Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நம்பிக்கை அற்ற தமிழர்களே தென்சூடான் மரதன் ஓட்டவீரனின் காலடித்தடங்களை ஒருதடவை பாருங்கள்! நம்புங்கள் தமிழர்களே இன்று இல்லாவிட்டாலும் நாளை நமதாகும்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]nadattravan.jpgr.jpg

[size=4]எல்லாம் முடிந்து விட்டது. என்ற ஒற்றை வார்த்தைக்குள் அனைத்தையும் உள்ளடக்கி குப்பைக் கூடைக்குள் கசக்கிப் போடும் கடதாசியாக தமிழினத்தின் விடுதலைக்கான வேள்வியை அற்ப விடயமாக கருதும் தமிழர்களே இதனையும் ஒருதடவை நேரமொதுக்கி படியுங்கள்.[/size]

[size=4]ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல்வார்கள். உலகத்து நாடற்றவர்கள் கண்கள் அனைத்தும் அவன் மேலேயே இருக்கும். அவன் பெயர் குவோர் மாரியல்.[/size]

[size=4]nadattravan.jpg[/size]

[size=4]குவோர் மாரியலுக்கு 28 வயது. தெற்கு சூடானிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக 12 வருடங்களுக்கு முன்னர் குடிபெயர்ந்தான். அவனுக்கு வசிப்பிட உரிமை கிடைத்தது, ஆனால் குடியுரிமை கிடைக்கவில்லை. அவன் தீவிரமான மரதன் ஓட்டக்காரன். ஆனாலும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அவன் ஓடமுடியாது என்று கூறிவிட்டார்கள். அப்படி ஓடுவதென்றால் அவனுக்கு ஒரு நாடு வேண்டும். சூடான் அதிபர் அவன் சூடான் நாட்டுக் கொடியின் கீழ் ஓடலாம் என அழைப்பு விடுத்தார். அவனுடைய எட்டு சகோதரர்களைக் கொன்றது சூடான் அரச படை. அவர்களின் அட்டூழியம் தாங்கமுடியாமல்தான் அவன் 12 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அகதியானான். சூடான் நாட்டு கொடியின் கீழ் அவன் எப்படி ஓடமுடியும்? தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்திருந்தாலும் அதனிடம் ஒலிம்பிக் குழு இல்லை. அதனால்தான் இப்பொழுது இந்த நாடற்ற மனிதனுக்கு ஒலிம்பிக் கொடியின் கீழ் ஓட அனுமதி கிடைத்திருக்கிறது.

குவோர் மாரியலுக்கு ஓட்டம் இயற்கையாக வந்தது. சமீபத்தில் மரதன் ஓட்டத்தை 2 மணி 14 நிமிடம் 32 செக்கண்டில் ஓடி முடித்து ஒலிம்பிக் மரதனுக்கு தகுதி பெற்றிருந்தான். ஆனால் நாடில்லாத அவனை அமெரிக்கா கவனித்ததாக தெரியவில்லை. எனவே 3500 கையெழுத்தாளர்கள் குவோல் மாரியலுக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற அனுமதி கொடுக்கவேண்டும் என ஒலிம்பிக் குழுவுக்கு மனு அனுப்பினார்கள். ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒருவாரம் இருந்தபோது அனுமதி கிடைத்திருக்கிறது. இதைப் பெரிய வெற்றியாக பத்திரிகைகள் கொண்டாடின. ஒரு பத்திரிகை ’தெற்கு சூடானின் குரல் ஒலிம்பிக்வரை கேட்டது’ என்று எழுதியது. இன்னொரு பத்திரிகை ’இந்த தனிமனிதனின் வெற்றியை பூமி மகனின் வெற்றி என கருதலாம்’ என எழுதியது. மாரியல் ’தெற்கு சூடான் கொடியை நான் ஏந்தவில்லை. ஆனால் என்னுள்ளத்தில் அந்தக் கொடியை ஏந்தியபடியே ஓடுவேன்’ என்று கூறுகிறான்.

12 ஆகஸ்டு 2012 லண்டனில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி நடைபெறும். பல்வேறு நாடுகளிலுமிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த 42.195 கி.மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்வர். அந்தக் கூட்டத்தில், ஒரு பெண்ணால் ’விலங்கு வணங்கிகள்’ என்று வர்ணிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த குவோர் மாரியல் இருப்பான்

என் கண்கள் மாரியலின் ஓட்டத்தை மட்டுமே பார்க்கும். அவன் முதலாவதாக வந்தாலும் சரி, கடைசியாக வந்தாலும் சரி, 2012 ஒலிம்பிக் மரதன் ஓட்டவீரன் அவன்தான். நாடற்றவன்.

தன்னை அடையாளப்படுத்த நாடற்ற ஒருவன் ஏந்திச் செல்ல ஒரு கொடியில்லாத ஒருவன் தனது திறமையினை முதலீடாக்கி இன்று ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கின்றான் என்றால் எம்மாலும் முடியும். இன்று இல்லாவிட்டாலும் நாளை நமதாகும். நம்பிக்கையுடன் போராடுவோம். சுதந்திர தமிழீழத்தை வென்றெடுப்போம்.

ஈழதேசம் இணையம்.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

சிறீ லங்கா பிடிக்காவிட்டால் இந்தியன் யூனியனின் கொடியின் கீழ் ஓடக்கூடியவர்கள் ஓடலாம் என்று கூறுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் பல தமிழர்கள் அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்கள்.அவர்கள் முதலில் மரதன் ஓட்டத்தில் அவர்கள் வசிக்கும் நாட்டின் சார்பில் முதலில் பங்கு பற்றலாமே ??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழனுக்கு ஒலிம்பிக்கில் பங்கு பற்ற இடம் கிடைத்தால்....

தமிழர்கள் என்ன கொடியை பிடிக்கிறது என்பதில்.. பல மாற்றுக் கருத்துக்கள் உள்ளதால்,

ஒலிம்பிக் கொடியா... புலிக் கொடியா, பிடிப்பது என்று முதலே.... முடிவெடுப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில தமிழனுக்க தான் மாற்றுக் கருத்து அதிகம். இந்த தேவையில்லாத பிரயோசனமற்ற.. எதிரிக்கு உதவுகின்ற மாற்றுக் கருத்துக்களால் அழிந்ததும் அழிகின்றதும் தமிழன் தான்..!

அமெரிக்காவை எதிர்ப்பவனை அடிக்க அமெரிக்கர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தமிழனை அழிப்பவனை காப்பாற்ற.. மன்னிக்க.. இரட்சிக்க.. தமிழனுக்குள்ளேயே மாற்றுக் கருத்தோடு அலையும் சம்பந்தர்களும்.. சங்கரிகளும்.. கருணாக்களும்.. டக்கிளசுகளும்.. இன்னும் யார் யாரோ எல்லாம் உள்ள நிலையில்.. தமிழன் ஒலிம்பிக்கில்.. குப்பை கூட பொறுக்க தகுதி அற்றவனாகவே இருப்பான்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில தமிழனுக்க தான் மாற்றுக் கருத்து அதிகம். இந்த தேவையில்லாத பிரயோசனமற்ற.. எதிரிக்கு உதவுகின்ற மாற்றுக் கருத்துக்களால் அழிந்ததும் அழிகின்றதும் தமிழன் தான்..!

அமெரிக்காவை எதிர்ப்பவனை அடிக்க அமெரிக்கர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தமிழனை அழிப்பவனை காப்பாற்ற.. மன்னிக்க.. இரட்சிக்க.. தமிழனுக்குள்ளேயே மாற்றுக் கருத்தோடு அலையும் சம்பந்தர்களும்.. சங்கரிகளும்.. கருணாக்களும்.. டக்கிளசுகளும்.. இன்னும் யார் யாரோ எல்லாம் உள்ள நிலையில்.. தமிழன் ஒலிம்பிக்கில்.. குப்பை கூட பொறுக்க தகுதி அற்றவனாகவே இருப்பான்..! :icon_idea:

Facebook-Like-Button-big.jpg

[size=5][size=6]ஓடி முடித்தார், சாதனை படைத்தார்.[/size][/size]

[size=5]Guor Marial made his debut in the London Games on Sunday, a major accomplishment for the South Sudanese marathoner who ran as an independent in the Olympics.[/size]

[size=5]Marial, 28, pounded his way around the 26.2-mile course in 2:19:32. He finished 47th in the race dominated by fellow Africans Steven Kiprotich of Uganda, who won gold, and Abel Kirui and Wilson Kiprotich, both of Kenya, who won silver and bronze, respectively.[/size]

[size=5]But for Marial, completing the race was as good as winning.[/size]

[size=5]http://edition.cnn.c...nner/index.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.