Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு சூன்யமாகும் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம் - விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு சூன்யமாகும் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம் - விக்கிலீக்ஸ்

11 அக்டோபர் 2012

தமிழில் குளோபல்தமிழ்ச்செய்திகள்

சர்வதேச விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவு சூன்யத்தை அண்மித்த நிலையில் காணப்பட்டது என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரம் பற்றிய புரிதல் பூஜ்ஜியத்தை அண்மித்ததாகும் என சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார். நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன், எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான சந்திப்பின் போது, சொல்ஹெய்ம் இதனைக் குறிப்பிட்டிருந்தார். யுத்தம் நிறைவடையும் வரையில் நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், 2006ம் ஆண்டின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுடன் தொலைபேசி மூலமே தொடர்புகளைப் பேணியதாகக் குறிப்பிட்டிருந்தார். சர்வதேச சமூகம் அல்லது புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகள் திடமாக நம்பியிருந்தனர் என குறிப்பிட்டிருந்தார்.

2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதுவர் க்ளைன்ட் வில்லியம்ஸ்சனும், எரிக் சொல்ஹெய்மும் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். மே மாதம் 17, 18ம் திகதிகளில் நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைவது தொடர்பில் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்திருந்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாக சரணடைய புலிகள் விரும்பியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த வலயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்போ பிரசன்னமாகியிருக்கவில்லை எனவும், வெள்ளைக் கொடியொன்றை அசைத்து சரணடையமாறும் நோர்வே அரசாங்கம், புலிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தத் தகவல் வழங்கப்பட்ட மறுநாள் சகலரும் உயிரிழந்திருந்தாகவும், எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தெரியாது எனவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருந்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டதாக, அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84055/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எனினும், இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த வலயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்போ பிரசன்னமாகியிருக்கவில்லை எனவும், வெள்ளைக் கொடியொன்றை அசைத்து சரணடையமாறும் நோர்வே அரசாங்கம், புலிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்திருந்தார்.

இருக்கலாம். காரணம்.. புலிகள் சர்வதேச பயங்கரவாதம் செய்யவில்லை.சர்வதேசத்தைப் பற்றிக் கவலைப்பட. சொந்த நாட்டில் தமது மக்களுக்கு அரசியல்.. வாழ்வுரிமை கேட்டே போராடினர். அவர்களுக்கு சர்வதேசம் பற்றிய கவலை அதிகம் இருந்திருக்க வாய்ப்பில்லை..! புலிகள் மீதான தடைகளை மேற்கு நாடுகள் தங்களின் தேவைக்காகக் கொண்டு வந்தது குறித்தும் புலிகள் பெரிதாக கவலைப்படவில்லை..!

இந்தத் தகவலின் படி.. சொல்கைம் ஒன்றை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தி உள்ளார். ஐநாவோ.. சர்வதேசச் செஞ்சிலுவையோ மக்களை பாதுகாக்க முயலவில்லை என்பதை..! மேலும் எந்த வித சர்வதேச மனிதாபிமான.. மற்றும் நீதி அமைப்புகளும் செயற்பட முடியாத இடத்தில்.. இவரின் உத்தரவுக்கு அமையத் தான் போராளிகள் சரணடையச் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சொல்கைம் சிறீலங்கா அரச இராணுவத் தலைமைகளோடு சேர்த்து.. போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபர்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

சர்வதேச சதிகாரர்களின் சதி விளையாட்டுக்களை புலிகள் விளங்கிக் கொள்ளவில்லை அல்லது விளங்கியும் அவர்களால் இந்த அதிகாரச் சக்திகளுடன் போரிட்டு வெல்ல முடியவில்லை என்பது தான் உண்மையானது. மிகப் பலம் பொருந்திய சக்திகளுடன் தனித்து நின்று போரிட்டு வெல்ல முடியாது என்பதுவும், அவர்களின் சதிகளைப் போல் நாங்களும் சதிகளையும் , பொய்களையும், புனைவுகளையும் செய்திருக்க வேண்டும். போராட்டம் எமக்குக் கற்றுத் தரும் பாடம் இது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரம் பற்றிய புரிதல் பூஜ்ஜியத்தை அண்மித்ததாகும் என சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார்

இந்த கருத்தை யாழில் எழுதும் சிலரும் சொல்லுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சர்வதேச அறிவு சூனியமாகும் என்கிற இவரின் கருத்தில் இவருக்கு ஏற்பட்ட ஏமாற்றமே தெரிகிறது. புலிகள் இப்படி ஒரு முடிவை எடுப்பார்கள் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

புலிகளுக்கு எதிராக இவர்கள் எந்த அரசியல் ஆயுதத்தை எடுத்தார்களோ (ஜனநாயகம்) அதுவே இவர்களுக்கு இன்று எமனாக ஆகிக்கொண்டிருக்கிறது.. வருத்தம் வரும்தானே.. :D

எரிக் தவளை

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நினைத்திருந்தால் இறுதி யுத்தத்தின்போது உயிர் இழப்புகளை குறைத்திருக்க முடியும் ஆனால் செய்யாது மௌனமாக இருந்துவிட்டு ஏன் நிலிக் கண்ணீர் ?

சொலெய்ம் இறந்தவர்கள் மீது பழி வாங்கினார் என்பதை 2009 ஆகஸ்டில் அனுப்பிய செய்திகள் காட்டுகின்றன. இது இறந்த போராளிகளை இலங்கை இராணுவம் செய்தது போன்றது.

புலிகள், சர்வதேசம் அரசு மீது அழுத்தம் பாவிக்கும் என்று நினைத்து அரசியலில் தமது சர்வதேசம் பற்றிய அறிவு சூன்னியம் என்பதை காட்டினார்கள். புலிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த சொலெயும் புலிகளிடம், "நாம் அரசு மீது எந்த அழுத்தம் பாவிக்க இங்கு வரவில்லை, நீங்கள் நாம் சொல்வதை கேட்டு அச்சொட்டாக செய்ய வேண்டும். அதைத்தான் மத்தியஸ்த்தம் என்று நாம் அழைக்கிறோம்" என்பதை புலிகளுக்கு தெளிவாக விளங்கப்படுத்தியிருந்தார். இந்த சொலெயிமின் வெளிப்படையான சர்வதேச அரசியல் போக்கால் சொலெயுமை தமது ஒரே ஒரு நண்பனாக 2009 ஆண்டு வரை நம்பி வன்னியில் தமது ஆயுத கிடங்குகள் வரை அழைத்து சென்றார்கள் புலிகள். (கருணாவைவிட கெட்ட துரோகி)

நோர்வே அவர்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தை என்ற பேரில் அலைவதை புலிகள் உண்மையில் சர்வதேசம் ஒரு நல்ல முடிவை நோக்கி நகரலாம் என்று நம்பினார்கள்.

சர்வேதச அரசியலில் உண்மையாகவே நல்ல அறிவுள்ள சொலேய்ம் ராசபக்சாவையும் அவரின் சர்வாதிகார இரணுவ மய அரசியல் போக்குகளையும் தெளிவாக தெரிந்ததினால் அவருக்கு பூரண ஒத்துளைப்பு கொடுத்தார். இதையேதான் அன்றைய அமெரிக்க இந்திய அரசியல்வாதிகளும் செய்தார்கள்.

சர்வதேச அரசியல் வாதிகள் முடிச்சு மாறிகள் என்பதை உணராத புலிகள் தமது ஆயுத கிடங்குகளையும், அதிவேக படகுகளையும் கூட சொலெயுமை அழைத்து காட்டினார்கள். இது சந்திரிக்கா பின்னர் எப்படி தனது வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதற்கு சொலெய்மால் உதவ முடிந்தது.

சொலெயுமுக்கு சர்தேச எவ்வளவு அத்துபடி என்பது யாரும் குறைத்து எடை போடமுடியாதது. ஆனால் எவ்வளவு இளமையில் நோர்வே அரசியலில் இருந்து ஒதுங்க வைக்க படுகிறார் எனபதை வைத்து எவ்வளவுக்கு 5 மில்லியன் மக்கள் மட்டும் வாழும் நோர்வே அரசியலை தெரிந்திருக்கிறார் என்பதைக் கண்டுகொள்ளாம்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம்

நெஞ்சில் குண்டு வாங்குபவன் முட்டாள்

அந்தவகையில் புலிகள் பைத்தியக்காறர்கள் தான்.

காலத்துக்கு ஏற்ப வாழத்தெரியாதவர்கள்.

இனி எவரும் புலிகள் கொள்கையை பின் பற்றாதீர்கள் :( :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்கெய்ம் கையில் படிந்த பழி காலப்போக்கில் அவர் நினைத்தற்கு மாறாக வெளிச்சம் பெற்றுக் கொண்டு இருப்பதால் பதில் சொல்ல வரமுடியாதவர்களின் தலையில் பொறுப்பிக்க முயற்சி செய்கின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்தர்ப்பவாத உலக அரசியலில் நியாயமான போராட்டங்கள் நிலைக்காது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.