Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

" இப்பொழுது நாங்கள் இல்லை...! உங்களுக்குத் தொல்லையில்லை...!!"

Featured Replies

" இப்பொழுது நாங்கள் இல்லை...! உங்களுக்குத் தொல்லையில்லை...!!"

1.jpg

செத்துப்போ என்று தள்ளிவிடப்பட்ட

தரித்திரங்களின் குழந்தைகள்!

இத்தனை நாளும் பக்கமிருந்து

அல்லல் கொடுத்த தொல்லைகள்!

சேர்த்துவைத்த செல்வங்களை

வாரிச் சுருட்டிய பிடுங்கிகள்!

செங்குருதி தெளித்து வல்லூறுகளை

வரவழைத்த வல்லூறுகள்!

வீணான ஒன்றுக்காய்

வில்லாடிய வீணர்கள்!

மண்ணோடு மண்ணாக

குடியழித்த கொடூரர்கள்!

தீவிரவாதிகளென தீர்ப்பெழுதப்பட்ட

தீராத போர்வெறி வியாதிகள்!

முப்பதாண்டு காலமாய்

முன்னேறவிடாத தடைக்கற்கள்!

அப்பாவிப் பிஞ்சுகளை

பலிகொடுத்த பாவிகள்!

சாதிப்போம் என்று சொல்லி

சாகடித்த சனியன்கள்!

இப்படியெல்லாம் எங்களைத் திட்ட,

நிறைய வார்த்தைகள் இருக்கும் உங்களிடம்!!!

இப்பொழுது நாங்கள் இல்லை...!

எங்களுக்கான எதுவும் இல்லை...!

இப்பொழுது… நீங்கள் எதிர்பார்த்த

அத்தனையும் உங்களுக்குக் கிடைக்கிறதா???

நிம்மதியான ஒற்றை தேசத்தில்…

சுதந்திரக்காற்றின் வாசத்தில்…

மனமகிழும் வாழ்வு அமைகிறதா???

இப்பொழுது மகிழ்ச்சிதானே!?

இப்பொழுது நாங்கள் இல்லை...!

உங்களுக்குத் தொல்லையில்லை...!!

உங்களுக்காய் செய்ததெல்லாம்…

எங்களோடு செத்துப் போச்சு!

இனிமேலும் வேண்டாம் எமக்கு,

அப்படி வாழும் உயிர்மூச்சு!

உங்களுக்கானதெல்லாம்

உங்கள் கைகளில்தான்!

எங்கள் புதைகுழிகளிலும்...

எதிரியின் சிறைச்சாலைகளிலும்...

அவற்றைத் தேடாதீர்கள்!

எங்களின் புதைகுழிகளைத் தோண்டியெடுத்து,

உக்கிப்போன காதுகளுக்குள் திட்டுவதற்கேனும்…

எம் நிம்மதியான நித்திரையை குலைத்துவிடாதீர்கள்!

நிம்மதியாய்த் தூங்குகிறோம்...!

நிம்மதியாய் இருங்கள்!!

இப்பொழுது நாங்கள் இல்லை...!

உங்களுக்குத் தொல்லையில்லை...!!

நன்றி : கவிதையின் கவிதைகள்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இதில் நிறையக்கருத்து முரண்பாடுகள் இருக்கிறது.

நீங்கள் பதிலளிக்கும் போது கேள்வி கேட்குறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாயால் திட்ட முடியாததுக்கு வார்த்தைகளால் வாரி இறைத்திருக்கிறீர்கள்..

  • தொடங்கியவர்

எனக்கு இதில் நிறையக்கருத்து முரண்பாடுகள் இருக்கிறது.

நீங்கள் பதிலளிக்கும் போது கேள்வி கேட்குறேன்.

கவிதைகள் என்றாலே முரண்பாடுகள் தானே ?? இந்தக் கவிதையை இணைத்தவன் என்கின்ற முறையிலும் , இந்தக்கவிதையிலிருந்து நான் என்னத்தை விளங்கிக் கொண்டேன் என்றுவகையிலும் , உங்கள் முரண்களுக்கு பதில்தரவேண்டிய கடமைப்பாடு ( கள நாகரீகம் ) என்ற ஒன்று எனக்கு உண்டு . எனவே உங்களுக்கு ஏற்பட்ட முரண்களை வையுங்கள் . எனது சிற்றறிவுக்கு எட்டியவகையில் பதில் தருகின்றேன் . உங்கள் வருகைக்கு நன்றிகள் ஜீவா .

எங்களின் புதைகுழிகளைத் தோண்டியெடுத்து,

உக்கிப்போன காதுகளுக்குள் திட்டுவதற்கேனும்…

எங்களுக்காக புதைகுழிகூட இல்லையே

அதைக்கூட நாங்கள் இழந்துவிட்டோம்.

உங்களுக்காக எல்லாவற்றையும் இழந்தோம்.

திட்டுங்கள்

எங்களுக்காக கேட்பதற்கே யாரும் இல்லையே

திட்டுங்கள்.

எங்களுக்காக கேட்பதற்கே யாரும் இல்லையே...

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிக்கண் மூடியதும்,

குற்றம் கூறும் நக்கீரர்கள்!

கொற்றவளின் கூந்தல் மணந்தா,,

நக்கீரன் பதில் கூறினான்?

பொற்றாமரை வாவியின்,

புனித நீரவனைச் சுட்டெரிக்கட்டும்!!

புற்றழிந்து போகும் போது,,

சிற்றெறும்புகளும் போராடும்!

  • தொடங்கியவர்

வாயால் திட்ட முடியாததுக்கு வார்த்தைகளால் வாரி இறைத்திருக்கிறீர்கள்..

இதை நான் ஓர் ஆன்மாவின் குரலாக விளங்கிக் கொள்கின்றேன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் யாயினி .

வார்த்தைகளை உடைத்துப் போட்டு 'கவிதையாக' தெரிய வைத்து இருக்கின்றீர்கள் . உடைத்துப் போட்ட வரிகளை சேர்த்து எழுதும் போது, வசனங்கள் மட்டுமே தெரிகின்றது.

உதாரணத்துக்கு,

இப்படியெல்லாம் எங்களைத் திட்ட நிறைய வார்த்தைகள் இருக்கும் உங்களிடம். இப்பொழுது நாங்கள் இல்லை, எங்களுக்கான எதுவும் இல்லை. இப்பொழுது நீங்கள் எதிர்பார்த்த அத்தனையும் உங்களுக்குக் கிடைக்கிறதா?

என அமையும் வசனங்களை இடைக்கிடை உடைத்து எழுதி இருக்கின்றீர்கள்.

புதுக்கவிதைகக்கும் கவிதை மொழி ஒன்று இருக்குத் தானே? இன்னும் கொஞ்சம் அதில் கவனம் செலுத்தினால் நல்ல கவிதையாக மலரும் இது.

கவிதையிடம் இருந்து இரண்டாவது தடவையாக வித்தியாசமான கவிதை கிடத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி கவிதை!!

  • தொடங்கியவர்

எங்களின் புதைகுழிகளைத் தோண்டியெடுத்து,

உக்கிப்போன காதுகளுக்குள் திட்டுவதற்கேனும்…

எங்களுக்காக புதைகுழிகூட இல்லையே

அதைக்கூட நாங்கள் இழந்துவிட்டோம்.

உங்களுக்காக எல்லாவற்றையும் இழந்தோம்.

திட்டுங்கள்

எங்களுக்காக கேட்பதற்கே யாரும் இல்லையே

திட்டுங்கள்.

எங்களுக்காக கேட்பதற்கே யாரும் இல்லையே...

நிஜங்கள் என்றுமே வலியைத் தருவன செம்பகன் . வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் .

இதை நான் ஓர் ஆன்மாவின் குரலாக விளங்கிக் கொள்கின்றேன்

ஆன்மாவின் சாபம்.….

கந்தகத்தூள் வாகனத்துடன்

கலகலப்பாய் சென்றவரின்

தூல உடம்பு சுக்கு நூறானது.

விடுதலைத் தாகத்தால்

வீறுகொண்டெழுந்து

வெளியேறியது ஆன்மா

காடு மேடெல்லாம் கடந்து

களிப்புடன் மிதந்தது.

எம்; மக்களைக் கொன்றவரை

நான் கொன்றேன்.

என் இனம் விடுதலை பெறும் வரை

நான் சாந்தியடையேன் என

சபதம் எடுத்துச் சத்தியம் செய்தது.

ராசபக்சாவின் இரத்தப் பிசாசுகள்

முள்ளி வாய்க்காலை முற்றுக்கையிட்டு

தமிழரின் இரத்தத்தால் தனக்குத் தானே

அபிசேகம் செய்த வேளை

பதபதைத்துத் தவித்து

பற்பல ஆன்மாக்கள் கிழம்பின.

எங்கள் தவிப்புப்போல், எங்களை

அழித்தவன் தவிப்பான்; இதுதான் நியதி

எனச் சாபம் போட்டு,

துயிலும் இல்லத்தை

சுற்றிய ஆன்மாக்களைக்

கட்டித் தழுவி தங்கள்

தவிப்பைக் கொட்டியே தீர்த்தன.

.

அமைதியிழந்து அனைத்து ஆன்மாக்களும்

அன்னிய தேசத்துக்குள் அமைதியாய் நுழைந்தன

வீரமறவர் புகழைக் கூறி

மாவீரர் மகிமையை மறக்காமல் ஓதி

தேசத்தின் விடுதலையே எங்கள் சேவை

என்றோர் இல்லம் கண்டு மகிழ்ந்தன.

பணத்தைச் சேர்த்து தன் கணக்கில் போட்டு

பலசரக்கு வியாபாரக் கடைகள் நடத்தி

மாதமொரு மகிழுந்தில் சுற்றித் திரிந்து

மாளிகை வேண்டி மனைவிக்கு அளித்து

தேசியம் பேசிய செயற்பாட்டாளரைக் கண்டு

சஞ்சலப்படன.

பாவிகளே!

எங்கள் பெயரால் பணத்தைச் சேர்த்து

உங்கள் நலனைக் காப்பது முறையா?

சுதந்திரம் என்று மக்களுக்குக் கூறி

சுரண்டுகிறீர்;களே தேசியத் சொத்தை

மாவீரர் சொத்து மரணத்தில் தள்ளும்

மறைக்க நினைத்தால் மனதை உறுத்தும்.

எங்கள் பெயரால் சேர்த்த பணத்தால்

உந்தன் வாழ்வை உயர்த்த நினைத்தால்

ஊனமுற்று அழுந்திச் சாவாய்.

போராளி பெயரால் சேர்த்த பணத்தை

பொதுக்க நினைத்தால் பொல்லாங்;கு நேரும்.

ஊரார் சொத்தை ஒதுக்க எண்ணினால்

உந்தன் சந்ததி ஊனமாய் பிறக்கும்

இருக்கும் வரைக்கும் வசதியாய் வாழ்வோம்

என்று நீ எண்ணினால் தப்பு.

உனக்குப் பின்னால் ஆயிரங் கண்கள்

உற்றுப்;பார்த்து உண்மைக் கதை சொல்லும்

சந்ததி சந்ததியாய் அக்கதை செல்ல

சரித்திரத்தில் நீயும் ஒரு துரோகி

என்பது புரியும்

காசைப் பெருக்குவதே கருத்தாக் கொண்டு

கட்டமைப்பெனக் கதைகள் அளந்து

செயற்பட்டாளரெனச் செப்பித் திரிந்து

செய்த ஊழலை மூடி மறைக்க

புண்பட்டு வந்;த போராளிகளைப்

போக்கிரிகள் என்று புலம்பித் திரிந்தாய்

எட்டி உதைப்பேன் என ஏளனம் செய்து

எதிரிகளைவிடக் கேவலமாய் நடந்தாய்.

விடுதலை என்பதை வியாபாரமாக்கி –எம்

வீரரின் செயலுக்கு அவமானம் செய்தாய்

பதவி பகட்டைக் குறியாய் கொண்டு

பாவனைசெய்து நீ நடிப்பnதெல்லாம்

பாமர மக்களும் புரிந்து கொண்டார்.

உந்தன் தேசியமும் இதுதான் என்ற .

உண்மையும் மக்களுக்கு விரைவில் புரியும்.

வேடங்கள் எல்லாம் கலையும்போது

வேதனையோடு நீ நிலத்திலே புரழ்வாய்

எங்கள் ஈகையை துச்சமாக் கருதிய நீ

என்றும் உலகில் தரித்திரப் படுவாய்

உடலை அழித்து ஆவியாய் அலையும் நாம்

உங்களைச் சும்மா விடமாட்டோம் கேளீர்;!

உயிருடன் இருந்தும் நீ நடைப்பிணம் ஆவீர்.

உயிரை விட்டும் நாங்கள் வாழ்கிறோம் பாரீர்.

உங்களைப்போல் உலகினில் உள்ளோர்

ஊமைச் சனங்களாய் அலைவதைக் காண்பீர்!

  • தொடங்கியவர்

நெற்றிக்கண் மூடியதும்,

குற்றம் கூறும் நக்கீரர்கள்!

கொற்றவளின் கூந்தல் மணந்தா,,

நக்கீரன் பதில் கூறினான்?

பொற்றாமரை வாவியின்,

புனித நீரவனைச் சுட்டெரிக்கட்டும்!!

புற்றழிந்து போகும் போது,,

சிற்றெறும்புகளும் போராடும்!

குறுங்கவிதைக்கு மிக்க நன்றிகள் புங்கையூரான் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

வார்த்தைகளை உடைத்துப் போட்டு 'கவிதையாக' தெரிய வைத்து இருக்கின்றீர்கள் . உடைத்துப் போட்ட வரிகளை சேர்த்து எழுதும் போது, வசனங்கள் மட்டுமே தெரிகின்றது.

உதாரணத்துக்கு,

இப்படியெல்லாம் எங்களைத் திட்ட நிறைய வார்த்தைகள் இருக்கும் உங்களிடம். இப்பொழுது நாங்கள் இல்லை, எங்களுக்கான எதுவும் இல்லை. இப்பொழுது நீங்கள் எதிர்பார்த்த அத்தனையும் உங்களுக்குக் கிடைக்கிறதா?

என அமையும் வசனங்களை இடைக்கிடை உடைத்து எழுதி இருக்கின்றீர்கள்.

புதுக்கவிதைகக்கும் கவிதை மொழி ஒன்று இருக்குத் தானே? இன்னும் கொஞ்சம் அதில் கவனம் செலுத்தினால் நல்ல கவிதையாக மலரும் இது.

உங்கள் கருத்துக்களை வருங்காலத்தில் கவனத்தில் எடுக்கின்றேன் . மேலும் கவிதை என்னும் வடிவத்தில் சந்தங்கள் முக்கியமானவையா ? அல்லது வெறும் அடுக்குமொழிகள் போதுமானதா :) :) ??

  • தொடங்கியவர்

கவிதையிடம் இருந்து இரண்டாவது தடவையாக வித்தியாசமான கவிதை கிடத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி கவிதை!!

வித்தியாசமாக விதம்விதமாக படைப்பதே(வரே) கவிதை .நன்றி அலைமகள் உங்கள் கவிதைகளுக்கு .

  • தொடங்கியவர்

இதை நான் ஓர் ஆன்மாவின் குரலாக விளங்கிக் கொள்கின்றேன்

ஆன்மாவின் சாபம்.….

கந்தகத்தூள் வாகனத்துடன்

கலகலப்பாய் சென்றவரின்

தூல உடம்பு சுக்கு நூறானது.

விடுதலைத் தாகத்தால்

வீறுகொண்டெழுந்து

வெளியேறியது ஆன்மா

காடு மேடெல்லாம் கடந்து

களிப்புடன் மிதந்தது.

எம்; மக்களைக் கொன்றவரை

நான் கொன்றேன்.

என் இனம் விடுதலை பெறும் வரை

நான் சாந்தியடையேன் என

சபதம் எடுத்துச் சத்தியம் செய்தது.

ராசபக்சாவின் இரத்தப் பிசாசுகள்

முள்ளி வாய்க்காலை முற்றுக்கையிட்டு

தமிழரின் இரத்தத்தால் தனக்குத் தானே

அபிசேகம் செய்த வேளை

பதபதைத்துத் தவித்து

பற்பல ஆன்மாக்கள் கிழம்பின.

எங்கள் தவிப்புப்போல், எங்களை

அழித்தவன் தவிப்பான்; இதுதான் நியதி

எனச் சாபம் போட்டு,

துயிலும் இல்லத்தை

சுற்றிய ஆன்மாக்களைக்

கட்டித் தழுவி தங்கள்

தவிப்பைக் கொட்டியே தீர்த்தன.

.

அமைதியிழந்து அனைத்து ஆன்மாக்களும்

அன்னிய தேசத்துக்குள் அமைதியாய் நுழைந்தன

வீரமறவர் புகழைக் கூறி

மாவீரர் மகிமையை மறக்காமல் ஓதி

தேசத்தின் விடுதலையே எங்கள் சேவை

என்றோர் இல்லம் கண்டு மகிழ்ந்தன.

பணத்தைச் சேர்த்து தன் கணக்கில் போட்டு

பலசரக்கு வியாபாரக் கடைகள் நடத்தி

மாதமொரு மகிழுந்தில் சுற்றித் திரிந்து

மாளிகை வேண்டி மனைவிக்கு அளித்து

தேசியம் பேசிய செயற்பாட்டாளரைக் கண்டு

சஞ்சலப்படன.

பாவிகளே!

எங்கள் பெயரால் பணத்தைச் சேர்த்து

உங்கள் நலனைக் காப்பது முறையா?

சுதந்திரம் என்று மக்களுக்குக் கூறி

சுரண்டுகிறீர்;களே தேசியத் சொத்தை

மாவீரர் சொத்து மரணத்தில் தள்ளும்

மறைக்க நினைத்தால் மனதை உறுத்தும்.

எங்கள் பெயரால் சேர்த்த பணத்தால்

உந்தன் வாழ்வை உயர்த்த நினைத்தால்

ஊனமுற்று அழுந்திச் சாவாய்.

போராளி பெயரால் சேர்த்த பணத்தை

பொதுக்க நினைத்தால் பொல்லாங்;கு நேரும்.

ஊரார் சொத்தை ஒதுக்க எண்ணினால்

உந்தன் சந்ததி ஊனமாய் பிறக்கும்

இருக்கும் வரைக்கும் வசதியாய் வாழ்வோம்

என்று நீ எண்ணினால் தப்பு.

உனக்குப் பின்னால் ஆயிரங் கண்கள்

உற்றுப்;பார்த்து உண்மைக் கதை சொல்லும்

சந்ததி சந்ததியாய் அக்கதை செல்ல

சரித்திரத்தில் நீயும் ஒரு துரோகி

என்பது புரியும்

காசைப் பெருக்குவதே கருத்தாக் கொண்டு

கட்டமைப்பெனக் கதைகள் அளந்து

செயற்பட்டாளரெனச் செப்பித் திரிந்து

செய்த ஊழலை மூடி மறைக்க

புண்பட்டு வந்;த போராளிகளைப்

போக்கிரிகள் என்று புலம்பித் திரிந்தாய்

எட்டி உதைப்பேன் என ஏளனம் செய்து

எதிரிகளைவிடக் கேவலமாய் நடந்தாய்.

விடுதலை என்பதை வியாபாரமாக்கி –எம்

வீரரின் செயலுக்கு அவமானம் செய்தாய்

பதவி பகட்டைக் குறியாய் கொண்டு

பாவனைசெய்து நீ நடிப்பnதெல்லாம்

பாமர மக்களும் புரிந்து கொண்டார்.

உந்தன் தேசியமும் இதுதான் என்ற .

உண்மையும் மக்களுக்கு விரைவில் புரியும்.

வேடங்கள் எல்லாம் கலையும்போது

வேதனையோடு நீ நிலத்திலே புரழ்வாய்

எங்கள் ஈகையை துச்சமாக் கருதிய நீ

என்றும் உலகில் தரித்திரப் படுவாய்

உடலை அழித்து ஆவியாய் அலையும் நாம்

உங்களைச் சும்மா விடமாட்டோம் கேளீர்;!

உயிருடன் இருந்தும் நீ நடைப்பிணம் ஆவீர்.

உயிரை விட்டும் நாங்கள் வாழ்கிறோம் பாரீர்.

உங்களைப்போல் உலகினில் உள்ளோர்

ஊமைச் சனங்களாய் அலைவதைக் காண்பீர்!

உங்கள் கவித்திறமை என்றுமே பாராட்டப்படவேடியது செம்பகன் . அருமையான நெடுங்கவிதையைத் தந்ததிற்கு மிகவும் நன்றிகள் .

  • தொடங்கியவர்

எனது அருமை தம்பி கவிதையின் இந்தக்கவிதை ஒருபேப்பர் 179 ஆவது இதழில் மீள் பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சிடன் தெரிவித்துக்கொள்கின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.