Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னைக்கு வயது 373!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தொடருங்கள்

  • Replies 65
  • Views 15.6k
  • Created
  • Last Reply

[size=6]சென்னை மறுகண்டுபிடிப்பு[/size]

[size=4]எஸ்.முத்தையா[/size]

[size=3][size=4]சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.[/size][/size]

[size=3][size=4]சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் அவர்களுடைய சுவாரஸ்யமான கதைகளும்கூட இதில் அடங்கியுள்ளன. அந்த வகையில், இது சென்னையின் சரித்திரத்தை மட்டுமல்ல, அந்நகரின் நகமும் [/size][/size]

[size=3][size=4]சதையுமாக விளங்கிய மனிதர்களின் வாழ்க்கையையும் ஒருங்கே சொல்கிறது.[/size][/size]

[size=3][size=4]பிரபலமானவர்கள் மாத்திரமல்ல, அதிகம் அறியப்படாத முக்கிய நபர்களின் பங்களிப்பும் இதில் பதிவாகி உள்ளது. ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ், ஃபிரான்சிஸ் டே, கணித மேதை ராமானுஜன், நோபல் விஞ்ஞானி சுப்ரமணியம் சந்திரசேகர், எஸ்.எஸ். வாசன், ஜே. கிருஷ்ணமூர்த்தி, ருக்மிணி தேவி அருண்டேல், பாரதியார், பச்சையப்பர், பாரி, பின்னி இன்னும் பல.[/size][/size]

[size=3][size=4]சேப்பாக்கம் மைதானம், கவர்னர் மாளிகை, உயர் நீதிமன்றம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, எல்.ஐ.சி. [/size][/size]

[size=3][size=4]கட்டடம், வள்ளுவர் கோட்டம், சாந்தோம் தேவாலயம், துறைமுகம், சென்னையின் முதல் மருத்துவமனை, முதல் ஜாதிக் கலவரம், முதல் பாலியல் பலாத்கார வழக்கு, முதல் அச்சகம், முதல் திரையரங்கம் என்று சென்னையின் கச்சிதமான குறுக்குவெட்டுத் தோற்றம் இதில் இடம்பெற்றுள்ளது.[/size][/size]

[size=3][size=4]இன்னமும் அறியப்படாத, இதுவரை சொல்லப்படாத சென்னையின் பல நூறு ரகசியங்களைக் கொண்டிருக்கும் இந்நூல், இந்நகரை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வரலாற்று வழிகாட்டி. சென்னையின் முறையான வரலாறு எழுதப்படவில்லை என்னும் குறையை எஸ். முத்தையா இதில் தீர்த்து வைக்கிறார்.[/size][/size]

[size=3][size=4]ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/s...8493-234-8.html[/size][/size]

[size=3][size=4]போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97[/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி தப்பிலி, டங்கு, ஜீவா, கிஸ்ஸான், ரதி, நந்தன் மற்றும் அகூதா...

நேரம் கிட்டும்பொழுது சென்னை பற்றிய தகவல்களை அவசியம் இன்னும் பதிகிறேன்... :rolleyes:

அளவுக்கதிகமாக, "சென்னை.... சென்னை" என கூவினால், "போ** ... வெண்ணை..!" என நீங்கள் நினைக்கக் கூடாதல்லவா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூலகம் சென்னையில் எங்கு உள்ளது?

அம்மணி, இது நூலகமல்ல...! அனைத்து புத்தகங்களும் விற்கும் கடை...

Higginbothams.jpg

2010121950140401.jpg

சென்னை அண்ணா சலையில், 14 மாடி எல்.ஐ.சி கட்டிடத்திற்கு நேர் எதிரேயே அமைந்துள்ளது. இந்நிறுவனத்திற்கு போட்டியாக அதனைச் சுற்றி பல புத்தகக் கடைகள் இப்பொழுது வந்துவிட்டன. ஆனால் "ஹிக்கின் பாதாம்ஸ்" இன்னும் அதே காரத்துடன், சரக்குடன் மிளிர்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி சென்னையின் பல பகுதிகளின் பெயர்களும் அப்பெயர் வரக் காரணமும் அறிந்து கொள்வோம்..

[size=4]தேனாம்பேட்டை[/size]:

தேனாம்பேட்டையில், 1800ம் ஆண்டு வரை வேளாண்மையே பிரதான தொழிலாக இருந்து வந்துள்ளது. நெல், வெற்றிலை, வாழை, கரும்பு, காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டன. அருகிலிருந்த ஏரி பாசன வசதி அளித்தது. வேளாளர்களும், பள்ளர்களும் இங்கு வாழ்ந்து வந்தனர். பின்னர் ஆங்கிலோ இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழத்துவங்கினர். கி.பி., 1800க்குப் பின் ஆங்கிலேயரின் வரவு இதன் விரைந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டுக்குப் பின் 'முசல்மான்'கள் நுழைந்திருக்கின்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வர சுவாமி கோவில் உள்ள கல்வெட்டு, 1808ம் ஆண்டைச் சேர்ந்தது. அகத்தீஸ்வர சுவாமி, அகிலாண்டீஸ்வரியம்மன் கோவில்களுக்கு தெய்வநாயக முதலியார் நிலம், சத்திரம், தோப்பு ஆகியவற்றை கொடைஅளித்தது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.

தெய்வநாயக முதலியார் மிகுந்த செல்வமும், செல்வாக்கும் மிக்கவராக இருந்திருக்கிறார். எனவே, தெய்வநாயகத்துக்கு சொந்தமான பகுதிகள், தெய்வநாயகம் பேட்டை என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தேனாம்பேட்டையாக மருவியிருக்க வேண்டும் என, ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குரோம்பேட்டை:

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது. "இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்" நிறுவியவரும், இந்திய இஸ்லாமியர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான "காய்தே மில்லத் இஸ்மாயில் சாகிப்" இங்குதான் இருந்தார்.

1884ல் இந்தியாவிற்கு வந்த ஜார்ஜ் அலெக்சாண்டர் சேம்பர்ஸ்(ஜி.ஏ.சேம்பர்ஸ்) என்பவர் 1903ம் ஆண்டில் தோல் பதனிடும் தொழிலையை துவக்கினார். தொடர்ந்து, பல்லாவரத்தின் தென்பகுதியில், 1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் 'க்ரோம் லெதர்' கம்பெனி என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை ஜி.ஏ.சேம்பர்ஸ் தொடங்கினார். அதனைத் தொடர்ந்தே அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, 1949ல் 20 ஹெக்டர் பரப்பளவில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,) எனும் மாநிலத்தின் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியிருப்பு மற்றும் வியாபார கட்டடங்கள் பெருகி தற்போது சென்னை புறநகரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கிறது.

[size=4]நுங்கம்பாக்கம்[/size]:

அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு 1808ம் ஆண்டைச் சேர்ந்தது என்பதால், அதற்கு முன்பே இங்கு குடியிருப்பு அமைந்திருக்க வேண்டும். நுங்கம்பாக்கம், பொம்மபுரம் என, இரண்டு பெயர்களும் 18ம் நூற்றாண்டுக்கு முந்தையவை.

"நுங்கு+அம்+பாக்கம்" எனப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

சென்னை மாவட்டக் கோயில் வரலாறு நூலாசிரியர் சுப்பிரமணியப் பிள்ளையின் கருத்துப்படி, "நுங்கம்பாக்கத்தின் கிராம தேவதை" சேத்துப்பட்டில் இருக்கும் கருக்காத்த அம்மன்; கருக்களைக் காத்து அருளும் அம்மை'. இதன்படி, நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டின் ஒருபகுதியாக இருந்திருக்க வேண்டும். சேத்துப்பட்டு முதலில் ஊராக அமைய, அதன் பரந்த பகுதியில், பனைமரங்கள் நெருக்கமாக இருந்த மற்றொரு பகுதி குடியிருப்பாக மாறியிருக்கிறது. அப்பகுதி நுங்கம்பாக்கம் என அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் தெலுங்கர் குடியேற்றம் காரணமாக பொம்மபுரம் என்ற பெயர் வந்தாலும், நுங்கம்பாக்கம் என்ற பெயரே செல்வாக்குடன் நிலைத்திருக்கிறது.

[size=4]சைதாப்பேட்டை[/size]:

செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்த இப்பகுதி, பின் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பிற்காலத்தில் இப்பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், பன்னெடுங்காலத்துக்கு முன்பே இது குடியிருப்பாக இருந்திருக்கிறது. கி.பி., 1726, 1884, 1896, 1887ம் ஆண்டுகளைச் சேர்ந்த நான்கு கல்வெட்டுகளில் சைதாப்பேட்டையைப் பற்றிய குறிப்புள்ளது. 1884க்கு முன்னரே சைதாப்பேட்டை தாலுகாவாக இருந்துள்ளது. காரணி கிராமம் இதற்கு உட்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது. காருண்ணிய ஈஸ்வரன் கோவில் இருந்ததால், காருண்ணிய கிராமம் என அழைக்கப்பட்டிருக்கக் கூடும். காரணி என்றால் பார்வதி என்ற பொருளும் உண்டு. சைதாப்பேட்டையின் மற்றொரு பெயர் ரகுநாதபுரம்; இங்கு ராமர் கோவில் இருந்ததாகத் தெரியவருகிறது.

ஆற்காட்டு நவாப் 1730ல் தன் உதவியாளருக்கு நந்தனம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிகளைப் பரிசாகக் கொடுத்துள்ளார். நவாப் தனக்கு ஒரு பகுதியை வைத்துக் கொண்டு, நெசவாளர், வாணிகர், கலைஞர்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ள செய்தி தெரியவருகிறது. பரிசாகக் கொடுக்கப்பட்ட பின், இப்பகுதி சையத்கான் பேட்டை என அழைக்கப்பட்டிருக்கிறது. பின் சையத் பேட்டை எனவும், சைதாப்பேட்டை எனவும் மருவியிருக்கலாம்.

[size=4]சேத்துப்பட்டு[/size]:

திருஒற்றியூரில் உள்ள ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டில், "சேற்றுப்பேடு' எனக் குறிக்கப்படுகிறது. புலியூர்க்கோட்டத்தைச் சேர்ந்த துடர் முனியூர்நாட்டில் இது அமைந்திருந்துள்ளது. ஸ்ரீரங்கநாதயாதவராயர் காலத்தில் செயங்கொண்ட சோழமண்டலம் புழல் கோட்டம் என்றும், விக்கிரமசோழ வள நாட்டில் எழுமூர்துடர்முனி நாட்டைச் சேர்ந்ததாகவும்' சேத்துப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. 1823ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு "சேத்துப்பட்டு' எனக் குறிப்பிடுகிறது.

சேறு, நீர்நிலை தொடர்பாக இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

[size=4]சிந்தாதிரிப்பேட்டை[/size]:

பெரியமேட்டுக்குத் தெற்கில், சுங்குராமர் என்ற வணிகருக்குச் சொந்தமான இந்த இடம் கவர்னர் ஜார்ஜ் மார்டன் பிட்டு என்பவரின் காலத்தில் சென்னை மாநகருடன் இணைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் இங்கு நெசவாளர் குடியிருப்பை அமைந்தனர். நெசவாளர்களின் சிறுதறிகள் இங்கே இயங்கியதால், "சின்ன தறிப்பேட்டை" என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் சிந்தாதிரிப்பேட்டை என மருவி விட்டது.

[size=4]எழும்பூர்[/size]:

'கொடுங்கோளூர் அஞ்சைக் களம் செங்குன்னூர்' எனத்தொடங்கும் அப்பரின் பாடலில், " இடும்பாவனம் எழுமூர், ஏழூர் தோழூர்' என, சிவதலங்கள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன. அப்பர் குறிப்பிடும் எழுமூர் சென்னை எழுமூரா, தஞ்சை எழுமூரா என்ற இருவேறு கருத்துகள் உள்ளன.

திருவல்லிக்கேணியில் கிடைத்துள்ள 16ம் நூற்றாண்டுக் கல்வெட்டில் "செயங்கொண்ட சோழமண்டலத்தில் புலியூர்க் கோட்டத்தில் எழுமூர் நாட்டில் திருவல்லிக்கேணி.... யசிங்க பெருமாள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம், எழுமூர் நாடு என்ற தலைமையின் கீழ் இருந்த நாட்டுப்பிரிவுகளுள் திருவல்லிக்கேணியும் ஒன்று எனத்தெரிகிறது. மயிலையின் ஒரு பகுதியாக இருந்து, பின் அதிலிருந்து பிரிந்து தனிக்குடியிருப்பானது எழுமூர். 13ம் நூற்றாண்டுக் கல்வெட்டில், "புலியூர்க் கோட்டத்தில் எழுமூர் நாட்டில் தெள்ளிய சிங்க நாயானர் திருவிடையாட்டமான புதுப்பாக்கத்தில்' என்ற செய்தி காணப்படுகிறது. திருஒற்றியூரில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில், "எழுமூர்த்துடர் முனை நாட்டுக் காட்டுப்பாக்கம்','ஐயங்கொண்ட சோழமண்டலத்து விக்கிரம சோழ வளநாடான புழற்கோட்டத்து எழுமூர் துடர் முனைநாட்டுச் சேற்றுப்பேடு' என்ற வரிகள் காணக்கிடைக்கின்றன.

பல்வேறு கல்வெட்டுகளிலும் எழுமூர் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஆங்கிலேயரின் வருகையின் போதே, எழுமூர் சிறப்பான நிலையில் இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் கோட்டை கட்டியபின், விரிவாக்கத்துக்காக 1693ல் எழுமூரைப் பெற்றுள்ளனர். எழுமூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளை ஆங்கிலேயர்கள் "தி போர் ஓல்டு டவுன்ஸ்' எனக்குறிப்பிட்டுள்ளனர்.

எதிரிகளைத் தடுப்பதற்கு விழிப்பறை(கண்காணிப்புக் கோபுரம்) கட்டத் தகுதியான மேடான இடம் எழும்பூரில் அமைந்திருப்பதாக ஆங்கிலேய அதிகாரி, தன் அரசுக்குத் தெரிவித்து இருக்கிறார். ஜெர்மானியர்கள் "எக்கிமோர்' என, அழைத்திருக்கின்றனர்.

ஏழு ஊர்களால் ஆனது எழும்பூர்; மேடான பகுதியில் அமைந்த ஊர் என்ற கருத்துகள் எழும்பூர் என்பதற்கான பெயர்க் காரணமாகச் சொல்லப்படுகின்றன. மேடான குடியிருப்பு என்ற காரணம் ஏற்புடையதாக இருக்கிறது.

[size=4]திருவல்லிக்கேணி[/size]:

சென்னையின் புராதனக் குடியிருப்புகளுள் இதுவும் ஒன்று. மயிலாப்பூரின் குடியிருப்புகள் தனித்தனி ஊராகின. அதில், முதலில் பிரிந்தது திருவல்லிக்கேணி. பேயாழ்வார் "ஒரு வல்லித்தாமரையாளர் ஒன்றிய சீர்மார்வன் திருவல்லிக்கேணியான்' என்றும், திருமழிசை ஆழ்வார் "நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்' என்றும் குறிப்பிடுகின்றனர். மயிலாப்பூர் சிவதலம்; எனவே, வைணவர்கள் திருமாலுக்குக்குத் தனிக் கோவில் கட்டி, கோவிலைச் சுற்றிவாழத்துவங்கிய பின், திருவல்லிக்கேணி என அழைக்கப்பட்டிருக்கக்கூடும். பல்லவன் தந்திவர்மன் காலத்துக்கு (கி.பி., 778-825) முன்பே இக்கோவில் புகழ்பெற்றிருக்க வேண்டும்.

இங்குள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் 91 கல்வெட்டுகள் உள்ளன. இதில் தந்திவர்மன் கல்வெட்டு பழமையானது. மயிலையின் ஒரு பகுதியாகஇருந்து பின், தனிக்குடியிருப்பான திருவல்லிக்கேணி, அரசியல் நிர்வாகத்துக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பகுதியின் கீழ் இருந்ததற்கு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

கி.பி., 1808ம் ஆண்டு தந்திவர்மன் கல்வெட்டில் திருல்லிக்கேணி எனக் குறிப்பிடப்படுகிறது. கி.பி., 1309ம் ஆண்டுக் கல்வெட்டில், "புலியூர்க் கோட்டத்தில் எழுமூர் நாட்டில் தெள்ளிய சிங்கநாயனார் திருவிடையாட்டமான புதுப்பாக்கத்தில்' எனச் சொல்லப்படுகிறது. புதுப்பாக்கம் திருவல்லிக்கேணியுடன் எழுமூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கக்கூடும். கி.பி., 1793ம் ஆண்டு ஈக்காட்டுத்தாங்கல் கல்வெட்டில், "சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி' எனக்குறிப்பிடுவதால், அப்போதே சென்னையின் ஒருபகுதியாகத் திகழத்தொடங்கியது அறியவருகிறது. புனிதஜார்ஜ் கோட்டையுடன் கி.பி., 1672ல் சேர்க்கப்பட்டதை சென்னையின் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

மயிலையின் ஒரு பகுதியான மாவல்லிக்கேணி; அல்லி நிறைந்த நீர்நிலை அருகே அமைந்த குடியிருப்பு ஆகையால், திருவல்லிக்கேணி என அழைக்கப்பட்டிருக்கிறது.

[size=4]மயிலாப்பூர்: [/size]

பழமையும் சிறப்பும் வாய்ந்த ஊராக மயிலாப்பூர் விளங்குகிறது. தொண்டை நாட்டுப்பகுதியாகவும், பல்லவர்கள், சோழர்களால் ஆளப்பட்ட பகுதியாகவும் விளங்கியிருக்கிறது. தேவாரப்பாடல்களில் இவ்வூரின் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. வேல் செய்யும் வல்லவர்கள் வாழ்ந்தபகுதி என அறியலாகிறது. திருவல்லிக்கேணி, சாந்தோம் பகுதிகள் இதனில் இருந்து பிரிந்தவை. தாலமி "மலியர்பா' எனக்குறிப்பிடுவது மயிலாப்பூரைத்தான் என்பது வரலாற்றாசிரியர்கள் கருத்து.

மாமயிலை, தொன்மயிலை, மயிலாபுரி, மயிலாப்பில், திருமயிலை, தென்மயிலாபுரி, திருமயிலாப்பூர் என பாடல்களும், கல்வெட்டுகளும் பல பெயரில் குறிக்கின்றன. மார்க்கோபோலோ மயில்கள் நிறைந்த பகுதி எனக்குறிப்பிடுகிறார். ஜான்டி மரிசு நோலி "மைரா போலிஸ்' எனவும், டூரேட் பார் போஸா "மைலாபூரா' எனவும் குறித்துள்ளனர்.

போர்ச்சுக்கீசியர்கள் மெலியபூர் என்றும், கி.பி., 17ம் நூற்றாண்டில் மயிலாப்பூர் எனவும், பிரம்மாண்டபுராணத்தில் மயூரபுரி, மயூரநகரி எனவும், ஆங்கிலேயர்களால் மைலாப்பூர் எனவும் பல்வேறு திரிபுகளாக வழங்கி வந்திருக்கிறது.மயில்கள் கூட்டமாக திரிந்து அகவிய இடம் என்று பொருள் கொள்ளலாம். இப்பகுதியை ஆண்ட பழைய குலத்தவரின் மரபுரைச் சின்னமாக மயில் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை.

மயிலையின் பிற பெயர்களாக, புன்னைவனம், வேதநகர், சுக்கிரபுரி, பிரமபுரம், கந்தபுரி, கபாலீச்சுரம், கபாலி மாநகர் என்பன போன்றவை சுட்டப்படுகின்றன. புன்னை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் புன்னை வனம் எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும். ஐயடிகள் காடவர் கோன், "மயிலைத் திருப்புன்னையங்கானல்' எனக்குறிப்பிடுகிறார். மயிலையின் ஒரு பகுதி புன்னை வனமாகவும் இருந்திருக்கக் கூடும். கபாலீச்சுரம், சைவத்தின் ஒரு பகுதியான கபாலிகர்கள் வணங்கிய சிவன் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பிற பெயர்கள் வடமொழித் தொடர்பைச் சுட்டுகின்றன.

பழமை மிக்க இவ்வூர் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், மயிலாப்பூர் என்பதே செல்வாக்கு மிக்கதாக விளங்குகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கோடம்பாக்கம்:[/size]

தென்னிந்தியாவின் ஹாலிவுட் எனப் புகழப்படும் கோடம்பாக்கம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. முன்பு கோடம்பாக்கம் இருக்கும் பகுதி புலியூர் என வழங்கி வந்திருக்கிறது. தொண்டை மண்டலத்தின் பலபிரிவுகளில் ஒன்று புலியூர் நாடு. அதனுள் குன்றத்தூர், போரூர், மாங்காடு, அமரூர், கோட்டூர் போன்ற ஊர்கள் இருந்தன. இன்றும் கோடம்பாக்கத்தின் சில பகுதிகளுக்கு புலியூர் என்ற பெயர் உள்ளது. புலிகள் அதிகம் இருந்த காட்டுப்பகுதி என்ற பொருளில் இது அழைக்கப்பட்டிருக்கக்கூடும். வியாக்கிரபுரீசுவரர் கோவில் பற்றிய தகவல்களும் இதற்கு வலுச் சேர்க்கின்றன. வியாக்கிரம்-புலி, வேங்கை எனப்பொருள்படுவது போல்,வியாக்கிரம் பூசித்திருந்த ஊர் வியாக்கிரபுரி. புலி பசித்திருந்த இடம் புலியூர். வேங்கை பூசித்த ஈசர் வேங்கீசர் என்பது போன்ற தகவல்களின் அடிப்படையில் புலியூருக்கு காரணப் பெயர் கற்பிக்கப்படுகிறது.

ஆற்காட்டு நவாப்பின் குதிரை லாயங்கள் இங்கிருந்துள்ளன. இந்தியில் 'கோட்பாக்' என்பது மருவி, கோடம்பாக்கம் ஆனது என்ற கருத்தும் உள்ளது.

[size=4]ஆழ்வார்பேட்டை: [/size]

மயிலாப்பூரின் மேற்குப் பகுதிக்குடியிருப்பு ஆழ்வார்பேட்டை. மயிலையின் ஒரு பகுதியாக இருந்து பின்னர் தனிக்குடியிருப்பாக வளர்ந்துள்ளது. முதலாழ்வார் மூவருள் ஒருவரான பேயாழ்வார் பிறந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பேயாழ்வார் கோவிலுக்கு உரிய நிலங்கள் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது. பேயாழ்வார் பிறந்த இடம் மயிலாப்பூர். அவரின் பாடல்களில், திருவல்லிக்கேணி பற்றிய குறிப்பு இருக்கிறதே தவிர, இப்பெயர் குறித்து எதுவும் இல்லை. அவர் காலத்துக்குப் பின், மக்கள் இப்பெயர் சூட்டியிருக்கலாம் எனக் கருதலாம். பேட்டை என்பது இடைக்காலத்தைச் சேர்ந்தது என்பதால், இக்கருத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது.

[size=4]தங்கசாலை: [/size]

வடசென்னையில் நீண்ட தெருவின் வட கோடியில் நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டப்பட்ட கட்டடம் காரணமாக இப்பெயர் உருவானது. ஏற்கனவே அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றினை அகற்றி விட்டு, தங்கநாணயத் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துவங்கின. கி.பி., 1807ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது; இயந்திரங்கள் 1841ல் தான் பொருத்தப்பட்டன. ஆனாலும், இங்கு நாணயங்கள் அச்சடிக்கப்படவே இல்லை. இருந்தபோதிலும், இம்முயற்சிகளே தங்கசாலை எனப் பெயர் பெறக் காரணமாக அமைந்து விட்டன.

[size=4]புரசைவாக்கம்: [/size]

இங்குள்ள கங்காதரேசுவரர் கோவில் கிடைக்கும் கல்வெட்டுகள் 13ம் நூற்றாண்டு, 16ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாயினும், இவ்வூர் பற்றிய தெளிவான குறிப்புகளை அவை தரவில்லை. சுந்தரர் பாடிய பாடலில் "புரிசை' எனக்குறிப்பிடுவது இவ்வூரைப் பற்றியது என்பது குறித்து மாற்றுக்கருத்துகள் உள்ளன. கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், புரசவாக்கம் எனப்பெயர் பெற்றுப் பின் புரசைவாக்கம் என மருவியிருக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது.

[size=4]அமிஞ்சிக்கரை:[/size]

அம்+இஞ்சி+கரை எனப்பிரித்தால் அழகிய கோட்டைக் கரை எனப் பொருள்படுகிறது. ஆனால், இங்கு கோட்டை இருந்ததற்கான சுவடுகள் எதுவும் இல்லை. அமைந்தகரை என்பதே மருவி அமிஞ்சிக்கரை ஆகி இருக்கலாம் என்ற கருத்து உண்டு.

ஏரிக்கரையில் உருவாகிய குடியிருப்பு என்ற நோக்கில் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பெயர்தான். "கூவம் ஆறு" இவ்வழியாக ஓடி வருகிறது. அதன் வடகிழக்குப்பகுதியில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. 'கூவம் ஆற்றுக்கும், பெரிய குளத்துக்கும் நடுவில் இயல்பாக அமைந்த கரை என்பதால் அமைந்தகரை என்று பெயர் பெற்றிருக்கிறது' என்று சென்னை மாவட்டக் கோயில் வரலாறு நூல் தெரிவிக்கிறது. நீர்நிலை, கரை தொடர்பாக இப்பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால், ஒருவகையில் பொருத்தமாகவே இருக்கிறது.

[size=4]திருமங்கலம்: [/size]

நான்கு வேதங்கள் தெரிந்த பிராமணர்கள் குடியிருக்கும் பகுதி, அக்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. சதுர்வேதி மங்கலத்தின் சுருக்கம் மங்கலம். பக்தி இலக்கிய காலகட்டத்தில் "திரு' எனும் அடைமொழி பரவலாக வழங்கப்பட்டது. எனவே, இடைக்காலத்தில் திருமங்கலம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

[size=4]முகப்பேர்: [/size]

முகப்பு ஏரி- முகப்பேரி எனப்பிரித்துப் பொருள் கொள்ளலாம். ஏரியின் முகப்புப் பகுதியில் உள்ள ஊர் என்பது பொருள். இதன் அருகே ஏரி இன்றும் காணப்படுகிறது. அம்பத்தூரைப் பற்றிய கல்வெட்டு ஒன்றில் "ஏரி கீழ் நாட்டு அம்பத்தூர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பெயர்க்காரணம் பொருத்தமானதாகவே இருக்கிறது. சாதாரண ஊரான இப்பகுதி அண்ணா நகர் விரிவாக்கத்தால், பெருவளர்ச்சி பெற்று வருகிறது.

[size=4]அருகம்பாக்கம்: [/size]

சென்னையில் சமணம் பரவியிருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மயிலாப்பூரில் சமணம் மதத்தொடர்பு இருந்ததை அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். புழல் சமணக்கோவில் பற்றிய ஒரு குறிப்பும் உண்டு. வில்லிவாக்கத்திற்கும் சமணத்திற்கும் தொடர்பு உண்டு. அடையாறில் ஒரு பள்ளிப்பட்டு காணப்படுகிறது. அருகந்துறை, அருகங்குளம் என்பவை, அருகன்துறை, அருகன்குளம் என்பவற்றின் திரிபுகளாக இருக்ககூடும். எனவே, அருகன்பாக்கம் என்பதே, அருகம்பாக்கமாக மருவியிருக்க வேண்டும்.

[size=4]அயனாவரம்:[/size]

சென்னையின் மேற்குப்பகுதியில் உள்ள இக்குடியிருப்பு பற்றி இடைக்காலக் கல்வெட்டு "அயன்புரம்' எனக்குறிப்பிடுகிறது. "ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டமான விக்கிரம சோழ வளநாட்டுத்துடர் முள்ளி நாட்டு அயன்புரத்து அயன்புரங்கிழவன் தெள்ளியானான செழியதரையனும் அரையன் நின்ற நம்பி என்பவரும்' என்ற கல்வெட்டுவரிகள், தெள்ளிய சிங்க நாயனார்க்கு நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிக்கின்றன.

கி.பி., 1309ம் ஆண்டைச் சார்ந்த இக்கல்வெட்டின் மூலம் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒன்றான புழற்கோட்டம் பற்றியும்; விக்கிரம சோழ வளநாடு எனவும் அழைக்கப்பட்டது பற்றியும் தெரியவருகிறது. இக்கோட்டத்தில் துடர் முள்ளிநாடு ஒரு பிரிவு, அந்நாட்டின் ஊர்களில் அயன்புரமும் ஒன்று எனத்தெரிய வருகிறது.

14ம் நூற்றாண்டுக்கு முன்னரே இக்குடியிருப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். கி.பி., 19ம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில், அயனவரம் என்கிற சொத்திரிய கிராமம்' எனச் சொல்லப்பட்டிருப்பதாக, நடனகாசிநாதன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அயம்புரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. அயம் எனில், நீர்நிலை, சுனை, குளம் என்ற பொருள்கள் உண்டு. நீர்நிலை அடிப்படையில் இப்பெயர் பெற்று; அயன்புரமாக மருவி, அயனாபுரமாகி இருக்கக்கூடும். அயனாபுரம், மக்கள் வழக்கில் அயனாவரமாகி இருக்கலாம் என்ற கருத்தே பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

[size=4]திருவான்மியூர்: [/size]

ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதரின் திருவான்மியூர் தலபுராணம், திருப்புகழ், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் குமரகுருதான சுவாமிகள், அருட்கவி சேதுராமன் பாடல்கள் இவ்வூரைப்பற்றிய செய்திகளைத் தருகின்றன. வான்மீகியுடன் தொடர்புடையது என்ற கர்ணபரம்பரைக் கதை ஒன்று <உலவுகிறது. திருவான்மியூர் தலபுராணத்தில் சொல்லப்படுபவை நம்பத்தகுந்ததாக இல்லை என்பதே பலரின் கருத்தும். சைவக்குரவர்களின் பாடல்களில் சொல்லப்பட்டுள்ள இறைச்சிறப்பு, கடல்வளம், வாணிபம், மக்கள் மாளிகையில் வசித்தது, மதில்சூழ்ந்த ஊர் போன்ற திருவான்மியூரின் சிறப்புகள் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.நெடுங்கோபுரம், சுற்றுப்பகுதி, உள்ளே கோவில் என தெளிவாக கோவிலின் வடிவமைப்புப் பற்றி பாடியுள்ளனர்.

திருவான்மியூரில் அம்மன் கருவறையின் புறச்சுவர்களில் சோழர்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆனால், சிவன் கருவறையைச் சுற்றி ஒரு கல்வெட்டு கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

"அஞ்சி நாண்மலர் தூவி அழுதீரேல் வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே', "நாண்மலர் தூவி வலஞ்செயில் வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே' என்ற நாவுக்கரசரின் பாடல் வரிகளில் திருவான்மியூர் சிவனின் பெருமைகள் சுட்டப்பட்டுள்ளன. தேவாரத்தில் சுட்டப்படுவதற்கு முன்னரே, இவ்வூர் பெருமையும், பழமையும் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. வான்மியூர் என்பதே இவ்வூர்ப்பெயராக இருந்திருக்க வேண்டும். "திரு' என்ற அடைமொழி பக்தி இயக்க காலத்தில் சேர்ந்திருக்க வேண்டும். மரங்கள் அடர்ந்த பகுதி என்ற பொருளும் கொள்ளலாம். சோலைகள் சூழ்ந்த, கடற்கரைத் தலம் என்ற குறிப்புகள் உள்ளன. வான்மிகம் என்றால் புற்று என்று ஒரு பொருள் உண்டு. புற்றுகள் நிறைந்த பகுதியாக இது அறியப்படுகிறது. அருகில் உள்ள ஒற்றியூர், கோடகன்பாக்கமாகிய கோடம்பாக்கம் போன்ற ஊர்ப்பெயர்கள் புற்றோடு தொடர்புடையன. அதேபோல், புற்றுடன் தொடர்புடையதாக வான்மியூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

[size=4]கோட்டூர்:[/size]

கி.பி., 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மயிலாப்பூர் கல்வெட்டுகளில், கோட்டூர் பற்றிய குறிப்பு உள்ளது. கோட்டூர் என்பது ஒரு நாட்டுப்பிரிவு என்பதைக் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துள் அடங்கிய நாட்டுப்பிரிவாக கோட்டூர் நாடு இருந்திருக்கிறது. கோட்டூர் நாட்டுள் அடங்கிய ஊராக திருவான்மியூர் இருந்துள்ளது.

"கோட்டூர் நாட்டு சண்டேசுவர நாயனார்க்கு' என்பன போன்ற கல்வெட்டு வரிகள் மூலம் கி.பி., 12ம் நூற்றாண்டுக்கு முந்தையது இக்குடியிருப்புப் பகுதி எனத்தெரியவருகிறது. கோடு என்றால் வளைவு என்று ஒரு பொருள் உண்டு. அடையாறு ஆறு, சைதாப்பேட்டையில் இருந்து, கோட்டூர் வழியாக அடையாறு சென்று, கடலில் கலக்கிறது. கோட்டூர் அருகே வளைந்து பின் செல்கிறது. ஆற்றங்கரையில் வளைவில் இருக்கும் ஊர் என்ற பொருளில் கோட்டூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

[size=3]நன்றி: தினமலர்.('சென்னை நாள்' மலர்)[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் அண்ணா நான் வடபழனியில் ஒரு 3 வாரம் என் விடுமுறைய இனிமையாக அனுபவிச்சனான்

வெளிநாடு என்ன வெளிநாடு சென்னை லைப் எவ்ளவு சுபெர்ப் தெரியுமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...நான் வடபழனியில் ஒரு 3 வாரம் என் விடுமுறைய 'இனிமை'யாக அனுபவிச்சனான்.

வெளிநாடு என்ன வெளிநாடு சென்னை லைப் எவ்ளவு சுபெர்ப் தெரியுமா?

வட பழனியா? அது கோடம்பாக்கத்துக்கு ரொம்ப ரொம்ப பக்கமாச்சே? அங்கே சுண்டல் இருந்தாரெனில்...?

ஏதாவது படம், கிடம்...? பிசிறுதே...! :lol:

smiley3869.gif

  • கருத்துக்கள உறவுகள்

வட பழனியா? அது கோடம்பாக்கத்துக்கு ரொம்ப ரொம்ப பக்கமாச்சே? அங்கே சுண்டல் இருந்தாரெனில்...?

ஏதாவது படம், கிடம்...? பிசிறுதே...! :lol:

smiley3869.gif

சுண்டலின் லீலைகள் என்று ஒரு காணொளி இணையத்தில் உலாவுதே.. பார்த்ததில்லையா??!! :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் லீலைகள் என்று ஒரு காணொளி இணையத்தில் உலாவுதே.. பார்த்ததில்லையா??!! :wub::lol:

:D

ஓ அதுக்கு இது பதிலடியா?

ம் ராஜவன்னியன் அண்ணா குமரன் காலனில தான் இருந்தன் நல்ல அழகான மலையாள மற்றும் தமிழ் பொண்ணுங்கல்லாம் அந்த areala நிறைய இருக்காங்க

:D

அது சரி ராஜவன்னியன் , நீங்கள் காதலிக்கிற பெண் பெயர் வெரோனிக்காவா ? (என்ன ஒரு வில்லத்தனம்?) :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ராஜவன்னியன் , நீங்கள் காதலிக்கிற பெண் பெயர் வெரோனிக்காவா ? (என்ன ஒரு வில்லத்தனம்?) :lol:

யாரது, "வெறும் ஆணி அக்கா..?" smiley3817.gif

யாரது, "வெறும் ஆணி அக்கா..?" smiley3817.gif

நீங்கள் இணைத்த சில படங்கள் எனது உலவியில் இப்படி தோன்றின.

post-7179-0-37472500-1345996132_thumb.jp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த சில படங்கள் எனது உலவியில் இப்படி தோன்றின.

post-7179-0-37472500-1345996132_thumb.jp

ஓ...சாரி...

நீங்கள் இப்பொழுது சொன்ன பிறகுதான் எனக்கு புரிகிறது...ஆனால் எனது மடி கணணியில் இன்றும் தெரிகிறது...Cache லிருந்து தோன்றக் கூடும்...வேறு தளத்திற்கு படத்தை மாற்றி பின்னர் இணைக்கிறேன்.

பிழையை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி, கிஸ்ஸான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் முற்றாக வாசிக்க முடிந்தது.சென்னையை நேரடியாக பார்த்த ஒரு பிரமையையை ஏற்படுத்தியது.வன்னியனின் வர்ணனை அருமை.தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த சில படங்கள் எனது உலவியில் இப்படி தோன்றின.

post-7179-0-37472500-1345996132_thumb.jp

மாற்றம் செய்துள்ளேன். இந்த "வெரோனிக்கா" இனி வரமாட்டாள் என நினைக்கிறேன் கிஸ்ஸான். :rolleyes:

இன்று தான் முற்றாக வாசிக்க முடிந்தது.சென்னையை நேரடியாக பார்த்த ஒரு பிரமையையை ஏற்படுத்தியது.வன்னியனின் வர்ணனை அருமை.தொடருங்கள்.

ஊக்கத்திற்கு நன்றி நுணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.