்கப் போறா[உங்கட கருத்துப் படி]

 

நாங்களாக  எவரையும் தேடிச்சென்று உதவ முடியாது

கேட்டவர்களுக்கு எம்மால் முடிந்ததை செய்துள்ளோம்

செய்வோம்

அவருக்கு என்ன வேண்டும் என்று எம்மிடம்  கேட்கவில்லை

கேட்டால்  முடிந்தவரை  செய்திருப்போம்

அத்துடன்  அவருக்கு ஒரு பிள்ளை  வெளியில் உள்ளது

இப்படியானவர்களுக்கு(வெளிநாட்டில் ஆளிருப்பவருக்கு)  நான் உதவி  செய்வதில்லை

(இது எனது பெயர் பாவிக்கப்பட்டதற்காக மட்டும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2015ம் ஆண்டில் 10 லட்சம் ரூபாவை செலவிட்டு இலங்கையில் கல்விப் பட்டங்களை பெற முடியும் என இளைஞர் விவகாரம் மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொய்யாலே இன்னையில இருந்து காசு சேர்க்க தொடங்கணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சொல்லுறாங்க விஜையகாந்த் தலைமையிலான பா ஜ க கூட்டணிக்கு தமிழகத்தில் படுதோல்வி என்று ஆனால் அந்த கூட்டணி சும்மார் 75 லட்சம் சொச்சம் வாக்குகளை பெற்றிருக்கே..... தி மு க கூட்டணி பெற்றது 95 லட்சம் சொச்சம்...... சோ தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக அவர்களை எடுத்துக்கொள்ளலாம் தானே...... ராமதாஸ் போன்றவர்கள் இன்னும் ஒற்றுமையாக பணியாற்றி இருந்தால் நிச்சையம் அந்த வாக்கு வங்கி அதிகரித்து இருக்கும்..... யாரு என்ன தான் நக்கல் அடிச்சாலும் விஜையகாந்த் தனக்கு என்று ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிவிட்டார்......

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சொல்லுறாங்க விஜையகாந்த் தலைமையிலான பா ஜ க கூட்டணிக்கு தமிழகத்தில் படுதோல்வி என்று ஆனால் அந்த கூட்டணி சும்மார் 75 லட்சம் சொச்சம் வாக்குகளை பெற்றிருக்கே..... தி மு க கூட்டணி பெற்றது 95 லட்சம் சொச்சம்...... சோ தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக அவர்களை எடுத்துக்கொள்ளலாம் தானே...... ராமதாஸ் போன்றவர்கள் இன்னும் ஒற்றுமையாக பணியாற்றி இருந்தால் நிச்சையம் அந்த வாக்கு வங்கி அதிகரித்து இருக்கும்..... யாரு என்ன தான் நக்கல் அடிச்சாலும் விஜையகாந்த் தனக்கு என்று ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிவிட்டார்......

 

விஜயகாந்த்திடம்  5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக  அறிந்தேன்

ஆனால் கருணாநிதியை  விலத்தி 

விஜயகாந்த்யை கொண்டு வந்து என்ன  பலன்??

இது தான் இன்றைய  தமிழர்களின் கேள்வி??? :(  :(  :( 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவை நெருங்கும் ஜெயலலிதா: டெல்லி அரசியலில் புதிய திருப்பம்.....

பா ஜ கவுடன் கூட்டணி வைத்ததற்காக வைக்கோவை திட்டி தீர்த்த சீமான் இப்போ என்ன சொல்ல போறாரு....

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவை நெருங்கும் ஜெயலலிதா: டெல்லி அரசியலில் புதிய திருப்பம்.....

பா ஜ கவுடன் கூட்டணி வைத்ததற்காக வைக்கோவை திட்டி தீர்த்த சீமான் இப்போ என்ன சொல்ல போறாரு....

இப்ப சொல்ல வேண்டியதில்லை.. தேர்தல் பிரச்சாரத்திலேயே சொல்லிவிட்டார்.. :D

அதாவது தேர்தல் முடிந்த கையோடு இந்தம்மா பாஜக பக்கம் போனால் ஏற்கனவே அங்கு உள்ள சிறு கட்சிகளை பிடித்து வெளியே விட்டிடுவா என.. :D இப்படியானஒரு கூட்டணியில் இருப்பது தவறு என்பதற்காக சொன்னது. அப்படி இந்தம்மா அங்கு போனால் அவரை எதிர்த்து அரசியல் செய்வோம் என்பதையும் சொல்லிவிட்டார்கள்.

மறுபடியும் சீமானின் கணிப்பு ஒன்று சரிவரும் போல இருக்கு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையன் ஒருத்தன் வாட்ஸ் அப்ல ஒரு பொண்ணுகிட்ட மெசேஜ் பன்றான்..

இதோ அந்த ஜாலி உரையாடல் உங்களுக்காக...

பையன் : ஹாய்...

பொண்ணு : ஹலோ..

பையன் : எங்க இருக்கிங்க???

பொண்ணு : அப்பாவோட பி.எம்.டபுள்யூ கார்ல கிளப்புக்கு போய்டட்டு இருக்கேன். அதுக்கப்புறம் ஷாப்பிங் மால் போய்ட்டு பர்சேஸ் பண்ணிட்டு கார வீட்ல விட்டுட்டு உங்ககிட்ட பேசுறேன்... ஓகே வா???

பையன் : ஓகேங்க..

பொண்ணு : ஆமா, நீங்க எங்க இருக்கிங்க??

பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னாடி சீட்ல தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்...உங்களுக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுத்துட்டேன் உங்கள எடுக்க வேண்டம்ன்னு சொல்லதான் கூப்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று முழங்கு சங்கே! என்று பாடிய எங்கள் புரட்சிக் கவிஞனின் பிள்ளைகள் நாங்கள். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே! என்று சொன்னவன் எங்கள் முப்பாட்டன். ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் பாடியவள் எங்கள் ஔவைப் பாட்டி.

உலகம் போற்றும் பொதுமறையாம் திருக்குறளை பாடிவிட்டு கன்னியாகுமாரி கடற்கரையில் தலைநிமிர்ந்து நிற்பவன் எங்கள் பாட்டனார் வள்ளுவனார். இப்படிப்பட்ட பரம்பரையில் வந்த தமிழர்களாகிய நாங்கள் இன்று எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் என்ற தனித்துவத்தை இழந்துவிடாது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உலகத்தில் நாம் தனித்துவம் மிக்க தமிழ் மொழியினை தாய் மொழியாய் பேசுவதால்தான் நாம் தமிழர்கள் என்று எம்மை அடையாளப் படுத்திக்கொள்கின்றோம். ஆனால் நாளைய சந்ததிகள் நாம் தமிழர்கள் என்ற தனித்துவத்தினை இழந்தவர்களாய் மாறிவிடுவார்களா?

வெளிநாடுகளில் வளரும் புதிய தலைமுறையில் பெரும்பான்மையானவர்கள் மொழியை மறந்து வெறும் தமிழர் என்ற இனக்குழும அடையாளத்துடன் தான் வாழபோகின்றார்கள் பெற்றோர்கள் ஒவொருவரும் கவனத்தில் எடுக்க வேண்டிய விடையம் இது.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஜோர்டன் தூதர் செயித் அல் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது இலங்கையை பொருத்தவரை அதற்க்கு கிடைத்திருக்கும் லாட்டரி பரிசு......அதுவும் மனித உரிமைகள் விசாரணை வரவிருக்கும் இந்த சமையம் இவர்வந்திருப்பது இலங்கைக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய செய்தி குறிப்பா ஜோர்டான் நாட்டோடும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுடனும் சிறந்த உறவுநிலையை பேணும் லங்கா அந்த நாடுகளின் ஊடாக காய்நகர்த்தும்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை நிமிர்த்தி.... வீறுநடை போட்டு வீதி வலம் வந்த எம் வீரர்களே..... வஞ்சகம் சூழ்ச்சியால் விதி மாறிப்போச்சோ..... பஞ்சு போல் தமிழ்மானம் காத்தோடு போச்சோ ... காலம் பதில் சொல்லும் எழுவோம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.