Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயா நானா நிகழ்ச்சி நடாத்தும் கோபிநாத் ஒரு சிறந்த பல விடையங்கள் தெரிந்த இன்று இருக்க கூடிய தமிழ் ஆண் தொலைகாட்சி தொகுப்பாளர்களிலையே மிகச்சிறந்த தொகுப்பாளர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை....ஆனால் டிவி நிகழ்ச்சி தொகுப்புக்கும் மேடை நிகழ்ச்சி தொகுப்புக்கும் இடையில் பல வேறுபாடு உண்டு என்னைக்கேட்டால் மேடை நிகழ்ச்சி தொகுப்புக்கு கோபிநாத் சரிவரமாட்டார் என்றே தோணுது......அண்மையில் தென்னக நட்சத்திரங்களின் விருது நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினி DD யின் வேகத்துக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.....

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகத்தியர்

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி – பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி – பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.

அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ – டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை மதிப்பவருக்கே என்னைத் தருவேன்! - நயன்தாரா

அப்பிடியே தூக்கி போட்டு மிதிச்சா என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயக போராட்டத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு உயிரின் இழப்பின் போதும் ஏற்பட்ட வலியும் வேதனையும் தலைவர் மட்டுமே அறிந்தது

  • கருத்துக்கள உறவுகள்

தொகுப்பாளினி DD யின் வேகத்துக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.....

 

எப்படி உங்களுக்கு தெரியும்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அனைத்து நாடுகளுக்கும் போய் அவர்களின் காலில் விழுந்து நீங்கள் உதவி கேட்டால் அது தப்பில்லையாம் ஆனால் தமிழர் தரப்பு தங்களுக்கு ஒரு நீதியான நேர்மையான தீர்வு வேண்டி சர்வதேசங்களின் கதவுகளை தட்டுவது தப்பு என்று சொல்லுது sri lanka

இன்னாங்கடா நியாயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி உங்களுக்கு தெரியும்... :D

ஹா ஹா நான் மேடையில சொன்னன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் வெளிநாட்டில நம்ம தமிழ் பொண்ணுங்க ஜீன்சு TShirt போட்டிட்டு மாடர்ன் டிரஸ்சோட திரிஞ்சாலும்...... சாரி கட்டிட்டு கோயிலுக்கு வார அழகே தனி தாய்யா......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்க்காதே!... படிக்காதே!!.... பேசாதே!!!: தேமுதிகவினருக்கு விஜயகாந்த் போட்ட மூன்று கட்டளைகள்

அப்பிடியே விஜயகாந்துக்கு தே மு தி க வினர் இந்த மூன்று கட்டளைகளையும் போடலாம்

குடிக்காதே!

அடிக்காதே!

அடிக்கடி மலேசியா பறக்காதே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்டைக்கு ஒரு Swiss பொண்ணு என்னை போட்டு திட்டிட்டே இருந்தா phone போட்டு அதெப்புடி நீ swiss பற்றி இப்பிடி சொல்லலாம் கொடிய மடிச்சு வைங்க அது இதுன்னு......சரிங்க மேடம் அப்போ சொன்னது தப்பு தான் எதோ குருட்டு லக்கில இம்புட்டு தூரம் வந்திட்டீங்க.....இண்டையோட மடிச்சு வைக்கலாம்ல.......

  • கருத்துக்கள உறவுகள்

அண்டைக்கு ஒரு Swiss பொண்ணு என்னை போட்டு திட்டிட்டே இருந்தா phone போட்டு அதெப்புடி நீ swiss பற்றி இப்பிடி சொல்லலாம் கொடிய மடிச்சு வைங்க அது இதுன்னு......சரிங்க மேடம் அப்போ சொன்னது தப்பு தான் எதோ குருட்டு லக்கில இம்புட்டு தூரம் வந்திட்டீங்க.....இண்டையோட மடிச்சு வைக்கலாம்ல.......

 

பிரெஞ்சு இதோட சரி

சுவிசுக்கு 5 - பிரான்சுக்கு 0  என்ற  ஊருக்கு காவலரை  நானும் தேடுகின்றேன்...... :lol:  :D

அன்றைக்கு கால்பட  ஓடியவர் தான்

இன்றுவரை..........? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமன்னன் சிறந்த தமிழ்ப் புலவன்; ஒருமுறை இம்மன்னன் சோழன் கொச்செங்கணான் என்பவனோடு போர் புரிய நேரிட்டது. போரில் கணைக்கால் இரும்பொறை தோற்று விட்டான். போரில் வீர மரணம் எய்தாமல் சோழ மன்னனால் சிறைப் பிடிக்கப்பட்டான்.

தனது தோல்விக்காக வருந்தவில்லை சேரன். ஆனால், பகைவனுடைய சிறையில் அடைபட்டு இருக்க நேரிட்டதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினான். அதை எண்ணி எண்ணி மனம் புழுங்கினான். வருந்தினான்.

இந்நிலையில் திடீரென அவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. சிறைக் காவலாளர்களைப் பார்த்து தனது தாகம் தீர்க்கத் தண்ணீர் கேட்டான். எதிரியாக இருந்தாலும் கூட ’தண்ணீர்’ என்று ஒருவன் கேட்டு விட்டால் அதை முதற்கண் தணிப்பதுதான் தமிழர்தம் பண்பாடு. ஆனால் அவர்களோ அதை மறந்து, மன்னன் கேட்டவுடன் தண்ணீர் கொணர்ந்து தராமல், அவனை எள்ளி நகையாடினர். கிண்டலாக, கேலியாகப் பேசி மனதைப் புண்படுத்தினர்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தனர். ஏற்கெனவே சிறைப்பட்டுக் கிடப்பதை மானம் அழிந்த செயலாகக் கருதி வருந்தும் சேரனுக்கு, காவலாளிகளின் இந்த அற்பச் செயல் அறவோடு பிடிக்கவில்லை. தண்ணீர் தாகம் அதிகமாய் இருப்பினும் கூட, தன்னுடைய மானத்தை இழந்து, அவமரியாதைப் பட்டு, தன் பகைவர்களிடம் கேட்டு வாங்கிய தண்ணீரைக் குடிக்க அவனுக்கு மனம் வரவில்லை.

அவனது கவி உள்ளம் விழிக்கிறது. உடன் ஒரு பாடல் பிறக்கிறது.

” குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளில் தப்பார்

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து

சீரிய கேள் அல் கேளிர்

வேளாண் சிறுபதம் மதுகை இன்றி

வயிற்றுத் தீ தணியத் தாம் இரந்து

உண்ணும் அளவை

ஈன்மரோ! இவ்வுலகத்தானே!”

”குழந்தையாகப் பிறந்து இறக்காமல் இறந்தே பிறக்கும் குழந்தையாயினும், குறைப் பிரசவமாகப் பிறந்த குழந்தையாக இருப்பினும், போரில் இறவாமல் இவ்வாறு இறத்தல் அவமானம் என்று கருதி, அந்த இறந்த குழந்தையையும், குறையாகப் பிறந்த தசைப் பிண்டத்தையும் வாளால் வெட்டிப் புதைப்பார்கள். சங்கிலியால் கட்டுண்ட நாயைப் போலப் பகைவன் சிறையில் அகப்பட்டு அப்பகைவனின் காவலாளரிடம் பிச்சையாகத் தண்ணீர் பெற்று மானத்தை இழந்து, குடித்து உயிரை வைத்திருக்க விரும்பும் என் போன்றவர்களை இனி இவ்வுலகத்தார் பெறாமல் இருப்பார்களாக” என்பது அப்பாடலின் பொருள்.

இக் கவிதையில்தான் எத்தனை அவல நயம். எவ்வளவு வேதனை? சோகத்தை வார்த்தைகளால் பிழிந்து எடுத்திருக்கிறான் சேரமான் கணைக்கால் இரும்பொறை.

கவிதையைப் பாடி முடித்த அவன், தண்ணீரைக் குடிக்காமலேயே உயிரை விட்டு விட்டான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்குவதில்லையென்பதே பாராளுமன்றத்தினதும் நாட்டு மக்களினதும் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு தொடர்பில் அச்சுறுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சுண்டல்:

ஆமா தமிழ் மக்களும்

நாட்டின் பிரஜைகள் தான் அவர்கள் மீதான யுத்தம் அவர்களின் அனுமதியோடா செய்தீர்கள்? சர்வதேச விசாரணைக்கு நீங்கள் ஏன் பயப்படுறீங்க? ஏகப்பட்ட தப்பு நீங்க செஞ்சதால தானே?

எலே உப்பு திண்டவன் தண்ணி குடிச்சே ஆகணும் தமிழ் மக்களின் அத்தனை படுகொலைகளுக்கும் என்றோ ஒரு நாள் நீங்கள் தலை குனிந்தே ஆகணும்.....தண்டனை அனுபவிச்சே தீரனும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த்: சட்டசபைக்கு செல்லாமலேயே கூட, மக்கள் பணியாற்ற முடியும். அதைத் தான் நான் செய்து வருகிறேன்.

டவுட் தனபாலு: எதிர்க்கட்சித் தலைவரான நீங்க, 'சட்டசபைக்கு போகாமலேயே மக்கள் பணியாற்றி வர்றேன்'னு பெருமையாச் சொல்றீங்க... மக்களும், 'டில்லிக்கு இவரு போனாலும் ஒண்ணு தான்; போகலைன்னாலும் ஒண்ணு தான்... வெளியில் இருந்தே நமக்காக போராடுவாரு' என்ற நம்பிக்கையில் தான், லோக்சபா தேர்தலில் உங்க கட்சியை கண்டுக்கலையோ என்ற, 'டவுட்' வரலையா...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்

ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்

போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஜூலை 5 தமிழர்களின் வரலாற்றோடு கலந்துவிட்ட மறக்க முடியாத திகதிகளில் இதுவும் ஓன்று......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா வெளிநாட்டில இருந்து ஊருக்கு போய் கல்யாணம் கட்டிக்கிற மாப்பிளைங்களா கவனமா இருந்துகோங்க

திருமணத்திற்குப் பின்னர் இந்தியாவை விட்டு தாய்லாந்திற்குச் செல்ல முடியாது என்று மணப்பெண் ஒருவர் மண்டபத்தை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனக்காரன் mcdonaldsல burger சாப்பிடும் போதும் noodles சாப்பிடிற மாதிரியே சாப்பிடுறாங்க

#அவதானிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய மருத்துவ பீடம்: உயர்கல்வி அமைச்சர் தகவல் -

வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எலே ரஷ்யா கூட சேர்ந்து ராக்கெட் விட்டீக.... அணுகுண்டு தயாரிச்சீங்க ஏன் மேல பறக்கிற விமானம் கூட செஞ்சீங்க ....ஆனா கிரிக்கெட் விளையாடிநீங்களா? விளையாடி இருந்தா சச்சினா அது யாருன்னு கேட்டிருப்பாளா மரியா சரபோவா சொல்லுங்கலே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலவர் ஒருவர் பாட்டிலேயே விடுகதை ஒன்று போட்டார்.அதற்குவிடை தெரிகிறதா என்று பாருங்கள்.

முற்பாதி போய்விட்டால் இருட்டே ஆகும்.

முன் எழுத்து இல்லாவிட்டால்,பெண்ணே ஆகும்.

பிற்பாதி போய்விட்டால் ஏவல் சொல்லாம்.

பிற்பாதியுடன் முன் எழுத்து இருந்தால் மேகம்.'

சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி.

தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் ஒன்றாம்.

பொற்பார் திண்புய முத்து சாமி மன்னா!

புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் வழியில் புயலென எழுந்து களத்தின் தடைகளை உடைத்து பெரும் வெற்றிகளின் சரித்திர நாயகர்களாய் காற்றோடு கலந்துவிட்ட கந்தக புயல்களின் நாள் இன்று, தமிழின வீர வரலாற்றின் முகவரிகளின் நாள் இன்று...... பகை முடித்து தடை உடைத்து தமிழ் மக்களின் விடுதலை தாகத்தின் தண்ணீர் ஊற்றுக்களாய் சரித்திரமாகி போனவர்களின் நாள் இன்று.......

உங்களுக்காய் குனிந்த எம் தலைகள் மீண்டும் நிமிர்கின்றன வீரர்களே என்றோ ஒரு நாள் உங்கள் கனவுகள் நிஜமாகும் என்று...... அது வரை தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களாய் காற்றோடு தமிழ் மண்ணில் வீசிக்கொண்டே இருங்கள்

அவர்களின் கனவுகள் நனவாக வேண்டும்.

நனவாக்கப்பட வேண்டும் என்று இந்நாளில் உறுதி பூணுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய், மன அழுத்தம் நீங்க வேண்டுமா? உடலில் தீ வைத்தால் போதும்- இது சீன வைத்தியம்

கொய்யால உயிரோடையே கொளுத்தி மேல அனுப்பிடுவாங்க போல.....

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் கனவுகள் நனவாக வேண்டும்.

நனவாக்கப்பட வேண்டும் என்று இந்நாளில் உறுதி பூணுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய், மன அழுத்தம் நீங்க வேண்டுமா? உடலில் தீ வைத்தால் போதும்- இது சீன வைத்தியம்

கொய்யால உயிரோடையே கொளுத்தி மேல அனுப்பிடுவாங்க போல.....

 

வை திஸ் கொலைவெறி சுண்டு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.