Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக் உம்மை எம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அரசியல்வாதிகள் மக்கள் ஞாபக மறதியை வைத்து மேடைகளில் ஒவ்வொருநாளும் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கின்றீர்

இப்போது புலிகளை அல்ல மக்களைத் தான் பிடிக்கும் என்கின்றீர். நேற்று முன்தினம் கூட ஒரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலிகளைப் பற்றித் தாழ்த்தி கூறினார்.

ஆனால் யாழ்களத்தில் சில மாதங்களுக்கு முன்பும், நீர் எழுதிய அதே தளத்திலும் எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும். அவரின் பற்றுறுதியைப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டு நின்றீர். வேறு தளத்தில் அப்படிச் சொன்னதாக வேறு யாழ்களத்தில் எழுதினீர். ஏன் எம் உறவுகளுக்கு ஞபாக மறதி என்று நினைத்து விட்டீரா??

நீர் இப்போது "றோ" அப்படி இல்லை என்கின்றீர். ஆனால் தற்...தமிழில் "கருணா"வைப் பிரித்தது றோ என்று ஒப்புக் கொண்டு கருத்து எழுதுகினீர்.

ஒன்றைப் புரிந்து கொள்ளும். வெளிப்படையாக நடப்பது எல்லாம் உண்மையல்ல. பின்னணியில் நகர்த்தப்படும் காய்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்குள் றோவின் சம்பந்தம் எப்படி என்பது ஈஎன்டிஎல்எவ்காரர்கள் மட்டக்களப்பில் செத்தபோதும், TROகாரர்களைக் கடத்திய நிகழ்வும் ஆதாரம்.

இங்கே பிரச்சனைகள் நடக்கும்போது தனக்கு இலாபத்தை தேட இந்தியா முயலாது என்று சொன்னால் அது உமது முட்டாள் தனம் மட்டுமல்ல, இந்திய அரசின் முட்டாள்தனத்தையும் தான் குறிக்கும். எனவே நாம் எப்போதும் "றோ"க் குறித்து அவதானமாகத் தான் இருப்போம். இருக்கப் போகின்றோம்..

  • Replies 91
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நகைசுவையான செய்தி !! ட்ங்க் இது போல நிறைய நகை சுவை செய்திகள் எழுத வேண்டும்ம் :lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol:

அதுதானே நல்ல தலைவர்களை நெசித்திருந்தால் ஏன் இன்று பத்து கிலோ அரிசிக்கும் ஒரு கலர் ரீவி க்கும் வாக்கு போடப்போரார்கள்?

உடனே திமுக பக்கம் தாவ வேண்டாம் !! இந்திய தமிழ்ர்களை பொருத்தவரை நெடுமாறன் ஒரு தேச விரோதி !! அவரை எல்லாரும் மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புவது சிரிப்பு தான் வருகிறது.

கொன்சம் இந்தியா தமிழ் நாடு பக்கம் வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்

இப்படித்தான் உங்கள் அரசியல் இருக்கின்றது. இருக்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்லுவது. உங்கள் கருத்தை நிஞாயப்படுத்த நிகள்வுகளின் தரிசனத்தை மறுதலிப்பது.

200603290046iy.jpg

[url="http://www.eelampage.com/?cn=25125&hl=நெடுமாறன்"]http://www.eelampage.com/?cn=25125&hl=ந

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கிலுக் உம்மை எம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அரசியல்வாதிகள் மக்கள் ஞாபக மறதியை வைத்து மேடைகளில் ஒவ்வொருநாளும் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கின்றீர்

இப்போது புலிகளை அல்ல மக்களைத் தான் பிடிக்கும் என்கின்றீர். நேற்று முன்தினம் கூட ஒரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலிகளைப் பற்றித் தாழ்த்தி கூறினார்.

ஆனால் யாழ்களத்தில் சில மாதங்களுக்கு முன்பும், நீர் எழுதிய அதே தளத்திலும் எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும். அவரின் பற்றுறுதியைப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டு நின்றீர். வேறு தளத்தில் அப்படிச் சொன்னதாக வேறு யாழ்களத்தில் எழுதினீர். ஏன் எம் உறவுகளுக்கு ஞபாக மறதி என்று நினைத்து விட்டீரா??

நீர் இப்போது "றோ" அப்படி இல்லை என்கின்றீர். ஆனால் தற்...தமிழில் "கருணா"வைப் பிரித்தது றோ என்று ஒப்புக் கொண்டு கருத்து எழுதுகினீர்.

ஒன்றைப் புரிந்து கொள்ளும். வெளிப்படையாக நடப்பது எல்லாம் உண்மையல்ல. பின்னணியில் நகர்த்தப்படும் காய்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்குள் றோவின் சம்பந்தம் எப்படி என்பது ஈஎன்டிஎல்எவ்காரர்கள் மட்டக்களப்பில் செத்தபோதும், TROகாரர்களைக் கடத்திய நிகழ்வும் ஆதாரம்.

இங்கே பிரச்சனைகள் நடக்கும்போது தனக்கு இலாபத்தை தேட இந்தியா முயலாது என்று சொன்னால் அது உமது முட்டாள் தனம் மட்டுமல்ல, இந்திய அரசின் முட்டாள்தனத்தையும் தான் குறிக்கும். எனவே நாம் எப்போதும் "றோ"க் குறித்து அவதானமாகத் தான் இருப்போம். இருக்கப் போகின்றோம்

..

தூயவன்! நான் கூட லக்கிலுக்கின் இந்த இரட்டை வேடத்தை, பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டும் குணத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றிருந்தேன். அவர் புலியெதிர்ப்பு இந்தியர்கள் பெரும்பான்மையாகவுள்ள தளங்களில் ஒன்றைச் சொல்வார், யாழ் களத்தில் வேறொன்றைச் சொல்வார், நான் தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் போவதுண்டு. எத்தனையோ தமிழ்நாட்டுத் தமிழ்ச்சகோதரர்களிடம் பழகியிருக்கிறேன், அவர்கள் யாருமே லக்கிலுக் போன்றவர்களில்லை. அவர்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஈழத்தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளார்கள். நிச்சயமாக, லக்கிலுக்கும் அவருடைய குழுவினரின் கருத்துக்களையும்பார்த்து எல்லா இந்தியத்தமிழ்ச் சகோதரர்களும் இவர்களைப் போன்றவர்கள் என்று கருத வேண்டாம்.

உண்மையான, ஈழத்தமிழர்களில் அக்கறையும், அன்பும், மானசீகமாகப் பிரபாகரனின் வீரத்தை எண்ணிப் பூரிக்கும், தமிழ்நாட்டுச் சகோதரர்கள் தான் தமிழ்நாட்டில் பெரும்பானமையினர், ஆனால் அவர்கள் ஏழைகள், அவர்களிடம் கணணிகளும் கிடையாது, காசும் கிடையாது. ஈழத்தமிழர்களுக்கெதிராக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று கூறிக்கொண்டு கூச்சலிடுபவர்கள், தமிழ்நாட்டின் வந்தான் வரத்தான்கள் உண்மையான தமிழர்களல்ல.

ஆரம்பத்தில் லக்கிலுக் கூட அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லக்கிலுக்கின் குடும்பத்தில் அனைவரையும், இழிவாகத் தாக்கியது மட்டுமல்ல, பயமுறுத்தலும் செய்தார்கள், அதற்குப் பின்பு தான் லக்கிலுக் அடக்கி வாசிக்கத் தொடங்கினார். தமிழீழ ஆதரவாளரான லக்கிலுக், ஈழத்தமிழர்களின் எதிரியாகி, ஈழத்தமிழர்களின் விடுதலைத் தலைவனை நச்சுச்செடியென்று பேசவைத்ததற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிகள் மட்டுமல்ல, யாழ் களத்தில் லக்கிலுக்கைக் கண்டபடி சீண்டிப் பார்த்து இன்பம் கண்டவர்களும் தான்.

உண்மையான கருத்தாளன் எந்த சீண்டல்களுக்கும் அஞ்ச மாட்டான் ஆரூரன். ஒரு பாதையில் ஒரே வழியில் சென்றால் எவனும் சீண்டவும் மாட்டான். தமிழ் தேசியத்தை இவர்கள் குறை கூறி எதுவும் குறைந்து விடப்போவதில்லை. உண்மையான தமிழுணர்வுள்ளவன்- தமிழனாக வாழ்பவன்-தமதிழ் தேசியத்தின் ஆன்மாவை எந்த சீண்டல்களுக்காகவும் சீண்ட மாட்டான்.

குறிப்பிட்டு சொல்லவதானால் உங்கள் "உணர்வுகள்" தளத்திற்கெதிரக வந்த வதந்திகளை பாருங்கள. ஆனால் அதை யாரும் பெரிதாய் நம்பவில்லை. அதே போல இவர்களில் அலம்பல்களுக்கு தெவையற்ற விளக்கங்கள் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

பிரயோசமான நேரத்தை இந்த சிறுபிள்ளைத்தனமானவர்களுடன் கருத்து எழுதி கழிக்கும் எமது உறவுகளை எணணி கவலைப்படுகின்றேன்..

உதாரணமாக அதே யாழ் களத்தில் வசம்பு என்ற புனைப்பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார்... சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த நண்பர் இந்தியா மீது பெரும் பற்று கொண்டவர்... இந்தியத் தலைவர்கள் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் அபிமானம் கொண்டவர்... அங்கிருக்கும் இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களை எதிர்த்தே கருத்துகள் சொல்லுவார்... கிட்டத்தட்ட இந்தியர் போன்றே நடந்து கொள்ளுவார்...

இங்கை பாருங்கோவன் லக்கி லுக் வசம்புக்கு புகள்: பாடுறதை வசம்பு என்கிற முன்னாள் வானொலி அறிவிப்பாளர் யார் அவர் செய்த கூத்துகள் என்னவெண்டு இங்கை பலபேருக்கு தெரியாது அதுதான் யாழிலை நிண்டு சனநாயகம் கதைக்கிறார் என்ன செய்ய ஆடின காலுக்கு மேடை கேக்கும் தானே .அவரோடை சேந்து சனநாயகம் கதைத்த அவரது நண்பன் அதுதான் ராமராயன் இப்ப உள்ள போன சேகத்திலை எங்கை என்ன கதைக்கிறது எண்டு தெரியாமல் இங்கை நிண்டு புலம்பிறார்

சரி இலங்கை தமிழ்ர்களை புலிகளாகவே இந்தியா பக்கம் வர சொல்லும் !! ஏன் தமிழ் நாடு பக்கம் வந்து பார்க்க சொல்லும் !! ஒருத்தர் கூட மதிக்க மாட்டார்!!

இங்கு இருப்பவர்கள் பலர் தமிழ் நாட்டை இணைய தளங்கள் மூலம் தான் தெரிந்து இருப்பீர் என்று நினைக்கிறேன். நேரடியாக வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்

இங்கை பாருங்கள் ராயாதிராயா எண்ட ஒருதரின்ரை படு பகிடியை உவர் சேலம் திருச்சி தாம்பரம் மற்றது சென்னையிலை அண்ணா நகர் கே கே நகர் பக்கமே போனதில்லை போலை எங்கையோ இருந்து தமிழ் நாட்டை பற்றி எழுதிறார் தமிழ் நாடு எங்களிற்கு பக்கத்து வீடு மாதிரி அங்கை என்ன நடக்கிது எண்டு பாக்கிறதுதான் எங்களிற்கு வேலையே

angali

என்னை யாரென்று தெரியாமல் மனநோயாளி போல் இங்கு புலம்ப வேண்டாம். களத்தில் கௌரவமாக எழுதத் தெரிந்தால் எழுதப் பாரும்

கூட பிறந்து வழர்ந்து பிரச்சனைகளை அனுபவித்த எம்மவர்களே சிலர் தனிப்பட்ட காரணங்களிற்காக பழிவாங்கும் நோக்கோடு எத்தனையோ நாசகார வேலைகளை செய்கிறார்கள்.

அயல்நாடாக இருந்தாலும் தமிழனாக இருந்தாலும் நேரடியாக அனுபவிக்காத தமிழ்நாட்டு தமிழர்கள் விசமப்பிரச்சாரங்களால் குழம்பு வதையும் அவர்களது குழப்பத்திற்கு வலுச்சேர்ப்பது போன்ற நம்மவர்கள் சிலரது கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பு கருத்துக்களும் நிலமையை இன்னமும் மோசமடையச் செய்கிறது.

இந்தியாவிடம் இருந்து முடிந்தால் கொள்கைரீதியிலான ஆதரவை பெறவிரும்புகிறோம் இல்லாவிட்டால் எதிர்ப்பை சம்பாதிக்காது இருக்க வேண்டும்.

ஆனாவசியமற்ற முறையில் இந்திய அரசியலை விமர்சிப்பது இந்தியாவின் உள்வீட்டு விவகாரங்கள், அங்குள்ள ஊழல் முறைகோடுகளை ஆக்கபூர்வமற்ற முறையில் நக்கலடிப்பது இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு ஈழத்தமிழ் உயிரை மீளப் பெறவோ அல்லது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அவலத்தையும் அவமானத்தையே இல்லாது செய்துவிட உதவாது. படுகொலை செய்யப்பட்டவர்களினதும் பாலத்காரப்படுத்தப்பட்டவர்க

angali

என்னை யாரென்று தெரியாமல் மனநோயாளி போல் இங்கு புலம்ப வேண்டாம். களத்தில் கௌரவமாக எழுதத் தெரிந்தால் எழுதப் பாரும்

அங்கலிக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் தெரியும் வசம்பர்..... :wink: :P

முன்பு நடந்த விடயங்களைப் பொறுத்தவரை இரு பக்கங்களிலும் தவறுண்டு. மீண்டும் மீண்டும் பழையவற்றைக் கிளறிக் கொண்டிருப்பதால் எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. அதே போல் விடுதலைப்புலிகளே எல்லாவற்றையும் மறந்து இந்திய அரசுடன் ஒரு நட்பைப் பேண முயலும் போது தேவையில்லாமல் அவற்றைக் குலைப்பது போல் கருத்தெழுதுவது தேவையில்லாதது. அன்ரன் பாலசிங்கம் ஜெனிவா பேச்சுவார்த்தையின் பின் பத்திரிகைப் பேட்டியின் போது இந்தியாவுடனான இராஜதந்திர ரீதியிலான உறவுகள் மீண்டும் இரகசியமாக புதிப்பிக்கப் படுகின்றன என்று சொன்னதை இங்கு நான் நினைவுூட்ட விரும்புகின்றேன்.

எனக்கு தெரிந்த வகையில் உருப்படியாய் நீங்கள் சொன்ன கருத்து இதுதான்... எனது கருத்தும் இதுதான்...!

எதையும் போகிறபோக்கில் விட்டுப்பிடிப்பதுதான் எல்லோருக்கும் நலம்....!

என்னை யாரென்று தெரியாமல் மனநோயாளி போல் இங்கு புலம்ப வேண்டாம். களத்தில் கௌரவமாக எழுதத் தெரிந்தால் எழுதப் பாரும்.

வசம்பண்ணா நான் ஒண்டும் களத்திலை புலம்பேல்லை உங்களை எனக்கு நன்றாகவே தெரியும் எந்தெந்த வானொலியிலை என்னநிகள்ச்சிகள் நடத்தியவர் நீங்கள் உங்கள் பின்புலம் பலம் என்னவென்று நன்றாகவே தெரிந்தவள் நான் உங்களிற்கு ஏன் இந்தியா மீது அதீத பற்று என்றும் தெரியும் வேணுமானால் விலாவாரியாக யாழிலை ஒரு பக்கத்திலை இருந்து கதைப்பமா??அப்ப தெரியும் யாருக்கு மன நோய் என்று உங்கள் மற்றைய நோய்களை பற்றியும் கதைக்கலாம் :P :P :wink:

தலா

தேவையில்லாது நீரும் பிரைச்சினை ஏற்படுத்த முனைகின்றீர் என்பது புரிகின்றது.

நான் அறிவிப்பாளன் என்பதும் நான் செய்த கூத்துக்கள் என்னவென்றும் உம்மால் நிரூபிக்க முடியுமா?? இதை நான் சவாலாகவே கேட்கின்றேன். ஒருவனின் கருத்துச் சுதந்திரத்தை கேவலப் படுத்த நினைக்கும் உம் போன்ற முட்டாள் அல்ல நான். நான் யார் என்பது என்னோடு பழகும் பல கள உறவுகளுக்குத் தெரியும். தேவையில்லாது மற்றவர்களை முட்டாள்த் தனமாக வம்புக்கிழுக்க வேண்டாம்.

நீர் அறிவிப்பாளனய் அதுவும் வானொலியில்.... :D கடைசிவரைக்கும் இருந்திருக்க முடியாது என்பது என் எண்ணம் அதுக்கு பல காரணம் இருக்கு.... அங்கலி தமாசு பண்ணூறார் ஆக்கும்... :lol:

வசம்பு அவர்களே!

நீங்களா பேசுவது? சரியாக கூறுங்கள் பார்வை அவர்கள்தானே இப்படியான தலைப்பொன்றை தேர்ந்தெடுது வேண்டுமென்றே ஏனையோரை வம்பிற்கிழுக்கின்ரார். அவருக்கு துணையாக ராஜாதி வேறு. நீங்கள் என்னவென்றால் ஏதோ பேசுகின்றீர்கள். மனசாட்சியை தொட்டு பேசுங்கள். அதுவே எல்லாவற்றையும் விட வலிமையானதும் தூய்மையானதும்.

angali wrote:

வசம்பண்ணா நான் ஒண்டும் களத்திலை புலம்பேல்லை உங்களை எனக்கு நன்றாகவே தெரியும் எந்தெந்த வானொலியிலை என்னநிகள்ச்சிகள் நடத்தியவர் நீங்கள் உங்கள் பின்புலம் பலம் என்னவென்று நன்றாகவே தெரிந்தவள் நான் உங்களிற்கு ஏன் இந்தியா மீது அதீத பற்று என்றும் தெரியும் வேணுமானால் விலாவாரியாக யாழிலை ஒரு பக்கத்திலை இருந்து கதைப்பமா??அப்ப தெரியும் யாருக்கு மன நோய் என்று உங்கள் மற்றைய நோய்களை பற்றியும் கதைக்கலாம்

angali

இந்தச் சவாலை ஏற்க நான் தயார். இதில் நீர் தோல்வியுற்றால் உண்மையில் நீர் ஓர் மனநோயாளி என்று ஏற்றுக் கொள்வீரா???

சிஞ்சாங் வசம்புக்கு நல்ல ஆப்பு :P :P

சாபஷ் சரியான போட்டி :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக், ஆரோக்கியமான விவாதத்திற்கு முன்வந்தமைக்கு உங்களுக்கு முதன்மையான நன்றி.

ஜாலியன் வாலா படுகொலைகளை நீங்கள் மறக்காத போது எப்படி எம்மீது இந்தியப்படைகள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளை மறந்திருப்போம் என்று நியாயமான கேள்வியை நீங்கள் கேட்டிருந்தீர்கள் உண்மைதான்.

அன்றிலிருந்து இன்று வரை விடுதலைப் புலிகளும் சரி, ஈழத்தமிழர்களும் சரி இந்திய மக்களை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை என்றுதான் கூறிவந்தார்கள். கூறியும் வருகின்றார்கள்.

ஒருசிலர் இந்தியாவை அடியோடு வெறுக்கின்றார்கள். ஏனெனில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்திய இராணுவம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக அவர்கள் அதனை வெளிப்படுத்துகின்றார்கள். அக்கருத்தினை கூறுவதற்கு அவர்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு.

ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் இந்தியாவிற்கு எதிராக திருப்பிவிட்டதில் 'றோ"வுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதேபோன்று இந்தியாவில் ஊடகத்தை தமது கைக்குள் வைத்திருக்கும் சில மேலான்மையாளர்கள் விடுதலைப் புலிகள் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் அடையப் போகின்ற 'ஈழம்" இந்திய தேசியத்துக்கு எதிரானது என்றும் பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்திய இராணுவத்தினால் எனது குடும்பம் பாரிய சொத்தழிவுகள், மன உளைச்சல்களை சந்தித்தது. அதில் ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். இது முக்கிய தர நிலையிலிருந்த 2 ஆம் நிலை தமிழ் இராணுவ அதிகாரி சம்பவ இடத்தில் இருந்த போது நடந்தது.

சம்பவம் இதுதான், விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்ட போது விடுதலைப் புலிகளை தேடிப்போக வக்கில்லாதவர்கள் எமது கிராமத்தை சுற்றிவளைத்தனர். அப்போது எமது வீட்டிற்கு வந்த 5 பேரடங்கிய குழுவினர் முதல் தர இராணுவ அதிகாரி ஹிந்தி மொழி பேசுபவர். 2 ஆம் நிலை அதிகாரி தமிழ் பேசுபவர். (இதில் முக்கியமான விடயம். இந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு எம்மைப்பற்றியும் நன்கு தெரியும் எம்முடன் அடிக்கடி உரையாடியும் உள்ளார்.) எனது அண்ணா, அண்ணி ஆகியோரை அடித்தது மட்டுமல்லாது இதில் மிலேச்சத்தனமான செயலையும் செய்தார்கள். கையில் வைத்திருந்த அவர்களுடைய 8 மாத கைக்குழந்தைக்கும் கன்னத்தில் அடித்தார்கள் ஐயா. இன்றும் அதனை நினைக்க நெஞ்சம் பதறுகிறது.

ஒரு இராணுவத்தினது கை அதுவும் 8 மாத பச்சைக்குழந்தையின் கன்னத்தில் பட்டால் எப்படியான வேதனையாக இருக்கும் என்று சற்று யோசித்துப்பாருங்கள்.

பின்னர், அந்த தமிழ் இராணுவ அதிகாரியிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது 'அப்போது தாங்கள் இருந்த மனநிலையில் அப்படித்தான் செய்யத் தோன்றியது" என்றார் மிக சர்வசாதாரணமாக.

ஆக, இந்திய இராணுவத்தினரிடம் மனிதத் தன்மை இல்லையா? மகாத்மா உதித்த மண்ணில் மனிதநேயம் என்பது இல்லையா? இப்டித்தான் எமக்கு கேட்கத் தோன்றும்.

அடுத்து, 'றோ" வைப் பற்றி இங்கே கூற வேண்டும். 'றோ" வின் தெளிவற்ற பார்வையினால் தான் இன்று இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிர்நிலை எடுப்பதற்கு காரணம்.

உதாரணத்திற்கு, இந்திய மத்திய புலனாய்வுத்துறை என்றழைக்கப்படும் (சிபிஐ) விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றது. இது இன்றும் நிலவுகின்றது. ஆனால் அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. காரணம் 'றோ" வின் தலையீடு அதிகம்.

'றோ" தன்நாட்டிற்குள் ஊடுருவும் உளவாளிகளையோ அல்லது தனது நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலைப்படாது எப்போதும் ஈழத் தமிழ்ப் போராட்டத்தை சிதைப்பதற்கே அதிக நேரம் செலவு செய்கின்றது.

உதாரணத்திற்கு கடந்த வருடம் ஜ_னியர் விகடனில் 'றோ" வுக்குள் ஒரு கறுத்த ஆடு என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு அந்நபர் எப்படி அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டார் என்று விரிவான கட்டுரை வெளிவந்தது.

இதனை அவர்களால் கவனிக்க முடியவில்லையே அதாவது தமக்குள்ளேயே ஒரு கறுப்பு ஆடு உள்ளது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியாமற் போய்விட்டதே. அந்த அதிகாரி இன்று அமெரிக்காவில் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றாராம்.

அண்மையில் பாகிஸ்தான் மற்றும் காஸ்மீர் தீவிரவாதிகளின் ஊடுருவல்களை தடுக்க முடியாமற் போனமை. நாடாளுமன்ற துப்பாக்கிச் சூடு. பல ஊடுருவல்கள். இவ்வாறே அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் 'றோ" தனது நாட்டிற்குள் நுழைந்து அநியாயம் செய்கின்றவர்களை அறிய முற்பட வேண்டும். என்றோ எதிரிகளாக கணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் எதிரிகளாகவே நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு அருகில் உண்மையான எதிரி தோன்றி இந்திய தேசத்துக்கு நாசம் செய்வான். ஆகையால் உண்மையாக அந்நாட்டிற்கு எதிராகச் செயற்படுபவர்களை 'றோ" கண்டுபிடிக்க வேண்டும்.

இந்திய இராணுவம் எமது நாட்டிற்கு நுழைந்து செய்த அநியாயத்தை நாம் மறந்துதானே இருந்தோம்.

ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி விடுதலைப் புலிகளை தடை செய்தார்கள். சரி, அது அந்த நாட்டின் சட்டப்படி என்று நாம் வாளாதிருக்கலாம்.

இது எப்படி நடந்தது இதன் பின்புல காரணம் என்ன? இதனை சரிசெய்து ஈழத் தமிழர்களிடம் நட்பு பாராட்ட அல்லவா வேண்டும்.

ராஜீவ் காந்தி அன்று சரியானவர்களின் சொற்கேட்டு நடந்திருந்தால் இந்திய இராணுவம் எமது பகுதிக்குள் வந்து அநியாய அழிவுகளையும் அதேவேளை இந்தியாவுக்கு கெட்டபெயரையும் சந்தித்திருக்குமா?

டிக்சிட் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் தான் ராஜீவ் காந்தி தவறாக நடத்தப்பட்டதாக ஏ.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் முக்கிய புள்ளிகள் கூறினரே.

இதில் ஒன்றை கூறுகின்றேன். நான் ராஜீவ் காந்தி கொலையை இங்கே நியாயப்படுத்த முன்வரவில்லை.

இந்தியாவில் உள்ள பல விடுதலைப் போராட்டங்களை தடை செய்துவிட்டு அவர்களுடன் பேச்சு நடத்துகிறார்கள் இந்திய அரசு.

சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திரா காந்தியை கொலை செய்தார். அவர்களை மன்னிக்கக்கூடிய இந்திய அரசு அவர்களுக்கு எதிராக முன்னர் நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்கேட்ட இந்திய அரசு ஈழத் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்குமா?

இந்திய அரசின் கொள்கை வகுப்பை லக்கிலுக் நீங்கள் சரியாக ஆராய வேண்டும். ஏனெனில் அவர்கள் திட்டமிட்டுத்தான் ஈழத் தமிழர்களை அடக்க நினைக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் இதில் வெல்லப்போவதில்லை.

'பொய்யின் பயணம் குறுகிய. உண்மையின் பயணம் மிகவும் நெடியது" இந்த பொன்மொழிக்கு இணங்க நாம் என்றோ ஒருநாள் வெற்றிபெறுவோம்.

இந்தியா தொடர்ந்தும் பேசாமல் இருந்ததா? இல்லையே.

விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் விவரத்தை சிறிலங்காப் படைகளுக்கு அறிவித்தது.

இந்திய கடற்பரப்பில் நுழையாது சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த கேணல் கிட்டுவின் கப்பலை மடக்கி அவர்களை சரணடைய வைக்க முனைந்து அது தோல்வியில் முடிந்தமை. அவர்கள் தம்மை அழித்தது.

தமிழர்களின் கலாச்சார நகரான யாழை விடுதலைப் புலிகள் கைப்பற்ற விடமாமல் பின்கதவு வழியாக நரி்த்தன வேலையில் ஈடுபட்டு தடுத்தது.

இதில் இன்னொரு விடயத்தையும் கூற வேண்டும். இந்தியா எப்போதும் ஈழத்தில் ஒரு தளம்பல் நிலை அதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது.

காரணம் இலங்கையில் சமாதானம் தோன்றினால் இலங்கை சிங்கப்பூர் போன்று அதீத வளர்ச்சியடையும். அப்போது இந்தியாவில் வளர்ச்சிநிலை பாதிக்கப்பட்டு முதலீடுகள் வரவு குறைந்துவிடும் என்று இந்தியா அச்சப்படுகின்றது.

பாருங்கள், அன்று ஜே.வி.பி. முற்றாக அழிந்தது என்று பலர் கருதிக்கொண்டிருக்க தற்போதைய ஜே.வி.பி. தலைவரான சோமவன்ச அமரசிங்கவை அன்றைய டிக்சிட் கடல்வழியாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்று பின்னர் லண்டன் அனுப்பியிருந்தார்.

மனிதாபிமான உதவி என்று நினைத்தீர்களா இல்லவே இல்லை.

இதே ஜே.வி.பி.யை பின்னர் புத்துயிரூட்டி சிறிலங்கா அரசிற்கு எதிராக அவர்கள் பாவிக்க எண்ணியது. ஏன் இப்படி செய்ய அவர்கள் முனைகின்றார்கள் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம்.

பிற்காலத்தில் தமக்கு சாதகமற்ற அரசு சிறிலங்காவில் இல்லாத சமயம் ஜே.வி.பி.யை பயன்படுத்தலாம் என்று எண்ணினார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் முன்னர் ஐ.தே.க. அல்லது சுதந்திரக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமரும். இப்போது அந்த நிலை இல்லை.

அதுதான் அடிக்கடி சிறிலங்காவில் தேர்தல் வருகின்றதே அதனை கண்கூடாக நீங்கள் காணாலாம்.

ஜே.வி.வி. மற்றும் ஹெல உறுமய (ஹெல உறுமயவும் இந்தியாவின் உருவாக்கம்தான். அதற்கான ஆதாரங்களும் உண்டு) வந்ததன் பின்னர் சிறிலங்காவின் வாக்குகள் சிதைவடைந்தன.

லக்கிலுக், இதில் ஒரு விடயத்தில் ஒரு உண்மையை கவனியுங்கள்.

இந்தியாவினால் புத்தூக்கம் பெற்ற ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய இன்று இந்திய சொற்படி நடக்க முன்வரவில்லை. இந்தியா அழைத்த போதும் செல்லவில்லை.

ஆனால் ஈழத் தமிழர்கள் இந்தியா எமது தந்தையர் நாடு என்றும் இந்தியா எமது பிரச்சனையில் நல்ல நண்பனாக செயற்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டு வருகின்றார்கள். ஆனால் இந்தியா கண் திறந்ததா? இல்லையே ஏன்?

உங்களைப் போன்ற படித்தவர்கள் கடிதங்களை அனுப்பி எமது போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கும் படி இந்திய அரசிடம் கேட்கலாமே?

மீண்டும் கூறுகின்றோம். இந்தியாவுக்கு எப்போதும் உண்மையான நண்பர்கள் விடுதலைப் புலிகளும் ஈழத் தமிழர்களும் மட்டுமே.

ஆனால் இந்தியா சிங்களத்தை நாடித்தான் போகின்றது.

மனைவி இருக்கும் போது மாற்றான் மனைவியை நாடிப் போகின்றது இந்தியா. ஒருவேளை புராணக் கதைகளில் (மகாபாரதம், இராமாயணம்) வருவது போன்று பல மனைவிகளை அரசன் வைத்திருந்த கதையைப் போன்று இந்தியா, தானும் இந்த நவீன யுகத்தின் செய்ய முற்படுகின்றதோ என்னவோ.

அடுத்து முக்கியமானது யாவரும் அறிந்த விடயம். ஈழத்துக்கான கொள்கையோடு களமிறங்கிய விடுதலை இயக்கங்களை சிதைவடைய வைத்ததில் பெரும்பங்கு இந்தியாவுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் உண்டு.

எல்லோரும் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுகின்றார்கள். உண்மை அதுவல்ல. விடுதலை இயக்கங்களுக்குள் மோதல் மனப்பான்மையை உருவாக்கியவர்கள் இந்தியா இது உண்மையிலும் உண்மை.

இந்தியா எம்மீது கண்திறக்க வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் விட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் மற்றும் ஆரூரன் எழுதிய லக்கிலுக்கின் இரட்டைவேட கருத்துக்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு நாமே தெரிந்தோ தெரியாமலே தூண்டுதலாக இருந்திருக்கிறம் எண்டதையும் சிந்தியுங்கள்.

லக்கி லுக்கை நான் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன் இவர் இரட்டை வேடம் போடும் வேசதாரி என்டபடியால்தான் நான் இவரின் கருத்துக்களுக்கு எப்போதும் எதிர்த்துக் கருத்தெழுதுவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்பெருமை பேசுவதற்கு உங்களை விட்டால் ஆட்கள் இல்லை என்பதை திரும்ப திரும்ப நிரூபிக்கிறீர்கள். இந்தியாவிற்கு வந்து என்னத்த பார்க்கிற ராஜா அனுபவப்பட்டவர்கள்தான் எழ்குதுகிறோம் இங்கு. எங்களுக்கு எல்லாம் தெரியும் நீங்கள் சொல்லித்தெரியிற அளவுக்கு அங்கு ஒன்டுமில்லை. இலங்கைதமிழனுக்கு உங்களது நாட்டில் மதிப்பில்லை என்று சொல்லியிருக்கிறயள். அதுசரி உங்களுக்கு எங்காவது மதிப்பு உள்ளதா. உதாரணத்திற்கு பக்கத்திலிருக்கும் சிங்கப்பூர், ம்லேசியா சென்று பார்த்திருக்கிறீர்களா. அங்கும் உங்களது ஆட்கள்தான் நிறைய உள்ளார்கள் ஆனால் மதிப்பென்பதே கிடையாது.

இன்டைக்கு உங்களது ஆட்கள் காசு காசு என்டு எல்ல இடமும் அலையிறயள். காசுக்காக என்னவென்றாலும்(????..............) செய்வீர்கள் என்பதும் எல்லோரும் தெரிந்த உண்மை இது எல்லா நாட்டுக்காறனுக்கும் தெரியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கோ. :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கிலுக், ஆரோக்கியமான விவாதத்திற்கு முன்வந்தமைக்கு உங்களுக்கு முதன்மையான நன்றி.

ஜாலியன் வாலா படுகொலைகளை நீங்கள் மறக்காத போது எப்படி எம்மீது இந்தியப்படைகள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளை மறந்திருப்போம் என்று நியாயமான கேள்வியை நீங்கள் கேட்டிருந்தீர்கள் உண்மைதான்.

அன்றிலிருந்து இன்று வரை விடுதலைப் புலிகளும் சரி, ஈழத்தமிழர்களும் சரி இந்திய மக்களை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை என்றுதான் கூறிவந்தார்கள். கூறியும் வருகின்றார்கள்.

ஒருசிலர் இந்தியாவை அடியோடு வெறுக்கின்றார்கள். ஏனெனில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்திய இராணுவம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக அவர்கள் அதனை வெளிப்படுத்துகின்றார்கள். அக்கருத்தினை கூறுவதற்கு அவர்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு.

ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் இந்தியாவிற்கு எதிராக திருப்பிவிட்டதில் 'றோ"வுக்கு எவ்வளவு பங்கு உண்டோ அதேபோன்று இந்தியாவில் ஊடகத்தை தமது கைக்குள் வைத்திருக்கும் சில மேலான்மையாளர்கள் விடுதலைப் புலிகள் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் அடையப் போகின்ற 'ஈழம்" இந்திய தேசியத்துக்கு எதிரானது என்றும் பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்திய இராணுவத்தினால் எனது குடும்பம் பாரிய சொத்தழிவுகள், மன உளைச்சல்களை சந்தித்தது. அதில் ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். இது முக்கிய தர நிலையிலிருந்த 2 ஆம் நிலை தமிழ் இராணுவ அதிகாரி சம்பவ இடத்தில் இருந்த போது நடந்தது.

சம்பவம் இதுதான், விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்ட போது விடுதலைப் புலிகளை தேடிப்போக வக்கில்லாதவர்கள் எமது கிராமத்தை சுற்றிவளைத்தனர். அப்போது எமது வீட்டிற்கு வந்த 5 பேரடங்கிய குழுவினர் முதல் தர இராணுவ அதிகாரி ஹிந்தி மொழி பேசுபவர். 2 ஆம் நிலை அதிகாரி தமிழ் பேசுபவர். (இதில் முக்கியமான விடயம். இந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு எம்மைப்பற்றியும் நன்கு தெரியும் எம்முடன் அடிக்கடி உரையாடியும் உள்ளார்.) எனது அண்ணா, அண்ணி ஆகியோரை அடித்தது மட்டுமல்லாது இதில் மிலேச்சத்தனமான செயலையும் செய்தார்கள். கையில் வைத்திருந்த அவர்களுடைய 8 மாத கைக்குழந்தைக்கும் கன்னத்தில் அடித்தார்கள் ஐயா. இன்றும் அதனை நினைக்க நெஞ்சம் பதறுகிறது.

ஒரு இராணுவத்தினது கை அதுவும் 8 மாத பச்சைக்குழந்தையின் கன்னத்தில் பட்டால் எப்படியான வேதனையாக இருக்கும் என்று சற்று யோசித்துப்பாருங்கள்.

பின்னர், அந்த தமிழ் இராணுவ அதிகாரியிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது 'அப்போது தாங்கள் இருந்த மனநிலையில் அப்படித்தான் செய்யத் தோன்றியது" என்றார் மிக சர்வசாதாரணமாக.

ஆக, இந்திய இராணுவத்தினரிடம் மனிதத் தன்மை இல்லையா? மகாத்மா உதித்த மண்ணில் மனிதநேயம் என்பது இல்லையா? இப்டித்தான் எமக்கு கேட்கத் தோன்றும்.

அடுத்து, 'றோ" வைப் பற்றி இங்கே கூற வேண்டும். 'றோ" வின் தெளிவற்ற பார்வையினால் தான் இன்று இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிர்நிலை எடுப்பதற்கு காரணம்.

உதாரணத்திற்கு, இந்திய மத்திய புலனாய்வுத்துறை என்றழைக்கப்படும் (சிபிஐ) விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றது. இது இன்றும் நிலவுகின்றது. ஆனால் அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. காரணம் 'றோ" வின் தலையீடு அதிகம்.

'றோ" தன்நாட்டிற்குள் ஊடுருவும் உளவாளிகளையோ அல்லது தனது நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலைப்படாது எப்போதும் ஈழத் தமிழ்ப் போராட்டத்தை சிதைப்பதற்கே அதிக நேரம் செலவு செய்கின்றது.

உதாரணத்திற்கு கடந்த வருடம் ஜ_னியர் விகடனில் 'றோ" வுக்குள் ஒரு கறுத்த ஆடு என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு அந்நபர் எப்படி அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டார் என்று விரிவான கட்டுரை வெளிவந்தது.

இதனை அவர்களால் கவனிக்க முடியவில்லையே அதாவது தமக்குள்ளேயே ஒரு கறுப்பு ஆடு உள்ளது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியாமற் போய்விட்டதே. அந்த அதிகாரி இன்று அமெரிக்காவில் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றாராம்.

அண்மையில் பாகிஸ்தான் மற்றும் காஸ்மீர் தீவிரவாதிகளின் ஊடுருவல்களை தடுக்க முடியாமற் போனமை. நாடாளுமன்ற துப்பாக்கிச் சூடு. பல ஊடுருவல்கள். இவ்வாறே அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் 'றோ" தனது நாட்டிற்குள் நுழைந்து அநியாயம் செய்கின்றவர்களை அறிய முற்பட வேண்டும். என்றோ எதிரிகளாக கணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் எதிரிகளாகவே நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு அருகில் உண்மையான எதிரி தோன்றி இந்திய தேசத்துக்கு நாசம் செய்வான். ஆகையால் உண்மையாக அந்நாட்டிற்கு எதிராகச் செயற்படுபவர்களை 'றோ" கண்டுபிடிக்க வேண்டும்.

இந்திய இராணுவம் எமது நாட்டிற்கு நுழைந்து செய்த அநியாயத்தை நாம் மறந்துதானே இருந்தோம்.

ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி விடுதலைப் புலிகளை தடை செய்தார்கள். சரி, அது அந்த நாட்டின் சட்டப்படி என்று நாம் வாளாதிருக்கலாம்.

இது எப்படி நடந்தது இதன் பின்புல காரணம் என்ன? இதனை சரிசெய்து ஈழத் தமிழர்களிடம் நட்பு பாராட்ட அல்லவா வேண்டும்.

ராஜீவ் காந்தி அன்று சரியானவர்களின் சொற்கேட்டு நடந்திருந்தால் இந்திய இராணுவம் எமது பகுதிக்குள் வந்து அநியாய அழிவுகளையும் அதேவேளை இந்தியாவுக்கு கெட்டபெயரையும் சந்தித்திருக்குமா?

டிக்சிட் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் தான் ராஜீவ் காந்தி தவறாக நடத்தப்பட்டதாக ஏ.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் முக்கிய புள்ளிகள் கூறினரே.

இதில் ஒன்றை கூறுகின்றேன். நான் ராஜீவ் காந்தி கொலையை இங்கே நியாயப்படுத்த முன்வரவில்லை.

இந்தியாவில் உள்ள பல விடுதலைப் போராட்டங்களை தடை செய்துவிட்டு அவர்களுடன் பேச்சு நடத்துகிறார்கள் இந்திய அரசு.

சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திரா காந்தியை கொலை செய்தார். அவர்களை மன்னிக்கக்கூடிய இந்திய அரசு அவர்களுக்கு எதிராக முன்னர் நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்கேட்ட இந்திய அரசு ஈழத் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்குமா?

இந்திய அரசின் கொள்கை வகுப்பை லக்கிலுக் நீங்கள் சரியாக ஆராய வேண்டும். ஏனெனில் அவர்கள் திட்டமிட்டுத்தான் ஈழத் தமிழர்களை அடக்க நினைக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் இதில் வெல்லப்போவதில்லை.

'பொய்யின் பயணம் குறுகிய. உண்மையின் பயணம் மிகவும் நெடியது" இந்த பொன்மொழிக்கு இணங்க நாம் என்றோ ஒருநாள் வெற்றிபெறுவோம்.

இந்தியா தொடர்ந்தும் பேசாமல் இருந்ததா? இல்லையே.

விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் விவரத்தை சிறிலங்காப் படைகளுக்கு அறிவித்தது.

இந்திய கடற்பரப்பில் நுழையாது சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த கேணல் கிட்டுவின் கப்பலை மடக்கி அவர்களை சரணடைய வைக்க முனைந்து அது தோல்வியில் முடிந்தமை. அவர்கள் தம்மை அழித்தது.

தமிழர்களின் கலாச்சார நகரான யாழை விடுதலைப் புலிகள் கைப்பற்ற விடமாமல் பின்கதவு வழியாக நரி்த்தன வேலையில் ஈடுபட்டு தடுத்தது.

இதில் இன்னொரு விடயத்தையும் கூற வேண்டும். இந்தியா எப்போதும் ஈழத்தில் ஒரு தளம்பல் நிலை அதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது.

காரணம் இலங்கையில் சமாதானம் தோன்றினால் இலங்கை சிங்கப்பூர் போன்று அதீத வளர்ச்சியடையும். அப்போது இந்தியாவில் வளர்ச்சிநிலை பாதிக்கப்பட்டு முதலீடுகள் வரவு குறைந்துவிடும் என்று இந்தியா அச்சப்படுகின்றது.

பாருங்கள், அன்று ஜே.வி.பி. முற்றாக அழிந்தது என்று பலர் கருதிக்கொண்டிருக்க தற்போதைய ஜே.வி.பி. தலைவரான சோமவன்ச அமரசிங்கவை அன்றைய டிக்சிட் கடல்வழியாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்று பின்னர் லண்டன் அனுப்பியிருந்தார்.

மனிதாபிமான உதவி என்று நினைத்தீர்களா இல்லவே இல்லை.

இதே ஜே.வி.பி.யை பின்னர் புத்துயிரூட்டி சிறிலங்கா அரசிற்கு எதிராக அவர்கள் பாவிக்க எண்ணியது. ஏன் இப்படி செய்ய அவர்கள் முனைகின்றார்கள் என்று உங்களுக்குள் கேள்வி எழலாம்.

பிற்காலத்தில் தமக்கு சாதகமற்ற அரசு சிறிலங்காவில் இல்லாத சமயம் ஜே.வி.பி.யை பயன்படுத்தலாம் என்று எண்ணினார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் முன்னர் ஐ.தே.க. அல்லது சுதந்திரக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமரும். இப்போது அந்த நிலை இல்லை.

அதுதான் அடிக்கடி சிறிலங்காவில் தேர்தல் வருகின்றதே அதனை கண்கூடாக நீங்கள் காணாலாம்.

ஜே.வி.வி. மற்றும் ஹெல உறுமய (ஹெல உறுமயவும் இந்தியாவின் உருவாக்கம்தான். அதற்கான ஆதாரங்களும் உண்டு) வந்ததன் பின்னர் சிறிலங்காவின் வாக்குகள் சிதைவடைந்தன.

லக்கிலுக், இதில் ஒரு விடயத்தில் ஒரு உண்மையை கவனியுங்கள்.

இந்தியாவினால் புத்தூக்கம் பெற்ற ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய இன்று இந்திய சொற்படி நடக்க முன்வரவில்லை. இந்தியா அழைத்த போதும் செல்லவில்லை.

ஆனால் ஈழத் தமிழர்கள் இந்தியா எமது தந்தையர் நாடு என்றும் இந்தியா எமது பிரச்சனையில் நல்ல நண்பனாக செயற்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டு வருகின்றார்கள். ஆனால் இந்தியா கண் திறந்ததா? இல்லையே ஏன்?

உங்களைப் போன்ற படித்தவர்கள் கடிதங்களை அனுப்பி எமது போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கும் படி இந்திய அரசிடம் கேட்கலாமே?

மீண்டும் கூறுகின்றோம். இந்தியாவுக்கு எப்போதும் உண்மையான நண்பர்கள் விடுதலைப் புலிகளும் ஈழத் தமிழர்களும் மட்டுமே.

ஆனால் இந்தியா சிங்களத்தை நாடித்தான் போகின்றது.

மனைவி இருக்கும் போது மாற்றான் மனைவியை நாடிப் போகின்றது இந்தியா. ஒருவேளை புராணக் கதைகளில் (மகாபாரதம், இராமாயணம்) வருவது போன்று பல மனைவிகளை அரசன் வைத்திருந்த கதையைப் போன்று இந்தியா, தானும் இந்த நவீன யுகத்தின் செய்ய முற்படுகின்றதோ என்னவோ.

அடுத்து முக்கியமானது யாவரும் அறிந்த விடயம். ஈழத்துக்கான கொள்கையோடு களமிறங்கிய விடுதலை இயக்கங்களை சிதைவடைய வைத்ததில் பெரும்பங்கு இந்தியாவுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் உண்டு.

எல்லோரும் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுகின்றார்கள். உண்மை அதுவல்ல. விடுதலை இயக்கங்களுக்குள் மோதல் மனப்பான்மையை உருவாக்கியவர்கள் இந்தியா இது உண்மையிலும் உண்மை.

இந்தியா எம்மீது கண்திறக்க வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் விட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும்.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நிர்மலன் ஆனால் லக்கி லுக்க்கால் விளங்கிகொள்ள முடியுமா என்பதுதான் சந்தேகம் எனெனில் அவரைப்பொறுத்தவரை றோவுக்கும் இலங்கைப்பிரச்சின்னைக்கும் சம்பந்தமெயில்லை என்னும் கருத்துடைய முதிர்ந்த அரசியல் ஆராய்ச்சியாளன்(political analyst).

இப்படித்தான் உங்கள் அரசியல் இருக்கின்றது. இருக்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்லுவது. உங்கள் கருத்தை நிஞாயப்படுத்த நிகள்வுகளின் தரிசனத்தை மறுதலிப்பது.

200603290046iy.jpg

http://www.eelampage.com/?cn=25125&hl=...மாறன்

மொத்தம் 100 பேர் கூட தேறாதே !! இந்த கூட்டத்தில் இளைய சமுதாயத்தினர் எத்தனை பேர் இருகின்றனர் ??

தமிழ் நாட்டு எனது சொந்த ஊர் , எனக்கு இவர்களை பற்றி நிரையவே தெரியும் !! உங்களை விட

தன்க்கு யாராவது ஆதரவாக பேச வில்லை என்றால் அந்த நபர் மீது தனி நபர் தாக்குதல் தொடங்குவது ஆருரானின் பழக்கம் . லக்கி லூக் தனது கொளகையில் தெளிவாக இருப்பவர். அவர் மீது சேறு பூசி அவரி பணிய வைத்தனர் என்று ஆருரான் சொல்வதில் இருந்து தெரிகிறது, ஆருரானுக்கு ஏதோ கிழண்டு விட்டது என்று !!

லக்கி யாரிடம் பணிந்து போணதில்லை !! சும்மா தமிழ் சினிமா கதை போல ஆருரான் அளந்து விட்டு கொண்டு இருக்கிறார். ஆருரான் தான் சொன்னதை நீருபிக்க முடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராஜாதிராஜா அல்லது திருச்சி007 அல்லது அருண்குமார் அவர்களே!

லக்கிலுக் எப்படிப்பட்டவர் என்பதை ஆருரன் முன்பும் இக்களத்தில் எழுதியதை படித்திருப்பீர். அதே வாயால் இங்கே தலைவருக்கு எவ்வளவு ஆதராக இருக்கின்றேன் என்று எழுதியதையும், பின் பிறிதொரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலம்பியதையும் நீர் அறிவீர். ஏனென்றால் அங்கும் நீர் இருக்கின்றீர் என்று தெரியும்.

எனவே லக்கிலுக் குறித்து ஆதாரமாக எழுத வேண்டுமென்றால் தமிழ்மணத்தில் விரைவில் மணக்க :wink: வைக்கின்றோம். காத்திருங்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.