Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவி ஏன் கிடைக்கவில்லை என்றால்...

Featured Replies

[size=4]கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்

கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் உறுப்பினராக தெரிவான இவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்

கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த அவர் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நஜீப் ஏ மஜீத் நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றார்

இதனை விட விருப்பு வாக்குகளில் மிகக் கூடுதலான வாக்குககளை முதலமைச்சர் பதவிக்குரியவர் பெற்றிருக்க வேண்டும் .அல்லது தமது கட்சி ஆகக் குறைந்தது 3 ஆசனங்களாவது பெற்றிருக்க வேண்டும் .

அதில் ஒன்று கூட சாத்தியப்படாததன் காரணமாகவே தங்களால் முதலமைச்சர் பதவியை பெற முடியாது போனதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்

ஏற்கனவே முதலமைச்சர் பதவி வகித்து பல பணிகளை முன்னெடுத்த தான், பின்னர் அமைச்சர்கள் வாரியத்தில் இருப்பது என்பது நடை முறைக்கு சாத்தியமற்றது. மேலும் அமைச்சர்கள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திலும் சில சங்கடங்கள் இருந்தன.இதன் காரணமாகவே தான் அமைச்சர பதவியைப் பெற விரும்பவில்லை என சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்

அமைச்சர்கள் வாரியத்தில இம் முறை தான் இடம் பெறாத காரணத்தினால் தமிழர்கள் எவரும் இடம் பெறக் கூடிய வாயப்புகள் கைநழுவிப்போனது என்பதை ஏற்றுக் கொண்ட அவர் தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராக இருக்க வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும் கூறுகின்றார்

மாகாண சபை உறுப்பினர் பதவியுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மூலம், தன்னால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.[/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/09/120919_pillaiyansrilankaeast.shtml

பிள்ளையான் கூறியது "அமைச்சர்கள் வாரியத்தில இம் முறை தான் இடம் பெறாத காரணத்தினால் தமிழர்கள் எவரும் இடம் பெறக் கூடிய வாயப்புகள் கைநழுவிப்போனது"- B.B.C.

இந்த தேர்தலில் பின் இனி கிழக்கு மாகாணம் தமிழ் மாகாணமா இல்லையா என்பது தீர்மானிக்க படவேண்டி்து ஒன்றாகிறது. இலங்கையில் எப்போதாவது தமிழர்களுக்கென்று ஒரு தீர்வு கிழிக்கப்படாத ஒரு ஒப்பந்தமாக இருந்ததென்றால் அது இந்தியாவால் இலங்கையில் திணிக்கப்பட்ட மாகாணசபை. இது தமிழர்களாலோ அல்லது சிங்களவர்களோ ஏற்கப்படவில்லை. ஆனால் இது சிங்கள அரசுகளுக்கு ஏன் தமிழ் மாகாணங்களில் தமிழர்களை ஒதுக்க வேண்டும் என்ற அவசரத்தை உணர்த்தியது. அதன் விளைவுதான் இன்றைய சட்டத்திற்கு பிறம்பாக இலங்கை ஜனாதிபதியால் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட பொது தேர்தல்.

இதில்:

1.தேர்தலுக்கு தேவை வராத பிழையான காலத்தில் நடத்தப்பட்ட தேர்தல்,

2.தேர்தலில் ஈடுபட்டகட்சியான மு.கா வை சட்டவிரோதமாக கையாண்டமை,

3.தேர்தலில் வன்முறைகள், மிரட்ல்கள்,

4.தேர்தல் முடிவை மாற்றியமைத்தமை,

5.தேர்தலின் பின் கட்சிகள் சுயமாக தமது பிரதி நிதித்துவங்களை பாவித்து ஜனநாயக அரசொன்றை அமைக்கவிடாமல் மானில அரசுமீது பலப்பிரயோகம் செய்தமை.

போன்ற குற்றச்சாட்டுகள் இலங்கை ஜனாதிபதி மீதும் இலங்கை அரசு மீதும் சுமத்தப்பட்டிருக்கிறது.

அரசின் இதே குற்றச்செயல்கள் அரசால் பிரிக்கப்பட்ட வடக்கிலும் நடக்க இருப்பதாக பொறுப்பான பக்கங்களிடமிருந்து எதிர்வு கூறல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தமிழர் ஒருவரும் தமிழருக்கான கிழக்குமாகாணத்தை ஆளப்போகும் மந்திரி சபையில் இடம் பெறமுடியாமல் போனதின் அரசியல் காரணம் யாது ?

1.தொடர்ந்து சதி செய்யும் சிங்களத்தலைமைகளா?

2.கூடிக் களுத்தறுத்த கண்டியின் கக்கீம் கூட்டமா?

3.காட்டிக்கொடுத்த சிவனேசதுரை போன்ற கோடரிக்காம்புகளா?

4.கோட்டை விட்ட தமிழ் அரசுக்கட்சி- கூட்டமைப்பா?

பி.பி.சி. தனது பேட்டியில் கிழக்கு மாகாண சபையில் எந்த ஒரு தமிழரும் பதவி வகுக்க இலங்கை அரசு சந்தர்ப்பம் கொடுக்க போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்னர் தமிழருக்காக வந்த மாகாணசபை தீர்வை, இதுவரையில் அமூல் படுத்தாமல் இருந்துவிட்டு, இன்று சூனியமாக்கியிருக்கிறார்கள். இந்த தீர்வில் தமிழர்கள் போயிருக்க வேண்டும் என்று கூறிய அக்காசி போன்ற தலைவர்கள் இன்று தன்னும் அந்த தீர்வின் யதார்த்தை உணராமல் புலிகளை குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து மேற்குநாடுகளை மாற்ற வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.

கருத்து எழுதும் போது தயவு செய்து உங்கள் சிந்தனைகளை தெளிவான விவாதமாக எழுதுங்கள். அப்போது யாழ் நிர்வாகமும் இந்த திரியை நிரந்தரமாக்கி "pin" பண்ணட்டும். இந்த திரி ஒருநாள் மேற்குநாடுகள், இந்தியாவின் சுயநலத்திற்காக ஆக்கப்பட்ட இந்த மாகாணசபை நீக்கி எமக்கு முழுமையான தீர்வொன்றை பெற்று நாம் எமது இனத்தை காப்பாற்றிகொள்ள தமது ஆரதவை எமக்கு வழங்க வேண்டிய அடிப்படைகளை எடுத்து சொல்லவதாகட்டும்.

[size=5]முதல்வர் பதவி கிடைக்காததேன்?[/size]

- சிவநேசத்துரை சந்திரகாந்தன்கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்

கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் உறுப்பினராக தெரிவான இவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்

கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த அவர் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நஜீப் ஏ மஜீத் நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றார்

இதனை விட விருப்பு வாக்குகளில் மிகக் கூடுதலான வாக்குககளை முதலமைச்சர் பதவிக்குரியவர் பெற்றிருக்க வேண்டும் .அல்லது தமது கட்சி ஆகக் குறைந்தது 3 ஆசனங்களாவது பெற்றிருக்க வேண்டும் .

அதில் ஒன்று கூட சாத்தியப்படாததன் காரணமாகவே தங்களால் முதலமைச்சர் பதவியை பெற முடியாது போனதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்

ஏற்கனவே முதலமைச்சர் பதவி வகித்து பல பணிகளை முன்னெடுத்த தான், பின்னர் அமைச்சர்கள் வாரியத்தில் இருப்பது என்பது நடை முறைக்கு சாத்தியமற்றது. மேலும் அமைச்சர்கள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திலும் சில சங்கடங்கள் இருந்தன.இதன் காரணமாகவே தான் அமைச்சர பதவியைப் பெற விரும்பவில்லை என சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்

அமைச்சர்கள் வாரியத்தில இம் முறை தான் இடம் பெறாத காரணத்தினால் தமிழர்கள் எவரும் இடம் பெறக் கூடிய வாயப்புகள் கைநழுவிப்போனது என்பதை ஏற்றுக் கொண்ட அவர் தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராக இருக்க வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும் கூறுகின்றார்

மாகாண சபை உறுப்பினர் பதவியுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மூலம், தன்னால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.

http://www.bbc.co.uk...lankaeast.shtml

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4][size=5]"கருணா அம்மானுக்கும் பிள்ளையானுக்கும் சமர்ப்பணம்"[/size]

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்கள் வெற்றிலைச்சின்னத்துக்கு அளித்த 30ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் காரணமாக ஏற்கனவே 3 முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் .தற்சமயம் இந்தவாக்கினை வைத்து அமிர் அலி என்பவருக்கு பிரதியமைச்சர் பதவியினையும் முஸ்லிம் மக்கள் பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அமிர்அலியின் இடத்திற்கு அலிசாகிர் மெளலானா நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]தமிழர்களின் வாக்குகளினால் நான்கு முஸ்லிம் பிரதிநிதிகள் பெறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியவர்கள் கருணா அம்மானும் பிள்ளையானும் என மட்டக்களப்பு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இது குறித்து படுவான்கரைப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் சுபீட்சம் இணையத்துக்கு தகவல் தருகையில் தான்தான் முதலமைச்சர் எனக்கூறியே முன்னாள் முதலமைச்சர் எங்களிடம் வாக்குக்கேட்டார் அதை நம்பியே நாம் வெற்றிலைச்சின்னத்துக்கு புள்ளடியிட்டோம். தற்சமயம் முதலமைச்சர் பதவியும் இல்லை, மாகாண அமைச்சுப்பதவியும் இல்லை தமிழர் [/size][size=3][size=4]பிரதிநிதித்துவமும் இல்லை என்றார்.[/size][/size]

417296_282943728476213_1361012163_n.jpg

[size=1]முகநூல் ஊடாக [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் கூற்றுப்படி பிள்ளையான் படிக்கவில்லையாம். இவரை மகிந்த தனது ஆலோசகராக நியமித்து என்ன ஆலோசனையை பெறப்போகிறார்.?ஏற்கனவே ஆலோசனையாளராக இருக்கும் பசில் அப்பதவியை விட்டுக்கொடுக்கிறாரா??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக இந்தியாவால் திணிக்கப்பட்ட மாகாண சபையில் ஒரு தமிழரும் இல்லை.இந்த் தீர்வை ஏற்றுக் கொள்ளும்படிதான் இந்தியா உட்பட உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.இந்த மாகாண சபையின் நிலையை உலகநாடுகளின் கவனத்திற்கு கொண்ட செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]முதலமைச்சர் பதவி பறிபோனாலும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து கிழக்கு மக்களுக்கு சேவை புரிவேன்: பிள்ளையான் [/size]

[size=4]கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் உறுப்பினராக தெரிவான இவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் செவ்வாய்க்கிழமை (18) முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.[/size]

[size=4]கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நஜீப் ஏ மஜீத் நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றார்[/size]

[size=4]இதனை விட விருப்பு வாக்குகளில் மிகக் கூடுதலான வாக்குககளை முதலமைச்சர் பதவிக்குரியவர் பெற்றிருக்க வேண்டும். அல்லது தமது கட்சி ஆகக் குறைந்தது 3 ஆசனங்களாவது பெற்றிருக்க வேண்டும் . அதில் ஒன்று கூட சாத்தியப்படாததன் காரணமாகவே தங்களால் முதலமைச்சர் பதவியை பெற முடியாது போனதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்[/size]

[size=4]ஏற்கனவே முதலமைச்சர் பதவி வகித்து பல பணிகளை முன்னெடுத்த தான், பின்னர் அமைச்சர்கள் வாரியத்தில் இருப்பது என்பது நடை முறைக்கு சாத்தியமற்றது. மேலும் அமைச்சர்கள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திலும் சில சங்கடங்கள் இருந்தன.இதன் காரணமாகவே தான் அமைச்சர பதவியைப் பெற விரும்பவில்லை என சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்[/size]

[size=4]அமைச்சர்கள் வாரியத்தில இம் முறை தான் இடம் பெறாத காரணத்தினால் தமிழர்கள் எவரும் இடம் பெறக் கூடிய வாயப்புகள் கைநழுவிப்போனது என்பதை ஏற்றுக் கொண்ட அவர் தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராக இருக்க வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும் கூறுகின்றார்.[/size]

[size=4]மாகாண சபை உறுப்பினர் பதவியுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மூலம், தன்னால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.[/size]

(முன்னாள் முதலமைச்சர்) பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் ஜனாதிபதிக்கு பயங்கரவாத தடுப்பு ஆலோசகராக நியமிக்கப்படலாம்.

பிள்ளையான் இப்போ தான் அரசியல் படிக்கிறார் தேற கொஞ்ச நாளாகும்.

இருந்தாலும் பிள்ளையான் கருணாவை விட அரசியல் தெரிஞ்சவர். :lol::icon_idea:

இந்த தேர்தல் மூலம்

பாடம் படித்தவர்கள்

  • பிள்ளையான்
  • கருணா
  • சம்பந்தர் - தமிழ் தேசிய கூடமைப்பு
  • கிழக்குமாகாண தமிழ் பேசும் மக்கள் (தமிழ் - முஸ்லிம்)
  • புலம்பெயர் அரசியல் ஆலோசகர்கள்
  • வடக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள்

பாடம் படிப்பித்தவர்கள்

  • பேராசிரியர் மகிந்த
  • கௌரவ பேராசிரியர் ஹக்கீம்

வகுப்புக்கு வராதவர்கள்

  • டக்லஸ்
  • ஆனந்தசங்கரி
  • தமிழ் தேசிய மக்கள் முன்னணி

வகுப்புக்கு அனுசரணை, ஆலோசனை, கண்காணிப்பு

  • இந்திய வெளியக புலனாய்வு அமைப்பு (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை கிளை)
  • வெளிநாட்டு புலனாய்வு மற்றும் அரசியல் அமைப்புகள்

இந்த அரசியல் பாடத்தில் கலந்து / கொள்ளாத கொண்ட அனைவருக்கும் நன்றி.

இந்த பாடத்தை தொடர்ந்து வரும் வருடம் நடுப்பகுதியில் வடமாகாண தேர்தல் பரீட்சை நடைபெறும்.

அனைவரும் தவறாது கலந்து கொண்டு சித்தியடையுமாறு வேண்டிக்கொள்ளபடுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

(முன்னாள் முதலமைச்சர்) பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் ஜனாதிபதிக்கு பயங்கரவாத தடுப்பு ஆலோசகராக நியமிக்கப்படலாம்.

பிள்ளையான் இப்போ தான் அரசியல் படிக்கிறார் தேற கொஞ்ச நாளாகும்.

இருந்தாலும் பிள்ளையான் கருணாவை விட அரசியல் தெரிஞ்சவர். :lol::icon_idea:

இந்த தேர்தல் மூலம்

பாடம் படித்தவர்கள்

  • பிள்ளையான்
  • கருணா
  • சம்பந்தர் - தமிழ் தேசிய கூடமைப்பு
  • கிழக்குமாகாண தமிழ் பேசும் மக்கள் (தமிழ் - முஸ்லிம்)
  • புலம்பெயர் அரசியல் ஆலோசகர்கள்
  • வடக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள்

பாடம் படிப்பித்தவர்கள்

  • பேராசிரியர் மகிந்த
  • கௌரவ பேராசிரியர் ஹக்கீம்

வகுப்புக்கு வராதவர்கள்

  • டக்லஸ்
  • ஆனந்தசங்கரி
  • தமிழ் தேசிய மக்கள் முன்னணி

வகுப்புக்கு அனுசரணை, ஆலோசனை, கண்காணிப்பு

  • இந்திய வெளியக புலனாய்வு அமைப்பு (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை கிளை)
  • வெளிநாட்டு புலனாய்வு மற்றும் அரசியல் அமைப்புகள்

இந்த அரசியல் பாடத்தில் கலந்து / கொள்ளாத கொண்ட அனைவருக்கும் நன்றி.

இந்த பாடத்தை தொடர்ந்து வரும் வருடம் நடுப்பகுதியில் வடமாகாண தேர்தல் பரீட்சை நடைபெறும்.

அனைவரும் தவறாது கலந்து கொண்டு சித்தியடையுமாறு வேண்டிக்கொள்ளபடுகிறீர்கள்.

இந்த தேர்தல் மூலம் யாழ்கள உறவுகள் அடைந்தவை எவை?

வரும் வட மாகாண தேர்தலில் சம்பந்தர்- கஜேந்திரகுமார் பிரிந்து நின்று போட்டியிட்டால், டக்லஸ் / சிங்கள / முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர் தொகை கூடும்.

இந்த தேர்தல் மூலம் யாழ்கள உறவுகள் அடைந்தவை எவை?

நல்ல கேள்வி புத்தன்.

அடைந்தவை

  • எமக்குள்ளே அரசியல் பிரிவினைவாதம்
  • தாயக அரசியல் சிந்தனை தோல்வி
  • நேரத்துக்கு நேரம் அரசியல் முடிவு/கொள்கை மாற்றங்கள் (போற்றுதல் - தூற்றுதல்)
  • முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்றுவரை எங்களுக்கு சாதகமான முடிவை மட்டும், கடைசி வரை நம்புதல்

செய்ய வேண்டியவை

  • ஈழத்து அரசியல் - புலத்து அரசியல் இடையான வேறுபாடு பற்றிய தெளிவு
  • எமக்கு உள்ள தனிப்பட்ட தொடர்புகள் ஊடாக வடக்கு-கிழக்கு மக்கள் மத்தியில் அரசியல் எழுச்சி/தெளிவு
  • சாதகமான எதிர்வு கூறல்களை/ஆய்வுகளை தவிர்த்து யதார்த்தமான சிந்தனைகள்/ அரசியல் ஆலோசனைகள்
  • ஈழத்து அரசியல் சம்பந்தமாக திரி அமைத்து வாத பிரதிவாதங்கள் மூலம் ஒரு கருத்து ஒற்றுமைக்கு வந்து பரப்புரை செய்தல், கடிதங்கள் ஆலோசனைகளை கையொப்பங்களுடன் சம்பந்தபட்ட அரசியல் தரப்புக்கு அனுப்பிவைத்தல்.
  • ஆலோசனைகள் / அறிவுத்தல்கள் கொள்கை ரீதியாக ஏற்ருகொள்ளப்படுமிடத்து நிதி / அரசியல் ஒத்துழைப்பு வழங்குதல்
  • மக்களை திசை திருப்பும், எதிரியை வெல்ல செய்யும் செய்திகளை கருத்தறிந்து, பகுத்தறிந்து யாழில் இணைக்காமல்/ ஊடங்கங்களில் பரப்பாமல் விடுதல்
  • கிழக்குமாகாண தேர்தலுக்கு பின்னான செய்திகளை தொகுத்து, அரசியல் வரலாற்றை காட்டும்/ அரசியல் தோல்வியை கட்டும் கருத்துக்கள தொகுப்பை உருவாக்குதல். அரச - கிழக்கு முஸ்லீம்கள் , அரச - பிள்ளையான் சார்பு மக்கள் பகையை வளர்த்தல்
  • இப்பவே வடமாகாண தேர்தலை குறிவைத்து ஒரு கருத்துகள தொகுப்பை திறந்து (நிர்வாகம்) அது சம்பந்தமான செய்திகள் ஆய்வுகள், மக்கள் எழுச்சியை உருவாக்குதல். இதற்கு தெரிந்த யாழ் பல்கலைகழக மாணவர்கள் ஊடாக பிரச்சாரம் செய்தல்

எனக்கு தெரிந்தவற்றை எனது அறிவுக்கு எட்டியவரை எழுதி உள்ளேன். பிழைகள் சரிகள் இருக்கலாம். உறவுகளே நீங்களும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். மல்லையூரான் சொன்னது போல யாருக்கு தெரியும் இந்த திரி கூட எதிர்கால அரசியல் புரட்சிக்கு வழி வகுக்கலாம் .

திலீபன் அண்ணாவின் தியாகமிகு இந்த நாட்களில் ஏதாவது உருப்படியாக செய்வோம்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்

குறிப்பு : இங்கே மக்கள் புரட்சி என்பது ஆயுதபுரட்சியை மட்டும் குறிப்பது அல்ல, அது அரசியல் புரட்சியாக கூட இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் நிச்சமாக இது செய்ய வேண்டிய ஒரு விடயம்....வடமாகாணசபை அரசு மூலம் வெளிநாட்டு சங்கங்கள் அனுப்பும் பணத்தைன் உரிய முறையில் மக்களுக்கு சென்று அடையும் வகையில் எதாவது முயற்சிகள் செய்யவேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.