Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பான் - சீனா இடையே மோதல் வெடிக்கும் அபாயம் - அமெரிக்கா கவலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

panetta-20912-150.jpg

[size=4]சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1931-ம் ஆண்டு ஜப்பான் ஆக்கிரமிப்பை நினைவுகூறும் நாளை சீனா கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தது.[/size]

[size=4]இதுதொடர்பாக சீன நகரங்களில் ஜப்பானுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. இதே போன்று கடல் பகுதியில் சீன படகுகளும், ஜப்பான் படகுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. கிழக்கு சீன கடல் தீவு பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்றன. சீனாவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பதிலடி தருகிற வகையிலும் சீன நகரங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஜப்பான் வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.[/size]

[size=4]ஜப்பான் எதிர்ப்பு போராட்டம் வலுத்துவிடுமோ என்ற எண்ணத்தில் ஜப்பான் நிறுவனங்கள் தங்களது பல தொழிலாளர்களை ஜப்பானுக்கு திருப்பி அனுப்பியது. இதற்கிடையே பெய்ஜிங்கில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் முன்பாக போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, தூதரகத்தின் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். அவர்கள் சீனக்கொடிகளை அசைத்தவாறு, ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக கோஷங்களை முழங்கினர்.[/size]

[size=4]இந்த போராட்டம் மீண்டும் நடக்காதவாறும், கலவரங்களைத் தடுக்கும் விதத்திலும் சீனா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜப்பான் தூதரகத்தின் முன்பாக சீன கலவர தடுப்பு போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பற்றி சீனா சென்றுள்ள அமெரிக்க ராணுவ மந்திரி லியோன் பானட்டா கருத்து தெரிவித்தார்.[/size]

[size=4]இதுகுறித்து அவர் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் பெரிய மோதல்களாக, கலவரங்களாக வெடிக்கும் ஆபத்து உள்ளது. இதில் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது, சீனா தான் அனுபவித்த வேதனைகளை நினைத்துப் பார்க்கிறது. அதே நேரத்தில் நாம் கடந்த காலத்தை நினைத்துக் கொண்டு வாழ்ந்து விட முடியாது என்றார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

we are very close to december 21,2012

aha! aha! aha!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புதிய உலக ஒழுங்கு, கட்டாயமாகத் தேவைப்படுகின்றது!

எப்பவுமே, தமிழன் தானா, அடி வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்!

ஜப்பானில் தொடங்கி, இந்தியா வழியாக வந்து, பாகிஸ்தானையும் ஒரு வழி பார்க்கட்டும், இந்தப் போர்!!!

மற்றப் பக்கத்தை, ஈரானும், அமெரிக்காவும் பார்த்துக் கொள்ளட்டும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

யப்பானுக்கும், சீனாவுக்கும் சண்டை தொடங்கினால்...

பார்த்து, ரசிக்க.... நல்ல விறு விறுப்பாய் இருக்கும்.

யசூசி அகாசியை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால்...

விரைவில்.. சண்டையை, ஆரம்பித்து வைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் சீனா மீது உடனடியாக படை எடுத்து செல்ல வேண்டும்..... ஜப்பானுக்கு சொந்த மான தீவை முழுசா மீட்கவேண்டும் ....:D. :D

அதை நாங்கள் பார்க்க வேண்டும் இதெல்லாம் நடக்கணும் எண்டு கடவுளை வேண்ட வேண்டும்.....

[size=6]The Next Global Manufacturing Superpower[/size]

[size=5]When General Motors, (GM) the largest automaker in the U.S., announced last year it would invest some $540 million to expand its plant in Toluca, Mexico, it joined a growing list of manufacturers seeking more bang for their production buck south of the border.[/size]

[size=5]Workers assemble TV sets at Samsung’s manufacturing plant in Tijuana.With lower shipping costs and increasingly competitive wages, Mexico is enjoying a manufacturing boom, attracting billions of dollars in foreign investment from firms that are building factories to supply the North American market -- a concept known as nearshoring.[/size]

[size=5]Most recently, automakers Nissan, (Frankfurt Stock Exchange: NISA-FF) Audi, (Frankfurt Stock Exchange: NSU-FF) Honda (HMC) and Mazda (Frankfurt Stock Exchange: MZA-FF) have all announced plans to open plants in Mexico over the next few years.[/size]

[size=5]Italian tire maker Pirelli & C. (Frankfurt Stock Exchange: PIL2-FF) said earlier this year it would invest $300 million in new factories in Mexico by 2015, and Swedish appliance maker Electrolux (Frankfurt Stock Exchange: ELX-FF) moved a plant last year from Webster City, Iowa to Juarez, Mexico.[/size]

[size=5]http://finance.yahoo.com/news/next-global-manufacturing-superpower-165726563.html[/size]

[size=5]ஜப்பான் தீவுகளில் நுழைந்த இரு சீன கப்பல்கள்[/size]

[size=4]ஜப்பானிற்கு சொந்தமான தீவுகளில் இன்று அதிகாலை இரு சீன கப்பல்கள் நுழைந்ததாக ஜப்பானின் கடற்படை தெரிவித்துள்ளது.ஜப்பானில் உள்ள பிரச்சினைக்குரிய தீவுகளில் இரு சீன கப்பல்கள் அத்துமீறிக நுழைந்ததாக ஜப்பான் தெரிவித்துள்ளது.[/size]

[size=4]http://tamil.yahoo.com/ஜப்ப-ன்-வ-கள-ல்-024200587.html[/size]

[size=5]சீன கடற்படையில் விமானம் தாங்கி கப்பல்[/size]

சீன கடற்படையில் புதிதாக விமானம் தாங்கி கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. வார்யாக் என்ற பெயரில் முன்னாள் சோவியத் யூனியன் நாட்டில் உருவாக்கப்பட்டு வந்த இந்த கப்பல், சோவியத் யூனியன் உடைந்ததையடுத்து, 1991ம் ஆண்டு உக்ரைன் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இத்தகைய கப்பல்கள் பழைய இரும்புக்காக உடைக்கப்பட்ட போது, வார்யாக் கப்பலை சீனர் ஒருவர், மக்காவ் பகுதியில் கடல் ஓட்டல் உருவாக்குவதற்காக வாங்கியுள்ளார். பின்னர் இது சீன அரசின் வசம் வந்தது. தற்போது பணிகள் முடிந்து கப்பல், சீன கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

http://tamil.yahoo.com/ச-ன-கடற்பட-ய-ல்-142300057.html

சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் முறைப்படி கடற்படையில் இணைக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லியானிங் என்று இக் கப்பல் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் அரசால் கட்டப்பட்ட இக் கப்பலை, யுக்ரேனிடமிருந்து சீனா வாங்கியது. பிறகு அக்கப்பல் சீனாவில் சீரமைக்கப்பட்டது. சீனாவின் முக்கிய கடற்படைத் தளம் இருக்கும் டாலியன் நகரில்தான் இக் கப்பல் சீரமைக்கப்பட்டது. இந்த நகர் அமைந்துள்ள மாகாணத்தின் பெயரே கப்பலுக்கு தற்போது சூட்டப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே சீனா தனது கடற்படையின் வல்லமையை பெருக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆசிய பசிவிக் பிராந்தியத்தில் அது பல புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

விமானம் தாங்கி கப்பலின் சேர்க்கை காரணமாக சீனாவின் இராணவத் திறன் அதிகமாகும். அதே நேரம் இக் கப்பலில் இருந்து உடனடியாக விமானங்கள் இயக்கப்படாது என்றும் தெரிகிறது

http://www.bbc.co.uk/tamil/india/2012/09/120925_chinacarrier.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.