Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா இராணுவ தலைமையகத்தில் குண்டுவெடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று மதியம் சிறீலங்கா இராணுவத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி உட்பட பத்திற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு படைவீரர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இராணுவத்தளபதிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகி

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவ தளபதி உள்ளிட்டோர் படுகாயம்!

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரும் படுகாயமடைந்துள்ளனர்.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவ தளபதி மற்றும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் புஸ்பா சொய்சா கூறினார்.

நன்றி: புதினம்

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவ தளபதி மற்றும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் புஸ்பா சொய்சா கூறினார்.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது" என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

"பாரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக தகவலைத் தெரிவிக்க இயலாத நிலை இருப்பதாகவும்" சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நன்றி: புதினம்

கொழும்பில் சிறீலங்கா இராணுவத் தலைமையகத்தினுள் இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி சரத்பொன்கேசா உட்பட 10 இராணுவ உயர் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதோடு மேலும் பல இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிரிழந்துள்ளார்.இதேவேளை சரத்பொன்சேகாவின் 5 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்.

படுகாயமடைந்த இராணுவ அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சேதங்கள் மிக அதிகம் என அறியமுடிகிறது. பெண் தற்கொலைதாரியே குண்டை வெடிக்கவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல் விரைவில்.....

பதிவு

(கொழும்பு நிருபர்)

இன்று கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தலைமையக மருத்துவமனைக்கு அருகில் வைத்து தளபதி லெப்டின் ஜெனரல் சரத்பொன்சேகா பயணம் செய்த வாகனத்தை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் சிறிலங்காப்படைகளின் தளபதி உட்பட பல உயர் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் எனினும் இதனை சிறிலங்கா அரசு மூடிமறைத்து வருவதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

புளியங்குளம் மற்றும் முகமாலை சோதனைச்சாவடிகளை சிறிலங்கா இராணுவம் மூடிவிட்டதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

கொழும்பில் சிறீலங்கா இராணுவத் தலைமையகத்தினுள் இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி சரத்பொன்கேசா உட்பட 10 இராணுவ உயர் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதோடு மேலும் பல இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிரிழந்துள்ளார்.இதேவேளை சரத்பொன்சேகாவின் 5 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்.

படுகாயமடைந்த இராணுவ அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சேதங்கள் மிக அதிகம் என அறியமுடிகிறது. பெண் தற்கொலைதாரியே குண்டை வெடிக்கவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல் விரைவில்.....

பதிவு

?????????????????

:?: :?: :?: :?: :?: :?:

சரத் பொன்சேகாவை பற்றிய செய்தி நிஜம் தானா?

கொழும்பில் சிறீலங்கா இராணுவத் தலைமையகத்தினுள் இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி சரத்பொன்கேசா உட்பட 10 இராணுவ உயர் அதிகாரிகள் படுகாயமடைந் துள்ளதோடு மேலும் பல இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. .இதேவேளை சரத்பொன்சேகாவின் 6 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்

பதிவு

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவத் தளபதி படுகாயம்- 8 பேர் பலி

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி மற்றும் 27 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொது மருத்துவமனையில் தலைமை தாதி புஸ்பா சொய்சா கூறினார்.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது' என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

"பாரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக தகவலைத் தெரிவிக்க இயலாத நிலை இருப்பதாகவும்" சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

புதினம்

இராணுவத்தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிர்ந்தவர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இராணுவத்தளபதி தொடர்ந்தும் அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக கொழும்பு இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா தேறி வருவதாக ஒரு துன்பியல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது

A9 பாதை மூடப்பட்டிருக்காம். சூனியப் பிரதேசத்தில் இருந்த செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வெளியேறியுள்ளனராம்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

புதிய இராணுவத் தளபதியாக சாந்த கெட்டேகொட மீண்டும் நியமனம்?

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

திருமலையில் ஊரடங்கு உத்தரவு.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

(5 ஆம் இணைப்பு) கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவத் தளபதி உட்பட 27 பேர் படுகாயம்- 8 பேர் பலி

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ மருத்துவமனையில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக கர்ப்பிணிப் பெண் போல் வந்த தற்கொலைதாரிதான் இத்தாக்குதலை நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பில் கூறப்படுவதாவது:

இராணுவத் தளபதியினது வாகனம் தன்னை கடந்து செல்லும் வரையில் பெண் தற்கொலைதாரி வெளிப்புற வாயிலில் காத்திருந்தார்.

பிற்பகல் உணவுக்காக சரத் பொன்சேகா புறப்பட்டுச் சென்ற போது அவரது வாகனத்தை நெருங்கிய அப்பெண் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் கொல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த 28 பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு தேசிய மருத்துவமனையில் படுகாயங்களுடன் சத்திர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 2 இராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் இராணுவ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி சரத் பொன்சேகா உட்பட 14 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதிக்கு அவசர சத்திர சிகிச்சை செய்த பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை நீதிபதி பார்வையிட்டு காவல்துறையினர் மற்றும் பகுப்பாய்வினருடன் விசாரணை நடத்தினார்.

இத்தாக்குதலில் கொல்லப்பட்டோர் மற்றும் படுகாயமடைந்தோரை அடையாளம் காணும் பணி தொடர்கிறது என்று இராணுவத்தரப்பினர் தெரிவித்தனர்.

சரத் பொன்சேகாவுக்கு சத்திர சிகிச்சை முடிவடைந்து அவர் உடல்நிலை தேறிவருவதாகவும் அவருக்கு வயிற்றிலும் மார்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது' என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு குண்டுவெடிப்பையடுத்து நகரின் பாதுகாப்பை அதிகப்படுத்த அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். கொழும்பு இரகசியப் பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: புதினம்

இராணுவத்தளபதி சரத் பென்சகோவின் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக கொழும்பு வைத்தியசாலை வைத்திய அதிகாரி தெரிவித்துள்்ளார். சத்திரசிகிச்சை பிரிவிலிருந்து அவசரசிகிச்சைப் பிரிவிற்க்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

வத் தலைமையக குண்டு வெடிப்பு - உள்வீட்டுச் சதியா?

சிறீலங்கா இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து அரசு தலைவர் செயலகத்தில் அரசாங்கத்தரப்பினர் தற்சமயம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் உச்ச பாதுகாப்பு பிரதேசமான இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தரப்பினர் கூறுவது போல ஒரு தற்கொலை தாக்குதல் நடைபெற எந்தவித சந்தர்ப்பமும் இல்லை. இது உள்விவகார hPதியான பிரச்சினையாகவே இருக்கவேண்டும் என்பதோடு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் எனக்கூறப்படுவது வெறும் கண்துடைப்பே என்று பல்வேறு அவதானிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சங்கதி

(6 ஆம் இணைப்பு) கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவத் தளபதி உட்பட 29 பேர் படுகாயம்- 8 பேர் பலி

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ மருத்துவமனையில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக கர்ப்பிணிப் பெண் போல் வந்த தற்கொலைதாரிதான் இத்தாக்குதலை நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பில் கூறப்படுவதாவது:

இராணுவத் தளபதியினது வாகனம் தன்னை கடந்து செல்லும் வரையில் பெண் தற்கொலைதாரி வெளிப்புற வாயிலில் காத்திருந்தார்.

பிற்பகல் உணவுக்காக சரத் பொன்சேகா புறப்பட்டுச் சென்ற போது அவரது வாகனத்தை நெருங்கிய அப்பெண் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 28 பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு தேசிய மருத்துவமனையில் படுகாயங்களுடன் சத்திர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த மேஜர் பியல் விக்கிரமதுங்கவும் கொல்லப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு படைத்தரப்பினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலையடுத்து யாழ் செல்லும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதிகளில் ஒருவரான நந்த மல்லவராச்சியும் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 2 இராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் இராணுவ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்ஃ

இராணுவ தளபதி சரத் பொன்சேகா உட்பட 14 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதிக்கு அவசர சத்திர சிகிச்சை செய்த பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை நீதிபதி பார்வையிட்டு காவல்துறையினர் மற்றும் பகுப்பாய்வினருடன் விசாரணை நடத்தினார் என்று இராணுவத்தரப்பினர் தெரிவித்தனர்.

சரத் பொன்சேகாவுக்கு சத்திர சிகிச்சை முடிவடைந்து அவர் உடல்நிலை தேறிவருவதாகவும் அவருக்கு வயிற்றிலும் மார்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை அதிகாரிகள் மாலை 6 மணியளவில் தெரிவித்த தகவலின்படி சரத் பொன்சேகா அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல்களின் படி,

கோர்ப்பரல் வருசவிதன, லான்ஸ் கோர்பரல் ஓ.கே.டி.பி.விராஜ் மற்றும் தேவ சுரேந்திர, நிலுக பிரியங்கானி ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது" என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உறவை இத்தாக்குதல் பாதிக்கும்; எதிர்காலப் பேச்சுக்களை சீர்குலைக்கும் என்றார்.

"இருதரப்பினரும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல அமைதி முயற்சிகளில் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்புத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:

கொழும்பில் பிற்பகலில் எதிர்பாராத பாரிய சம்பவம் நடைபெற்றுள்ள நிலையிலும் நாங்கள் அமைதி முயற்சிகளில் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

ஜெனீவாப் பேச்சுக்களில் பங்கேற்பதைத் தவிர்க்க தேவையற்ற காரணங்களை விடுதலைப் புலிகள் கூறிவந்தனர். அவர்கள் கூறிவந்ததன் நோக்கத்தை ஒவ்வொருவரும் இப்போது புரிந்து கொள்ள முடியும்.

பிரச்சனைக்கு யுத்தம் தீர்வு அல்ல. அமைதி முயற்சிகளின் மீது மகிந்த ராஜபக்ச நம்பிக்கை கொண்டுள்ளார். ஆகையால் சர்வதேச சமூகம்தான் இப்போது எமக்கு உதவ வேண்டும் என்றார்.

கொழும்பு குண்டுவெடிப்பையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்தினார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை உடனே செய்யுமாறு அரச தலைவர் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

நகரின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு இரகசியப் பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: புதினம்

இலங்கை இராணுவத் தலைமையக்த்தின் மீது குண்டுத் தாக்குதல், 8 பேர் பலி;

திருகோணமலையில் வான் மற்றும் கடல்வழித் தாக்குதல்கள்

-BBC கொழும்புச் செய்தியாளர்

20060317164342sarath203d.jpg

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இலங்கை இராணுவத் தலைமையக மருத்துவமனை வாசலில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் 8 பேர் கொல்லப்பட்டனர்; இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும் மேலும் 27 பேரும் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும் , இலங்கை படையினருக்கும் மோதல்கள் நடந்துள்ளதாக அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன. மிக் ரக விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

காயமடைந்த லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா

இராணுவ மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பார்க்க வருவது போன்று அங்கு வந்த ஒரு பெண் தற்கொலையாளி பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் இராணுவ தளபதியின் வாகனத்தின் மீது பாய்ந்து குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீது குற்றஞ்சாட்டுகிறது.

இராணுவத்தளபதி தனது அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்த போது, விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலையாளி தன்வசம் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவப் பேச்சாளர்

இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், இராணுவத் தளபதியும் மேலும் 27 பேரும் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

இராணுவத் தளபதியின் உடல்நிலை அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாகவும் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

காயமடைந்த இராணுவ தளபதி தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இராணுவத்தின் தலைமைத் தளபதி ஒருவர் இலக்கு வைத்து தாக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கிடையே ஏற்கனவே வன்செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை நகரான திருகோணமலையில் இன்று பிற்பகல் 4 மணி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ரோகரா... ரோகரா..அரோகரா...

"கொக்கென்று நினைத்தீர்களா? கொங்கனவர்களே!" ... ஆஆஆஆ.....

ம்ம்ம்ம்... சந்தோசத்தில் அரை முடிச்சிட்டேன்!!! ம்ம்ம்ம்ம்...

உனக்கு மனிசி, பிள்ளைகள் குடும்பத்தோடு கொலிடே போக, எங்களை அடிச்சுத்திறத்தின மண்தான் கிடைச்சுதோ????

என்ன... போர் வெறியராம்!!!! இனிக்காட்டு!!!!

.... "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம், ஆரோவாம்"!! அப்படி பேசாமல் கம்னு இருந்திருக்கலாம்!!! ... உதென்ன இனி கை, கால், கவிட்டுக்குள்ளை, ... அதுகளுக்குள்ளையெல்லாம் தொடர்ந்து வெடிக்கேக்கைதான் தெரியும்!!!!!!! ......

அரோகரா...அரகரகோகரா.....

அவையின்ரை பிரச்சாரம் "நிராயுத பாணியான இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கு" என்று போகுது. :lol:

ஒரு நாட்டின் இராணுவத் தளபதியை நிராயுத பாணி என்று சொன்னால் என்ன இலங்கை இராணுவம் ஒட்டு மொத்தமாக சரணடைந்து விட்டார்களா 2002 போர்நிறுத்த உடன்பாட்டோடு? :shock:

களத்துக்கு போகாமல் மறைந்து வாழ்ந்த தளபதியை... தவறுதலாக வெடித்துவிடுமோ எண்ற பயத்தில் கைத்துப்பாக்கியைக்கூட வைத்திருக்காமல் இருப்பவர் நிராயுதபாணிதானே...!

capt.col10204251424.sri_lanka_violence_col102.jpg

In this handout photo provided by the Sri Lankan Army, soldiers cover the bodies of the victims of a suicide bomb explosion at the army head quarters in Colombo, Tuesday, April 25, 2006. A female suicide bomber believed to be a Tamil Tiger rebel and pretending to be pregnant, exploded a bomb in front of a car that was taking Sri Lanka?s top military general Lt. Gen. Sarath Fonseka inside the army headquarters in Colombo on Tuesday, the military said. (AP Photo/Sri Lanka Army, HO)

capt.col10304251426.sri_lanka_violence_col103.jpg

In this handout photo provided by the Sri Lankan Army, a limb of a victim is seen in foreground, as soldiers inspect the site of a suicide bomb explosion at the army head quarters in Colombo, Sri Lanka, Tuesday, April 25, 2006. A female suicide bomber believed to be a Tamil Tiger rebel and pretending to be pregnant, exploded a bomb in front of a car that was taking Sri Lanka?s top military general Lt. Gen. Sarath Fonseka inside the army headquarters in Colombo on Tuesday, the military said. (AP Photo/Sri Lanka Army, HO)

r1846321053.jpg

The vehicle of Army Commander Sarath Fonseka is seen after a suicide bomb explosion at the military headquarters in Colombo, April 25, 2006. A suicide bomber blew herself up inside Sri Lanka's army headquarters on Tuesday and at least six people were dead at the scene, an army spokesman said. The blast seriously wounded Fonseka and called into question a cease-fire with the Tamil Tiger rebels. REUTERS/Army Media/Handout

Tamil links

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவின் உடல் நிலை தேறுகிறது: தற்கொலைதாரியின் தலை கண்டெடுப்பு.

சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தலையிலும் கழுத்துப்பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்று சத்திர சிகிட்சைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மேற்கொள்ளப்பட்ட பெரியதொரு சத்திர சிகிச்சைக்குப்பின் இராணுவத் தளபதியின் நிலமை முன்னேற்றமடைந்து வருவதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இன்றை தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் தலைப்பகுதி அருகில் இருந்த மரமொன்றில் தொங்கியபடி இருந்ததாகவும் அத்தலைப்பகுதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வுத்துறையினர

  • கருத்துக்கள உறவுகள்

சரத்பொன்சேகா மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது கண்காணிப்புக் குழு.

சரத்பொன்சேகா மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்மையாகக் கண்டித்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ் டோட்டீர் தெரிவிக்கையில்...

சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

இத் தாக்குதல் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கும் எனவும் இதனால் சமாதான பேச்சுக்கள் பாதிக்கக் கூடிய வாய்பிருப்பதாகவும் ஹெலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இதற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. இத்தாக்குதலும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் தாக்குதல் போன்றதே. இதில் சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரங்கள் இல்லை. எந்தவித உறுதியாக ஆதாரங்களையும் நாங்கள் பார்க்கவில்லை. உறுதியான ஆதாரங்கள் இன்றி எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றார். இதேபோன்றதே இன்றை தற்கொலைத் தாக்குதலும்.

இதுகுறித்து அறிய எமதுக்கு சிறிது காலம் தேவை. அண்மைக்காலமாக நடைபெறும் இராணுவம் மீதான தாக்குதலைத் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் செய்திருப்பார்கள் என ஊகிக்க முடிமே தவிர விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்ல முடியாது.

எல்லா விடயங்களுக்கும் இலகுவாக புலிகள் மீது குற்றம் சாட்டலாம் ஆனால் இலங்கையில் உள்ள தற்போதைய சூழல் சிக்கலானது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இயங்கும் ஆயுதக் குழுக்களிட் ஆயுதங்களை களையுமாறு அரசாங்கத்திடம் கேட்டுடிருந்தோம் ஆனால் அரசாங்கத் தரப்பினர் அதனை செவிசாய்கவில்லை. நாம் அதற்கு ஆதாரங்கள் வைத்திருக்கின்ற போதிலும் அரசாங்கத்தினர் அதனை நம்பத் தயாரில்லை. ஆனால் அதில் குற்றங்காணுகிறார்கள். இது அமைதி முயற்சிக்கு உதவாது. தாங்களும் ஊடகங்கள் ஊடாகவே தகவல்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. என்றார்ர் ஹெலன்.

-பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.