Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனிலிருந்து இனப்படுகொலையாளிகளை விரட்ட - அணிதிரண்டுவாரீர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]gonocide_seithy_25712_150.jpg[/size]

[size=4]அன்பான ஐரோப்பியவாழ் தமிழீழ உறவுகளே! எதிர்வரும் 27.07.2012 அன்றைய நாள் இலண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலுமுள்ள 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் வருகைதரவுள்ளார்கள்.[/size]

[size=4]இதில் சிறீலங்கா இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவும் வருகைதரவுள்ளார். உலகின் 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் இலண்டன் Aspen Way E14 என்னும் வீதிவழியாக ஊர்தியில் சென்று ஒலிம்பிக் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.[/size]

[size=4]இந்நிலையில் சிறீலங்கா இனப் படுகொலையாளிகளை பிரித்தானியா மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் முகமாகவும் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பை சர்வதேச நாட்டுத் தலைவர்கள் மத்தியில் வெளிப்படுத்தும் முகமாகவும் எதிர்வரும் 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 9:00 மணிவரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.[/size]

[size=4]அனைத்து உலகத் தலைவர்கள் முன் கவனயீர்ப்புச் செய்வதற்கு இது எமக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு! இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி, எமது உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக அனைத்து பிரித்தானிய வாழ் தமிழீழ உறவுகளும் ஒருமித்த மக்கள் சக்தியாகத் திரண்டு அன்றைய நாள் மாலை 5:00 மணிக்கு Billingsgate Fish Market E14 5ST என்னும் இடத்துக்கு முன்னால் Aspen Way E14 என்ற வீதியருகே ஒன்றுதிரண்டு வருமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்.[/size]

[size=4]தமிழீழ மண்ணிலே நாளுக்கு நாள் எங்கள் உறவுகள் படுகொலை செய்யப்படுவதும் எமது தாயக பூமி சூறையாடப்படுவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது. சிங்கள பேரினவாத அரசு சர்வதேச நாடுகளை ஏமாற்றி, ஈழத்தமிழ் இனத்தின் மீது மிகப்பெரிய இனவழிப்பையும் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களையும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகில் எங்கும் இல்லாதவாறு மிகத் தீவிரமாக இழைத்துவருகிறது.[/size]

[size=4]எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகத்தீவிரமான திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவது இன்றைய சூழலில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் தலையாய கடமையாக உள்ளது. எங்களது உரிமைகளை போராடி மீட்பதற்கான எமது ஆயுதப் போராட்டம் உலகநாடுகளின் துணைகொண்டு நசுக்கப்பட்ட நிலையில், எமது நீதிக்கான, சுதந்திரத்திற்கான தொடர் கவனயீர்ப்பு மக்கள் போராட்டங்ளை தொடர்ந்து ஓயாது சர்வதேச நாடுகளில் நிகழ்த்த வேண்டியது எமது விடுதலைக்கான வரலாற்றுக் கடமையாகும்.[/size]

[size=4]எனவே, அனைத்துலக மட்டத்தில் எடுத்துச் செல்லப்படக்கூடிய ஒரு வாய்ப்பில், ஒரு பகுதியாக மனிதநேயன் திரு.கோபி.சிவந்தன் அவர்கள் தொடர் உண்ணாநிலை கவனயீர்ப்புப் போராட்டத்தை செய்துவருகிறார். அதேவேளை, எதிர்வரும் 27.07.2012 வெள்ளிக்கிழமை குறித்த நேரத்தில் அனைத்து பிரித்தானிய வாழ் தமிழீழ உறவுகள் அனைவரும் காலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டாயத்தை உணர்ந்து பெரும் மக்கள் வெள்ளம்போல் ஒன்றுதிரண்டு இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க வருமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்.[/size]

[size=4]

gonocide_seithy_25712.jpg[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

லண்டன் வாழ் உறவுகள் முகநூல் மூலம் இத்தகவலை பலருக்கு அறிவித்தால் நல்லது.

[size=6]London 2012: UK Tamil community set for mass protests as Sri Lanka’s controversial president confirms he will attend Olympics[/size]

[size=6][size=5]Sri Lanka’s controversial president will travel to London for the Olympic Games in what could spark mass protests from Britain’s Tamil community, The Independent has learned. [/size][/size]

[size=6][size=5]Mahinda Rajapaksa’s spokesperson Bandula Jayasekara confirmed today that the 66-year-old president, whose government has been accused of committing war crimes, is planning to come to Britain shortly and may even attend the Games’ opening ceremony on Friday evening. [/size][/size]

[size=6][size=5]Mr Rajapkasa’s presence in the UK has often prompted large demonstrations from Britain’s Tamil community who accuse his government of carrying out widespread atrocities against civilians and combatants during the 2009 war that finally wiped out the Tamil Tiger insurgency.[/size][/size]

[size=6][size=5]The United Nations says both sides committed war crimes during the conflict’s brutal close which brought the Tamil Tiger’s three decade campaign for an independent state crashing to the ground. Investigators found evidence that Tamil Tigers used child soldiers and civilians as human shields whilst Sri Lankan government forces stand accused of deliberately shelling civilian areas, summarily executing both Tamil Tigers and civilians and committing widespread sexual violence.[/size][/size]

[size=6][size=5]The threat of Tamil protests will inevitably be of concern to the Metropolitan Police because of the community’s ability to field huge numbers of demonstrators at such short notice. During the 2009 war, Tamil campaigners used mobiles phones to launch a surprise occupation of Parliament Square that lasted more than sixty days. During Mr Rajapaksa’s last visit to Britain for the Queen jubilee, hundreds of protesters brought traffic to a halt when they gathered outside the Commonwealth and a hotel in Park Lane where the President was staying.[/size][/size]

[size=6][size=5]Historically Britain and Canada have been the two most popular destinations among Tamil refugees and critics of the Sri Lankan regime. As a result Britain’s Tamil community often had close links to Tamil nationalists and the Tigers themselves. The Sri Lankan government has long accused the British authorities of not doing enough to clamp down on Tamil Tiger support and fundraising. Despite the growing wealth of evidence – including videos showing summary executions and evidence of sexual violence committed by its soldiers – Colombo has vehemently denied committing war crimes and publicly criticises those human rights groups and journalists who suggest otherwise. It has yet to allow the UN to conduct an independent investigation of war crime allegations. An independent investigation commissioned by the Sri Lankan government, meanwhile, was widely criticised by human rights groups and foreign governments for being partial and partisan.[/size][/size]

[size=6][size=5]Tamil activists contacted by The Independent today said it was likely new protests would break out if Mr Rajapaksa came to Britain. “It is wholly inappropriate for Mr Rajapaksa to be invited to Britain and particularly the Olympics,” said Jan Jananayagam, from Tamils Against Genocide. “There is credible evidence that his government is responsible for ethnically motivated crimes against humanity and continuing persecution of other ethnic and religious groups in Sri Lanka. Just this week we released a report showing how government institutions such as the police and military under his command are involved in a systematic network of politically motivated disappearances as well as abduction for ransom.”[/size][/size]

[size=6][size=5]Suren Surendiran, from the Global Tamil Forum, said they were looking at possible legal avenues they could pursue against the Sri Lankan delegation when they arrive in Britain. “President Rajapaksa might be getting away from being arrested by hiding behind the cover of being a head of state, anyone else joining him with blood in their hands must know that we will deploy the full breath of the legal instruments available to us upon them,” he said.[/size][/size]

http://www.independe...cs-7976331.html

Edited by akootha

ஆம் காதல் இம்முறை முன்புபோல் இல்லாமல் பன் மடங்கு அவமானத்துடன் அந்த கொலைவெறியன்

நாடு திரும்பவேண்டும் ........திரண்டு எழுங்கள் உறவுகளே........

ஆம் காதல் இம்முறை முன்புபோல் இல்லாமல் பன் மடங்கு அவமானத்துடன் அந்த கொலைவெறியன்

நாடு திரும்பவேண்டும் ........திரண்டு எழுங்கள் உறவுகளே........

அண்ணா, இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது. உங்களுக்கு யாரும் லண்டன் உறவுகளை தெரிந்தால் அவர்களிடமும் தெரிவித்து விடுங்கள்.

பாருன்கோபா அவனும் விடுறதாய் இல்லயபா லண்டனுகு வருவன் என்டு அடம்பிடிகிறான் :unsure: :unsure: :unsure::rolleyes:

பாருன்கோபா அவனும் விடுறதாய் இல்லயபா லண்டனுகு வருவன் என்டு அடம்பிடிகிறான் :unsure: :unsure: :unsure::rolleyes:

[size=4]சர்வதேச மட்டத்தில் தானும் ஒரு 'மதிப்பிற்குரிய தலைவர்' எனக்காட்டவேண்டுமே! [/size]

[size=4]கடையாக வந்தபொழுது கொடியில்லாத வாகனத்தில் பயணித்தார். பிரித்தானியா பாதுகாப்பை குறை கூறினார்கள். இம்முறையும் இவர் வருகையால் சோதனைதான்![/size][size=4] [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது கிடைக்கப்போகும் அவமானம்தான் மகிந்தரின் வாழ்நாளில் மறக்கமுடியாது இருக்கும் உலகநாடுகள் ஒலிம்பிக்கை உன்னிப்பாக பார்க்கும்போது இவர் படப்போகும் அவமானத்தையும் பார்ப்பார்கள் அந்த அவமானத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்யவேண்டும்.

பாருன்கோபா அவனும் விடுறதாய் இல்லயபா லண்டனுகு வருவன் என்டு அடம்பிடிகிறான் :unsure: :unsure: :unsure::rolleyes:

அந்தளவிற்கு மானம் கெட்டவன் இந்த மகிந்த ராஜபக்சே

இப்பொழுது கிடைக்கப்போகும் அவமானம்தான் மகிந்தரின் வாழ்நாளில் மறக்கமுடியாது இருக்கும் உலகநாடுகள் ஒலிம்பிக்கை உன்னிப்பாக பார்க்கும்போது இவர் படப்போகும் அவமானத்தையும் பார்ப்பார்கள் அந்த அவமானத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்யவேண்டும்.

அது சுரணை உள்ளவர்கள் செய்வது. :D நிச்சயம் மகிந்த அப்படி தற்கொலை செய்யமாட்டார்.

லண்டனில் வாகனத்துக்கு முட்டை வீசிய மக்களை பார்த்து சிரித்துக்கொண்டு கையசைத்துக்கொண்டு சென்றவர்... :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வேதாளம் முருங்கையில் ஏறியே தீருவன் என்று தான் நிக்குது...எத்தனை தரம் வாங்கிக் கட்டிக் கட்டிக் கொண்டு ஓடினாலும் திரும்ப,திரும்ப முயற்சி பண்ணுதே..

பாருன்கோபா அவனும் விடுறதாய் இல்லயபா லண்டனுகு வருவன் என்டு அடம்பிடிகிறான் :unsure: :unsure: :unsure::rolleyes:

சகோதரா குண்டா நீண்ட நாட்களின் [பின் தங்கள் குரலை கேட்பதில் மகிழ்ச்சி................

உண்மை தான் உவனுக்கு சூடு சுரணை கிடையாது.................ஆனாலும் உங்கள் தமிழில் பார்க்கும் நல்லகருத்துக்களை

பண்டித தமிழில் பார்க்கும் குழப்பமான கருத்துக்களை விட ரசிப்பவன் நான் ,,,,,,,,,,,,, தொடர்ந்து எழுதுங்கள் குண்டா ........நானும் இன்னும் சில

மாதங்கள்,வாரங்கள் ...........பின் குண்டன் தான் ...........எல்லாத்தையும் விட்டுவிட்டேன்..........காலம்தான் சகோதரா........

:D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மகிந்தவின் லண்டன் வருகையை எதிர்த்துப் போராட்டம் நடாத்தும்

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

இது மூன்றாவது தாக்குதல் இதிலும் ஒரு கை பார்ப்போம் .

மகிந்த ... ஓர் தெருச்சண்டியன்! தெருச்சண்டியர்கள் என்ன செய்வார்கள்? அதனையே மகிந்த செய்கிறான்! இன்று மரண அடி வாங்கினாலும் நாளையும் தெரிவிற்கு வரத்தான் செய்வார்கள்! இந்த தெருச்சண்டியணின் கூட்டாளிகளை ... மேர்வின், துமிந்த, வீரவன்ச, கருணா, டக்லஸ், பிள்ளையான், றிஷாத் பதியுதீன் ... ... பார்த்தாலே தெரியும்!

சிங்கள அரச பயங்கரவாதிகளின் சுயரூபத்தை உலகுக்கு உணர்த்த எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

சிறு கையேடுகளில் சிங்களப் பயங்கரவாதிகளின் 60 வருடகால இனவழிப்புக்களை அட்டவணைப்படுத்தி, பட ஆதரங்களுடன் முக்கியஸ்தர்களுக்கு, ஊடகவியாலர்களுக்கு கையளிக்கலாம்.

அத்துடன் தெளிவாக பெயரிடப்பட்ட கொலைக்களம், படுகொலைப்படங்கள் அடங்கிய குறுந்தட்டுக்களையும் முக்கியஸ்தர்களுக்கு, ஊடகவியாலர்களுக்கு கையளிக்கலாம்.

முக்கிய இடங்களில் சிங்கள அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலைகளை பாரிய விளம்பர பலகைகளில் (இலத்திரனியல், சுவரொட்டிகள்) கட்சிப் படுத்தலாம்.

சிறு கையேடுகளில் சிங்களப் பயங்கரவாதிகளின் 60 வருடகால இனவழிப்புக்களை அட்டவணைப்படுத்தி, பட ஆதரங்களுடன் முக்கியஸ்தர்களுக்கு, ஊடகவியாலர்களுக்கு கையளிக்கலாம்.

அத்துடன் தெளிவாக பெயரிடப்பட்ட கொலைக்களம், படுகொலைப்படங்கள் அடங்கிய குறுந்தட்டுக்களையும் முக்கியஸ்தர்களுக்கு, ஊடகவியாலர்களுக்கு கையளிக்கலாம்.

602575_507409829284408_860486072_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் லண்டன் வருகையின் போது... இம் முறை முட்டையுடன், அழுகின தக்காளிப்பழமும் சேர்க்கப்பட வேண்டும். :lol:

லண்டனுக்கு மீண்டும் துணிவுடன் செல்கின்றார் என்றால் நிச்சயம் ஏதாவது திட்டங்கள் காணப்படும். போராட்டத்தில், கவனயீர்ப்பில் ஈடுபடுபவர்கள் புத்திசாலித்தனமாகவும், பிரித்தானியா நாட்டு சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பது அவசியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]லண்டனில் நாளை பாரிய போராட்டம் என அறிவிப்பு ![/size]

z.pooraaddam14.jpg

[size=4]ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துகொள்ள நாளை லண்டன் வரும் மகிந்தருக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்த தமிழர்கள் திட்டம் தீட்டியுள்ளனர் என அறியப்படுகிறது. பிரித்தானியாவில் இயங்கும் மக்கள் அமைப்பான TCC இப் போராட்டத்துக்கான அனுமதியைப் பொலிசாரிடம் இருந்து பெற்றுள்ளது. இதனை அடுத்து நாளை மதியம் முதல் இரவுவரை இப் போராட்டம் நடைபெறும் என்று இவ்வமைப்பு அறியத்தருகிறது. மாலை 5 மணிமுதல் 9மணிவரை ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறுவதால், இதில் கலந்துகொள்ள மகிந்தரும் அவரது துணைவியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் லண்டன் வருகின்றார்கள் என இலங்கை அரசின் ஊடகப் பேச்சாளர் பந்துல தெரிவித்துள்ளதாக, லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபெண்டன் தகவல் வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]

pooraddam27.jpg[/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tamilar%20peeravai%20london.JPG

[size=4]லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிறி லங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை வெள்ளிக்கிழமை லண்டன் வர இருப்பதாக பிரித்தானியாவின் The Independent நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில், அவரது வருகையினை எதிர்த்து Aspen வீதிலுள்ள Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக நாளை மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்டன ஒன்றுகூடலில் பிரித்தனியாவின் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏற்கனவே இரண்டு முறை போர் குற்றவாளி மஹிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய வருகையினை முறியடித்து அவரது முகத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் கரி பூசி அனுப்பி இருக்கும் நிலையில், மீண்டும் தமிழ் மக்களுக்கு சவால் விடுக்கும் வகையில் நாளைய ஒலிம்பிக் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு அவர் லண்டன் வர இருப்பதாக அறிவிக்கப்படிருப்பதால், மீண்டும் தமிழ் மக்கள் ஒன்று பட்டு தமது பலத்தை வெளிப்படுத்தி உலக தலைவர்கள் முன்பாக அவரை அவமானப்படுத்தி வெட்கி தலை குனிய வைத்து விரட்டி அடிக்கும் வரலாற்று கடமையை எதிர் கொண்டு நிற்கின்றனர்.

ராஜபக்ஸவின் பிரித்தானிய வருகையினை அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தியதாக பிரித்தனியாவின் The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நாளைய ஆரம்ப நிகழ்வுகளில் ஏராளமான நாடுகளின் சுமார் 150 உலக தலைவர்கள், ஆயிரக்கணக்கான ராஜதந்திரிகள் மற்றும் பிரதானிகள் ஆரம்பவிழாவுக்கு செல்ல இருப்பதால் அவர்கள் பயணம் செய்யும் Aspen வீதியில் உள்ள Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக (Opposite the Fish Market, E14 5ST ) நாளை மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை நாம் தொடர்ந்து அறியத் தருவோம்.[/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் பிரித்தானிய அல்லது ஐரோப்பிய உறவுகளுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Edited by துளசி

என் அன்பான லண்டன் வாழ உறவுகளே இது எங்கள் வரலாற்று கடமை .......இங்கே நா க அரசாங்கம் ,தலைமை செயலகம் ,

அனைத்துலக செயலகம், உலகதமிழர் பேரவை என்ற பதங்களை மறந்து விடுங்கள்........நாம் தமிழர்கள் என்ற பதம் மட்டும்

உங்கள் நினைவில் இருக்கட்டும் ....புறப்படுங்கள் ..........சிங்கள கொலைவெறி புரிந்த போர்குற்ற வாளிகளை ஒரு

பதம் பார்த்துவிடுங்கள் ..........இதுதான் தமிழராய் பிறந்து புலம்பெயர் நாடுகளில் [லண்டனில்] வாழும் உண்மையான தமிழர்

ஒவ்வொருவருடைய வரலாற்றுக்கடமயாகும்..........

olympic-opening-protest-july27.jpg

மீண்டும் தமிழினம் பாரிய தவறுகளைச் செய்கிறார்களா எனத் தோன்றுகிறது?

சுவரொட்டிகளில், விளம்பர பதாதைகளில் வெறும் செருப்பக்களை மட்டும் அணிவிக்காமல், ஒருசில தமிழினப் படுகொலைக் காட்சிகளை, படுகொலைப் புள்ளிவிபரங்களை இணைத்திருந்தால் அங்கு திரள்பவர்களுக்கு பெரும் செய்தி சொல்லப்பட்டிருக்கும்.

அதைவிட்டு வெறுமனே செருப்புக்களை காட்டுவதும், செருப்பு மாலை அணிவிப்பதும் பார்க்கும் பலரது கண்ணில் ஆர்பாட்டம் செய்பவர்களை கேலிக்குரியதாக்கும்!

இந்த மாதிரியான படங்கள், வடிவமைப்புக்களுக்கு பின்னால் உள்ளவர்களின் சிந்தனை வறட்சியை, பிற்போக்குத் தனத்தை, விவேகக் குறைபாட்டை துல்லியமாக காட்டுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]லண்டன் வரும் மகிந்த ராஜபக்சவை ஒரே அணியில் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்.- பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் அழைப்பு.camera_icon.jpeg[/size]

[size=4]UK_TAMIL_seithy0_27712.jpg[/size]

[size=4]லண்டனில் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள இலங்கைத் தீவின் இனவெறி அரச அதிபரான மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்து தமிழர்களின் ஒருமித்த பலத்தின் மூலம் பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டிய காலத்தை பிரித்தானியத் தமிழர்கள் எதிர்கொண்டு நிற்கின்றனர்.[/size]

[size=4]ஏற்கனவே பிரித்தானியத் தமிழர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்களால் லண்டன் வருகை தந்திருந்த மகிந்த தனது நிகழ்ச்சி நிரலை ரத்துச் செய்து உடனடியாகவே நாடு திரும்பியிருந்தார். இருப்பினும் மீண்டும் தமிழர்களுக்கு சவால் விடுகின்ற வகையில் லண்டன் வரும் மகிந்தவை ஒன்றுபட்ட தமிழர்களாக பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் எதிர்கொண்டு விரட்டியடிக்க வேண்டியது அவசியமாகிறது.[/size]

[size=4]இந்த வகையில் Aspen Way, இல் அமைந்துள்ள Billingsgate Fish Market முன்பாக இன்று 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.[/size]

[size=4]இலங்கைத் தீவில் தமிழர்களை அழித்து, தமிழர்களின் வாழ்விடங்களை பறித்து சிங்கள, பெளத்த மயமாக்கும் முயற்சியில் ஆட்சி நடாத்தி வரும் இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை ஒரே அணியில் தமிழர்கள் என்ற உணர்வோடு, விரட்டியடிப்போம். இதன் மூலம் பிரித்தானியாவில் இம் முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வருகை தரும் 150 நாட்டு தலைவர்களுக்கும், 1000 க்கும் மேற்பட்ட இராஜதந்திரிகளுக்கும், பத்தாயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், பல இலட்சம் மக்களுக்கும் தமிழர்களின் உள்ளக் குமுறலையும், தமிழர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளையும் எடுத்துச் சொல்லும் ஓர் அரிய வாய்ப்பாகவும் அமையும்.[/size]

[size=4]இது போன்றதொரு அரிய சந்தர்ப்பம் எமக்கு இனி எப்போது கிடைக்கும் என்பது தெரியாது. எனவே இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2009 இல் எவ்வாறு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் கூடி போராட்டங்களை நடத்தினோமோ அதே போன்று பெருமளவில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு இப் போராட்டத்தை நடத்த வேண்டியது முக்கியமாகிறது.[/size]

[size=4]இப் போராட்டமானது பிரித்தானிய அரசிற்கு எதிரானதாகவோ, ஒலிம்பிக் நிகழ்வுகளை குழப்பும் நோக்கம் கொண்டதாகவோ, அன்றி ஒலிம்பிக்கின் புனித நோக்கத்தை புரிந்து கொள்ளாதவராகவும், மனித நேயத்தை மதிக்கத் தெரியாதவராகவும் விளங்கும் மகிந்த ராஜபக்ச இவ் விழாவில் கலந்துகொள்ள அருகதையற்றவர் என்பதை எடுத்துணர்த்தும் போராட்டமாகவே தமிழர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.[/size]

[size=4]

UK_TAMIL_seithy_27712.jpg[/size]

[size=4]"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

ஐக்கிய இராட்சியம்[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=64163&category=TamilNews&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.