Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"(அறிவியல் தொடர் )- ராஜ்சிவா -16

Featured Replies

Photo%201.jpg

இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றாக உற்றுப் பாருங்கள். தரையில் விரிக்கப்படும் ஒரு கம்பளம் (Carpet) என்று இதை நீங்கள் நினைத்தால், இனி நான் எழுதப் போவதை நிச்சயம் படிக்க வேண்டிய ஒருவராக நீங்கள் இருப்பீர்கள். கம்பளம் போல, அச்சு அசலாக இருக்கும் இது கம்பளமே அல்ல. 'சரி, கம்பளம் இல்லை. அப்படியென்றால் காகிதம் ஒன்றில் வரையப்பட்ட ஒரு சித்திரம்' என்று மறுபடி நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தாலும், நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள்.

கம்பளமும் இல்லை. காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் இல்லை. அப்படியென்றால் இது என்ன? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிய ஆய்வுடன்தான், நம் பயணம் இந்தத் தொடரில் ஆரம்பமாகப் போகின்றது. இந்தத் தொடர், நான் இதற்கு முன்னர் எழுதிய 'மாயா மக்கள்' பற்றிய தொடரைப் போல, மர்மங்களை (Mystery) உள்ளடக்கிய ஒன்றாகவே இருக்கும். அதனால் மீண்டும் மிஸ்டரி என்பது பற்றி ஒரு சிறிய விளக்கத்தை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். 

'மிஸ்டரி' என்பது இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு நாணயம் போன்றது. அதன் ஒரு பக்கம், அறிவியலால் விளக்க முடியாத மர்ம முடிச்சுகளைக் கொண்டது. அடுத்த பக்கம், 'சே! இதெல்லாம் ஏமாற்று வேலை. இப்படி எதுவும் இல்லை' என்ற மறுதலிப்பைக் கொண்டது. எப்போதும் இந்த இரு பக்கங்களும் இல்லாமல், சரி சமமாக நிற்கும் நிலைக்குத்து நிலையில் இந்த நாணயம் நிற்பதே இல்லை. கடவுளை நம்புபவர்கள் எப்படி அதில் நம்பிக்கையுடன் இருப்பார்களோ, அப்படி ஒரு பக்கத்தினரும், கடவுளை மறுப்பவர்கள் எப்படி வன்மையாக மறுப்பார்களோ, அப்படி அடுத்தவர்களும் இருப்பார்கள். இப்படியான தன்மையுடைய மிஸ்டரி சம்பவங்களையே நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது. இனி தொடருக்குப் போகலாமா....?

மேலே இருக்கும் படத்தில் காணப்படும் சித்திரம் நிச்சயமாகக் கம்பளம் கிடையாது. அது காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் கிடையாது. ஆனால் அது ஒரு வரையப்பட்ட சித்திரமேதான். எங்கே? எப்படி? யாரால்? அது வரையப்பட்டது என்பதுதான் இங்கு நம் விழிகளை விரியச் செய்யப் போகும் ஆச்சரியமாக இருக்கப் போகிறது. அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னர், தென்மேற்கு இங்கிலாந்தில் (South West England) அமைந்துள்ள 'வைல்ட்ஷையர்' (Wiltshire) என்னுமிடத்தில் வசிக்கும் 'டோனி ஹ்யூஜெஸ்' (Tony Huges) என்னும் விமானிக்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

Photo%202.jpg 

டோனி ஹ்யூஜெஸ் என்பவர் 'மிக இலகு விமானம்' (Microlight flight) ஒன்றின் மூலம், வைல்ட்ஷயரில் உள்ள வயல் நிலங்களுக்கு மேலாக விமானத்தில், ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்குப் பறந்து சென்றார். இப்படி வயல் வெளிகளின் மேலாகத் தினமும் பறந்து செல்வது அவரின் வழக்கங்களில் ஒன்று. மறு கோடிக்குப் பறந்து சென்ற டோனி, விமானத்தைத் திருப்பி, வந்த இடத்துக்கே செலுத்திக் கொண்டிருந்த போது, அவர் வயல்வெளியில் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. பத்து நிமிடங்களுக்கு முன்னர் அவர் அதே வயல்வெளியின் மேலாகப் பறந்து சென்றார். ஆனால் அதே இடத்துக்குத் திரும்பி வரும்போது அது காணப்பட்டது. "இது எப்படி சாத்தியம்?" என்று தன் வயர்லெஸ் சாதனத்தில் அலறினார். அவர் அந்த வயல்வெளியில் கண்டது என்ன தெரியுமா? மிகப் பிரமாண்டமான ஒரு சித்திரத்தை. அந்தச் சித்திரம் வயல்வெளியில் வட்டவடிவமாக வரையப்பட்டிருந்தது. எதனால் வரையப்பட்டிருந்தது என்று நினைக்கிறீர்கள்? அதுதான் இங்கு சொல்லப்படப் போகும் மர்மத்தின் ஆணிவேரே!

அந்தச் சித்திரம் வயல்வெளியில் செழித்து வளர்ந்த பயிர்களைச் சிதைக்காமல், நிலத்தில் அழுத்தி வரையப்பட்டிருந்தது. நிலத்தில் இருந்து பார்க்கும்போது என்னவென்றே தெரியாமல், வானத்தில் பறந்தால் மட்டுமே தெரியக் கூடிய வகையில் வரையப்பட்ட மிகப் பிரமாண்டமான சித்திரம் அது. டோனி ஹ்யூஜெஸினால் நம்பவே முடியவில்லை. பத்து நிமிடங்களில், அதுவும் பட்டப் பகலில் அதை யார் அப்படி வரைந்திருக்க முடியும்? சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு வாகனமோ, மனித நடமாட்டமோ காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பரந்து விரிந்த வயல்வெளிப் பிரதேசம். கோதுமைப் பயிர் எங்கும் பயிரிடப்பட்டு, செழித்து வளர்ந்த அறுவடைக்கான நேரம் அது. 

யார் வரைந்திருக்க முடியும்? இப்படி ஒரு பிரமாண்டமான சித்திரத்தை, 'வரைவது' என்று சொல்வதே தப்பு. யார் இப்படியான ஒன்றை உருவாக்கியிருக்க முடியும்? சரி, அப்படி உருவாக்கியிருந்தாலும் உருவாக்கியவர்கள் எங்கே? எப்படி மாயமாக மறைந்தார்கள்? விமானத்தில் பறந்தபடி எங்கு தேடியும் எவரையும் காணவில்லை. பத்து நிமிடங்களில் யாரும் அப்படி மறைந்து விட முடியாது. டோனி, தான் கண்டதை வயர்லெஸ் கருவி மூலமாக கன்ட்ரோல் அறையுடன் தொடர்பு கொண்டு கூறியதும், அலறியடித்து அனைவரும் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் எல்லாரையும் பிரமிப்பில் ஆழ்த்தி, மௌனமாக வயல்வெளியில் படுத்து இருந்தது அந்த வயல் சித்திரம். 'பயிர் வட்டம்' (Crop Circle) என்னும் பெயருடன் உலகையே இப்போது மிகப் பலமாக மிரட்டி வரும் மிஸ்டரியாக இந்தப் பயிர்ச் சித்திரங்கள் இருக்கின்றன. இந்தச் சித்திரங்களின் பிரமாண்டத்தை நீங்கள் அறிய வேண்டுமா....? அவை எவ்வளவு பெரியவை என்பது தெரிய வேண்டுமா? சரி கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்.

Photo%203.jpg

இதுவும் அதே வைல்ட்ஷையரில் உருவாக்கப்பட்ட ஒரு பயிர் வட்டம்தான். 

என்ன பார்த்தீர்களா? எவ்வளவு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். ஒரு காகிதத்தில் கூட இப்படி வரைவது மிகக் கஷ்டமாக இருக்கும் வேளையில், மிகத் துல்லியமாகப் பயிர்களால் இப்படி உருவாக்க முடியுமா? சரி, இதன் பிரமாண்டம் உங்களுக்குப் புரிகிறதா? புரியவில்லையா? அப்படியென்றால் அந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். மையத்துக்குச் சற்றுக் கீழே உள்ள வெள்ளைப் பகுதியில், இரண்டு சிறிய கருப்புப் புள்ளிகள் போலத் தெரிகிறதா? அந்தப் புள்ளிகள் என்ன தெரியுமா? அவை இரண்டும் மனிதர்கள். மனிதர்கள் இவ்வளவு சிறிய புள்ளிகளாகத் தெரிய வேண்டும் என்றால், அந்தச் சித்திரத்தின் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அத்துடன் மேலே கால் பகுதியாக தந்த கம்பளம் போன்ற அமைப்புள்ள சித்திரத்தின் முழுமையான வடிவத்தையும் கீழே தருகிறேன். அதையும் பாருங்கள். அதன் பிரமாண்டமும் தெரிய வேண்டும் அல்லவா? அப்படியே மையத்துக்கு நேராகக் கீழே இருக்கும் நான்கு இதழ்கள் கொண்ட பூ வடிவத்தைப் பாருங்கள். அதிலும் ஒரு கருப்புப் புள்ளி தெரியும். அதுவும் மனிதன் என்பது புரியும். 

"இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சித்திரம். இதை ஏதோ மர்மம் என்று சொல்லி எங்களை இவர் ஏமாற்றப் பார்க்கிறார்" என்று இப்போது நீங்கள் நினைக்கும் சாத்தியம் உண்டு. நீங்கள் அப்படி நினைக்கவும் வேண்டும். சந்தேகப்படுதல் என்பதுதான் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் திறவுகோலாக இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் நாம் இதை அறிவியல் சிந்தனையுடன் அணுகும்போது, அதன் மர்மங்கள் தொடர்ச்சியாக நீண்டு கொண்டு போகின்றது. அத்தோடு, நம்மை அது தாக்கவும் தொடங்குகின்றது. அந்தத் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் ஒரு கணத்தில் சோர்ந்து போய், நாம் அதை நம்ப வேண்டிய சூழலுக்குள்ளாவதுடன் அதன் சுழலுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்வோம். 

அப்படி நம்மைத் தாக்கப் போகும் அந்த மர்மங்கள்தான் என்ன? அவை உங்களுக்குத் தெரிய வேண்டுமல்லவா? தெரிந்தால் நீங்கள் எப்படியான உணர்வுக்கு உள்ளாவீர்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அப்படியான அதிர்ச்சிகள் அவை

அவற்றை அடுத்த பகுதியில்.......

http://www.uyirmmai.com

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

photo%201.jpg

செழித்து வளர்ந்த ஒரு வயல்வெளியைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் நடுவே நீங்கள் நிற்கும்போது, எங்கும் பசுமையாகப் பரவியிருக்கும் பயிர்களையே காண்பீர்கள். இடுப்பளவு பயிர் வளர்ந்திருக்கையில் சில மீட்டர் தூரத்திற்கு அப்பால், தரையில் இருக்கும் எதுவுமே உங்கள் கண்ணுக்குப் படமுடியாதவாறு எங்கும் வளர்ந்திருக்கும் பயிர். அந்த வயலில், ஒரு உதைபந்தாட்ட மைதானம் அளவுக்கு மிகப்பெரிய வட்ட வடிவச் சித்திரம் வரையப்பட்டிருப்பதாக நினைத்துப் பாருங்கள். உங்கள் கண்ணுக்கு அந்தச் சித்திரத்தின் முழுமை தெரிய வாய்ப்பே இல்லை என்பது புரியும். அப்படி அந்தச் சித்திரத்தின் முழுமையைப் பார்க்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும். நூறு மீட்டர் மேலே பறந்து சென்று பார்த்தால் தெரியக் கூடிய நிலையில், கண்களின் மதிப்பீடுகளை மட்டும் வைத்து, பிரமாண்டமான சித்திரங்கள் வயல்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  இதன் சாத்தியக்கூறுகளை யோசித்துப் பாருங்கள். பார்க்கவே முடியாத ஒன்றைத் தெளிவாக வரைவது என்பது சாத்தியம்தானா? ஆனால், உலகம் முழுவதும் 'க்ராப் சர்க்கிள்' (Crop Circle) என்ற பெயருடன், பயிர்களால் இப்படிப்பட்ட சித்திரங்கள் உருவாக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. வார்த்தைகளால் இதை நான் சொல்லும் போது, உங்களுக்குப் புரிவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறதல்லவா? ஒரு பயிர் வட்டத்தை நிலத்திலிருந்து இரண்டு மீட்டர் உயரத்திலும், பத்து மீட்டர் உயரத்திலும் இருந்து பார்த்தால் நமக்கு அந்தச் சித்திரங்கள் எப்படித் தெரிகிறது என்று பாருங்கள். இதையே நிலத்தின் மட்டத்தில் இருந்து பார்த்தால் எந்த அளவுக்குத் தெரியும் என்பதையும் யோசியுங்கள். அப்படிப்பட்ட பெரிய சித்திரங்களை எப்படி நிலத்தில் இருந்தபடி உருவாக்கியிருக்க முடியும்?

photo%202.jpg

photo%203.jpg

உருவாக்கப்பட்ட சித்திரங்கள் மிகச் சாதாரணமான சித்திரங்கள் என்றால் கூடக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அவை அனைத்தும் கணித மேதைகளால் வரையப்படும் மிகச் சிக்கலான கேத்திர கணித வரைவுகளுக்கு ஒப்பான சித்திரங்கள். ஒரு காகிதத்தில் அப்படி ஒரு சித்திரத்தை நாம் வரைய வேண்டுமென்றால், பல கணிப்பீடுகள் செய்து மட்டுமே வரைய முடியும். ஆனால் இவையெல்லாம் வயல் வெளிகளில், எந்த வித கணிப்புகளும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வாய் வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க முடியாத கணித வரைவுகள் அவை. இதைச் சுலபமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்தச் சித்திரங்களைப் பாருங்கள்.

photo%204.jpg

photo%205.jpg

ஒரு வட்டத்தின் நடுவே சிலந்திக் கூடு போன்ற அமைப்பில் பயிர்களால் வரையப்பட்ட ஒரு சித்திரம் இது. இந்தப் பயிர் வட்டத்தை வரைந்த விதமும், அதற்கான கணித விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஐந்து கோணங்களையுடைய நட்சத்திரங்கள் வரைந்து, அவற்றிற்கிடையே வட்டங்கள் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய சித்திரம் இது. ஆனால் அப்படி நட்சத்திரங்களோ, வட்டங்களோ வரையப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்ட காலம் 1994ம் ஆண்டு.

சாதாரணமாகக் காகிதத்தில் வரைவதற்கே பல மணி நேரங்கள் எடுக்கக் கூடிய இந்தச் சித்திரம், வயல் வெளிகளில் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றால் எப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றது தெரியுமா? பயிர்களை நிலத்தோடு மடித்தும், அழுத்தியும் எந்த ஒரு பயிரும் சேதப்படுத்தப்படாமல் உருவாக்கப்பட்டிருகின்றது. கணித அடிப்படையில் மிகவும் சிக்கல் வாய்ந்ததாக, இது போலப் பல சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உதாரணமாக இன்னுமொரு சித்திரத்தை விளக்கிவிட்டு, நான் மேலே சென்றால்தான், இந்த பயிர் வட்டங்களின் உண்மையான பரிமாணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். 

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள வைல்ட்ஷையரில், வூட்பெர்க் ஹில் என்னுமிடத்தில் (Woodberg Hill-Wildshire) 2000 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயிர்வட்டம் ஒன்றின் பெயர் சூரியகாந்தி (Sunflower). இந்தச் சூரியகாந்திப் பயிர் வட்டத்தில் 308 முக்கோணங்கள் உள்ளன. இவை 44 வளைவுக் கோடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் சிக்கலான அமைப்பையுடைய இந்தச் சித்திரத்தைக் கணித முறையில் எப்படி வரைவது என்பதைப் பாருங்கள். அதுவே பயிர்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தையும் பாருங்கள். நம்பவே முடியாத ஆச்சரியமாக, நிஜத்தில் எம் கண்முன்னே பரந்து விரிந்து காணப்படுகிறது. இப்படிப்பட்ட சித்திரங்களைப் பயிர்களினால் எப்படி வரைய முடியும்? எத்தனை நபர்கள் இதை உருவாக்கத் தேவைப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை நாட்கள் இவற்றிற்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும்? அனைத்துக் கேள்விகளையும் தன்னுள்ளே அடக்கி அமைதியாய் வயல்வெளியில் படுத்திருக்கிறது இது. 

photo%206.jpg

photo%207.jpg

ஒரு அளவுக்குப் பயிர் வட்டங்களின் பிரமாண்டங்களையும், பரிமாணங்களையும் நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே, பயிர் வட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டிய இடத்திற்கு இப்போது வந்திருக்கிறேன். பயிர் வட்டங்களின் வரலாறு முதன் முதலாக 1678 ம் ஆண்டு தென்கிழக்கு இங்கிலாந்தில் அமைந்த ஹார்ட்ஃபோட்ஷையர் (Hartfordshire) என்னுமிடத்தில் பிசாசு ஒன்றினால், ஒரு விவசாயிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது என்ற புராதனக் கதையுடன் ஆரம்பமாகிறது.

photo%208.jpg

இந்தப் பிசாசுக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருந்தது அல்லது இல்லை என்ற நிலையில், 1920ம் ஆண்டளவில் மீண்டும் பயிர் வட்டங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனால் 1980 களிலும் 90 களிலும்தான் சிக்கலான வடிவங்களுடன் இவை அதிகமாக காணப்படத் தொடங்கின. இந்தக் கால கட்டங்களிலிருந்து தொடர்ச்சியாய் ஒவ்வொருவருடமும் 300 பயிர் வட்டங்கள் உலகம் முழுவதும் தோன்ற ஆரம்பித்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மன், போலந்து, பெல்ஜியம், இத்தாலி, சுவீடன், நார்வே, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இந்தப் பயிர் வட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால், குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு அதிகமான பயிர் வட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை உலகம் முழுவதுமாக பத்தாயிரத்துக்கும் அதிகமானவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை உருவாவதில் ஒரு ஆச்சரியமான விசயம் ஒன்று உண்டு. எவ்வளவு சிக்கலான பயிர் வட்டங்களாக இருந்தாலும் கூட, நான்கு மணி நேரங்களுக்குள் உருவாக்கப்பட்டுவிடுகின்றன. சில நிமிடங்களில் உருவாக்கப்பட்ட வட்டங்களும் உண்டு. 80 வீதத்திற்கு அதிகமானவை இரவிலேயே உருவாக்கப்படுகின்றன என்றாலும், பகலிலும் பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழுவதை நாம் தடுக்க முடியாது. "உண்மையில் இந்தப் பயிர் வட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன?" என்பதே அந்தக் கேள்வி. அதாவது, இவை மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவா? இல்லை, மனிதன் தாண்டிய வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமே இந்தக் கேள்வியில் உள்ளடங்கியிருக்கிறது. மனிதனால்தான் மட்டும் இவை உருவாக்கப்படுகின்றன என்று இருக்கும் பட்சத்தில் நான் இந்தத் தொடரை எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்கப் போவதில்லை. மனிதன் தாண்டி வேறு ஒரு சக்தி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்னும் சந்தேகம்தான், இவை இவ்வளவு பரவலாக, உலகப் பிரசித்தி பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது. இந்தப் பயிர் வட்டங்களை ஆரய்வதற்கென்றே உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்கள் (Crop Circle Researchers) என்று அழைக்கிறார்கள். அவர்களிடம் "இந்த வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவா?" என்று கேளிவியைக் கேட்டால், "ஆம்" என்றே பதிலளிக்கின்றார்கள். நமது அடுத்த கேள்வியாக, "இவை மனிதர்களால் மட்டும் உருவாக்கப்படுகின்றனவா?" என்று கேட்டால், "இல்லை" என்று பதிலளிக்கிறார்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், "இந்த வட்டங்களில் பலவற்றை மனிதர்கள் செய்திருப்பது என்னவோ உண்மை. ஆனால் இவற்றில் பல, மனிதர்களால் செய்யப்படாதவை" என்பதே.

மனிதர்களால் உருவாக்கப்படாத பட்சத்தில், இவற்றை யார் செய்திருக்க முடியும்? என்ற கேள்விக்கு யாரும் இதுவரை தெளிவான பதிலைச் சொல்லி விடவில்லை. ஆனால், யார் செய்திருக்கக் கூடும் என்பதை நம்மால் இலகுவாகக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில், ஆதாரங்களை அள்ளித் தருகிறார்கள் அவர்கள். நேரடியாகப் பதிலைத் தருவதால்  உருவாக்கியவர்களைக் காட்டியே தீர வேண்டிய நிலை அறிவியலில் இருப்பதால். யாரும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். இந்த நிலையில்தான் துணிச்சலாக, இதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படம் ஒன்றை எடுத்து ஒருவர் வெளியிட்டார். அவர் படம் வெளியிட்டது என்பது பெரிய விசயமாக இருந்தாலும், அவரை இங்கு நான் குறிப்பிட விரும்புவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. அந்தக் காரணம் என்ன தெரியுமா? அந்தப் படத்தை எடுத்தவர் ஒரு தென்னிந்தியர். படத்தை எடுத்தது மட்டுமில்லாமல், அதை இயக்கி நடித்தும் இருக்கிறார். அவர் பெயர் 'நைட் சியாமளன்' (M. Knight Shyamalan). ஆனால் மனோஜ் சியாமளன் என்றே பலரால் அழைக்கப்படுகிறார். அருமை நண்பர் மனோஜை ஞாபகப்படுத்துவதால்  நானும் அவரை மனோஜ் சியாமளன் என்றே அழைக்க விரும்புகிறேன். மனோஜ் சியாமளனின் அப்பா ஒரு மலையாளி, அம்மா பாண்டிச்சேரியைச் சேர்ந்த பெண்.  

photo%209.jpg

'சிக்ஸ்த் சென்ஸ்' (Sixth Sence), ‘அன்பிரேகபிள்' ( Unbreakable) என்று உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்த இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் மனோஜ் சியாமளன். இந்த இரண்டு படங்களுமே அமானுஷ்ய சக்திகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டன. சொல்லப் போனால் அவரின் அனைத்துப் படங்களும் அமானுஷ்ய சக்திகளையும், மிஸ்டரிகளையும் மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த வெற்றிப் படங்களுக்குப் பின்னர் 2002 ம் ஆண்டு மனோஜ் சியாமளன் எடுத்த படம்தான் 'சைன்ஸ்' (Signs). இந்தப் படம் அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில், சோளப் பயிர்கள் வளர்ந்த பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில், இந்தப் பயிர் வட்டங்களை யார் உருவாக்குகிறார்கள் என்ற கேள்விக்கான விடையையும் சியாமளன் அளித்துள்ளார். அவர்கள் யார் தெரியுமா? ஏலியன்கள். விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்த வேற்றுக் கிரகவாசிகளே இந்தப் பயிர் வட்டங்களை உருவாக்குகிறார்கள் என்று கதை அமைத்திருந்தார் மனோஜ் சியாமளன். 

photo%2010.jpg

உண்மையில் பயிர் வட்டங்கள் உருவாவதில் என்னதான் நடக்கிறது? அதுவும் குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டும் ஏன் 80 விதமான பயிர் வட்டங்கள் உருவாகின்றன? இவை மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றனவா? இல்லை ஏலியன்கள் அல்லது மனிதனல்லாத வேறு ஏதும் ஒரு சக்திதான் இதை உருவாக்குகின்றதா? இவையெல்லாம் நம்முன் எழும் கேள்விகளாக இப்போது இருக்கின்றன. இந்த உண்மைகளை ஒரு அரசு நினைத்தால், அடுத்த நிமிடம் கண்டு பிடித்து மக்களுக்கு அதன் உண்மையைத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். ஆனால் இந்த உண்மைகள் மக்களுக்குச் சொல்லப்படாமல் ஒரு பதட்டத்திலேயே மக்கள் ஏன் வைக்கப்பட்டிருக்கின்றனர்? சொல்லப் போனால், இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? இவை பற்றி விளக்கமாக இனி வரும் பகுதிகளில் நாம் தெளிவாகப் பார்க்கலாம். 

பிற்குறிப்பு: "கடவுளையே நம்ப வேண்டுமானால் ஆதாரங்கள் காட்டு. இல்லையென்றால் விலகிப் போ! நமக்கு வேலை நிறைய இருக்கிறது" என்று சொல்லக்கூடிய விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த வேளையில் ஏலியன் பூமிக்கு வந்திருக்கிறது என்று சொல்வதை எப்படி ஏற்பது ? இது எல்லாம் கொஞ்சம் ஓவர் என்றே நீங்கள் நினைக்கலாம் நானும் இங்கு ஏலியன்கள்தான் இவற்றை உருவாக்கின என்று சொல்லி உங்களை மர்மமான ஒரு நிலையில் வைத்திருக்க விரும்பவில்லைஇந்த Crop Circle பற்றி நீங்கள் இணையத்தில் பார்த்தால் இவை மனிதனாலேயே செய்யப்பட்டது என்று ஒரு பகுதியும்]இல்லை இது மனிதனால் செய்யப்படவில்லைஎன்று மற்றொரு பகுதியும் பிரிந்து விளக்கங்களைத் தமக்கு ஏற்றவாறு அளித்துக் கொண்டிருப்பார்கள் இதில் நீங்கள் எதை வாசிக்கிறீர்களோஅதுவே உண்மை என்றநிலைப்பாட்டையும் நீங்கள் எடுக்கும் சூழ்நிலை வரலாம் ஆனால் நிஜம் என்பது வேறாக இருக்கலாம் ஆகவே நிதானமாக இந்தப் பயிர் வட்டங்கள் பற்றிய அனைத்து உண்மைகளையும் எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன். இறுதியில் நாம் அனைவரும் சேர்ந்தே ஒரு முடிவுக்கும் வந்துவிடலாம்

http://www.uyirmmai.com

  • தொடங்கியவர்

[size=5]

photo%201.jpg[/size]

[size=5]நம் ஊர்களிலுள்ள சில பிரபலமான கோவில்களில் மட்டும் மக்கள் கூட்டம் குவிந்தபடி இருக்க, பல கோவில்கள் ஆள் அரவமற்று அமைதியுடன் இருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில், எங்கோ ஒரு கோவிலில் திடீரென, 'சாமி சிலை கண்களைத் திறந்தது' என்றோ, 'கண்ணீர் வடித்தது' என்றோ தகவல் வரும். அப்புறம் யாரும் கிட்ட நெருங்க முடியாதபடி அந்தக் கோவிலில் கூட்டம் அலையடிக்கும். படிப்படியாக அந்தக் கோவிலுள்ள கிராமத்தை நோக்கிப் பத்து, நூறு, பத்தாயிரம், இலட்சம் என மக்களும், வியாபாரிகளும், மீடியாக்களும் குவிய ஆரம்பிக்கும். இதைச் சரியாக நாம் உற்று நோக்கினால், அங்கு நடந்தது ஒரு அதிசயம் என்பதை விட, அந்த அதிசயத்தால் ஏற்படுத்தப்பட்ட கவனயீர்ப்பே முக்கிய பங்களிப்பது தெரிய வரும். அங்கே நடந்ததில் உள்ள உண்மைத்தன்மையை விட, அதில் உள்ள அசாதாரண நிகழ்வே நம்மைக் கவர்ந்திழுப்பது புரியும். அன்றாட வாழ்க்கையில் அலுத்துப் போய் இருக்கும் நமக்கு, 'மாற்றமாக ஏதும் நடை பெறாதா?' என்று உள்மனம் என்றும் ஏங்கிக் கொண்டே இருக்கிறது. சாதாரணமற்ற அபூர்வமான சம்பவங்களை அது எப்போதும் விரும்புகிறது. அதிகம் ஏன்? சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வர இருந்த சுனாமியினால் ஏற்பட்டிருக்கக் கூடிய அழிவுகளைத் தாண்டி, அது வரவில்லையே என்ற குரூர ஏமாற்றம் நமக்கு இருந்ததை, நாம் மறுக்க முடியாது. இதற்கெல்லாம் காரணம், நம் மனம் எப்போதும் அசாதாரண மாற்றங்களை விரும்புவதுதான். அதிசயங்களும், மர்மங்களும் அதற்கு மிகவும் விருப்பமான ஒன்றாகிவிடுகிறது. 

இப்படியானதொரு அதிசயமாகவே பயிர் வட்டங்களும் உலகத்தில் வலம் வர ஆரம்பித்தன. வழமை போல, அவற்றை ஒரு மர்மமாகப் பார்ப்பதற்கே மக்கள் விரும்பினார்கள். ஆரம்பத்தில் இந்தப் பயிர் வட்டங்கள், அவை தோன்றிய ஊர்களில் மட்டும் அதிசயமாகப் பார்க்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக உலக அளவில் அவை பிரபலமாகியபோது, மேலே நான் சொல்லிய நம் ஊர்க் கோவில்கள் போல, உல்லாசப் பிரயாணிகளும், பார்வையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், மீடியாக்களும் அவற்றை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தின் பின்னர் ஒவ்வொரு வருடங்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவழைக்கும் காட்சிப் பொருளாக அவை ஆகிப் போயின. ஆனாலும் அனைவரிடமும் இறுதியாக எஞ்சி நின்றவை இரண்டே இரண்டு கேள்விகள்தான். "பயிர் வட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன?", "எதற்காக உருவாக்கப்படுகின்றன?" என்பவையே அந்த இரண்டு கேள்விகள். இதற்குப் பதில் சொல்லும் வகையில் ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார் நம்மூர்க்காரரான மனோஜ் சியாமளன். 

மனோஜ் சியாமளன், ஏலியன்கள்தான் இந்தப் பயிர் வட்டங்களை உருவாக்கினர் என்று படம் எடுத்ததற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல், எழுந்தமானத்துக்கு ஏலியனை அவர் இந்த விசயத்துக்குள் புகுத்திவிடவில்லை. ஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக் கிரகவாசிகள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கே துல்லியமான விடைகள் கிடைக்காத சூழ்நிலையில், பயிர் வட்டங்களுடன் துணிச்சலாக ஏலியன்களை அவர் இணைத்தார் என்றால், அதற்கு மிகப் பெரியதொரு காரணம் இருக்கத்தான் செய்தது.

1970 களில் இலகுவான ஒரே ஒரு வட்ட அமைப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பயிர் வட்டங்கள், படிப்படியாக பல வட்டங்களாக மாறி, பின்னர் சித்திரங்கள் போன்ற அழகான அமைப்புகளாக மாறி, பின்னர் சிக்கலான சித்திரங்களாக மாறி, பின்னர் உயர் கணித வரைவுகளாக மாறின.[/size]

[size=5]

photo%202.jpg[/size]

[size=5]இலகுவான வட்ட அமைப்புப் பயிர் வட்டம்[/size]

[size=5]

photo%203.jpg[/size]

[size=5]பலவட்ட அமைப்புப் பயிர் வட்டம்[/size]

[size=5]

photo%204.jpg[/size]

[size=5]சித்திர வகைப் பயிர் வட்டம்[/size]

[size=5]

photo%205.jpg[/size]

[size=5]உயர் கணித வரைவுப் பயிர் வட்டம் [/size]

[size=5]பயிர் வட்டங்கள் வடிவ அமைப்புகளில் மாற்றங்களுடனும், அவற்றின் எண்ணிக்கையில் அதிகரிப்பையும் அடைந்து கொண்டிருக்கும்போது, உலகம் முழுவதும் இருந்து ஆராய்ச்சியாளர்களை அவை கவரத் தொடங்கின.   அவற்றை நோக்கி அவர்கள் ஓடிவரத் தொடங்கினர். ஒவ்வொன்றாக அந்தப் பயிர் வட்டங்கள் அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அவர்கள் ஆராயத் தொடங்கினர். அப்போது அவர்களுக்குக் கிடைத்த சில தகவல்கள், "என்ன முடிவுக்கு வருவது?" என்ற குழப்பத்தையே  ஏற்படுத்தின. எண்பதுக்கும் அதிகமான, வெவ்வேறு இடங்களில் வசிக்கும், மிகவும் கண்ணியமான நபர்கள் மூலமாகக் கிடைத்த ஒரு தகவல் அவர்களைத் தடுமாற வைத்தது. சொல்லி வைத்தது போல அந்த எண்பது சாட்சிகளும் கூறியது என்ன தெரியுமா? தங்கள் கண்களின் முன்னாலேயே, ஒரு உதைபந்து அளவுள்ள வெளிச்சப் பந்துகள் (Balls of Light) பயிர் வட்டங்களின் மேலே பறந்து திரிவதைக் கண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் முன்னாலேயே அவை பயிர் வட்டங்களை உருவாக்கியதைக் கண்ணால் கண்டதாக அடித்துச் சத்தியம் செய்கிறார்கள். அவற்றை வீடியோக் காமெரா மூலமாகப் படம் பிடித்தும் வைத்த்திருக்கின்றனர். [/size]

[size=5]

photo%206.jpg[/size]

[size=5]இதை வாசித்ததும், நீங்கள் வாய்விட்டுச் சிரிப்பது எனக்குப் புரிகிறது. "இது போன்ற எத்தனையோ 'கிராஃபிக்ஸ்' வேலைகளை நாம் கண்டு விட்டோம்" என்று நீங்கள் நினைப்பதும் புரிகிறது. சமீபத்தில் வெளியான ஒரு துறவியின் வீடியோவில், அப்பட்டமாக யாரென்று கண்டு பிடிக்கக் கூடிய வகையில் தெளிவாகப் படங்கள் இருந்தபோதும், 'அவை கிராஃபிக்ஸ் வேலை' என்று அந்தத் துறவி அடித்துச் சொல்லும் அளவிற்கு, கிராஃபிக்ஸ் பற்றிய அறிவு நமக்கு வளர்ந்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனே கணினியில் உருவாக்கக் கூடிய ஒளிப் புள்ளிகளைக் காட்டி, ஏலியன் என்று நான் சொல்லும் போது, நீங்கள் சிரிப்பதில் ஒன்றும் தப்பே கிடையாது. பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்களும் அப்படித்தான் முதலில் நினைத்தார்கள். ஆனால் அந்த விசயத்தில் அவர்களுக்கு நெருடியது ஒன்றுதான். "அது எப்படி, வெவ்வேறு இடங்களில், ஒருவரை ஒருவர் சந்தித்தே இருக்காத வேறு வேறு மனிதர்கள், வேறு வேறு வயதையுடையவர்கள் ஒரே மாதிரியான பொய்யை இட்டுக்கட்டிக் கூற முடியும்? அதுவும் வீடியோக்களாகக் கூட எடுத்திருக்கின்றனர். அனைவரும் கிராஃபிக்ஸ் செய்தார்களா". அனைத்து வீடியோக்களையும் ஆராய்ந்த போது, அவற்றில் குறிப்பிட்ட சில வீடியோக்கள் தவிர்ந்து, வேறு எவையுமே எந்த கிராஃபிக்ஸும் செய்யப்படாதவையாகவே இருந்தன. 

இந்த வெளிச்சப் பந்துகள் விசயத்தில் ஊரே கூடி நின்று பொய் சொல்கின்றதோ எனச் சந்தேகப்பட்ட மீடியாவினர் சிலர், அவை தோன்றுவது உண்மைதானா என்று ஆராயத் தங்கள் வீடியோக் கேமராக்களை ஆயத்தம் செய்து இரவினில் காத்திருந்தார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வெளிச்சப் பந்துகள் தோன்றி அலையத் தொடங்கின. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த வெளிச்சப் பந்துகள் இரவு, பகல் இரண்டு நேரங்களிலும் தோன்றுவதுதான். அதன் உச்ச கட்டமாக, அந்த வெளிச்சப் பந்துகள் தோன்றியதை அறிந்த இராணுவ ஹெலிகாப்டர்கள் அவற்றை நோக்கிப் பறந்து சென்று அணுகியபோது, அவை மறைந்து போனதும் நடந்தது. இந்த ஹெலிகாப்டர் சம்பவம் ஒரு முறையல்ல, பல முறைகள் நடந்தன. இவற்றையும் கூட வீடியோவாக மீடியாவினர் படமெடுத்திருக்கின்றனர். 

"சேச்சே! எல்லாமே பொய். இந்த பயிர் வட்டங்களே மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றன. வெளிச்சப் பந்துகள் உருவாவது உண்மைதான். ஆனால் அவை காற்றில் பறக்கும் பூக்கள் அல்லது வேறு பொருட்கள்" என்று அதை மறுப்பவர்களின் குரல்களும் இடையே ஒலிக்கத்தான் செய்கின்றன. மறுப்பவர்களும் தங்கள் சார்பாக, பலமான சாட்சியங்களை முன் வைத்து அவற்றைப் பொய் என்று மறுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நடந்து கொண்டிருப்பவற்றையெல்லாம் என்ன வகையில் எடுத்துக் கொள்வது என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்த போதுதான், உலகமே பயிர் வட்டங்கள் சார்பாக அதிர்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்தேறியது. அதுவரை பயிர் வட்டங்களை ஒரு பேச்சுக்குக் கூடக் கவனத்தில் எடுக்காத மீடியாக்கள் உட்பட, உலகில் உள்ள அனைத்து மீடியாக்களும் அலறியடித்து அந்த இடம் நோக்கி ஓடி வந்தன. அந்த இடம் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடமாக இருந்தது. 

தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் ஷில்போல்டன் (Chilbolton) என்னும் இடத்தில், இங்கிலாந்து அரசுக்குச் சொந்தமான 'ரேடியோ டெலஸ்கோப்' (Radio Telescope) அமைக்கப்பட்டிருக்கிறது. ரேடியோ டெலஸ்கோப் அமைந்த இடத்துக்கு மிக அருகில் 13.08.2000 அன்று ஒரு பயிர் வட்டச் சித்திரம் உருவாக்கப்பட்டது. சரியாக ஒரு வருடத்தின் பின்னர் 13.08.2001 அன்று மீண்டும் ஒரு சித்திரம் அதே இடத்தில் தோன்றியது. அவையிரண்டும் வழமை போல இல்லாமல் வித்தியாசமான ஒரு பயிர் வட்டமாக இருந்தது ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும், அவை என்ன அர்த்தங்களைச் குறிக்கின்றன என்று யாருக்கும் புரியவில்லை. ஆனால் சரியாக ஐந்து நாட்களின் பின்னர் (18.08.2001) அந்தச் சித்திரத்தின் அருகே இன்னுமொரு சித்திரம் உருவாக்கப்பட்டது. அந்தப் பிரமாண்டமான பயிர் வட்டச் சித்திரத்தைப் பார்த்துத்தான் உலகமே பதட்டப்பட்டது. அது பயிர் வட்டம் என்று சொல்லப்படும் வட்ட வகையைச் சாராமல், வேறு ஒரு வடிவத்தில் இருந்தது. அந்த வடிவம் என்ன தெரியுமா? ஒரு மனிதனின் முகம். காகிதத்தில் கணினி மூலமாக வரையப்படும் ஒரு மனிதனின் முகம் எப்படி இருக்குமோ, அப்படிப் பயிர்களால் அந்த முகம் உருவாக்கப்பட்டிருந்தது.[/size]

[size=5]

photo%207.jpg[/size]

[size=5]

photo%208.jpg[/size]

[size=5]

photo%209.jpg[/size]

[size=5]பயிர் வட்டங்கள் எல்லாம் ஏதோ வெறுமனே வரையப்படுகின்றன என நம்பியிருந்தவர்களுக்கு, "இல்லை, அவை ஏதோ செய்திகளை நமக்குச் சொல்கின்றன" என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது. இப்படியெல்லாம் கூட பயிர்களால் வரைய முடியுமா? என்ற ஆச்சரியம் பிடித்து நம்மை உலுக்கியது. அதன் சாத்தியம் இனம் புரியாத ஒரு பயத்தை உலகிற்கு உருவாக்கத் தொடங்கியது.

பயிர் வட்டங்களை மறுப்பவர்கள் சொல்வது போல அவையும் மனிதர்களின் விளையாட்டுகளில் ஒன்றுதானா அல்லது உண்மையில் அவை ஏலியன்களால் உருவாக்கப்பட்டவையா? அவை நமக்கு எதையாவது சொல்கின்றனவா? இவற்றை விபரமாக அடுத்த தொடரில் நாம் பார்க்கலாம்.[/size]

http://www.uyirmmai.com

  • தொடங்கியவர்

Photo%201.jpg

ஷில்போல்டனில் மனித முகத்துடன் பயிர் வட்டம் உருவாகியது பற்றிச் சொல்வதற்கு முன்னர், நான் சில விசயங்களை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லி விடவேண்டும். இனி நீங்கள் தெரிந்துகொள்ளப் போகும் ஒவ்வொன்றிலும், "இதையெல்லாம் நாம் எப்படி நம்புவது?" என்ற அவநம்பிக்கையான கேள்வியே உங்களிடம் தோன்றிக் கொண்டிருக்கும். உங்களுக்கும், உலகில் உள்ள பலருக்கும், அதிகம் ஏன், எனக்கும் கூட இவை நம்ப முடியாதவைதான். நம்ப வேண்டிய அளவுக்கு ஆதாரங்களையும், சாட்சிகளையும் முன் வைத்தாலும், மனம் ஏனோ நம்ப மறுக்கிறது. காரணம், இவற்றை நம்பினால் நாம் எடுக்கும் முடிவு ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அந்த முடிவு, 'ஏலியன்கள் பூமிக்கு வந்து போகின்றன' என்பதுதான். ஏலியன் பற்றிய சந்தேகம் நம்மில் அனைவருக்கும் இருந்தாலும், முழுமையாக அதை நம்மால் நம்ப முடிவதில்லை. நான் எழுதுவதை நீங்கள் வாசித்து விட்டு, ஏலியன்கள் இருப்பதாக நான் சொல்ல முயற்சிக்கிறேன் என்று தப்பர்த்தம் பண்ணிவிட வேண்டாம். அது என் நோக்கமும் இல்லை. ஆனால் ஏலியன்கள் பற்றிய சாத்தியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். அத்துடன், பயிர் வட்டங்களை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும், இல்லை அது வேறு ஒரு சக்தியினால்தான் உருவாக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்களையும் ஒன்றுவிடாமல் சொல்வேன். இறுதியில் நம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முடிவுக்கு நிச்சயம் நாம் வரமுடியும்.

 

Photo%202.jpg

ஷில்போல்டன் ரேடியோ டெலஸ்கோப் அமைக்கப்பட்ட இடத்துக்கு மிக அருகில், 2000 ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி ஒரு பயிர் வட்டம் உருவாக்கப்பட்டது. அது 'ஃப்ராக்டல்' (Fractal) என்று சொல்லப்படும் ஒருவித வடிவமைப்பைக் கொண்டது. கணிதத்தில் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்ட ஒரு வடிவம் இது. ஒரு குறிப்பிட்ட வடிவம் பல அடுக்குகளாகப் பெருகி உருவாகும் சித்திரத்தை 'ஃப்ராக்டல் வரைவு' (Fractal art) என்று சொல்வார்கள். இதில் 'ஜூலியா செட்' (Julia Set Fractal), மாண்டல்புரோட் செட்' (Mandelbrot Set Fractal) என வகைகள் இருக்கின்றன. இவை பற்றி நான் ஏன் இங்கு இவ்வளவு விளக்கமாகச் சொல்கிறேன் என்றால், பயிர் வட்டங்களில் பல, இந்த ஃப்ராக்டல் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருப்பதுதான். கணனிகளினால் உருவாக்கக் கூடிய இந்த ஃப்ராக்டல் வடிவங்களை, பயிர்களினால் உருவாக்குவதென்பது மிகவும் ஆச்சரியமான, சாத்தியமற்ற ஒரு விசயம். அப்படி உருவாக்க முடியுமென்றாலும் அதற்குப் பல பேர் சேர்ந்து, பல நாட்கள் உழைக்க வேண்டும். ஆனால் ஒரே இரவில், நான்கு மணித்தியால நேரங்களுக்குள் இவை உருவாக்கப்படுகின்றன. இது போன்ற ஒரு ஃப்ராக்டல் வடிவப் பயிர் வட்டம்தான் ஷில்போல்டனில் உருவானது. 

photo%203.jpg

இந்த ஃப்ராக்டல் பயிர் வட்டம் உருவானபோது, வழமை போல உருவாக்கப்பட்ட ஒரு பயிர் வட்டமாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அப்படி ஒரு வடிவத்தில், பயிர் வட்டம் அங்கு ஏன் அமைக்கப்பட்டது என்ற கேள்விக்கான விடை, சரியாக ஒரு வருடத்தில் கிடைத்தது. 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி இரவு மனித முகத்துடனும், அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் இன்னுமொரு சிக்கலான வடிவத்துடனும் இரண்டு பயிர் வட்டங்கள், அதே இடத்தில் உருவாக்கப்பட்டன.

 

photo%204.jpg

வழமையான பயிர் வட்டங்கள் போல இவை காணப்படவில்லை. இரண்டுமே செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு மனிதனின் முகம் கணனியில், ஃபோட்டோவாக வரையப்படும் போது, எப்படிக் கறுப்பு, வெள்ளை ஒளி மாற்றங்கள் (Shading) இருக்குமோ அப்படி அந்த மனித முகம் அமைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், முப்பரிமான அமைப்புடன் (3D) அந்த முகம் உருவாக்கப்பட்டிருந்தது. முப்பரிமாணத் தோற்றம் உருவாவதற்காக, பயிர்கள் சிறியதும், பெரியதுமாகவும், அடர்த்தி கூடியதும், அடர்த்தி குறைந்ததுமாகவும் வட்டவடிவப் புள்ளிகள் போல (Pixel)  மிக நேர்த்தியுடன் அழுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தன. ஒரே இரவுக்குள் அது உருவாக்கப்பட்டது என்று யார் சொன்னாலும் நம்ப முடியாத சித்திரம் அது. 

photo%205.jpg

photo%206.jpg

photo%207.jpg

என்று சிந்தித்த வேளையில், இதே போன்ற முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற நினைப்பு பலருக்குத் தோன்றத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்துக்கு 1976 இல் சென்ற வைகிங் (Viking) விண்கலம் பல படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பியது. அந்தப் படங்களில் மனித முகம் ஒன்று செவ்வாயின் நிலப் பகுதியில் பதிந்திருப்பது போன்ற ஒரு படமும் காணப்பட்டது. அந்த நேரங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது அது. அந்த முக அமைப்பை இந்த நேரத்தில் பலர் ஞாபகத்தில் கொண்டு வரத் தொடங்கினர். உண்மையில் அதற்கும், இதற்கும் சம்மந்தம் உண்டோ, இல்லையோ என்று தெரியாவிட்டாலும்,  பலருக்கு ஷில்போல்டன் படத்துக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் உண்டு என்ற நினைப்பு வர ஆரம்பித்தது.  இந்த நினைப்பை உறுதிப்படுத்தியது இரண்டாவதாக உருவாகிய பயிர் வட்டம்.

photo%209.jpg

காணப்படுமோ, அப்படிக் காணப்பட்டது அது. அதைப் படமெடுத்து கணினியில் கொடுத்து படிப்படியாக ஆராய்ந்த போதுதான், பல மர்மங்களுக்கான விடைகள் வெளிவரத் தொடங்கியது. அந்த மர்மங்கள் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. அந்த மர்மம் என்னவென்று விளக்கமாக நமக்குப் புரிய வேண்டுமென்றால், 'கார்ல் சேகன்' (Carl Sagan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

கார்ல் சேகன் என்னும் அமெரிக்கர் வானியல் துறையில் மிகப் பிரபலம் வாய்ந்த ஒரு விஞ்ஞானி. இவர் ஆஸ்ட்ரானாமர், ஆஸ்ட்ரா ஃபிஸிஸிஸ்ட், காஸ்மாலாஜிஸ்ட், விஞ்ஞான எழுத்தாளர் எனப் பல பரிமானமுள்ளவர். இருபதுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றுதான் காண்டாக்ட் (Contact). இந்தப் புத்தகம் எந்த மாற்றமுமில்லாமல், காண்டாக்ட் என்ற பெயருடனே, 1997 இல் 'ஜோடி ஃபோஸ்டர்' (Jodie Foster) நடித்துத் திரைப்படமாக வெளிவந்தது. உலக ரீதியாக வசூலை அள்ளிக் குவித்த படங்களில் இதுவும் ஒன்று.

photo%2010.jpg

மனிதர்கள் வேற்றுக் கிரக வாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் கதையை மையமாக வைத்து, இந்தப் படம்  மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்தது (முடிந்தால் கட்டாயம் பாருங்கள்). இந்தக் கதையை எழுதிய கார்ல் சேகன், பிரபஞ்சத்தில் பல இடங்களில் உயிரினங்கள் உண்டு என்பதைத் தீர்க்கமாக நம்பினார். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 1974ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி விண்வெளிக்கு ஒரு செய்தியை அனுப்பினார். பூமியில் நாம் வசிக்கிறோம் என்ற செய்தியுடன், நம்மைப் பற்றிய விபரங்களை வரைபடமாக்கிப் பின்னர் அதை 0, 1 என்னும் பைனரி வடிவத்தில் ரேடியோ அலைகளாக விண்வெளிக்கு அனுப்பினார். குறிப்பாக, பூமிக்கு மிக அருகில், 25 ஒளி வருடங்கள் தூரத்தில் இருக்கும் Messier 13 என்று சொல்லப்படும் M13 நட்சத்திரக் கூட்டங்களை நோக்கி அனுப்பி வைத்தார். M13 இல் மூன்று இலட்சத்துக்கு அதிகமான நட்சத்திரங்களும், கோடிக்கணக்கான கோள்களும் இருக்கின்றன. அங்கு ஏதாவது ஒரு கோளில் உயிரினம் இருந்து இந்தச் செய்தியைக் கண்டறிந்து பூமியுடன் தொடர்பு கொள்ளலாம் என்பதே கார்ல் சேகனின் எண்ணம். 

வேற்றுக் கிரகங்களில் உயிரினம் உண்டு என்பதை எந்த விஞ்ஞானியும் இதுவரை மறுக்கவில்லை அப்படி உயிரினம் இருக்கும் பட்சத்தில் அவை அதிபுத்திசாலிகளாக இருக்கவே சாத்தியம் அதிகம் என்பதும் இவர்கள் கணிப்பு இந்தக் கணிப்பை அடிப்படையாக வைத்தே கார்ல் சேகன் செய்திகளை அனுப்பி வைத்தார் போர்ட்டா ரிக்கோ நாட்டில் உள்ள ஆரசிபோவில்Arecibo-Puerto Rico) அமைந்துள்ள பாரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்தே அந்தச் செய்திகள் அனுப்பப்பட்டன அவர் அனுப்பிய செய்தி என்ன தெரியுமாஅதன் வரைபடத்தை நீங்கள் பார்த்தால்தான் இதுவரை நான் ஏன் கார்ல் சேகன் பற்றி இவ்வளவு விபரங்கள் சொன்னேன் என்பது புரியும்அவர் அனுப்பிய செய்தியின் வரைபடம் இதுதான்

photo%2011.jpg

என்ன புரிகிறதா ஷில்போல்டனில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தின் அமைப்புக்கும்கார்ல் சேகனின் செய்திக்கும் சில மாற்றங்கள் தவிர்ந்து வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது தெரிகிறதா புரியவில்லையெனின் அந்த இரண்டு சித்திரங்களையும் ஒன்றாகப் பார்த்தால் உங்களுக்குப் புரியலாம்

photo%2012.jpg

இந்தப் படத்தில் வலது பக்கம் இருப்பது கார்ல் சேகன் அனுப்பிய செய்தி இடது புறம் இருப்பது ஷில்போல்டனில் உருவாக்கப்பட்ட பயிர் வட்டத்தின் படம் இரண்டு படங்களையும் பார்க்கும்போது ஒன்று போலவே தோன்றினாலும் நன்கு கவனித்தால்பல வித்தியாசங்கள் தெரியும் அந்த வித்தியாசங்கள் என்ன என்று ஆராய்ந்தபோது கிடைத்த பதில் எல்லாமே அதிர்ச்சிகரமானவை கார்ல் சேகன் ஆண்டு அனுப்பிய செய்திக்கு 27 ஆண்டுகளுக்கு அப்புறம் ஏலியன்கள் கொடுத்த பதில்தான் அந்த ஷில்போல்டன் பயிர் வட்டம் என்கிறார்கள் அதை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தவர்கள் கார்ல் சேகன் நட்சத்திரக் கூட்டத்தை நோக்கி அப்படி என்ன செய்திகளை அனுப்பினார் அதற்கு நமக்குப் பயிர் வட்டங்கள் மூலமாகக் கிடைத்த பதில்கள்தான் என்னஅவற்றை அடுத்த தொடரில் பார்ப்போமா

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான மர்மமான தொடரா இருக்கு அபி தொடர்ந்தும் இணையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, ஒரு தொடர் அபராஜிதன்.

இணைப்புக்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

;நான்' என்ற அகங்காரத்தை, மனித இனம், தூக்கியெறியும் நாள் வரும் வரைக்கும், இது போன்றவை, மர்மங்களாகவே மறைக்கப் படுவதும், தவிர்க்க முடியாது!

ஒரு வித்தியாசமான தொடர், அபராஜிதன்!

தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, ஒரு தொடர் அபராஜிதன்.

இணைப்புக்களுக்கு நன்றி.

  • தொடங்கியவர்

[size=4]

photo%201.jpg[/size]

[size=4]Arecibo வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கார்ல் சேகன், 1974ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி ஒரு செய்தியை அனுப்பினார். அந்த செய்தியில் அவர் பூமி, சூரியக் குடும்பம் மற்றும் மனிதர்கள் சம்பந்தமான பல விவரங்களை இணைத்திருந்தார். நாம் பயன்படுத்தும் தசம இலக்கங்கள், மனிதர்களிலுள்ள அடிப்படை இரசாயன மூலகங்கள் (கார்பன், ஒட்சிசன், நைதரசன், ஐதரசன், பொஸ்பரஸ்) பற்றிய குறிப்புகள், DNA பற்றிய குறிப்புகள், DNA யின் வடிவம், மனிதனின் வடிவம், மனிதனின் சராசரி உயரம், பூமியின் சனத்தொகை, சூரியக் குடும்பமும் அதில் பூமியின் அமைவு, இந்தச் செய்திகள் அனுப்ப உதவிய ஆரசிபோ டெலஸ்கோப்பின் வடிவம் மற்றும் அதன் பருமன் ஆகிய அனைத்து விபரங்களுடன், அந்தச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. அனுப்பப்பட்ட இடம் நமக்கு மிக அண்மையிலுள்ள M13 நட்சத்திரக் கூட்டங்களை நோக்கி. M13, நமக்கு மிக அண்மையில் உள்ளது என்று நான் சொன்னாலும், உண்மையில் அது இருபத்திதைந்து ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது. நாம் ஒளியின் வேகத்தில் (300000 கிமீ/செக்கன்) சென்றால், அந்த நட்சத்திரக் கூட்டத்தை அடைய 25 வருடங்கள் நமக்குத் தேவை. அவ்வ்வ்வ்வ்வ்வளவு தொலைவு. அதாவது நாம் அனுப்பிய செய்தி அங்கு சென்றடையக் குறைந்தபட்சம் 25 வருடங்கள் தேவை.[/size]

[size=4] [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4]இந்தச் செய்தி அனுப்பும் போதே, இதற்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால் 25 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை என்று கார்ல் சேகன் கணித்தே வைத்திருந்தார். அவர் கணித்தது போலவே 27 வருடங்களுக்குப் பின்னர் ஷில்போல்டனில் அந்தப் பயிர் வட்டங்கள் உருவாயின. பயிர் வட்டங்களில் இருந்த செய்தியை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவையாக இருந்தது. எப்படிக் கார்ல் சேகன் தன் செய்திகளை வரைபடமாக்கி அனுப்பியிருந்தாரோ, அதே வடிவத்தில் பதிலும் இருந்தது. ஆனால் வந்த பதிலில், அவர்களின் உயிர், கார்பன், ஒட்சிசன் போன்றவற்றுடன் மட்டுமல்லாமல், மேலதிகமாக சிலிக்கோனினாலும் ஆக்கப்பட்டிருப்பதாகவும், DNA இன் அமைப்பிலும் உருவத்திலும் பெரும்பாலான மாற்றங்களுடனும், அவர்களின் சராசரி உயரம் 3 அடி 4 அங்குலம் எனவும், சனத்தொகை நம்மை விட மிக  அதிகமெனவும் (12742213502 ஏலியன்கள்), அவர்களின் கோள் அமைந்துள்ள இடம், தாங்கள் தகவல் அனுப்பப் பயன்படுத்தும் டெலஸ்கோப்பின் உருவம், டெலஸ்கோப்பின் பருமன் ஆகியவை இருந்தன.[/size]

[size=4] [/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4]இங்குதான் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஏலியன்கள் வரைந்ததாக கருதப்பட்ட அந்தப் பயிர்வட்டச் சித்திரத்தின் கீழ்ப் பகுதியில் வரையப்பட்டிருந்த ஏலியன்களின் டெலஸ்கோப்பினது வடிவமும், ஒரு வருடத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்ட 'ஃப்ராக்டல்' வடிவப் பயிர்வட்டச் சித்திரமும் ஒரே வடிவத்தில் இருந்தன. அப்படி ஒரு சித்திரம் ஒரு வருடத்துக்கு முன்னர் ஷில்போல்டனில் ஏன் உருவாக்கப்பட்டது என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.[/size]

[size=4] [/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4]ஒரு பயிர்ச் சித்திரத்தை ஏற்கனவே உருவாக்கி, பின்னர் அதே பயிர்ச் சித்திரத்தை உள்ளடக்கி வேறு ஒரு குறியீட்டு வகைப் பயிர்ச் சித்திரத்தை உருவாக்குவதென்பது மிகவும் சிக்கலான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அத்துடன் இவையெல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட வேண்டுமென்றால், அதற்குத் தேவையான உழைப்பு என்பது மிக மிக அதிகமானது. அதற்குக் காலமும் அதிகம் தேவைப்படும். ஆனால் ஒரே இரவில், நான்கு மணி நேரங்களில் உருவாக்கப்பட முடியாது. இவற்றை ஏலியன்கள்தான் உருவாக்கின என்பதற்கு இது ஒன்றே சாட்சியமாகவும் இருக்க முடியுமா என்று பார்த்தால், முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தக் குறையையும் தீர்ப்பதற்கென்றே உருவானது இன்னுமொரு பயிர் வட்டம். இதைப் பார்த்ததும் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட அதிர்ந்துதான் போனார்கள். ஒன்று இவையெல்லாம் ஏலியன்கள் மக்களுடன் தொடர்புகொள்ளும் மாபெரும் முயற்சி. இல்லையெனில் உலக மக்களையே மடையர்களாக்கும் முட்டாள்தனமான மனிதர்களின் மோசமான வேலையாக இருக்க வேண்டும். அந்தச் சித்திரமும் ஷில்போல்டனில் அமைந்தது போலவே இருந்தாலும், பயங்கரமானதும் சிக்கல் நிறைந்ததாகவும் இருந்தது. அதன் படத்தைப் பார்த்ததும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கே புரிந்து போகும்.[/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4]2001ம் ஆண்டு ஷில்போல்டனில் உருவான முக அமைப்புடைய பயிர் வட்டம் தோன்றியதற்கு சரியாக ஒரு வருடத்தின் பின்னர், 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி, இங்கிலாந்து க்ராப்வூட் (Grabwood) நகரத்தில் இந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை ஏலியன்களின் முகங்கள் எப்படி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் நாம் இருந்தோமோ, அதே முகச் சாயலுடன் கூடிய பயிர் வட்டச் சித்திரமாக அது உருவாக்கப்பட்டு இருந்தது. அத்துடன் வட்டவடிவமான ஒருவித வினோத வடிவமும் அந்த உருவத்துடன் இணைந்து காணப்பட்டது. வட்டத்திற்குள் பல வட்டங்களாக அது அமைந்திருந்தது. அந்த வட்டங்கள் எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்தபோது, அது நாம் தற்சமயம் பாவிக்கும் சிடி(Compact Disc) போல இருக்கலாமோ எனச் சிந்திக்கத் தோன்றியது. சிடியில் எப்படி தகவல்கள் பதியப்பட்டிருக்கலாமோ, அது போல அந்த வட்டத்திலும் தகவலாக செய்திகள் இருக்கலாம் என்ற சந்தேகத்துடன், அதை ஆராய்ந்தபோது உண்மையிலேயே அதில் அப்படியே செய்திகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[/size]

[size=4] [/size]

[size=4]

photo%206.jpg[/size]

[size=4]

photo%207.jpg[/size]

[size=4]அந்த வட்டவடிவமாக இருந்த பயிர் வட்டத்தில் இருந்த செய்தி என்ன தெரியுமா? அது இதுதான்........!

"Beware the bearers of FALSE gifts & their BROKEN PROMISES.Much PAIN but still time.BELIEVE.There is GOOD out there.We oPpose DECEPTION.COnduit CLOSING\"

"ஏலியன்களில் இரண்டு வகையினர் இருப்பதாகவும், அதில் ஒரு வகையினர் நல்லவர்கள் என்பதாகவும், கெட்டவர்களின் வார்த்தைகளை நம்பி நாம் ஏமாறக் கூடாது" என்ற எச்சரிக்கையாக அந்தச் செய்தி இருந்தது. இதைப் பர்த்ததும் நிச்சயமாக உங்களுக்கு சிரிப்பதா? நம்புவதா? என்பதே பெரிய கேள்வியாக இருக்கும். பலருக்கும் அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் அது உருவாக்கப்பட்ட விதத்தில் நம்ப வேண்டிய சூழ்நிலைகளே அதிகம் இருக்கின்றன. இந்தச் செய்தியில் உள்ளது போல, நாம் யாரிடம் கவனமாக இருக்க வேண்டும்? இந்தச் சித்திரத்தில் இருக்கும் உருவ அமைப்புள்ளவர்களிடமா அல்லது அதில் சொல்லப்பட்ட நல்லவர்கள்தான் இந்தச் சித்திரத்தில் இருப்பவர்களா? எந்த விபரமும் அங்கு இல்லை. இருந்தவை எல்லாமே ஆச்சரியமும், மர்மமும் மட்டுமே! ஒரு பேச்சுக்கு இதை மனிதர்களே உருவாக்கினார்கள் என்று நாம் எடுத்தோமானால், உருவாக்கிய அந்த மனிதர்களின் மோசமான நகைச்சுவையுணர்வை என்ன என்று சொல்வது? ஆனால் பலர் இதை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்பதை நம்ப மறுக்கிறார்கள். காரணம், அதில் உள்ள சாத்தியக்கூறுகள் மனிதனால் உருவாக்கக் கூடியதாக இருக்கவில்லை என்பதுதான். இதில் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த சித்திரமும் ஒரு தொலைக்காட்சிக் கோபுரம் அமைந்த இடத்துக்கு அருகில்தான் உருவாக்கப்பட்டிருந்தது. [/size]

[size=4]

photo%208.jpg[/size]

[size=4]இங்கு நாம் ஒன்றைச் சரியாகக் கூர்ந்து பார்த்தோமானால், பயிர் வட்டங்களில் மிக முக்கியமானவை அனைத்துமே இங்கிலாந்தில், குறிப்பாக தெற்கு இங்கிலாந்திலேயே காணப்படுவது தெரியவரும். இதுவரை உலகம் முழுவதும் பத்தாயிரத்துக்கு அதிகமான பயிர் வட்டங்கள் உருவாகியிருந்தாலும், தெற்கு இங்கிலாந்தில்தான் எண்பது சதவீதமான பயிர் வட்டங்கள் உருவாகியிருக்கின்றன. அது ஏன்? அப்படி என்னதான் இந்த இடத்தில் விசேசம் என்று பார்த்தபோது அங்கும் நமக்கு ஆச்சரியமான ஒரு தகவல் கிடைத்தது.

ஆம்! நம்பவே முடியாத ஆச்சரியம் ஒன்று அந்த இடத்தில் இருக்கத்தான் செய்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒரு வட்டம்தான் அந்த ஆச்சரியம். ஆனால் நீங்கள் நினைப்பது போல அது ஒன்றும் பயிர்களால் உருவாக்கப்பட்ட வட்டம் கிடையாது. கற்களால் உருவான வட்டம். கற்கள் என்றால் சின்னக் கற்கள் கிடையாது. ஒவ்வொன்றும் நூறு தொன்களுக்கு அதிகமான எடையுள்ள கற்கள். உலகில் புராதன அதிசயமாகப் பார்க்கப்படும் முக்கிய அடையாளம் அது. அதன் பெயர் 'ஸ்டோன்ஹெஞ்ச்' (Stonehenge). [/size]

[size=4]

photo%209.jpg[/size]

[size=4]ஸ்டோன்ஹெஞ்ச் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நிறையவே உண்டு. அது எப்படி உருவானது? யாரால் உருவானது? என்ற கேள்விகளுக்கும், பயிர் வட்டங்களுக்கும் ஸ்டோன்ஹெஞ்ச்சுக்கும் சம்பந்தம் உண்டா என்ற கேள்விகளும் இப்போது நம்மிடையே தோன்றியுள்ளன.

இந்தக் கேள்விகளுக்கு உரிய பதிலுடன் அடுத்த தொடரில் சந்திப்போம்[/size]

http://www.uyirmmai.com/Uyirosai

  • தொடங்கியவர்

வித்தியாசமான மர்மமான தொடரா இருக்கு அபி தொடர்ந்தும் இணையுங்கள்

நன்றி சுண்டல் வருகைக்கு..... எல்லா தொடருக்கும் முதலில் வந்து கருத்து கூறுவீங்கள் பிறகு ஆளையே காண கிடைக்காது

;நான்' என்ற அகங்காரத்தை, மனித இனம், தூக்கியெறியும் நாள் வரும் வரைக்கும், இது போன்றவை, மர்மங்களாகவே மறைக்கப் படுவதும், தவிர்க்க முடியாது!

ஒரு வித்தியாசமான தொடர், அபராஜிதன்!

தொடருங்கள்!

நன்றிகள் அண்ணா உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு

நல்ல, ஒரு தொடர் அபராஜிதன்.

இணைப்புக்களுக்கு நன்றி.

நன்றி அண்ணா தொடர்ந்து இணைந்து இருங்கள்

நல்ல, ஒரு தொடர் அபராஜிதன்.

இணைப்புக்களுக்கு நன்றி.

நன்றி அண்ணா கருத்துக்கும் வருகைக்கும், தொடர்ந்து இணைந்து இருங்கள்

  • தொடங்கியவர்

[size=4]

Photo%201.jpg[/size]

[size=4]ஸ்டோன்ஹெஞ்ச் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், இந்த வாரம் எனக்கு வந்த சில மின்னஞ்சல்கள் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். குறிப்பாகச் சிலர் ஒரே மாதிரியான சந்தேகத்தை மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தனர். அந்தச் சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்கலாம். "கார்ல் சேகன் ஏலியன்களுகாக அனுப்பிய செய்தி, M13 நட்சத்திரக் கூட்டத்தைச் சென்றடைய 25 வருடங்கள் எடுக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் அவர்களிடமிருந்து பதில் எப்படி ஒரு வருடத்திலேயே, பயிர் வட்டமாக கிடைத்திருக்க முடியும்? அந்தச் செய்தி பூமியை நோக்கி வருவதற்கும் 25 வருடங்கள் தேவையல்லவா." இதுதான் அவர்களின் சந்தேகம். உண்மையில் மிகவும் புத்திசாலித்தனமான கேள்வி இது. தொடரில் சொல்லப்பட்ட ஷில்போல்டன் பயிர் வட்டம், M13 நட்டசத்திரக் கூட்டத்தை நோக்கி கார்ல் சேகன் அனுப்பிய செய்திக்கான பதிலாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். அத்துடன் அந்த நட்சத்திரக் கூட்டம் 25 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது என்றும் சொல்லியிருந்தேன். கார்ல் சேகன் அனுப்பிய செய்தி அங்கு சென்றடைய குறைந்தபட்சம் 25 வருடங்கள் தேவை. அதே போல அங்கிருந்து பூமிக்கு செய்தி வருவதற்கும் 25 வருடங்கள் தேவை அல்லவா. மொத்தமாக 50 வருடங்கள் தேவையாகும்போது, 26 வருடங்களிலேயே பதில் எப்படி வந்திருக்க முடியும் என்ற கேள்வி நியாயமானதுதான். இது ஒன்றே ஷில்போல்டன் பயிர் வட்டம் ஏலியன்களால் செய்யப்படவில்லை, மனிதர்களால்தான் செய்யப்பட்டது என்பதற்கு சான்றாகவும் அமைந்துவிடும்.

இந்த நியாயமான சந்தேகத்துக்குப் பதிலை நான் இப்பொழுது சொல்லியே ஆகவேண்டும். கடந்த பதிவுகளில் கார்ல் சேகன் எழுதிய காண்டாக்ட் என்னும் புத்தகம், எந்த மாற்றமும் இல்லாமல், ‘காண்டாக்ட் (Contact) என்ற பெயரிலேயே படமாக எடுக்கப்பட்டதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அந்தப் படத்தை முடிந்தால் பாருங்கள் என்றும் சொல்லியிருந்தேன். நிச்சயம் அந்தப் படத்தை உங்களில் பலர் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்தப் படத்தில் கார்ல் சேகன், மேலே சொல்லப்பட்ட சந்தேகத்துக்குப் பதிலும் சொல்லியிருக்கிறார். விளக்கமாக அந்தப் பதில் சொல்லப்படா விட்டாலும், அறிவியலில் சிறிது ஆர்வம் இருந்தால் அது புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை உங்களுக்குப் புரியும் படி விளக்கமாகச் சொல்வதற்கு நான் முயற்சிக்கிறேன். [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4]‘ காண்டாக்ட்’ படத்தின் கதையை மிகவும் சுருக்கமாக முதலில் நாம் பார்க்கலாம். படத்தில் நாயகியான ஜோடி ஃபோஸ்டர், சிறிய வயதிலிருந்தே வானியல் ஆராய்ச்சியில் நாட்டமுள்ளவள். சிறிய வயதில் தந்தை இறக்க, வானியல் ஆராய்ச்சியாளராகவே தன் படிப்பை முடித்து, போட்டோரிகாவில் உள்ள 'ஆரசிபோ' வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிகிறாள் (நிஜத்திலும் இந்த ஆரசிபோ டெலஸ்கோப் மூலமாகத்தான் கார்ல் சேகன் ஏலியன்களுக்கு செய்தி அனுப்பினார் என்பதை முன்னர் சொல்லியிருக்கிறேன்). அங்கு அவள் பிரபஞ்சத்தில் அதியுயர் அறிவைக் கொண்ட உயிரினங்கள் எங்கேயாவது வாழ்கின்றனவா என்று ஆராய்ந்து வருகிறாள். திடீரென வேகா(Vega) என்னும் 26 ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரம் ஒன்றிலிருந்து பூமியை நோக்கிச் செய்திகள் வருவதை அவதானிக்கிறாள். வந்த செய்திகள் முப்பரிமாணப் படங்களாக வருகிறது. செய்திகளை ஆராய்ந்து பார்த்ததில், வேகாவில் இருப்பவர்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது என்ற குறிப்புகளும் இருக்கின்றன. மிக வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று வளையங்களின் நடுவே, ஒரு மனிதன் இருக்கக் கூடிய, பந்து போன்ற அமைப்பு உள்ள ஒரு கருவியின் மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அந்தச் செய்தியில் காணப்படுகிறது. அந்த செய்திகளில் இருந்தபடி, பாரிய கருவி ஒன்றை உருவாக்குகின்றனர். 

அந்தக் கருவியின் நடுவே உள்ள பந்து போன்ற அமைப்பினுள்ளே, பலவித வீடியோக் கருவிகளைத் தன் உடம்பில் பொருத்தியபடி, வேகா நட்சத்திரத்துக்கான பயணத்துக்கு ஜோடி ஃபோஸ்டர் ஆயத்தமாகிறாள். பிரயாணம் ஆரம்பமாகப் போகும் கடைசித் தருணங்களான கவுண்ட் டவுன் (Countdown) ஆரம்பமாகிறது. 10, 9, 8...... என்று வரும்போதே ஜோடி ஃபோஸ்டர் பலவிதமான வெளிச்சங்களைக் காண்கிறாள். அத்துடன் அவளுக்கும் பூமிக்கும் உண்டான தொடர்பில் தெளிவில்லாமலும் போகிறது. கவுண்ட் டவுனின் பூச்சியத்தில் பிரயாணம் ஆரம்பமாகிறது. இந்த நேரத்தில் படத்தில் இரண்டு விதமாகக் காட்சிகள் அமைகின்றன. அந்தப் பந்தினுள் அமர்ந்திருக்கும் ஜோடி ஃபோஸ்டருக்கு என்ன நடக்கிறது என்ற அவளது பார்வையிலானது. மற்றது, வெளியே இருந்து அந்தப் பயணத்தை அவதானிக்கும் அமெரிக்க அரசு சார்ந்தவர்கள் பார்வையிலானது.[/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4]கவுண்ட் டவுன் ஆரம்பமாகியதும் ஜோடி ஃபோஸ்டர், தான் அமர்ந்திருக்கும் பந்தினுள்ளே, முழுவதும் வித்தியாசமான ஒளிகளைக் காண்கிறாள். அப்புறம் பிரயாணம் ஆரம்பமாகியதும், குழாய் போன்ற அமைப்புகளுக்கூடாகச் செல்கிறாள். ஒன்று மாறி ஒன்றாகப் பல குழாய்கள் போன்றவை தோன்ற, அவை வழியாகச் செல்கிறாள். இறுதியில், வேகாவை அடைகிறாள். அங்கு என்ன செய்கிறாள், யாருடன் பேசுகிறாள் என்பது பற்றியெல்லாம் இங்கு நான் சொல்லப் போனால் கதை விரிவடைந்துவிடும். வேகாவுக்குச் சென்றவள் பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறாள். அவளைப் பொறுத்தவரை பயணத்தின் மொத்த நேரம் 18 மணித்தியாலங்கள். ஆனால் பூமியில் அவளின் பயணத்தை அவதானித்துக் கொண்டிருந்தவர்கள் காண்பதோ வேறு காட்சிகள். அவர்களின் பார்வையில், கவுண்ட் டவுன் ஆரம்பமாகி ஸ்டார்ட் பட்டன் அழுத்தப்பட்ட அடுத்த கணம் வேகமாக சுற்றும் கருவியில், தப்புகள் நடந்து பலத்த வெடி விபத்து ஏற்படுகிறது. ஜோடி ஃபோஸ்டர் அமர்ந்திருந்த பந்து அப்படியே கடலினுள் தூக்கியெறியப் படுகிறது. அதாவது பிரயாணம் என்ற ஒன்று நடக்காமலே சில செக்கன்களிலேயே எல்லாம் வெடித்துச் சிதறுகின்றன. உடனே ஜோடி ஃபோஸ்டர் அந்தப் பந்திலிருந்து காப்பாற்றப்படுகிறாள். [/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4]பூமியில் இருந்தவர்களைப் பொறுத்தவரை சில செக்கன்களில், தோல்வியில் முடிந்த அந்தப் பிரயாணம், ஜோடி ஃபோஸ்டரைப் பொறுத்த வரை 18 மணி நேரப் பயணமாகவும், வெற்றிகரமான ஒரு பயணமாகவும் அமைகிறது. அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டியின் விசாரணையின் போது, தான் கண்ட காட்சிகளை ஜோடி ஃபோஸ்டர் சொன்னாலும், அதை யாரும் நம்பவில்லை. அவளுடன் இணைக்கப்பட்ட வீடியோ சாதனங்களும், எந்தக் காட்சிகளும் பதிவு செய்யப்படாமல் வெறுமையாகவே இருக்கின்றன. சில செக்கன்களில் நடந்த ஒரு தோல்விப் பயணத்தை, 18 மணி நேரங்கள் நடந்த ஒரு வெற்றிப் பயணமாகச் சென்று வந்தது என்று அவள் சொல்வதற்கான ஒரு சாட்சியத்தையாவது கொடுக்கும்படி கமிட்டி கேட்கிறது. அத்துடன் 25 ஒளி வருடங்கள் தூரத்துக்கு, 18 மணி நேரத்தில் எப்படிப் போய் வரலாம் என்பதையும் விளக்கும்படி கேட்கிறது. அப்போது ஜோடி ஃபோஸ்டர் சொல்லும் விளக்கம்தான் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில், சிலர் மின்னஞ்சலில் கேட்ட சந்தேகத்துக்கான பதில்களாக இருக்கப் போகிறது. சொல்லப் போனால் காண்டாக்ட்படத்தின் மொத்தக் கருவுமே கடைசியில் கொடுக்கப்படும் இந்த விளக்கத்தில்தான் தங்கியிருக்கிறது.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மிகவும் கடினமாகப் புரிந்து கொள்ளக் கூடியதும், புரிய வைக்கக் கூடியதுமான ஒரு விசயத்தை உங்களுடன் பரிமாறிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்பவை உங்களுக்குப் புரியுமானால், அது நிச்சயம் எனக்கு ஒரு மகிழ்வான தருணமாக இருக்கும். இனி விசயத்துக்கு வருவோம்.

ஜோடி ஃபோஸ்டர் காங்கிரஸ் கமிட்டியிடம் சொல்லும் விளக்கம் இதுதான். "பூமியில் மனிதர்கள் உணர்ந்த நேரம்தான் அந்த சில செக்கன்கள். ஆனால் ஸ்பேஸ் (Space) என்னும் பிரபஞ்ச வெளியில் பிரயாணம் செய்யும் நேரம் என்பது வேறு. ஐன்ஸ்டைனும், ரோசன்பேர்க்கும் சொன்ன 'பாலம்' (Bridge) கோட்பாட்டின்படி, ஒரு வோர்ம் ஹோல் (Wormhole) உருவாகி, அதன் மூலம் நான் மிகக் குறைந்த நேரத்தில் வேகாவுக்கு சென்று வந்திருக்கலாம்" என்று யூடி ஃபோஸ்டர் சொல்கிறாள். 'அது கோட்பாடுதானேயொழிய இன்னும் நிரூபிக்கப்படாதவை' என்று சொல்லி அதை ஏற்க மறுக்கின்றார்கள் கமிட்டியினர். இந்த இடத்தில் நாம் படத்தில் இருந்து விலகி, 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்' (Enstein-Resenberg Bridge) என்னும் கோட்பாடு பற்றிப் பார்க்கலாம்.[/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4]ஐன்ஸ்டைனை யாரென்று உங்களுக்கு நான் புரிய வைக்கத் தேவையில்லை. இன்றுவரை உலகத்தில் முதலாவது விஞ்ஞானியாக கருதப்படுபவர். பிரபஞ்சம் பற்றிய பல கோட்பாடுகளை உருவாக்கியவர். ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தில் மூன்று துளைகள் (Holes) இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். ப்ளாக் ஹோல் (Black hole), வைட் ஹோல் (White hole), வோர்ம் ஹோல் (Wormhole) என்பவைதான் அந்த மூன்றும். ப்ளாக் ஹோல் பற்றி அனேகமாக நீங்கள் கேள்விப்பட்டிருந்தாலும், வைட் ஹோல், வோர்ம் ஹோல் என்பவை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இந்த மூன்று துளைகளும் பிரபஞ்சம் எங்கும் இருப்பதாக ஐன்ஸ்டைன் சொன்னாலும், அவற்றைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு மனித விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை. இவை இருக்கின்றன என்று ஐன்ஸ்டைன் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலோ, எழுந்தமானத்திலோ கூறிவிடவில்லை. மிகவும் சிக்கலான, நுணுக்கமான வானவியல் கணிதச் சமன்பாட்டின் மூலம் அவற்றை நிறுவியிருக்கிறார். இதுவரை இவை இல்லையென்று எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. அதுதவிர, இவற்றைக் கண்டு பிடிப்பதே தற்கால விஞ்ஞானிகளின் நோக்கமாகவும் இருக்கிறது. 

இப்போது நாம் பார்க்கப் போவது வோர்ம் ஹோலைப் பற்றித்தான். ஒரு புழுவைப் போல அமைப்பில் விண்வெளியில் உருவாகும் ஒரு குழாய் போன்ற வடிவத்தைத்தான் வேர்ம் ஹோல் என்பார்கள். விண்வெளியில் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்குப் பிரயாணம் செய்வதற்கு, நேராக அந்த இடத்தை நோக்கி விண்கலத்தில் செல்வதை விட, வோர்ம் ஹோல் மூலமாகப் செல்வது இலகுவானதும், காலத்தை மிச்சம் பிடிப்பதுமாகும் என்கிறார் ஐன்ஸ்டைன். நமது பிரபஞ்சம் (Universum) தட்டையானது என்றே முன்னர் விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர். ஆனால் அது வளைந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மை பின்னர்தான் தெரிய வந்தது. இந்த நிலையில் ஐன்ஸ்டைனும், அவரது நண்பருமான ரோசன்பேர்க் என்பவரும் சேர்ந்து ஒரு மாபெரும் புரட்சிகரமான வானியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வெளியிட்டனர். அதுவே 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்' எனப்படுகிறது. முதலில் இந்தப் படத்தைப் பாருங்கள். இது வோர்ம் ஹோலினால் உருவாகும் பாலம் கோட்பாட்டுக்கு மிக நல்ல உதாரணமாக இருக்கும். [/size]

[size=4]

photo%206.jpg[/size]

[size=4]படத்தில் நமது பூமிக்கும் 'சிர்ரியஸ்' என்னும் நட்சத்திரத்துக்கும் உள்ள இடைவெளி 90 ட்ரில்லியன் கிலோமீட்டர் என்று காட்டப்பட்டிருக்கிறது. பிரபஞ்சம் வளைந்த நிலையில் உள்ளதால், வோர்ம் ஹோல் மூலமாக சிர்ரியஸ் நட்சத்திரத்துக்குச் செல்லலாம் என்றும் காட்டப்பட்டிருக்கிறது. வோர்ம் ஹோலினூடாக பிரயாணம் செல்லும்போது, காலம் மிகவும் சுருங்கிவிடும் என்பதால், அந்தப் பிரயாணமும் மிகக் குறுகிய நேரத்திலேயே நடக்கிறது. 

இப்படியான ஒரு வோர்ம் ஹோல் மூலமாகத்தான் காண்டாக்ட் படத்தின் நாயகி ஜோடி ஃபோஸ்ட்டரும் வேகா நட்சத்திரத்தை அடைகிறாள். ஆனால் அவள் சொல்வதை அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டி நம்பவில்லை ஆனால் படத்தின்இறுதியில் ஒரு முக்கிய சம்பவத்துடன் படம் முடிவடைகிறது சில செக்கன்களில் நடந்ததை 18 மணி நேரம் நடந்த பிரயாணம் என்று ஜோடி ஃபோஸ்டர் சொன்னதற்குக் காரணம் கேட்கிறது கமிட்டி அவள் உடம்பில் பொருத்தப்பட்ட வீடியோவில் கூடக் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை ஆனால் அந்த வீடியோவை இரகசியமாக ஆராய்ந்த போது அதில் எந்தக் காட்சியும் இல்லாவிட்டாலும் ரெக்கார்ட் செய்யப்பட்ட நேரம் மொத்தமாக 18 மணி நேரம் ஆகியிருக்கிறது 18 மணி நேரம் பதிவு செய்யப்பட்டிருக்குமானால்,அவள் பிரயாணம் செய்ததும் 18 மணி நேரமாகத்தான் இருக்கும் என்பது  நிரூபனமாகிறதல்லவா?[/size]

[size=4]ஆனால் அந்த வீடியோ ஆதாரத்தை அப்படியே யாருகும் தெரியாமல் மறைக்கிறது அமெரிக்க அரசு ஜோடிஃபோஸ்டருக்குக் கூட அது சொல்லப்படுவதில்லை அந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன [size="2"]என்று[/size] சொல்லப்படுவதில்லை[/size]

[size=4]

photo%207.jpg[/size]

[size=4]நமது பூமிக்கு வரும் ஏலியன்கள் கூட இதே போன்று வோர்ம் ஹோலை உபயோகித்து வந்திருக்கலாம் என்றே பலர் நம்புகின்றனர் ஷில்போல்டனுக்குரிய செய்தி கூட இந்த வகையிலேயே வந்திருக்கலாம் எனவும் சொல்கிறார்கள் வட்டங்கள் உருவாவதற்கு காரணமாகச் சொல்லப்படும் ஒளிப் பந்துகள் கூட வோர்ம் ஹோல்கள்தானோ என்று சந்தேகப்படுபவர்களும் உண்டு என்னடா இந்த ஆள் ஏலியன் இருக்கு என்றே சொல்லிவிடுவார் போல இருக்கே என்று நீங்கள் நினைக்கலாம் நான் சொல்வது ஒருபுறம் இருக்க காண்டாக்ட் படத்தில் ஜோடி ஃபோஸ்டருக்கு செய்தி கிடைத்தது போல நிஜமாகவே பூமிக்கு விண்வெளியில் இருந்து ஒரு சிக்னல் கிடைத்தது அதுவும் வெகு தொலைவில் இருந்த நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து ரேடியோ சிக்னலாக வந்தது நம்பவே முடியாத அதிசயம் அது [/size]

[size=4]photo%208.jpg[/size]

[size=4]1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஜெர்ரி ஏமான் Jerry Ehman) என்னும் வானியல் விஞ்ஞானி, விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, செறிவான ரேடியோ சிக்னல் ஒன்று வருவதை அவதானித்தார் அதைப் பதிவும் செய்தார் ஆனால் 72 செக்கன்களின் பின்னர் அது நின்று விட்டது அப்புறம் வரவேயில்லை இதை 'வாவ் சிக்னல்' (Wow! signal) என்கிறார்கள் பெயருக்கு ஏற்றால் போல பூமியில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளையும் 'வாவ் என்று வாயைப் பிளக்க வைத்தது அந்த சிக்னல். [/size]

[size=4].வாவ் சிக்னல் பற்றி விரிவாகவும்[/size]

[size=4]இந்தப் பகுதியில் சொல்லாமல் விடுபட்டுப் போன ஸ்டோன் ஹெஞ்ச் பற்றியும் அடுத்த தொடரில் பார்ப்போமா...[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துத் தெரிவிக்காவிட்டாலும் உங்கள் தொடருடன் நிச்சம் இணைந்திருப்பன்....

  • தொடங்கியவர்

[size=4]

photo%201.jpg[/size]

[size=4]Wow! சிக்னல் பூமியை வந்தடைந்தது பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், சிறிது பௌதிகம் (Phisics) படிக்கலாமா? "பௌதிகம் என்றால் பல்கலைக் கழகத்திலேயே சிதறி ஓடுவோம். அது இங்கேயுமா? இப்போ எதுக்குப் பௌதிகம்" என்கிறீர்களா? பல்லைக் கடித்துக் கொண்டு படியுங்கள். பௌதிகம் ஏனென்று புரியும்.

பிரபஞ்சம் என்பது மிகவும் அமைதியானது. அமைதி என்றால், அவ்வளவு அமைதி. நமது பூமியைப் பாருங்கள். அமைதியே இல்லாமல், இயற்கையானாலும், செயற்கையானாலும் எப்போதும் சத்தத்துடனேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது. பூமியுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சம் ரொம்பச் சாதுவான பிள்ளை. வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது. பிரபஞ்சத்திலும் எத்தனையோ வெடிப்புகள் கணத்துக்குக் கணம் ஏற்படுகின்றன. சமயங்களில் நட்சத்திரங்களே வெடித்துச், சிதறுகின்றன. தினமும் ஒன்றுடன் ஒன்று நட்சத்திரங்களோ, கோள்களோ மோதித் தூளாகின்றன. அதனால் ஏற்படும் சத்தங்கள் நமக்கு கேட்கும் பட்சத்தில் நாம் இறந்தே விடுவோம். அவ்வளவு பாரிய சத்தம் உருவாகும். ஆனால் நமக்கு எதுவும் கேட்பதே இல்லை. அதிகம் ஏன்? நமது சூரியனில் கூட, கோடான கோடி ஐதரசன் குண்டுகள் வெடிப்பது போல, தினமும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் எங்கும் அமைதியே காணப்படுகிறது. "இவையெல்லாம் ரொம்பத் தூரத்தில் நடக்கின்றன, அதனால்தான் அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதில்லை" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அல்லக் காரணம். அங்கு ஏற்படும் வெடிப்பின் அளவுக்கு அந்தத் தூரங்கள் ஒன்றுமே இல்லை. நிச்சயம் கேட்டே தீரும். ஆனால் கேட்பதில்லை. சொல்லப் போனால், அவற்றுக்கு அருகில் நின்றாலும், அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதற்கு சாத்தியம் இல்லை. ஏன் தெரியுமா? இது பற்றி எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா?  

ஒலி (சத்தம்) என்பது வேறு. ஒலியைக் கேட்பது என்பது வேறு. ஒலி எங்கும் உண்டு. அதைக் கேட்பது என்பதில்தான் நமக்குப் பிரச்சனை. ஒலியை நாம் எப்படிக் கேட்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு இடத்தில் உருவாகும் ஒலி, நமது காதை வந்தடைவதற்கு ஊடகம் ஒன்று தேவை. பூமியில் அந்த ஊடகமாக இருப்பது காற்று. அதாவது அட்மாஸ்பியர். காற்று, சத்தத்தைக் கடத்திக் கொண்டு எமது காதை வந்தடைகிறது. பூமியில் மட்டுமல்ல, பிரபஞ்சம் எங்கும் ஒலி உண்டு. ஆனால் நமக்குக் கேட்பதில்லை. காரணம் பூமியைத் தாண்டி எங்குமே காற்று இல்லை. பிரபஞ்சம் எங்கும் காற்றில்லா வெறுமைதான் உண்டு. சூரியனில் இருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ சத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காற்றுப் போன்ற ஊடகம் நிச்சயம் தேவை. நமது விஞ்ஞானம் அறிந்தவரை பூமியைப் போன்ற இவ்வளவு நேர்த்தியான அட்மாஸ்பியர் உள்ள கோள் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஏதாவது கிரகங்களுக்குப் பூமி போன்ற அட்மாஸ்பியர் இருந்தாலும், அது அங்குள்ள சத்தத்தை உள் வாங்குமேயொழிய வெளிவிடாது. மொத்தத்தில் பிரபஞ்சத்தின் பாரிய வெடிப்புகளின் சத்தங்களை நாம் கேட்காமல் இருப்பதற்குக் காரணம், பிரபஞ்சம் காற்றில்லாப் பெருவெளியென்பதுதான். [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4]ஒலியும், ஒளியும் அலைகளாகத்தான் இருக்கின்றன. அலைகளாகச் செல்லும் அனைத்துக்கும் அலை நீளம் என்ற ஒன்று உண்டு. அலை நீளத்தை அளப்பதற்கு 'ஹேர்ட்ஸ்' (Hertz - Hz) என்னும் அலகை நாம் பயன்படுத்துகிறோம். மனிதனது காதுக்கும், கண்ணுக்கும் ஒரு குறித்த அலை நீளங்களை மட்டுமே கிரகித்துக் கொள்ளும் சக்தி உண்டு. சூரியனில் இருந்து வரும் ஒளியில் மிகமிகச் சிறிய பகுதியான, ஏழு நிறங்கள் மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறது. அந்த ஏழு நிறங்கள் தாண்டிய, புற ஊதாக் கதிர்களும், இன்ஃப்ரா சிவப்புக் கதிர்களும் நம் கண்களுக்குத் தெரிவதே இல்லை. இதே போலத்தான் ஒலியும். 20 Hz இலிருந்து 20 KHz வரை உள்ள ஒலி மட்டும்தான் மனிதனால் கேட்க முடியும். அவை தாண்டிய ஒலிகள் 'கேளா ஒலிகள்' எனப்படும். கேளா ஒலிகளில் முக்கியமானவை ரேடியோ அலைவரிசைகள் Radio Frequency-RF). 3 KHz இலிருந்து 300 GHz வரைக்கும் உள்ள அலை வரிசைகளைத்தான் ரேடியோ அலை வரிசைகள் என்பார்கள். அவற்றைக் கீழே ஒரு அட்டவணையில் தந்திருக்கிறேன்.[/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4]ரேடியே சிக்னல்கள் தானாக உருவாவதில்லை. அவை உருவாக்கப்படுபவை. மனிதனாலோ அல்லது வேறு உயிரினங்களினாலோ உருவாக்கப்படுபவைதான் இந்த ரேடியோ சிக்னல்கள். ரேடியோ சிக்னல்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் கருவிகள் தேவை. இப்படியான கருவிகளில் ஒன்றுதான் 'ரேடியோ டெலெஸ்கோப்' என்று சொல்லப்படும், வானியலை ஆராயப் பயன்படுத்தும் டெலெஸ்கோப்புகள். இவற்றுள் மிகப்பெரிய அளவுள்ள டெலெஸ்கோப்புகளை 'வெரி லார்ஜ் அர்ரே' (Very Large Array-VLA) என்பார்கள். 25 மீட்டர்களிலிருந்து 300 மீட்டர்கள் வரை குறுக்களவுள்ளவைகள் அவை.[/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4]

photo%206.jpg[/size]

[size=4]ரேடியோ டெலெஸ்கோப் உள்ள ஒரு வானிலை ஆராய்ச்சி மையமான, பேர்கின்ஸில் (Perkins- Delaware Ohio) 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நள்ளிரவு, ஜெர்ரி ஏமான் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென கணணித் திரையில் ஒரு அதிசயத்தைக் கண்டார். 220 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கும் சஜிட்டாரியஸ் (Sagittarius) நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் இருந்து, மிகச் செறிவான ரேடியோ சிக்னல் ஒன்று வருவதைக் கண்டார். நன்றாகக் கவனியுங்கள் ரேடியோ சிக்னல் என்பது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதாலோ, இரண்டு நட்சத்திரங்கள் மோதுவதாலோ ஏற்படுவதல்ல. அதை யாராவது உருவாக்க வேண்டும்.சஜிட்டாரியஸ் நட்சத்திரக் கூட்டங்களில் உள்ள X1 சஜிட்டாரி, X2 சஜிட்டாரி ( Sagittarii X1,X2 ) ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்குமிடையில் இருந்து அந்த சிக்னல் வந்தது. அதாவது அங்குள்ள ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்கு ரேடியோக் கருவிகள் மூலம், நடந்த ஒரு சம்பாசனையாகத்தான் அது இருக்க முடியும். ஆனால் அந்த நேரத்தில் இருந்த கருவிகளின் திறண் போதாமையால், அதைத் தொடர்ந்து அவதானிக்க முடியவில்லை.  சரியாக 72 செக்கன்கள் வந்த அந்தச் சிக்னல் படிப்படியாகக் குறைந்து அப்படியே இல்லாமல் போயிற்று. 72 செக்கன்கள் என்பது நமக்குச் சிறிய நேரமாக இருந்தாலும், ஆராய்ச்சியாளர்களுக்கு அது பெரிய அளவு நேரம்தான். இந்த சிக்னலைப் பார்த்ததும் தன்னையறியாமல், Wow! என்று ஆச்சரியத்துடன், ஜெர்ரி அதே காகிதத்தில் எழுதினார். அதனால் அதை Wow! சிக்னல் என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.[/size]

[size=4]

photo%207.jpg[/size]

[size=4]ரேடியோ சிக்னலாக வாவ் சிக்னல் இருந்ததால், அதை நிச்சயம் யாரோ அங்கு உருவாக்கியிருக்கிறார்கள் என்றுதான் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தார்கள். அந்த 'யாரோ' என்பவர்கள் நிச்சயமாக ஏலியன்களாகத்தான் இருக்க முடியும். ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் செல்லும் அஸ்ட்ராநாட்ஸ் எல்லாருமே பூமியுடன் இப்படிப்பட்ட ரேடியோ அலை வரிசை மூலமாகத்தான் உரையாடுவார்கள். அது போல அங்கும் யாரோ, யாருடனோ உரையாடியிருக்க வேண்டும்.

எப்போதோ ஒரேயொரு தடவை நடந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு, ஏலியன்கள்தான் சிக்னலை அனுப்பினார்கள் என்று எப்படி அடித்துச் சொல்ல முடியும்? ஒருதரம் என்பது எப்போதும் தற்செயலாக இருப்பதற்குத்தான் சாத்தியம் உண்டு. ஆனால் இந்தச் சாத்தியத்தை உடைத்தெறிந்தது இன்னுமொரு சம்பவம்.

மேற்கு வேர்ஜீனியாவில் இருக்கும் கிரீன்பாங்க் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த டான் மெரிக் (Dr.Don Merick) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு, 23 யூலை 1997ம் ஆண்டு அதிகாலை 3 மணிக்கு, ஒரு ரேடியோ சிக்னல் கிடைத்தது. அந்த சிக்னலைக் கண்டதும் அவர் போர்ட்டா ரிகாவில் இருக்கும் ஆரஷீபோ ஆராய்ச்சி நிலையத்துக்கும் மசாசூசெட்ஸ் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஃபோன் மூலமாக இந்தச் செய்தியையும் அந்த சிக்னல் வந்த இடத்தையும் அறிவித்தார் அவர்களும் அதே இடத்துக்குத் தங்கள் ரேடியோ டெலஸ்கோப்பைத் திருப்ப அவர்களுக்கும் அதே சிக்னல் கிடைத்தது இந்தச் சம்பவமும் விஞ்ஞானிகளைத் தூக்கிவாரிப் போட்ட சம்பவமாக அமைந்தது ஆனால் இதில் அமெரிக்க அரசு ஏனோ ஒரு தயக்கதைக் காட்டியது பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பதிலளித்த அரசு அதிகாரி[/size]

[size=4]அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான் ஆனால் அது பற்றி எந்த அபிப்பிராயமும் சொல்லப் போவதில்லை எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டு உடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் அமெரிக்கா அங்கு எதை மறைக்க வெளிக்கிட்டது என்பது இன்னும் புதிராகவே இருக்கின்றது ஆனால் அதைவிட ஒரு ஆச்சரியமான வேலையை அமெரிக்க அரசு அடுத்துச் செய்தது ஏலியன்களுக்கான ஆராய்ச்சிக்காக பில்லியன் டாலர்களை ஒவ்வொரு வருடத்துக்கும் ஒதுக்குவதாகவும் இது அடுத்த பத்து வருடங்களுக்கு அது தொடரும் என்றும் அறிவித்தது இல்லாத ஏலியன்களை இருக்கிறது என்று ஆராய இவ்வளவு அதிகப்படியான பணத்தை அமெரிக்கா ஏன் ஒதுக்க வேண்டும் ]உலகிலேயே அமெரிக்கா மட்டும் அல்ல அனைத்து அரசுகளும் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்வது விண்வெளி ஆராய்ச்சியில்தான் அதுவும் குறிப்பாக ஏலியன் வேட்டையில்தான் வெளிக்கிரக உயிர்களைக் கண்டுபிடிப்பதற்கென்றே   SETI (Search for ExtraTerrestrial Intelligence) என்ற ஒரு உலகளாவிய அரச அமைப்பையே உருவாக்கி வைத்திருக்கின்றனர் என்றால் பார்துக் கொள்ளுங்கள்[/size]

[size=4]photo%208.jpg[/size]

[size=4]SETI என்று ஒரு அமைப்பு அதற்கென்று கோடி கோடியான பணம் அதில் ஈடுபடுவதற்கு ஆயிரக்கணக்கான உலக மகா விஞ்ஞானிகள் என அனைத்தையும் அரசுகள் உருவாக்கி ஏலியன்களை ஆராய்ந்து கொண்டிருந்தாலும் [/size]

[size=4]சாதாரண மக்களான நாம் ஏலியன்கள் பற்றிப் பேசினாலே அது பொய்யென்று அரசுகள் குதித்து கூத்தாடுகின்றன அவர்களாகக் கண்டுபிடிக்கும் உண்மைகளையும் மறைக்கின்றன நமது கண் முன்னாலே இருக்கும் பல ஆச்சரியங்களையோ அதிசயங்களையோ கூட முறைப்படி ஆராய மறுக்கின்றன கோடிக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களுக்கெல்லாம் ராக்கெட்டை அனுப்பி[/size]

[size=4]அங்கு என்ன இருக்கிறது என்று ஆராய்கிறார்கள்[/size]

[size=4]ஆனால் பூமியிலேயே இருக்கும் அதிசயங்களை ஆராய மறுக்கிறார்கள்[/size]

[size=4]எத்தனை ஆச்சரியங்கள் இன்றும் விடை சொல்லப்படாமல் மிஸ்டரிகளாகவே நம் முன்னால் நிற்கின்றன[/size]

[size=4]photo%209.jpg[[/size]

[size=4]அப்படி நம் கண்முன்னே நிற்கும் ஒரு அதிசயம்தான் ஸ்டோன் ஹெஞ்ச்வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் அது அமைக்கப்பட்டிருக்கிறது[/size]

[size=4]கற்கால நாகரீகத்தின் கடைசிக் காலகட்டம் அது[/size]

[size=4]இங்கிலாந்தின் வரலாற்றில் எந்தப் பதிவுகளும் இல்லாத காட்டுவாசி மக்கள் மட்டும் வாழ்ந்த காலம் அந்தக் காலத்தில் டன்களுக்கு அதிகமான எடையுள்ள கற்களை பல நூறு கிலோ மீட்டர்கள் தூரத்திலிருந்து வைல்ட் ஷையர் Wiltshire) என்னுமிடத்துக்கு நகர்த்தி ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது அதுவும் இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக இருக்கும் பயிர் வட்டங்களின் வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றது இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில் நிறைய ஆச்சரியங்களும் மர்மங்களும் உண்டு அந்த மர்மங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் நம்மை வியப்பிலாழ்த்தியபடி இருக்கின்றன பயிர் வட்டங்கள் பல விதமாக பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறதே ஏன் ஸ்டோன் ஹெஞ்ச் மட்டும் ஒன்றுதான் இருக்கிறது என்று நீங்கள் கேட்டால் மேலும் ஆசாரியமான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றன வட்ட வடிவமாக பலவித ஹெஞ்சுகள் இங்கிலாந்து எங்கும் காணப்படுகின்றன இந்த ஸ்டோன் ஹெஞ்ச் எப்படிக் கட்டப்பட்டது எதற்காகக் கட்டப்பட்டது அது கட்டப்பட்டதில் உள்ள ஆச்சரியங்கள் என்ன இது தவிர்ந்து மேலும் உள்ள மற்ற ஹெஞ்கள் எவை என அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களுடன் அடுத்த தொடரில் சந்திப்போம்[/size]

கருத்துத் தெரிவிக்காவிட்டாலும் உங்கள் தொடருடன் நிச்சம் இணைந்திருப்பன்....

நன்றி

  • தொடங்கியவர்

பல மில்லியன்கள் வருடங்களிலிருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்வரை, ஐரோப்பாவெங்கும் ஐஸ் (Ice) பரவியிருந்தது. கண்ணுயர்த்திப் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப் போர்வையாக ஐஸ். மனித நாகரீகக் காலப் பிரிவுகளில், இந்தக் காலங்களை 'ஐஸ் காலம்' (Ice Age) என்று அழைப்பார்கள். மிகச் சமீபத்தில், அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில்தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்து, துருவம் வரை சென்று, அங்கே சங்கமமாகியது. இந்த ஐஸ் காலத்தில், 'மம்மோத்' (Mammoth) என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள், உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தன. இப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான 'மம்மோத்' உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த மம்மோத், தற்கால யானைகளை விட மிகப் பெரியவை. உடலெங்கும் நீண்ட முடிகளுடனும், நீண்ட தந்தங்களுடனும் அவை காணப்பட்டன. மம்மோத், ஐஸ் உள்ள குளிர்ப் பிரதேசங்களிலேயே வாழக் கூடியவை. இங்கிலாந்தில் கூட இவை வாழ்ந்திருக்கின்றன. மம்மோத் யானையினம் மனிதர்களின் வேட்டையினாலும், ஐஸ் கட்டிகள் கரைந்து இல்லாமல் போனதாலும், மொத்தமாகப் பூமியிலிருந்து அழிந்து போயின. இங்கிலாந்தில் 10,000 வருசங்களுக்கு முன்வரை இவை வாழ்ந்திருக்கின்றன. இவை அழிந்த காலத்திலிருந்து, மெல்ல மெல்லப் பனிப்பிரதேசங்கள் மரம் செடிகள் முளைக்கும் பிரதேசங்களாக மாறின. ஆனாலும் வேட்டையாடியே மனித இனம் வாழ்ந்து வந்தது. இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகள் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் வரையிலான, கால கட்டத்தைக் கடைசிக் கற்காலமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

photo%202.jpg

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், கடைசிக் கற்காலத்தில் இங்கிலாந்து, வைல்ட் ஷையர் (Wiltshire) என்னுமிடத்தில் கற்களால் கட்டப்பட்ட ஒரு வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது (இதே வைல்ட் ஷையரிலிருந்துதான் இந்தத் தொடரின் முதல் பகுதி ஆரம்பமாகியது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்). சிறிய, பெரிய அளவுகளில் இரண்டு வகைக் கற்களினால் அந்த வட்ட வடிவ அமைப்பு கட்டப்பட்டிருந்தது. மிகப்பெரிய அளவுள்ள பாறாங்கற்களும் (Sarsen Stones) , நீலக்கற்களும் (Blue Stones) கொண்டு அந்த வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. அதையே 'ஸ்டோன் ஹெஞ்ச்' (Stonehenge) என்று அழைக்கிறார்கள். மனித வரலாற்றிலேயே மிகவும் பழைய கட்டட வடிவமாக இதைச் சொல்கிறார்கள். இப்போது பிரச்சினை இந்தக் கட்டடம் அல்ல. அது எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது என்பதுதான். ஒவ்வொன்றும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரமுமுள்ள கற்கள். அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன.

photo%203.jpg

எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட நகர்த்த முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்து, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு கற்களை அல்ல. மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள். இது ஆசியா போன்ற நாடுகளில் நடந்திருந்தாலும், யானைகளைக் கொண்டு, ஒவ்வொன்றாக இழுத்து வந்திருப்பார்கள். என்று நினத்திருக்கலாம். இல்லை ஐஸ் காலம் என்றாலாவது மம்மோத் யானைகளின் உதவியுடன் இழுத்திருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால் இரண்டும் இல்லை. நான் ஏன் மேலே மம்மோத் என்னும் யானையைப் பற்றிச் சொன்னேன் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இன்றுள்ள பொறியியல் வல்லுனர்கள் கூட, வசதியற்ற சூழ்நிலையில், மலைப் பிரதேசங்களைத் தாண்டி இவ்வளவு பெரும் கற்களை இழுத்து வந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! அப்படிக் கொண்டு வந்திருந்தாலும், கிடையாக இருந்த கற்களை எப்படி நிலைக்குத்தாக நிமிர்த்தியிருக்க முடியும்? நிமிர்த்திய இரண்டு கற்களின் மேல் இன்னுமொரு கல்லை எப்படிக் கிடையாக தூக்கி வைத்திருக்க முடியும்?

photo%204.jpg

photo%205.jpg

அக்கால மக்கள் எப்படி அந்தக் கற்களை இழுத்து வந்தார்கள், எப்படி அவற்றை நிமிர்த்தினார்கள், நிமிர்த்திய இரு கற்களுக்கு மேல், கிடையாக மற்ற கற்களை எப்படி அடுக்கினார்கள் என்று பல விதத்தில், இப்போது விளக்கம் சொல்லப்படுகிறது. மேலே படங்களில் அவை காட்டப்பட்டுள்ளது. ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வது போலவே கற்கள் கொண்டு வரப்பட்டுக் கட்டப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், இவ்வளவு நுணுக்கமான அறிவை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்? மனிதன் தோன்றிய பல இலட்சம் ஆண்டுகளிலிருந்து கடைசிக் கற்காலம் வரை, மனித இனம் எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாமல், ஒரு காட்டுவாசி போலவே வாழ்ந்திருக்கிறது. அதிகபட்சம் ஒரு வில்லு, ஒரு அம்புடனோ, கல்லினால் செய்த கோடரியுடனோதான், எந்தவித மாற்றமுமில்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறது. மிருகங்களை வேட்டையாடுவதே உணவிற்கான முக்கிய தொழிலாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் திடீரென அந்த மனிதர்களில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியது. அதுவரை அறிவேயில்லாத, மிருகங்களுடன் மிருகமாக வாழ்ந்து வந்த மனிதர்களில், மின்னல் அடித்த கணத்தில் ஏற்பட்டது போல, ஒரு மாற்றம் ஏற்பட்டது. இலட்சம் ஆண்டுகள் ஏற்படாத மாற்றம் சடுதியாகத் திடீரெனத் தோன்றியது. அந்த மாற்றத்தினால், இப்போது இருக்கும் மனிதர்களால் கூடச் செய்ய முடியாத சில செயல்களை, அனாயாசமாக அவர்கள் செய்திருக்கிறார்கள். அதற்குரிய அறிவும், ஆற்றலும் திடீரென அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அது எப்படித் தோன்றியது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. அதற்கு ஏலியன்கள் காரணமாக இருக்க முடியுமா?

photo%206.jpg

photo%207.jpg

photo%208.jpg

ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்ட விதத்தைக் கவனித்தீர்களேயானால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். நிலையாக நிறுத்தப்பட்ட கற்களில் முளை போன்ற கூரான ஒன்றை உருவாக்கி, அதற்கு மேலே வைக்கும் கல்லில் அந்த முளை பொருந்தும்படி ஓட்டையாகச் செதுக்கி, கற்கள் விலகாமல் இருக்க, பக்கவாட்டில் வளைந்த அமைப்புகளை உருவாக்கி, கனகச்சிதமாக வட்டவடிவமாகப் பொருந்தும்படி ஸ்டோன் ஹெஞ்சை அமைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் பாவித்த கருவிகள் என்று பார்த்தால், அவை வெறும் கற்கள்தான். கற்களால் அடித்துத் தேய்த்து, இந்தவித உருவங்களுக்கு மாற்றியுள்ளார்கள். இது நம்பவே முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை மனிதர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பிரிவினர்கள் சொல்ல, மனிதர்கள் செய்யவில்லை, ஏலியன்கள்தான் செய்தார்கள் என்று வேறொரு பிரிவினர்கள் சொல்ல, மனிதர்கள்தான் செய்தார்கள். ஆனால் ஏலியன்கள் அவர்களுக்கு உதவினார்கள் என்று மற்றுமொரு பிரிவினரும் சொல்ல, இதுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுடன் அமைதியாக இருக்கிறது ஸ்டோன் ஹெஞ்ச்.

photo%209.jpg

ஸ்டோன் ஹெஞ்சை மனிதர்கள் தனியே செய்யவில்லை. ஏலியன்களின் உதவியுடன்தான் அவர்கள் செய்தார்கள் என்று பலர் உதவிக்கு அழைப்பது வேறு ஒன்றை. இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில் எகிப்தில் முதல் பிரமிட்டாக 'கீஸா' பிரமிட் (Geza) கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. கீஸா பிரமிட்டை மனிதர்கள்தான் கட்டினார்கள் என்று சொல்லும் போது, அதைப் பலர் நம்புவதில்லை. அந்த அளவுக்கு, மர்மங்களையும் ஆச்சரியங்களையும் தனக்குள் உள்ளடக்கிய பிரமிட் அது. 146 மீட்டர் உயரமான அந்தப் பிரமிட், 4500 வருடங்கள் பழமையானது. மிகப் பிரமாண்டமான ஒரு கட்டடமாக கீஸா பிரமிட்டைப் பார்க்கும் நாம், அது கட்டப்பட்டபோது நடந்த முக்கிய விசயங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்தப் பிரமிட் இரண்டரை மில்லியன்கள் சதுரக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. அந்த இரண்டரை மில்லியன் கற்களும், 25 டன்களிலிருந்து 80 டன்கள் வரை எடையுள்ளவை. அனைத்தையும் சேர்த்து மொத்தமாக எத்தனை டன்கள் கற்கள் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். இதில் உள்ள ஆச்சரியமான விசயம் என்ன தெரியுமா? ஸ்டோன் ஹெஞ்ச் போலவே, அனைத்துக் கற்களும் 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தனை கற்களையும் சதுரமாக வெட்டுவதற்கே, ஆயிரம் பேர் சேர்ந்தாலும் 100 வருடங்களுக்கு மேல் தேவை. சதுரமாகச் செதுக்கப்பட்ட இரண்டரை மில்லியன் கற்களையும், 800 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கொண்டு வர, 5000 பேர் சேர்ந்து உழைத்தாலும் 500 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை. 4500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தப் பிரமிட் குறுகிய காலத்திலேயே கட்டப்பட்டிருக்கிறது. இங்கு நான் குறுகிய காலம் என்று குறிப்பிட்டது, மனிதனால் கட்டப்படக் கூடிய கால அளவை விடக் குறுகிய காலம் என்பதை. அப்படியென்றால், கீஸா பிரமிட்டை யார் கட்டினார்கள்? யாருடைய உதவியுடன் கட்டினார்கள். நம்பவே முடியாத ஒரு காலத்தில் இப்படி ஒரு அறிவு பூர்வமான கட்டடத்தை கட்டுவதற்கு எப்படிச் சாத்தியம் ஆகியது? இவற்றிற்கு இன்னும் விடைகள் கிடைக்கவில்லை. பல விதங்களில் பல பதில்கள் சொல்லப்பட்டாலும், அவற்றை முழுமையாக ஏற்கக் கஷ்டமாகவே இருக்கிறது.

பிரமிட்டுகளின் மர்மங்களையும், அவற்றுடன் ஏலியன்கள் சம்பந்தப்பட்டது என்று நம்பப்படுவதையும் இப்போது நான் சொல்ல ஆரம்பித்தால், அந்தச் சுழலில் இருந்து சீக்கிரம் நம்மால் விலக முடியாது. எனவே எகிப்தின் பிரமிட்டை இத்துடன் இங்கு விட்டுவிட்டு, இங்கிலாந்துக்குச் செல்லலாம்.

"ஸ்டோன் ஹெஞ்ச், தெற்கு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டிருப்பதற்கும், எகிப்தில் பிரமிட் உருவாக்கப் பட்டிருப்பதற்கும் என்னய்யா சம்பந்தம்? இது வேறு. அது வேறு. இது கற்களால் அமைக்கப்பட்ட வட்டவடிவ அமைப்பு. அதுவோ பிரமிட் வடிவ அமைப்பு. ஏலியன்கள்தான் இவை இரண்டையும் அமைக்க உதவி செய்தன என்று நீங்கள் சொன்னால், குறைந்தபட்ச ஒற்றுமை ஒன்றையாவது உங்களால் காட்ட முடியுமா?" என்று என்னிடம் நீங்கள் இப்போது கேட்கலாம். அந்தக் கேள்வியும் நியாயமானதே! எழுத வேண்டும் என்பதற்காக எதையும் முடிச்சுப் போடுவதென்பதற்கும், அளவு நிச்சயம் வேண்டும்தான். ஆனால் நாம்தான் இப்போது ஒரு மர்மமான சுழலில் சிக்கியிருக்கிறோமே! எனவே, இதற்கெனப் பதிலும் நிச்சயம் இருக்கும் அல்லவா? அது என்ன மர்மம் என்று நீங்களே பாருங்கள்.

photo%2010.jpg

photo%2011.jpg

ஸ்டோன் ஹெஞ்சிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது 'சில்பரி ஹில்' (Silbury Hill) என்னும் இடம். அங்கு நாம் யாருமே நினைக்க முடியாத அதிசயம் ஒன்று உள்ளது. 4500 ஆண்டுகளுக்கு முன், எகிப்தின் பிரமிட் உருவாக்கப்பட்ட காலம், ஸ்டோன் ஹெஞ்ச் உருவாக்கப்பட்ட காலங்களில் சில்பரி ஹில்லிலும் ஒரு பிரமிட் உருவாக்கப்பட்டிருக்கிறது. "பிரமிட்டா? அதுவும் இங்கிலாந்திலா?" என்று ஆச்சரியப்படுகிறீர்களா? "ஆம்! பிரமிட்டேதான்". எகிப்தின் பிரமிட், ஸ்டோன் ஹெஞ்சின் வட்ட வடிவம் என இரண்டையும் இணைத்த மர்மமாக, வரலாற்றிலேயே வட்டவடிவத்தில் அந்தப் பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூம்பு வடிவ அமைப்பையே பிரமிட் என்பார்கள். கீழே சதுரமான அடியைக் கொண்டிருப்பது எகிப்திய பிரமிட். கீழே வட்டமான அடியைக் கொண்டு அமைக்கப்பட்டது சில்பரி பிரமிட். படத்தில் பார்க்கும்போது ஏதோ சிறிய மலை போலக் காணப்படும் இது, கற்களால் எவராலோ கட்டப்பட்டிருக்கிறது. மேலே புற்கள் முளைத்திருக்கும் அந்தப் பிரமிட்டின் உள்ளே இருப்பது எல்லாமே கற்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள்.

மேலதிகமாக சில்பரி பிரமிட் பற்றிய ஆச்சரியம் தரும் விபரங்களை, அடுத்த தொடரில் பார்ப்போமா......?

  • தொடங்கியவர்

[size=5]

photo%201.jpg[/size]

[size=5]இங்கிலாந்தின் 'சில்பரி' என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், 'இது இயற்கையாய் அமைந்தது இல்லை' என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாக, நமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ஆனால் இந்த 'சில்பரி பிரமிட்' கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை. ஆனால், இதைக் கட்டிய விதமும், கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போது, அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறது. அவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை. [/size]

[size=5]

photo%202.jpg[/size]

[size=5]முழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு மில்லியன் மனித மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும். ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் திகதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது. இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட், கை தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் நமது பிரச்சினையே, இந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான். யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லை. அதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறது. அதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. சிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோது, அது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால், அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு.  இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படி உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்கள் எவை? அவை எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதை நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.[/size]

[size=5]

photo%203.jpg[/size]

[size=5]இங்கிலாந்தில் இருக்கும் வட்ட வடிவ அமைப்புகளின் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்து போகவில்லை. இந்தப் பிரமிட்டிலிருந்து 20 நிமிட நடைப் பயணத்தில், இன்னுமொரு ஆச்சரியமும் நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் (Avebury) 100 தொன்களுக்கும் அதிக எடையுள்ள, நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. 500 மீட்டர் அகலமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. இதுவும் 5000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதையும் யார் அமைத்தார்கள்? ஏன் அமைத்தார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.[/size]

[size=5]   [/size]

[size=5]

photo%204.jpg[/size]

[size=5]

photo%205.jpg[/size]

[size=5]"தற்செயலாக எகிப்தில் இருக்கும் பிரமிட்டைப் போல, சில்பரியிலும் ஒரு பிரமிட் இருந்திருக்கிறது. இதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எப்படி மர்மங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவது?" என்று மீண்டும் மீண்டும் உங்களுக்கு சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் சந்தேகம் கொள்ளும் மனசுதானே நமக்கு உள்ளது. ஒரு வகையில் இந்தச் சந்தேகங்களும் சரியான பாதைக்கே நம்மை இட்டுச் செல்லும். சந்தேகங்கள் அடிக்கடி தோன்றினால்தான், விளக்கங்களும், விடைகளும் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதற்காக கணவன், மனைவி அடிக்கடி சந்தேகப்பட்டு, விளக்கங்களும் விடைகளும் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்றல்ல அதன் அர்த்தம். வாழ்க்கை என்பது மிஸ்டரிகளாலான பிரமிடுகள் அல்ல. ஆனால், அறிவியல் நமக்குச் சொல்லும் முக்கிய பாடமே சந்தேகப்படு என்பதுதான். மேலே உங்களது கேள்விக்குப் பதிலாக, நான் இன்னுமொரு அதிசயம் பற்றியும் சொல்கிறேன்...........[/size]

[size=5]

photo%206.jpg[/size]

[size=5]இங்கிலாந்தில் 'யோர்க் ஷையர்' (Yorkshire) என்னுமிடத்தில் உள்ள கிராமமான தோர்ன்ப்ரோவில் (Thornbrough) 5500 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மிக நீண்ட வட்ட வடிவ அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது. அதைப் பார்த்தீர்களானால் இப்போது வரையப்படும் பயிர் வட்டங்களைப் போலவே இருக்கும். இதைக் கூட மேலே இருந்துதான் முழுமையாகப் பார்க்க முடியும். அவ்வளவு பெரியது அது. மொத்தமாக மூன்று வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சொன்னது போல பயிர்களாலோ, கற்களாலோ அமைந்த வட்டங்கள் அல்ல இவை. வட்டவடிவமாக திட்டுகளால் உருவாக்கப்பட்டிக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட இந்த மூன்று வட்டங்களையும் இணைக்கும் அமைப்பு, நேர்கோடான அகலமான பாதை போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 5500 ஆண்டுகளில் ஏற்பட்ட எத்தனையோ காலநிலை மாற்றங்களினாலும் இது அழியாமல் அப்படியே இருக்கின்றன என்பதுதான். வழமை போல ஏன், எதற்கு இவை அமைக்கப்பட்டன என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால் நமக்கு இவை பற்றி வேறு ஒரு வித்தியாசமானதும், ஆச்சரியமானதுமான  தகவல் கிடைக்கிறது. அந்தத் தகவல் எகிப்தின் பிரமிட்டுகளையும், தோர்ன்ப்ரோ வட்டங்களையும், வேறொன்றுடன் இணைக்கும் அதிசயம்.[/size]

[size=5]

photo%208.jpg[/size]

[size=5]எகிப்தில் மொத்தமாக 138 பிரமிட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் புராதனமான கீஸா பிரமிட்டுகளான மூன்று பிரமிட்டுகளும் மிக முக்கியமானவை. கூஃபு பிரமிட், காஃப்ரே பிரமிட், மென்கௌரே பிரமிட் (Khufu, Khafre, Menkaure) என்பனதான் அந்த மூன்று பிரமிட்டுகளும். இந்த மூன்றையும் கவனித்தால் மூன்றும் ஒரு நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பவை போலத் தோன்றும். ஆனால் உண்மையாக அதில் ஒன்று மட்டும் சற்றே விலகியிருக்கும். ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்ற காரணத்தைப் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில் ஓரியன் (Orion) நட்சத்திரங்களும் ஒன்று. ஓரியன் நட்சத்திரங்களில் முக்கிய மூன்று நட்சத்திரங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல இருக்கும். ஆனால் அதிலும் ஒரு நட்சத்திரம் மட்டும் சற்றே விலகியிருக்கும். அந்த ஓரியன் நட்சத்திரங்கள் மூன்றும் எப்படி அமைந்திருக்கின்றனவோ அதே போல, மிகச் சரியாக கீஸா பிரமிட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து தோர்ன்ப்ரோவில் அமைந்த மூன்று வட்டங்களின் அமைப்பும் எந்த மாற்றமுமில்லாமல் அதே வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதே திசை. அதே வரிசை. [/size]

[size=5]

photo%209.jpg[/size]

[size=5]

photo%2010.jpg[/size]

[size=5]

photo%2011.jpg[/size]

[size=5][/size][size=5]கிப்தில் பிரமிட்டுகள், இங்கிலாந்தில் வட்ட அமைப்புகள், வானத்தில் நட்சத்திரங்கள் என மூன்றுமே ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பாகின? தொலைத் தொடர்பு என்னும் பேச்சுக்கே இடமில்லாத, 4500 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலத்தில், இவை எப்படிச் சாத்தியமாகின? மனிதர்களால் இவை நிச்சயம் சாத்தியமாகி இருக்க முடியாது என்றே பலர் சந்தேகப்படுகிறார்கள். அப்படிச் சாத்தியமாகி இருக்கும் பட்சத்தில், மனிதர்களுக்கு அதிபுத்திசாலிகளான அயல் கிரகவாசிகள் யாராவது உதவியிருக்கலாம். அப்படி உதவி செய்த அந்த அயல் கிரகவாசிகளுக்கும் ஓரியன் நட்சத்திரங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். இவை எல்லாமே வெறும் ஊகங்கள்தான். ஆனால் அர்த்தங்கள் இல்லாதவை என ஒதுக்கித் தள்ளக் கூடிய ஊகங்கள் அல்ல. இவை ஊகங்களாக இருந்தாலும், அவை சுட்டிக் காட்டும் திசை, நாம் நம்பியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துபவை.    

ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்ல யாருமே இல்லை. ஒரு வேளை ஊகங்களே உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த உண்மைகள் ஏன் நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றன? இல்லாவிட்டால் நாம் நினைப்பது போல எதுவுமே இல்லையா? இவையெல்லாமே மனிதனால் தற்செயலாகவும், திட்டமிட்டும் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தானா?[/size]

[size=5] 

இவையெல்லாவற்றையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் இதுவரை விட்டு விலகியிருந்த பயிர் வட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டும் எங்கு நாம் ஆரம்பித்தோமோ அங்கேயே நமது விடையையும் தேடிக் கொள்ள வேண்டும் எனவே க்ராப் சர்க்கிள் என்று சொல்லப்படும் பயிர் வட்டங்களை நோக்கி நாம் நகரலாம்

அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருப்பீர்களா?[/size]

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

[size=4]

Photo%201.jpg[/size]

[size=4]இந்த வாரத்துடன், இந்தத் தொடர் பத்தாவது அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்கிறது. தொடரில் இதுவரை சொல்லப்பட்டவற்றை நீங்கள் என்ன விதத்தில், எந்தக் கோணத்தில் மனதில் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பேய்க்கதைகள் கேட்பது போல மர்மத்தையும், திகிலையும் மட்டும் எதிர்பார்த்து, இதை வாசித்திருப்பீர்களானால், நான் மாபெரும் தோல்வியுற்றவனாவேன். பேய்கள் போன்று பகுத்தறிவுக்கே ஒத்துவராதவற்றைப் பார்த்ததாகச் சிலர் தலையிலடித்துச் சத்தியம் செய்வது போல, இவற்றையும் ஒரு மூடநம்பிக்கையாக நான் உங்களுக்குள் விதைக்கப் பார்க்கிறேன் என்று வாசிப்பவர்கள் யாராவது நினைத்தாலும், எனது நோக்கம் தோல்வியடைந்துவிடும். சிலர் ஒருபடி மேலே போய், "ஏலியனா! இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏலியனும் இல்லை. பறக்கும்தட்டும் இல்லை. எல்லாமே ஏமாத்து வேலை" என்று ஏளனம் செய்வார்கள். ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களில் நான் யாருக்கும் குறைந்தவனல்ல. மூடநம்பிக்கையின் எந்த மூலையிலும் உங்களை நான் விட்டுவிட்டுத் திரும்பிச் செல்ல மாட்டேன். அறிவியலினதும், ஆராய்ச்சியினதும் கைகள் எந்தெந்த இடங்களில் நீண்டு கொண்டிருக்கிறதோ அங்கே மட்டும்தான் நான் உங்களை அழைத்துச் செல்வேன்.

ஏலியன்களும், பறக்கும் தட்டுகளும் இருக்கின்றன என்பதை முற்றாக மறுத்து, அதுபற்றிப் பேசுபவர்களை முட்டாள்கள் போலப் பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன். ஏலியனையோ, பறக்கும் தட்டையோ கண்ணால் காணும்வரை அவை இருக்கின்றன என்று கூற முடியாது என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்து நாடுகளும் சேர்ந்து SETI (Search for ExtraTerrestrial Inteligence) என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் நோக்கமே ஏலியன்கள், அயல்கிரகங்களில் இருக்கின்றனவா என்று தேடுவதுதான். உலகின் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதியுயர் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். 'ஹார்வார்ட்' உட்பட பல்கலைக்கழகம் அடக்கமாக பிரபலமான அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இதில் சேர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. ஆண்டொன்றுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் இதற்கெனச் செலவு செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் 'ஆப்ஸர்வேட்டரி' (Observatory) என்னும் பாரிய தொலைநோக்கிக் கருவிகளை அமைத்து, விண்வெளியை அங்குலம் அங்குலமாக, ஒவ்வொரு செக்கனும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் தேடுபவர்கள் யார்? அனைவரும் படிப்பில் மாமேதைகள். ஒன்றுமே இல்லாத ஒரு பைத்தியக்காரத்தனத்துக்கு இப்படி நேரத்தையும் பணத்தையும் இவர்கள் செலவழிப்பார்களா? அப்படி இவர்கள் செலவளிப்பதை அரசுகள் பார்த்துக் கொண்டு பண உதவி அளிக்குமா? ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத்தானே இப்படிச் செய்கிறார்கள். அந்த உலக மகாவிஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்களா? அவர்கள் முட்டாள்களாக இருக்கும் பட்சத்தில், நாமும் முட்டாளாக இருப்பதில் தவறில்லைதானே!  [/size]

[size=4] [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4]பல நாட்களுக்குப் பின்னர் நாம் மீண்டும் பயிர் வட்டங்களின் இடத்திற்கு வந்திருக்கிறோம். எனவே இன்று கொஞ்சம் விசேசமாக பயிர்வட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். மனிதர்களே உருவாக்கவில்லை என்று அடித்துச் சொல்லும் பயிர்வட்டச் சம்பவங்களிலிலிருந்து இன்று ஆரம்பித்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் ஆச்சரியங்களின் ஊற்றாக இருக்கும் ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகே சென்று, அந்த இடத்தில் பயிர்களுக்கு ஏதாவது நடந்ததா எனப் பார்க்கலாம் வாருங்கள். 

1996ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி, மாலை 6 மணியளவில் லூஸி பிரிங்கெல் (Lucy Pringle) என்னும் பெண்மணி, தன்னுடைய மகனைப் பார்ப்பதற்கு டாக்ஸி ஒன்றில், ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் A303 நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். இருபக்கமும் பச்சையாய்ப் பரவியிருக்கும் வயல்வெளிகள். ஸ்டோன் ஹெஞ்சை டாக்ஸி அண்மித்ததும், சாலையில் மறுபுறமாக இருந்த வயல்வெளியில் காற்றின் சுழற்சியால் ஏற்பட்ட புழுதிபோன்று, ஏதோ ஒன்று உருவாவதை அவதானித்தார். ஏனோ அவருக்கு அது வினோதமான காட்சியாகத் தெரிந்தது. டாக்ஸி ஓட்டுனரிடம் டாக்ஸியைச் சாலையில் நிறுத்தும்படி கூறிவிட்டு நடப்பதை அவதானித்தார். வயலில் இருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு மிகப்பெரிய வட்டவடிவத்தில், புகை போன்று காற்றுச சுழன்றபடி அந்த வயல்வெளிப் பிரதேசத்தில் அங்கும் இங்கும் அலைவதை அவதானித்தார். அவதானித்தது அவர் மட்டுமல்ல, அவருடனிருந்த டாக்ஸி ஓட்டுனரும்தான். யூலை மாதங்களில் ஐரோப்பாவெங்கும் இருட்டாவதற்கு மாலை 9 மணிக்கு மேலாகும். இங்கிலாந்திலும்  நல்ல வெளிச்சமான பகல் நேரம் அது. திடீரென அந்த வட்டச் சுழற்சி நின்று மறைந்து போனது. அங்கே லூஸி கண்ட காட்சி யாருமே நம்பமுடியாதது. 115 மீட்டர் அகலமான மிகப்பெரிய பயிர்வட்டம் அங்கே காட்சியளித்தது. 151 வட்டங்களைக் கொண்டு அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. முன்னர் ஒருமுறை நான் சொன்னது போன்று 'ஜூலியா செட்' (Julia Set) என்னும் வடிவுடைய ஃப்ராக்டல் (Fractal) சித்திரமாக அது இருந்தது. ஃப்ராக்டல் என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த கணித வரைவு ஆகும். [/size]

[size=4] [/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4]பட்டப்பகலில் பலர் சாட்சியாக இருக்கும்போது உருவானது 'ஜுலியா செட்' பயிர்வட்டம். லூஸியின் சாட்சியத்தின்படி மொத்தமாக 20 நிமிசங்களில் அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. லூஸியினதும், டாக்ஸி ஓட்டுனரதும் சாட்சியை நாம் பொய்யென்று வைத்தாலும், ஸ்டோன் ஹெஞ்சை வானத்தில் இருந்து பார்ப்பதற்கு ஆயத்தமான சிறு விமானம் ஒன்றின் விமானியும் அதில் அமர்ந்தவர்களும் மாலை 5.30 மணியளவில் அதற்கு மேலாகப் பறந்து சென்றிருக்கிறார்கள். அந்த இடத்தில் எதுவும் காணப்படவில்லை. பின்னர் மீண்டும் மாலை 6.15 மணி போலத் திரும்பி வந்தபோது, இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்திருக்கிறது.அதாவது 45 நிமிடங்களில் அது உருவாக்கப்பட்டிருகிறது என்று விமானி சொல்லியிருக்கிறார். அதோடு ஸ்டோன் ஹெஞ்சின் பாதுகாவலர்களாகக் கடமையாற்றியவர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் விட, 'A303 நெடுஞ்சாலை' மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலை. எப்போதும் வாகனப் போக்குவரத்துடன் காட்சியளிக்கும் ஒரு நெடுஞ்சாலை அது. அந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் மனிதர்கள் பட்டப்பகலில் அந்தப் பயிர் வட்டத்தை உருவாக்கியிருக்கவே முடியாது. அப்படி உருவாக்கினோம் என்று யாராவது கூறினாலும் நம்பவே முடியாததாகவே இருக்கும்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இரண்டுமே நம்ப முடியாத சம்பவமாகவே இருக்கிறது. மனிதர்கள் உருவாக்காமல் வேறு ஒரு சக்தி உருவாக்கியது என்பதையும் நம்ப முடியவில்லை. மனிதர்கள் பட்டப்பகலில் உருவாக்கினார்கள் என்பதையும் நம்பமுடியவில்லை. ஆனால் அந்த பயிர்வட்டம் உருவாகியதை மட்டும் நம்பித்தான் ஆக வேண்டும். 

மீடியாக்கள், மக்கள் என அனைவரிடமும் இந்தச் சம்பவம் மிகப்பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியது. மக்கள் அங்கு கூட்டமாகக் கூடத் தொடங்கினர். அப்போது, அந்தப் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று இரண்டு இளைஞர்கள் பேட்டி கொடுத்தனர். அந்த இளைஞர்கள் சில பயிர்வட்டங்களை ஏற்கனவே உருவாக்கியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு மீடியாவில் விளம்பரம் கிடைத்த ஒன்றில் அதுவும் பட்டப்பகலில், பலரின் கண்முன்னே உருவான ஒன்றை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. விளம்பரத்துக்காக பல வித்தியாசமான பயிர்வட்டங்களை நாம்தான் உருவாக்கினோம் என்று மூலைக்கு மூலை புறப்பட்டு வரும் சம்பவங்கள் அந்த நேரங்களில் அதிகமாகவே நடக்கத் தொடங்கியிருந்தன. இந்த ஜூலியா செட் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று சொன்ன இளைஞர்களின் பேட்டியில் பல தடுமாற்றங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எது எப்படியாயினும் இந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்று நம்புவது மிகவும் கடினமாகவே இருந்தது. மனிதர்கள் உருவாக்கவில்லை என்பதை மேலும் உறுதி செய்வதற்கு, இன்னுமொரு பயிர் வட்டமும் உருவாகியது. அது அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. [/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4]மேலே சொல்லப்பட்ட ஜூலியா செட் பயிர்வட்டம் உருவாகி, சரியாக 11 வருடங்களின் பின்னர் அதே நாளில் நடந்தது இன்னுமொரு ஆச்சரியமான சம்பவம். 2007ம் வருடம் ஜூலை மாதம் 7ம் திகதி அந்தச் சம்பவம் நடந்தது. வின்ஸ்டன் கீச்சும் (Winston Keech), காரி கிங்கும் (Gary King) நண்பர்கள். வின்ஸ்டன் ஒரு எஞ்சினியராக இருந்தாலும், அவருக்கு ஏலியன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நெடுநாட்களாக உண்டு. இரவில் படம் பிடிக்கும் காமெராக்கள் சகிதமாக வைல்ட்ஷையரில் உள்ள வயல்வெளிப் பிரதேசங்களில் திரிந்தபடி கண்காணிப்பதே அவர் வேலை. 07.07. 2007 அன்று, 'ஈஸ்ட்ஃபீல்ட்' (East Field) என்னும் இடத்திலுள்ள மலையில் நண்பர் காரியுடன் அமர்ந்தபடி வயல்வெளிகளை அவதானித்துக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த காமெராக்களை ஓடவிட்டுக் கொண்டு உடனிருந்த காரியுடன் பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டி, நேரம் அதிகாலை 1.35 ஐ நெருங்கியது. கும்மிருட்டில் திடீரென 'ஃப்ளாஷ்' வெளிச்சங்கள் போல ஒளி வட்டங்கள் தோன்றின. இதற்கென்றே தயாராக இருந்த அவர்கள் ஆச்சரியத்துடனும், சந்தோசத்துடனும், ஒருவித பயத்துடனும் அங்கு நடப்பதை வீடியோக் காமெராவினால் பதிவு செய்தனர். அத்துடன் 'நைட்விஷன்' பொருத்தப்பட்ட வேறு கமெராவில் பார்த்தபோது, எங்கும் மனித நடமாட்டமோ, வாகனங்களோ காணப்படவில்லை. அவர்கள் அமர்ந்திருந்தது சிறிய மலைப்பிரதேசம் என்றபடியினால், அனைத்தையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிகாலை 3 மணிவரை அந்த ஃப்ளாஷ் வெளிச்சங்கள் ஆங்காங்கே எரிந்து அணைவதைக் கண்டார்கள்.  3.13 மணிவரை அவர்களுக்கு முன்னால் காட்சி தந்த பெரிய வயல்வெளியில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் ஏழே நிமிடங்களின் பின்னர் 3.20க்குப் பார்த்த போது அவர்களால், அவர்கள் கண்களை நம்பவே முடியவில்லை. வயல்வெளியில் நீளமான வடிவமொன்றைக் கண்டார்கள். அது என்ன எதுவென்று தெரியவில்லை. உடன் சென்று பார்க்கவும் பயமாக இருந்தது. நான்கு மணியளவில் கொஞ்சம் வெளிச்சம் வரத்தொடங்கியதும் பார்த்த போதுதான் தெரிந்தது. அது ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் என்பது. [/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4]நடந்தவை அனைத்துமே காட்சிகளாக, சாட்சிகளாக வின்ஸ்டனின் காமெராக்களில் பதிவாகியிருந்தன. உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் 300 மீட்டர் நீளமாகப் பிரமாண்டமானதாக இருந்தது. 150 தனித்தனி வட்டங்களால் அது உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சம்பவத்தைப் பொய்யென்று யாருமே மறுக்க முடியாதபடி, உண்மையான வீடியோ ஆதாரங்களுடன் அவர்கள் கொடுத்த பேட்டி ஐரோப்பாவையே உலுக்கியெடுத்தது. அனைத்துப் பத்திரிகைகளும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. இதில் என்ன ஆச்சரியமென்றால், 'மைக்ரோவேவ்' (Microvave) என்று சொல்லப்படும்  வெப்பக் கதிர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது உடனடியான பரிசோதனைகள் மூலம் அவதானிக்கப்பட்டது. யாரும் இதை நாங்கள்தாம் செய்தோம் என்று சொந்தம் கொண்டாடி வரவுமில்லை. மனிதனால் செய்யப்படாத பயிர்வட்டத்துக்கு மிகவும் ஆணித்தரமான சாட்சியாக இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்தது.[/size]

[size=4]இதுவரை பயிர்வட்டங்களைப் பற்றி பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எவராலும், எதுவும் சொல்ல முடியவில்லை. ஏழே நிமிடங்களில் 300 மீட்டர் அதாவது இரண்டு ஃபுட்பால் மைதானங்கள் அளவு பெரிய பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாக முடியும்? சரி, இதை மனிதன்தான் உருவாக்கினான் என்றால் அவனுக்குக் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் இதைச் செய்வதற்குத் தேவைப்பட்டிருக்கும். சரி, இவை மனிதனால் செய்யப்படவில்லை என்றால், யாரால் செய்யப்படுகின்றன? பகலில் காற்றுச் சுழல்கள் போலவும், இரவில் வெளிச்சப் பந்துகள் போலவும் காட்சி தருபவை என்ன? இப்படியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்த சிலர் வேறு ஒரு விளக்கத்துடன் நிற்கிறார்கள். அந்த விளக்கத்தை நீங்கள் அறிந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பீர்களோ தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்களில் சிலர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா...?

அதைப் படத்திலேயே பாருங்கள் தெரியும்.......![/size]

[size=4]

photo%206.jpg[/size]

[size=4]ஆம்! சாட்சாத் இந்துக்களின் 'ஓம்' என்னும் அடையாளம்தான் இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களில் சிலர். இப்படிப் பர்க்கும்போது நிலைமை மேலும் சிக்கலான ஒரு வடிவத்தையே எடுக்கிறது என்று நம்பக் கூடிய நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.  இந்த அளவுக்கு மேல் இன்று யோசித்தால் தலையே வெடித்துவிடும். எனவே இந்த வாரம் இவை பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த வாரம் மீண்டும் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்...[/size]

[size=4]

http://www.uyirmmai.com/[/size]

  • தொடங்கியவர்

[size=4]

photo%201.jpg[/size]

[size=4]இந்துக்களின் 'ஓம்' என்னும் வடிவம் பயிர்வட்டங்களில் இருந்தது நம்மை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது என்னவோ உண்மைதான். அதுவும் பயிர்வட்டங்களின் வரலாற்றிலேயே மிகவும் ஆணித்தரமாக, மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லப்படும் ஒன்றாக, 'ஓம்' வடிவப் பயிர்வட்டம் இருக்கிறது என்கிறார்கள். உண்மையில் அந்த வடிவம் 'ஓம்' தானா அல்லது வேறு ஒன்றைக் குறிப்பதா? என்பது இன்றுவரை புரியவில்லை. 'ஓம்' என்னும் வடிவத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துக் கோடுகளும் அந்தப் பயிர்வட்டத்தில் உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அது 'ஓம்'தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சிலர். ஒரு பேச்சுக்கு அதை 'ஓம்' என்று நாம் எடுத்துக் கொண்டால், ஏலியன்களுக்கும்  'ஓம்' வடிவத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆராய்ச்சிக்குப் போக வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, புராதன ஏலியன்களின்  (Ancient Aliens) ஆராய்ச்சியில் இந்து மதப் புராணக் கதைகளும், கடவுளர்களும்தான் மேற்குலக ஆராய்ச்சியாளர்களால் முதன்மைப்படுத்திச் சொல்லப்படுவதாக இருக்கிறது. 'புராதன ஏலியன்களும், இந்து மதமும்' என்று இன்னுமொரு தொடரையே உங்களுக்கு நான் தரும் அளவுக்குத் தகவல்கள் அவை பற்றி நிறைந்திருக்கின்றன. முடிந்தால் வேறொரு தொடர் மூலம் அதைத் தருகிறேன்.

மேலே சொல்லப்பட்ட 'ஓம்' வடிவப் பயிர்வட்டத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. அது 07.07.07 இல் என்று எல்லாமே ஏழில் வரும் திகதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இது இந்துக்களின் 'ஓம்'தான் என்று சிலர் அடித்துச் சொல்வதற்கு, சாட்சியாக வேறொரு வட்டச் சித்திரத்தைக் காட்டுகிறார்கள். இந்தப் பயிர்வட்டச் சித்திர அமைப்புகள் பயிர்களினால் மட்டுமல்ல, மணல், ஐஸ் போன்றவற்றினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அமெரிக்காவின் ஆரிகனில் (Oregon) 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு ஆற்றுப்படுகைக்கு அருகே இருக்கும் மணல்பரப்பில் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சித்திரம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டிருந்தது. "ஆற்று மணலில் சித்திரம் வரைவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. மனிதர்கள் சுலபமாக அதை வரைந்துவிடலாமே" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்தச் சித்திரம் நீங்கள் நினைப்பது போலல்ல. மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சித்திரம் அது. அந்தச் சித்திரத்தில் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் மொத்த நீளம் 21 கிலோமீட்டர் என்றால் அதன் பிரமாண்டத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கோடும் 10 அங்குலம் அகலமுள்ள மிகவும் பிரமாண்டமான சித்திரம் அது. அந்தச் சித்திரம் என்ன வடிவத்தில் இருந்தது என்பதுதான் இங்கு ஆச்சரியமே! அந்த வடிவம் என்ன தெரியுமா? இந்துக்களின் 'இயந்திரம்' (Sri Yantra) என்று சொல்வோமே அந்த வடிவத்தில் அது இருந்தது. [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4]ஒரே இரவில் இவ்வளவு பெரியதொரு சித்திரத்தை மனிதர்களால் உருவாக்கவே முடியாது. அதுமட்டுமல்லாமல், அந்தச் சித்திரம் அமைக்கப்பட்ட இடம், ஈரமான சேற்று மண்ணில். அங்கு யாராவது சித்திரத்தை அமைத்திருந்தால்,  அவர்களது காலடித் தடம் எல்லா இடங்களிலும் இருந்திருக்க வேண்டும். அந்தச் சித்திரம் அமைந்த இடம் மட்டுமில்லாமல், அதைச் சுற்றிவர எங்குமே எந்தக் காலடித் தடங்களும் காணப்படவில்லை. மனிதர்கள் செய்திருந்தால், செய்தவர்களின் காலடித் தடத்தில் ஒன்றாவது அங்கு இருந்திருக்க வேண்டுமல்லவா? சேற்று மணலில் தடங்களை அழித்துவிட்டு எப்படிச் செல்ல முடியும்? சித்திரத்தின் உள்ளேயும் எந்தக் காலடிகளும் இல்லை. எப்படி இது சாத்தியம்? அந்தச் சித்திரம் அமைக்கப்பட்டதும் மக்கள் கூட்டமாக வந்து அதைக் கவனிக்கத் தொடங்கியபோது, இருவர் தாங்கள்தான் அதை உருவாக்கியது என்று சேறு படிந்த காலணிகளுடன் வந்தார்கள். அவர்கள் அதை வரைந்த விதத்தை விளக்கியபோதே சந்தேகம் தோன்றியது. அவர்களிடம் இது போல ஒன்றைச் சாதாரண காகிதத்தில், அல்லது நிலத்தில் மீண்டும் வரைந்து காட்டினால், தகுந்த பரிசு அளிக்கிறோம் என்று கூறியதும், போக்குக் காட்டிவிட்டு அவர்கள் நழுவியதும் நடந்தது.

உலகமெங்கும் மனிதர்கள் அறிய முடியாத இது போன்ற மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி நடக்கும் மர்மங்களில் பல, மனிதர்கள் சம்பந்தப்படாத போதும் நம்பக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றன. இங்கு நடந்திருப்பதும் மனிதர்களல்லாத ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டதாகவே சொல்கிறார்கள். அதுவும் அங்கு வரையப்பட்டிருக்கும் சித்திரம் இந்துக்களின் 'ப்ரீ இயந்திரம்'  என்று சொல்லும் வடிவில் அமைந்திருந்தது. ப்ரீ இயந்திரச் சித்திரத்துடன் முடிச்சுப் போட்டே, 'ஓம்' என்னும் பயிர் வட்டத்தையும் இந்துக்களுடைய வடிவம்தான் என்கிறார்கள் சிலர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 'ஓம்' பயிர் வட்டத்தில் இரவு பகலாக தியானங்களும், இந்துப் பஜனைகளும் பல நாட்களாக நடந்து வந்தது தனிக் கதை.[/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4]பயிர்வட்டங்கள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன அல்லது வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றன என்பதைவிட, ஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் கேள்விக்குத்தான் எந்தப் பதிலும் கிடைப்பதில்லை. ஆனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு பயிர்வட்டத்துக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாகவே, அவற்றை ஆராய்பவர்கள் நினைக்கிறார்கள்.  இதுவரை உருவாக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான பயிர்வட்டங்களுக்கு, அவை என்னென்ன அர்த்தங்களைக் கொடுக்கின்றனவோ, அதைப் பொறுத்துத் தனித்தனிப் பெயர்களை அதை ஆராய்பவர்கள் சூட்டியிருக்கின்றனர். பல சிக்கலான கணித வரைவுகளையுடைய பயிர்வட்டங்கள் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கின்றன. பயிர்வட்டங்களுக்கும் 'கேத்திரகணித' வரைவுகளுக்கும் (Geometry) நிறையவே சம்பந்தங்கள் இருப்பது, அவற்றின் அமைப்பின் மூலம் இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒரு பேச்சுக்கு இந்தப் பயிர்வட்டங்களை ஏலியன்கள்தான் உருவாக்குகின்றன என்று வைத்துக் கொண்டால், 'ஏலியன்களுக்கும், ஜியாமட்ரிக்கும் அப்படி என்னதான் சம்பந்தம் இருக்கும்?' என்ற கேள்வி நம்மை எப்போதும் ஆச்சரியப்பட வைக்கும்.  

இந்த வகையில் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி, இங்கிலாந்தில் உள்ள 'பார்பர்ரி காஸில்' (Barbury Castle) என்னுமிடத்தில் ஒரு பயிர்வட்டம் தோன்றியது. பல பரிசோதனைகளின் பின்னர் அது மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்ற முடிவுக்கு அதை ஆராய்ந்தவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்தப் பயிர்வட்டத்தின் அமைப்பு அனைவரையும் குழப்பத்திலாழ்த்தியது. வட்டவடிவமாகக் காட்சிதரும் அந்தச் சித்திரத்தில், ஒரு கோடு மையத்திலிருந்து ஆரம்பித்து, வட்டத்தின் விளிம்புவரை வளைந்தும் திரும்பியும் செல்வது போல  அமைக்கப்பட்டிருக்கிறது. மைய வட்டத்தில் ஆரம்பிக்கும் கோட்டின் ஆரம்பத்திலேயே ஒரு சிறு புள்ளி போன்ற வட்டமும், முடிவில் மூன்று வட்டங்களும் காணப்படுகின்றன. இது அந்தப் பயிர்வட்டத்தில் ஒரு வித்தியாசமான தோற்றதைக் கொடுத்தது. அந்தச் சித்திரத்தின் படம் மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பயிர்வட்டம் மனிதனால் செய்யப்படவில்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின்னர், அந்தப் பயிர்வட்ட அமைப்புக்கு என்ன அர்த்தம் என்பதை அறிவதற்கு மிகவும் ஆவலுடன் முயன்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், என்ன முயன்றும் சுலபமாக அதன் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 150 அடிகள் அகலமான அந்தப் பயிர்வட்டம், பார்லி (Barley) பயிரினால் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை உருவாக்கப்பட்ட சிக்கலான பயிர்வட்டங்களில், முதன்மையான பயிர்வட்டமாக அது கருதப்படுகிறது. யாருக்கும் அதன் அர்த்தம் புரியவில்லை. அதன் அர்த்தம் புரியாததனால், 'நாங்கள்தான் உருவாக்கினோம்' என்று சொல்லி அதைச் சொந்தம் கொண்டாட யாரும் வரவுமில்லை. சில காலங்களின் பின்னர் நார்த் கரோலினாவைச் (North Carolina) சேர்ந்த ஆஸ்ட்ரோ பிசிஸிஸ்ட்டான 'மைக் ரீட்' (Dr.Mike Reed) என்பவர் அதற்கான அர்த்தத்தைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த அர்த்தம் அனைவரையும் மலைக்க வைத்தது. "அடக்கடவுளே! இது எப்படிச் சாத்தியம்?" என்று பலரையும் திகைக்க வைத்தது. "மனிதனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது எப்படி ஏலியன்களுக்குத் தெரிந்திருக்க முடியும்?" என்று நினைக்க வைத்தது? "இது மனிதன் உருவாக்கியதுதானோ?" என்றும் சந்தேகப்பட வைத்தது. ஆனால், 'மனிதனால் இப்படிச் சிந்தித்து சிக்கலாக இதுபோல ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கவே முடியாது' என்றே பின்னர் முடிவுக்கு வந்தனர். இவ்வளவு சிந்திக்க வைத்த அந்தப் பயிர்வட்டத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?[/size]

[size=4][size=2]photo%206.jpg[/size][/size]

[size=4]நாம் கணிதத்தில [/size][size=4]வட்டங்களின் சமன்பாடுகளில் Equations) பயன்படுத்தும் பை அதாவது 'π' என்பதுதான் அதுகணிதம் படித்தவர்களுக்கு பை (Pi)என்றால்22/7 அல்லது 3.141592654... என்பது தெரியும்கணிதத்தில் பை என்பதை நாம் பல இடங்களில் பயன்படுத்தி வந்திருக்கின்றோம் அதே பை யை அந்தப் பயிர்வட்டத்தில் அதன் கணிதப் பெறுமானத்தைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள் ஒரு வட்டத்தை அதன் மையத்திலிருந்து பத்துச் சமபங்குகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் [/size]

[size=4]ஒன்று என்னும் எண்ணிக்கையைக் கொடுத்து என்னும் பெறுமானத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இதை வாசிக்கும்போது நான் மேலே கொடுத்திருக்கும் வர்ணப் படத்தைச் சற்று நிதானமாக அவதானித்துப் பாருங்கள் நான் சொல்ல வருவது முழுமையாகப் புரியும்[/size]

[size=4][size=4]photo%207.jpg[/size][/size]

[size=4]பை யினது பெறுமதியைப் பத்து இலக்கங்களுக்குக் கொடுத்தது மட்டுமல்லாமல்அதன் தொடர்ச்சியாக மூன்று புள்ளிகளையும் கொடுத்திருக்கிறார்கள் எல்லாவற்றையும் விட ஆச்சரியம் என்னவென்றால் மூன்றுக்குப் பக்கத்தில் வரும் தசம புள்ளியைக் குறிப்பதற்கு பயிர்வட்டத்தில் ஒரு சிறிய புள்ளி போன்ற வட்டத்தை மையத்தின் ஆரம்பத்திலேயே அமைத்திருக்கிறார்கள் இந்தப் பயிர்வட்டத்தை மனிதன் அமைத்தானோ ஏலியன் அமைத்ததோ என்று சிந்திப்பதை விட அது அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புத்தான் பலராலும் பேசப்படுகிறது பயிர்வட்டங்களிலேயே ஒரு மைல்கல்லாக அமைந்த சித்திரமாக அது கணிக்கப்படுகிறது அதை மனிதன் செய்யவே இல்லையென்ற முடிவுதான் ஆராய்ந்தவர்களின் முடிவாக உள்ளது ஒருவேளை மனிதன் இதைச் செய்திருந்தால் அந்த மனிதன் பயிர்வட்டத்தைச் செய்து கொண்டிருக்கும் ஒருவனாக இருக்கவே தேவையில்லை அவன் உலகில் மாபெரும் கணிதவியலாளனாக எல்லாராலும் மதிக்கப்பட்டிருப்பான் இப்படி ஒளிந்திருந்து பயிர்வட்டங்களை அவன் அமைக்கவே தேவையில்லை ஆனால் கிடைத்த அனைத்துத் தகவல்களும் அந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கவில்லை என்று அடித்துக் கூறுகிறதுஅந்த வகையில் அதை ஏலியன்கள் உருவாக்கினார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது அப்படி இருக்கும்பட்சத்தில் ஏலியன்கள் பை என்பதை எப்படித் தெரிந்துகொண்டார்கள் கணிதம் என்பது உலக ரீதியாக இல்லாமல் பிரபஞ்ச ரீதியாக ஒரே மாதிரியானதுதானா அல்லது ஏலியன்கள் பை மூலமாக நமக்கு ஏதாவது செய்திகளைக் கூற விரும்புகின்றனரா

இவையெல்லாம் நம்மைத் துளைத்தெடுக்கும் கேள்விகளாகவே இருக்கின்றன இவற்றிற்கான பதில்களை நாம் எப்போதுதான் பெற்றுக் கொள்ளப் போகிறோம் விடை தெரியாத மர்மச்சுழல்கள் நம்மை மேலும் மேலும் அழுத்தியபடியே இருக்கின்றன இந்தச் சூழ்நிலையில் மனிதனால் செய்யப்பட்ட பயிர்வட்டங்கள் எவை மனிதனால் செய்யப்படாதவை எவை என்று ஆராய்ச்சியாளர்கள் எப்படி உறுதி செய்கின்றனர் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் எப்படி அவற்றைப் பிரித்துக் கண்டுபிடிக்கிறார்கள் அதை அடுத்த வாரம் பார்க்கலாமா [/size]

[size=4]http://www.uyirmmai.com[/size]

Edited by அபராஜிதன்

உங்கள் தொடர் தொடர்ந்து படித்து வருகின்றேன் . நேரமின்மையால் உடனடியாகப் பதில் போடமுடியவில்லை . மிகவும் பயனுள்ள தொடரை இணைப்பதற்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் . தொடருங்கள் :) .

  • தொடங்கியவர்

[size=4]

photo%201.jpg [/size]

[size=4]

இதுவரை நாம் பயிர்வட்டங்களைப் பற்றி நிறையப் பார்த்திருக்கின்றோம். ஆனால் அவை யாரால் உருவாக்கப்படுகின்றன என்னும் கேள்விக்குத்தான் தெளிவான பதில்கள் நமக்குத் தெரியவில்லை. மனிதனால் உருவாக்கப்பட்டவை, மனிதனால் உருவாக்கப்படாதவை என்ற மேலோட்டமான இரு நிலைகளில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்திருக்கிறோம். பயிர்வட்டங்களை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்றால், 'ஏன் உருவாக்கினார்கள்?', 'எப்படி உருவாக்கினார்கள்?', 'மனிதர்கள் உருவாக்கியதை நாம் எப்படிக் கண்டுகொள்கிறோம்?' என்னும் கேள்விகள் நம் முன்னே வந்து நிற்கும். மனிதர்களால் அவை உருவாக்கப்படவில்லை என்றால், 'அவை யாரால் உருவாக்கப்படுகின்றன?', 'தாமாகவே இயற்கையாக உருவாகின்றனவா?', 'தெய்வசக்தி போல, ஏதாவது ஒரு சக்தி இவற்றை உருவாக்குகின்றதா?' என்ற கேள்விகளும் அடுத்து எழுகின்றன. இந்த நிலையில், பயிர்வட்டங்களைப் பற்றி மேலும் பார்ப்பதற்கு முன்னர், நாம் மேலே உள்ள கேள்விகளுக்கு முழுமையான பதில்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயிர்வட்டங்கள் பற்றி நாம் இதுவரை பார்த்த தகவல்கள் அனைத்தும், அவை பற்றிய புரிதல்களுக்காக அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தொட்டுச் செல்வதாகவே அமைந்திருந்தது. அதனால், பயிர்வட்டங்களின் மேல் ஒரு முழுமையான பார்வையைச் செலுத்தவேண்டிய கட்டாயத்துக்கு இப்போது நாம் வந்திருக்கிறோம்.[/size]

[size=4]  [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4]

[/size]

[size=4]புராதன காலத்திலேயே பயிர்வட்டங்கள் உருவாக்கியதற்கான சான்றுகள் நம்மிடையே இருக்கின்றன. தென்னாபிரிக்கா, சீனா, மேற்கிந்தியா ஆகிய நாட்டவர்களின் புராதனக் கதைகளில் இவை பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும், 1590ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி, இங்கிலாந்தில் பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது என்ற குறிப்பு முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, 1633 இல் இங்கிலாந்திலுள்ள ஒரு பாடசாலை ஆசிரியை பயிர்வட்டத்தைக் கண்டதாகவும், அதற்கு அப்புறம் 1678 இல் பிசாசு ஒன்று, விவசாயிக்கு பயிர்வட்டத்தை உருவாக்கியதாகவும் குறிப்புகள் உள்ளன. அதற்குப் பின்னர் அப்படியே ஓய்ந்துவிட்ட இந்தப் பயிர்வட்டச் சரித்திரம், மீண்டும் 1970 தொடக்கம் 1990 வரையுள்ள காலங்களில் அதிகளவில் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கில் பயிர்வட்டங்கள் தோன்றத் தொடங்கின. உலகளாவிய ரீதியில் இதுவரை 10000 க்கும் அதிகமான பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற கணக்கு இருந்தாலும், 6000 பயிர்வட்டங்கள் முழுமையாக ஆராயப்பட்டு, ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. பயிர்வட்டங்களின் வடிவம், தன்மை, அர்த்தம், நம்பகத்தன்மை போன்றவை அனைத்தும் முழுமையாகப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு ஆவணங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை ஆராய்வதற்கென்றே, 'பயிர்வட்ட ஆய்வாளர்கள்' என்னும் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. பயிர்வட்டங்கள் உருவாகும் போது, தாங்கள் நேரிலேயே கண்டதாகப் பலர் சொல்லியிருந்தாலும், மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த 80 பேர் சொன்ன சாட்சியங்கள் மட்டும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அப்படிச் சாட்சி சொன்னார்கள். அனைவருமே மதிப்பும், மரியாதையும் வாய்ந்த பிரஜைகளாக இருப்பது மேலதிக தகவலாகவும் இருக்கிறது.[/size]

[size=4] [/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4]

[/size]

[size=4]1970 முதல் 1990 வரையுள்ள காலப்பகுதியில் பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்டபோது, உலகம் முழுவதும் அந்தச் செய்தி பரவி, மிகப்பிரபலமாகப் பேசப்படத் தொடங்கியது. பயிர்வட்டங்கள் உருவாகிய ஆரம்ப காலங்களில், அவை ஆச்சரியமான, அதிசயமான, மர்மமானவையாகவும் பார்க்கப்படத் தொடங்கின. இந்த அதிசயத்தினால் கவரப்பட்டு, உலகில் பல மூலைகளிலுமிருந்தும் பார்வையாளர்கள் வர ஆரம்பித்தனர். படிப்படியாக அவற்றின் செல்வாக்குகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. வந்தவர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கேள்வி மட்டுமே இருந்தது. "இந்தப் பயிர்வட்டங்களை உருவாக்குவது யார்?" என்பதே அந்தக் கேள்வி. தொடர்ந்து உருவான பயிர்வட்டங்களின் வடிவங்களில் படிப்படியாகச் சிக்கலான கணித அமைப்புகளும் தோன்ற ஆரம்பித்தன. இதனால். பயிர்வட்டங்களை உருவாக்குபவர்கள் மிகுந்த அறிவாளிகள், சக்தி வாய்ந்தவர்கள் என்ற பேச்சும் வளர ஆரம்பித்தது. இந்தப் பேச்செல்லாம், அயல் கிரகவாசிகள் (ஏலியன்கள்) அவற்றை உருவாக்குகிறார்கள் என்னும் நம்பிக்கையிலேயே பேசப்பட்டன. [/size]

[size=4]

[/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4] [/size]

[size=4]இந்தக் காலகட்டத்தில்தான், அதாவது 1991ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதியன்று இங்கிலாந்தில், 'டக் போவெர்' (Doug Bower), டேவிட் ஷோர்லி (David Chorley) என்னும் இரண்டு 67, 62 வயதுடையவர்கள் தாங்கள்தான் அனைத்துப் பயிர்வட்டங்களையும் உருவாக்கியவர்கள் என்று பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுத்தனர். உலகமே நம்பலாமா? வேண்டாமா? என்று பிரமித்தபடி தவித்துக் கொண்டிருந்த ஒரு மாபெரும் சிக்கலுக்கு விடையளிப்பது போல இருந்தது அவர்கள் பேட்டி. இவர்கள் மூலம் கிடைத்த பதிலால் நிம்மதியடைந்தனர் பலர். "நாம் பயந்தது போல, இவற்றை ஏலியன்கள் செய்யவில்லை" என்ற திருப்தி பலரிடமிருந்து வெளிப்படலாயிற்று. டக், டேவிட் இருவரும் கொடுத்த பேட்டியில், "தாங்கள் இருவரும் 1978ம் ஆண்டிலிருந்தே பயிர்வட்டங்களை உருவாக்க ஆரம்பித்ததாகவும், ஒருநாள் ஒரு ரெஸ்ட்டாரென்டில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்த போது, இந்த ஐடியா தோன்றியது" என்றும் சொன்னார்கள். அத்துடன், அவர்கள் கையுடன் கொண்டுவந்திருந்த, கயிற்றால் இருபக்கமும் கட்டப்பட்டிருக்கும் ஒன்றரை மீட்டர் நீளமான பலகையைக் காட்டி, அந்தப் பலகையை ஒருகாலில் வைத்துக்கொண்டு பயிர்களை அழுத்துவதன் மூலம், பயிர்வட்டங்களை உருவாக்கியதாகவும் சொன்னார்கள். 

ஒருவழியாக எல்லாமே சுமுகமான முடிவுக்கு வந்தது என்றுதான் எல்லாரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் கொடுத்த தொடர்ச்சியான பேட்டிகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் பலரை மீண்டும் சிந்திக்க வைத்தன. 1978ம் ஆண்டிலிருந்து அவர்கள் உருவாக்கிய பயிர்வட்டங்களின் எண்ணிக்கையைக் கவனத்தில் எடுத்தாலும், ஆயிரக் கணக்கான பயிர்வட்டங்கள் எண்ணிக்கையில் வராமல் எஞ்சின. அவற்றை யார் செய்தார்கள் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. இவர்கள் உருவாக்கியதாகச் சொல்லும் எண்ணிக்கையும் நம்பமுடியாததாக இருந்தது. காரணம், இங்கிலாந்தின் பல இடங்களில், பரவலாகப் பயிர்வட்டங்களைத் தாங்கள் உருவாக்கியதாக அவர்கள் சொல்லியிருந்தனர். இந்த இரண்டு பேரால் அவ்வளவு தூர இடங்களுக்குப் பிரயாணம் செய்து, இரவுகளில் உள்ள சில மணி நேரங்களில், அனைத்தையும் உருவாக்கியிருக்க முடியாது என்று சுலபமாகக் கண்டுபிடிக்க முடிந்தது.  இதில் அவர்கள் சொன்ன இன்னுமொரு விசயமும் சந்தேகத்தைத் தந்தது. அவர்கள் இருவரின் மனைவிகளுக்குத் தெரியாமலே, இரவிரவாகப் பயிர்வட்டங்களை உருவாக்கிவிட்டு, வீட்டுக்கு வந்து நித்திரைக்குப் போய்விடுவதாகவும் சொன்னார்கள். எதுவுமே நம்பக் கூடியதாக இருக்கவில்லை. அவர்கள் இருவரையும் அழைத்து, மிகவும் எளிமையானதொரு வடிவத்தை வரையுமாறு கூறியபோது, அவர்கள் உருவாக்கிய பயிர்வட்டம் அவர்களின் போலித்தனத்தை வெளிக்கொண்டு வந்தது. இந்தச் சித்திரத்தை அவர்களால் ஒரு காகிதத்திலேயே வரையமுடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் உருவாக்கிய பயிர்வட்டம் இதுதான். [/size]

[size=4] [/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4] [/size]

[size=4]டக், டேவிட் இருவரும் கொடுத்தது பொய்யான வாக்குமூலம் என்று தெரிந்ததும், பழையபடி பதட்டம் இங்கிலாந்து மக்களைத் தொற்றிக் கொண்டது. ஆனால் டக், டேவ் இருவரும் போலியானவர்கள் என்று தெரிந்தாலும், அவர்களால் ஒரு மாபெரும் சிக்கலுக்கும் வித்திடப்பட்டது. பயிர்வட்டங்களை உருவாக்குவதற்கு அவர்கள் பயன்படுத்தியதாகச் சொல்லிய, அந்த நீளமான பலகையும், கயிறும் சில இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டது. "அட! இது நல்ல உத்தியாக இருக்கிறதே!" என்று இளைஞர்கள் ஆங்காங்கே சிந்திக்க ஆரம்பித்தனர். டக், டேவிட் கூறியது போல, நாமும் செய்து பார்த்தால் என்ன என்று முடிவெடுத்தார்கள். அவர்களது கணித அறிவுக்கும், புத்திசாலித்தனங்களுக்கும் அது ஒரு சவாலாகவும் இருந்தது. பல இடங்களில், சில இளைஞர்கள் சேர்ந்து, பல பயிர்வட்டங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இளைஞர்கள் என்று சொன்னால், அது எந்த நாட்டு இளைஞர்களாக இருந்தாலும், அவர்களிடம் இருப்பது குறும்புதானே! அதனால் பயிர்வட்டங்கள் பல இடங்களிலும் சரமாரியாகத் தோன்றத் தொடங்கின. இந்த நேரத்தில் ஆராய்ச்சியாளர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்ப ஆரம்பித்தார்கள். எது மனிதன் உருவாக்கியது, எது மனிதன் உருவாக்கியதல்ல என்று புரியாமல் திகைத்தனர். அது போதாதென்று பயிர்வட்டம் உருவாக்குபவர்கள் என்று ஒரு அமைப்பையே அந்த இளைஞர்கள் ஆரம்பித்தனர் இப்படி அவர்கள் வெளிப்படையாக அமைப்புகளை உருவாக்க வேறு ஒரு முக்கிய காரணமும் இருந்தது பயிர்வட்டங்களின் அதிசயத்தினால் மக்கள் கூட்டம் கூட்டமாக உலகெங்குமிருந்து பார்வையாளர்களாக இங்கிலாந்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்கள் அல்லவா இதுவே விளம்பரக் கம்பெனிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது எதையும் விளம்பரப்படுத்தி விற்பனை செய்யும் தந்திரம்தான் அவர்களுக்கு கைவந்த கலையாயிற்றே அவர்கள் பயிர்வட்டங்களை உருவாக்கும் இந்தக் குறும்புக்கார இளைஞர்களைக் குறி வைத்தனர் இலட்சக்கணக்கில் பணம் கைமாறியது கம்பெனிகளின் விளம்பரங்கள் பயிர்வட்டங்களாக உருவாக ஆரம்பித்தன ஃபயர்பாக்ஸ் ஸ்விஸ் எயார் ,பியர் கம்பெனிகள் கார் கம்பெனிகள் என அனைத்துக் கம்பெனிகளும் பயிர்வட்டப் பிரதேசங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கின மொத்தத்தில் விடையே கண்டுபிடிக்க முடியாமல் இருந்த அதிசயச் சம்பவம் ஒன்று [/size]

[size=4]கேலிக்குரிய நகைச்சுவயாக மாறத் தொடங்கியது கடைசியில் எது உண்மை எது பொய்யெனத் தெரியமுடியாத அளவுக்கு பயிர்வட்டங்கள் பெருகத் தொடங்கின இதனால் மக்களுக்கு அதில் உள்ள ஆர்வமும் படிப்படியாகக் குறையவும் தொடங்கியது [/size]

[size=4]

photo%206.jpg[/size][size=4]photo%207.jpg [/size]

[size=4] [/size]

[size=4]

photo%208.jpg[/size]

[size=4]

பயிவட்டங்களை உருவாக்கும் இளைஞர்களிடம் ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்ட போது தங்கள் குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக ஒட்டுமொத்தப் பயிர்வட்டங்களையும் மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள் அவற்றை ஏலியன்கள் உருவாக்குகின்றன என்று சொல்வது பச்சைப் பொய் என்று சொல்ல ஆரம்பித்தார்கள் ஆனால் படிப்படியாக அவர்கள் அனவரையும் கிலியில் ஆழ்த்திய சம்பவங்கள் நடக்கத் தொடங்கின பணத்துக்காகவும் குறும்புக்காகவும் இரவில் பயிர்வட்டங்களை இளைஞர்கள் உருவாக்கிக்கொண்டிருந்தபோது அவர்களைச் சுற்றி பந்து போன்ற ஒளிவட்டங்கள் தோன்றத் தொடங்கின இரண்டு பலவென ஒளிப்பந்துகள் அவர்கள் நிற்கும் வயல்வெளிகளில் அலையத் தொடங்கின ஆனால் அந்த ஒளிவட்டங்களால் அவர்களுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படவில்லை இரவினில் பயிர்வட்டங்களை உருவாக்கிய அனைத்து இளைஞர்களும் வேறு வேறு இடங்களில் இந்த ஒளிவட்டங்களைக் கண்டிருக்கிறார்கள் யார் வாயால் பயிர்வட்டங்களை ஏலியன்கள் உருவாக்கவில்லை என்று சொல்லப்பட்டதோ அவர்கள் அனைவரும் ஒளிப்பந்துகளைக் கண்டதாக ஒத்துக் கொண்டனர் இது விடை சொல்ல முடியாத ஆச்சரியமாக அமைந்தது.[/size]

[size=4] [/size]

[size=4]

photo%209.jpg[/size]

[size=4]இப்படிப்பட்ட இளைஞர்களின் குரூரமான நகைச்சுவைகளால் பல உண்மைகளை நாம் அறிந்துவிடாமல் தவறவிட வேண்டிய சூழ்நிலைகளுக்குத் தள்ளப்படுகிறோம் இப்படித்தான் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி ஹாலந்து நாட்டில் ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் உருவாகியது இதுவரை உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்களிலேயே மிகவும் பெரியது அது அரைக் கிலோமீட்டருக்கும் 530 X 450 மீட்டர் அதிகமான அளவுடையதாக இருந்தது அத்துடன் மிகவும் அழகானதும் சிந்திக்க வைக்கும் உருவத்துடனும் அது காணப்பட்டது டாவின்சியின் 'Vitruvian Man' என்னும் அடையாளம் போல இரண்டு கைகளையும் ஒரு மனிதன் விரித்தபடி நிற்க வண்ணத்துப்பூச்சியாக மாறுவது போன்ற பயிர்வட்டம் அது ஐரோப்பா அமெரிக்கா போன்ற அனைத்து நாடுகளையும் அதிர வைத்தது அந்தச் சித்திரம் மனிதனால் உருவாக்கியிருக்கவே முடியாது என்று எண்ணும்படி மிகவும் ஆச்சரியத்தைத் தந்த அந்தப் பயிர்வட்டத்தையும் தாங்கள்தான் செய்தோம் என்று சொல்லிக் கொண்டு ஒரு இளைஞர்கள் கூட்டம் வந்தது அதைச் செய்வதற்கு தாங்கள் ஆயத்தப்படுத்தியதாக ஒரு சிறிய காணொளியையும் அவர்கள் போட்டுக் காட்டினார்கள் ஆனால் அந்தக் காணொளியில் அதை உருவாக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை இவர்கள் செய்த இந்தக் குழப்பத்தால் அதைச் சரியாக ஆராயவே முடியாமல் போயிற்று இன்றும் அதை மனிதன் செய்தானா இல்லை வேறு யாரும் செய்தார்களா என்ற கேள்விக்கு விடை இல்லாமலே இருக்கிறது ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி[/size]

[size=4] மனிதர்களால் அது செய்யப்பட்டிருக்க முடியாது என்றுதான் சொல்லப்படுகிறது அரைக் கிலோமீட்டர் நீளமான இந்தச் சித்திரத்தை இவ்வளவு நேர்த்தியாக ஒரே இரவில் உருவாக்க நூற்றுக்கும் அதிகமானவர்கள் அங்கே வேலை செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஒருவேளை இந்தப் பயிர்வட்டம் மனிதனால் செய்யப்படாததாக இருந்தால் மனிதன் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஏலியன்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கும் டாவின்சியின் இந்த மனித அடையாளத்தை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அத்துடன் உயிரினங்களின் பரினாம வளர்ச்சி பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் இவற்றின் மூலம் மனிதர்களுக்கு அவர்கள் ஏதோ செய்திகளைச் சொல்ல முயற்சிக்கவும் வேண்டும்

மனிதர்கள் உருவாக்கிய பயிர்வட்டங்களை அவற்றை உருவாக்கிய மனிதர்கள்தாங்கள் உருவாக்கியதாகச் சொல்வதன் மூலமும் வேறு சில ஆராய்ச்சிகளின் மூலமும் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம் மனிதர்கள் உருவாக்காத பயிர்வட்டங்களை எப்படி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கின்றனர் பயிர்வட்டங்கள் உருவாகும் போது[ நேரடியாகக் கண்டதாகச் சொல்லும் மனிதர்களை மட்டும் நம்பி அவை ஏலியன்களால் உருவாக்கப்படுகின்றன என்று சொல்லிவிடலாமா அப்படிப்பார்த்தால் கடவுளைக் கண்டதாகவும் இறந்தவர்களைக் கண்டதாகவும் பேய்களைக் கண்டதாகவும் உலகில் பலர் மிகவும் நம்பகத் தன்மையுடன் சொல்கிறார்களே அதனால் கடவுள் உண்டு என்னும் முடிவுக்கு நாம் உடன் வந்துவிடலாம் அல்லவா அப்படி ஒரு முடிவுக்கு வந்தால் இந்த உலகத்தில் ஆத்திகன் நாத்திகன் என்னும் பிரச்சினையே உருவாக முடியாதே எனவே தனிமனித சாட்சியங்கள் மட்டும் வைத்து எதையும் நூறு சதவீதம் உறுதிப்படுத்த முடியாது இந்தப் பயிர்வட்டங்களிலும் நேரில் கண்ட சாட்சிகள் இருந்தபோதிலும் அவற்றை மட்டும் நம்பாமல் மேலதிகமான பல ஆராய்ச்சிகள் செயப்படுகின்றன அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைப் பொறுத்தே திட்டவட்டமாக அவற்றை மனிதன் செய்யவில்லை என்னும் முடிவுக்கு ஆராய்பவர்கள் வருகிறார்கள் பயிர்வட்டங்களை மனிதன் உருவாக்கவில்லை என்றால் ஏலியன்களே உருவாக்குகின்றன என்ற முடிவைத்தான் ஆராய்ச்சியாளர்கள் எடுக்க வேண்டியிருக்கிறது இதை வாயினால் சொல்லாவிட்டாலும் பல வடிவங்களில் நமக்கு அதை அவர்கள் புரிய வைக்கிறார்கள் அந்த அளவுக்குத் திடமாக ஏலியன்கள்தான் உருவாக்கின என்ற ஒரு முடிவை என்ன விதமான ஆராய்ச்சிகளைச் செய்து ஆராய்ச்சியாளர்கள் எடுக்கிறார்கள் திடமாக அந்த முடிவை அவர்கள் எடுப்பதன் காரணம் என்ன உண்மையிலேயே ஏலியன்கள் இருக்கின்றனவா இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் உங்களுக்குத் தேவைப்படும் அந்தப் பதில்களைப் பார்ப்பதற்கு அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள் [/size]

உங்கள் தொடர் தொடர்ந்து படித்து வருகின்றேன் . நேரமின்மையால் உடனடியாகப் பதில் போடமுடியவில்லை . மிகவும் பயனுள்ள தொடரை இணைப்பதற்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் . தொடருங்கள் :) .

நன்றி அண்ணா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் தொடர்ந்து தொடருடன் இணைந்து இருங்கள்

கார்டியன் பதிவு

http://www.guardian....05/ruralaffairs

அவர்கள் சொல்லும் செயல் முறை.

• Prepare a detailed drawing. Keep it simple. Circles and triangles are relatively easy to make. Advanced curves, spirals, straight lines, fractals and pictures can take a long time to mark out and work.

• You will need helpers; decide who will do what and in what order the image needs to be constructed.

• You will need a marked rope or a 100ft measuring tape to mark out the site, and a foot-wide wooden board about 4ft long to do the flattening. The board should have ropes attached to each end so you can loop it over your neck.

• Ask permission from a farmer and be prepared to pay compensation. A crop circle can cause hundreds of pounds of damage.

• Wait for a moonlit night when it is dry. Enter the field by the tramlines, or marks left by tractors.

• Mark out the field carefully. Some circle makers use sticks or poles but these can leave tell-tale holes of human intervention.

• Put the rope round your neck, with the board on the ground in front of you; press down with your right foot, move it forward, press it down again, and so on.

• Leave the field the same way you entered.

• Hide your tracks.

crop-circle-3.jpg

CROP CIRCLES FOR PROFIT

[size=3]Some circlemakers are turning their talent into a real business -- and making big profits from it. A team including artist and filmmaker John Lundberg, Rod Dickinson and Wil Russell travel all over the world making crop circles as advertisements for big corporations. Their client list includes a multibillion dollar computer-chip company, a car manufacturer and a digital television company. Although they won't divulge exactly how much they make per crop design, their budgets are in the hundreds of thousands of dollars.

[/size]

[size=3]thanks: howstuffworks.[/size]

Edited by kssson

  • தொடங்கியவர்

[size=4]

photo%201.jpg[/size]

[size=4]'Crop Circles' என்று சொல்லப்படும் பயிர்வட்டங்களில், மனிதர்களால் செய்யப்பட்டவை போக மிகுதியாக எஞ்சி இருப்பவற்றை, மனிதனால் செய்யப்படாதவை என்று சொல்வதுதான் நிதர்சனமானது. இயற்கை தவிர்ந்து, உலகத்தில் உள்ள எதுவானாலும், மனிதனால் உருவாக்கப்படாமல், வேறு ஒரு மாற்று சக்தியினால் உருவாக்கப்பட்டன என்று சொன்னால், அது மிகச் சாதாரணமான ஒரு விசயமல்ல. அந்த மாற்றுச் சக்தி, அமானுஷ்யமானதாக இருப்பதால், நிச்சயம் அது வியப்பானதும், விந்தையானதும், நம்பவே முடியாததுமான ஒன்றாகத்தான் இருக்கும். பயிர்வட்டங்களிலும், நூற்றுக்கணக்கானவை அமானுஷ்ய சக்தியினால்தான் உருவாக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக முடிவெடுத்துள்ளார்கள். அதிகம் ஏன், பத்தாயிரம் பயிர்வட்டங்களில் ஒரேயொரு பயிர்வட்டமாவது மனிதனால் செய்யப்படாமல், அமானுஷ்ய சக்தியால் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டாலே, அப்படியொரு சக்தி உலகத்தில் உண்டு என்பது உறுதியாகிவிடும். இதற்குக் காரணமாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சக்தியை வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுவே நமது நாடுகளில் நடந்திருந்தால், இவற்றிற்கெல்லாம் காரணமாக கடவுள் என்னும் விதையை ஊன்றி, அந்த இடங்களில் கோவில்கள் கட்டப்பட்டு, திருவிழா வரைக்கும் சென்றிருக்கும். அதன் பின்னர் ஆராய்ச்சியென்ற ஒன்றே நடக்க முடியாதபடியுமாகியிருக்கும். இதனால்தானோ என்னவோ, புராதன காலங்களில் ஏலியன்கள் வந்ததாக மிகவும் பலமாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படும் இந்தியாவுக்கு, அப்புறம் ஏலியன்கள் வராமல் போய்விட்டார்களோ தெரியவில்லை. [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4]ஏலியன்கள்தான் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்று சொன்னால், ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்வதை ஒப்புக் கொள்வதாகிவிடும். உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றனவா என்னும் கேள்விக்கு ஆமாம் என்னும் பதிலைத் திடமாக யாராலும் சொல்லிவிட முடியாது. காரணம், அறிவியல் எப்போதும் கண்ணால் கண்டாலோ அல்லது இயற்பியல் விதிகளுக்குட்பட்டு அதை நிரூபிக்க முடிந்தாலோ மட்டும்தான், அப்படி ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொள்ளும். ஆனால் ஏலியன்கள் இருக்கின்றன என்பதை அறிவியல், நூறு வீதம் அல்ல ஆயிரம் வீதம் நம்புகிறது. என்ன குழப்புகிறேனா? நம்பிக்கை என்பது வேறு, இருக்கிறது என்னும் முடிவுக்கு வருவது வேறு. 'கடவுள் இருக்கிறார்' என்னும் கருத்தும் கூட, இந்த இரண்டு தளங்களில் இருந்துதான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று ஆன்மீகவாதிகள் நூறு வீதம் நம்புகிறார்கள். ஆனால் கடவுள் இருக்கிறார் என்று அவர்களால் இயற்பியல் விதிகளுக்குட்பட்டு நிரூபிக்க முடிவதில்லை. கடவுள் இருக்கிறார் என்ற ஆராய்ச்சியிலும் யாரும் ஈடுபடுவதில்லை. ஆனால், ஏலியன்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கென, உலக நாடுகள் அத்தனையும் கோடிக்கனக்கான பணத்தைக் கொட்டிச் செலவழித்துக் கொண்டிருக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள், அதியுயர் நவீன தொலைநோக்கிக் கருவிகள், விண்வெளியை ஆராயும் சாட்டிலைட் டெலஸ்கோப்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் என உலகம் பூராவும் பல ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், கோடிகளைக் கொட்டி, தங்கள் நேரங்களையும், படிப்புகளையும் அதற்கென்றே செலவழித்து ஏலியனைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். அதிகம் ஏன், கடந்த வாரம் செவ்வாயில் இறங்கிய 'க்யூரியாசிட்டி' (Curiosity) என்னும் ஆளில்லா விண்கலத்தின் மிக முக்கிய பணிகூட, செவ்வாயில் உயிரினம் இருப்பதற்கான அல்லது இருந்ததற்கான சாத்தியங்கள் உண்டா என ஆராய்வதுதான். இந்த இடத்தில் ஒன்று சொல்லியே ஆகவேண்டும். ஏலியன்கள் உண்டா? பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, மனிதனால் உருவாக்கப்பட்ட பறக்கும் தட்டு ஒன்று பூமியின் அயல்கிரகத்தில் இறங்கியிருக்கிறது. இதற்கு நாஸாவைப் பாராட்டியே தீர வேண்டும். [/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4]ஏலியன்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏன் இவ்வளவு திடமாக நம்புகிறார்கள் தெரியுமா? சொல்கிறேன்! நமது பூமியின் அபூர்வமான அமைவினால், அதில் உயிரினங்கள் உருவாகிப் பெருகி வாழ்கின்றன. அபூர்வமான அமைப்பென்றால், அப்படி ஒரு அபூர்வம். ஆச்சரியகரமான பல நிலைகள் பூமிக்கு அமைந்ததால், அந்த அபூர்வமான, உயிர்கள் தோன்றக்கூடிய தன்மை பூமிக்கு எற்பட்டது. சூரியனில் இருந்து தூரவும் இல்லாமல் கிட்டவும் இல்லாமல் மிகச் சரியான தூரத்தில் இருப்பது, 23½ பாகை கோணத்தில் சாய்ந்திருப்பது, சரியான தூரத்தில் சந்திரன் இருப்பது, 'அட்மாஸ்பியர்' எனப்படும் வளிமண்டலம் இருப்பது, நீர், ஆக்சிஜன், காபனீரொக்ஸைட், நைதரசன் போன்றவை சரியான விகிதத்தில் கலந்து இருப்பது, கடல் இருப்பது போன்ற பல காரணிகள் ஒன்றாகப் பூமிக்கு அமைந்ததால், பூமியில் உயிரினம் தோன்ற ஏதுவாக இருந்தது. இவற்றில் ஒன்று கூட இல்லாவிட்டாலும், பூமியில் உயிரினமோ, மனித இனமோ வாழ முடியாது என்னும் அளவுக்கு இவை முக்கியமானவை. இப்படிப் பூமிக்கு அனைத்து காரணிகளும் ஒன்றாகச் சரியான அளவில் அமைந்தது போல, பிரபஞ்சத்தில் வேறு எங்காவது ஒரு 'கோள்' (Planet) இருக்கும் பட்சத்தில், அங்கும் உயிரினங்கள் வாழ சாத்தியங்கள் உண்டு. அப்படிப்பட்ட கோள்களைக் கடந்த ஐம்பது வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆச்சரியகரமாக சில கோள்கள் அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை மனித சாத்தியங்களுக்கு எட்டாத அளவு மிகவும் தூரத்தில் இருப்பதால், அவைபற்றி மேலதிகமாக ஆராய முடியாமல், அங்கு உயிரினங்கள் உண்டா, இல்லையா என்ற முடிவுக்கு வரமுடியாமல் இருக்கின்றனர். [/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4]கணிதத்தில் 'நிகழ்தகவு' (Probability) என்னும் பகுதி ஒன்று உள்ளது. அதாவது, ஒரு நிகழ்வு எந்த அளவுக்கு நடைபெறக்கூடும் என்னும் சாத்தியக்கூறுகளை ஆராய்வதை 'நிகழ்தகவு' என்பார்கள். உதாரணமாக, ஒன்றிலிருந்து ஆறு புள்ளிகள் உள்ள தாயக்கட்டையை உருட்டும் போது, எத்தனை தரம் உருட்டினால் '5' விழலாம் என்பதை நிகழ்தகவு மூலம் சொல்லலாம். அதாவது, நிகழ்தகவின்படி, ஆறில் ஒரு பங்கு (⅙) சாத்தியம் உண்டு என்று கணிதம் சொல்கிறது. அது போல, அதே '5' மீண்டும் இரண்டாம் தடவை விழுவதற்கு, 36 இல் ஒரு பங்கு சாத்தியம் உண்டு. இது போல இன்னுமொரு உதாரணத்தையும் சொல்கிறேன். ஜெர்மனியில் ஒரு லாட்டரிச் சீட்டு இருக்கின்றது. 1 இலிருந்து 49 வரையிலான இலக்கங்களில், நீங்கள் விரும்பிய ஏதாவது ஆறு இலக்கங்களைத் தெரிவு செய்து, அந்த லாட்டரிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர், லாட்டரி சீட்டுக் குலுக்கும் தேதியில், ஆறு இலக்கங்களை, அவர்கள் தெரிவு செய்வார்கள். அந்த ஆறு இலக்கங்களும், நீங்கள் தெரிவு செய்த ஆறு இலக்கங்களும் சரியாக இருந்தால், முதல் பரிசு உங்களுக்குத்தான். கோடிக்கணக்கான ரூபாயை அள்ளிக் கொண்டுவரலாம். ஆனால் இந்த லாட்டரிச் சீட்டில், நீங்கள் தெரிவு செய்த ஆறு இலக்கங்கள் வருவதற்கு பதினான்கு மில்லியன்களில் ஒன்று என்னும் சாத்தியமே உண்டு. அப்படிப் பதினான்கு மில்லியனில் ஒருவராக நீங்கள் அமைந்துவிட்டால், பரிசு உங்களுக்கே! இது போல, பூமி போன்று, அதே அமைவுகளுடன் பிரபஞ்சத்தில் இன்னுமொரு கோள் இருப்பதற்கான நிகழ்தகவுச சாத்தியங்கள் நிச்சயம் இருக்கிறது. உதாரணத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம், பூமி போன்ற இன்னுமொரு கோள் பிரபஞ்சத்தில் இருப்பதற்கு, ஆயிரம் கோடியில் ஒரு கோளுக்குத்தான் சாத்தியம் உண்டு என நாம் வைத்துக் கொண்டால், பிரபஞ்சத்தில் அதைவிட அதிகமான கோள்கள் உள்ளன. சொல்லப் போனால், கோடான கோடி மடங்குகளுக்கு, ஆயிரம் கோடி கோள்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் அந்த அளவுக்கு நட்சத்திரங்களும், கோள்களும், உபகோள்களும் நிரம்பி வழிகின்றன. பூமியில் உள்ள கடற்கரைகளில் இருக்கும் மணல் துணிக்கைகள் எவ்வளவு உண்டோ, அதைவிட அதிகமான கோள்களும், உபகோள்களும், நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் உண்டு. அதனால், நிகழ்தகவின்படி பார்த்தாலும், பூமி போன்ற கோள்களும், அதில் உயிரினங்களும் இருப்பதற்குக் கோடிக்கணக்கான மடங்குகள் சாத்தியங்கள் உண்டு. [/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4]

photo%206.jpg[/size]

[size=4]நமது சூரியக் குடும்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், கோள்கள், துணைக்கோள்கள் என நூற்றுக்கும் அதிகமானவை உண்டு. அவற்றில் சந்திரனைப் பற்றியும், தற்போது செவ்வாயைப் பற்றியும் மட்டுமே நமக்கு முழுமையாகத் தெரியும். மற்றவையெல்லாம் ஒரு மேலோட்டமான கணிப்புகள்தான். இந்தக் கோள்களிலும், துணைக்கோள்களிலும் கூட உயிரினங்கள் உண்டா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமது சூரியனைப் போல, 200 பில்லியன்களுக்கும் அதிகமான நட்சத்திரங்கள், நமது சூரியன் இருக்கும் காலக்ஸியான பால்வெளி மண்டலத்தில் (Milkyway) உண்டு. பால்வெளி மண்டலத்தைப் போல, 500 பில்லியன் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறோம். 3க்கு அருகில் 23 பூச்சியங்களை இட்டால் என்ன இலக்கம் வருமோ, அதைவிட அதிகமான நட்சத்திரங்கள் நமது பிரபஞ்சத்தில் உண்டு. சூரியனுக்கு எப்படி நூறுக்கும் அதிகமான கோள்களும், துணைக் கோள்களும் இருக்கிறதோ, அதுபோலப் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்துக்கும் இருக்கும் அல்லவா? அப்படியெனில், அவை எந்த அளவுக்கு இருக்கலாம் என்று நீங்களே கணித்துப் பாருங்கள். இந்த எண்ணிக்கைகள் கூட நாம் இதுவரை கண்டுபிடித்தவைகளை மட்டும் வைத்துத்தான் சொல்கிறோம். ஆனால், கண்டுபிடிக்காதவை இன்னும் எவ்வளவோ உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரபஞ்சம் போன்றே பல பிரபஞ்சங்கள் உண்டு எனவும், நமது பிரபஞ்சத்துக்குச் சமாந்தரமாக இன்னுமொரு பிரபஞ்சம் (Parallel universe) உண்டு என்றுகூடச் சொல்கிறார்கள். இதையெல்லாம் சொன்னவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. சும்மா பொழுதுபோக்கிற்காகவும் அவர்கள் சொல்லிவிட்டுப் போகவில்லை. ஐண்ஸ்டைன் போன்ற மாமேதைகள் பல ஆராய்ச்சிகளின் முடிவில் சொன்னது இது.

இவ்வளவு எண்ணிக்கையில் பிரபஞ்சத்தில் சாத்தியங்கள் இருக்கும்போது, உயிரினங்கள் அங்கே எங்காவது வாழாது என்று சொல்ல விஞ்ஞானிகளால் முடியவில்லை. அதை அவர்கள் மிகவும் திடமாக நம்புகின்றனர். ஆனால் நம்பிக்கை மட்டும் போதாது. அதை நிரூபித்தால் மட்டுமே அறிவியல் அடித்துச் சொல்லும். அதுவரை அடக்கியே வாசித்துக் கொண்டிருக்கும். சமீபத்தில் கூட, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட 'கடவுள் துகள்' என்று அழைக்கப்படும் 'ஹிக்ஸ் போஸான்' (Higgs boson) கூட இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்பினார்களே ஒழிய, இருக்கிறது என்று அடித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால் இறுதியில் அதைக் கண்டுபிடித்தே விட்டார்கள். இந்த நிலை ஏலியன்களுக்கும் நிச்சயம் வரும். ஏலியன்கள் உண்டு என்று நம்பும் நம்பிக்கையை ஒருநாள் நிரூபித்துக் காட்டுவார்கள். ஆனால் நம்முன்னே தற்போது இருக்கும் பிரச்சினை அதுவல்ல.[/size]

[size=4]

photo%207.jpg[/size]

[size=4]

photo%208.jpg[/size]

[size=4]ஏலியன்கள் இருக்கின்றன என்பதல்ல இப்போது பிரச்சினை. பூமியில் ஏலியன்கள் உள்ளனவா? அல்லது பூமிக்கு ஏலியன்கள் வந்தனவா அல்லது இப்போதும் வந்துகொண்டிருக்கின்றனவா? அப்படி ஏலியன்கள் பூமிக்கு வந்தால், பலர் சொல்வது போல 'பறக்கும் தட்டு' (UFO) என்பதன் மூலமாகத்தான் வருகிறதா அல்லது வேறு வழிகளில் வருகிறதா? இவைதான் தற்போது நம்முன்னே இருக்கும் பிரச்சினை. இதற்கான பதில்தான், பயிர்வட்டங்களின் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்க முடியும். ஆகையால், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மிகச் சாதாரணமாக, 'ஆம்', 'இல்லை' என்பது போலப் பதில்களைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது. இவற்றையெல்லாம் நாம் விபரமாகவே பார்க்க வேண்டும்.

எனவே இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வரும் வாரத்தில் பார்ப்போமா...![/size]

[size=4]http://www.uyirmmai.com/Uyirosai[/size]

  • தொடங்கியவர்

[size=4]

Photo%201.jpg[/size]

[size=4]பயிர்வட்டங்கள் உருவாவதன் மூலகாரணம் என்ன என்பதை அறியும் கட்டத்தில், ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்னும் பெரும் கேள்வி நம்மைப் பல இடங்களிலிருந்து தாக்குகின்றது. ஏலியன்கள் பூமிக்கு வந்தனவா என்பதில், 'நம்புவதா? நம்பாமலிருப்பதா?' என்று நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துவது போலப் பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. 'வாயால் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதோ இந்தக் காணொளிகளைப் பாருங்கள்' என்று கூறியபடி, ஆயிரக்கணக்கான காணொளிகள் உலகைச் சுற்றி வலம் வருகின்றன. ஆரம்பத்தில் இந்தக் காணொளிகள் எல்லாம் புகைப்படத் தொழில் நுட்பங்களினால், போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்லி வந்த அரசுகள், அவற்றின் வீரியம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கி வாசிக்கத் தொடங்கின. காணொளிகள் போலியானவை என்று அரசுகள் சொல்லியதில் அர்த்தமும் இல்லாமலில்லை. புகைப்படத் தொழில்நுட்பத்தினாலும், கணினித் தொழில்நுட்பத்தினாலும் பலர் இப்படியான காணொளிகளையும், புகைப்படங்களையும் பெரும்படியாக உருவாக்கியது நடந்துதான் இருக்கின்றன. இவர்கள் பொழுதுபோக்கிற்காகச் செய்யும் இந்தச் செயல்கள், பல உண்மைகள் மறைக்கப்படவும், அலட்சியப்படுத்தப் படவும் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த விசயத்தில் பொதிந்திருக்கும் உண்மை எதுவெனப் புரிந்துகொள்ள முடியாமல், ஒரு குழப்ப நிலையிலேயே மக்களை வைத்திருக்க இவை ஏதுவாகின.[/size]

[size=4]ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா? என்பதை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, சில அறிஞர்கள் சொல்லும் இன்னுமொரு கோட்பாடு அதைவிட அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? "ஏலியன்கள் பூமிக்கு வந்து போனது மட்டுமல்ல, அவை பூமியில் தற்போது வாழ்ந்தும் கொண்டிருக்கின்றன" என்கிறார்கள். இதை வாசிக்கும்போது, உங்களையறியாமலே ஒரு புன்னகை உங்கள் மனதில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. 'ஏலியன்கள் பற்றி ஏதோ சொல்வதை நாம் கேட்கிறோம் என்பதற்காக, நம் காதில் பூவுக்குப் பதிலாகப் பூச்சாடியையே இவர் வைக்கப் பார்க்கிறாரே' என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், இதை யாருமே நம்ப முடியாதுதான். நானே நம்புகிறேனா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இதைச் சொல்பவர்கள் ஏதோ நகைச்சுவைக்காக நமக்கு இதைச் சொல்கிறார்கள் என்று நாம் நினைப்பதும் ரொம்பத் தப்பு. காரணம், அவர்கள் எடுத்து வைக்கும் ஆழமான, ஆணித்தரமான ஆதாரங்களும், அவற்றை ஒட்டிய விவாதங்களும்தான். அதிகம் ஏன், இந்தப் பயிர்வட்டம் சம்பந்தமாகவே அசைக்க முடியாத ஆணித்தரமான ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. அதை மறுத்துப் பேச எந்த அரசும் முன்வரவில்லை. வரவும் முடியாது என்றுதான் சொல்கிறார்கள். காரணம், அந்த ஆதாரம் அவ்வளவு திடமான ஆதாரமாக இருந்தது. அது என்ன ஆதாரம் என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.......! [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4]இதுவரை பயிர்வட்டங்கள் இங்கிலாந்தில்தான் அதிகளவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம். அங்கு தோன்றுவதாலேயே சிலர் அதை நம்பவும் மறுக்க ஆரம்பித்தனர். காரணம், அங்கிருக்கும் யாரோதான் இவற்றுக்குக் காரணம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். என்னதான் மனிதன் செய்யமுடியாது என்று ஆதாரங்களை முன்வைத்தாலும், அவநம்பிக்கை நீடித்துக் கொண்டேதான் வந்தது. ஆனால், ஆச்சரியமாக, ஜேர்மனியில் ஒரு பயிர்வட்டம் உருவாகியது. இந்தப் பயிர்வட்டம் ஜெர்மனியில் தோன்றியது மட்டும் ஆச்சரியமில்லை. அதன் தாக்கம் தந்த ஆச்சரியம், பயிர்வட்ட மர்மங்களுக்கே உச்சமாக அமைந்தது. இது பற்றி விளக்கமாகவே நான் உங்களுக்கு சொல்ல வேண்டும்.[/size]

[size=4]ஜெர்மனியில் கிராஸ்டோர்ஃப் (Grasdorf) என்னுமிடத்தில், வேர்னர் ஹாரென்பேர்க் (Werner Harenberg) என்னும் விவசாயிக்குச் சொந்தமான விளைநிலத்தில் கோதுமைப் பயிர் விளைவிக்கப்பட்டிருந்தது. 23ம் திகதி ஜூன் மாதம் 1991இல் மிகப்பெரிய பயிர்வட்டமாக அது உருவாக்கப்பட்டிருந்தது. 6000 சதுரமீட்டர் பரப்பளவில் அந்தப் பயிர்வட்டம் உருவாகியிருந்தது. மனிதனால் செய்யப்படாமல் இருக்கும் பயிர்வட்டங்களின் அனைத்துத் தன்மைகளும் அந்தப் பயிர்வட்டத்துக்கும் இருந்தது. மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த அந்தப் பயிர்வட்டத்தின் சித்திரம், சூரியக் குடும்பத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது. 'வழமையான பயிர்வட்டங்கள் போலத்தானே இருக்கின்றன, இதில் எங்கே ஏலியன் வந்தது?' என்றுதானே நினைக்கிறீர்கள்.[/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4]இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்தபோது, அதில் கதிர்வீச்சு போன்ற ஒன்று இருக்கலாம் என்ற உணர்வு தோன்றியதால், உலோகங்கள் கண்டுபிடிக்கும் கருவி கொண்டு (Metal detector) அதை ஆராய்ந்தார்கள். அந்தப் பயிர்வட்டச் சித்திரத்தின் மூன்று இடங்களில் கருவி அலறியது. குறிப்பாக அந்தப் பயிர்வட்டத்தில் எங்கே அரைவட்டங்கள் காணப்பட்டனவோ, அந்த மூன்று அரைவட்டங்களின் மத்தியில் உலோகம் இருப்பதாகக் காட்டியது கருவி. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அரை மீட்டர் நிலத்தின் கீழே மூன்று உலோகத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு அடிக்கும் அதிகமான விட்டமுடைய வட்டவடிவ உலோகத் தகடுகளாக அவை காணப்பட்டன. அதில் ஒன்று தங்கத்தினாலும், இன்னுமொன்று வெள்ளியினாலும், மூன்றாவது பித்தளை போன்ற ஒரு கலப்பு உலோகத்தினாலும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தத் தகடுகளில் உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் அச்சுப் போல அமைக்கப்பட்டிருந்ததுதான். [/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4]பித்தளை போன்ற கலப்புலோகத்தால் செய்யப்பட்டிருந்த தகடு மூன்று கிலோக்கள் எடையும், வெள்ளியால் செய்யப்பட்டிருந்த தகடு ஐந்து கிலோக்களும், தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த தகடு ஏழரைக் கிலோக்களும் இருந்தன. ஜெர்மனியில் உள்ள உலோக ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன், எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பினால் ஆராய்ந்தபோது, தங்கமும், வெள்ளியும் தரத்தில் மிகவும் கூடியதாகவும், தூய்மையானதாகவும் காணப்பட்டன. அவ்வளவு தூய்மையான தங்கமோ, வெள்ளியோ பூமியில் இதுவரை யாரும் பயன்படுத்தியது இல்லை. பலர் இவற்றை அந்த விவசாயிடமிருந்து வாங்குவதற்கு முயன்றதனால், அதிக விலைக்கு அவற்றை அவர் விற்கக் கூடியதாக அமைந்தது. இந்த உலோகத் தகடுகளை ஆராய்ந்தவர்கள் குறைந்தபட்சம் இவை 300 ஆண்டுகளிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்தில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.[/size]

[size=4]

photo%206.jpg[/size]

[size=4]

photo%207.jpg[/size]

[size=4]இங்கு இருக்கும் முக்கிய செய்தி என்ன தெரியுமா? மனிதன் இந்தப் பயிர்வட்டத்தை உருவாக்கியிருந்தால், தனது லட்சக்கணக்கான பணத்தை வீணாக்கி இப்படி ஒன்றை உருவாக்குவானா? ஏழரைக் கிலோ தங்கத்தை யாருக்காகவும் தாரைவார்த்துக் கொடுப்பானா? இவ்வளவு தூய்மையான தங்கமோ, வெள்ளியோ அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்பதே பெரும் கேள்வியாக அமைந்துவிடும் அல்லவா? அல்லது ஆராய்ச்சியாளர்கள் சொன்னது போல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இவை புதைக்கப்பட்டிருந்தால், அந்த உலோகங்களில் இந்தப் பயிர்வட்டச் சித்திரம் எப்படி வந்தது? இப்படிப் பதில் தெரியாக் கேள்விகளையே, மிகவும் அசைக்க முடியாத ஆதாரங்களாக, ஏலியன்கள்தான் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்று சொல்வதற்குச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் நமது பிரச்சினை தற்போது பயிர்வட்டங்கள் அல்ல. ஏலியன்கள் பூமியில் இருக்கின்றனவா என்பதுதான்.[/size]

[size=4]

photo%208.jpg[/size]

[size=4]இந்தப் பயிர்வட்டங்களைத் தாண்டி, விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த நிலையில், ஏலியன்கள் பூமியில் வாழ்கின்றன என்பதற்குச் சான்றாக ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அது ஒரு மிகச் சிறிய உயிரினம். 'நீர்க்கரடி' (Water Bear) என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படும் அந்த உயிரினத்தின் உயிரியல் பெயர் Tardigrade. பெயர்தான் கரடியேயொழிய, 1.5 மி.மீ. நீளம்தான் இருக்கும். உப்புநீர், நன்னீர், சேற்றுநிலம், பனி என அனைத்து இடங்களிலும் வாழக் கூடியது. உலகின் எல்லாக் கண்டங்களிலும், துருவம் உட்பட இவை காணப்படுகின்றன. எட்டுக் கால்களும், அந்தக் கால்களில் 4 லிருந்து 8 விரல்களையும் கொண்டவை இவை. இமயமலையில் 6000 மீட்டரில் கூட வாழும் இந்த உயிரினம், விஞ்ஞானிகளைக் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்து ஆராய்ந்ததில் வியப்பான முடிவுகள் பல வெளிவந்தன. அதாவது, -272 சதமபாகைக் குளிரிலும் இவை உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ஆறு மாதங்கள் தொடர்ந்து எதையும் உள்ளெடுக்காமல் உயிர்வாழ்ந்தன. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் கூர்ப்பின் (Evolution) கொள்கைப்படி பூமியின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப வாழும்படியே தம்மை அமைத்துக் கொள்கின்றன. பூமியில் எந்த எந்த இடங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவோ, வாழ்ந்தனவோ அதையொட்டி தம்மை அவை வடிவமைத்துக் கொள்கின்றன. இதுவரை எந்த உயிரினமும் இதுதாண்டி உயிர்வாழ்வதாக விஞ்ஞானிகள் அறியவில்லை. ஆனால் ஒரு உயிரினம் பூச்சியத்துக்குக் கீழே -272 பாகைகள் குளிரில் பூமியில் வாழவேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதற்கு அவசியமே இல்லை. அப்படி ஒரு இடமும் பூமியில் இல்லவேயில்லை. பூமியில் அப்படி ஒரு இடம் இல்லாத பட்சத்தில், இந்த நீர்க்கரடி மட்டும் தன்னை அந்த அளவுக்குக் குளிரில் வாழும்படி ஏன் வடிவமைத்துக் கொண்டது? இந்தக் கேள்வி இதை வாசிக்கும் சிலருக்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இது ஒரு மாபெரும் அதிசயம். இந்த அதிசயம் மேலும் அவர்களின் சிந்தனையைத் தூண்ட, ஜெர்மனியின் விஞ்ஞானிகள், ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு பரிசோதனையைச் செய்து பார்க்க முயன்றனர். [/size]

[size=4]

photo%209.jpg[/size]

[size=4]'ESA' (European Space Agency) என்னும் விண்வெளி அமைப்பில் ரஷ்யாவின் உதவியுடன், ஸ்வீடன் நாட்டுடன் இணைந்த ஜெர்மன் நாடு, இந்த நீர்க்கரடிகளை, 'Tardis' (Tardigrades in Space) என்னும் திட்டத்தின் கீழ், ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த நீர்க்கரடிகள், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் அப்படியே திறந்த நிலையில் விண்வெளியில் வெளியே வைக்கப்பட்டன. அதாவது காற்றின்மை, அதிகக் குளிர் என்பன மட்டுமில்லாமல், எந்த உயிரினமுமே உயிருடன் தப்பிவிடமுடியாத நேரடிக் கதிர்வீச்சுகள் படும்படியாகப் பதினொரு நாட்கள் விடப்பட்டன. இந்த நீர்க்கரடிகளைச் சுமந்த வண்ணம் சென்ற விண்வெளிக்கப்பல், பூமியை 189 தடவை சுற்றியபடி, 11.8 நாட்கள் பிரயாணம் செய்தபின்னர் பூமிக்குக் கொண்டுவரப்பட்டது. [/size]

[size=4]

photo%2010.jpg[/size]

[size=4]பூமிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட நீர்க்கரடிகளைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் துள்ளிக் குதித்தனர். 'கிரிப்டோபையோசிஸ்' (Cryptobiosys) என்னும் ஒருவித, 'இறந்தது போல தன்னைத்தானே ஆக்கிக் கொள்ளும்' முறையால் உறைந்திருந்த நீர்க்கரடிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து நடக்கத் தொடங்கின. தங்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என்பது போன்ற பாவனையுடன் அவை நடமாடின. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுக்கு பூமியில் வாழும் எந்த உயிரினமும் தப்பவே முடியாது. கதிர்வீச்சு என்பது அவ்வளவு மோசமான விளைவுகளை உயிரினங்களுக்கு ஏற்படுத்தவல்லது. அத்துடன் காற்றில்லா வெளியில் வாழ்வதும் எந்த உயிரினத்துக்கும் சாத்தியமில்லாதது. சரி, அப்படிக் கதிர்வீச்சில் தப்பினாலும், நீர்க்கரடிகள் அடுத்ததாகச் செய்த காரியம்தான் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதாவது, உறக்கத்திலிருந்து எழுந்த நீர்க்கரடிகள், தங்களை இனப்பெருக்கத்துக்குத் தயார்ப்படுத்த ஆரம்பித்தன. விண்வெளிக்குச் சென்ற ஆண், பெண் நீர்க்கரடிகள் இரண்டும் ஒன்று சேர்ந்தது மட்டுமில்லாமல், குட்டிகளையும் பெற்றுக் கொண்டன. இது சாத்தியமே இல்லாத ஒன்று. பூமியில் வாழும், வாழ்ந்த எந்த உயிரினத்துக்கும் இந்தச் சாத்தியம் இல்லவே இல்லை. இந்தக் காரணத்தினால்தான் அந்தச் சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு வந்தது. 'அட! இவை வேற்றுக் கிரகங்களிலிருந்து வந்திருக்கலாமோ?' என்னும் சந்தேகம் வலுவாக அவர்களுக்கு முளைத்தது.[/size]

[size=4]நீர்க்கரடிகள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கலாம் என்பதற்கு வேறு காரணமும் இருக்கலாமா? இவை போல, வேறு பல உயிரினங்களும் வேற்றுக் கிரகங்களிலிருந்து வந்திருக்கலாமா? என்னும் கேள்விகள் இப்போது தலையைக் குடைய ஆரம்பிக்கின்றன. அப்படி வேற்றுக் கிரகங்களிலிருந்து உயிரினங்கள் வந்திருந்தாலும் அவை எங்கே வாழலாம் என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.....! [/size]

[size=4]பித்தளை போன்ற கலப்புலோகத்தால் செய்யப்பட்டிருந்த தகடு மூன்று கிலோக்கள் எடையும், வெள்ளியால் செய்யப்பட்டிருந்த தகடு ஐந்து கிலோக்களும், தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த தகடு ஏழரைக் கிலோக்களும் இருந்தன. ஜெர்மனியில் உள்ள உலோக ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன், எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பினால் ஆராய்ந்தபோது, தங்கமும், வெள்ளியும் தரத்தில் மிகவும் கூடியதாகவும், தூய்மையானதாகவும் காணப்பட்டன. அவ்வளவு தூய்மையான தங்கமோ, வெள்ளியோ பூமியில் இதுவரை யாரும் பயன்படுத்தியது இல்லை. பலர் இவற்றை அந்த விவசாயிடமிருந்து வாங்குவதற்கு முயன்றதனால், அதிக விலைக்கு அவற்றை அவர் விற்கக் கூடியதாக அமைந்தது. இந்த உலோகத் தகடுகளை ஆராய்ந்தவர்கள் குறைந்தபட்சம் இவை 300 ஆண்டுகளிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்தில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.[/size]

[size=4]பூமியின் வயது பதினான்கு பில்லியன்கள். எமக்கு முன்னர் வேறு யாரும் வாழ்ந்திருக்கலாம் :D [/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள் அபராஜிதன்.[/size]

Edited by akootha

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

[size=4]

photo%201.jpg[/size]

[size=4]

'பூமியில் வேற்றுக்கிரக உயிரினங்கள் இருக்கின்றனவா?' என்னும் கேள்விக்குப் பதிலளிக்கும் வண்ணமாக, நீர்க்கரடி (Tardigrade) பற்றிச் சொல்லியிருந்தேன். இந்த நீர்க்கரடி பற்றி மேலும் சில விசயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும் இந்த வாரம் மிக முக்கியமான வேறு ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதைச் சூழ்நிலை என்று சொல்வதைவிட, உலகையே உலுக்கிவிடப் போகும் நிகழ்வு என்றே சொல்லலாம். இந்தச் செய்தி மட்டும் உண்மையாக இருந்தால், அவிழ்க்க முடியாமல் இருக்கும் பல மர்மங்கள் சுலபமாக அவிழ்ந்து போகக் கூடியவாறு அமைந்துவிடும். அல்லது வழமை போல இதுவும் எதுவுமே இல்லாமல் அமிழ்ந்து போகும் ஒன்றாகலாம். தொடர்ந்து இதுபற்றி மேலே எழுதுவதற்கு முன்னர், மீண்டும் ஒருமுறை நான் ஒரு தன்னிலை விளக்கத்தை உங்களுக்குத் தரவிரும்புகிறேன். என்னிடம் பலர் கேட்கும் கேள்விகள், "ஏலியன்கள் பூமிக்கு வந்து போயிருக்கின்றனவா? நீங்கள் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறீர்களா?" என்பவைதான். இதற்கான எனது பதிலை, நான் இப்பொழுதே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

பிரபஞ்சத்தில் உள்ள வேற்றுக் கிரகங்களில் நம்மை விட அறிவுள்ள ஜீவராசிகள் வாழ்வதற்கான சாத்தியம் உண்டு என்பதை நான் சந்தேகமின்றி நம்புகின்றேன். ஆனால், அவை பூமிக்கு வந்தனவா என்பதை நான் இன்னும் நம்பவில்லை. ஆனாலும் ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை. ஏலியன் விசயத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், 'ஏலியன்கள் பூமிக்கு வந்தார்கள்' என்று சொல்பவர்கள், 'இல்லை அப்படி யாரும் வரவில்லை' என்று சொல்பவர்கள் இருவருமே அறிவியல் அறிஞர்கள்தான். இதற்குள் மதங்களோ அல்லது மாற்று சக்திகளோ வந்து கலக்கவில்லை. இரண்டு விதமான கருத்துகளையும் இவர்கள்தான் சொல்கிறார்கள். ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்லும் அறிஞர்கள், உலகில் நடந்த மர்மங்களையும், அதிசயச் சம்பவங்களையும் தமக்குச் சாட்சியங்களாக முன் வைக்கிறார்கள். ஆனால் இல்லை என்று சொல்பவர்கள் எப்போதும், இருக்கிறது என்று சொல்பவர்களின் சாத்தியங்களை முறியடிக்கும் வாதங்களை மட்டுமே முன்வைக்கிறார்கள். நடந்த சம்பவங்களுக்குரிய வலிமையான காரணங்களைச் சொல்வதுமில்லை. அவை பற்றி மேலும் ஆராய்வதுமில்லை. ஏலியன்கள் இல்லை என்று எதிர்ப்பவர்கள் எப்போதும் அரசுகள் சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு உதாரணமாக நாஸாவைச் சொல்லலாம். ஆனால் இதே நாஸாதான் கோடிக்கணக்கான டாலரைக் கொட்டி ஏலியன்களைத் தேடவும் செய்கிறது. ஏலியன்கள் இருக்கின்றன என்று மக்களுக்குத் தெரிந்தால், அது மிகப்பெரிய குழப்பத்தை விளைவிக்கும் என்பதாலும், அமெரிக்கா போன்ற அதியுயர் சக்திவாய்ந்த அரசுகளை விடவும் சக்தியுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று மக்கள் அறிந்தால், அரசுகளின் மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பதாலுமே, இவர்கள் இந்த ஏலியன் சமாச்சாரத்தை வன்மையாக எதிர்க்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அறிவியல் அறிஞர்களான இவர்கள் இருவருமே இரண்டாகப் பிரிந்து, நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு இரண்டு வகையான செய்திகளைச் சொல்லும்போது, நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாமல், அவற்றை மிஸ்டரிகளாகவும், அதிசயங்களாகவும் பார்க்கிறோம். இதனாலேயே நாம் எப்போதும் குழப்பத்தில் இவர்கள் இருவரினாலும் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவர்கள் இருவரது நோக்கமும் கூட அதுவாகத்தான் இருக்குமோ தெரியவில்லை. அதனால்தான் பல உண்மைகள் நமக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் இருக்கலாம். சொல்லப் போனால் இந்தத் தொடரின் கேள்வியே, "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்பதுதானே! அதனால், நான் ஏலியன்கள் பற்றித் தெரிந்துகொண்ட அனைத்து சம்பவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். நானும், நீங்களும் சேர்ந்து இது பற்றிய உண்மைக்கு அருகில் சென்று பார்த்து வரலாம். நிச்சயம் உண்மையென்பது இந்த இரண்டில் ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே இரண்டுவிதமான சாத்தியங்களையும் நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த அளவுக்கு விளக்கத்தை இப்போது நான் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கும் காரணம் ஒன்று உண்டு. இனி நான் சொல்லப் போகும் பல சம்பவங்கள் அமெரிக்க 'ஹாலிவுட்' திரைப்படங்களின் கதைகள் போல இருக்கும். நம்பவே முடியாததாக இருக்கும். படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவும் உங்களுக்கு இருக்கும். ஆனால் அவையெல்லாம் ஆதாரங்களுடன் இருந்தாலும், அவற்றில் ஒரு நம்பகத்தண்மை இருந்தாலும் மட்டுமே, அவற்றை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வேன். நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்தையும் நீங்கள் இணையத்தளங்களிலோ, நூல்களிலோ தேடும்போது, அவற்றின் பதிவுகள் உங்களுக்குக் கிடைக்கும் வகையிலேயே இருக்கும். சரி, இனி விசயத்துக்கு வரலாம். [/size]

[size=4] [/size]

[size=4]

photo%202.jpg[/size]

[size=4] [/size]

[size=4]

photo%203.jpg[/size]

[size=4] [/size]

[size=4]2012 ஆகஸ்ட் 6ம் திகதி, செவ்வாயில் நாஸா அனுப்பிய விண்கலமான 'க்யூரியாசிட்டி' (Curiosity) தரையிறங்கியது. மனித வரலாற்றில் மிகமுக்கியமான ஒரு சம்பவமாக அது தன்னை அமைத்துக் கொண்டது. அந்தக் க்யூரியாசிட்டி தற்போது செவ்வாய்க் கிரகத்தின் படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அது அனுப்பிய படம் ஒன்றுதான் இப்போது ஒரு பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. நான் மேலே கொடுத்திருக்கும் இரண்டு படங்களையும் உற்றுப் பாருங்கள். செவ்வாயின் நிலப்பகுதியும், செவ்வாயின் வான்வெளியும் அந்தப் படத்தில் தெரிகிறது. முதலில் உள்ள படத்தை க்யூரியாசிட்டி அனுப்பியபோது, நாஸா அதில் பெரிதாக ஒன்றையும் கவனிக்கவில்லை. ஆனால் அதைப் பார்த்த வேறு சிலர், அதில் ஏதோ வித்தியாசமாகத் தெரிவதாகச் சந்தேகப்பட்டனர். கணனி மூலம், அந்தப் படத்தை ஒளி, வர்ண மாற்றங்கள் செய்து பார்த்தபோது, சில புள்ளிகள் போன்ற வடிவங்கள் செவ்வாயின் வானில் காணப்பட்டதை அவதானித்தனர். அவற்றைப் பெரிதாக்கிப் பார்த்தபோது, ஒளியுடன் அவை மின்னிக் கொண்டிருந்தன. மனிதன் அனுப்பிய க்யூரியாசிட்டியை வானில் இருந்து யாரோ அவதானித்துக் கொண்டிருப்பது போல அவை காணப்பட்டன. அந்தப் புள்ளிகள் அயல் கிரகவாசிகளின் பறக்கும்தட்டு என்று அவர்கள் நிச்சயமாகச் சொல்கின்றனர். அவர்கள் சொல்வதில் ஒருவித நியாயம் இருப்பதை நாமும் மறுக்க முடியாததாகவே இருக்கிறது. [/size]

[size=4] [/size]

[size=4]

photo%204.jpg[/size]

[size=4] [/size]

[size=4]

photo%205.jpg[/size]

[size=4]

"இவர்களுக்கு வேற வேலையே இல்லையா? எதையெடுத்தாலும் அதில் ஒரு மிஸ்டரியைப் புகுத்துவதே இவர்கள் வேலையாகப் போய்விட்டது" என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் சந்தேகப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதற்குக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் காரணங்கள் எவையென்று நாம் பார்ப்பதற்கு முன்னர், இந்தப் படத்திலிருப்பவை பறக்கும் தட்டுகள்தானா என்று கேட்பதற்கு, இவற்றை மறுப்பவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தால், வழமை போல 'க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பிய படங்களில் பிக்ஸல் (Pixel) தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன' என்று சொல்லிச் சமாளிக்கிறார்கள். அந்தப் படத்தில் தெரியும் புள்ளிகள் ஒன்று போல மற்ற ஒன்று காணப்படவில்லை. வடிவத்திலேயோ, பருமனிலேயோ அவை வேறாகத்தான் இருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகின்றது. அதுமட்டுமில்லாமல், க்யூரியாசிட்டியில் அமைக்கப்பட்ட காமெரா மிகவும் துல்லியம் வாய்ந்த உயர் தொழில்நுட்பம் கொண்டது. 'MARDI' (Mars Descent Imager) என்று சொல்லப்படும், இதற்கென்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட காமெரா அது. அதில் பிக்ஸல் தப்புகள் நடந்தன என்று சொல்வதுதான் பலரால் நம்ப முடியாமல் இருக்கின்றது. இப்படியான தவறுகள் காமெராக்களில் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், எப்போதும் இது போன்ற சம்பவங்களில் இதையே காரணம் காட்டி நழுவியும் விடுகிறார்கள். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் நாஸா இதுபற்றி இதுவரை வாயே திறக்கவில்லை. [/size]

[size=4] [/size]

[size=4]

photo%206.jpg[/size]

[size=4] [/size]

[size=4]

செவ்வாயில் பறக்கும் தட்டுகள் இருக்கின்றன என்று சந்தேகப்படுவதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்று சொன்னேன் அல்லவா? அவை கொஞ்சம் சுவாரஸ்யமானவைதான். 1996ம் ஆண்டு அண்டார்டிகாவில் ஆராய்ச்சியாளர்களால் ஒரு எரிகல் (Meteor) கண்டெடுக்கப்பட்டது. விண்வெளியில் சுற்றிவரும் சிறிய விண்கல் (Meteoroid) பூமியின் வளிமண்டலத்தில் நுழைவதால் அது எரிந்து மிஞ்சும் பகுதிகள், எரிகற்களாக பூமியில் சிதறி விழும். 'Meteoroid' என்று அழைக்கப்படும் பெரிய கல்லொன்று, பூமியில் நுழைந்து எரிந்து, சிதறி விழுந்த பின் அது 'Meteor' என்று அழைக்கப்படும். 1996ம் ஆண்டு அண்டார்ட்டிகாவில் கண்டெடுக்கப்பட்ட எரிகல்லை ஆராய்ந்தபோது, அதில் ஒரு ஆச்சரியமான செய்தி ஒன்று காத்திருந்தது. 13,000 வருசங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வெடித்து வந்த அந்தக் கல்லில் பாக்டீரியா போன்ற ஒரு உயிரினம், படிமமாகப் (Fossil) பதிந்திருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லுடன் கல்லாக, படிமமாக மாறிவிட்ட அந்த பாக்டீரியா போன்ற உயிரினம், சிக்கலான சேதனத்தைக் கொண்டிருந்தது. இதற்கு ALH84001 என்று பெயரிட்டிருக்கிறார்கள். அந்த உயிரினத்துக்கு கலம் (Cell) இருந்ததோடு, அது இரண்டு கலங்களாகப் பிரிந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் பூமியின் உயிரினங்களுக்கு மிகவும் அண்மையில் உள்ளவாறு இருந்தன. இந்த ALH84001 என்ற ஒன்றே, உயிரினம் பூமி தாண்டி, அயல் கிரகங்களிலும் இருக்கின்றன என்பதற்கு சான்றாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக செவ்வாயில் உயிரினம் இருக்கின்றது என்பதை இந்தச் சம்பவம் நம்பவும் வைக்கிறது. [/size]

[size=4] [/size]

[size=4]

photo%207.jpg[/size]

[size=4] [/size]

[size=4]

photo%208.jpg[/size]

[size=4] [/size]

[size=4]

"இது பாக்டீரியா போன்ற சிறிய நுண்ணுயிர். இதை வைத்துக் கொண்டு எப்படிச் செவ்வாயில் பறக்கும் தட்டும், புத்திசாலியான ஏலியன்களும் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லலாம்?" என்னும் கேள்வி இப்போது உங்களுக்கு நிச்சயம் தோன்றியிருக்கும். அதற்கும் கைவசம் பதில்கள் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது 25.08.2012 சனிக்கிழமை இரவு, உலக சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனை மனிதர் மரணமடைந்தார். அவரை அறியாதவர்கள் எவருமில்லை என்னும் அளவுக்குப் பிரசித்தி பெற்றவர். அவர் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong). நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்று பெயர் பெற்றவர். மொத்தமாக பன்னிரண்டு பேர் நிலவில் கால் பதித்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இல்லாத பெயர் இவருக்கு உண்டு. 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி, 'அப்போலோ 11' (Apollo 11) என்னும் விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong), எட்வின் ஆல்ட்ரின் (Edwin Buzz Aldrin), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) ஆகிய மூவரும் நிலவுக்கு முதல் மனிதர்களாகப் பயணம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். சந்திரனில் மனிதன் கால் பதித்தது என்று சொல்வது, ஒரு மாபெரும் ஏமாற்று வேலை என்ற பலமான எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தாலும், கால் பதித்ததை அனைவரும் நம்பத்தான் செய்கிறார்கள். ஆனால் நான் இப்போது சொல்ல வந்தது, ஆம்ஸ்ட்ராங் நிலாவில் முதலில் கால் பதித்தது பற்றியோ, அப்போலோ 11 பற்றியோ, நிலாவில் மனிதன் கால் வைக்கவில்லை என்பது பற்றியோ இல்லை. நான் சொல்ல வந்த விசயமே வேறு. [/size]

[size=4] [/size]

[size=4]

photo%209.jpg[/size]

[size=4] [/size]

[size=4]ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் நடந்தபோது, தங்களுக்கு மேலே சில ஒளி வட்டங்களைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமமல்லாமல் அவற்றைப் படங்களும் எடுத்திருக்கிறார்கள். நிலவில் இருந்துகொண்டு பூமியுடன் அவர்கள் பேசியபோது, தங்களை யாரோ அவதானிக்கிறார்கள் என்று சொல்லியும் இருக்கிறார்கள். ஏலியன்களின் விண்கலங்களையும், அவர்கள் நிலவில் அமைத்திருந்த அமைப்புகளையும் கூட, ஆம்ஸ்ட்ராங் படங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்கள். இவையெல்லாம் ஒரு வதந்தி என்னும் நிலையில் உலகம் நம்பாமல் இருந்தபோது, துணிச்சலாக ஆல்ட்ரின் இதைத் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிககைகளுக்கும் வெளிப்படையாகச் சொன்னார். ஆல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் பலரை அதிர வைத்தது. இது பற்றிய விபரங்கள் காணொளிகளாகவும், செய்திகளாகவும் இணையம் எங்கும் பரவியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். உலகின் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் நாஸாவில் அதற்கு அப்புறம் ஒரு சம்பவம் நடந்தது. அப்போலோ 11 இல் சென்றவர்கள், நாஸாவுடன் உரையாடிய ஒலி, ஒளிநாடா திடீரெனக காணாமல் போனது. குறிப்பிட்ட நிமிடங்கள் உள்ள அனைத்துப் பதிவுகளும் அவற்றிலிருந்து அழிக்கப்பட்டன. இவை ஏன் நடந்தது என்பது இதுவரை தெரியாத மர்மமாகவே இருக்கிறது. ஆல்ட்ரின், ஆம்ஸ்ட்ராங் இருவரும் நிலவுக்குச் சென்ற சாதாரண மனிதர்களல்ல. இருவருமே அறிவியலில் மிகையறிவு படைத்தவர்கள். ஆஸ்ட்ராநாட்ஸ் என்னும் பதவி யாருக்கும் சுலபமாகக் கிடைத்துவிடும் பதவியல்ல. கல்வியிலும், தகுதியிலும் சிறந்தவர்கள் மட்டும்தான் அதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட இருவருமே ஏலியன்கள் உண்டு என்று சொல்லும் போது, மற்றவர்கள் எம்மாத்திரம்? [/size]

[size=4] [/size]

[size=4]

photo%2010.jpg[/size]

[size=4] [/size]

[size=4]ஆச்சரியம் இத்துடன் முடிந்து போய்விடவில்லை. நிலவில் கால் பதித்த ஆறாவது நபரும், அப்போலோ 14 விண்கலத்தின் மூலம் சந்திரனுக்குச் சென்றவருமான 'எட்கார் மிட்ஜெல்' (Dr.Edgar Mitchell) என்பவர் ஏலியன் இருப்பதாகச் சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறார். தங்களுக்கு நடந்த சம்பவங்களையும், நாஸாவில் தான் பணிபுரிந்தபோது அறிந்து கொண்டவைகளையும் வைத்து, பூமிக்கு ஏலியன்கள் பல தடவை வந்து போனது நாஸாவுக்குத் தெரியும் என்றும், அதை 60 வருட காலங்களாக நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்றும் பேட்டியில் அவர் சொல்லியுள்ளார். இவர் கூறியுள்ள தகவல்கள் ஏலியன் விசயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஏலியன்கள் மனிதர்களின் உருவத்தைப் போலவே இருந்தாலும், சிறிய உருவமாக இருந்ததாகவும், அவற்றின் கண்கள் பெரிதாக இருந்ததாகவும் அவர் சொல்லியிருக்கிறார். [/size]

[size=4] [/size]

[size=4]

photo%2011.jpg[/size]

[size=4] [/size]

[size=4]இப்படிப் பல நிகழ்வுகள் நடந்த நிலையில்தான், செவ்வாய்க் கிரகத்தின் வான்வெளியில் ஒளிப்பந்துகள் காணப்படுகின்றன. அவற்றைப் பறக்கும் தட்டு என்றும், மனிதர்களின் செயல்பாட்டை ஏலியன்கள் கண்காணிக்கின்றன என்றும் சொல்கின்றனர். எது உண்மை, எது பொய் என்று தெரியாத நிலையில் நாம் தவிக்க விடப்படுகிறோம். நாஸாவில் பணிபுரிந்தவர்களில் பலர், நாஸா உண்மைகளை மறைக்கின்றது என்று அடிக்கடி சொல்வதை வதந்திகள் என்று நம்மால் ஒதுக்கிவிடவும் முடியவில்லை. அதனால் ஏலியன்கள் பூமியில் இருப்பதற்கான சாத்தியங்களைத் தொடர்ந்து நாம் பார்த்தால்தான் நமக்கென ஒரு விளக்கம் கிடைக்கும். எனவே அந்த விளக்கங்களை அடுத்த வாரத்தில் பார்ப்போமா?[/size]

[size=4]http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5888[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் வாசித்து முடித்தேன்!

அடுத்த பாகத்தில், ஏலியன்களைச் சந்திக்கலாம் என எண்ணுகின்றேன்! :D

தொடருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.