Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மணம் பலமனம்

Featured Replies

நிலா 'ம்' என்றதே அவருக்கு ஒரு வசனம் என்றால் அவா வசனம் பேசியிருந்தா கவிதையா இருந்திருக்கும்.

சாத்திரியாரே நல்லாப் போகுது கதை:-)

  • Replies 151
  • Views 22.7k
  • Created
  • Last Reply

தாத்தா இன்று திங்கட்கிழமையாச்சே எங்கே தாத்தாவின் கதையைக் காணோம் தாத்தா எங்கே :?: :?: :?: கதை படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 5

மறுநாள் காலை உணவை முடித்ததும் நாம் வெளியில் எங்காவது பேகலாமா? என்று நிதர்சினியைப் பார்த்துக் கேட்கவும் அவளும் ம்... வீட்டிற்கு போகலாம் என்றாள். எனக்கும் ஏதோ நிதர்சினிக்கும் இப்படி விடுதிகளில் தங்கி பழக்கம் இல்லாததால் அவள் கூச்சப் படுகிறாள் என நினைத்து அவளிடம் விடுதியை காலி செய்து விடலாமா? என்று கேட்கவும் அவளும் தலையாட்டினாள்,

விடுதியை காலி செய்து விட்டு நிதர்சினியின் வீட்டிற்கே போனோம். அங்கு அவர்கள் எங்களிற்கு மூன்றாம் மாடியை ஒதுக்கி தந்தனர். அன்றும் என்னடன் நிதர்சினி எதுவுமே பேசிக் கொள்ளவில்லை ஏதோ ஒரு இயந்திரம் போல வந்து மதியம் சாப்பிட்டு விட்டு மீண்டும் மாடிக்குப் போய் விட்டாள். அப்போது தான் நான் நினைத்தேன் இப்படியே இருந்தால் சரிவராது. இருவரும் தனியாக மனம்விட்டுப் பேசக் கூடிய சூழ் நிலை வேண்டும் அதற்கு அவளைத் தனியாக எங்காவது அழைத்துச் செல்லலாம் என நினைத்தது.

எனக்கும் நீண்ட நாட்களாக கேரளா போக வேண்டும் அங்குள்ள படகு வீடுகளில் பயணம் செய்ய வேண்டும் என்கிற ஒரு விருப்பம் இருந்தது. எனது விருப்பத்தை அவளின் பெற்றோரிடம் சொன்னபோது அவளின் தாயாரும் நல்லது அவளை எல்லாரும் செல்லமா வளர்த்திட்டம் . அதைவிட வெளியாட்களோடையம் அதிகம் பழகிப் பழக்கம் இல்லை அதாலைதான் உங்களோடையும் கதைக்க பழகக் கொஞ்சம் சங்கடப்படுறாள் என்று நினைக்கிறன் அதால நீங்கள் தனியா கொஞ்ச நாளைக்கு எங்கையாவது போட்டு வாறதுதான் நல்லது. அதோட அவள் ஏதாவது உங்கட மனம் நோகிற மாதிரி நடந்திருந்தா தயவு செய்து ஒன்றும் மனசில வச்சிருக்காதீங்கோ என்றார். நானும் சே சே அப்பிடியொண்டும் இல்லை என்று விட்டு மறு நாள் கேரளா போவதற்கான் ஆயத்தங்களை செய்தேன் .

அன்று மாலையே போய் கேரளாவிற்கான விமான சீட்டு மற்றும் தங்கும் விடுதி படகு வீட்டிற்கான பதிவு என்று எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து விட்டு விமான சீட்டுடன் வந்து நிதர்சினியிடம் நாங்கள் நாளைக்கு கேரளா போகிறம் என்றேன். சந்ததோசப்படுவாள் என நினைத்த எனக்கு ஏமாற்றம் தான். நிமிர்ந்து என்னைப் பார்த்து விட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள். அன்றிரவு சாப்பிட்டு முடிந்ததும் மாடி அறைக்கு வந்தவள் இரவு உடைகளைக் கூட மாற்றாமல் அப்படியே தனது கைப்பைக்குள் இருந்து இரண்டு குளிசைகளை எடுத்துப் போட்டு தண்ணியை குடித்து விட்டு அப்படியே பேசாமல் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

அவள் அருகில் போய் என்ன ஏதாவது பிரச்சனையா?? என்றென் . ம்...சரியா தலையிடிக்கிது. பிளீஸ்.....என்றவள் போர்வையை இழுத்து போத்துக் கொண்டு படுத்து விட்டாள். எனக்கோ ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு. கொபமா??அவமானமா?? அல்லது இயலாமையா??? என்று எதுவுமே தெரியாத ஒரு உணர்வு. பேசாமல் அருகில் படுத்துக் கொண்டாலும் நித்திரை வராமல் எனது சிந்தனைகளோ சிறகு கட்டிப் பல பக்கங்களாலும் பறந்து கொண்டிருந்தது.

என்னை இவளிற்குப் பிடிக்கவில்லையா?? பிடிக்காவிட்டால் ஏன் திருமணம் வரை வந்தாள் ?? அல்லது என்னில் ஏதாவது பிடிக்கவில்லையா?? அப்படியானால் மனம் திறந்து சொல்லலாம் தானே??அல்லது அவளது தாயார் சொன்னது போல மித மிஞ்சிய கூச்சமா? அல்லது அதற்கும் மேலாக ஏதாவது காரணங்கள் இருக்குமா?? என்று என்னிடம் பல்லாயிரம் கேள்விகள். மெதுவாய் அவளது கைப்பையைத் திறந்து அவள் போட்டது என்ன குளிசையெண்டு பாப்பமா? என்று யோசித்தாலும் சே அது அநாகரீகமான செயல் என்று நினைத்து விட்டு அப்போது தான் நினைத்தேன் சே தெரியாத்தனமா அந்த விடுதியை காலி செய்திட்டு வீட்டிற்கு வந்தது எவ்வளவு முட்டாள் தனம். விடதியெண்டா இப்ப அவளை எழுப்பி வைச்சு ஏதாவது கேட்டிருக்கலாம். இப்ப நித்திரையும் வருது இல்லை வெளியிலையும் இறங்கி போக ஏலாது . கீழை அவளின் தாய் தந்தையர் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர். சரி எல்லாத்தையும் நாளை பாக்கலாம் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லி கொண்டு ஒரு மாதிரி நித்திரையாகி விட்டேன்.

மறநாள் சென்னையிலிருந்து கேரளா கோச்சின் விமான நிலையம் போய் சேர்ந்தோம். எங்கள் பயணத் திட்டப்படி அன்று கோச்சினை சுற்றிப் பார்த்து விட்டு கோச்சினில் உள்ள ஒரு விடுதியில் அன்றிரவு தங்கி விட்டு மறு நாள் படகு வீடுகள் உள்ள இடமான எர்ணாங்குளம் போவது என்பதே. அங்கு புகழ் பெற்ற கோச்சின் துறைமுகம் மற்றும் எங்கும் பச்சை பசேலென்ற தேயிலை இறப்பர் மற்றும் மிளகு தோட்டங்கள் என்று பார்த்துக் கொண்டே போன எனக்கு சிறிய வயதில் கண்டி நுவரெலியா போன ஞாபகங்கள் மனதில் வந்து போனது. அவ்வப்போது நானாகவே நிதர்சினியிடம் பேச்சுக் கொடுத்தபடி முதல் இருநாளையும் விட அன்று அவளிடம் கொஞ்சம் நெருக்கமாகவே நடந்து கொண்டேன்.

அவ்வப்போது அவளது கையை பிடித்தபோதெல்லாம் மெதுவாக அவள் எனது பிடியிலிருந்து விடுவித்து கொண்டேயிருந்தாள். அனாலும் முதல் நாளை விட அன்று அவள் கொஞ்சம் நல்ல மனநிலையில் இருந்தது போல தோன்றியதால் நானும் எங்களது தனிப்பட்ட விடயங்களை கதைத்து அவளது மனைதைக் கலைக்க விரும்பாமல் பொதுவான விடயங்களையே பேசிக் கொண்டேன். அவளும் அன்று ஒரிரு வசனங்களைச் சிரமப்பட்டு வெளியில் விட்டாள்.

அன்று இரவு விடதியில் உணவருந்தி விட்டு எங்கள் அறைக்குள் நுளைந்ததும் இரவு உடைகளை மாற்றிக் கொண்ட நான் அவளிடம் நிதர்சினி உன்னட்டை சில விடயங்கள் கேட்க வேண்டும். நீ தயக்கமில்லாமல் பயப்பிடாமல் என்னிடம் தாராளமாக மனம் விட்டுச் சொல்லலாம் . உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா? அல்லது எனது பழக்கவழக்கங்கள் ஏதாவது பிடிக்கலையா? வேறை என்ன காரணம் எண்டாலும் தாராளமா என்னட்டை சொல்லு என்றேன்.

கட்டிலில் படுப்பதற்கு தயாராய் இருந்த நிலையில் என்னிடம் அப்படியொண்டும் இல்லை என்று ஒற்றை வரியிலேயே பதில் சொன்னாள். புதிதில் பழக எல்லோருக்கும் தயக்கம் இருக்கும் தான் ஆனால் நீ என்னிடம் பழகிற முறையை பாத்தால் தயக்கம் மட்டுமில்லை வேறை ஏதொ காரணம் இருக்கிற மாதிரித் தெரியுது நான் மற்றவர்கள் மனதைப் புரிந்த கொள்ளத் தெரியாதவன் இல்லை அதனால் உனக்கு வேறை ஏதும் பிரச்சினை இருந்தால் கூட தாரளமா தயக்கம் இல்லாமல் சொல்லு என்று விட்டு அவளருகில் நெருங்கவும்.

நான் நீங்கள் வந்ததிலிருந்த உங்களை கவனிச்சதில்லை உங்களைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டன் அதாலை உங்களிட்டை சொல்லலாம் எண்டு முடிவெடுத்தன். ஆனால் முதலிலேயே சொல்லாததற்கு மன்னிச்சு கொள்ளங்கோ என்று தளு தளுத்த குரலில் தொடங்கியவள் நான் ஒருதரை உயிரா விரும்பிறன்...... என்று கூறிவிட்டு முகத்தை கைகளால் பொத்தியபடி விசும்பத்தொடங்கி விட்டாள். எனக்கு அந்த அறையில் ஏ.சி தள்ளிகொண்டிருந்த குளிர்ந்த காற்றிலும் வியர்க்க தொடங்கியது.

தொடரும்.

இன்டைக்குத்தான் உங்கட ஊரில திங்களோ? கதை நல்லாயிருக்கு.பாவம் முனியம்மா.

சினேகிதி சாத்திரி இருக்கும் ஊரில் நாட்கள் எல்லாம் மாறி மாறித்தான் வருமாம்...

இப்படித்தான் கதை தொடர்ப்போகுது என்று நினைத்தேன். தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த பகுதியை அறிய காத்திருக்கின்றோம்.

கொஞ்சம் பொறுங்கோ இப்பதானே புதுசா கட்டினவர் அவரே இடிஞ்சு போய் இருக்கார் அவ வேற யாரையோ விரும்புறா என்டு நீங்க வேற உங்கள் ஊருல திங்களோ என்டு கொண்டு. சரி அதை விடுங்கோ.

சாத்திரி நான் நினைச்சது தான் அவக்கும் நடந்து இருக்கு, அப்புறம் என்ன நடந்தது. அறிய ஆவலாக உள்ளோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏ. சி யை உச்சத்தில் ஓடவிட்டு விட்டு நிதர்சினியின் அருகில் போய்: அமர்ந்தவாறு நிதர்சினி வடிவா நான் சொல்லுறதை கேளும் சரி நீர் யாரையோ காதலிக்கிறீர் எண்டால் நான் இங்கை வர முதல் எத்தனை தரம் உங்கடை வீட்டிற்கு போன் அடிச்சனான் அப் ஒரு வார்த்தை என்னட்டை சொல்லியிருக்கலாம் .

சரி அதுக்கு பிறகெண்டாலும் நான் இங்கை வந்தா பிறகு சொல்லியிருக்கலாம். சரி அததான் வேண்டாம் என்னட்டை சொல்ல முடியாட்டி கலியாணம் பேசேக்கையே எங்கடை அம்மாட்டை நீசொல்லியிருக்கலாம் தானே இப்ப எல்லாம் நடந்து முடிஞ்சாபிறகு இங்கை இப்ப வந்து சொல்லறாய். இதாலை இனியென்ன பிரயோசனம். யார் என்ன செய்யலாம்?? சொல்லு என்றேன்.

எனக்கும் தெரியும் இனி யாரும் ஒண்டும் செய்ய முடியாது என்று . ஆனால் எல்லா பிரச்:சனையும் உங்கடை அம்மாக்கும் தெரியும் ஆனாலும் யாருமே நான் சொன்னதையோ என்ரை காதலையொ ஏற்க தயாராய் இருக்கவில்லை என்றபடியே அழ தொடங்கி விட்டாள். அவளை ஓரளவு சமாதான படத்தி விட்டு எங்கடை வீட்டிற்கும் தெரிந்துதான் இவ்வளவும் நடந்திருக்கா? என்றபடி சரி எல்லாருமே சேந்து எல்லாத்தையும் மறைத்து ஒரு நாடகத்தை நடத்தி முடிச்சிட்டீங்கள் .

சரி என்னதான் நடந்தது இனி என்ன செய்ய போறாய் அதையாவது சொல்லு இனி ஏதாவது செய்யலாமா என்று யோசிப்பம் என்றேன்.

ஒரளவு சமாதானம் அடைந்தவள் தனது கதையை சொல்ல தொடங்கினாள். நாங்கள் ஊரிலை இருந்து இடம் பெயர்ந்து திரு கோணமலைக்கு வந்ததும் நான் தொடர்ந்தும்: படிக்கிறதை விட்டிட்டன் பிறக

அங்கை சும்மா தானே வீட்டலை இருக்கிறனெண்ட கொம்புயூட்டர் வகுப்புக்கும் இங்கிலிஸ் வகுப்பக்கும் போறனான். அங்கை எங்கடை வீட்டுக்கு பக்கத்திலை ஒரு ரெலி கொமினி கேசனும் முன்னாலை ஓட்டோ ஸ்ராண்ட் ஒண்டு இருக்கு நான் வகுப்பக்கு ஒவ்வொரு நாளும் ஓட்டோவிலைதான் போறனான்.

அனேகமா அங்கை ஓட்டோ ஓடுற குமார் எண்டவரின்ரை ஓட்டோவிலைதான் போய் வாறனான்.

அப்பிடி போய் வரேக்கை அவரை எனக்கு பிடிசிட்டது நல்லவர் ஆனால் சரியான கஸ்ரபட்ட குடும்பம் அவரின்ரை உழைப்பை நம்பித்தான் அவரின்ரை அம்மாவும் ஒரு தங்கையும் இருக்கினம் தகப்பனை ஆமி சுட்டு கொண்டிட்டாங்கள்.என்றவள் இடையில் நான் புகுந்து குடும்பமே இவ்வளவு கஸ்ரம் எண்டிறாய் என்ன நம்பிக்கையிலை உன்னை காதலிச்சவன்?? என்றேன்.

அவர் காதலிக்கேல்லை நான் தான் முதலிலை அவரை காதலிக்க தொடங்கினனான். நான் தான் முதலிலை என்ரை விருப்பத்தையும் சொன்னான்.அதுக்கு அவர் என்ரை வசதி வாய்ப்புகள் எல்லாத்தையும் சொல்லி இது நடை முறைக்கு சரிவராது என்று முதலிலை மறுத்திட்டார். ஆனால் நான் தான் எங்கடை வீட்டு காராலை பிரச்சனை இல்லை நான் எல்லாம் சமாளிப்பன் எண்டு தொடந்து அவருக்கு கரைச்சல் குடுத்ததாலை கடைசிலை சம்மதித்திட்டார். நானும் என்னிலை உள்ள பாசத்திலை எங்கடை வீட்டு காரரும் என்ரை விருப்பத்திற்கு தடையா இருக்க மாட்டினம் எண்டுதான் நம்பினனான் .

காரணம் நான் கேட்டு வீட்டிலை இல்லையெண்டு எதுவுமே வீட்டு காரர் எனக்கு சொன்னதில்லை.ஆனால் என்ரை காதல் விடயத்திலை எல்லாமே தலை கீழா நடந்திட்டிது . என்றவாறு மீண்டும் அவளது விம்மல் சற்று அதிகமானது . சரி சரி அழாமல் பிறகு என்ன நடந்தது எண்டு சொல்லு நீ வீட்டிலை என்ன நகை உடுப்பு விரும்பின பொளுள் விரும்பின சாப்பாடு எண்டு மட்டும் தான் அதுவரை கேட்டிருப்பாய் இதொல்லாம் நாங்களா கொண்டு போய் மற்றைவைக்கு காட்டி எங்கடை கெளரவத்தையும் பெருமையும் அடிக்கிற விடயங்கள்

அதாலை உன்ரை வீட்டு காரரும் நீ கேட்டது எல்லாத்தையும் மறுக்காமல் வாங்கி தந்திருப்பினம் ஆனால் கலியாணம் எண்டது மற்றவை தாங்களாகவே வந்து பாத்தோ இல்லை வில்லங்கத்திற்காவது அதை பற்றி கதைத்து எங்கடை கொரவத்தையும் பெருமையையும் நிர்ணயிக்கிற விடயமா எங்கடை சமுதாயத்திலை பழகிட்டதாலை உன்ரை வீட்டு காரரும் அதை மறுத்திரப்பினம் . உதுகளை நீ முதலியே எல்லோ வடிவா யோசிச்சு இருக்க வேணும் இல்லாட்டி உண்மையா காதலிச்சிருந்தா உறுதியொடை உன்ரை வீட்டு காரரோடை போடராடி அந்த பெடியனையெ செய்திருக்க வேணும் உன்ரை வீட்டு காரரும் உன்னிலை உண்மையான உண்மையான பாசம் இருந்திருந்தா சம்மதிச்சிருப்பினம் . இப்ப என்னண்டா எனக்குகூட ஆரம்பத்திலை எதுவும் சொல்லாமல்.

தாலியும் கட்டிட்டு முதல் இரவு போய் மூண்டாவது இரவு என்னட்டை இந்த கதையை இப்ப சொல்லி என்ன பிரயொசனம் ?? என்று கொஞ்சம் கடுமையான கோபத்துடனேயே சத்தமாய் அவளை கேட்டேன். நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை நானும் எவ்வளவோ வீட்டு காரரோடை கதைத்து போராடி பாத்தனனான் கடைசியிலை தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணிபாத்தன் காப்பாத்திட்டினம். அது மட்டு மில்லை இனியும் குமாரை நினைத்துகொண்டிருந்தா தாங்கள் குடும்பத்தோடை தற்கொலை செய்ய போறதா அப்பா அம்மா எல்லாரும் சொல்லிட்டினம் என்றாள் (பேசாமல் அப்பிடியே எல்லாரும் தற்கொலை செய்திருக்கலாம் எனக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று மனதில் நினைத்தவாறே அவளின் மீதி கதையை உன்னிப்பாக கேட்டடேன்)

அதோடை தங்கடை செல்வாக்கை பயன் படுத்தி காசை குடுத்து குமாரையும் பொலிசிலை தூக்கி போட்டிட்டினம் நான் இந்தியாக்கு வர சம்மதிச்சாதான் குமாரை வெளியிலை வரவிடுவம் எண்டு வீட்டிலை வெருட்டினதாலைதான் என்னாலை தானே குமாருக்கு இவ்வளவு கஸ்ரம் அதைவிட அவரின்ரை குடும்பமே அவரை நம்பித்தான் இருக்கு அந்த நேரம் குமாரை காப்பாத்தவும் வீட்டு காரரை சமாளிக்கவும் தான் நானும் இந்தியா வர சம்மதித்தன் .கால போக்கிலை விட்டு காரரை ஏதாவது மாத்தலாம் எண்டும் நம்பினன். ஆனால் இங்கு வந்ததும் அவசர அவசரமா இந்த கலியாணத்தை பேசி முடிச்சிட்டினம் .

அதோடை என்னையும் நெடுக கண்காணிச்சபடி அப்பிடியிருந்தும் நான் குமாருக்கு இரண்டு மூண்டு தரம் ரெலிபேன் எடுத்து கதைச்சிருக்கிறன் .கடைசியா உங்கடை அம்மாட்டை சொல்லியாவது இந்த கலியாணத்தை நிறுத்லாம் எண்டும் முயற்சித்தன் முடியேல்லை என்றவாறு மீண்டும் முகத்தை கைளிற்குள் புதைத்து கொண்டவளின் தலையை நிமிர்த்தி கலியாணம் நடந்த விடயமாவது குமாருக்கு தெரியுமா?? என்றேன் . இல்லை எனக்கு அதுக்கு பிறகு ரெலிபொன் அடிக்க சந்தர்ப்பம் கிடைக்கேல்லை அதே நேரம் இதை சொல்லற தைரியமும் எனக்கில்லை என்ன செய்யிறதெண்டே எனக்கு தெரியெல்லை அதே நேரம் உங்களோடையும் என்னாலை சகயமாக பழக முடியலை.

என்னை மன்னிச்சிடுங்கோ என்றாள் . ம்... செய்யிறதெல்லாத்தையும் செய்திட்டு கடைசிலை எல்லாருக்கும் ஒரு வசனம் இருக்கு மன்னிச்சிடுங்கோ எண்டு .இப்படியெ அன்றைய இரவு அவளது சொந்த கதை கேட்டு இரவும் விடிந்து மெல் வெளிச்சம் வர அரம்பித்தது நேரத்தை பார்த்தேன் காலை 5மணியை தொட்டு கொண்டிருந்தது. 10 மணிக்கெல்லாம் எங்களை படகு வீட்டிற்கு அழைத்து போக கார் வந்து விடும் நித்திரை முழித்து இருவரது கண்களும் சிவந்து வீங்கி எரிந்து கொண்டிருந்தது சோர்வாகவும் இருந்தது.

அவளைப்பார்த்து சரி என்னவோ எல்லாம் நடந்து முடிந்திட்டுது நடந்து முடிந்த சம்பவங்களிற்க என்னாலை ஒண்டும் செய்ய ஏலாது அதிலை நான் எந்த பொறுப்பும் வகிக்கேல்லை ஆனால் நீ இனி என்ன செய்ய போகிறாய் நடந்த சம்பவங்களை மறந்து சரியான மனநிலையில் உன்னால் என்னுடன் சந்தோசமாக வாழ முடியுமா முயற்சிப்பாயா??இல்லை முடியாதா? ஆனால் நான் எந்த காலத்திலும் உனது நடந்த சம்பவங்களை மனதில் வைத்து உனக்க எவ்வித பிரச்சனையும் தர மாட்டேன் என்று உறுதி தர முடியும் காரணம் என்னை பொறுத்தவரை இது ஒரு விபத்துதான் அது முடிந்ததாகவே இருக்கும் .எங்கள் திட்டப்படி நாங்கள் படகு வீட்டிற்கு போவோம் நீ இன்ற முழுவதும் வடிவாக யோசித்து உனது முடிவை இன்றிரவு படகு வீட்டில் என்னிடம் சொல்லு.

வேண்டுமானால் யோசிக்க இரண்டு நாள் அவகாசம் கூட எடக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை நீ எவ்வளவு விரைவாக ஒரு முடிவை எடுக்கிறாயோ அது இருவருக்குமே நல்லது எனவே தான் இன்றிரவு உனது முடிவை சொல் என்று விட்டு சிறிது நித்திரை கொள்ளலாம் என நினைத்து போய் படுத்துகொண்டேன் :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவமே.. என்ன இது திரைப்படம் மாதிரிப்போகுது.. பாவம் அண்ணை.. கடைசில என்னமாதிரிப்போச்சு.. விரைவாய் எழுதுங்கோ ஆவலுடன் இருக்கிறோம்..(இப்படி புரிந்துணர்வுடன் இருக்கிற ஆண்கள் குறைவு.. நல்லாய் இருக்கு) :P

சாத்திரி தாத்தா உங்கள் கதைகளிற்கு நாங்கள் நால்வருமே பெரிய விசிறிகள். 8)

உங்கள் கதை மிகவும் நல்லாக உள்ளது. :lol: அடுத்த பாகத்திற்காய் காத்து கொண்டு இருக்கோம். :lol:

சாத்திரி கதை நன்றாக போகின்றது. ஆனால் என்னமோ படம் பார்ப்பது போன்ற அனுபவம்...

அடுத்த பகுதி திங்கள் கிழமை வரும் தானே.

பாவம் சாத்ரி. அவா பெரிய இவா. தாலி கட்டினதன் பின்னும் குமாரை நினைச்சிட்டு முகத்தை கைக்குள் புதைக்கிறாவாம். :evil: :evil: :evil: முதலே ஒரு முடிவை எடுத்திருக்கலாம் தானே. பாவம் மாப்ளை. ஆமா சாத்ரி தாத்தா அவா என்ன முடிவு எடுத்தவா என எழுதுங்கோ சீக்கிரம் :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இண்டைக்கு திங்கள் கிழமை???? எங்க அடுத்த பகுதி??? :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி என்ன நித்திரையோ.. அடுத்த பகுதி எங்க..?? :evil: :Evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைக்கு செவ்வாய் கிழமை :roll:

நாளைக்கு மறு நாள் புதன் கிழமை :roll:

கதை வருகுது வருகுது வந்து கொண்டிருக்குது :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறுநாள் கலை எங்கள் பயண திட்டப்படியே எர்ணாங்குளம் என்கிற இடத்தை நோக்கி பயணமானோம் நாங்கள் பதிவு செய்திருந்ந படகு வீடு எங்களிற்காய் தயாராய் இரந்தது அதில் படகை செலுத்த ஒருவர் மற்றும் எங்களிற்கான சமையல் மற்றும் வேறு தேவைகளை கவனிக்க ஒருத்தர் என இரு பணியாளர்களும் இருந்தனர். ஒரு சிறிய வீட்டை போல ஒரு வரவேற்பறை ஒரு படுக்கையறை குளியலறை மலசலகூடம் என நேர்த்தியாய் வடிவமைக்கபட்டு சுத்தமாகவும் இருந்தது படகின் முன்பக்கம் சமைக்கும் பகுதியும் இருந்தது.

நாங்கள் படகு வீ்ட்டிற்கு சென்றபோது மதியமாகி விட்டிருந்த படியால் மதிய உணவை முடித்துகொண்டு படகு பயணம் ஆரம்பமானது. எங்கும் தண்ணீர் தேசமாய் வீடுகள் தேவாலயம் மசூதி கோவில் தபால்நிலையம் சந்தை என்று எல்லாமே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. வெளிநாடுகளில் வீட்டிற்கு ஒரு கார் இருப்பதை போல அங்கு வீட்டிற்கு ஒருகட்டுமரமோ அல்லது ஒரு தோணியோ இருந்தது.

அதைவிட பயணிகளை ஏற்றி இறக்க படகு சேவைகளும் இருந்தது. வேறொரு உலகத்தில் வாழ்வதை போன்ற ஒரு வித்தியாசமான அனுபவமாய் இருந்தாலும் அவற்றையெல்லாம் சரியாக இரசித்து பாக்கின்ற நிலைமையில் எங்கள் மனநிலை இருக்கவில்லை. நானும் அவளும் அன்று பெரிதாக எதுவுமே பேசி கொள்ளவில்லை. எல்லாவற்றையும் வெறித்து பார்த்த படி இருந்தோம்.

எங்களை பார்த்த படகு பணியாளனிற்கே ஏதோ வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும் உடல் நலம் சரியில்லையா? என கேட்டு முதல் படகு பயணம் என்றால் பலரிற்கு இப்படித்தான் தலை சுற்றும் என சொல்லி சில மருந்து குளிசைகளை தந்து விட்டு போனான்.மாலையானதும் படைகை ஒரு இடத்தில் நிறுத்தி அங்கிருந்த ஒரு தென்னை மரத்தில் கட்டி விட்டு எங்களிற்கு தேனீர் தந்து விட்டு ஒரு பணியாளன் வெளியே எங்கேயொ போய்விட மற்றவன் எங்களிற்கான இரவு உணவு என்ன வேணுமென கேட்டான் நான் அங்கிருந்த மெனு காட்டை பார்த்து விட்டு புட்டும் மீன்கறியும் என்றதும் அவன் சிரித்தபடி உணவு தயாரிக்கும் வேலையில் இற்ங்கினான்.

அருகிலே இன்னொரு படகில் இரண்டு இளம் பிரெஞ்சுகார காதல் சோடிகள்.கள்ளு அருந்தியபடி பாட்டு பாடி ஆடிகொண்டிருந்தனர். அவர்களிற்கு பிரெஞ்சு மொழியில் வணக்கம் சொன்னதும் அவர்களிற்கு மகிழ்ச்சி ஓ பிரெஞ்சு தெரியுமா?என்றனர் நானும் அவர்களிடம் நானும் பிரான்சில் இருந்துதான் வந்திருப்பதாக என்னை அறிமுக படுத்தி கொண்டதும் சிரிதவாறே தங்கள் மது கோப்பைகளை உயர்த்தி காட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு தொடர்ந்து அவர்கள் தங்கள் ஆட்டம் பாட்டத்தை தொடர்ந்தனர்.

அவர்களை பார்த்த எனக்கும் கள்ளு குடிக்கவேணும் போல நாஊறியது. உடனே அங்கிருந்த பணியாளிடம் போய் எனக்கு கள்ளு வாங்கி தர முடியுமா? என கேட்டேன்.தனது நண்பன் தங்களிற்கு கள்ளு வாங்கதான் போயிருப்பதாகவும் அவன் வந்ததும் மீண்டும் திருப்பி அனுப்பி வாங்கிவர சொல்கிறென் என்றான். மற்ற பணியாள் வந்ததும் அவன்தான் வாங்கி வந்த கள்ளை எனக்கு தந்து விட்டு என்னிடம் பணம் வாங்கி கொண்டு மீண்டும் போய் விட்டான்.

ஊரில் உள்ளதை போல பனைமரகள்ளு அல்ல இது தென்னை மரத்து கள்ளுதான் அதை ஒரு கிளாசில் ஊற்றியபடி நிதர்சினியை பார்த்தேன். அவள் எவ்வித உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் ஓடிகொண்டிருந்த தண்ணிரையெ வெறித்தபடி இருந்தாள்.அவளிடம் எனக்கு மதுவருந்தும் பழக்கம் இருக்கு ஆனால் நெடுகலும் குடிப்பதில்லை சிலர் கவலைக்கு குடிக்கிறன் என்று குடிப்பினம் சிலர் சந்தோசத்திற்கு குடிக்கிறன் என்பினம் . ஆனால் எனக்கு இரண்டும் இல்லை கள்ளை பாத்ததும் ஏதோ குடிக்கவேணும் போல இருந்தது அதுதான். மற்றபடி பயபிடாதை நான் ஒண்டும் குடிச்சிட்டு கத்தி கலாட்டா பண்ணமாட்டன் அப்பிடியே படுத்து நித்திரையாயிடுவன் என்று சிரித்தபடி சொல்ல.

அவளும் எனக்கு பிரச்னையில்லை வீட்டிலை அப்பாவும் அப்பிடித்தான் அதாலை எனக்கு பயமில்லையென்றாள். இரவு புட்டுடன் மீன்குழம்பு இரண்டு வேறுமரக்கறியென நல்ல ருசியான சாப்பாடு நன்றாக சாப்பிட்டேன். அவளும் ருசித்து சாப்பிட்டாள். உணவு முடிந்ததும் இரண்டு பணியாளர்களும் தாங்கள் அருகில் உள்ள ஒரு குடிசையை காட்டி தாங்கள் அங்குதான் இரவு தங்குவோம் என்றும் ஏதாவது தேவையாயின் தங்களை அழைக்கும் படியும் கூறிவிட்டு சென்று விட்டனர்.

அருகில் பாட்டு பாடிகும்மாளமிட்டு கொண்டிருந்தவர்களின் சத்தமும் அடங்கி போயிருந்தது. எங்கள் படகில் லாந்தர் விளக்கு மெல்லிய வெளிச்சத்தை தந்து கொண்டிருந்தது.இடையிடையே படகுகள் போகும் இயந்திர சத்தமும் தண்ணிரின் சல சல சத்தத்தை தவிர எங்கும் ஒரே அமைதி மெல்லிய நிலவொளியில் ஒரு இரம்மியமான ஒரு சூழலில் நானும் தர்சினியும் மட்டும் அந்தபடகில். என்ன பதில் சொல்ல பொகிறாள் என்று எதிர்பார்த்தபடிநானும் எனக்கு என்னபதில் சொல்வது என்று அவளும் தண்ணீரில் எங்கள் படகை போலவே தவித்தபடி மொனமாய் கழிந்து கொண்டிருந்த மணித்தியாலங்களளை ஒரு முடிவுக்கு கொண்ட வருவதற்காக அந்த மெளனத்தை உடைத்து தர்சினியடம் மெல்லமாய் கேட்டேன் இன்று பகல் முழுக்க யோசிச்சு இருப்பீர் எண்ட நினைக்கிறன்.

என்ன முடிவு எடுத்தனிர் எண்டு சொன்னா இனி நாழையிலை இருந்து அடுத்த நடவடிக்கைகளை விரைவா செய்யலாம் என்றேன். ம்.... யோசிச்சனான் பலதரம் யோசிச்சும் எனக்கு ஒரு முடிவுதான் என்ரை மனதிற்கு தோன்றிது என்ரை முடிவாலை தயவு செய்து என்னை கோவிக்காததீங்கோ. என்னாலை குமாரை மறக்கிறது எண்டிறது முடியாது அதேநெரம் குமாரை நினைத்தகொண்டு உங்களொடை வாழவும் என்னாலை ஏலாது.

உங்களொடை சந்தோசமா சிரிச்சு கதைக்ககூட என்னாலை முடியெல்லை எல்லாத்துக்கும் மேலாலை எனக்கு பக்கத்திலை நீங்கள் வந்தாலே எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிது தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க என்னாலை உங்களிற்கு ஒரு நல்ல மனைவியா கடைசிவரை வாழ முடியாது என்றாள். எல்லாவற்றையும் அமைதியாய் கேட்டு கொண்டிருந்த நான் நல்லது நான் எதிர்பார்த்த முடிவுதான் அனால் அதை துணிந்து விரைவாய் எடுத்ததற்கு பாராட்டதான் வேணும் அனால் இதே துணிவையும் முடிவையும் திருமணத்திற்கு முதலே நீ காட்டியிருந்தால் பல பிரச்சனைகள் சுலபமாய் முடிந்திருக்கும்.

சரி இனி நீ நடந்தது எல்லாத்தையும் குமாருக்கு சொல்லி விழங்கபடுத்தினால் குமார் மீண்டும் உன்னொடை பிரச்சனையில்லாமல் சேந்து வாழுவான் எண்டு நினைக்கிறியா??என்றென். குமார் நான் என்ன சொன்னாலும் கேட்பார் ஆனால் கலியாணம் எண்டு ஒண்டு நடந்து ஆக்களிற்கு முன்னாலை சடங்கு சம்பிரதாயம் எல்லாம் செய்து தாலியும் கட்டியாச்சு இனி நான் போய் குமாரொடை செந்து வாழுறதெண்டது நடக்ககூடிய காரியமில்லை.முதல் ஒருதருக்கும் தெரியாமல் செய்த காதலுக்கே இத்தனை பிரச்சனை நடந்தது இது ஊருக்கு தெரிய கலியாணம் வேறை செய்திட்டு இனி அப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு நான் நினைக்கேல்லை அதாலை நான் பேசாமல் காலம் முழுதும் இப்பிடியே இருந்திட்டு போறன்

நீங்கள் வெறையொரு நல்ல பொம்பிழையா பாத்து கலியாணத்தை செய்து சந்தோசமா இருங்கொ என்றாள். நான்அவளை பார்த்து ஏளனமாய் சிரித்தபடியே இங்கை பார் என்ரை கலியாணத்தை பற்றி உன்னட்டை நான் அறிவுரை கேக்கேல்லை உனக்கு குமார் திரும்ப உன்னொடை சேர்ந்து வாழும் எண்ணட நம்பிக்கையிருந்தா சரி மற்றபடி மிச்ச அலுவலை நான் பாக்கிறன் உன்ரை அம்மா அப்பாவை சம்மதிக்க வைக்கிறது என்ரை பொறுப்பு மற்றபடி ஊர் உறவை பற்றி கவலை படாதை அவையள் இப்ப எங்களையெ மறந்திருப்பினம்.

மற்றபடி சடங்கு சம்பிரதாயம் எல்லாம் மனிசரை ஒரு நல்வழிப்படுத்தி அவையின்ரை வாழ்க்கைமுறையை ஒழங்கா அமைக்கவும் அதைவிட இந்த கலியாண சம்பிரதாயம் எண்டதே அந்தகாலத்திலை சுயநலம்பிடிச்ச பிராமணராலை உருவாக்கினதை இண்டைக்கும் நாங்கள் என் செய்யிறம் எண்டு தெரியாமலேயெ செய்தகொண்டிருக்கிறம். அதாலை வெறும் சம்பிரதாயங்களிற்காக உணர்வுகளையும் உறவுகளையும் முறிச்சு கொண்டு வாழுறதிலை எனக்க நம்பிக்கை இல்லை

எங்கடை வாழ்க்கைக்காக வேணுமெண்டால் முந்தின ஆக்கள் எப்பிடி தங்டை வசதிக்காக சில சம்பிரதாயங்களை உருவாக்கிச்சினமோ அதேபோல இப்ப நாங்களும் எங்கடை வசதிக்காக சில சம்பிரதாயங்களை உருவாக்கும் அதாலை நீயெ நான் கட்டின தாலியை கழட்டிடு நாங்கள் நாளைக்கே சென்னைக்கு போய் உடனடியா விவாக ரத்திற்கு எற்பாடு பண்ணுவம் என்றதும் சற்று அதிர்ந்தவளாய் என்னை பார்த்தாள் நிதர்சினி என்ன இப்பிடி சொல்லிட்டீங்கள் என்றாள் .

பின்னை என்ன செய்ய போறாய் காதலிச்ச குற்றத்திற்காக அங்கை ஒருதனை விசரனாய் அலையவிட்டிட்டு தாலி கட்டின குற்றத்திறகாய் நீ இப்பிடியெ இருந்து கொண்டு இரண்டுக்குமே சம்பந்தம் இல்லாமல் நானும் நடுவிலை நிண்டு அல்லாட ஏலாது அதலை சில முடிவுகள் கஸ்ரமாய் தான் இருக்கும் ஆனால் கட்டாயம் எடுக்கதான் வேணும் சரி கட்டினமாதிரி நானெ தாலியை களட்டுறன் என்றபடி அவளை நெருங்கினேன். :arrow: :wink:

ஆகா தாத்தா நீங்கள் கதை எழுதும் விதமே கதையைப்படிக்க தோன்றுகிறது நன்றாக மெகா தொடர் போன்று போகின்றது ஆனால் மற்றப் பாகத்தையும் படிக்க ஆவலுடன் இருக்கின்றோம் வெகு விரைவில் எதிர்பார்கின்றோம். :wink: :roll:

சாத்திரி முடிவு எப்ப வரும்?

நிதர்சினி இப்போ எங்கை?

சந்தோசமாக இருக்கின்றவா?

அறிய ஆவலாய் உள்ளோம். அடுத்த முறை வேளைக்கு போடுங்கள்.

பின்னை என்ன செய்ய போறாய் காதலிச்ச குற்றத்திற்காக அங்கை ஒருதனை விசரனாய் அலையவிட்டிட்டு தாலி கட்டின குற்றத்திறகாய் நீ இப்பிடியெ இருந்து கொண்டு இரண்டுக்குமே சம்பந்தம் இல்லாமல் நானும் நடுவிலை நிண்டு அல்லாட ஏலாது

:P :P :P :P :P :P

நல்லாக போகுது கதை. ஆமா ஏன் தாத்தா தொடரும் என போடவில்லை? :roll: :roll: . அடுத்த பாகத்தை எதிர்பார்த்தபடி நிலா :P :arrow:

கதையை நன்றாக நகர்த்தி செல்கிறீர்கள்... தொடர்ந்தும் படிக்க ஆவல்.

கதை நல்லாயிருக்கு அங்கிள் :P

என்ன இங்க பாராட்டு எழுதும் பலர் மெகா தொடர் போல எண்டு எழுதுகினம் ஆனால் மெகா தொடரில இந்த கதை மாதிரி சுவாரசியம் இருக்காதே :wink:

கதையை சோகமாக முடிக்காதீங்க அங்கிள் ப்ளீஸ் ஏனெண்டா நான் சோக கதையோ படமோ பாக்கிறதில்லை அழுகை வரும் எண்டு தான் :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.