Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!

Featured Replies

தமிழீழத்தைக் கைவிடும்படி கோரிக்கை விடுவதற்கான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்பட்டதா? அதற்கான தேவையுண்டா? என்பவைகள் முதலில் தெளிவில்லாமல் இருக்கிறது.

மக்கள் போராட்டம் என்பது கருத்தியலின் அடிப்படையில் எழுவது. வீதிக்குவருதல் அதன் வெளிப்பாடு. எதற்குத் தமிழீழப் போராட்டம் என்ற கேள்வியில் எம்மவரிடமே சரியான பதிலும் விளக்கமும் இல்லை. ஆளாளுக்கு எதையெதையோ தமிழீழம் என்று சொல்லிவிடலாம்.

சிங்களம் தமிழ் என்ற அடிப்படைதான் இப்போதைய நிலையில் தமிழீழம் பற்றிய முன்னெடுப்புகளுக்குத் துணையாய் நிற்கின்றன.

பலஸ்தீனம் பற்றிய பெரும் வார்த்தைகளெல்லாம் பயன்படுத்தப் படுகிறது. அடேங்கப்பா, இழப்புகளுக்குத் தயாராகாதவரையில் எந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட முடியாது.

  • Replies 167
  • Views 7.8k
  • Created
  • Last Reply

ஆம் இறைவன், இழப்புக்களுக்கு தயாராகமல் எந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட முடியாதது.

நான் சொல்ல வருவது பெரும்பான்மையான தமிழர்கள் இழப்புக்கு தயாராக இல்லை என்பதைத்தான். இழப்புக்கு தயராக இல்லாதவன் வீதிக்கு வரமாட்டான்.

மக்கள் போராட்டம் என்பது ஈழத்தில் இன்றைக்கு இல்லை. அது புலிகளின் காலத்திலும் இருக்கவில்லை.

நான் மக்கள் போராட்டத்திற்கு உதாரணமாக பாலஸ்தீனத்தை சொன்னேன். வேறு உதாரணங்களும் இருக்கின்றன. பாலஸ்தீனத்திற்கும் ஈழத்திற்கும் நிறைய வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மக்கள் போராட்டத்திற்கு உதாரணமாக அது சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே பதிலுக்கு ஈழத்திலும் மக்கள் போராட்டம்தான் இருக்கிறது என்று வாதிடுவதுதான் அர்த்தம் மிக்கதாக இருக்கும்.

ஆனால் இங்கே சிலர் உதாரணம் எதற்காக சுட்டிக் காட்டப்படுகிறது என்பதை விளங்காது, இரண்டு போராட்டத்தையும் ஒப்பிட்டு அதில் உள்ள வேறுபாடுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் ஈழத்தில் மக்கள் போராட்டம் நடக்கவில்லை என்பதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

மக்கள் போராட்டம் இல்லை என்பதை சுட்டுவதற்காக போராளிகளின் இன்றைய கைவிடப்பட்ட நிலையையும் உதாரணத்திற்கு எடுத்திருந்தேன். அதைப் பற்றி பேசுவார் இங்கே யாரும் இல்லை.

விடுவிக்கப்பட்ட போராளிகளைப் பராமரிப்பதற்கு யாழ்ப்பாணத்தின் இன்றைய பொருள் வளமே போதும். இதற்காக நேசக்கரம், நம்பிக்கை ஒளி போன்றன தேவையே இல்லை. ஆனால் தேவைப்படுகிறது. காரணம் எங்களின் பிள்ளைகளையே விசாரணை வரும் என்னும் அச்சம் காரணமாக வீதியில் விட்டிருக்கிறோம்.

நாங்கள் எல்லாம் மக்கள் போராட்டம் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். ஆயினும் கவலை விடுக. தமிழீழம் நூறு ஆண்டுகள் கழித்து உருவாகும். சிங்களவர்களின் சம்மதத்தோடு அது நடக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனுக்கு 2006-2008 வரை யாழ்பாணத்தில் நடந்தது தெரியாதா? அல்லது ஏதாவது அம்னீசியா பிரச்சனையா?

தோரணம் கட்டினவன், பொங்குதமிழில கொடி பிடிச்சவன், பிடிபட்டவனின் செல்லில் இருந்தவன் ... இப்படி எத்தனை பேரை சிங்களமும் ஒட்டுக் குழுக்களும் போட்டுத் தள்ளியது தெரியாதா? கிட்டத்தட்ட 5000 - 10000 பேர் வரை இண்டை வரைக்கும் காணாப் பட்டியலில்.

2002 - 2005 வரை யாழில் இருந்த எழுச்சியை மறந்து விட்டீர்களா? உதாரணத்துக்கு மிரட்ட வந்த ஆமியின் துவக்கை கையால் பிடித்த சம்பவம். 100% சனத்தாலும் எழுச்சியை முன்னெட்டுக்க துணிச்சல் ஆற்றல் இருக்காது. ஒரு 5% க்கும் குறைவானவர்களே அதை முன்னெடுப்பார்கள். மிச்சப் பேர் பின்னால் வருவார்கள். அப்படி முன்னெடுக்க கூடியவர்களையெல்லாம் எதிரி தேடித் தேடி போட்டு தள்ளி முடித்து விட்ட நிலையில் சாதாரண சனத்தால் என்ன செய்ய முடியும்?

இல்லை கேட்கிறேன் பாலஸ்தீனம் கீலஸ்தீனம் என்று இவ்வளவு பீற்றும் உங்களிடம் கேட்கிறேன். இரவு வெள்ளை வான் வீடு தேடி வரும் என்றால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? மனச்சாட்சியோடு பதில் சொலுங்கள்.

காட்டாறு அவர்களை மீண்டும் களத்தில் காண்பதில் பெருமகிழ்ச்சி :)

காட்டாறு,

வெள்ளைவான் தேடி வரும் என்றால் நான் ஜேர்மனியிலேயே தொடர்ந்தும் இருப்பேன். இதைத்தான் நானும் சொல்கிறேன். பெரும்பான்மையானவர்கள் சாதரண மனிதர்தகள். நடுத்தர வர்க்கத் தமிழர்கள். நான் உட்பட அவர்களால் அடி எல்லாம் வாங்கிப் போராட முடியாது.

முன்னர் புலிகள் போராடிய பொழுது எம்மால் முடிந்தது ஆதரவும், பரப்புரையும், போராட்டத்திற்கான நிதி வழங்கலும் மாத்திரமே.

இனிமேல் வேறு யாரையும் சாகச் சொல்லி நான் கேட்க விரும்பவில்லை. அதனால்தான் தமிழீழம் தவிர்ந்த மாற்று வழிகளுக்கும் நான் தயராக இருக்கிறேன்.

ஆம் இறைவன், இழப்புக்களுக்கு தயாராகமல் எந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட முடியாதது.

நான் சொல்ல வருவது பெரும்பான்மையான தமிழர்கள் இழப்புக்கு தயாராக இல்லை என்பதைத்தான். இழப்புக்கு தயராக இல்லாதவன் வீதிக்கு வரமாட்டான்.

பரந்து சிந்திக்க முடியாமையால் குறுகிய வரைவிலக்கணங்களை தமக்குதான் ஏற்படுத்திக்கொண்டு அவிழ்த்துவிடும் ஒரு புதிய முடிச்சு இது . மக்கள்போராட்டம் கல்லெறிதல் என்பதில் இருந்து நகர்ந்து இன்று கல்லெறிதாலால் பலஸ்தீனியருக்கு பாரிய நட்டம் திட்டி வருவதாகவும் அதை செய்யாமல் பணத்திமிர் கொண்ட தமிழர் தங்கள் கடைகளையும் தொழில்களையும் சொத்து பத்துக்களையும் காப்பாற்ற முயல்கிறார்கள் என்பது போலவும் பாரிய பிரமை ஏற்படுத்தும் முயற்சி இது. இதையேதான் வேறு வழிகளில் மேலே ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள். மக்கள்போராட்டத்தால் நன்மை என்பதால் அல்ல; சிங்கள அரசுக்கு தமிழர் மீது அழிவை கொண்டுவர ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க மட்டுமே இந்த கீழத்தரமான உசுப்பேத்தல்கள் விடாப்பிடியாக முயற்சிக்கப்படுகிறது. சோல்பரி, தமிழர்கள் எந்த வகை பாதுகாப்பு தேவை இல்லாதவர்கள்; ஏன் எனில் அவர்கள் தங்கள் பாரம்பரிய இடங்களுக்கு வெளியே கூட விகிதாசாரத்திற்கு மேலான ஆழுமையை வைத்திருக்கிறார்கள் என்ற காலத்தில் இருந்து மெனிக் பாமில் தன்னும் இருக்க முடியாத நிலைக்கு வந்திருப்பது தமிழர்களுக்கு இழப்பில்லையா? மலையின் நுணியில் இருந்த நாம் இன்று மடுவில் இருப்பதை இழபென்று ஒத்துக்கொண்டால் இந்த இழப்புகள் எப்படி தமிழருக்குள் திணிக்கப்பட்டு முடிந்தது என்பதை கூறமுடியுமா? ஒருகரையில் கல்லேறியும் பலஸ்தீனியரை ரப்பர் குண்டுகளால் சுடும் இஸ்ரேலிய இராணுவம் மறுகரையில் எல்லையில் வைத்து பலஸ்தீனியரை எல்லையூடாக இஸ்ரேலுக்கு வேலக்கு போய்வர விடுவதில்லையா? இந்த நிலைமையா இலங்கையில்? தெற்கிலிருந்த (வடக்கை நான் இங்கே எடுக்கவில்லை) நமது வேலைகளுக்கு என்ன நடந்தது? நமக்கு தெற்கில் எரிந்த கடைகளையும் அந்த காணிகளையும் யாராவது திருப்பி தந்தார்களா? இதுவா பலஸ்தீனத்தில் நடக்கிறது? அங்கொன்றும் இங்கொன்றும் எழுதாமல், இனித்தன்னும் கல்லெறிதலையும் அதனால் பலஸ்தீனியருக்கு ஏற்படும் இழப்பையும் பற்றி முறையாகத்தொடுத்து எழுத முடியுமா நாம் மேலே போக?

இரண்டு போராட்டதையும் ஒப்பிட்டு, இழப்புக்கும் போராட்டத்திற்கும் தொடர்பை காட்டினால் மட்டுமே தமிழர் இழப்புக்கு பயந்து போராட போகிறார்களில்லை என்பது சரி. தமிழருக்கு இழப்பு முதலில் வந்தென்பது சரித்திரம். அதனால்,மக்கள்போராட்டம் நடத்தி மக்கள் கைவிட்டு விட்டபின் ஆயுதப்போராட்டம் தொடங்கினார்கள்.

மக்கள் போராட்டம் என்பது ஈழத்தில் இன்றைக்கு இல்லை.

தமிழீழத்தில் இன்று 3:1 என்ற விகிதத்தில் இராணுவம்நிலை கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியாதவர்களின் அறிக்கை இது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டமைப்பு தலைவர்கள் தமது உயிர்பிச்சைக்கு காங்கிரசுகளின் காலில் ஓடிப்போய் விழுந்ததை அறியாதவர்களின் கருத்து இது. மக்கள் போராட்டம் தேவையா; எப்பவாவது அதனால் பலன் வந்தா என்பது வேறு.

அது புலிகளின் காலத்திலும் இருக்கவில்லை.

புலிகள் தோன்றியதின் காரணத்தை அறியாதவர்களின் அறிக்கை இது. அண்மையில் ரோபேட் பிளேகே கூறியிருந்தார் "இலங்கை அரசின் நடத்தைகளால் புலிகள் மாதிரி வன்முறை போராட்டம் மீண்டும் இலங்கையில் வெடிக்கலாம்" என்று. ஆனால் மக்கள் போராட்டம் பற்றி அவர் கதைக்கவில்லை. ஏன் எனில் அரசின் அழைப்புக்களை ஏற்று அங்கு போய்விட்டு வருபவர்களை விட அவருக்கு அங்கே அரசால் அமூலில் வைத்திருக்கும் அடக்குமுறைகள் பற்றி தெளிவான அபிப்பிராயம் இருக்கு.

நான் மக்கள் போராட்டத்திற்கு உதாரணமாக பாலஸ்தீனத்தை சொன்னேன். ஆனால் மக்கள் போராட்டத்திற்கு உதாரணமாக அது சுட்டிக்காட்டப்பட்டது.

அது மிக மிக தவறு. அங்கே தெளிவாக இரு நாடுகள் இருக்கின்றன. அது இரண்டு நாடுகளுக்கு இடையிலான யுத்தம் என்ற நிலையில் இப்போ இருக்கு. மக்கள் போராட்டம் என்பது ஒரு நாட்டு மக்கள் தமது அரசை ஏற்றுக்கொள்ளாமல் தம் அரசு மீது காட்டும் வெறுப்புணர்வு.

வேறு உதாரணங்களும் இருக்கின்றன. பாலஸ்தீனத்திற்கும் ஈழத்திற்கும் நிறைய வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்த ஒற்றுமை வேற்றுமையை ஒத்துக்கொள்ள மறுப்பதால் தான் திரும்ப திரும்ப மக்கள் போராட்டம் என்ற பதத்திற்கு இவர்களால் உயிர் கொடுக்க முடிகி்றது. இந்த மழுப்பல் தான் இந்த திரியை நீட்டுகிறது. இந்த ஒற்றுமை வேற்றுமையை நிரைப்படுத்தினால், நாம் மக்கள் போராட்டம் இலங்கையிலும் நடத்த வேண்டியது அவசியம் தான என்ற கட்டத்திற்கு விவாதத்தை நகர்த்த முடியும்.

ஆகவே பதிலுக்கு ஈழத்திலும் மக்கள் போராட்டம்தான் இருக்கிறது என்று வாதிடுவதுதான் அர்த்தம் மிக்கதாக இருக்கும்.

இதன் கருத்து எனக்கு விளங்கவில்லை. தான் விரும்பியதை சொல்லிமுடித்து தன்னை தப்பி போக விடும்படி கேட்கிறார் என்றால் அது தான் மிகப்பெரிய பகிடி.

மக்கள் போராட்டம் இருக்க கூடாத இடத்தில் மக்கள் போராட்டம் இருக்கிறது என்று வாதாடும் படி கேடபதை விட குறைந்த தரமான விவதாதம் இந்த திரியில் வேரு எங்கும் இல்லை. இலங்கையில் ஏன் தூக்கு தணடனை வந்திருக்கு? ஏன் இன்னும் 300 போராளிகள் மட்டும் தான் அரசிடம் இருக்கு என்று அரசு கூறுகிறது? மற்றவர்களுக்கு என்ன நடந்தது? மகர சிறையில் உண்ணாவிரத்த்தின் போது நடந்தவையாவை? என்பவற்றிற்கு பதில் தெரிந்தவர்கள் அல்ல மக்கள் போராட்டம் பற்றி எழுதுவது. இவற்றில் என்ன நடந்து என்பதை மூடி மறைக்க அரசு கொடுக்கும் பணத்திற்கு எழுதுவதுதான் இந்த மக்கள் போராட்ட கதைகள். நான் யாழில் சேதுராமன் என்ற சிறுவன் சிங்கள மந்திரியின் காலில் விழ மறுத்தது தொடக்கம் மகர சிறை உண்ணாவிரதம் வரைக்கும் எதிர்த்துமட்டும்தான் எழுதியிருக்கிறேன். தலைவர் மதிவதனியை திருமணம் செய்ய நேர்ந்த கடத்தல் வரைக்கும் ஏன் நடந்து என்பதை பற்றி இங்கே வாதிட்டிருக்கிறேன். தமிழ் நாட்டு தீக்குழிப்புக்களை எதிர்த்துத்தான் எழுதியிருக்கிறேன். மக்கள் போராட்டம் அவர்களை ஆபத்தில் போடலாம் என்றாலும் அதனை தொடர வேண்டும் என்பது கண்மூடித்தனமான வாதம். மக்கள் அழிந்தாலும் முன்னே சென்று போராடத்தான் வேண்டும் என்று அதையே எழுதுபவர்களே "நான் நூறு வருடங்களின் பின் வரவிருக்கும் தமிழ் ஈழத்திற்கு இன்று மக்களை பாதுக்காக முயல்கிறேன்" என்றும் எழுதுவது . இது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி தன் எஜமானர்களை திருப்திப் படுத்தும் முயற்சியே. மக்களை தெருவில் அழைத்து வந்து வகை தொகை இல்லாமல் அரசால் கொலை செய்வித்து பின்னர் தம்மிடம் நல்ல முறைகள் இருக்க எமது சொல்லை கேளாமல் மக்களை யாரோ போராட வைத்து அழித்து விட்டார்கள் என்று நடிக்க மட்டுமே இது உதவும்

ஆனால் இங்கே சிலர் உதாரணம் எதற்காக சுட்டிக் காட்டப்படுகிறது என்பதை விளங்காது, இரண்டு போராட்டத்தையும் ஒப்பிட்டு அதில் உள்ள வேறுபாடுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் எடுதத உதாணம் பிழையானது என்பதை தாங்களே கண்டபின் அதை மழுப்புவர்கள் திரும்ப திரும்ப அதை உதாரணமாக வர்ணிப்பது தமிழ் எழுத தெரியாமையால் வருவது. அது உதாரணமாக தக்க எந்த வழியும் இங்கு இல்லை.

காரணம் ஈழத்தில் மக்கள் போராட்டம் நடக்கவில்லை என்பதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

நான் தொடந்து தமிழீழத்தில் மக்கள் போராட்டம் நடக்க நிலைமை தோதில்லை என்று விவாதிக்கும் போது இடையில் இப்படி எழுதுவது ஒரு அவமானகரமான, தனது எழுத்தில் சுயஇன்பம் காணும் எழுத்து. நான் முன்னர் எழுதியிருந்த உதாரணம் காலில் குத்திய முள்ளிற்கு யாரும் ஒப்ரேசன் தியேட்டர் போக மாட்டர்கள் என்பதாகும். ஆடிக்கறகிற மாட்டை ஆடியும் பாடிக்கறகிற மாட்டை பாடியும்தான் கறக்க வேண்டும் என்பார்கள். முதல் 30 வருட மக்கள்போராடத்தினால் பலன் ஏதும் வரவில்லை. 1961 அவசரகாலத்தை பயன்படுத்தி ஊரடங்கு சட்டத்தை கொண்டுவந்து சத்தியாகிரகத்தை அடக்கினார்கள். 1971 இல் வந்த அவசரகாலம் பின்னர் எப்போதும் மீளப்பெறப்படவில்லை. அவசரகாலத்தில் மக்கள் போராடத்திற்கு நடை முறையில் தடை இருக்கு. 1983ல் சில இராணுவத்தினரின் இழப்புக்களை ஈடு செய்ய இலங்கை முழுவதிலும் இருந்த தமிழரை JR தாக்கினார். போர் என்றால் போர் கிடைக்கும் என்று தனது அடக்குமுறையின் கொடூரத்தை வானொலி பேச்சில் தெரிவித்தார். அப்படியான அரக்க அரசுகளின் கைகளில் மக்களை இட்டு செல்லத்தான் இவர்களின் இந்த உச்சுபேத்தல்கள்.

இவற்றை வைத்து மக்கள் போராட்டம் பலனில்லாதது; ஆபத்தானது; அது அரசு இன்னமும் ஒரு 146,000 மக்களை இலகுவில் கொலை செய்ய உதவும்; அது சம்பதரின் வீட்டுக்குள்ளும் அரசு குண்டுகளை வைத்து விட்டு அவரை புதிய தூக்கு தண்டனை சட்டத்தில் தூக்க இடமளிக்கும்; ஆர்ப்பாடங்களை, அரசு புலிகளின் கூட்டங்களாக காட்டி அதில் புலிக்கொடி காட்டி இராணுவத்ததை வெளியேற்ற மறுத்து வெளிநாடுகளை ஏமாற்றும்; இவற்றைபற்றித்தான் நான் பேசுவது. நான் ஒரு இடத்திலும் தமிழ் ஈழத்தில் மக்கள் போராட்டம் நடக்கிறது என்று மழுப்பல் எழுதவில்லை. எழுதவும் மாட்டேன்

2009 பின் கூட்டமைப்பினர் காங்கிரசிடம் உயிர் பிச்சைக்கு போன நாளில் இருந்து இன்று தமிழ் தேசிய கூட்டு முன்னணி சில போராடங்களை நடத்தியிருக்கிறது. இதன் ஆரம்பம் அவமானகரமான எதிர்க்கட்சிகளின் மேதின ஊர்வலம். சம்பந்தர் சிங்க கொடியை தூக்கி காட்டியது அவமானகரமானதாக இருந்ததோ இல்லையோ, இனிமேலய காலங்களில் எதாவது போராட்டங்கள் நடந்தால் அதுதான் ஆரம்பம். இது தன்னும் முடிந்தது சம்பந்த சிங்க கொடி தூக்க உடன்பட்டதனால். இவ்வளவு துணிச்சல் எதிர்கட்சிகளுக்கு வந்தது பிளேகின் கடுமையான அழுத்தங்களால் அவசரகால சட்டம் தளர்த்தப்ட்டதினால் ஆகும். இதனால் நான் போகும் பாதை சர்வதேச போர்குற்ற விசாரணையே. போர்குற்ற விசாரணையை சர்வதேசம் முன்னெடுக்க சம்பந்தரின் பேச்சு வார்த்தை உதவும் என்பதனால் மட்டுமே அதை ஆதரிக்கிறேன். 2013 மார்ச்சில் என்ன நடக்கும் என்பதை வைத்தே நாம் மிகுதி நடவடிக்கைகளை திட்டமிடலாம். சர்வதேசம் தலையிடாமல் மூன்று வருடத்தில் இலங்கை போகலாம் ,100 வருடத்தில் தமிழீழம் வருகிறது. 25 பேர் கல்லெறிய 2500 இஸ்ரேலிய எல்லையில் அடையாள அட்டைகளுடன் உள்ளே வேலைக்கு போக இஸ்ரேலிய இராணுவத்தை கெஞ்சிக்கொண்டு நிற்பதுதான் மக்கள் போராட்டம் போன்ற சுய இன்ப கருத்துக்களை நான் எழுதுவதில்லை.

மக்கள் போராட்டம் இல்லை என்பதை சுட்டுவதற்காக போராளிகளின் இன்றைய கைவிடப்பட்ட நிலையையும் உதாரணத்திற்கு எடுத்திருந்தேன். அதைப் பற்றி பேசுவார் இங்கே யாரும் இல்லை.

இலங்கை போனவர்கள் அங்கே மக்கள் போராட்டதை நடத்தி போராளிகளை விடுவிக்க முயவில்லை. அரச அதிகாரிகளை சந்தித்தார்கள். அவர்கள் போராளிகளின் நிலைமைகளை அவர்களிடம் கேட்கத்தவறினார்கள். திரும்பி வெளிநாடுவந்தவுடன் அக்கறை காட்டுவதாக நடிக்கிறார்கள். குறைந்தது வெளிநாட்டிலிருந்து தன்னும் "[size=5]அரசு அந்த போராளிகளை வெளியே விடவேண்டும்"[/size] என்ற திட்டவட்டமான அறிக்கை எழுதுவதை தவிர்க்கிறார்கள். யாழில் பேசப்படும் விடயங்களில் 50% போராளிகளை பற்றியதாக இருக்க யாழில் யாரும் போராளிகளை பற்றி அக்கறை காட்டவில்லை என்று உண்மையை திரித்து இப்படி ஈனத்தன அறிக்கை வெளிவிடுகிறார்கள். "மின்னல்" என்ற யாழ் உறவு போராளிகளை பற்றி எழுதும் திரிகளில் போராளிகளின் நலன் பற்றி எழுதியிருந்தால் அதை இங்கே இணைக்க முடியுமா?

விடுவிக்கப்பட்ட போராளிகளைப் பராமரிப்பதற்கு யாழ்ப்பாணத்தின் இன்றைய பொருள் வளமே போதும். இதற்காக நேசக்கரம், நம்பிக்கை ஒளி போன்றன தேவையே இல்லை. காரணம் எங்களின் பிள்ளைகளையே விசாரணை வரும் என்னும் அச்சம் காரணமாக வீதியில் விட்டிருக்கிறோம்.

நம்பிக்கை ஒளி தேவை இல்லை என்று எழுதுபவர்கள் இதுவரையில் எந்த கெட்டு நொந்த போராளிக்கு தன்னும் உதவ முன் வந்திருக்கிறார்களா? எனக்கு அதை படிக்க வேண்டும்?

காரணம் எங்களின் பிள்ளைகளையே விசாரணை வரும் என்னும் அச்சம் காரணமாக வீதியில் விட்டிருக்கிறோம்.

ஆயிரம் ஆயிரம் தாய்மாரும், மனவிகளும் தங்கள் மானத்தையும் பற்றி கவலைப்படாமல் இராணுவத்தின் கால்களில் தங்களின் உறவுகளை ஒருதடவை பார்த்துவிடமட்டும் அனுமதி கேட்டு அலையும் போது தங்களை பிள்ளைகளை தமிழர் விசாரணைக்காக தள்ளி வைக்கிறார்கள் என்று எழுதுவது இலங்கை அரசின் இராணுவத்தை விட குரூரத்தனம் நிறைந்த செயல். இது வேதவியாசர் பாரதத்தில் எழுதிய " உனக்கு பிள்ளைதான் போய்விட்டதடி, எனக்கு என் பணமே போய்விட்டது" என்ற விஸ்வாமித்திரரின் செய்கைகளுடன் தமிழர்களை இணையாகும் செயல். ஆனால் அதில் போராளிகளிடம் தங்களுக்குத்தான் அக்கறை மாதிரி காட்டும் நடிப்பு அதன் கிளைமார்ஸ்.

நாங்கள் எல்லாம் மக்கள் போராட்டம் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள்.

மக்கள் போராட்டம் தேவை இல்லை என்போர் அதைப் பற்றி பேசப் போவதில்லை. அவர்கள் இதில் எந்த அவமானத்தையும் உணரப்போவதில்லை. ஆனால் நிச்சயமாக அரசின் வக்காலத்திற்கு அந்த உரிமை இல்லை.

ஆயினும் கவலை விடுக. தமிழீழம் நூறு ஆண்டுகள் கழித்து உருவாகும்.சிங்களவர்களின் சம்மதத்தோடு அது நடக்கும்.

உணர்வுகள் மரத்து இந்த வேண்டுமென்று சீண்டும் கேலி வாக்கை எழுதுபவர் இன்னொரு திரியில் எழுதியிருப்பது தெரிவுக்குழுவில் அரசு ஒன்றும் கொடுக்காது என்பது. எங்கிருந்து 100 வருடத்தில் தமிழிழம் வரும் என்பதை எழுத மறுக்கும் இவர்கள் தொடர்ந்து சித்திரவதைபடும் போராளி சகோதரிகளை பற்றி அக்கறை காட்டுவதாக நடித்து அவர்களை நையாண்டி காட்டவும், தண்ணிக்கும் உணவுக்கும் வசதியின்றி காடுகளில் தவிக்கும் அகதிகளை பார்த்து காறித்துப்பவும் இப்படி பொறுப்பில்லாத வம்புத்தனங்களை கூச்ச நாச்சமின்றி யாழ் மாதிரி ஒரு இணையத்தின் திரிகளில் வந்து அரசுக்காக எழுதுகிறார்கள்.

ஆனால் அது உண்மை. இவர்கள் சொல்வதினால் அல்ல. மேலும் நூறுவருடம் கழித்தல்ல. அரசின் கைக்கூலிகளையும் உள்ளே போட்டு, மகிந்தா கூட்டத்திற்கு சர்வதேச நாடுகள் இனவழிப்பிற்கான தண்டனையையும் வழங்கியவுடன் சிங்கள மக்கள் தாங்கள் விட்ட மாபெரும் தவற்றை உணர்ந்து தமிழ் ஈழத்திற்கு ஒத்துக்கொள்வார்கள்.

Edited by மல்லையூரான்

காட்டாறு,

நடுத்தர வர்க்கத் தமிழர்கள். நான் உட்பட அவர்களால் அடி எல்லாம் வாங்கிப் போராட முடியாது.

தனது சுக போக வெளிநாட்டு வாழ்கையை அகதிகளாய் போய்விட்ட மக்களுக்கு உதாரணம் காட்டுகிறார்ர். திரும்ப திரும்ப பலஸ்த்தீன் உதாரணம் போன்றவற்றை வேண்டுமென்றே மக்களின் சிந்தனைகளை மளுங்கடிக்க பாவிக்கிறார். இது மக்களின் தொடர்ந்த போராடத்தை அரச இராணுவத்தின் முன்னால் நீங்கள் போராடுகிறீர்கள் இல்லை என்று பீதியூட்டி அவர்களின் மனத்தை கெடுக்கும் முயற்சி. புலம் பெயர் மக்கள், சர்வதேசம் போர்குற்ற, இனவழிப்பு குற்ற விசாரணை செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். தாயக மக்களின் இன்றைய அரசியல் தலைவன் சம்பந்தர் சர்வதேசம் தன்னுடன் இருப்பதாக கூறுகிறார். அந்த உதவியால் நிச்சயம் அரசியல் தீர்வொன்றை தனக்கு பெறமுடியும் என்று கூறியிருக்கிறார். இவற்றை விட தனிப்பட மனிதர் ஏற்றுக்கொள்ளூம் தீர்வுகளை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

முன்னர் புலிகள் போராடிய பொழுது எம்மால் முடிந்தது ஆதரவும், பரப்புரையும், போராட்டத்திற்கான நிதி வழங்கலும் மாத்திரமே.

தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தானம் செய்த மக்கள் கல்லும் எறிந்திருந்தால் மட்டும் தான் அது அவர்கள் போராடத்தில் பங்கு பற்றினார்கள் என்று ஒத்துகொள்ள வைக்குமா?

இனிமேல் வேறு யாரையும் சாகச் சொல்லி நான் கேட்க விரும்பவில்லை. அதனால்தான் தமிழீழம் தவிர்ந்த மாற்று வழிகளுக்கும் நான் தயராக இருக்கிறேன்.

அப்போ ஏன் மக்கள் போராடம்? எதுவும் 1958ல் இருந்து மக்களுக்கு அழிவைத்தான் தந்தது. அதை செய்யவில்லை என்று ஏன் தமிழரை இழிவுபடுத்தி எழுதுகிறார்கள்? அது எல்லாத் தமிழருக்கும் தெரிந்தும் இருக்கிறது. ஆனால் 146,000 போன்றதொரு இறப்புக்கு புலம் பெயர் மக்களும், தாய அரசியல் கட்சிகளும்,சர்வதேச NGO களும் மகிந்த எத்தனை பேரை வாங்கிங்கினாலும் எத்தகைய தீர்வுடன் வந்தாலும் பொறுப்புகூற வேண்டிய கடமையிலிருந்து இலகுவில் தப்பி போக விட மாட்டார்கள். அவர் அமெரிக்க பயணத்தை தவிர்க்கலாம், பிருத்தானிய பயணத்தை தவிர்க்கலாம் அவரின் நாட்கள் எண்ணப்படுதை அவர் எந்த முயற்சியாலும் தவிர்க்க முடியாது.

இன்று தாயக பூமி சிங்கள மயமாக்கப்படுகிறது.மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து துரத்தப்படுகிறார்கள்.தமிழர்களுக்கு பொருளாதார வளர்ச்சியோ வேலை வாய்ப்போ இல்லை. சிங்கள பவுத்த கலாச்சாரம் விருப்பத்திற்க்கு மாறாகத் திணிக்கப்படுகிறது.இவை எல்லாம் இழப்புக்கள்.உலகில் மக்கள் ஒரு எல்லை வரையே இந்த இழப்புக்களைத் தாங்கினர்.சிங்களப் பேரினவாதத்தின் உச்சம் மக்களை நெருக்கும் போது அவர்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழி இருக்கப் போவதில்லை.களத்தில் நிலமைகள் அதனை நோக்கியே செல்கின்றன.

கூட்டமைப்பின் ஒரு சிலர் விரும்பாவிட்டாலும் மக்களின் போராட்டத்தை தலமை தாங்கும் சக்திகள் முன்னணிக்கு வரும்.

புலிகள் இருந்த வேளை மக்களின் சக்தி புலிகளின் இராணுவ வலிமையை பலப்படுதுவதிற் சென்றது.புலிகள் ஒரு இராணுவமாக இருந்து மக்களை நேரடி ஒடுக்கு முறையில் இருந்தும் பாதுகாத்தனர்.இன்று புலிகள் இல்லை மக்களே தம்மைப் பாதுகாக்கப் போராட வேண்டி உள்ளது.

கல் எறிவது தான் மக்கள் போராட்டம் என்பது மிகவும் சிறு பிள்ளைத் தனமான வாதம். போராட்ட வடிவத்தைக் கள யதார்த்தமும், எதிரியின் பலம் பலவீனமும் தீர்மானிக்கிறது.தமீழம் தவிர்ந்த மாற்று வழி எது வென்று இன்னும் தெரியாது என்று சொல்லும் சபேசன் அந்த மாற்று வழியில் போராடப் போவதாகச் சொல்வது முரண் நகையான வாதம்.

மல்லையூரான் எழுதியுள்ளது உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. ஆயினும் மக்கள் போராட்டம் என்று குறிப்பிட்டது "புளொட்" இயக்கம் முன்பு குறிப்பிட்ட மக்கள் போராட்டத்தை அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இன்னும் இலகுவாக சொல்வதானால் திலீபன் குறிப்பிட்ட மக்கள் புரட்சியை சொல்கிறேன்.

பாலஸ்தீனத்தில் கல் எறிகிறார்கள் என்றால், ஈழத்திலும் கல் எறிய வேண்டும் என்பது இல்லை. இப்படி யாராவது என்னுடைய கருத்தினை விளங்கிக் கொண்டால், அது மிகத் தவறான புரிதல் ஆகும்.

பெரும்பாலான மக்களின் பங்களிப்போடு போராட்டம் நடக்க வேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற விடயம்.

மக்களின் போரட்டம் என்றால் என்ன சபேசன்? முதலில் அதனைத் தெளிவு படுத்துங்கள்.

மல்லையூரான்,

இங்கே பிரச்சனை என்னவென்றால், நான் மக்கள் பேராட்டத்திற்கு பாலஸ்தீனத்தை உதாரணம் காட்டினால், நீங்கள் அதை ஈழப் போராட்டமும் பாலஸ்தீனப் போராட்டமும் ஒன்று என்று நான் சொன்னதாக தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.

நான் இதை உடனடியாக மறுத்து "இரண்டு போராட்டங்களுக்கும் நிறைய வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் உண்டு" என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஏனோ தெரியவில்லை, தவறாக விளங்கிக் கொண்டதும் அல்லாமல், அதை வைத்தே சுற்றிக் கொண்டு நிற்கிறீர்கள். நீங்கள் விளக்கம் குறைந்தவர் என்று நான் நம்பவில்லை. வேண்டும் என்றே ஏதோ ஒரு வெறுப்பின் அடிப்படையில் இப்படி நடக்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.

ஏன் நாரதர்? நான் இங்கே சில உதாரணங்களை குறிப்பிட்டு மீண்டும் எழுதுவேன். பின்பு நான் அந்தப் போராட்டங்களும் ஈழப் போராட்டமும் சமன் என்று சொன்னதாக இங்கே சிலர் வாதத்தை இழுத்துக் கொண்டு போவார்கள்.

தெளிவான வாசிப்பும் சிந்தனையும் கொண்ட உங்களைப் போன்றவர்கள் கூட அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பீர்கள். எதற்கு இதெல்லாம்?

நடக்காத ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டு

இல்லை இந்த மக்கள் போரட்டாம் என்றால் என்ன என்னும் வாதமும் கருத்தாடலும் முக்கியமானது. களத்தில் எழுதப்படும் எல்லாவற்றிற்க்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் நீங்கள் உங்களின் சிந்தனையில் தெளிவாக இருக்க வேண்டும் எனில் மிக முக்கியமான சொற்களுக்கான அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும்.இணையத்தில் மிகவும் சீரழிக்கப்படும் வார்த்தை ` மக்கள் போராட்டம் ` என்பது. அப்ப புலிகள் எல்லாம் என்ன மிருகங்களா? இதுவரை குறைந்த்தௌ ஒரு லட்ச்சம் மக்கள் தமது உயிரிக் கொடுத்துப் போராடிய போராட்டம் மக்கள் போராட்டம் இல்லையா?

ஆயுதம் ஏந்திய ஒவ்வொரு போராளியும் ஒரு மனிதன் என்பதை மிக இலகுவாக மறந்து விடுகிறோம்.

நாரதர், நீங்கள் நீள நீளமாக எழுதாமல் மிகச் சுருக்கமாக "போராடிச் செத்த ஒரு இலட்சம் மனிதர்களும் மிருகங்களா?" என்று கேட்ட கேள்வி என்னை சிந்திக்கத் தூண்டுகிறது.

மக்கள் போராட்டம் பற்றி நிறைய பேச வேண்டிய அவசியத்தை உங்கள் கேள்வி உருவாக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

1977 இல் மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையையே புலிகள் தலையில் சுமந்தார்கள்.

அப்படியாயின் புலிகள் யார்?? எத்தனை பேர்???

ஆய்வாளருக்கு மறதி அதிகமோ??? :(

விசுகு,

நீங்கள் இந்த விவாதத்தை முழுவதும் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே தமிழர்களுக்கு தமிழீழம் பற்றிய ஆசை உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

பின்பு இன்னொரு முறை "இவர்கள் தடியடி வாங்கிப் போராட மாட்டார்கள், இவர்கள் செய்யக் கூடியது கூட்டமைப்புக்கு வாக்குப் போடுவதுதான்" என்றும் சொல்லியிருக்கிறேன்.

ஆகவே தேர்தலில் வாக்களிப்பதை எல்லாம் கணக்கில் எடுக்க முடியாது. மக்கள் ஆணை வழங்க, அதை ஏற்றுப் போரடப் புகுந்தவர்களுக்கு பின்பு அந்த மக்கள் எவ்வளவு தூரம் பக்க பலமாக நின்றார்கள் என்பதையே கேள்விக்கு உள்ளாக்குகிறேன்.

இன்னும் ஒன்று விசுகு. 1977இற்கு முன்னமேயே புலிகள் தமிழீழத்திற்காக போராடப் புறப்பட்டு விட்டார்கள்.

2000 ஆண்டில் புலிகள் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வளைத்த பொழுது பொது மக்களும் அவர்களோடு சேர்ந்து இராணுவத்திற்கு எதிராக கிளர்ந்திருந்தால் பிராந்திய / சர்வதேச வல்லரசுகளின் அழுத்தங்கள் குறைந்து, தமிழர் தரப்பு இராணுவ / அரசியல் வெற்றி ஈட்டக் கூடிய சாதகமான சூழ்நிலை இருந்திருக்கும்.

சாட்சிகள் இன்றி நடைபெற்ற இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் போராட புறப்பட்டிருந்தால், வேரோடு அறுத்தெறியப் பட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

நீங்கள் இந்த விவாதத்தை முழுவதும் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே தமிழர்களுக்கு தமிழீழம் பற்றிய ஆசை உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

நல்லதொரு பதில்

ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் வேட்கை தங்களுக்கு ஆசையாகத்தெரியுது :( :(

சிங்களப் பேரினவாதத்தின் உச்சம் மக்களை நெருக்கும் போது அவர்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழி இருக்கப் போவதில்லை.களத்தில் நிலமைகள் அதனை நோக்கியே செல்கின்றன.

கூட்டமைப்பின் ஒரு சிலர் விரும்பாவிட்டாலும் மக்களின் போராட்டத்தை தலமை தாங்கும் சக்திகள் முன்னணிக்கு வரும்.

ஆனால் இனி மக்கள் போராட்டம் வருமானால் ஆரம்பத்திலேயே காட்டிக்கொடுப்பவர்களால் அது அழிக்கப்படும் சாத்தியமும் உள்ளது. அப்படி மீண்டும் நடக்குமானால் மக்கள் சிங்களவர்களின் அடிமை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடுவார்கள்...

புலிகள் யாழ்ப்பாணத்தை சுற்றி வளைத்து உள்ளே போவதற்கு ஆட்கள் போதாமல் இருந்தது. ஒரு நூறு பேர் இருந்திருந்தால் கூட இன்னும் பல தூரம் போயிருப்போம் என்று அப்பொழுது புலிகள் வேதனையோடு சொன்னார்கள்.

இந்த இடத்தில் கருணா தன்னுடைய போராளிகளை தொடர்ந்தும் சண்டைக் களத்திற்கு அனுப்ப மறுத்ததாகவும், கிழக்குப் போராளிகளை யாழ்ப்பாணச் சண்டையில் சாகவிட விரும்பவில்லை என்று தகராறு செய்ததாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.

விசுகு, வேட்கை என்ற சொல்லை வேண்டும் என்றே தவிர்த்திருந்தேன். புலிகளுக்கு அந்த வேட்கை இருந்தது என்று சொல்லுங்கள், அதை ஒத்துக் கொள்கிறேன். மற்றும்படி பெரும்பாலான தமிழர்களுக்கு ஆசை மட்டுமே இருக்கிறது.

மல்லையூரான்,

இங்கே பிரச்சனை என்னவென்றால், நான் மக்கள் பேராட்டத்திற்கு பாலஸ்தீனத்தை உதாரணம் காட்டினால், நீங்கள் அதை ஈழப் போராட்டமும் பாலஸ்தீனப் போராட்டமும் ஒன்று என்று நான் சொன்னதாக தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.

நான் இதை உடனடியாக மறுத்து "இரண்டு போராட்டங்களுக்கும் நிறைய வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் உண்டு" என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஏனோ தெரியவில்லை, தவறாக விளங்கிக் கொண்டதும் அல்லாமல், அதை வைத்தே சுற்றிக் கொண்டு நிற்கிறீர்கள். நீங்கள் விளக்கம் குறைந்தவர் என்று நான் நம்பவில்லை. வேண்டும் என்றே ஏதோ ஒரு வெறுப்பின் அடிப்படையில் இப்படி நடக்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.

ஏனோ தெரியவில்லை, தவறாக விளங்கிக் கொண்டதும் அல்லாமல், அதை வைத்தே சுற்றிக் கொண்டு நிற்கிறீர்கள்
தவறான கருத்துக்களை திரும் திரும்ப எழுதிவிட்டு ஒடாமல் நான் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் அதன் பின் அவற்றில் கேள்வி கேட்கவேண்டிய தேவை இல்லாத படி தயவு செய்து பதில் தரவும்.

எடுத்த உதாரணத்தின் தவறை ஒத்துகொள்ள முடியாமல் எனக்கு விளங்கவில்லை என்று சொல்வதால் விவாதம் முன் செல்லாது. நான் கேட்ட முதல் இரண்டு கேள்விகள்: 1. பலஸ்தீனத்திற்கும் நமக்கும் என்ன ஒற்றுமை; நாம் அவர்களின் காலடியில் நடக்க வேண்டும்? என்பதும், 2. 65 ஆண்டுகளில் இழந்த மாகாணங்கள் வரவிருக்கும் 100 ஆண்டுகளில் எப்படி தமிழ ஈழம் ஆகப்போவதும் என்பதே.

பதில் இல்லாத சீண்டல் கருதுக்கள் இரண்டையும் எழுதிவிட்டு எனக்கு விளங்கவில்லை என்று எழுதி மறைப்பது எளிதாக இருக்கப் போவதில்லை. 25 பேர் இராணுவத்திற்கு கல்லெறிவதை மேற்குநாட்டு பத்திரிகைகள் போடுவதால் மட்டும் அது மக்கள் போராட்டமாகாது. அல்கைடா போராளிகள் அசாத்தை பதவியில் இருந்து விழுத்த முயன்றால் அது மக்கள் போராட்டம்; அதே அல்கைடாக்கள் ஆப்கானிஸ்தானில் போராடினால் அது ஜிகாத்தென்பது மேற்குநாடுகள் தமது தேவைக்காக கூறும் செய்திகள். அவை நமக்கும் தேவைதானா? அவர்கள் சொல்வது போல ஈழத் தமிழர் பயங்கரவாதிகளா? எனவே நான் இந்த வரைவிலக்கண மாயைக்குள் சிக்க விரும்பவில்லை. ஆகையால் அந்த உதாரணம் பிழை. அதை கூரியது பிழை . 25 பேர் கல்லெறிய 2500 வேலைக்கு இஸ்ரேல் போவது எந்தவகையிலும் மக்கள் போராட்டமல்ல. இலங்கையின் வடக்கு கிழக்கு கச்சேரிகளை 1961ல் நாட்கணக்காக மக்கள் அடித்து மூடவைத்த செயலை புளட்டுடன் இழுத்து இணைத்து அது போராட்டமல்ல என்று மக்களை முட்டாள்களாக யாரும் அப்படி முட்டாள்கள் அல்ல.

எப்படி இருந்தாலும் இந்த எமாற்றுக்களை எழுதி மகிந்தா கூட்டம் சர்வதேசத்தின் கைகளில் விசாரணைகளை சந்திக்க போவதை மறைக்க முடியாது. அமெரிக்க புலம் பெயர் மக்கள் மகிந்தா ஒவ்வொருதடவையும் அமெரிக்கா வரும் போது அவரை உள்ளே போடத்தான் முயல்வார்கள். எவர் அதை எழுதியும் அதிலிருந்து தப்பிக்க முடியாது.

நேற்று சுப்பிறிம் கோடு கோடையில் லீவுக்கு போனதற்கு மீண்டு வந்து அமர்வில் இருந்தது. இரண்டு விவாதங்கள் சுப்பிறீம் கோட்டின் முன் வைக்கப்பட்டன. NGO கள் வைத்த வாதம் வெளிநாடுகளில் மனித உரிமைகள் மீறப்படும் இடங்களின் வழக்குகளை அமெரிக்க கோடுகள் விசாரிக்க வேண்டுமென்பதாகும். இது ரோயல் ஆயில் கம்பனி நையீரியாவில் நடந்து கொண்டது தொடர்பாக வைக்க பட்ட விவாதம். குற்றம் நடந்த இடம் நையீரியா. NGOக்கள் அமெரிக்க கோடு அதை விசாரிக்க வேண்டும் என்று விவாதித்திருந்தார்கள். நீதிபதி அது அமெரிக்காவுடன் தொடர் பில்லாததே என்று கேள்வி எழுப்பினார். இந்த விவாதங்களை அடிப்பதையாக வைத்த்த்தான் வற்சலா போன்றவர்கள மகிந்தா மீது தமது வழக்குகளை தொடர்கிறார்கள்.

யார் யாரின் கவனங்களை திருப்ப, மக்கள் போராடவில்லை, புலிகள் தான் போராடினார்கள் என்றோ, தமிழ் ஈழம் அல்லாத தீர்வுகளைத்தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றோ, 100 வருடங்களின் பின்னர் தமிழ் ஈழம் தருவதாக சிங்கள மக்கள் என்னிடம் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றோ கூறுவதால் மகிந்தா இன்னும் கனதடவை தப்பி செல்ல முடியாது.

Edited by மல்லையூரான்

மல்லையூரான்,

நான் மீண்டும் கடைசித் தடவையாகச் சொல்கிறேன். பாலஸ்தீனப் போராட்டத்தின் காலொற்றி எமது போராட்டமும் நடக்க வேண்டும் என்று நான் எங்கும் சொல்லவில்லை. சொல்லாத ஒன்றிற்கு நான் விளக்கமும் சொல்லத் தேவையில்லை.

அங்கே அனைத்து மக்களும் இணைந்து தமது நாட்டுக்கு ஏற்றபடி போராடுகிறார்களோ, அப்படி எமது மக்கள் எமது நாட்டுக்கு ஏற்றபடி போராட வேண்டும். அவனைப் பார், இவனைப் பார் என்று சொல்வது அவன் செய்வதை அப்படியே பிரதி செய் என்று அல்ல. அவனுக்கு உள்ள அர்ப்பணிப்பும், துணிவும் உனக்கு இல்லை என்பதை சுட்டுக் காட்டத்தான்.

நீங்கள் விழுந்து விழுந்து இப்படி நீளமாக எழுதுவதற்கு முன்பு நான் எழுதியதை பல தடவைகள் வாசிப்பது நல்லது. புரியவில்லை என்றால் என்னைப் போல் அதை ஒத்துக் கொள்ளலாம். வேண்டும் என்றால் விளக்கம் கெட்கலாம். இது தேவையற்ற விவாதங்களை தவிர்க்க உதவும்.

இனி அடுத்த கேள்விக்கு வருகிறேன்

அந்தக் கேள்விக்கு பதில் மிகவும் சுலபம். உங்களைப் போன்றவர்களை வைத்துத்தான் 100 ஆண்டுகள் கழித்து நாம் தமிழீழத்தை அமைக்கப் போகிறோம். 10 ஆண்டுகள் கழித்து அதை அமைக்கும் சாத்தியம் இல்லாததால் 100 ஆண்டுகள் கழித்து அமைக்க இருக்கிறோம்.

உண்மையை ஒத்துக் கொள்வது என்றால் என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் தேவை. புலிக்கொடியோடு நின்று தமிழீழம் என்று உறுமுபவர்கள் தேவை. இவர்கள் இருந்தால்தான் மாகாணசபை என்றாலும் பெற முடியும். தீவிரவாதிகள் இருந்தால்தான் சமரசவாதிகளும் இருக்க முடியும்.

Edited by சபேசன்

தற்போதைக்கு தமிழீழம் உருவாகும் சாத்தியம் இல்லை. ஆகவே நாம் மாகாணசபையோடு திருப்திப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதை ஒரு குறுகிய காலத் தீர்வாக ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை இருப்பதாகவும் தெரியவில்லை.

மகாணசபை அதிக அதிகாரங்களை கோர வேண்டியது நாம் அடுத்தச் செய்ய வேண்டிய போராட்டமாக இருக்கும்.

புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார வளத்தோடும் முதலீடுகளும் வட மகாணத்தை அசுர வளர்ச்சி அடைய செய்ய வேண்டியதும் சமாந்தரமாக நடக்க வேண்டிய வேலையாக இருக்கும்.

வடக்கின் பொருளாரா வளர்ச்சியினைக் கொண்டும், பேச்சுவார்த்தைகளின் ஊடாகவும் முஸ்லீம் மக்களை வடக்குக் கிழக்கு இணைப்பு தமக்கு பலனைக் கொடுக்கும் என்பதை உணரச் செய்வது அடுத்த பணியாக இருக்கும்.

இதற்கு பிறகுதான் நாம் தமிழீழம் பற்றி எல்லாம் சிந்திக்க முடியும்.

மல்லையூரான்,

நான் மீண்டும் கடைசித் தடவையாகச் சொல்கிறேன். பாலஸ்தீனப் போராட்டத்தின் காலொற்றி எமது போராட்டமும் நடக்க வேண்டும் என்று நான் எங்கும் சொல்லவில்லை. சொல்லாத ஒன்றிற்கு நான் விளக்கமும் சொல்லத் தேவையில்லை.

அங்கே அனைத்து மக்களும் இணைந்து தமது நாட்டுக்கு ஏற்றபடி போராடுகிறார்களோ, அப்படி எமது மக்கள் எமது நாட்டுக்கு ஏற்றபடி போராட வேண்டும். அவனைப் பார், இவனைப் பார் என்று சொல்வது அவன் செய்வதை அப்படியே பிரதி செய் என்று அல்ல. அவனுக்கு உள்ள அர்ப்பணிப்பும், துணிவும் உனக்கு இல்லை என்பதை சுட்டுக் காட்டத்தான்.

கடைசியாக சொல்ல ஒன்றும் இதில் இல்லை. இது தங்களால் திரும்ப திரும்ப அரைத்து அரைத்து கூழாகிபோவிட்ட உதாரணம். உணர்வு இருக்க வேண்டும், பிடிபட்டால் சாகும் வரை மகிந்த சித்தாந்த மிருகங்கள் சித்திரவதை செய்வார்கள் என்பதை முன் கூட்டியே தெரிந்து களுத்தில் சயனட் கட்டிகொண்டு போன போராளிகளின் உறவுகளை துணிச்சல் இல்லாதவர்கள் என்று கூற. எனக்கு இருக்கும் பெருமை உலகின் மிக துணிச்சலான போராட குழுவின் இனத்தவன் எனபதுதான். தமிழீழ அரசியல் வாதிகளுக்கு நிகராக மரணத்தை சந்தித அரசியல் வாதிகள் எந்த நாட்டிலும் இருக்க முடியாது. இருந்தாலும் இது ஆரம்பத்தில் கூறியிருந்த "தமிழர் பணத்திமிர் படித்தவர்கள் பலஸ்தீனியர்கள் மாதிரி தயாராக தங்களுக்கு இழப்புகளை தேட மாட்டர்கள்" என்ற விளக்கத்திலும் ஒரு படி கீழ்தரமானது. பிழையான உதாரணம் எப்படி முயற்சித்தும் மேலே போகவிடவில்லை.

நீங்கள் விழுந்து விழுந்து இப்படி நீளமாக எழுதுவதற்கு முன்பு நான் எழுதியதை பல தடவைகள் நல்லது.

நான் விளக்கமாக எழுதுவதால் நான் எழுதியதொன்றிலும் இது வரைக்கும் உங்களுக்கு கேள்வி கேடக வேண்டியிருக்க வில்லை. ஆனால் தான் நல்லதாக நினத்து தற்பெருமையுடன் எழுதியிருக்கும் முழுவதிலும் பலருக்கு பல கேள்விகள் வருகிறது.

புரியவில்லை என்றால் என்னைப் போல் அதை ஒத்துக் கொள்ளலாம். வேண்டும் என்றால் விளக்கம் கெட்கலாம். இது தேவையற்ற விவாதங்களை தவிர்க்க உதவும்.

ஆரம்பம் தொடக்கம் மக்கள் போராடுகிறார்கள் இல்லை. புலிதான் போராடியது என்று எழுத வந்த நோக்கம் எனக்கு விளங்கவில்லை. அந்த நோகத்திலேயே இன்னமும் பதில் வரதா இரண்டு கேள்விகளை தொடந்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பெரிய பஞ்சு மூட்டை ஒருவன் காவலாம். சிறிய இரும்பு தீராந்தியை காவ பலர் வேண்டும்.1. பலஸ்தீனீயருக்கு துணிவு கூட தமிழருக்கு துணிவு குறைவு என்று தீர்மானிக்கதக்க வகையில் இரண்டு போராட்டங்களியும் தயவு செய்து ஒப்பிட்டு காட்டவும்.

இனி அடுத்த கேள்விக்கு வருகிறேன்

அந்தக் கேள்விக்கு பதில் மிகவும் சுலபம். உங்களைப் போன்றவர்களை வைத்துத்தான் 100 ஆண்டுகள் கழித்து நாம் தமிழீழத்தை அமைக்கப் போகிறோம். 10 ஆண்டுகள் கழித்து அதை அமைக்கும் சாத்தியம் இல்லாததால் 100 ஆண்டுகள் கழித்து அமைக்க இருக்கிறோம்.

ஆத்திரப்பட்டு இப்படி கேணைதனத்தின் அதி உச்சம் வரை போய் எதுவும் வராது. என் முதல் நோக்கம் இன்னுமொரு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் தீர்வு கண்டு விட வேண்டுமென்பது. என்னை உங்களுடன் சேர வைக்க வேண்டுமாயின் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நாடு கடந்த அரசு போன்றவற்றுடன் சேர்ந்து மகிந்தாவை எப்படி 146,000 தமிழ் மக்களை கொன்றோழித்தற்கு சர்வதேச நாடுகள் முன் பொறுப்பு கூற வைக்கலாம் என்பதற்கு பிரச்சாயம் செய்யா தயாரக வேண்டும்.

இதில் மூன்றாவது கேள்வி என்னையும் இணைத்துகொள்ள மகிந்தாவை பொறுக்கூற வைக்கும் பிரசாரங்களில் ஈடுபடத்தயாரா எனபதாகும். பதில் வரும் வரையும் இந்த கேள்வியும் இனி கேட்கப்படும்.

இரண்டாவது கேள்வி யாரை வைத்தல்ல. எந்த முறையை வைத்து 100 வருடத்தில் தமிழ் ஈழம் அடையலாம் என்பதாகும். தயவு செய்து இன்னொருமுறை இந்த கேள்விக்கும் முயற்சிக்கவும்.

[size=6]3.மகிந்தாவை பொறுப்பு கூறவைக்க பிரச்சாரம் செய்ய தயாரா?[/size]

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் தயவு செய்து மக்கள் எழுச்சி இல்லை என்று சொல்லாதீங்க. ஒரு மிகச் சிறிய இனம் அதற்கு இந்தளவு எழுச்சி என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. பாலஸ்தீனத்தில மட்டும் எல்லோரும் எழுந்து போராடவும் இல்லை. எல்லோரும் போய் இஸ்ரேல் இராணுவத்துக்கு கல்லெறியவுமில்லை. எங்கள மாதிரித் தான் அவங்களும் உலகெல்லாம் அவங்களும் அகதியாக போயிருக்கிறார்கள். தயவு செய்து இதைப் பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Palestinian_diaspora

மற்றதொன்று பாலஸ்தீனத்திற்கு அத்தனை அரபு நாடுகளின் ஆதரவிருந்தது. எமக்கு அப்படியா?

நாங்கள் எடுத்துக் கொண்ட பாதை ஒரு விழுந்தால் மீழ எழ முடியாததும், எமது இனத்தின் சனத்தொகை வலிமை, வளங்கள் என்பனவற்றுக்கு அப்பாற்பட்டதாகி விட்டதுமே தவிர, மக்கள் எழுச்சியிலும் மக்கள் அர்ப்பணிப்பிலும் மற்றைய போரட்டங்களுக்கு குறைந்ததல்ல.

பாலஸ்தீனியன் சாகிறான் என்பதற்காக எல்லாப் பாலஸ்தீனியனும் துக்க வீடு கொண்டாடவுமில்லை அதே போல் தாயகத்தில் தமிழன் சாக எல்லாத் தமிழனும் நல்லூரில் போய் காவடி எடுக்கவுமில்லை.

என்ன வித்தியாசம் நீங்கள் பாலஸ்தீனியனின் போராட்டத்தை மீடியாவுக்குள்ளால் தொலை தூரப் பார்வையாக பார்க்கிறீர்கள். தமிழனின் போரட்டத்தை பூதக் கண்ணாடி வைத்து பக்கத்திலிருந்து பார்க்கிறீர்கள். அங்கும் போய் நெருங்கி பூதக் கண்ணாடி வைத்துப் பாருங்கள். ஆயிரம் ஓட்டைகள் தெரியும்.

Edited by காட்டாறு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.