Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவன் என்ன செய்யவேணும்.எப்ப செய்ய வேணும் ,ஏன் செய்ய வேணும் என்ற எல்லாவற்றையும் தாங்களே தீர்மானிக்க உரித்துடையவர்கள் என்ற எண்ணம் தான் இன்று அவர்களை இல்லாமலே பண்ணியது .

இப்பவும் அதே நினைப்பு சிலருக்கு .

இளையராஜா கட்டாயம் ஈழ தமிழனை பற்றி பாடியே தீரவேண்டுமா ?

சில வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு நிற்கும் போது "அவர்கள் " வந்து அந்த கடை கதவில் இன்னதிகதி கடை திறக்காது என்ற நோட்டிசை ஒட்டுகின்றார்கள்(அது எல்லா கடைகளுக்கும் ஓட்ட அவர்களே அடித்து வைத்திருக்கும் நோட்டிஸ் ).அவர்கள் போக கடைக்காரர் என்னிடம் சொன்னார் ."என்ரை கடையை எப்ப பூட்டவேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கின்றார்கள்.பாப்பம் எத்தனை நாளைக்கு என்று "

கனடாவில் தடையும் இவர்களால் தான் வந்தது .

ஏன் நாங்கள் இப்பவும் வவுனியாவில வீரமக்கள் தினத்திற்கு சனத்தட்டையே கப்பமும் வாங்கி.. சனத்தின்ர கடையையே பூட்டி ஹர்த்தாலும் அனுஷ்டிசிக்கிறம் தானே.

எல்லாம் மறந்து போச்சுப் போல.. ஹர்த்தால் கலாசாரத்தை உருவாக்கி.. சனத்தின்ர கடையை இழுத்துப் பூட்ட வைச்சு.. சனம் போராட்டம் நடத்துவதா காட்ட யார் முனைஞ்சவை என்று. அவை தான் இப்பமும்.. எப்பவும்.. புலிகளின் பெயரால் உதுகளைச் செய்யினம். இதில.. முன்னாள் இன்னாள் உங்கட கூட்டாளிகளும் அடங்குவினம்.. என்றதை மறந்து போட்டு வாந்தி எடுக்கிறது தான் கூடாது. எடுத்தா அது உங்க மேலையும் சிந்தும். பார்க்க அசிங்கமா இருக்கும். :lol::D

அவங்க யாரோ செய்த குற்றத்திற்கும் சேர்த்து தடை வாங்கினாலும் கூட தயங்காமல் போராடினாங்க. நீங்கள் தடையே இல்லாமல் சுயதடை போட்டிக்கிட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட வரலாற்றையும் பார்க்கனும்.. அதையும் பற்றி கொஞ்சம் வெளில மனசு விட்டு பேசனும்..! உங்கடையல போர்த்து வைச்சுக் கொண்டு அடுத்தவனை நோக்கியே கையை காட்டிக்கிட்டு நிற்கிறதால நீங்கள் சுத்தமாகிட முடியாது..! :D

[size=2]நியானி: நிர்வாகம் சம்பந்தமான கேள்வி நீக்கப்பட்டுள்ளது[/size]

Edited by நியானி

  • Replies 272
  • Views 20.5k
  • Created
  • Last Reply

பல முறை நானும் கேட்டுவிட்டேன்

பதில் தான் இல்லை.

முன்பு புலிகளை விமர்சித்த பலரும் தற்பொழுது வேறு ஏதும் கிடைக்காததாலும் தொடர்ந்து தமது அரிப்பை சொறியவும் தமிழ் மக்கள் மீதான தமது பங்களிப்புக்களை முன்புபோல் செய்யாதிருக்கவுமே இது போன்ற தூற்றுதலில் ஈடுபடுகின்றனர் போலுள்ளது.

உண்மையில் எவருக்காவது தெரிந்திருந்தால்

அல்லது தமிழ் மக்கள் மீதான பணத்தின் மீது அக்கறை இருந்தால் அவர்களை இங்கு விமர்சனம் செய்வது இளைராசாவை இங்கு விமர்சிப்பதைவிட ஆயிரம் மடங்கு பிரயோசனமானது.

செய்வார்களா?

அல்லது

முன்பு செய்தனான்

இப்ப

எல்லோரும் கள்ளர் என்று விட்டு கதவைப்பூட்டிக்கொள்வார்களா?

அல்லது நான் செய்யுறன் அதை வெளியில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று...........???

(புலம் பெயர் மக்களின் இதுபோன்ற பங்களிப்பின் கண்ணாடி தான் வன்னி மக்களின் இன்றைய வாழ்க்கை தரம்)

இல்லை விசுகு .. கனடாவில் இது பரகசியம் ..உங்கள் நண்பர்களைக் கேட்டுப் பார்க்கவும் ..ஏன் பொது ஊடகங்களான TVI, CMR,CTR அப்போ யாருடையவை

இப்போ முதலாளிகள் யார்?

CMR தொடங்க லைசன்ஸ் வாங்க வீடுவீடாக மக்களின் கையெழுத்து எப்படி எதற்காக வாங்கப்பட்டது என்று அறிவீர்களா?

கனடாவில் இருக்கும் அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் மக்கள் பணத்தில் புலிகளின் பினாமிகளால் தொடங்கப்பட்டது என்பதாவது தெரியுமா?

ஊரே அறிந்த பரகசியத்தை தெரியாத மாதிரி"பாவனை" பண்ணிக்கொண்டு யார் சொல்லுங்கள் என்றால் என்ன செய்வது?

நீங்கள் அப்பாவியா? இல்லை பாவியா? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லூல மகுராசா..

கனடா அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு.. ஈராக்கில.. ஆப்கானிஸ்தானில.. சிறீலங்காவில முதலீடு செய்யலாம் என்றால் போராளிகளை பராமரிக்கும்.. ஒரு அடிமைப்பட்ட இனத்திற்காக 3ம் உலக நாடொன்றில் பெரும் அரசுகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் இயக்கம் ஒன்று அதன் தேவைகளுக்காக எதிர்காலத்திற்காக முதலீடுகளை செய்வதில் என்ன தவறு கண்டீர்கள்.

கனடாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் சுய திறமையால் வந்தவர்கள் அல்ல. 90% பேர் அந்த போராட்டத்தை முதலீடாக்கி வந்தவர்கள்..! முதலில் இவற்றை இதய சுத்தியோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடையுங்கள்..!

உலக நடைமுறைகள் புலிகளுக்கு ஒன்று கனடாவுக்கு ஒன்று.. உங்களுக்கு ஒன்றல்ல..! எல்லோருக்கும் எல்லாம்.. பொதுவானதே..! புலிகள் மட்டும் 100% நேர்மையாக இருக்க வேண்டும் மற்றவர்கள் என்னதான் செய்தாலும் அது மன்னிக்கப்படனும் என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்து முதலில் வெளிவாருங்கள்..! புலிகள் பினாமி பற்றி அப்புறம் பேசலாம்..!

உலகில் எதுவுமே நேர்மையற்று இருக்கிறப்போ.. புலிகள் மட்டும் 100% நேர்மையோடு இருக்கனும் என்று எப்படி எதிர்பார்ப்பீர்கள். அவர்கள் அப்படி இருக்கப் போய் தான் இறுதில் இப்படி ஆனார்கள். அவர்களும் கொள்கை கோட்பாடு தர்மம் என்றில்லாமல் இருந்திருந்தால் இன்று அவர்களும் உங்களைப் போல வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.. அடிமைகளாகக் கூட..! :icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் இப்போ மப்பு கிப்பில் இல்லையே.. மீண்டும் நான் எழுதியதை திருப்பி வடிவாகப் படித்து விளங்கிக் கொள்ளவும் :D

சரியாக விளங்கிகொள்ளாது அட்வைஸ் பண்ணுவதைத் தான் சகிக்க முடியவில்லை. :rolleyes: :rolleyes:

புலிகள் சொத்து சேர்த்தது பற்றி குறை சொல்லியிருக்கேனா? யுத்தம் முடிந்த பின்னால் புலிகளும் அழிந்த பின்னால்...இது மனச்சாட்சியின் படி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் கஸ்டப்படும் மக்களுக்காவது பயன்பட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம்.

ஆனால் அப்படி நடக்கவில்லையே.இப்போ யார் யார் புலிகளின் சொத்துகளை ஆண்டு அனுபவிக்கின்றார்கள் .ஏன் இப்படி நடக்கின்றது?

அதைபற்றித் தான் எழுதியிருந்தேன். உங்களுக்கு தில்லிருந்தால் இவர்களைத் தட்டிக் கேளுங்கள் பார்ப்போம்..அது சரி நீங்கள் இப்படி கரைவதைப் பார்த்தால் உங்களுக்கும் பிறங்கை நக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. நான் சொல்வது சரிதானே?

டிஸ்கி: நான் எழுதியதற்கும் நெடுக்கு கேள்வி கேட்டிருப்பதற்கும் ஏதாவது தொடர்பிருக்கா மஹாஜனங்களே.

நெடுக்கின் காதில் யாராவது ஓதி விடுங்கள்.

நெடுக்கு கூக்குரலிடுவது புலிகளின் காலத்து கதையை.

நான் சொல்லுவது புலிகளின் அழிவிற்குப் பின்னாலுள்ள காலக்கதையை

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சொத்துக்களை மேய்ப்பவர்களுக்கு அப்படியே இருந்துகொள்ளுங்கள் என்பது புலிகளின் இறுதிக்கட்ட அறிவுறுத்தலாக இருந்தால்..? :rolleyes: இருக்கலாம் இல்லையா? :D

பிறகு இவர்கள் கொடுத்துவிட அவர்கள் வந்து ஏன் கொடுத்தாய் என்று கேட்டால்?? :lol:

நெடுக்சின் காதில் ஓதமுதல் தமிழீழ விடுதலைப்புலிகளின் பணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவரின் விபரங்களை இங்கே இணைக்க முடியுமா எள்ளாள ராசா .......அதை செய்யுங்கள் .....நெடுக்சிற்கு ஓதுவதை நாம் செய்கிறோம் ....... :D

அவர்கள் எங்கிருந்து வருவார்கள்..கல்லறையில் இருந்து உயிர்த்தெழ அவர்கள் என்ன யேசுவா? என்ற தைரியத்தில் தானே உந்த சுருட்டல்கள். :D :D

தமிழ்ச்சூரியன் தீக்கோழி மண்ணுக்குள் தலையைத் தாட்டுக்கொண்டு நினைக்குமாம் தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று ...

நீங்களும் ஒரு வகையில் தீக்கோழி போலத்தான் ..

ஒண்டுந்தெரியாத பாப்பா

வீட்டுக்குப் போட்டாவாம் தாப்பா :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் எங்கிருந்து வருவார்கள்..கல்லறையில் இருந்து உயிர்த்தெழ அவர்கள் என்ன யேசுவா? என்ற தைரியத்தில் தானே உந்த சுருட்டல்கள். :D :D

நடக்குமென்பார் நடக்காது.. :rolleyes: நடக்காதென்பார் நடந்துவிடும்.. :D

நடக்குமென்பார் நடக்காது.. :rolleyes: நடக்காதென்பார் நடந்துவிடும்.. :D

நடக்கும்ம்ம் ஆனா நடக்காது... :lol:

.

தமிழ்ச்சூரியன் தீக்கோழி மண்ணுக்குள் தலையைத் தாட்டுக்கொண்டு நினைக்குமாம் தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று ...

நீங்களும் ஒரு வகையில் தீக்கோழி போலத்தான் ..

ஒண்டுந்தெரியாத பாப்பா

வீட்டுக்குப் போட்டாவாம் தாப்பா :D

வில்லுக்கு விஜயன் ........மல்லுக்கு வீமன் ....... சடைவதற்கு எல்லாள மகா.............. :D

அது சரி தீக்கோழி கைக்கு பிடிபடுமா ராசா............ :icon_idea:

டொராண்டோவில் நடக்கவிருக்கும் தமிழ் திரைப்படக் கலைவிழாவை தமிழர்கள் புறக்கணிப்போம் – நாம் தமிழர் கனடா அழைப்பு!!

2012/10/08 , 6:18 AM [PDT]

தமிழீழ ஈகர்களின் புனித மாதமாம் கார்த்திகை மாதம் கனடா நாட்டில் டொரோண்டோ நகரில் நடக்கவிருக்கும் தமிழ் திரைப்படக் கலைவிழாவை தமிழர்கள் புறக்கணிப்போம் என நாம் தமிழர் கனடா அழைப்பு விடுத்துள்ளது.

தமிழர்களுக்கான கழியாட்ட காலம் ஒவ்வொருவருடத்திலும் 10 மாதங்கள்தான் என்பது விதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. எல்லாம் இழந்து அனாதையாக்கப்பட்ட வைகாசி (May) மாதம். மற்றும் எம்மின மானங்காககவென தம்முயிரீந்த மானமாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை (November) தவிர்ந்த மற்ற மாதங்களே கழியாட்ட நிகழ்வுகளை நடாத்த வேண்டுகிறோம் என நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.naamtamil...வில்-நடக்கவிருக

விழி……. எழு…...!

இன மானத்தை விலைபேச அனுமதித்தால் - அது எம் குலத்திற்கே ஈனமடா………

எம் இன தமிழுறவுகளின் கவனத்திற்கு!

ஓட்டுமொத்த உலகத்தமிழினத்திற்கும் கார்த்திகை (நவம்பர்) மாதம் என்பது மிகமிக புனிதமான மாதமாகும். இக்காலத்தில் எமக்காக, எம் சந்ததிக்காக அடிமை விலங்கொடிக்க தம்மை தமது வாழ்வை தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் துச்சமென மதித்தும் தியாகந்செய்த எங்கள் மானமாமறவர்களை எம் நெஞ்சங்களில் ஏந்தி விழிநீர் சொரிந்தும் நெஞ்சுருகி தளர்ந்திடாத உறுதிதனை எமக்கும் தாருங்களென அவர்தம் கல்லறைகளின் முன்பும் கைகூப்பித் தொழும் மாதமே இந்தக் கார்த்திகை என்னும் புனித மாதமாகும்.

இப்புனித மாதந்தனில் ஆட்டம், பாட்டம், களியாட்டம், குத்தாட்டம் என எவராகிலும் எம் மத்தியில் நடாத்த முற்படுவரேல் அது எம்மாவீரர்களின் ஆன்மாதனையும், அவர்தம் கல்லறைகள் தனையும் களங்கப்படுத்துவதற்கு ஒப்பானதாகும்.

ஆதலில் இத்தகைய செயல்கள்தனை மானமுள்ள எந்தவொரு தமிழன் மட்டுமல்ல மனிதமுள்ள எந்தவொரு மனிதனும் செய்திடத்துணியான். இப்படியொரு செயலை எவராவது செய்திடத் துணியின் அவர் இனத்துரோகியே அன்றி வேறு இலர்.

இதுதனை எத்தனை ஆயிரம் மாவீரச் செல்வங்களையும் எங்கள் மண்ணிற்காகவும், மண்ணின் விடிவிற்காகவும் தந்து பெருமைமிக்கதொரு குடிமக்களாகத் திகழும் எம் அனைத்துத் தமிழ் உறவுகளையும், எம் அனைத்து தமிழ் வர்த்தகப் பெருமக்களையும், எம் அனைத்துத் தமிழ்ஊடக நண்பர்களையும் மிகவும் பணிவாகக் கேட்டுக் கொள்வது என்னவெனில் தயவுகூர்ந்து அறிந்தோ அறியாமலோ இத்தகைய துரோகங்களுக்குத் துணைபோகவேண்டாமெனவும், இவர்களையும் இவர்களின் செயல்களையும் புறந்தள்ளுவதன்மூலம் நாம் ஒரு மானமுள்ள கூடவே மனிதமுள்ள தமிழர்களென தொடர்ந்து நிலைநாட்டுவோம்.

பி.கு:

ஈகர்களின் புனிதமாதமாம் கார்த்திகை(நவம்பர்). இனப்படுகொலைகளின் கொடுமை சுமக்கும் வலிதந்த மாதமாம் (மேமாதம்) எனும் இவ்விரு மாதங்கள் தவிர்ந்த ஏனைய மாதங்கள் பத்திலும் எவராவது எந்தவொரு களியாட்ட விழாக்களைச் செய்வதில் தமிழ் மக்களாகிய எங்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையென்பதனை மிகவும் வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழ தாகம் தணியாது! தமிழ்நிலம் எவர்க்கும் பணியாது!!

நாம்தமிழர் கனடா

தொடர்புகளுக்கு:

நாம்தமிழர் கனடா

naamthamilar.canada@hotmail.com

புலிகள் தானே, களவெடுத்தால் என்ன? கொள்ளை அடித்தால்என்ன ? கொலை என்ன செய்தால் என்ன? என்று நினைக்கின்றார்கள் போலிருக்கு ?.

நியாயம் தானே .

பெயர்கள் தருகின்றேன் நீங்கள் ஏதும் செய்வதாக இருந்தால் .

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா கச்சேரிக்கு எதிரான போராட்டத்திற்கு சமாந்தரமாக இன்னும் இரு போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு தமிழ் உள்ளங்களுக்கு உண்டு..! :rolleyes:

1) ஒவ்வொரு கிழமையும் இறக்குமதியாகும் சிங்களப் பொருட்கள்..! :unsure: இப்பொருட்கள் மாவீரர் மாதத்தில் மட்டுமின்றி மாவீரர் நாளிலேயே இறக்குமதியாகின்றன. :blink: போராளிகள் மாவீரர் ஆனதற்கு சிங்கள அரசின் ஏற்றுமதி வருமானமும் முக்கிய பாத்திரம் வகித்தது என்பதை யாரும் இங்கு மறந்துவிடக்கூடாது. ஆகவே குறைந்தபட்சம், சிங்களப் பொருட்களை விற்கும் தமிழ்க்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யலாம். :rolleyes:

2) சிறீலங்கன் விமானத்தின்மூலம் லண்டன், ஜேர்மனியின் நகரங்களில் இருந்து தமிழ்ப் பயணிகள் இலங்கைக்கு அள்ளுப்படுகிறார்கள். :rolleyes: இந்த வருமானமும், இதன்மூலமான சுற்றுலா வருமானமும் சிங்கள அரசின் போர் வெற்றியில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. :unsure: ஆகையால், குறைந்தபட்சம் விமான நிலையங்களில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டும். :icon_idea:

புலிகள் தானே, களவெடுத்தால் என்ன? கொள்ளை அடித்தால்என்ன ? கொலை என்ன செய்தால் என்ன? என்று நினைக்கின்றார்கள் போலிருக்கு ?.

நியாயம் தானே .

பெயர்கள் தருகின்றேன் நீங்கள் ஏதும் செய்வதாக இருந்தால் .

போடுங்கள் நண்பா அதை அறியத்தானே இவ்வளவு காலமும் சும்மா வாதாடிக்கோடு ...ஏன் இதெல்லாம்,....... பெயரையும் ,அவர்கள் சம்பந்தமான விபரத்தையும்,முடிந்தால் படங்களையும் போடுங்கள் .இவர்களை நாம் இனம் காணவேணும் ....

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருக்கும் என்னுடைய உறவுக்காரர்கள் போவதாக இருந்தவர்களை நான் மறித்து விட்டேன் அவர்களில் ஐந்து பெயர் போகமாட்டார்களாம் மற்றைய உறவுகாரர்களையும் நண்பர்களையும் தொடர்பு கொண்டு தடுக்க உள்ளேன்.

புலிகள் தானே, களவெடுத்தால் என்ன? கொள்ளை அடித்தால்என்ன ? கொலை என்ன செய்தால் என்ன? என்று நினைக்கின்றார்கள் போலிருக்கு ?.

நியாயம் தானே .

பெயர்கள் தருகின்றேன் நீங்கள் ஏதும் செய்வதாக இருந்தால் .

உங்கள் இயக்கம் ஒன்றும் செய்யவில்லையாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு

இங்கு எழுதப்படும் பல விடயங்களில் ஒன்று கொள்ளை அடித்து வாழுகிறார்கள் என்பது.

ஆனால் இங்கு புலிகளின் சொத்துக்கள் பற்றியதே இந்த பழி சுமத்தல் என்றால் அதிலிருந்து

ஒரு முடிவுக்கு வருவதாயின் முள்ளி வாய்க்காலுக்கு முன்

முள்ளி வாய்க்காலுக்கு பின் என்ற கால கட்டங்களாக அவற்றை பிரிக்கணும்.

முள்ளி வாய்க்காலுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்கள் பற்றி பிரான்சில் சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாக கதைத்தேன். அதற்கு அவர்கள் விளக்கம் தந்தார்கள். அந்த சொத்துக்கள் வாங்கப்பட் ட நேரங்களில் அது சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொண்டவன் என்ற அடிப்படையில் அவர்கள் சொல்லும் காரணம் சரியாகவே உள்ளது. எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட. ஆனனாலும் அந்த சொத்துக்கள் மக்கள் சொத்துக்கள். அவை அனைத்தையும் மக்கள் அறிவர். எவரும் சுருட்டிவிட முடியும் என நான் நினைக்கவில்லை.

இதையே உறவுகளிடமும் கேட்கின்றேன்.

அந்த சொத்துக்கள் சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப்பேசுங்கள். இவை மக்கள் சொத்துக்கள் என்பதையும் அவை பற்றி எல்லா மக்களுக்கும் தெரியும் என்பதையும் எவரும் அவற்றை சுருட்ட அனுமதிக்கமாட்டோம் என்பதையும் தெரிய வையுங்கள்.

என்னைப்பொறுத்தவரை

அதை இதைக்காட்டி எனது கடமைகளை புறந்தள்ளுவது தான் கள்ளத்தனம்.

தாயகத்தில் மாவீரர் நாளை நினைவு கூர்வார்கள். வெளிநாடுகளில் ஒரு களியாட்ட நிகழ்வுகளுக்கு ஒப்பாக (நகைச்சுவை நாடகங்கள், நடனங்கள், நகைச்சுவையான உரைகள்...) கொண்டாடுவார்கள். வெளிநாடுகளில் இது நடத்துபவர்களுக்கு பெரும் பணத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு நிகழ்வு.

ஈழத்தில் போராட்டம் இல்லாத நிலையில், இன்றைக்கு அதை சொல்லி பணம் அறவிட முடியாத நிலையில், இது போன்ற கொண்டாட்டங்களே பணம் பண்ணுவதற்கான மிச்சம் உள்ள வழிகள். இளையராயாவின் விழாவிற்கு பெருந்தொகையான மக்கள் சென்று, பெரும் பணத்தையும் செலவு செய்து விட்டு, மாவீரர் கொண்டாட்டத்திற்கு வராது விட்டு விடுவார்களோ என்பதே இன்றைக்கு சிலரின் அச்சமாக இருக்கிறது.

அதனாலேயே புதிதாக மாவீரர் மாதம் என்கின்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நான் கூகிளில் "மாவீரர் மாதம்" என்கின்ற ஒன்றை தேடிப் பார்த்தேன். ஒரு கவிதையைத் தவிர நவம்பரை மாவீரர் மாதம் என்று குறிப்பிடுகின்ற பழைய பதிவுகள் எதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்துமே 2012 செப்டெம்பருக்கு பிந்திய பதிவுகளாகவே இருக்கின்றன.

உறவுகளுக்கு

இங்கு எழுதப்படும் பல விடயங்களில் ஒன்று கொள்ளை அடித்து வாழுகிறார்கள் என்பது.

ஆனால் இங்கு புலிகளின் சொத்துக்கள் பற்றியதே இந்த பழி சுமத்தல் என்றால் அதிலிருந்து

ஒரு முடிவுக்கு வருவதாயின் முள்ளி வாய்க்காலுக்கு முன்

முள்ளி வாய்க்காலுக்கு பின் என்ற கால கட்டங்களாக அவற்றை பிரிக்கணும்.

முள்ளி வாய்க்காலுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்கள் பற்றி பிரான்சில் சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாக கதைத்தேன். அதற்கு அவர்கள் விளக்கம் தந்தார்கள். அந்த சொத்துக்கள் வாங்கப்பட் ட நேரங்களில் அது சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொண்டவன் என்ற அடிப்படையில் அவர்கள் சொல்லும் காரணம் சரியாகவே உள்ளது. எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட. ஆனனாலும் அந்த சொத்துக்கள் மக்கள் சொத்துக்கள். அவை அனைத்தையும் மக்கள் அறிவர். எவரும் சுருட்டிவிட முடியும் என நான் நினைக்கவில்லை.

இதையே உறவுகளிடமும் கேட்கின்றேன்.

அந்த சொத்துக்கள் சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப்பேசுங்கள். இவை மக்கள் சொத்துக்கள் என்பதையும் அவை பற்றி எல்லா மக்களுக்கும் தெரியும் என்பதையும் எவரும் அவற்றை சுருட்ட அனுமதிக்கமாட்டோம் என்பதையும் தெரிய வையுங்கள்.

என்னைப்பொறுத்தவரை

அதை இதைக்காட்டி எனது கடமைகளை புறந்தள்ளுவது தான் கள்ளத்தனம்.

உங்கள் கருத்துடன் முழுமையாக உடன் படுகிறேன் ........அந்த வகையில் எனக்கு தெரிந்த சில விடயங்களையும் இங்கு

குறிப்பிட வேண்டியது எனது பொறுப்பு.........இன்று நெதர்லாந்து நாட்டில் மனித நேயப்பணியில் ஈடுபட்ட 5 நபர்களும்

சிறையில் உள்ளார்கள் .நீங்கள் அறிந்ததே .....இவர்கள் விசாரணை நடை பெரும் போது ஒவ்வொரு தடவையும் நீதி மன்றத்திற்கு

சென்று அங்கு நடந்ததை அறிந்தவன் என்ற வகையில் சில கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறேன் ....

தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ,அதாவது எம் தாயக விடிவிற்காய் புலம் வாழ உறவுகளிடம் சேர்க்கப்பட்ட பணம்

நேதேர்லாந்து கிளை ஊடாகவே நடை பெற்றது என்பது இந்த நாட்டின் குற்றச்சாட்டு .....பல கோணத்தில் ,இங்கு உள்ள தமிழர்களிடம்

பல கோணத்தில்.விரிவாக நடை பெற்ற விசாரணை மூலம் அவர்களால் இவ்வளவு பெரும் தொகைப்பணம் எங்கே போனது என்பதை அறிய முடியவில்லை

அதற்காக இந்த நீதி அமைச்சு சர்வதேச காவல்துறையி உதவியுடனும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணைகளை

மேற்கொண்டது ......சிறிலங்காவிற்கு சென்று அங்கு kp உட்பட பலரை விசாரித்தது .....முடிவு அவர்களால் ஒரு துரும்பை கூட எடுக்க முடியவில்லை .......அந்த விசாரணைகளிலே இன்னொரு விடயத்தையும் அறிந்து கொண்டேன் ....புலம்பெயர் வாழ மக்களிடம் சேர்க்கப்படும் பணம் மனித நேயப்பநியாளர் ஒருவரிடம் 8 மணித்தியாலங்கள் மட்டுமே கையில் இருக்குமாம் .பின் அது கை மாறி கைமாறி இறுதியில் போக வேண்டிய இடத்திற்கு போகுமாம்

இறுதியாக போன இடத்தை தேடி யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லையாம் ........இது உண்மையாக இருப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளதே என்னில் ,இரகசியக்காப்பு,என்ற விடயத்தில் தமிழாழ விடுதலைப்புலிகளை விட்டால் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றே அந்த விவாதங்கள் மூலமும்,விசாரணைகள் மூலமும் அறியக்கூடியதாய் இருந்தது .........ஆத்திரமடைந்த இந்த ஒல்லாந்த நாடு ,அந்தப்பணத்தை அனுபவிக்கமுடியவில்லையே என்ற ஏமாற்றம் கொண்ட இந்த டசுக்கர்ன் தீர்ப்பிட்டன் ...விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை .......ஆனால் இந்த மனித நேய பணியாளர்கள் குற்றவாளிகள் ..........ஆங்கிலேயன் வீரபாண்டிய மன்னனுக்கு தீர்ப்பளித்தது போல் .......இதிலிருந்து சிந்திப்பவன் என்ற வகையில் என்னால் என்ன உணர முடிகிறதோ............முடிந்தால் நீங்களும் உணர்ந்துகொள்ள முயற்சியுங்கள்..............இந்த தகவல்கள் நெதர்லாந்து நீதிமன்றில் நான் கேட்டவை,பார்த்தவை....நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் போராட்டம் இல்லாத நிலையில், இன்றைக்கு அதை சொல்லி பணம் அறவிட முடியாத நிலையில், இது போன்ற கொண்டாட்டங்களே பணம் பண்ணுவதற்கான மிச்சம் உள்ள வழிகள். இளையராயாவின் விழாவிற்கு பெருந்தொகையான மக்கள் சென்று, பெரும் பணத்தையும் செலவு செய்து விட்டு, மாவீரர் கொண்டாட்டத்திற்கு வராது விட்டு விடுவார்களோ என்பதே இன்றைக்கு சிலரின் அச்சமாக இருக்கிறது.

மிகவும் கீழ்த்தனமான விமர்சனம்

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. :( :( :(

இல்லை விசுகு, நீங்கள் யதார்த்தத்தை பார்க்க வேண்டும். மாவீரர் தின நிகழ்வு என்பது ஒரு கோயில் நிகழ்வு போன்று ஆகி நீண்ட நாட்கள் ஆகி விட்டது.

எப்படி கோயிலுக்கு ஒரு 20 வீதமானவர்கள் பக்தியுடன் போக, மற்றவர்கள் பம்பல் பார்க்க போவார்களோ அப்படித்தான் வெளிநாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளும் ஆகி விட்டன. முன்னே அமர்ந்திருக்கும் மாவீரர் குடும்பங்களும், சில உணர்வாளர்களும் நிகழ்வில் கவனமாக இருக்க பெரும்பாலானவர்கள் வேறு விடயங்களில் கவனமாக இருப்பார்கள்.

இப்பொழுது இப்படியானவர்கள் நவம்பம் 3ஆம் திகதியே இளையராஜாவின் நிகழ்வுக்கு சென்று போக்குவரத்து, நுளைவுச்சீட்டு, சிற்றுண்டிகள், அது, இது என்று பணத்தை செலவழித்தால், நவம்பர் 27இல் இவர்களின் "வாங்கு திறன்" குறைந்து விடும்.

இதன் மூலம் நவம்பர் 27 கொண்டாட்டத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறையலாம், அல்லது சென்றாலும் செலவளிப்பது குறையலாம். ஆகவே நவம்பர் 27 கொண்டாட்டத்தின் வருமானம் பாதிக்கப்படும். இதுவும் எதிர்ப்பின் ஒரு காரணமாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மிகவும் கீழ்த்தனமான விமர்சனம்

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.

நீங்கள் அதிதீவிர தேசீயப்பற்றுள்ளவர்களாக உங்களை வெளிப்படுத்துகின்றீர்கள். அது உங்கள் உரிமை சுதந்திரம். இவ்வாறான உணர்ச்சித் தேசீயத்தால் பலனடைவது தாயகம் அல்ல மாறாக புலத்தில் இருக்கும் பெரும் பணக்காரர்கள். உங்களைப் போன்றவர்களும் உங்கள் உணர்ச்சியும் பெரும் முதலீடு அவர்களுக்கு. கனடாவை பொறுத்தவரை புலம்பெயர்ந்தவர்களில் குறிப்பிட்ட சிலரின் கைகளிலேயே தேசீயம் அதுசார்ந்த அனைத்தும் உள்ளது. அதற்குள் ஏராளமான போட்டிகள் பணத்தையும் அடயாளத்தேடலையும் அடிப்படையாகவைத்து நடக்கின்றது. கனடாவில் இருக்கும் பெருமளவிலான மக்கள் இவ்வாறானவர்களிடம் இருந்து மிக விலத்திவிட்டார்கள். உங்களிடம் அளவுகடந்த தேசீயம் இருந்து என்னபயன்? தவறானவர்களை தலமைத்துவப்படுத்தவும் அவர்கள் சம்பாதிக்கவுமே அது வழிவகுக்கின்றது. உங்களிடம் இருக்கும் புனிதமான தேசப்பற்றை எதற்கு பணந்தேடும் ஒரு சுயநலக் கூட்டத்திற்கு வக்காலத்துவாங்க பயன்படுத்துகின்றீர்கள் என்பதுதான் புரியவில்லை.

[size=2]நியானி: மேற்கோள் காட்டிய கருத்து நீக்கப்பட்டுள்ளது[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை விசுகு, நீங்கள் யதார்த்தத்தை பார்க்க வேண்டும். மாவீரர் தின நிகழ்வு என்பது ஒரு கோயில் நிகழ்வு போன்று ஆகி நீண்ட நாட்கள் ஆகி விட்டது.

இப்பொழுது இப்படியானவர்கள் நவம்பம் 3ஆம் திகதியே இளையராஜாவின் நிகழ்வுக்கு சென்று போக்குவரத்து, நுளைவுச்சீட்டு, சிற்றுண்டிகள், அது, இது என்று பணத்தை செலவழித்தால், நவம்பர் 27இல் இவர்களின் "வாங்கு திறன்" குறைந்து விடும்.

இதன் மூலம் நவம்பர் 27 கொண்டாட்டத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறையலாம், அல்லது சென்றாலும் செலவளிப்பது குறையலாம். ஆகவே நவம்பர் 27 கொண்டாட்டத்தின் வருமானம் பாதிக்கப்படும். இதுவும் எதிர்ப்பின் ஒரு காரணமாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

இல்லை

மாவீரர் தினத்திற்கான செலவு என்பது மக்களால் ஒவ்வொரு வருடமும் தாமாக ஒதுக்கப்படுவது.

அதற்கும் 3 நவம்பரில் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு முன் நடக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

மவீரர் நிகழ்வில் எவரையும் வற்புறுத்தி எதையும் திணிப்பதில்லை. மக்களே விரும்பி அவற்றை வாங்குகின்றனர்.

நிகழ்சிகள் பற்றிய குறைகளை விலக்க நீங்களும் ஏதாவது நிகழ்ச்சிகளை கொடுக்கலாமே.........

மாவீரர் மண்டபத்துக்கு ஏதாவது பொருளுதவி செய்து விட்டீர்களா?

நான் செய்துவிட்டேன்.

. உங்களிடம் இருக்கும் புனிதமான தேசப்பற்றை எதற்கு பணந்தேடும் ஒரு சுயநலக் கூட்டத்திற்கு வக்காலத்துவாங்க பயன்படுத்துகின்றீர்கள் என்பதுதான் புரியவில்லை.

எங்கு நான் அவர்களுக்கு வக்காலத்து வாங்கினேன் என்று சொல்லுங்கள்.

அவர்களை இனம் காட்டுங்கள்.

நேரே எச்சரியுங்கள். எமக்கு எல்லாம் தெரியும் என்பதை நினைவு படுத்துங்கள் என்று தானே சொன்னேன்.

உங்கள் கருத்துப்படி பார்த்தால்

நாம் எல்லோரும் கள்ளர் என்றுவிட்டு எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கணும் போலுள்ளது.

Edited by விசுகு

உங்கள் கருத்துப்படி கார்த்தால்

நாம் எல்லோரும் கள்ளர் என்றுவிட்டு எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கணும் போலுள்ளது.

எல்லோரும் கள்ளர் என்பது கிடையாது. இப்போது இங்கே இசை நிகழ்ச்சியை குழப்ப முற்படுபவர்கள் தேசீயப் பற்றினால் மாவீரர் பற்றினால் இல்லை என்பது சர்வ நிச்சயம். ஒரு சிலரே இதை ஆரம்பிக்கின்றாரகள் அவர்களுக்கு பணமும் நான் பெரிது நீ பெரிது என்ற அடயாளப்போட்டியும் பிரதானமானது. ஆனால் அவர்கள் ஆரம்பித்துவிட அதன் பின்னால் செல்பவர்கள் உண்மையாக தேசீயப்பற்றுள்ளவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை ஆபத்தானது என்பதையே சுட்டிக்காட்டுகின்றேன்.

விசுகு,

நான் இதில் குறிப்பிட்டது உங்களைப் போன்று மாவீரர் நாளை இனக் கடமையாக கருதுகின்ற 20 வீதமானவர்களை அல்ல. உங்களைப் போன்றவர்கள் நிச்சயமாக அதற்கான பங்களிப்பை செய்து, கடன் வாங்கியாவது போவார்கள்.

ஆனால் நான் குறிப்பிடுவது பம்பலுக்கு போகும் மற்றவர்களைப் பற்றி. சிற்றுச்சாண்டிச் சாலைகள், அங்கே போடுகின்ற மற்றைய கடைகள் இலக்கு வைப்பதும் இவர்களைத்தான்.

நவம்பர் 3இல் ஏற்படுகின்ற செலவு இவர்களின் வாங்கு திறனில் தாக்கத்தை ஏற்படுத்தினால் நவம்பர் 27இல் வருமானம் பாதிக்கப்படும். இதைத்தான் குறிப்பிடுகிறேனே தவிர, உணர்வோடு மாவீரரை வணங்கும் உங்களைப் போன்றவர்களை அல்ல.

Edited by சபேசன்

நீங்கள் அதிதீவிர தேசீயப்பற்றுள்ளவர்களாக உங்களை வெளிப்படுத்துகின்றீர்கள். அது உங்கள் உரிமை சுதந்திரம். இவ்வாறான உணர்ச்சித் தேசீயத்தால் பலனடைவது தாயகம் அல்ல மாறாக புலத்தில் இருக்கும் பெரும் பணக்காரர்கள். உங்களைப் போன்றவர்களும் உங்கள் உணர்ச்சியும் பெரும் முதலீடு அவர்களுக்கு. கனடாவை பொறுத்தவரை புலம்பெயர்ந்தவர்களில் குறிப்பிட்ட சிலரின் கைகளிலேயே தேசீயம் அதுசார்ந்த அனைத்தும் உள்ளது. அதற்குள் ஏராளமான போட்டிகள் பணத்தையும் அடயாளத்தேடலையும் அடிப்படையாகவைத்து நடக்கின்றது. கனடாவில் இருக்கும் பெருமளவிலான மக்கள் இவ்வாறானவர்களிடம் இருந்து மிக விலத்திவிட்டார்கள். உங்களிடம் அளவுகடந்த தேசீயம் இருந்து என்னபயன்? தவறானவர்களை தலமைத்துவப்படுத்தவும் அவர்கள் சம்பாதிக்கவுமே அது வழிவகுக்கின்றது. உங்களிடம் இருக்கும் புனிதமான தேசப்பற்றை எதற்கு பணந்தேடும் ஒரு சுயநலக் கூட்டத்திற்கு வக்காலத்துவாங்க பயன்படுத்துகின்றீர்கள் என்பதுதான் புரியவில்லை.

உங்கள் கருத்தும் மூளைச்சலவை செய்யும் ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் .....எங்கள் தேசியப்பற்றும் ,பணக்காரருக்கும் என்ன சம்பந்தம்.........அன்றிலிருந்து இன்றுவரை அதே மனிதனாகத்தான் வாழ்கிறேன் ..........நான் பார்க்கும் மனித நேய பணியாளர்கள் முள்ளிவைக்காலுக்கு முன் எப்படி மாவீரர் தினத்தை செய்ய முயற்சித்தார்களோ முள்ளி வாய்க்காளுக்குப்பின்னும் அப்படியே செய்கிறார்கள் .....எந்த உணர்வோடு அன்று இருந்தார்களோ ...இன்றும் அதே போலவே இருக்கிறார்கள் ......நன் வாழும் நாட்டில் இதுதான் நியதி ............எங்கள் கருத்துக்களால் இங்கு எவனும் பணக்காரன் ஆகவில்லை ..மாறாக பல தியாகங்களை செய்து அறுந்து நிர்க்கதியாக்கும் நிலையிலேயே இருக்கிறான்...........கனடாவில் நிலைமை உங்கள் பதிலுக்கு கனடாவில் வாழும் ஒருவரே பதில் சொல்ல வேண்டும் ...........என்னில் கனடாவில் நடப்பது எனக்கு தெரியாது ....நீங்கள் கனடாவை எனக்கு உதாரணம் காட்டதேவை இல்லை ..நான் வாழும் நாட்டில் மாவீரை தினம் செய்பவர்களின் உணர்வோடுதான் எதிர்க்கருத்தேழுதினேன் ........நீங்கள் மூக்கை நுழைத்து என் கருத்துக்கு குவாட் பண்ணுவதை பார்க்கும்போது ..........எனக்கு உங்கள் மீது சந்தேகம் வருகிறது .........என்ன சந்தேகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ...........ஒட்டு மொத்தத்தில் போராட்டத்தின் அடையாளமாய் ,இலட்சியமாய் .எம் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் புனிதமான மாவீரர் தினத்தையும் உங்கள் ஒன்றுக்கும் உதவாத கருத்தால் நிறுத்தி விடலாம் என்ற பாணியையே உங்கள் வாதம் காட்டி நிற்கிறது ..............நன்றி

[size=2]நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது[/size]

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.