Jump to content

காலிஃப்ளவர் பொரியல் (வறுவல்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20-cauliflower-roast-300.jpg

[size=4]வீட்டில் மதிய வேளையில் சமைத்து சாப்பிடும் போது, எப்போதும் சைடு டிஷ்ஷாக பொரியல், கூட்டு என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது சில்லி போன்று காலிஃப்ளவரை வறுவல் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். மேலும் இந்த டிஷ்ஷை மாலை வேளையில் கூட ஸ்நாக்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த காலிஃப்ளவர் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size]

[size=4]தேவையான பொருட்கள்:[/size]

[size=4]காலிஃப்ளவர் - 1

கடலை மாவு - 1/2 கப்

மைதா மாவு - 1/4 கப்

கார்ன் ப்ளார் - 1/4 கப்

அரிசி மாவு - 1/4 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்

கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால்)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு[/size]

[size=4]செய்முறை:[/size]

[size=4]முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மைதா மாவு, கார்ன் ப்ளார் மற்றும் அரிசி மாவை போட்டு ஒன்றாக கலந்து கொள்ளவும்.[/size]

[size=4]பின் காலிப்ளவரை சிறிதாக நறுக்கி, அதனை கொதிக்கும் நீரில் போட்டு அலசி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]பின்னர் அதன் மேல் கலந்து வைத்துள்ள மாவை தூவி, இஞ்சி பூண்டு விழுது, அஜினோமோட்டோ, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கேசரி பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர்த சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.[/size]

[size=4]பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, காய வைத்து, அதில் அந்த காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுக்கவும்.[/size]

[size=4]இப்போது சுவையான காலிஃபள்வர் வறுவல் ரெடி!!![/size]

[size=4]http://tamil.boldsky...ast-002031.html[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன யாருக்கும் பிடிக்கவில்லையோ எல்லாரும் அசைவப்பிரியர்கள் போல என்ன செய்வது நானும் தேடிதேடிப்பார்க்கின்றேன் ஒன்றும் ஆப்பிடுகுதில்லை கிடைத்தால் உடனேயே இணைத்து விடுகின்றேன் அதுவரைக்கும் இந்தமாதிரியான காலிஃப்ளவர் பொரியலை பொரித்து சாப்பிட்டுப்பாருங்களேன் :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

blumenkohl-moehren-auflauf.jpg

இப்போ... புளூமன்கோல் (Blumenkohl) அறுவடைக் காலம் என்ற படியால், செய்து பார்க்க விருப்பம் தான்...

ஆனால்.. கீழே உள்ள மூன்று பொருட்களையும், எந்தக் கடையில் வாங்கலாம் தமிழரசு.

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்

(வீர)கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறன் என்று கோவிக்க கூடாது...நான் வீரகேசரி பத்திரிகை தான் கேள்விப்பட்டு இருக்கிறன்;.......இது என்ன..(வீர)கேசரி பவுடர். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

blumenkohl-moehren-auflauf.jpg

இப்போ... புளூமன்கோல் (Blumenkohl) அறுவடைக் காலம் என்ற படியால், செய்து பார்க்க விருப்பம் தான்...

ஆனால்.. கீழே உள்ள மூன்று பொருட்களையும், எந்தக் கடையில் வாங்கலாம் தமிழரசு.

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்

(வீர)கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால்)

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

என்ன .... பக்கத்தில ஒரு இந்தியக்காரங்களின் கடைகள் இல்லையா அவங்களிடம் வாங்கலாம் இதுக்கேன் யோசிக்கிறியல் :D

அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்

சீனாக்காரனின் கடையில் கிடைக்கும் இப்போது எங்கடையாட்களும் விற்கினம் :)

(வீர)கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால்)

முன்னுக்குள்ள பொருள் சிங்களவன்ர நாட்டில்தான் இருக்குது பின்னர் உள்ள கேசரிப்பவுடர் எங்கட ஆட்களின் கடையில்தான் கிடைக்கும் இப்ப கனபேர் கேசரிதான் செய்து வரும் விருந்தாளிகளுக்கு கொடுக்கினம் :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறன் என்று கோவிக்க கூடாது...நான் வீரகேசரி பத்திரிகை தான் கேள்விப்பட்டு இருக்கிறன்;.......இது என்ன..(வீர)கேசரி பவுடர். :lol:

(வீர)கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால்)

முன்னுக்குள்ள பொருள் சிங்களவன்ர நாட்டில்தான் இருக்குது பின்னர் உள்ள கேசரிப்பவுடர் எங்கட ஆட்களின் கடையில்தான் கிடைக்கும் இப்ப கனபேர் கேசரிதான் செய்து வரும் விருந்தாளிகளுக்கு கொடுக்கினம் :D:icon_idea:

தமிழ்க் கடையிலை... அந்தப் பவுடர் விற்குதாம் யாயினி. :lol:

காலிஃபிளவருக்கு என்ன தமிழ்ப் பெயர் என்று யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வீடுகளில் வீர(கேசரிக் கூழ்)தான் செய்து கொடுக்கிறார்கள்..எடுக்கவெளிக்கிட்டால் பிசின் மாதிரி அரைவாசி கையி;ல் ஒட்டிக் கொண்டு வரும்..கேசரிக் கூழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வீடுகளில் வீர(கேசரிக் கூழ்)தான் செய்து கொடுக்கிறார்கள்..எடுக்கவெளிக்கிட்டால் பிசின் மாதிரி அரைவாசி கையி;ல் ஒட்டிக் கொண்டு வரும்..கேசரிக் கூழ். :)

நீங்கள் ஏன் கூழை கையாலை எடுத்தனீங்கள்.

கரண்டியாலை எடுத்திருந்தால்... கையில் ஒட்டியிருக்கது தானே... :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழையாக இருந்தால் திட்டாதீங்கோ தேடலில் கிடைத்தது.....காலிஃபிளவர் தமிழ் பெயர்..பூக்கோசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழையாக இருந்தால் திட்டாதீங்கோ தேடலில் கிடைத்தது.....காலிஃபிளவர் தமிழ் பெயர்..பூக்கோசு.

பூக்கோசா ! :rolleyes:

பெயர் என்னமோ சரிமாதிரித்தான் தெரியுது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பூக்கோசு[/size]

[size=4]http://ta.wikipedia.org/s/18ww[/size][size=1]

[size=3]

[size=4]கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.[/size][/size]

[size=4]பூக்கோசு (அல்லது பூங்கோசு, காலிபிளவர்) ஒரு ஒருபருவச்செடி (annual plant) வகையாகும். காம்பு மற்றும் இலைப் பகுதிகள் களைந்துவிடப்படுகிறது. அதன் பூப் பகுதி உட்கொள்ளத்தக்கது இந்த காயை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.[/size]

[size=4]பொருளடக்கம்[/size]

[size=4] [மறை] [/size]

[size=4][தொகு]தாவரவியல் பெயர்[/size]

[size=4]இதன் தாவரவியல் பெயர் Brassica oleracea. பூக்கோசு, முட்டைக்கோசு, களைக்கோசு (brussel sprouts), பரட்டைக்கீரை (kale), பச்சைப்பூக்கோசு (broccoli), சீமை பரட்டைக்கீரை (collard greens) அனைத்தும் ஒரே குடும்பத் தாவரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4][தொகு]தட்பவெப்பநிலை[/size]

[size=4]பூக்கோசு குளுமையான தட்பவெப்பத்தில் பயிராகிறது. அதிக குளிர் அல்லது சூடான பருவங்களில் பயிராகுவதில்லை.[/size]

[size=4][தொகு]சத்துக்கள்[/size]

[size=4]பூக்கோசில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக சத்தடர்வு (nutritional density) கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.[/size]

[size=4][தொகு]புற்றுநோய்களை எதிர்க்கும், தடுக்கும் குணம்[/size]

[size=4]கல்லீரல் நச்சகற்றியாக உள்ள பூக்கோசில் sulforaphane எனப்படும் புற்றுநோயெதிரி, indole-3-carbinol எனப்பாடும் கழலையெதிரி (anti-tumour) மற்றும் பெண்மையியக்குநீர் எதிரி (anti-estrogen) ஆகிய தாவர வேதிப்பொருட்கள் (phytochemicals) கொண்டுள்ளன.[/size]

[size=4]ஆகையால் அது மார்பக மற்றும் ஆண்குறி புற்றுநோய்களை எதிர்க்கும் மற்றும் தடுக்கும் குணம் உடையது.[/size]

[size=4][தொகு]படங்கள்[/size]

[size=3]

[size=4]

150px-Cauliflower.JPG[/size]

[size=2]

[size=4]magnify-clip.png[/size] [size=4]பூக்கோசு[/size]

[/size]

[size=3]

[size=4]

150px-CabbageBG.JPG[/size]

[size=2]

[size=4]magnify-clip.png[/size] [size=4]முட்டைக்கோசு[/size]

[/size]

[size=3]

[size=4]

150px-Broccoli_and_cross_section_edit.jpg[/size]

[size=2]

[size=4]magnify-clip.png[/size] [size=4]பச்சைப்பூக்கோசு[/size]

[/size]

[size=3]

[size=4]

150px-Boerenkool.jpg[/size]

[size=2]

[size=4]magnify-clip.png[/size] [size=4]பரட்டைக் கீரை[/size]

[/size]

[size=3]

[size=4]

150px-Romaine.jpg[/size]

[size=2]

[size=4]magnify-clip.png[/size] [size=4]ரோமானி[/size]

[/size]

[size=3]

[size=4]

150px-Spinach_leaves_and_stems.jpg[/size]

[size=2]

[size=4]magnify-clip.png[/size] [size=4]சிபினிச்[/size]

[/size]

[size=3]

[size=4]

150px-Brussels_sprout_closeup.jpg[/size]

[size=2]

[size=4]magnify-clip.png[/size] [size=4]களைக்கோசு[/size]

[/size]

[size=3]

[size=4]

150px-Lacinato_Kale_and_Collard_Greens.jpg[/size]

[size=2]

[size=4]magnify-clip.png[/size] [size=4]சீமை பரட்டைக்கீரை[/size]

[/size]

[/size]

[size=4]தகவலுக்கு நன்றி யாயினி :) [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பூக்கோவா,முட்டைக்கோசு என சொல்லுவார்கள் என நினைக்கிறேன்...ஹொலி பிளவரை பொரித்தால் சரியாய் எண்ணெய் குடிக்கும் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பூக்கோவா,முட்டைக்கோசு என சொல்லுவார்கள் என நினைக்கிறேன்...ஹொலி பிளவரை பொரித்தால் சரியாய் எண்ணெய் குடிக்கும் அல்லவா?

எண்ணையை நன்றாக சூடாகியதும் போட்டு எடுக்கவேண்டும் மற்றும் ஒரே முறை எண்ணைச்சட்டியில் நிறையப்போடாது கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவேண்டும் இவற்றை கவனத்தில் கொண்டால் எண்ணை குடிக்காது. :)

Link to comment
Share on other sites

இந்த வாரம் செய்து பார்க்கப் போறன்...ஒரு மாற்றத்துக்கு, மரக்கறி bites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

blumenkohl-moehren-auflauf.jpg

இப்போ... புளூமன்கோல் (Blumenkohl) அறுவடைக் காலம் என்ற படியால், செய்து பார்க்க விருப்பம் தான்...

ஆனால்.. கீழே உள்ள மூன்று பொருட்களையும், எந்தக் கடையில் வாங்கலாம் தமிழரசு.

கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்

(வீர)கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால்)

யாமிருக்க பயமேன் சிறி. ஆனால் வீரத்துக்கும் எனக்கும் வெகு தூரம். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.