Jump to content

ஆட்டிறைச்சி - பிரட்டல் கறி – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை


Recommended Posts

பதியப்பட்டது

post-8572-0-41384400-1349122071_thumb.jp

[size=5]வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள்.

இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது

தேவையான பொருட்கள்:[/size]

[size=5]ஆட்டிறைச்சி இறைச்சி – 1 கிலோ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size]

[size=5]வெண்காயம் – 2 பெரிய வெண்காயம் நீள்மாக வெட்டப் பெற்றவை[/size]

[size=5]சிறிய உருளை கிழங்கு. பெரிதாயின் பாதி போதுமானது - சீவி சிறு துண்டுகளாக வெட்டியவை[/size]

[size=5]பச்சை மிளகாய் – 5 மிளகாய் நீட்டாக வெட்டப் பெற்று இரண்டு துண்டாக்கப்பெற்றவை[/size]

[size=5]உள்ளி: 5 - 6 பற்கள் நீளமாக பிளந்து இரண்டாக வெட்டப் பெற்றவை[/size]

[size=5]கடுகு, பெருஞ்சீரகம் – 1 மேசைக் கரண்டி[/size]

[size=5]கறிவேப்பிலை – 2 -3 காம்பு[/size]

[size=5]றம்பை - சிறிதாக வெட்டிய 8-20 துண்டுகள்

எண்ணெய் – தெவையான அளவு[/size]

[size=5]சரக்கு மிளகாய்த்தூள் – (தேவைக்கேற்ப 2-3 தேக்கரண்டி)[/size]

[size=5]உப்பு - தேவையான அளவு[/size]

[size=5]தேசிக்காய் – பாதி போதுமானது [/size]

[size=5]எண்ணெய்: தேவையான அளவு

செய்கை முறை:[/size]

[size=5]வெட்டி சுத்தமாக்கிய ஆட்டிறைச்சியை, சிறிதளவு உப்பும், கறிமிளகாய் தூளும் சேர்த்து குழைத்து வைக்கவும்.

கறிச்சட்டியில் எண்ணெயை விட்டு சூடாக்கவும் (கறிச் சட்டி ஒட்டாத நொன் ஸ்ரிக்காக இருப்பது நல்லது).

எண்ணெய் சூடு ஏறியதும் கடுகை போட்டு வெடித்ததும், பெருஞ்சீரகம், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும் பின்பு வெட்டிவைத்த வெண்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்து வதங்கி வரும் போது, குழைத்து வைத்த இறைச்சியை சட்டியிலிட்டு பிரட்டி மூடிவிடவும்.

இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும் சட்டியில் உள்ள எண்ணெயிலும் அவிந்து பொரிய விடவும். இடைக்கிடை எரிந்து போகாது இருக்க அகப்பையால் துளாவி விடவும்.

இறைச்சி முக்கால் பதம் பொரிந்ததும் அதற்குள் தேவையான சரக்கு மிளகாய் தூளையும், சிறு துண்டுகளாக வெட்டிய உறுளைக்கிழங்கையும், கணக்காக உப்பும் போட்டு கொஞ்ச தண்ணீரும் சேர்த்து கொதித்து அவிய மூடிவிடவும்.

ஆட்டிறைச்சி அவிந்ததும் நெருப்பைக் குறைத்து பொடுபொடுக்கும் அளவிற்கு (நீர் வற்றும் வரை) அடுப்பில் விடவும். அதன் பின் கருவேப்பிலையைப் போட்டு பிரட்டி மூடிய பின் அடுப்பை அணைத்துவிடவும்.

சிறிது நேரத்தின் பின் இறக்கி எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். இப்போது ஆட்டுப்பிரட்டல் றெடி.

குறிப்பு: சிலர் உறுளைக் கிழங்கு போடுவது இல்லை. உருளைக்கிழங்கு போட்டால் கறி தடிப்பாக இருக்கும். உறைப்பு தேவைக் கேற்ப மிளகாய் தூளை கூட்டியும் குறைத்தும் பாவிக்கலாம்.

இன்னும் சிலர், மசாலைகளை வதக்காது பிறிம்பாக அரைத்தெடுத்து இறைச்சியுடன் போட்டும் சமைப்பார்கள். வினகர் சேர்த்தால் இறைச்சி மெதுமெதுப்பாக இருக்கும். ஆனால் சிலர் விரும்புவதில்லை. இஞ்சி ஒரு சிறுதுண்டை சிரியதாய் சீவி அல்லது குத்திப் போட்டும் சமைப்பார்கள் இஞ்சி இறைச்சியை மெதுமயானதாக்கும் என்பர்.[/size]

[size=5]http://panippulam.co...ames&Itemid=455[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிது நேரத்தின் பின் இறக்கி எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். இப்போது கோழிப்பிரட்டல் றெடி.

வெளி நாடுகளில், சமைக்கும்போது, ஆடும் கோழியாக மாறுகின்றதா, அலை?

திருத்தி விடுங்கள்!

கறி, நல்லாயிருக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அச்சா கோழிப்பிரட்டல் :lol:

Posted

வெளி நாடுகளில், சமைக்கும்போது, ஆடும் கோழியாக மாறுகின்றதா, அலை?

திருத்தி விடுங்கள்!

கறி, நல்லாயிருக்கு!!!

நன்றி புங்கை. பிழை திருத்தியாச்சு. இதைத் தான் ஈ அடிச்சான் கொப்பி என்று சொல்லுறது போலை :lol:

அச்சா கோழிப்பிரட்டல் :lol:

நல்லாச் சாப்பிடுங்கோ நண்டு! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆட்டு இறைச்சியை.... இந்த உலகில், யாழ்ப்பாணத்தாள்... சமைக்கிற மாதிரி,

இந்த, உலகில்... எவனும், சமைக்க மாட்டான். அடிச்சுச் சொல்லுறன். சத்தியமாய்... இது, உண்மையுங்கோ... :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமையளுக்குள்ளும் பிரதேச வாதம் கதைப்பதாக சில பிரதேச வாதிகள் வரப்போயினம் அண்ணா

:D

Posted

இணைப்புக்கு நன்றி அலைமகள் :)

Posted

கறிகளுக்கு உருளைக்கிழங்கு போட்டால், அந்தக் கறியின் (இறைச்சி, நண்டு போன்றவற்றின்) சுவையை உருளைக்கிழங்கு உறிஞ்சி விடும். அதனால் உருளைக்கிழங்கு மிகவும் ருசியாக இருக்கும். ஆனால், இறைச்சியோ நண்டோ சுவையாக இருக்காது. இது பொதுவாக எல்லா மரக்கறிகளுக்கும் பொருந்தும். சிலர் மீன் குழம்பிற்கு வாழைக்காய் போட்டுச் சமைப்பார்கள். அதிலும் வாழைக்காய் சுவையாக இருக்கும். ஆனால், மீனில் சுவை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீ வெந்தயம் உள்ளிக்க ஆட்டு இறைச்சியத்தான் போடுறது :(

  • 5 years later...
Posted

வெள்ளாட்டு  இறைச்சி பிரட்டல்

 
 

sl526989863.jpg

என்னென்ன தேவை?

வெள்ளாட்டு இறைச்சி - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 2,
காய்ந்தமிளகாய் - 50 கிராம்,
மிளகு - 10 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
தனியா- 30 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 10,
தேங்காய் - 1/2 மூடி,
சோம்பு - 10 கிராம்,
பட்டை - 1 துண்டு,
கிராம்பு - 5,
ஏலக்காய் - 3,
தேங்காய் எண்ணெய் - 200 மி.லி., நெய் - 50 மி.லி.,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவைக்கு.

 

எப்படிச் செய்வது?

எலும்பு நீக்கிய வெள்ளாட்டு இறைச்சியை சிறு துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். எண்ணெயில்லாமல் வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகை வறுத்து பொடி செய்து கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் அரைத்த விழுது, மட்டன், அரைத்த பொடி போட்டு கிளறி, மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மட்டன் வெந்ததும் தேங்காய்த்துருவல், நெய் ஊற்றி நன்றாக பிரட்டி, தண்ணீர் முழுவதும் வற்றி வறுவறுவென வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்

 

http://www.dinakaran.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.