Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் காலத்தில் நடத்தப்படும் இளையராஜாவின் நிகழ்ச்சியை புறக்கணிப்போம்-செந்தமிழன் சீமான்

Featured Replies

சீமான் தன்னை அரை மணி நேரம் ஐநா சபையில் பேச விட்டால் தமிழீழம் அடைந்து விடுவேன் என்பது உச்சபட்ச நகைச்சுவை. இதை சிரிக்காமல் அவரால் பேச முடிகிறது. இவரை நம்புவதற்கும் இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது.

அத்துமீறு, அடங்க மறு என்று முழங்கிய சீமானை ஜெயலலிதா ஒரு நடிகையை வைத்து அடக்கிக் காட்டினார். இன்று வரை கூடாங்குளம் பிரச்சனையில் (இதில் ஈழத் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்) போராடவோ, தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்சனையை தட்டிக் கேட்கவோ அவருக்கு துணிச்சல் வரவில்லை.

ஆட்சியில் இல்லாத ஒரு கட்சியை விமர்சித்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய கருத்தை யாரும் கவனம் எடுக்க வேண்டியது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் சீமான் பேசப் போகிறார்.

  • Replies 139
  • Views 10.8k
  • Created
  • Last Reply

இப்ப அந்தப் பகுதியை நியானி வெட்டியாச்சு.. :rolleyes:

மீண்டும் வெட்டா ................................இனி என்ன செய்யலாம் ... :D :D :icon_idea:

Edited by தமிழ்சூரியன்

100 வருடம் கழித்து தமிழ் ஈழம் பிரிப்பத்தாக எழுதுவதை நம்புவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவர்கள் ஐ.நாவில் 1/2 மணித்தியால பேச்சால் தமிழ் ஈழம் பிரிக்க முடியும் என்று பேசுவதை நம்பமாட்டடார்கள் என்று எழுதுவதை நம்புவார்கள் இருக்கிறார்கள் என்று நம்பி எழுதுவது நகைசுவையின் அது உச்சத்தின் உச்சம்.

அரச அடி வருடிகள் என்னை 100 வருடம் கழித்து தமிழ் ஈழம் பிரிக்க வரும் படி அழக்கிறார்கள்.

நான் மகிந்தாவை சட்டத்தின் முன் நிறுத்த உதவ வரத்தயாரா என்றால் பதில் இல்லாமல் ஒழிக்கிறார்கள்.

கேட்கும் கேள்விகளுக்கு மேடையில் நின்று மகிந்தாவை எதிர்த்து பதில் சொல்ல தயாராக இருக்கும் இருக்கும் சந்திரன் போன்ற சீமானை குலைப்பதால் எதிர்க்க சில குப்பை மேட்டு நாய்களை மகிந்த அனுப்பி வைத்திருக்கிறார்.

போருக்கு போன போராளிகளை வஞ்சமாக கொன்றதைவிட, 146,000 அப்பாவி குழந்தை குஞ்சுகள், வயது போனதுகள், வயித்திலை வாயிலை உள்ள தாயாளை கதறக்கதற கொன்ற காதகன் மகிந்தாவை உலகமே காறித்துப்பும் போது ஒருவார்த்தை எதிர்த்து எழுத முடியாமல் தமது சொத்து பத்துக்காக அடிமையாகி போய்விட்ட குருக்கள் மார் சீமானால் 1/2 மணித்தியாலத்தில் வைகுண்டம் போகும் பாதை காட்ட முடியாது என்று நகைப்பது நகைப்பிக்கிடமானது.

அவர்களுக்கு தங்களை மற்றவர்கள் எப்படி நம்புவார்கள் என்பதை கூட தெரிந்துகொள்ள கூச்சமாக இருக்கிறது.

Edited by மல்லையூரான்

ஸ்கொற்லாந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய பின்பு தற்பொழுதுதான், தனிநாடு பற்றிய வாக்கெடுப்புக்கு நாள் குறித்திருக்கிறார்கள்.

100 ஆண்டுகள் என்று நான் சொன்ன கணக்கை இதை வைத்து ஆராய வேண்டும். எங்களின் விடுதலை வேட்கை பற்றி இன்னும் நாம் நூறு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பேச வேண்டும். ஐநாவிலும் பேச வேண்டும்..

இதில் சீமான் அரை மணித்தியாலம் பேசப் போகிறாராம். ஐநா சபையில் தன்னால் வாழ்க்கையில் பேச முடியாது என்று தெரிந்து கொண்டே இப்படி சொல்கிறார்.

இதை என்னாலும் சொல்ல முடியும். என்னையும் ஐநா சபையில் ஐந்து நிமிடம் பேச விட்டால், நான் தமிழீழத்தை பெற்றுத் தருவேன். ஆனால் என்ன செய்ய? பேச அனுமதிக்கிறார்கள் இல்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்து கொள்ளுங்கள் சபேசன்

ஐ நா தனது கேள்விகளுக்கு பதில் தரமுடியாது என்ற ரீதியில் சொல்லியிருக்கலாம்.

முட்டையில் மயிர் புடுங்க எம்மை விட்டால் உலக சம்பியன்கள் எவருமில்லை......... :(

ஸ்கொற்லாந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய பின்பு தற்பொழுதுதான், தனிநாடு பற்றிய வாக்கெடுப்புக்கு நாள் குறித்திருக்கிறார்கள்.

100 ஆண்டுகள் என்று நான் சொன்ன கணக்கை இதை வைத்து ஆராய வேண்டும். எங்களின் விடுதலை வேட்கை பற்றி இன்னும் நாம் நூறு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பேச வேண்டும். ஐநாவிலும் பேச வேண்டும்..

இதில் சீமான் அரை மணித்தியாலம் பேசப் போகிறாராம். ஐநா சபையில் தன்னால் வாழ்க்கையில் பேச முடியாது என்று தெரிந்து கொண்டே இப்படி சொல்கிறார்.

இதை என்னாலும் சொல்ல முடியும். என்னையும் ஐநா சபையில் ஐந்து நிமிடம் பேச விட்டால், நான் தமிழீழத்தை பெற்றுத் தருவேன். ஆனால் என்ன செய்ய? பேச அனுமதிக்கிறார்கள் இல்லையே!!

:D :D :icon_idea::icon_mrgreen:

இந்த 100 வருட கதையை கூறிய நாட்களில் ஸ்கொட்லாண்ட் தனிநாடு பற்றிய வாக்களிப்பு பற்றிய அறிவித்தலை வெளிவிட்டிருக்கவில்லை. இன்றைய அறிவிப்பை அன்று எதிர்கூறியதாக நடிக்கும் அப்பட்டமன கதைகளை கூறுவோரோரை நம்பலாமா அல்லது சீமானை நம்பலாமா என்பதை யாழை வாசிப்போர் தெரிந்து கொள்ளட்டடும்.

ஸ்கொடலாண்ட் உரிமையை இழந்த விதத்தையும் அவர்களுக்கு இன்று அங்கிருக்கும் பிரச்சனையும் தமிழர் பிரச்சனைகளுடன் ஒப்ப்பிட்டு அதானால் நாம் கட்டாயம் இன்னும் 100 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று கூற முடியுமா? இல்லை அவர்களுக்கு தனிநாடு தன்னும் அவசியாமா என்பதை முன் வைக்க முடியுமா? தனி நாடு கேட்கும் கூபெக் 1750 களில் பிரிடிஸ்சாரால் கைபற்ற பட்டது. அவர்கள் தனி நாடு காண வேண்டுமா?, காண வேண்டுமாயின் அது எப்போது சாத்தியம் என்ற காலக்கணிப்பை இதே "100 வருடங்கள்" ஆக கணக்கு பார்த்த முறைகளை வைத்து கணக்கு காட்ட முடியுமா?

முடிந்தால் 47ல் பாகிஸ்தானிடம் அடிமையான வங்காளம் 72 ல் சுதந்திரம் அடைந்த பாதையை ஏன் நாம் பின் பற்ற கூடாது என்பதை விளங்க படுத்தவும். இதையும் ஸ்கொட்லாண்டுடனும் ஒப்பிட்டால் இன்னும் நல்லது.

அதன் பின்னர் சீமானல் ஐ.நா வில் ஏன் பேச முடியாது என்று சொல்வதை பற்றி ஆராவோம்.

சீமானின் பேச்சில் நகைப்புக்கு இடமாக இருந்ததாக முன்னர் கூறப்பட்ட விடையம் 1/2 மணித்தியாலப்பேச்சில் தனி நாடு காண முடியாதென்தே. நான் அதை விவாதிப்பம் என்றிருக்க, அதிலிருந்து சறுக்கி இப்போது சீமானுக்கு வாழ்நாளில் அரைமணித்தியாலம் கிடையாது என்ற கருத்தாக மாறியிருக்கிறது.தொன்றன் பின் ஒன்றாக ஏன் சீமானுக்கு அரை மணித்தியாலம் கிடையாது என்பதையும் நாம் கட்டயம் விவாதிக்க வேண்டும்.

தமிழ் அரசுக்கட்சியை ஆரம்பித்த போது பருத்திதுறையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் மேடையில் ஏறியோர் நநாதனின் வேட்டியை உரிந்து கூட்டத்தை முற்றாக்க கலைத்துவிட்டனர். தேர்தலில் கட்சித் தலைவர் SJV படு தோல்வி அடைந்தார்.

விவேகானந்தருக்கு 5 நிமிடம் சிக்காகோவில் பேச கிடைத்ததினால் இன்று அகிலம் எங்கும் ராமகிருஸ்ண சபை, விவேகாந்தா சபை, இந்து இளைஞ்ஞர் மன்றங்கள் திறக்கப்பட வழி வகுத்தது என்பது தெரியுமா?

இதை என்னாலும் சொல்ல முடியும். என்னையும் ஐநா சபையில் ஐந்து நிமிடம் பேச விட்டால், நான் தமிழீழத்தை பெற்றுத் தருவேன். ஆனால் என்ன செய்ய? பேச அனுமதிக்கிறார்கள் இல்லையே!!

சீமான் தனக்கு 1/2 மணிதியாலம் தரும்படி கேட்கிறார். நீங்களும் அதை செய்ய முடியுமாயின் ஏன் நாம் அதை ஒழித்து வைப்பான். இந்த நேரமே யாரில் ஆரம்பித்து பிரசாரத்தை தொடக்கி வைப்போம். அப்பொதுதான் உங்களால் அது நடக்கத் தக்கதா இல்லையா என்பதை பார்த்துவிடமுடியும்.

நான் ஆதரவு த்ருகிறேன். ஐ.நாவில் பேச அரைமணித்தியால நேரத்திற்கான பிரச்சாரத்தை ஆரம்பியுங்கள். நாங்கள் நூறு வருடம் தொடந்து தனி நாடு பற்றி கதைக வேண்டும். உடனே தனி நாடுபற்றிய பேச்சுகளை யாழில் எழுத தொடங்குங்கள்.

ஆரம்பத்தில் பல ஆண்டுகள் போர் புரிந்து, பின்பு மேலும் பல ஆண்டுகள் அரசியல்ரீதியான வழிகளில் போராடி, நிறைய சமரசங்கள் செய்து, இணைந்து வாழ்ந்து, ராஜதந்திர வழிகளைக் கையாண்டு, தம்மை ஆள்பவர்களுடன் தனிநாடு வாக்கெடுப்புக்கான ஒப்பந்தத்தை போடுகின்ற தேசிய இனங்கள் பற்றித்தான் நாம் இனிப் பாhக்க வேண்டும். எமக்கும் இதைத் தவிர வேறு வழி இருக்கப் போவது இல்லை.

இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நான் 100 ஆண்டுகள் என்று சொன்னேன். ஸ்கொற்லாந்து பற்றிய எதிர்வு கூறல் அல்ல அது. ஆயினும் இன்றைக்கு அது ஒரு சிறந்த உதாரணம்.

போரின் மூலம் அதாவது பலத்தின் மூலம் பெறுவது என்றால் எம்மால் இன்னும் குறுகிய காலத்தில் பெற முடியும். வங்காள மக்கள் போரை நடத்திக் கொண்டு இந்தியாவின் நேரடியான படை பலத்தையும் பெற்றதால் விடுதலை பெற்றார்கள். எமக்கு அது போன்ற வாய்ப்புகள் இல்லை.

இது இருக்க, சீமானால் ஐநாவில் பேசவும் முடியாது. பேசினால் தமிழீழம் கிடைக்கவும் மாட்டாது. ஆதரவு தருவது பற்றி சிந்திக்கின்ற நாடுகளும் சீமானின் பேச்சைக் கேட்டு அதில் இருந்து பின்வாங்குகின்ற வாய்ப்புக்களே அதிகம். ஆகவே என்னுடைய வேண்டுகோள் வாய்ப்புக் கிடைத்தாலும் சீமான் தயவு செய்து ஐநாவில் பேச வேண்டாம் என்பதே.

சீமான் தமிழில் உள்ள சில புலவர் கதைகளை படித்திருக்கலாம். அதிலே சில கேள்விகள் மூலம் அரசர்களை திருத்திய கதைகள் நிறைய உண்டு. ஐநா சபையும் அப்படியான ஒன்று என்று அவர் நினைக்கிறார் போல் இருக்கிறது.

சுயமாக ஒரு வழியை கண்டு பிடிக்க முடியாமல் பிழையான கல்லெறிதல்களில் மட்டும் நேரத்தை கடத்துவோர், தாம் சொல்லவருவதை நாம் இது வரையில் செய்து பார்க்க வில்லையா எனபதை எடுத்து ஆராயத்தாரில்லை. ஆனால் தமது ஆலோசனை நாடகங்கள் வங்குறோத்து அடைவதால், ஒரு நாட்டை எடுத்து நமது பிரச்சனையுடன் ஒப்பிடமுடியாமல், பொதுவில் நாடுகளை பற்றி கதைக்க வேண்டிய படிகளுக்கு இறங்கி விட்டார்கள்.

ஸ்கொடலாண்டை பற்றி தெரியாதோர் அதை உதாரணம் எடுத்து நடிக்க முயல்வது நகைப்பிற்கிடம். இரத்தம் சிந்தாமல் ஜனநாயகம் அடைந்த நாடு, ஜநாயகத்தின் தந்தை நாடு, பிருத்தானியா. அதனிடம் இருந்து ஸ்கொடலான்ட் தனி நாடு கேட்கிறது. மேலும் அங்கே சுய நிர்ணயம் இருக்கிறது.

இது எதிர்வு கூறல் இல்லையாயின் எப்படி வங்காளம் கவனத்திலிருந்து தப்பியது. அதை ஒப்பிட்டு, முரண்படுத்தி எதையும் எழுத முயலாதது ஏன்? இதுவரையில் நாம் ஏன் 300 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்தவில்லை. அப்போது எதற்கு ஸ்கொட்லண்ட். ஊண்மையில் நடந்தது, எதோ பஞ்சதந்திர கதை சொல்வது போல் எங்குமே பொருந்தாத 100 வருட கதையை கொண்டு வந்து, பின்னர் அதிலிருந்து விடுவிக்க நேற்று பத்திரிகைகளில் வெளிவந்த பொருத்தமில்லாத ஸ்கொட்லாண்ட் கதையை கொண்டு வந்தமைதான். இதைதான் சொல்வது ஒரு பொய்யை நிரூபிக்க நூறு பொய் சொல்வதென்பது, அது எதிர்வு கூறல் இல்லையாயின் இதுதான் மிக்கப்பொருத்தமான விளக்கம்.

போர்குற்றம் ஐ.நா வால் சாட்டப்பட்ட நாடு இலங்கை. இந்த கேவலக்கெட்ட நாடு தான் போராடமல் இருக்க, பிருத்தானிய மனித முறைகளை மதித்து தனக்கு சுதந்திரம் தந்தது என்பதை மறந்துவிட்டது. சுதந்திரம் கேட்டவர்களை அடியோடு நசுக்கி, அதன் பின்னரும் சுதந்திர குரல் பல ஆண்டுகள் எழாமல் பார்த்துக்கொள்ள இராணுவதை தமிழ் இடங்களில் பலப்படுத்தி புலனாய்வாளர்களையும் தமிழருக்குள் செலுத்தியிருக்கிறது இலங்கை. விபரங்கள் தெரியாதோரை சுதந்திர உணர்வை அடக்கவும் எழுத வைத்திருக்கிறது.

போரின் மூலம் அதாவது பலத்தின் மூலம் பெறுவது என்றால் எம்மால் இன்னும் குறுகிய காலத்தில் பெற முடியும். வங்காள மக்கள் போரை நடத்திக் கொண்டு இந்தியாவின் நேரடியான படை பலத்தையும் பெற்றதால் விடுதலை பெற்றார்கள். எமக்கு அது போன்ற வாய்ப்புகள் இல்லை.

நிச்சயமாக வங்காள வாய்ப்பும் நமக்கும் இருந்தது. இந்திராகாந்தியை சுட்டவர்கள். சீக்குகள். நமக்கு புதிய வாய்புகள் பல தோன்றி இருக்கின்றன. அதை மட்டம் தட்டி பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை அரசுக்கு அதிக அளவில் இருப்பதை யாழில் வரும் எழுத்துகள் வெளிப்படுத்துகின்றன.

இது இருக்க, சீமானால் ஐநாவில் பேசவும் முடியாது. பேசினால் தமிழீழம் கிடைக்கவும் மாட்டாது. ஆதரவு தருவது பற்றி சிந்திக்கின்ற நாடுகளும் சீமானின் பேச்சைக் கேட்டு அதில் இருந்து பின்வாங்குகின்ற வாய்ப்புக்களே அதிகம். ஆகவே என்னுடைய வேண்டுகோள் வாய்ப்புக் கிடைத்தாலும் சீமான் தயவு செய்து ஐநாவில் பேச வேண்டாம் என்பதே.

சீமான் நிச்சயமாக ஐ.நா போக முயற்சிகள் செய்கிறார். அங்கே போய் பேசியே தீருவார். இதெல்லாம் 100 வருடத்தில் தன்னும் தமிழீம் கிடைக்க வழி வகுக்க போகிற்தென்ற பீதி எழுத்தில் காணப்படுகி்து. இதனால் இப்போது சீமான் சந்தர்ப்பம் கிடைத்தாலும் பேசக்கூடாது என்ற மூன்றாம் நிலைக்கு சறுக்கி வந்து விட்டார்கள். நாம் சீமான் பற்றிய முதல் இரு நிலைகளை தன்னும் விவாதிக்க ஆரம்பம் எடுக்க மறுக்கிறார்கள். இருந்தாலும் நாம் அதைதான் ஏன் அவர் பேசகூடாது என்பதையும் விவாதிக்க வேண்டிய தலைப்புகளில் சேர்க்காது தவறவிட முடியாது. இதே மாற்றுக்கருத்து கூட்டம், வெளிநாடுகள், கூட்டமைப்பை புலிகளாக கருத்துவதால், கூட்டமைப்பு அமெரிக்காவின் ஜெனீவா பிரேரணக்கு அங்கு சென்றால் நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்று வாதிட்டவர்கள்.

அதே தொனி, அதே குரல் அதே சொல், அதே வஞ்சக நெஞ்சம். இன்று சீமான் ஐநாவில் விவாதிக்க கூடாது என்கிறார்கள்.

கருணாநிதியின் புது அரசியால் தமிழருக்கு விடிவு வரப் போகுதென்றவர்கள், ஈழதேசம் கருணாநிதியை தாக்காவிட்டால் ஒரு நாள் ஊடகசேவை நடத்த முடியாதென்றவர்கள், சீமானை தாக்காமல் இன்று அரசிடமிருந்து ஒரு ஆதாயமும் பெறமுடியாத நிலையில் தவிக்கிறார்கள். இதில் நகைப்பின் உச்சகட்டம், சீமானால் விழுதப்பட்ட கருணாநிதி தான் எழும்புவதற்காக தமிழ் ஈழ பிரேரணையை டெசொவில் கொண்டு வந்து நிறைவேற்றி அதையும் ஐ.நா விக்குகுத்தான் அனுப்பிவைத்திருப்பதை எதிர்க்க மறந்துவிட்டார்கள் என்பதாகும். எதிர்க்க மறந்தது மட்டுமல்ல கருணாநிதி, தமிழ் ஈழம் வேண்டும் என்று ஐ.நாவுக்கு பிரதிநிதியை அனுப்புவதை தாம் வெளிப்படையாக ஆதரிப்பதில் இருந்தும் நழுவிட்டார்கள்.

சீமான் தமிழில் உள்ள சில புலவர் கதைகளை படித்திருக்கலாம். அதிலே சில கேள்விகள் மூலம் அரசர்களை திருத்திய கதைகள் நிறைய உண்டு. ஐநா சபையும் அப்படியான ஒன்று என்று அவர் நினைக்கிறார் போல் இருக்கிறது.

ரணில் மகிந்தாவுடன் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைக்க முயன்றார். அதற்கு மகிந்தாவின் கருணையை பெற ஐ.நா சென்று இலங்கை மீதான நிபுணர் அறிக்கை கைவிடபடவேணும் என்று கேட்டார். "பான்-கி-மூன் சொன்னபதில், "ஐ.நா.நிபுணர் அறிக்கை ஐ.நாவில் எங்கும் காற்றில் மறையத்தக்கதென்று நினைக்காதீர்கள்" என்பதாகும். நாம் அல்ல ஐ.நாவில் பாட்டி வடை சுட்ட கதை மட்டும்தான் எழுதி படிக்கிறார்கள் என்று தப்பு கணக்கு போடுவது. உண்மையில் அந்த தப்பு கணக்கு இன்னமும் போட்டுகொண்டிருப்பது அதை சொல்லி ஏமாற்றலாம் என்று நினைத்து வெறும் வாய் சப்பிக் கொண்டிருப்பவர்களே தாம். இவரகள்தாம் தாங்கள யார் என்று உணராமல் போதிக்கிறார்கள்.

டெசொ தீர்மானத்தை ஐ.நாவுக்கு கருணாநிதி அனுப்பி வைப்பதில் என்ன நினக்கிறரோ அதையேதான் சீமானும் நினைப்பார் என்பதில் ஐயமில்லை. சீமான் தான் அரை மணித்தியாலமாவது பேசினால்த்தான் தனி தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நினைக்கிரார். கருணாநிதி அதுவும் தேவை இல்லை என்று நினைத்து டெசொ தீர்மானதை அங்கு அனுப்பி வைத்துவிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்..

இலங்கையில் முஸ்லீம்கள் பலமாக இருப்பதை கண்டு கள்ள மனத்துடன் முஸ்லீம்களுக்காக வாதாடுவோர், அதே கள்ள மனத்துடன் சீமானுக்கு தமிழ் நாட்டில் இருக்கும் அந்த விழுக்காட்டை வைத்து கள்ள கணக்கு பார்த்துவிட்டு சீமான் மேலே வரமுடியாது என்று திரும்ப திரும்ப எழுதுவது இலங்கையில் பழகிய கடைகெட்ட இ்னத்துவேசம். ஆனால் சீமான் சாதி மத பேதமின்றி ஈழத்தமிழரிகளிடம் அல்ல தமிழ் நாட்டு தமிழர்களிடமும் மிக பெரிய ஆதரவு பெறுவார். இதையேதான் பெரியார், அண்ணா தமிழ் நாட்டில் படிப்பித்தார்கள். இலங்கையின் வழியில் இனங்களை பிரித்து அதை வைத்து துரோக அரசியல் செய்வோரின் முக மூடிகள் கனநாட்கள் நிலைக்கப் போவதில்லை. இவர்கள் சீமானால் மேலே வரமுடியாது என்று தப்பு கணக்கு போடும் திசை, அரசியலில் பலகாலம் நிலைக்காத திசை

Edited by மல்லையூரான்

அன்றைக்கு கலைஞரை நம்ப வேண்டாம் என்று தலையிலடித்துக் கொண்டு சொன்னோம். செவிமடுத்தவர்கள் குறைவு. இன்றைக்கு சீமான் பற்றியும் சொல்கிறோம். நீங்கள் கேட்க மாட்டீர்கள். பரவாயில்லை. நல்ல வேளையாக எம்மிடம் இழப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

ஆயினும் மீண்டும் கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை சீமான் போன்றவர்கள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகள் பற்றி சீமான் கருத்துச் சொல்லத் தேவை இல்லை. எமக்கு வழிகாட்டும் தகுதியும் அவரிடம் இல்லை.

அவர் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடம் எங்களுக்கு ஆதரவு திரட்டினால் போதும். உலகத் தமிழர்களின் தலைவர் என்று புகழப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரன் ஒரு போதும் தமிழ்நாட்டு விடயங்களில் தலையிட்டது இல்லை. அவர்களை தமிழீழ அரசியலில் தலையிட அனுமதித்ததும் இல்லை.

தமிழ்நாட்டு மக்களை ஏதாவது ஒன்றை புறக்கணிக்கும்படி புலிகள் கேட்டது இல்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் ஈழ மக்களை அப்படி கேட்பதையும் அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

எமக்கு ஆதரவுதான் தேவை. வழிகாட்டிகளை நாம் தமிழ்நாட்டில் தேடவில்லை. அவர்கள் எங்கள் மக்களுக்குள் இருந்து வருவார்கள்.

சீமான்! உங்கள் எல்லையோடு நின்று கொள்ளுங்கள். எங்களை விமர்சிப்பதையும், இவர்கள் குண்டுவீச்சில் சாக வேண்டும் என்று சபிப்பதையும், அதைப் புறக்கணி இதைப் புறக்கணி என்று ஆலோசனைகள் தருவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இது எல்லோருக்கும் நல்லது.

அன்றைக்கு கலைஞரை நம்ப வேண்டாம் என்று தலையிலடித்துக் கொண்டு சொன்னோம். செவிமடுத்தவர்கள் குறைவு. இன்றைக்கு சீமான் பற்றியும் சொல்கிறோம். நீங்கள் கேட்க மாட்டீர்கள். பரவாயில்லை. நல்ல வேளையாக எம்மிடம் இழப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

சொல்பவர் சொன்னால் கேட்பவருக்கு மதியென்ன? யாருக்கு யார் சொல்வதுதென்பதில் ஒரு விவஸ்தை இல்லையா? ஏற்கனவே, கடந்த காலத்தில், யாழில் பிழையான எதிர்வு கூறல்களை எழுதியதாகத்தான் உறவுகள் குறிப்பிடுகிறார்கள். நாம் எமது அனுபவத்தில் இருந்து படித்திருக்க கூடாதா?

கருணாநிதியின் டெசோ பிரேரணை ஐ.நா போவதை நாமல்ல ஆதரிக்காமல் நழுவி ஓடியது.

ஆயினும் மீண்டும் கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை சீமான் போன்றவர்கள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சீமான் குழப்பிகள் மேலே போகவிடாமல் உடைத்துகொண்டிருக்கிரார். முதல் தர குழப்பி கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

புலம்பெயர் நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகள் பற்றி சீமான் கருத்துச் சொல்லத் தேவை இல்லை. எமக்கு வழிகாட்டும் தகுதியும் அவரிடம் இல்லை. அவர் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடம் எங்களுக்கு ஆதரவு திரட்டினால் போதும். உலகத் தமிழர்களின் தலைவர் என்று புகழப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரன் ஒரு போதும் தமிழ்நாட்டு விடயங்களில் தலையிட்டது இல்லை. அவர்களை தமிழீழ அரசியலில் தலையிட அனுமதித்ததும் இல்லை.

இது தமீழீழ அரசியல் அல்ல. போராட்டம்.அவரை தமீழபோராட்டதில் பங்க்கு பற்ற வேண்டாம் என்று சொல்ல தமிழரால் தெரியப்பட்ட பிரதி நிதிகளுக்கும் அந்த உரிமை இல்லை.

சிங்கள அரசு விரும்புவதை மட்டும் செய்ய சீமான் யாரும் சிங்கள அரசு வாங்கி வைத்திருக்கும் அடிமை பொருள் அல்ல.

அவருக்கு தமிழ் நாடு அரசியல் மீது

1. பொதுவில் தமிழர் மீது அக்கறை கொண்டிருந்ததால், தமிழ்நாடு மிக பெரிய தமிழர் வாழும் நாடு என்பதாலும்

2. போரில் தமிழ் நாடு பலவகைகளில் சம்பந்த பட்டிருந்ததாலும்

தலைவருக்கு தமிழ் நாட்டு அரசியலில் தேவை இருந்தது.

ஆனால் மிகுதியை இந்த நேரம் நான் விவாதிக்க விரும்பவில்லை.

நானும் விவாதிக்க விரும்பவில்லை. ஏதோ ஒரு இடத்தில் ஒரு குறுகிய நேரத்திற்காவது சீமான் எங்களுக்கு பயன்படக்கூடும். ஆகக் குறைந்தது தமிழ்நாட்டில் சிங்களவர்கள் மீது கல்லெறிந்து உலகின் கவனத்தை திருப்பும் வேலைக்காவது பயன்படுவார். ஆகவே நானும் அமைதியாகின்றேன்.

நான் மிகுதியை விவாதிக்க விரும்பவில்லை என்று சொல்லி இருப்பது தலைவரை பற்றியது. பதில் சொல்ல இருக்காத ஒருவரிடம் கேள்வி கேட்பது போன்ற ஒரு செயல், ஒருவர் தனது தனிப்பட்ட அபிப்பிராயதை வைத்து தலைவர் தமிழ்நாட்டு அரசியலில் அக்கறை காட்டமலிருந்தார் என்பது. ஆகையால் நான் அதை தொடர்ந்து விவாதிக்க வில்லை என்று எழுதியிருந்தேன்.

தமிழ்நாட்டு மக்களை ஏதாவது ஒன்றை புறக்கணிக்கும்படி புலிகள் கேட்டது இல்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் ஈழ மக்களை அப்படி கேட்பதையும் அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

எமக்கு ஆதரவுதான் தேவை. வழிகாட்டிகளை நாம் தமிழ்நாட்டில் தேடவில்லை. அவர்கள் எங்கள் மக்களுக்குள் இருந்து வருவார்கள்

இலங்கை சிங்களவருடன் ஒட்டவேண்டும் என்று கூறும் இந்த பிரிவினை வாதிகளுக்கு இது கருணாநிதி வேண்டுமென்றே டெசொவைகூட்டும் போது நினவுக்கு வரவில்லை. இப்போது இந்த அளவுக்கு பிரித்து பார்த்துக்கதைக்க முடிகிறது.

தமிழ் நாட்டு மக்களிடம் தலைவர் பல உதவிகள் கேட்டிருந்தார். அவை பல கடிதங்கள் மூலமும் நடை பெற்றிருக்கிறது. பலர் வன்னிக்கு வந்த போதும் நடை பெற்றிருக்கிறது. MGR, வை.கோ, நெடுமாறன், சீமான்... போன்றவர்களில் தலைவர் நிச்சயமாக உதவிகளுக்கு தங்கியிருந்தார். தமிழ் நாட்டில் புறக்கணி இயக்கங்கள் போகும் போது அதை வரவேற்று தமிழ் பத்திரிகைகை எழுதுவது அதை கேட்பதற்கு சரி. கருணாநிதிகாலத்தில் கறுணாநிதி தமிழ் நாட்டில் ஈழத்தமிழருக்கு காட்டும் ஆதரவுகளை அடக்கிய போது புலம் பெயர் நாடுகளிலிலும் ஈழத்திலிருந்து எதிர்ப்புக் குரகள் தமிழ் நாடு போய் சேர்ந்ததால் தான் கருணாநிதி வீட்டுக்கு அனுப்பட்டார்.

இதை விட சில விசித்திரமான வகையில் கூட தமிழ் நாட்டார் உதவி வருகிறார்கள். உ+ம் மருத்துவர் ராமதாசுக்கு கிடைத்த ஐ.நா. பிரேரணைக்கு கிடத்த அனுமதியை ஈழத்தமிழருக்கு கொடுத்ததால் அவர்கள் ஐ.நா பிரேரணையில் தமக்கு விரும்பிய அறிஞ்ஞர்களை அனுப்பினார்கள்.

சீமான்! உங்கள் எல்லையோடு நின்று கொள்ளுங்கள். எங்களை விமர்சிப்பதையும், இவர்கள் குண்டுவீச்சில் சாக வேண்டும் என்று சபிப்பதையும், அதைப் புறக்கணி இதைப் புறக்கணி என்று ஆலோசனைகள் தருவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இவருடைய கருத்தை யாரும் கவனம் எடுக்க வேண்டியது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் சீமான் பேசப் போகிறார்.

மேலே உள்ளது மாதிரி குடம் குடம் சத்தி எடுத்த வாயால் எப்படி அதே நேரம் கீழே உள்ளது மாதிரி வயிறு முட்ட சாப்பிட முடிகிறது? இதுவெல்லாம்தான் இவர்கள் எழுதும் அரசியலோ?

ஏதோ ஒரு இடத்தில் ஒரு குறுகிய நேரத்திற்காவது சீமான் எங்களுக்கு பயன்படக்கூடும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் அறிந்தோ அறியாமலோ இந்திய ஆதிக்க சக்திகளின் நலன்களுக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகிறார்.

வைகோ, கொளத்தூர் மணி போன்ற தமிழ் உணர்வாளர்களுடன் போட்டி அரசியல் செய்கிறார். தமிழ் தேசியத்தில் நம்பிக்கை மிக்க பழ.நெடுமாறனும், திராவிடக் கொள்கையில் நம்பிக்கை மிக்க வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்களும், பொதுவுடமை பேசக் கூடிய பல தோழர்களும் ஒன்றாய் இணைந்து ஈழத் தமிழர்களுக்காய் போராடுகின்ற போது, இவர் தனிப் பாதை அமைக்கிறார். பிரிவினைகளை வளர்க்கிறார்.

இன்றைக்கு இளையராஜா நிகழ்ச்சிக்கு சம்பந்தமே இல்லாமல் நடைமுறையில் இல்லாத மாவீரர் மாதம் போன்ற பொருத்தமற்ற கருத்துக்களை தெரிவித்து ஈழத் தமிழர்கள் மத்தியிலும் பிரிவினைகளை செய்கிறார்.

இவருடைய அமைப்புக்குள் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்கள் கடுமையாக இருப்பதாக நான் திடமாக நம்புகிறேன். குறுகிய காலத்தில் நிறைய தடுமாற்றங்களை நான் இவரிடம் பார்க்கிறறேன்.

எப்படி சீமானையும் உள்ள விட்டு தேள்வடிவில் தாக்க போறாங்களோ? :lol: :lol: :lol:

எப்படி சீமானையும் உள்ள விட்டு தேள்வடிவில் தாக்க போறாங்களோ? :lol: :lol: :lol:

உந்த கட்டுரை வாசித்து கனவு கண்ட ஆக்களில் நீங்களும் ஒராளா?

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தன்னை அரை மணி நேரம் ஐநா சபையில் பேச விட்டால் தமிழீழம் அடைந்து விடுவேன் என்பது உச்சபட்ச நகைச்சுவை. இதை சிரிக்காமல் அவரால் பேச முடிகிறது. இவரை நம்புவதற்கும் இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது.

அத்துமீறு, அடங்க மறு என்று முழங்கிய சீமானை ஜெயலலிதா ஒரு நடிகையை வைத்து அடக்கிக் காட்டினார். இன்று வரை கூடாங்குளம் பிரச்சனையில் (இதில் ஈழத் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்) போராடவோ, தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்சனையை தட்டிக் கேட்கவோ அவருக்கு துணிச்சல் வரவில்லை.

ஆட்சியில் இல்லாத ஒரு கட்சியை விமர்சித்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய கருத்தை யாரும் கவனம் எடுக்க வேண்டியது இல்லை. பத்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் சீமான் பேசப் போகிறார்.

கருணாநிதி இவ்வளவு செய்ய பின்னரும், கருணாநிதியும் அவர் ஆதரவாளர்களால் தான் தமிழீழம் பெற்றுத் தர முடியும் என வெட்கமே இல்லாமல் எழுதின உங்களுக்கு சீமானைப் பற்றிக் கதைக்கத் தகுதியில்லை. சீமான் குறித்து இந்த விடயத்தில் கதைப்பது வேறு. ஆனால் அவரினை மனசில் வஞ்சம் வைத்து எழுதுவது வேறு... என்றைக்கு பெரியார் என்ற நச்சினைக் கைவிடுகின்றேன் என்று சொன்ன பிற்பாடு உங்களுக்குச் சந்தர்ப்பங்களுக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது தெரியாத விடயமல்ல.

தூயவன்,

கருணாநிதியால் தமிழீழம் பெற்றுத்தர முடியும் என்று நான் எப்பொழுதும் சொன்னது இல்லை. தமிழீழம் ஒரு நீண்ட போராட்டம். ஒவ்வொரு நேரத்திலும் எமக்கு ஒவ்வொருவர் தேவைப்படுவார்கள்.தமிழ்நாட்டின் ஆட்சியல் இருப்பவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடியவர்கள் அதிகமாக எமக்கு தேவைப்படுவார்கள். ஆகவே அவர்களுடன் உறவுகளை நாம் துண்டிக்க முடியாது என்பதையே என்றைக்கும் வலியுறுத்தி வருகிறேன்

வினித்,

தேள்வடிவத் தாக்குதல் பற்றிய கட்டுரையை நான் எழுதியிருக்கவில்லை. என்னுடனான விவாதங்களில் அதை ஏன் சிலர் சித்தம் மறந்த நிலையில் பயன்படுத்துகிறார்கள் என்பது புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தேள்வடிவத் தாக்குதல்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=95312

வணக்கம்

சீமான் புரியாத புதிர் புரிந்தவர்களுக்கு எல்லாம் வெளிச்சம்.

காலம் பதில் சொல்லும்.

நானும் விவாதிக்க விரும்பவில்லை. ஏதோ ஒரு இடத்தில் ஒரு குறுகிய நேரத்திற்காவது சீமான் எங்களுக்கு பயன்படக்கூடும். ஆகக் குறைந்தது தமிழ்நாட்டில் சிங்களவர்கள் மீது கல்லெறிந்து உலகின் கவனத்தை திருப்பும் வேலைக்காவது பயன்படுவார். ஆகவே நானும் அமைதியாகின்றேன்.

நாங்கள் வலுவிழந்து நிற்கும் போதினில், எமக்கு சிறு துரும்பும் அவசியம். அவ்வகையில் சீமான், எமக்கு உதவ வருகையில் தேவையில்லாமல் அவரை சீண்டுவது நாகரிகமல்ல.

அவர் புலம்பெயர் தேசத்தில் நடக்கும் நிகழ்ச்சியைப் பற்றி சொன்னால் ( ஏன், எதற்கு சொல்கிறார் என்று தேவையில்லை) கேட்பதும் கேளாததும் புலம் பெயர் தமிழர்களின் விருப்பம். அவர் எமக்கு தலைவரல்ல. ஆதரவாளர். அதை விடுத்து, அவரை விமர்சிப்பது வேண்டாத வேலை எனபது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

என்றைக்கு பெரியார் என்ற நச்சினைக் கைவிடுகின்றேன் என்று சொன்ன பிற்பாடு உங்களுக்குச் சந்தர்ப்பங்களுக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது தெரியாத விடயமல்ல.

ஓ.. இப்ப விளங்குது..! :D

அன்றைக்கு கலைஞரை நம்ப வேண்டாம் என்று தலையிலடித்துக் கொண்டு சொன்னோம். செவிமடுத்தவர்கள் குறைவு. இன்றைக்கு சீமான் பற்றியும் சொல்கிறோம். நீங்கள் கேட்க மாட்டீர்கள். பரவாயில்லை. நல்ல வேளையாக எம்மிடம் இழப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

ஆயினும் மீண்டும் கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை சீமான் போன்றவர்கள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகள் பற்றி சீமான் கருத்துச் சொல்லத் தேவை இல்லை. எமக்கு வழிகாட்டும் தகுதியும் அவரிடம் இல்லை.

அவர் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடம் எங்களுக்கு ஆதரவு திரட்டினால் போதும். உலகத் தமிழர்களின் தலைவர் என்று புகழப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரன் ஒரு போதும் தமிழ்நாட்டு விடயங்களில் தலையிட்டது இல்லை. அவர்களை தமிழீழ அரசியலில் தலையிட அனுமதித்ததும் இல்லை.

எங்கோ ஒரு திரியில் கருணாநிதியை பற்றி குறைவாய் எழுதியதற்கு .........சிங்கம்போல் உறுமி உறுமி அவருக்கு ஆதரவாய் எழுதினீர்கள்

அந்த திரியை தேடிப்பார்த்தேன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் ..................இப்போ என்னவென்றால் கருணாநிதியை நம்பவேண்டாம் என்று எமக்கு நீங்கள்

கூறியதை எழுதுகிறீர்கள்////////////// உண்மையில் நீங்கள் யார் ,என்ன நோக்கத்திற்காய் இப்படி மாறி மாறி எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை ...

எழுத விரும்பினால் பேனையும்,கொப்பியும் எடுத்து ஆசை தீரும்வரை எழுதுங்கள் ................அல்லது ஒரே கொள்கையுடன் ,ஒரே கருத்துடன் எழுத முற்படுங்கள்

...........................இப்படி பிரட்டி எழுதுவது ஆரோக்கியமானதல்ல ............நன்றி

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

தமிழ்சூரியன்,

நான் கலைஞரை நம்ப வேண்டாம் என்று சொன்னது2009இற்கு முன்பு. அவருடைய உண்மையான முகம் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். கலைஞர் என்றைக்குமே விடுதலைப் புலிகளையோ அல்லது அவர்களின் தலைமையில் அமையக்கூடிய தமிழீழத்தையோ உளமார ஆதரிக்க மாட்டார் என்பதை பலமுறை கூறியிருக்கிறோம்.

அன்றைக்கு அவரை பலர் நம்பிய பொழுது எச்சரிக்க வேண்டிய கடமை எமக்கு இருந்தது.

ஆனால் 2009 இன் பின்பு கலைஞர் போன்றவர்களையும் எமக்கு சாதகமான முறையில் நாம் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். இதற்கு அர்த்தம் கலைஞர் நல்லவர் என்பது அல்ல. ராஜதந்திர வழிகளில் இதுவும் ஒன்று. அவ்வளவே.

எமக்கு எல்லோரும் வேண்டும். ஆனால் ஆதரவு என்னும் பெயரில் எமக்கு வழிகாட்ட முற்படுவதை நாம் அனுமதிக்க முடியாது.

மற்றும் தேள்வடிவத் தாக்குதல் பற்றிய மேலதிக விளக்கம் தந்த சாத்திரிக்கு நன்றி.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்.. அடிக்கடி நாம் நாம்.. என்கிறீங்களே.. யாரை நீங்கள் பிரதிநிதிக்கிறீர்கள்? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.