Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இறுதிக்கட்டப் போரானது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மனிதப் பேரழிவு! - Frances Harrison கட்டுரை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரானது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மனிதப் பேரழிவு என போர் முடிவுக்கு வந்த பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் கூறியதாக Frances Harrisonதெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடமையாற்றிய பி.பி.சி செய்திச் சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான Frances Harrison கடந்த 04ஆம் திகதி Open Democracy எனும் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது. இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் வைத்தியசாலைகள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வைத்திய கலாநிதி நிரோன் (உண்மையான பெயரல்ல) நன்கு தெரிந்திருந்தார்.

வைத்தியசாலையை இடம் மாற்றுவது குறித்து சிறிலங்கா படைத்தரப்பினருக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அறிவித்த பின்னரும், புதிதாக மாறிய இடங்களை இலக்கு வைத்து சிறிலங்கா படைத்தரப்பினர் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதாக நிரோன் தெரிவித்துள்ளார்.

இப்போரின் போது காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளித்த வைத்திய கலாநிதி நிரோன் அரசியல் தஞ்சம் கோரி தற்போது அத்திலாந்திக் கரையோரத்தில் உள்ள நாடு ஒன்றில் வாழ்ந்து வருகின்றார். இவருடன் வாழும் ஏனைய அரசியல் அகதிகளுக்கு நிரோன் குறித்து அதிகம் தெரியாது. ஆனால் வைத்திய கலாநிதி நிரோனால் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உயிருடன் வாழும் இலங்கையிலுள்ள மக்கள் பலர் அவரின் உறவுகளைச் சந்தித்து, தமது உயிரைக் காப்பாற்றியமைக்காக நன்றி தெரிவித்து வருகின்றனர். இப்போரின் போது காயமடைந்து தற்போது உயிருடன் வாழ்ந்து வருபவர்களின் மனங்களில் வைத்திய கலாநிதி நிரோன் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேவேளை, தான் வாழும் நாடு தொடர்பில் இலங்கையிலுள்ள தனது நண்பர்களிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிரோன் கூறியுள்ளார். எமது சாட்சியங்கள் எவ்வளவு முக்கியதானது என்பதை இலங்கை அதிகாரிகள் உணர்ந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போரின் போது இறுதி ஐந்து மாத காலப்பகுதியிலும் 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இப்போரின் போது போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் உள்ள போதிலும், சர்வதேச சட்டங்களை மீறி சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு தெரிவித்திருந்தது.

போர் இடம்பெற்ற பிரதேசத்தில் இருந்து தான் வெளியேறுவதற்குரிய சந்தர்ப்பங்களைக் கொண்டிருந்த போதிலும், காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனும் கடமை உணர்வுடன் தொடர்ந்தும் அங்கிருந்து பணியாற்றியதாக வைத்திய கலாநிதி நிரோன் தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற பிரதேசத்தில் இருந்து வெளியேறாது விட்டால் அவரின் மாதாந்தச் சம்பளம் நிறுத்தப்படும் என சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், அதனைப் பொருட்படுத்தாது காயப்பட்ட மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி வைத்திய கலாநிதி நிரோன் அங்கிருந்து தொடர்ந்தும் பணியாற்றியுள்ளார்.

போர் மிகவும் தீவிரமடைந்த நிலையில், நிரோன் தனது வைத்தியசாலையை பொதுக் கட்டடங்கள், வீடுகள் மற்றும் கூடாரங்கள் போன்றவற்றில் சத்திர சிகிச்சைகளை செய்து வந்தார். இறுதியில் போர் மிக ஒடுங்கிய நிலப் பிரதேசத்துக்குள் வந்து பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சுற்றிவளைக்கப்பட்ட போது, நிரோன் மரங்களுக்கு கீழ் வைத்து சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார்.

அதேவேளை, 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உடையார்கட்டு வைத்தியசாலையில் தன்னுடன் கூடப் பணியாற்றிய மருத்துவ தாதி ஒருவர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டதையும் வேதனையுடன் நினைவு கூர்ந்த நிரோன், இதன்போது தன்னுடன் பணிபுரிந்த மேலும் பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட ஜனவரி மாதத்தின் இறுதி பத்து நாட்களில் மட்டும் 2000 எறிகணைகள் வீசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, போரின் போது முக்கியமான மருந்துப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை காணப்பட்டது. பொதுவாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடடுப் பிரதேசத்தில் இருந்த வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை சிறிலங்கா அரசாங்கமே வழங்கி வந்தது. ஆனால் போர் உக்கிரமடைந்த போது, தேவையான மருந்துப் பொருட்களை அனுப்புவதில் சிறிலங்கா அரசாங்கம் கரிசனை கொண்டிருக்கவில்லை. இது தொடர்பில்

வைத்தியர்களால் பலதடவை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் கூட, சிறிலங்கா அரசாங்கத்தால் தேவையான மருந்துப் பொருட்களை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நடவடிக்கை நீதிக்குப் புறம்பான ஒரு செயல் என இராஜதந்திரிகள் எச்சரித்திருந்ததை 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது.

சிறிலங்கா அரசாங்கத்தை குழப்பும் வகையில் வைத்தியர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக போர் வலயத்தில் பணியாற்றிய வைத்தியர்கள் பகிரங்கமாக கூறியிருந்தனர்.

அதேவேளை, போர் வலயத்தில் இருந்த வைத்தியசாலைகளில் இரத்தத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்ட போது, உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டியிருந்த 16 வயதுச் சிறுமி ஒருவருக்கு இரத்தம் ஏற்ற வேண்டியிருந்த நிலையில், தனது இரத்தத்தை ஏற்றி அச்சிறுமிக்கு சத்திர சிகிச்சை செய்ததாக வைத்திய கலாநிதி நிரோன் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குழந்தைகளுக்கு பால்மா வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள் மீது சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளித்ததை தன்னால் மறக்க முடியாது என அவர் கூறுகின்றார்.

போரின் போது காயமடைந்த சிறுவர்களின் இரத்த நாளங்கள் சிறியதாக காணப்பட்டதால் அவர்களுக்கு ஊசி போடுவதற்கு தாம் சிரமப்பட்டதாக கூறும் நிரோன், இந்நிலையில் சிறுவர்களின் உடம்பில் சிறிதாக வெட்டி பின்னர் அதன் ஊடாக ஊசி மருந்துகளை ஏற்றியதாகவும், அப்போது அவர்கள் அழுதமை தன்னை நெகிழ வைத்ததாகவும் தெரிவிக்கின்றார்.

கட்டிடம் ஒன்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் வைத்து சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட போது, அக்கட்டிடத்தின் கூரையில் விழுந்த வெடித்த குண்டு கொத்துக் குண்டு எனத் தான் நம்புவதாகவும் நிரோன் தெரிவித்துள்ளார். மக்களின் இருப்பிடங்களை இலக்கு வைத்து சிறிலங்கா படைத்தரப்பால் கொத்துக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட, இத்தகைய குண்டுகளை தாம் பயன்படுத்தவில்லை என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகின்றது.

அதேவேளை, இன்னொரு சம்பவத்தின் போது வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலின் சிதறல்களால் தான் காயமுற்றதாக குறிப்பிடும் நிரோன், இது பல ஆண்டு காலமாக தான் சிகிச்சை அளித்த காயங்களை விட வேறுபட்ட தாக்கத்தை கொடுத்திருந்ததாக நினைவு கூர்ந்தார்.

அத்துடன், தற்காலிக வைத்தியசாலைகளின் கூரைகளில் செஞ்சிலுவைச் சங்கத்தின் இலச்சினையை தெளிவாக வரைந்திருந்த நிலையிலும், அவற்றை இலக்கு வைத்தும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வைத்திய கலாநிதி நிரோன் கூறுகிறார்.

'நான் பணியாற்றிய வைத்தியசாலைகளின் இடங்கள் தொடர்பிலான விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா படைத்தரப்பினருக்கு தெரிவித்திருந்தேன். ஆனால் போர் காரணமாக வைத்தியசாலையை இடம்மாற்றிய ஒவ்வொரு முறையும் அதனை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் செஞ்சிலுவைச் சங்கத்தின் இலச்சனை குறிக்கப்படாது அவற்றின் இருப்பிடங்கள் தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பினருக்கு தெரியப்படுத்தப்படாத ஐந்து சிறிய வைத்தியசாலைகளை இலக்கு வைத்து எவ்வித தாக்குதல்களும் நடத்தப்படவில்லை' என நிரோன் தெரிவித்தார்.

சிறிலங்கா படைத்தரப்பினர் திட்டமிட்ட முறையில் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாக; நிரோன் உறுதியாக தெரிவித்தார். வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் பலரைக் கொல்ல அவர்கள் விரும்பினார்கள் எனவும் நிரோன் மேலும் குறிப்பிட்டார்.

போர் வலயத்தில் செயற்பட்ட வைத்தியசாலைகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததாக ஐ.நா நிபணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது பாரிய போர்க்குற்றம் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மீதமாகவிருந்த இரண்டு வைத்தியசாலைகள் மீது பல்குழல் எறிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை சிறிலங்கா படைத்தரப்பினர் ஐந்து நாட்கள் தொடரந்து மேற்கொண்டதாக ஐ.நா நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இறுதிக்கட்டப் போரின் போது வைத்தியசாலைகளை இலக்கு வைத்து 30க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றதாக மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையை நோக்கி எறிகணை ஒன்று ஏவப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சி ஆவணமாக வெளிவந்துள்ளது.

வைத்தியசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலின் போது அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பினருக்கு அறிவிப்பதற்காக ஆறு தடவைகள் தொடர்பு கொண்ட போதிலும், சிறிலங்கா படைத்தரப்பால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, வைத்தியசாலைகளை இலக்கு வைத்து சிறிலங்கா படைத்தரப்பு தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டது. போர் அனுபங்களை தாம் கொண்டிருந்ததாகவும், ஆனால் இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டமை போன்ற சம்பவங்களை பார்த்தது மிக அரிது என போர் முடிவுக்கு வந்த பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர். இது கற்பனை செய்து பார்க்க முடியாத மனிதப் பேரழிவு என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

போரின் இறுதி நாளன்று மரம் ஒன்றின் கீழிருந்த காயமடைந்த 150 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து வைத்திய கலாநிதி நிரோன் வேதனைப்படுகின்றார். தான் தொடர்ந்தும் வைத்தியனாக பணியாற்ற விரும்பவில்லை எனக் கூறும் அவர், காயமடைந்தவர்களை காப்பாற்ற முடியாது போனதால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

வைத்திய கலாநிதி நிரோன் தெரிவித்த இவ்விடயங்களுக்கு சாட்சியமாக போர் வலயத்தில் பணியாற்றிய ஏனைய வைத்தியர்களும் தொண்டர்களும் உள்ளனர். அத்துடன் இவரின் சாட்சியத்தை மனிதவுரிமை ஆய்வாளர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

வைத்திய கலாநிதி நிரோன் போன்று போரில் இருந்து உயிர் தப்பியவர்களின் ஆழமான மனக்காயங்களை இலகுவில் மறந்து விடுவது என்பதும், மன்னிப்பது என்பதும் முடியாத காரியமாகும். இலங்கையில் இடம்பெற்ற இரத்தம் உறைந்த போரின் போது பாதிப்புக்கு உள்ளானவர்களின் துன்பங்களை புரிந்து கொள்வது என்பது முக்கிய தேவையாகவுள்ளது' என இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடமையாற்றிய பி.பி.சி செய்திச் சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான Frances Harrison எழுதிய 'Still Counting the Dead' எனும் தலைப்பிலான நூல் நேற்று முன்தினம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.pongutham...67-bd1613ae4358

[size=5][size=6]Still Counting the Dead[/size][/size]

[size=5]Survivors of Sri Lanka’s Hidden War[/size]

[size=5]Frances Harrison.

At the book launch event of her ‘Still Counting the Dead’, Frances Harrison decried the "BLACK HOLE OF HISTORY" into which atrocities committed at the end of Sri Lanka's civil war have been allowed to sink. Former chief peace negotiator Erik Solheim, speaking at the launch, called on the Government of Sri Lanka to take immediate steps to reach out to the Tamil community. They were joined by former chair of the South African Truth and Reconciliation Commission Yasmin Sooka, who is a member of the UN Panel of Experts investigating the end phase of the Sri Lankan conflict. Also on the panel was International Crisis Group's Alan Keenan. Erik Solheim said, "If the Government of Sri Lanka are serious about reaching out to the Tamil community there are four things they can do immediately: 1 - Release all Tamil Political Prisoners.2 - Stop all disappearances and the so-called "white van incidents".3 - Substantially reduce the military presence in the north.4 - make a formal promise that there will be no state sponsored Sinhala- settlements of the north and east."[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109324

மனிதாபினாம் கொண்ட மிகச் சிறந்த பெண்மணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் மீது நன்மதிப்பை கொண்டவர், புலிகலின் போராட்டம் மீது மரியாதை வைத்து இருந்தவர், பெண் போராளிகளைப் பற்றி உயர்வாக மதித்தவர். 2003இல் யாழ்ப்பாணம் சென்ற போது இவருடன் கதைத்துப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. cnn உடைய ரிஸ் கான்(ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் தான் இவரது கணவர்). இவருக்கு 3 பிள்ளைகள். 2004ம் ஆண்டு இடம் மாற்றம் செய்யப்பட்டர், அப்பொது தமிழ் ஊடக சமூகத்தில் ஏமாற்றமே ஏற்பட்டது, இப்பொது நான் நினைக்கிறேன் என்னவென்றால் இவரது ஈழ ஆதரவு போக்கே இவர்து இடமாற்றத்துக்குக் காரணம் என்று, ஏன் என்ரால் இவருக்கு பின்னால் வந்த நிருபர்களான டுமீதா லூத்ரா (இவர் ஒரு பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த சிங்களவ்ர் என்று நினைகிறேன்), மற்றும் ரோலன்ட் பேர்க் ஆகியோர் புலிகளையும் போராட்டத்தையும் பயஙரவாதமாக சித்தரிப்பதில் முன் நின்றவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதனது முழுமையான ஆங்கில வடிவம் தேவை இணைக்க முடியுமா?

[size=6]Solheim’s politics, UN role in SL criticized at Frances Harrison’s book launch event[/size]

[size=5]Even as Erik Solheim tried to sell stories that the LTTE leadership was responsible for the Mu’l’livaaykkaal massacre at the book launch event of Frances Harrison’s ‘Still Counting the Dead’ at London on Friday, solidarity activists and members from Eezham Tamil diaspora in the audience criticized his role as a failed peace-broker and the unjust role of the UN and the International Community of Establishments in leading to the genocidal massacre of the Eezham Tamils in May 2009. Ms. Harrison’s book, which presents the different types of atrocities that the Eezham Tamils endured at the hands of the Sri Lankan forces through case histories, also had some insights on the silence of world powers as the Sri Lankan government carried its onslaught on the Eezham Tamils. [/size]

[size=5]Ms. Sooka was of the opinion that the figure of 40000 Tamil civilians dead that the UN panel of reports arrived at was likely to be higher, at around 75000. Sooka further said that the GoSL was yet to provide a list of detainees.

Mr. Keenan, referring to the Mannar Bishop’s figure of more than 146000 disappeared at the end of the war, said that this number might be an ‘exaggeration’, claiming that 50-70000 was the likely number of the disappeared.

When Ms. Sooka said that the panel of experts was not allowed to enter Sri Lanka, a question was posed by the moderator why Ban Ki-moon, the UN Secretary-General was unable to compel Sri Lanka to allow this. To this, Ms. Sooka’s response was that Sri Lanka was a sovereign country. Mr. Sackur also questioned the relevance of the International Criminal Court, that hauled up those responsible for riots leading to the death of about 1500 people in Kenya, but did nothing in the case of Sri Lanka.[/size]

Frances_Harrison_London.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35638

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்காக ஒரு பெண்மணி..!

இவர் B.B.C இல் இருந்த காலத்திலும் அது தமிழருக்கு எதிராக செய்திகள் பிரசுரித்து வந்தது. புதகத்தை வாசித்தால் தெரியும் B.B.C. கிடைத்த செய்திகளை வேண்டுமென்றே இருட்டைப்பு செய்து வந்ததா என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் B.B.C இல் இருந்த காலத்திலும் அது தமிழருக்கு எதிராக செய்திகள் பிரசுரித்து வந்தது. புதகத்தை வாசித்தால் தெரியும் B.B.C. கிடைத்த செய்திகளை வேண்டுமென்றே இருட்டைப்பு செய்து வந்ததா என்று.

இருக்கும்.. இருக்கும்.. பிபிஸிக்குள் மகிந்தவினதும், ரோவினதும் ஆட்கள் இருப்பினம்தானே..

எதையும் வாசிக்க முதலேயே ஊகத்தின் அடிப்படையில் கருத்து வைப்பது உங்களிடம் நிறைய எச்சரிக்கை உணர்வு இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. அதிகம் எச்சரிக்கையாக இருந்தால் இருக்குமிடத்திலேயே தொடர்ந்து இருக்கவேண்டிவரும்.

இருக்கும்.. இருக்கும்.. பிபிஸிக்குள் மகிந்தவினதும், ரோவினதும் ஆட்கள் இருப்பினம்தானே..

எதையும் வாசிக்க முதலேயே ஊகத்தின் அடிப்படையில் கருத்து வைப்பது உங்களிடம் நிறைய எச்சரிக்கை உணர்வு இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. அதிகம் எச்சரிக்கையாக இருந்தால் இருக்குமிடத்திலேயே தொடர்ந்து இருக்கவேண்டிவரும்.

நான்றி கிருபன் கிருபன் அண்ணா. இவர் இருக்கும் போதும் B.B.C செய்த துரோக தனத்தை நியாப்படுத்த அவர்களுக்காக நீங்கள் தன்னும் இருப்பதை இட்டு அவர்கள் உங்களுக்கு நன்றியாக இருக்கட்டும்.

இந்த சர்வதேச ஊடகம் மானமில்லாமல் இலங்கையில் சிங்கள பாசிச ரூபவாகினியிடம் ஒப்பந்தம் போட்டு பலதடவை அரசால் நிகழ்சிகளை ரத்து செய்ய வேண்டும் என ஒப்பந்தங்களை பாதுகாக்க ரத்து செய்த ஈனத்தனத்தை நியாப்படுத்த உங்களை மாதிரி (பத்தரை)மாற்றுகள் அவசியம்.

தனது நிரூபர்களை யாழ்ப்பாணத்திலும் மற்றைய இடங்களும் கொலை செய்தபோது அதை சர்வதேச ரீதில் (இன்று ACF போன்று) செய்ய தவறிய ஊடகம். உலகில் 4 வது மோசமான ஊடகவியலார் கொலை நடக்கும் இடமாக இலங்கை நிரைப்படுத்த பட்ட பின்னரும் இலங்கையுடன் ஊடக கூட்டு வைத்திருக்கும் குப்பை தொட்டி ஊடக வியாபார குழுமம், தனக்கு சிறிய அல்ஜஸிரா மாதிரி இலங்கையில் சுதந்திரமாக ஊடகத்துறையில் இறங்க முடியாதென நடிக்கிறது. இலங்கை அரசின் பிரச்சார தாயாரிப்பிட நிலையமாக தொழில்ப்படுகிறது. இது வரை Channel -4 இரண்டு ஆவணங்களை வெளிவிட்ட பின் இந்த திரவியம மாது சொலெயும் என்ற "ரோ"வின் பிரதம நிர்வாகியை அழைத்து வந்து புதகம் வெளிவிட்டு பணம் பண்ணுகிறது. சண்டையின் போது இது அங்கே இருந்தது என்றால், பலதையும் வாசிக்கும் உங்களிடம் நான் கேட்பது இது " இந்த திரவிய மாது ஐ.நா. நிபுணர் சபைக்கு அல்லது ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு தன்னிடமிருந்த ஆவணங்களை எப்பாவாது சமர்ப்பித்திருக்கா (எனக்கு தெரியாது- கேட்கிறேன்- கிருபன் அண்ண மடுமல்ல - யாரும் விபரம் தெரிந்தவர்கள் விபரம் தரவும்)?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

" இந்த திரவிய மாது ஐ.நா. நிபுணர் சபைக்கு அல்லது ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு தன்னிடமிருந்த ஆவணங்களை எப்பாவாது சமர்ப்பித்திருக்கா (எனக்கு தெரியாது- கேட்கிறேன்- கிருபன் அண்ண மடுமல்ல - யாரும் விபரம் தெரிந்தவர்கள் விபரம் தரவும்)?

இல்லை என்றே நினைக்கின்றேன். எதற்கும் அவருடன் தொடர்பிலுள்ள ஊடகக்காரர்களையும் விசாரிப்பது நல்லது.

[size=5]இராணுவம் ப.நடேசனைச் சுட்டது ! எரிக் சொகைம். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]முக நூலில் இருந்து:[/size]

[size=3]//நேற்று 'தீபம்' தொலைக் காட்சியில், எரிக் சொல்ஹெய்முடன் ஊடகர் கருணாகரன் கண்ட நேர்காணல் ஒளிபரப்பாகியது. எரிக்கின் உள்ளத்தில் உள்ளதை கிண்டி எடுத்து வெளியில் கொண்டுவந்து விட்டார் கருணா [அந்தக் கருணா அல்ல]. லஷ்மன் கதிர்காமர் தனது ஆத்மார்த்த நண்பராம். புத்தக வெளியீட்டு நிகழ்வில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். அவரைக் கொலை செய்த விவகாரம்தான் புலிகள் மீதான தடைக்கு காரணமாம். அமெரிக்கா தடை செய்தபோ[/size][size=3]

து கதிர்காமர் உயிருடன்தான் இருந்தார். இங்கு எரிக்கின் வியாக்கியானம் பொருந்தவில்லை.

அத்தோடு புலிகளின் ஆயுத வன்முறைப் போராட்டத்தை சர்வதேசம் [?] ஏற்றுக்கொள்ளவில்லையாம். பிறகெதற்கு இவர் சமாதானம் பேச வந்தார்?. PTOM என்கிற சுனாமி கட்டமைப்பினை சிங்களம் நிராகரித்தது தவறு என்று கூறியவர், புலிகள் முன்வைத்த 'இடைக்கால அதிகார தன்னாட்சி சபை' குறித்து வாய் திறக்கவில்லை . ஆகவே புலிகள் எதற்கும் இணங்கவில்லை என்று இவர் கூறுவது அப்பட்டமான பூசி மெழுகல்.//[/size]

இவர் B.B.C இல் இருந்த காலத்திலும் அது தமிழருக்கு எதிராக செய்திகள் பிரசுரித்து வந்தது. புதகத்தை வாசித்தால் தெரியும் B.B.C. கிடைத்த செய்திகளை வேண்டுமென்றே இருட்டைப்பு செய்து வந்ததா என்று.

[size=1]

Still Counting the Dead: Survivors of Sri Lanka's Hidden War [size=4][Paperback][/size]

Harrison Frances (Author)[/size]

http://www.amazon.co.uk/s/ref=nb_sb_ss_c_0_17?url=search-alias%3Dstripbooks&field-keywords=still+counting+the+dead&sprefix=still+counting+th%2Caps%2C388

இல்லை என்றே நினைக்கின்றேன். எதற்கும் அவருடன் தொடர்பிலுள்ள ஊடகக்காரர்களையும் விசாரிப்பது நல்லது.

Her tweets can tell some information, if one follow her on twitter.

ஆயிரம் ஆதரங்கள் இருந்தும் போர் குற்ற விசாரணையை இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்றவாறு நாம் செயல் பட்டு துரித கதியில் போர் குற்ற விசாரணையை ஆரம்பிப்பதற்கு நாம் உழைக்க வேண்டும்.

பிளெக் முன்னின்று விசாரிக்கும் படி அரசாங்கத்திடம் கேட்ட முதல் ஐந்து இறப்பு விசாரணைகளில் சில.

கதிர்காமரின் மரணம்.

ரவி ராஜின் மரணம்.

ACF கொலைகள்.

ஜோசெஃப் பரராச சிங்கத்தின் கொலை.

திருகோணமலை மரணம்

கதிர் காமரின் மரணத்தை பிளேக் புலிகள் மீது சந்தேகப்படவில்லை. ஆனால் கிளின்ரன் போன்றவர்களுடன் நட்பு வைத்திருந்த நீலன் திருசெல்வத்தின் மரணத்தை புலிகள் மீது சந்தேகப்பட்டர். இதானால் அவர் கேட்ட மரணவிசாரணகளில் நீலன் உள்ளடப்பட்டிருக்கவில்லை. கதிர்காமர் உள்ளடக்கபட்டிருந்தார்.

இது இந்திய ரோவின் அலுவலகத்திலிருந்து வந்து பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு அங்கே திரும்ப போகும் சொலெயும் தனது மன நிலையை காட்டும் கதை இது.

ஆயிரம் ஆதரங்கள் இருந்தும் போர் குற்ற விசாரணையை இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்றவாறு நாம் செயல் பட்டு துரித கதியில் போர் குற்ற விசாரணையை ஆரம்பிப்பதற்கு நாம் உழைக்க வேண்டும்.

அது மிகச்சரி. நாம் எல்லோரும் தொடர்ந்து நம்மாலானவற்றை செய்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilguardian.com/article.asp?articleid=5984

[size=3]

[size="2"]rances Harrison's book, 'Still Counting The Dead' was launched on Friday to a packed and diverse audience in London that included many activists, journalists, artists, and Tamils. The event included presentations on upcoming projects by visual artists and directors that intend to depict the suffering of Tamils in 2009 and to this day, through various mediums.[/size][/size][size=3]

[size="2"]Benjamin Dix revealed his current project of an animated graphic novel that follows the story of one Tamil man, Anthony, and this family, through the horrors of May 2009, to the displacement and confinement of Menik Farm through to seeking asylum in the UK and the psychological impact of the suffering he experiences. The graphic novel will be published online chapter by chapter.[/size][/size][size=3]

[size="2"]Christine Bacon from theatre company Ice and Fire, spoke of how she was inspired to produced a stage production based on 'Still Counting The Dead' after Frances Harrison sent her a few chapters of the book and she was instantly "completely gripped". Reflecting on her previous ignorance of the events of 2009, Bacon said it now motivated her produce this play as "the epic scale of human tragedy was astonishing".[/size][/size][size=3]

[size="2"]The director of the Channel 4 documentary 'Sri Lanka's Killing Fields', Callum Macrae revealed plans for a feature length film and played the film's powerful yet harrowing trailer. Macrae said, "this film will be different to the others, we want this to be a call to action," and said he hoped it to be released by February next year.[/size][/size]

http://www.tamilguardian.com/article.asp?articleid=5984

[size=3]

[size="2"]rances Harrison's book, 'Still Counting The Dead' was launched on Friday to a packed and diverse audience in London that included many activists, journalists, artists, and Tamils. The event included presentations on upcoming projects by visual artists and directors that intend to depict the suffering of Tamils in 2009 and to this day, through various mediums.[/size][/size][size=3]

[size="2"]Benjamin Dix revealed his current project of an animated graphic novel that follows the story of one Tamil man, Anthony, and this family, through the horrors of May 2009, to the displacement and confinement of Menik Farm through to seeking asylum in the UK and the psychological impact of the suffering he experiences. The graphic novel will be published online chapter by chapter.[/size][/size][size=3]

[size="2"]Christine Bacon from theatre company Ice and Fire, spoke of how she was inspired to produced a stage production based on 'Still Counting The Dead' after Frances Harrison sent her a few chapters of the book and she was instantly "completely gripped". Reflecting on her previous ignorance of the events of 2009, Bacon said it now motivated her produce this play as "the epic scale of human tragedy was astonishing".[/size][/size][size=3]

[size="2"]The director of the Channel 4 documentary 'Sri Lanka's Killing Fields', Callum Macrae revealed plans for a feature length film and played the film's powerful yet harrowing trailer. Macrae said, "this film will be different to the others, we want this to be a call to action," and said he hoped it to be released by February next year.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.