Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்றும் போராளி இன்றும் போராளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும் போராளி இன்றும் போராளி - சஞ்சயன்

1.jpg

அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன்.

ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று.

எனது விடுமுறையில் இலங்‌கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர்.

மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்ட உதவிகளை ஆராய்வதற்காகவும், நகரத்திற்கப்பால் எம்மவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலும் என்னை இங்கு அழைத்துவந்திருந்தது.

ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

  • விபச்சாரம் செய்யும் முன்னாள் பெண்போராளிகள்,
  • ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி,
  • தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவிகுழந்தைகளை காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி,
  • திருமணமாகி பத்தே மாதத்தில் கடல் மோதலொன்றில் காணாதுபோன கேர்ணல் தரத்திலான தனது கணவன் இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், வாழ்வாதாரம் இன்றி தம்பி தங்கையுடன் முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி்,
  • இரு கைகளையும் தோள்மூட்டு்ன் இழந்த தனது முன்னாள் போராளியான மகனை பராமரிக்கும் வயதான தந்தை,
  • இருகண்களையும் இழந்த முன்னாள் ‌போராளி,
  • குழந்தைப்போராளியாய் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இறுதிப் ‌ ‌போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த முன்னாள் போராளி

எனது கடந்த சில நாட்கள் இப்படியான சில மனிதர்களுடன் கடந்து போயிருக்கிறது. அவர்களின் கதைகளைக் கேட்டு கனத்துப்போயிருக்கிறது மனது.

தன்னெதிரே துள்ளித்திரிந்த குழந்தையை அணைதவாறு அழும் பெண் போராளியிடம் ஆறுதலாக ஒரு வார்த்தையும் பேச முடியாது மௌனமாய் கடந்து போன கணங்கள் மிகவும் கொடுமையானவை.

புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் அவர்களின் வாழ்வில் அமைதியில்லை மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லை. எப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறார்கள். எவ்வித கொடுப்பனவுகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. தொழில் வாய்ப்புக்கள் குறைவு. கூலி வேலைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. வயல் வேலைகள் அறுவடை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் குறைந்துள்ளது.

இவ்வாறு இருப்பவர்களிடம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துப்போகிறோம் என்று பணம் பிடுங்கும் மனிதர்களுக்கும் குறைவில்லை. அரசியல் பழிவாங்கல்கள், முன்பிருந்த இயக்கமோதல்கள், காட்டிக்கொடுப்புக்கள், பழிவாங்கல்கள் .... அப்பப்பா எப்படி இதையெல்லாம் கடந்து வாழ்கிறார்கள் என்று யோசிக்கத்தோன்றுகிறது.

நான் சந்தித்திருப்பது ஒரு சிலரையே. இப்படியான போராளிகள் வடக்கு கிழக்கு எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

2012 ம் ஆண்டிலும் மலசலகூடம், குடி நீர் வசதி இன்றி பல கிராமங்கள் இருக்கின்றன. வாகரைக்காடுகளில் உள்ள வேடுவர்களை சந்திக்க அழைத்துபோகிறேன் என்றிருக்கிறார் அவர்களுடன் தொடர்புடையவர் ஒருவர்.

கோயில் கொடுப்பனவாகிய 1500,- ரூபாயுடன் 20 குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு ஆசிரியை,

350 ரூபாய் வருமானத்திற்காக ஒரு நாள் முழுவதும் விறகு பொறுக்கி, பல மைல்கள் சைக்கிலில் பயணித்து விறகு விற்பனை செய்யும் 70 வயது கடந்த முதியவர்,

பாவனையில் இல்லாத பழைய வீதிகளில் இருக்கும் கருங்கட்களை கல்லாலும், கைகளாலும் தொண்டி எடுத்து தனது மூன்றாவது மகளுக்கு திருமணம் நடாத்த முற்படும் ஒருவர்,

இவர்களை சந்தித்த போது வெட்கித் தலைகுனிந்திருந்தேன் புலம்பெயர்ந்த தமிழனாய்.

நாம் என்ன செய்திருக்கிறோம் இவர்களுக்கு?

மனம் பொறுக்காது சில நண்பர்களிடம் அவசர உதவி தேவையானவர்கள‌ை அறிமுகப்படுத்தி அவர்களை நேரடியாகவே உதவுங்கள் என்று கேட்டுக்கொண்ட போது உடனேயே உதவிக்கரங்களை நீட்டிய நெஞ்சங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை என்னிடம்.

மக்கா ... ஊருக்கு போனன் அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிக்கைவிடும் அறிவுஜீவிகளே!!

முக்கிய பெரு வீதிகளுக்கும், மாடிவீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்களையும் சென்று அவர்களுடன் பேசி, உறவாடிப்பாருங்கள், அவர்களின் உயிரோசை உங்களுக்குக் கேட்கலாம்.

.......

நீங்கள் இப்பதிவினை முகப்புத்தகத்தில் share செய்து அதன் மூலம் ஒருவருக்கேனும் உதவி கிடைக்கும் எனின் பெரு மகிழ்ச்சியடைவேன்.

நீங்கள் யாரேனும் நேரடியாக உதவிதேவைப்படுபவர்களுக்கு உதவிரும்பினால் கீழ்க்காணும் மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்க.

adsayaa@gmail.com

http://visaran.blogspot.ca/2012/08/blog-post_19.html

யாழ் களத்தில் சஞ்சயன் முன்னர் சில பதிவுகளை இட்டிருந்தார்

போர் நடைபெற்ற காலங்களில் அதிலும் குறிப்பாக வெற்றிச் செய்திகள் வந்த கால கட்டங்களில் தங்கள் கழுத்தில் இருந்த தாலிக் கொடியைக் மகூடக் கழற்றிக் கொடுத்து ஊக்குவித்தவர்கள் புலம்பெயர் தமிழர் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். வெற்றிச் செய்திக்கு மட்டும் வாரி வழங்கிய வள்ளல்கள் இப்போது தேசம் பற்றிக் கதைப்பதற்குக் கூட விரும்புவதில்லை. வேண்டுமென்றால் ஊரிலுள்ள கோயிலுக்கு கோபுரம் கட்டுவதற்கு பணத்தை வழங்குவார்கள். ஆனால் எமக்காக தியாகங்களைச் செய்து இன்றைக்கு ஏதிலிகளாய் வாழும் எம் சகோதரர்களுக்கு உதவ அனேகர் முன்வர மாட்டார்கள்.

இதை விடக் கொடுமை என்னவென்றால் தாயகத்துக்கென மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை சுருட்டி வைத்துக் கொண்டு அண்ணை வந்து கேட்டால் மட்டுமே குடுப்பன் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற அயோக்கியக் கும்பலின் செயல். http://www.yarl.com/forum3/index.php?showtopic=107062#entry792387

Edited by Manivasahan

மக்கா ... ஊருக்கு போனன் அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிக்கைவிடும் அறிவுஜீவிகளே!!

முக்கிய பெரு வீதிகளுக்கும், மாடிவீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்களையும் சென்று அவர்களுடன் பேசி, உறவாடிப்பாருங்கள், அவர்களின் உயிரோசை உங்களுக்குக் கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் உள்ளவர்கள் கூட இந்த மக்களுக்கு உதவ காசு அனுப்பும் படி கேட்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரன் ஒரு திருவிழா எடுப்பாக செய்தவராம்.அதை விட சிறப்பாக தானும் செய்ய வேண்டுமாம்,காசு அனுப்பட்டாம்.தமிழேன்டா!!!!!

சிங்களவன் பீத்தமிழன் என்று சொல்வதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்.............................................இப்படி பலதரப்பட்ட மக்களுடன்தான் வாழ்கின்றோம் நெஞ்சத்தை பிழீந்து போடும் எண்ணற்ற, சுமையான, நிஜமான நிகழ்வுகளுடனேயே எம்மவர்கள் வாழ்கின்றார்கள். எல்லோரும் ஒன்று சோ்ந்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்.............................................இப்படி பலதரப்பட்ட மக்களுடன்தான் வாழ்கின்றோம் நெஞ்சத்தை பிழீந்து போடும் எண்ணற்ற, சுமையான, நிஜமான நிகழ்வுகளுடனேயே எம்மவர்கள் வாழ்கின்றார்கள். எல்லோரும் ஒன்று சோ்ந்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை............................

உண்மைதான். ஏன் பலர் ஒன்று சேர்ந்து உதவாமல் கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் நோக்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சயனின் தொடரும் பதிவு...

ஒளி மறுக்கப்பட்ட விடிவெள்ளிகள்

sky.jpg

நேற்றை அனுபவங்களை உள்வாங்கிக் கொள்வதே பெருங்காரியமாய் இருந்தது, நேற்றிரவு.

இன்று காலை என்னை அழைத்துச் செல்வதற்காய் வந்திருந்தவரின் மோட்டார் சைக்கிலின் பின்னால் அமர்ந்திருந்தேன்.

மோட்டார்சைக்கில் நகர்ப்புறத்தைத் கடந்து கிறவல் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. வெய்யிலும் வெம்மையான காற்றும் முகத்திலடிக்க சுற்றாடலை அவதானித்துக்கொண்டிருந்தேன். கோடைகாலமாகையால் வறண்டுபோன வயல்களும், எலும்பும்தோலுமான கால்நடைகளும், வெயிலை பொருட்படுத்தாது தத்தம் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மனிதர்களும், வீதியோரத்து கடைகளும் என்று காட்சிகள் கடந்துகொண்டிருந்தன. மனம் எதிலும் லயிக்கவில்லை. என்னை அழைத்துச் சென்றவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

ஓரிடத்தில் மோட்டார்சைக்கிலை நிறுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டோம். கொண்டு சென்ற குளிர் நீர் அமிர்தமாய் இருந்தது. இன்று நாம் மூன்று முன்னாள் போராளிகளை சந்திப்பதாக இருந்தது. முதலாமவரின் வீடு அருகில் இருப்பதானவும் என்னை இவ்விடத்தில் நிற்கும்படியும் கூறி என்னை அழைத்துவந்தவர் அந்த பெண்போராளியின் வீட்டுக்குச் சென்றார். என்னை அழைத்துச் செல்லாததன் காரணம் அந்து போராளியும் அவர்களின் குடும்பத்தாரும் முன்பின் அறியாத என்னைக் கண்டால் இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் என்று கருதலாம், எதையும் பேசப் பயப்படலாம் என்று அவர் அறிந்திருந்தார்.

நிமிடங்கள் மிகவும் மெதுவாகவே கடந்துபோய்க்கொண்டிருந்தது. கடந்து ‌ சென்ற மனிதர்கள் சந்தேகக்கண்ணுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராணுவத்தினர் தண்ணீர் வண்டி ஒன்றினை ஓட்டிப்போயினர். ஒரு இ.போ.ச பஸ் புழுதியை இறைத்தபடியே கடந்து போனது. வீதியெங்கும் கிறவல் தூசு செம்மஞ்சலாக பறந்துகொண்டிருந்தது.

தூரத்தில் இருந்து எனது நண்பர் கையைக் காட்டி அழைத்தார். அவரை நோக்கி நடக்கலானேன். வேலிகளுக்கப்பால் இருந்து சந்தேகமான பார்வைகள் என்னை துளைத்துக் கொண்டிருந்தன.

ஒரு கழிமண் குடிசையின் முன் நின்றிருந்தேன். முத்தத்தில் கல் அடுப்பில் சோறு பொங்கிக்கொண்டிருக்க, வளவுக்குள் ஆட்டுக் குட்டிகள் மூன்றும் கோழிகள் சிலவும் ஓடிக்கொண்டிருந்தன.

ஒரு பெண் எமக்கு பிளாஸ்டிக் கதிரைகளை எடுத்துத் தந்தார். அவரும் அவற்றில் ஒன்றில் அமர்ந்து கொண்டார். அவரின் இரு முழங்கைகளும் பல அறுவைச்சிகிச்சைகளை சந்தித்திருக்கின்றன என்பதை தழும்புகளும், இடம்மாறி இருந்த முழங்கை மூட்டுகளும் காட்டின.

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவரது கண்களில் சந்தேகம் இருந்தது. சந்தேகம் வேண்டாம் நான் உங்கள் வாழ்பனுபங்களை அறிந்துகொள்ளவே தொடர்புகொண்டேன் என்றேன். அவர் நம்ப மறுத்தார். இறுதிவரை நம்பமறுத்தார். இறுதி நாட்களில் நடந்த சிலதை மட்டும் மிகவும் அவதானமாக வார்த்தைகளை தேர்தெடுத்து தேர்தெடுத்துக் கூறினார். தெரிந்தோ தெரியாமலோ ஒரு நம்ப முடியாத தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

அவர் 2009ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதியளவில் பலருடன் ஒருவராகக் காயப்பட்டிருந்த போது அவரையும் ஏனைய காயப்பட்டிருந்த 12 புலிகளையும் காப்பாற்றிய புலிகளின் புலனாய்வுப்பிரிவினர் இவர்களை இராணுவத்தினரிடம் அழைத்துப்போய் ஒப்படைத்துவிட்டு மீண்டும் யுத்தப்பிரதேசத்துக்குள் சென்றார்கள் என்றார். அதிர்ந்து போன நானும் என்னுடன் வந்திருந்து நபரும் இச் செய்தியை மீண்டும் மீண்டும் கேட்டு உறுதி செய்து கொண்டோம். அவர் பேசுவதற்கு விரும்பவில்லை ன்பதை அவரின் முகத்தில் இருந்த பயம் காட்டிக்கொண்டிருந்தது.

அவரின் பயத்தை கண்ட நான் பறவாயில்லை, நீங்கள் விரும்பும் போது தொடர்பு கொள்ளுங்கள் நாம் அப்போது பேசுவோம் என்றேன். தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தார். நாம் புறப்பட்டோம்.

வெய்யில் தனது உக்கிரத்தை ஊருக்குள்ளும் காற்றிலும் காட்டிக்கொண்டிருந்தது. கொண்டுவந்திருந்த நீர் முடியும்தறுவாயில் இருந்தது. இன்று மேலும் இருவரைச் சந்திக்கும் திட்டம் இருந்ததால் நீரை மிச்சப்படுத்திக்கொண்டேன்.

மோட்டார் சைக்கில் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. தார்ப்பாதைகள், சீமெந்துப்பாதைகள், கிறவற்பாதைகள் என்றில்லாமல் ஒற்றையடிப்பாதைகளினூடாகவும், வெட்டை வெளிகளினூடாகவும் ஒரு மணிநேரம் ஓடிய பின் ஒரு மரத்தடியில் சற்று இளைப்பாறிய பின் மீண்டும் ஒரு அரை மணிநேரப் பயணம். ஒரு வீட்டு முற்றத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். அருகிலேயே அவரின் உறவினர்கள், தாயார் நின்றிருந்தார்கள்.

தெளிந்த முகம். தெளிவான வார்த்தைகள், வசீகரமான முகம், மீசை என்றிருந்தார்.பொது விடயங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். தாயார் இடையிடையே பேச்சில் கலந்து கொண்டார். பத்துவருடங்களுக்கு முன் இயக்கத்துக்குச் சென்றவர் இருமாதங்களுக்கு முன் தான் வீடு திரும்பியிருக்கிறார். தாயார் அவர் வீரச்சாவடைந்ததாகவே நினைத்திருந்திருக்கிறார். இத்தனை வருடங்களும்.

இறுதி யுத்தத்தின் பின் புனர்வாழ்வு முடிந்த பின் ஒரு பாதிரியார் இவரை பாதுகாத்திருக்கிறார். அவரிடம் இவர் தனது தாயாரின் விலாசத்தை கொடுக்க மறுத்திருக்கிறார். காரணம் தன்னால் அவர்களுக்கு இனி எவ்வித உதவியும் இல்லை, தவிர தன்னை பாதுகாப்பதில் பலத்தை சிரமத்தை குடும்பத்தவர்கள் எதிர்கார்ப்பார்கள் என்று நினைத்ததனால் குடும்பத்தவருடன் தொடர்பு கொள்ளவில்லை அவர். பாதிரியாரின் பலத்த அழுத்தத்தின் பின் பாதிரியார் விலாசத்தைப் பெற்று குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதிய பின் குடும்பத்தினர் வன்னி சென்று இவரை அழைத்துவந்திருக்கின்றனர். இதைக் கூறியபோது அத் தாயின் அழுகை கலந்து தளுதளுத்த குரல்ஒலி என் உயிரை ஊடுருவிப்பாய்ந்தது.

சற்று நேரத்தின் பின் அத்தாய் ”தம்பி, உன்ட கண்ணை ஒரு தரம் அண்ணைக்கு காட்டு” என்றார். அவர்கள் பயந்திடுவார்கள் என்றார் அவர். நான் நீங்கள் விரும்பினால் அகற்றுங்கள் என்றேன். அப்போது அவர் தன் கண்ணை மூடியிருந்த துணியினை அகற்றினார்.

நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள். அவர் இரண்டு செக்கன்களின் பின் கண்ணை மீண்டும் கறுப்புத் துணியால் மூடிக்கொண்டார். என்னால் ஒரு செக்கன் கூட அவரின் கண்கள் இருந்த இடத்தைப் பார்க்க முடியவில்லை. இரண்டு கண்கள் இருந்த இடங்களிலும் 3 - 4 சென்டிமீற்றர் அளவுக்கு இரு குழிகள் இருந்தன. கண்கள் இல்லாத அவரது உருவம் பயங்கரமாக இருந்தது:. படங்களில் இப்படியான காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஆனால் என் முன்னே அதுவும் இரண்டு அடிகளுக்குள் அப்படியான காட்சியைக் கண்டதும் அதிர்ந்துபோனேன். சுதாரித்தக்கொள்ள சில நிமிடங்களாயின. ” பார்த்தீங்களா அண்ணை .. அது தான் சொன்னேன் என்றார் அவர்” 2008ம் ஆண்டு ஒரு செல் அவரின் கண்களை பறித்துப்போயிருக்கிறது.

சற்று நேரம் அங்கு பேச்சு இருக்கவில்லை. மெதுவாய் அவரின் கையைப் பற்றிக்கொண்டேன். அவரும் ஆதரவாய் னது கையைப் பற்றிக் கொண்டார்.. பார்வையின் மொழியோ, பேசும் மொழியோ எதுவும் அங்கிருக்காவிடினும் எம் கைகளின் ஸபரிசங்கள் பேசிக்கொண்டன. எம் வாழ்வுக்காய் போரா‌டிய ஒரு இளைஞன், வாழ்வின் வசந்த காலத்தில் இருக்கவேண்டிய வயது அவருக்கு, ஆனால் வாழ்வையே தொலைத்துவிட்டுவந்து நிற்கிறார். தொழில் இல்லை, வருமானமில்லை, தந்தையில்லை, தாயாரின் மற்றும் தங்கையின் குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள்: அவரின் எர்காலத்தை சற்று சிந்தித்துப்பார்த்தேன். அவருக்கு ஒரு 25 வயதிருக்கலாம். மிகுதிக் காலத்தை எப்படி கழிக்கப் போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவரின் வாழ்க்கையை பதிவு செய்யும் நிலையில் நான் இருக்கவில்லை. என்னால் அங்கு நிற்கமுடியாதிருந்தது. எனவே மீண்டுமொருநாள் அவரிடம் வருவதாகக் கூறி புறப்பட்டேன்.

இன்னும் ஒருவரை சந்திக்கவேண்டியிருந்தது. மனமோ கலங்கிப் போயிருந்தது. அந்தச் சந்திப்பையும் பின்போட்டுக்கொண்டேன். மோட்டார் சைக்கில் வயல், வறண்டுபோயிருந்த வாய்க்கால்கள், கிறவற்பாதைகளினூடாக கிழக்குப் பக்கம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. கிழக்குப் பக்கத்து வானம் இருட்டியிருந்தது.

அனுபவங்கள் தொடரும்.....

................................................................................................................................

நீங்கள் யாரேனும் நேரடியாக உதவிதேவைப்படுபவர்களுக்கு உதவிரும்பினால் கீழ்க்காணும் மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்க.

adsayaa@gmail.com

http://visaran.blogs...-post_1529.html

உண்மைதான். ஏன் பலர் ஒன்று சேர்ந்து உதவாமல் கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் நோக்கவேண்டும்.

இது ஒன்றும் பெரிய ரொக்கட் விஞ்ஞானம் அல்ல.

கூட்டி, அள்ளி, பெருக்கி பொறுத்துக் கொண்டிருந்தவர்கள் பயன் பெற்றார்கள். தலைவர் வந்து கேட்டால் தருவார்கள். அது மட்டும் அமைதியாய் இருக்க வேண்டும்.

மற்றயவர்கள் வெல்லுபவனுக்குப் பின்னால் அல்லது நல்ல வாழ்வை நோக்கி ஓடிப் போகும் தமிழர்களின் மனோ நிலை. முன்பு பிரபாகரன், இப்போ மகிந்தா. நாளை மரைக்காரால் நல்ல வாழ்வு வந்தாலும் அதனை நோக்கி ஓடுவோம்.

'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற மாதிரி சில அழிவுகள் இருந்தாலும் இந்த போராட்டம் நமக்கு நல்வாழ்வு தந்திருக்கிறது என்பதை நினைத்து பெருமைப் படவேண்டும்.

வாழ்க தமிழ். வளர்க புலம்பெயர்ந்த சுத்துமாத்துத் தமிழன்.

[size=4]ஏன் இன்று புலம்பெயர் தமிழர்கள் உதவாமல் உள்ளனர்?[/size]

[size=1]

[size=4]- உண்மையானவர்கள் உதவிக்கொண்டே இருப்பார்கள். வழிகளை கண்டுபிடிப்பார்கள். அமைதியாக இருப்பார்கள். உதாரணத்திற்கு : [/size][size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=102675[/size][/size][size=1]

[size=4]- உதவி என்பது அடிப்படை உதவிகளை மட்டுமே சிங்களத்தால் செய்ய விடப்பட்டுள்ளது, உணவு, உடை மற்றும் உறையுள். அதற்கும் கெடுபிடிகள், விசாரணைகள், அரசியல். [/size][/size][size=1]

[size=4]- பலரும் விரும்புவது ஒரு அரசியல் தீர்வை. அப்பொழுதுதான் மாதம் மாதம் உதவி என்ற நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் தீர்வு கிடைப்பதற்க்குள் எமது பல தலைமுறைகளை நாம் இழந்து விட்டுவிடுவோம்....அகோதா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஏன் இன்று புலம்பெயர் தமிழர்கள் உதவாமல் உள்ளனர்?[/size]

[size=1][size=4]- உண்மையானவர்கள் உதவிக்கொண்டே இருப்பார்கள். வழிகளை கண்டுபிடிப்பார்கள். அமைதியாக இருப்பார்கள். உதாரணத்திற்கு : [/size][size=5]http://www.yarl.com/...howtopic=102675[/size][/size]

[size=1][size=4]- உதவி என்பது அடிப்படை உதவிகளை மட்டுமே சிங்களத்தால் செய்ய விடப்பட்டுள்ளது, உணவு, உடை மற்றும் உறையுள். அதற்கும் கெடுபிடிகள், விசாரணைகள், அரசியல். [/size][/size]

[size=1][size=4]- பலரும் விரும்புவது ஒரு அரசியல் தீர்வை. அப்பொழுதுதான் மாதம் மாதம் உதவி என்ற நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். [/size][/size]

இந்த மனநிலையில் இருப்பதால்தான் தமது இளைமைப் பருவத்தைத் தொலைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பலரை அடிப்படை வசதிகளற்று கையேந்தும் நிலையில் கண்டாலும் காணாமல் இருக்கின்றோம்..

உன்னதமான அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வரும்போது எல்லாத் துன்பங்களுக்கும் விடைகிடைக்கும். எனவே மக்கள் அவலங்களைப் பொறுத்துக்கொள்ளத்தானே வேண்டும் என்று சொன்னது மே 2009க்கு முன்னர் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது??

இந்த மனநிலையில் இருப்பதால்தான் தமது இளைமைப் பருவத்தைத் தொலைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பலரை அடிப்படை வசதிகளற்று கையேந்தும் நிலையில் கண்டாலும் காணாமல் இருக்கின்றோம்..

உன்னதமான அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வரும்போது எல்லாத் துன்பங்களுக்கும் விடைகிடைக்கும். எனவே மக்கள் அவலங்களைப் பொறுத்துக்கொள்ளத்தானே வேண்டும் என்று சொன்னது மே 2009க்கு முன்னர் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது??

[size=4]நம்பிக்கையை இழக்காமல் முடிந்தளவிற்கு உதவிகளை செய்து மக்களை நிலத்தை தக்கவைத்தல்.[/size]

2009 ஆண்டிற்கு பின் பலர் கோமாவில் போய்விட்டார்கள் ,சிலர் கோமாவால் எழும்பிவாறார்கள்.இவர் இப்ப தான் எழும்பியிருக்கின்றார் போல .

நாட்டில இவ்வளவு நாட்களும் என்ன நடந்தது என்று கூட தெரியாமல் இருந்திருக்கின்றார் போல கிடக்கு ,சில வேளை மூன்று வேலையில் காலம் போச்சோ தெரியவில்லை .

சரி ,இப்பவாவது ஆள் முழிச்சாரே என்று சந்தோசப்படுவம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.